விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 30, 2011

நீங்க பேயை பார்த்திருக்கிறீர்களா?

முன் குறிப்பு: இது ஒரு காமெடி பதிவா? இல்லை சீரியஸ் பதிவா? என்று தெரியவில்லை. அவரவருக்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கொள்ளுங்கள். எது எப்படியோ ஒரு மரண மொக்கை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.... 


நீங்க பேயை பார்த்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு காமெடியாக பதில் சொல்வதாக இருந்தால், எஸ்‌வி சேகர் ஒரு நாடகத்தில் சொல்வது போல, "அதிலென்ன சந்தேகம் 25 வருஷமா குடும்பமே நடத்திக்கிட்டு இருக்கேன்." என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சீரியசாக இந்த கேள்வியை யாரிடமாவது கேட்டால், "நான் பார்த்ததில்லை அவர் பார்த்ததாக சொன்னார் என்று என் பாட்டி சொன்னதாக மாமா கூறினார்." என்று சுற்றி வளைத்து சொல்வார்கள். ஆக பெரும்பாலான மக்கள் பேயை பார்த்ததில்லை. அவர்கள் அனைவரும் சொல்லக்கேட்டவர்களே. அப்படி யார் சொன்னார் என்று தேடிக்கண்டுபிடித்து போய் பேயை பார்த்தவரிடமே கேட்டால் அவர், "மங்கலாக ஒரு உருவம் பேய் மாதிரியே இருந்தது." என்று தான் பார்த்த திகில் படங்களுக்கேற்ப கூறுவார். இவர் இவ்வாறு கூறிய விஷயமே ஒவ்வொரு காதாக தாவும்போது கை கால் முளைத்து ஒரு கேரக்டராகவே ஆகி விடுகிறது. 

சரி அதை எல்லாம் விடுங்க. நான் கேட்க வந்த விஷயம் அதுவல்ல. நாம் சிறு வயதில் இருந்தே நிறைய பேய் கதைகளை கேட்டு வளர்ந்திருக்கிறோம். நிறைய திகில் படங்களை பார்த்திருக்கிறோம். என்னதான் நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும். நம் அடி மனதில் பேய் குறித்த பயம் இருக்கிறது என்று நம்பவே செய்கிறோம். பெரிய சூரப்புலிகள் என்றாலும் இந்த விஷயத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போகிறோம். இதை நான் காஞ்சனா படம் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். ஆக நாம் எல்லோருக்குள்ளும் பேய் என்றால் இப்படித்தான் இருக்கும், அதற்கு இந்த மாதிரி குணாதிசயங்கள் உண்டு என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம் அல்லவா? அப்படிபட்ட விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் வந்து விட்டன. முடிந்தால் கொஞ்சம் தீர்த்து வையுங்கள். 


சந்தேகம் #1 
பேய்களுக்கு கால்கள் உண்டா கிடையாதா? கால்கள் உண்டு என்று வைத்துக்கொண்டால் அவை நடக்குமா ஒடுமா? பேய்கள் திடீரென்று தோன்றுகின்றன, மறைகின்றன, வேறொரு இடத்தில் தோன்றுகின்றன. அவற்றுக்கு கால்கள் உண்டு என்றால் மறைய வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை அதிக தூரம் செல்லவேண்டுமானால் மறைந்தும், தூரம் குறைவாக இருந்தால் நடந்தும் செல்லுமோ? இல்லை உண்மையிலேயே பேய்களுக்கு கால்கள் கிடையாதா? 

சந்தேகம் #2 
பேய்கள் நேர்மையானவையா? பொதுவாக பேய்கள் அடாவடித்தனம் செய்பவையாகவே இருக்கின்றன. மரியாதை இல்லாமல் பேசுவது, அல்லது கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று. இவ்வாறு அடாவடியாக நடக்கும் பேய்களின் நேர்மை நம்பக்கூடியதுதானா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், ஒருவரை பேய் பிடித்து ஆட்டும்போது, பேய் ஓட்டுபவர், "நீ கேட்பதை நான் கொடுத்து விட்டால் இவரை விட்டு போய் விடுவாயா?" என்று கேட்டால், அதுவும் தான் பங்குக்கு ஆடு கோழி சாராயம் என்று ஏதாவது கேட்டு விட்டு, சொன்னபடியே போய் விடுகிறதே? ஆடு கோழிக்கு ஆசைப்பட்டு அடிக்கடி வருவதில்லையே? பேய்கள் கொடுத்த வாக்குக்கு அவ்வளவு மரியாதை கொடுக்குமா? 


சந்தேகம் #3 
இது முந்தைய சந்தேகத்தின் தொடர்ச்சி. பேய்கள் ஆடு கோழி என்று கேட்கிறதே அவற்றை பேய்களால் சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட முடியும் என்றால், செரிமானம், வயிற்று உபாதைகள் இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டா? அதே போல சாராயம் கேட்கும் பேய்களுக்கு சரக்கடித்தால் போதை வருமா? அப்படி அடித்து மட்டையானால் பேயின் நிலைமை என்ன? யாராவது பிடித்து அடைத்து விட மாட்டார்கள்? இல்லை சரக்கடித்தாலும் போதை ஏறாது என்றால், பின்னே எதற்கு சாராயம் கேட்கவேண்டும்? மேலும் சைவ பேய்கள் எதை சாப்பிடும்? அவற்றால் மனிதர்களுக்கு பிரச்சனை கிடையாதோ? (சைவ டைனோசர்கள் போல)... 

சந்தேகம் #4 
பேய்களுக்கு செட் பிராப்பர்ட்டிகள் எங்கிருந்து கிடைக்கின்றன? உதாரணமாக அவை அணிந்திருக்கும் உடைகள், வெள்ளை சேலை, மல்லிகைப்பூ, கொலுசு போன்றவை? கிராமத்து பேய்கள் மல்லிகைப்பூ வைத்திருப்பது போல நகரத்து பேய்கள் பெர்பியூம் போட்டிருக்குமா? சந்தேகம் #1இன் படி பேய்களுக்கு கால்கள் கிடையாது என்றால், அவற்றால் கொலுசு எப்படி அணிய முடியும்? ஆண் பேய்கள் பேண்ட் எப்படி அணிய முடியும்? கால்கள் உண்டு என்றால் வெள்ளி கொலுசுகள் வாங்க காசு எங்கிருந்து வந்தது. ஆட்டைய போட்ட காசா?

சந்தேகம் #5 
இப்போது ஒருவருக்கு உடலில் குறைபாடு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக அவரால் பார்க்க முடியாது என்றால், அவர் இறந்து போன பிறகும் அந்த பேய்க்கும் பார்வை இருக்காதா? காது கேட்காத, வாய் பேசாத பேய்களும் உண்டா? சினிமாவில் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டால் அவரது பேய் காயங்களுடன் வருவது போல காட்டுகிறார்களே அப்படியானால் பிறவியிலேயே குறைபாடு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்தானே? மேலும் மன நலம் குன்றிய அல்லது அரவாணியாக இருக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரது ஆவியும் அப்படி இருக்கும்தானே (உபயம் : காஞ்சனா). மன நலம் குன்றிய பேயால் எப்படி நன்றாக சிந்தித்து பழிவாங்க முடியும்? 

சந்தேகம் #6 
பேய்களின் நேர்மையை பற்றி பேசினோம் அல்லவா? பேய்களின் நடத்தை குறித்தும் பேச வேண்டி இருக்கிறது. ஒருவர் சாதுவாக இருப்பாரானால் அவரது ஆவியும் அப்படியே இருக்குமா அல்லது ஆக்ரோஷமாக மாறி விடுமா? சாதுவானவருக்கே இப்படி என்றால், மிக மோசமான ரவுடியாக இருக்கும் ஒருவர் பேயாக மாறினால் இன்னும் முரடனாக அல்லவா மாறி விடுவார்? இப்படி இருக்க, சாதுவான தன்னை ஒரு ரவுடி கொலை செய்து விட்டதால் அவனை பழிவாங்க எண்ணுகிறது ஒரு சாதுவான பேய். அவனை எப்படி தன்னை கொன்றான் என்பதை நன்றாக ஞாபகம் வைத்து அதே மாதிரி அந்த ரவுடியையும் துரத்தி துரத்தி கொல்கிறது. ஆக அவனும் பேய் ஆகிறான். இப்போது இந்த ரவுடி பேய் அந்த சாதுவான பேயை துன்புறுத்தாது என்பது என்ன நிச்சயம்? அதற்கு அவன் சாகாமல் இருப்பதே மேல் அல்லவா? எதற்கு தேவை இல்லாமல் அவனை கொன்று ஆப்பை தானே தேடி செல்லவேண்டும்? 


சந்தேகம் #7 
 பேய்கள் கோழைகளா? எதற்கு தனியாக வரும் ஆட்களிடம் அதுவும் அப்பாவிகளிடம் வந்து வாலாட்ட வேண்டும்? உண்மையிலேயே அவற்றுக்கு சக்தி உண்டு என்றால், பொதுமக்கள் ஒன்றாக கூடும் இடத்துக்கு வந்து அல்லவா எல்லோரையும் மிரட்ட வேண்டும்? 

சந்தேகம் #8 
பேய்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்குமா அல்லது ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு செல்லுமா? மேலும் வெளியூரில் இருந்து மொழி தெரியாத ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவரை இந்த பேய் மிரட்டுவதால் என்ன பயன்? மனிதனாக இருக்கும்போதே மொழி தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பத்தாதா? அவன் தன் தாய் மொழியில் திட்டினால் பேய்க்கு தெரியவா போகிறது? மேலும் பேய்கள் கார் ஒட்டுமா? சாகும் வரை கார் ஓட்ட தெரியாத ஒருவர் இறந்தவுடன் கார் ஓட்டுவது போல காட்டுகிறார்களே இது சாத்தியமா? பேய்களுக்கு நீச்சல் தெரியுமா? 


சந்தேகம் #9 
பேய்கள் பகல் நேரத்தில் எங்கே இருக்கும்? அவை சரியாக பன்னிரண்டு மணிக்கு வருவதன் நோக்கம் என்ன? ஒரு மணிக்கு வந்தால் யாரும் பயப்பட மாட்டார்களா? மனிதர்களைப்போல, ஆடு, மாடு, கோழி, நாய் ஆகிய உயிரனங்களும் பேயாக அலையுமா? அப்படியானால் சிங்கம் புலி ஆகிய பேய்கள் ஊருக்குள் வந்தால் நம்ம நிலைமை என்ன ஆகும்? 

சந்தேகம் #10 
ஆச்சாரமான பேய்கள், தாழ்த்தப்பட்ட மக்களை கொல்லுமா? அப்படி கொல்ல வேண்டுமானால் தொட வேண்டும். அது தீட்டாகாதா? அதே போல பகுத்தறிவு பேய்கள் சாமிகளை கண்டால் பயப்படுமா? அவை பார்ப்பனர்களை கொல்லாது என்பது என்ன நிச்சயம்? புரட்சிக்கார பேய்களும் உண்டா? அவை பேய்களுக்குள்ளேயே யூனியன் அமைத்து எட்டுமணிநேர பேயாட்டம், உண்ணாவிரதம், கொல்லாவிரதம் என்று ஈடுபடுமா? கம்யூனிஸ்ட் பேய்கள் சிகப்பாக இருக்குமா?
 
என்ன எல்லோரும் முடிய பிச்சுக்கிட்டீங்களா? நானும் ரொம்ப நாளா இப்படித்தான் இருக்கேன். இதுக்கு யாராவது ஒரு வழி சொல்லுங்க பிளீஸ்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


58 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////////

சந்தேகம் #1
பேய்களுக்கு கால்கள் உண்டா கிடையாதா? //////

பேய்களுக்கு கால்கள் கிடையாது...
அது வால்பகுதியை கொண்டு காற்றில் அப்படியே பறந்துச் செல்லும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 2...

பேய்களுக்கு அதிகம் பசிக்கும்போது மட்டும்தான் இது போன்று வந்து யாருடைய உடம்பிலாவது இணைந்து வாய்க்கு ருசியாக கேட்டு சாப்பிட்டுவிட்டுசெல்லும்...

ஆண் பேயாக இருந்தால் தண்ணியும் கேட்கும்..

பேய்கள் சொன்ன பேச்சை சரியாக கேட்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பொதுவாக சரக்கடித்தால் ஏதோ காற்றில் பறப்பது போன்று இருக்கும் காற்றில் பறக்கும் பேய்க்கு சரக்கை ஊற்றினால் அது இன்னும் வேகமாக காற்றில் பறக்கும்...

பிரச்சனை இல்லை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 4..

பேய்களுக்கு தனி லோகம் உண்டு அங்கிருந்து தன்னுடைய உடைகளையும் மற்ற உபகரணங்களையும் வாங்கிக் கொண்டு வரும்...

வெள்ளை உடை மட்டும்தான் அவைகள் விரும்பி உடுத்தும்...

கொலுசு பெண் பேய்களுக்கு மிகவும் பிடிக்கும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 5...

மன நலம் குன்றி பேய்கள் யாரைப் பார்க்கிறதோ அவர்களை பிடித்துக் கொண்டு அவர்களையும் பழிவாங்கும்...

கண் தெரியாத பேய்களுக்கு என்று தனியாக சில பேய்கள் வந்து உதவும் என்று கூறுகிறார்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 6..


சாதுவான பேய்களும் மற்ற பேய்களை பார்த்து கற்றுக் கொண்டு ரவுடி பேயாக மாறிவிடுகிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 7...

ஒரு பேய்க்கு ஒரு ஆள் என்ற வீதத்தில்தான் ஒதுக்கீடு இருக்கிறது அதற்காகத்தான் தனி ஆட்களை அவைகள் பிடித்துக் கொள்கிறது..

கூட்டமாக இருக்கும் இடத்தில் யாரைப்பிடிப்பது என்ற குழப்பம் வரும் அதனால்தான் அவைகள் கூட்டத்தில் செல்வதில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 8..

பாஸ்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 9...


விலங்கினங்கள் பேயாக வராது அதுதான் உயிரோடு இருக்கும் போதே மற்றவர்களை பயமுறித்தி விடுகிறது..

மனிதன்தான் தன்னைவிட வலிமையானவர்களை மிரட்ட பேயாக அவதாரம் எடுக்கிறார்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சந்தேகம் 10....


பேய்களுக்குள் ஜாதி இன பாகுபாடு கிடையாது எந்த பேய் எந்த பேயை வேண்டுமானாலும் உஷார் செய்யலாம்...


அப்பாடி வந்திருக்கிறது பாருங்கள் சந்தேகம்...

ஏதோ என்னால் முடிஞ்சது...

rajamelaiyur said...

India s bigget ghost is SONIA GANDHI

K.s.s.Rajh said...

பாஸ்.ஒரு மூடநம்பிக்கைக்குறிய விடயத்தை சந்தேகம் என்ற போர்வையில் கேள்விக்கனைகளை தொடுத்து நல்லா வாங்கு வாங்குனு வாங்கியிருக்கிறீங்க.

எங்க ஊர்களில் யுத்தத்தால் எத்தனை ஆயிரம் மக்கள் மடிந்து போனார்கள்.இளம் வயதில் வாழவேண்டிய வயதில் ஆசைகளை மனதில் அடக்கி ஏதோ ஒரு காரணத்துக்காக மாண்டு போனார்களே.அவர்கள் எல்லாம் என்ன பேயாகவா அலைகின்றார்கள்?அப்படி அவர்கள் எல்லாம் பேயாக அலைந்தால் எங்கள் ஊரில் உள்ள மனிதர்களை விட ஆவிகள்தான் அதிகமாக இருக்கும்.யுத்தத்தினால் காடுகள்,சுடுகாடு,போன்ற இடங்களில் கூட எங்கள் ஊரில் மக்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள்,எனவே அவர்களுக்கு எல்லாம் என்ன பேயா பிடித்தது?எங்கள் ஊர்களில் சில இடங்களில் இப்படியான பேய்க்கதைகள் உலாவினாலும் மிகக்குறைவே.அங்கு இதுவரை பேய்பிடித்து ஆடியதாக நான் அறிந்தது இல்லை.

என்னைக்கேட்டால்
பேய்பிடித்து ஆடுவது என்பது ஒரு மனப்பிரமை+மனநோய்,தான் இதைவிட வேறு ஒன்றும் இல்லை.

அப்பறம் நம்ம கடைப்பக்கம் இப்ப உங்களைக்காணவே கிடைக்குதில்லை,நேரம் இருந்தால் வந்து பாருங்க,ஒரு சுவாரஸ்யமான தொடர் பதிவு ஓடிகிட்டு இருக்கு.

பாலா said...

@ # கவிதை வீதி # சௌந்தர்

என்னுடைய அத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்த உங்கள் பொறுமையை பாராட்டி, உங்களுக்கு வேலாயுதம் பட திருட்டு டி‌வி‌டியை பரிசளிக்கிறேன்.

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

இதுக்கு எப்படி ரியக்ட் பண்றதுன்னு தெரியல. அவுக இத்தாலிகாரவுகதானே?

பாலா said...

@K.s.s.Rajh

தெரிஞ்சிடுச்சா.... சரி விடு....

அப்புறம் கிடைக்கும் நேரத்தில் போஸ்ட் போடவே முடியவில்லை, கண்டிப்பாக வருகிறேன் நண்பரே, மன்னிக்கவும்.

அந்நியன் 2 said...

புதுமையான சிந்தனை வாழ்த்துக்கள்

நானும் ஒரு தமிழ் ஜோக் பதிவை வெளியிடலாம்னு பார்க்கிறேன் முடிய வில்லை காரணம் மூன்று பேரின் மரண போராட்டங்களால்.

கூடிய சீக்கிரம் வெளியிடுகிறேன்.

அந்நியன் 2 said...

தமிழ் மணம் ஓட்டு பட்டையை காணோமே?

Unknown said...

ம்ம்ம் நாட்டுல இருக்குற பேய்களுக்கெல்லாம் நீங்க சந்தேகம் கேட்ட எல்லாமே இருக்குது, மத்த பேய்களை நான் இன்னும் பாக்கலைங்க :-)

பாலா said...

@அந்நியன் 2

நண்பா இப்போதான் உங்க வெட்டி கட்டிய ஆம்பளைய படிச்சுட்டு வர்றேன். செம சூடு.

அப்புறம் அது என்னான்னே தெரியல மொதல்ல இருந்தே தமிழ் மணத்துல இணைப்பது பற்றி ஒரு ஈடுபாடே இல்லை. முயற்சி செய்கிறேன்.

பாலா said...

@இரவு வானம்

சரி பார்த்தா கேட்டு சொல்லுங்க... நான் பார்த்தா உங்க கிட்ட சொல்றேன்.

Rathnavel Natarajan said...

அருமை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
பாலா சொன்னது… [Reply]

@ # கவிதை வீதி # சௌந்தர்

என்னுடைய அத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்த உங்கள் பொறுமையை பாராட்டி, உங்களுக்கு வேலாயுதம் பட திருட்டு டிவிடியை பரிசளிக்கிறேன்.

/////////////

அதுக்கு நீங்க இரண்டு பேயை அனுப்பி வைக்கலாம்..

ஏன் இந்த ‌கொ‌லை மிரட்டல்...

சுதா SJ said...

பேய் என்பது கட்டுக்கதையே என்னைபொருத்தவரை.
ஆனாலும் இன்னும் நம்மில் நிறைய பேர் பேயை பார்த்தேன் என்று சொல்லிக்கொண்டு
இருக்கிறார்கள் அதன் உண்மைத்தன்மை என்ன வென்பது அவரவருக்கே வெளிச்சம்.

ஆனாலும் பேயில்லை என்று நம்பும் எனக்கே
இன்னும் பேய்ப்பயம் இருக்கு என்பதையும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்
ஒரு வேலை இதுதான் அந்த பேயின் வெற்றியோ பேயை விதவிதாமாக காட்டிய பெருமைநம்ம சினிமாகாரருக்கு அப்புறம் உங்களைத்தான் சேரும் பாஸ்
ஹீ ஹீ,

பேயை கவுரவபடுத்தும் பதிவுக்கு
வாழ்த்துக்கள் பாஸ்.

மாய உலகம் said...

ஹி ஹி சந்தேகங்களுக்கு நண்பர் கவிதை வீதி சௌந்தர் பதில் அளித்துவிட்டார்.... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகானும்.. பேய் இருக்கா இல்லையா..பேய் இருக்குறதுக்கான அறிகுறி ஏதாவது இருக்கா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Peraveen said...

Super Post!

K.s.s.Rajh said...

@பாலா [Reply]
@ # கவிதை வீதி # சௌந்தர்

என்னுடைய அத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்த உங்கள் பொறுமையை பாராட்டி, உங்களுக்கு வேலாயுதம் பட திருட்டு டி‌வி‌டியை பரிசளிக்கிறேன்//

இதுக்கு அவருக்கு பேய் படம் போய் பார் என்று தெளிவா சொல்லலாமே நண்பா.அதை விட்டுட்டு ஏன் சுத்திவலைச்சு வேலாயுதம் சீடி தாரதா சொல்லுறீங்க.ஹி.ஹி.ஹி.ஹி(அப்பாடா கோத்துவிட்டாச்சு)

Chitra said...

ரொம்ப "பேய்"யங்கரமான போஸ்ட்!!!!

K.s.s.Rajh said...

@பாலாதெரிஞ்சிடுச்சா.... சரி விடு....

அப்புறம் கிடைக்கும் நேரத்தில் போஸ்ட் போடவே முடியவில்லை, கண்டிப்பாக வருகிறேன் நண்பரே, மன்னிக்கவும்.//

உங்களுக்கு டைம் இருக்கும் போது வாங்க பாஸ்.நான் இந்தா இப்ப சைக்கில் கேப்ல என் பதிவின் அடுத்தபகுதியையும் வெளியிட்டுடன்.

அப்பறம்
ஒழுங்கா என்ற கடைப்பக்கம் வராட்டி விசய்யின் பேய்ப்படசீடி சாரி சாரி சுறாப்பட சீடி அனுப்பப்படும்(யாருல கோபமா கொடூறமா பாக்குறது இளய தளபதி ரசிகரா இந்தப்பக்கம் வாங்க இந்தாங்க கூல் சோடா குடிங்க)

shanmugavel said...

ஆரம்பத்துலையே பயம் வந்துடுச்சி! சௌந்தர் வேற உறுதியா பதில் சொல்லிட்டாரே!

சென்னை பித்தன் said...

நல்லாக் கெளப்பறாங்கய்ய பீதியை! பதில் சொல்ல ஆராய்ச்சி தேவை!

பாலா said...

@துஷ்யந்தன்

பேய்களுக்கு ஆதரவா குரல் கொடுக்க நான் ஒருத்தனாவது இருக்க வேண்டாமா? நன்றி நண்பரே.

பாலா said...

@மாய உலகம்

சந்திரமுகி முதல் காஞ்சனா வரை பேய் இருப்பதை கண்டுபிடிக்க நிறைய ஐடியா கொடுத்திருக்காங்க நம்ம சினிமாகாரங்க..

என் பங்குக்கு நானும் ஒரு ஐடியா தரேன். இது ஒரு பேய் படத்தில் பார்த்ததுதான். இரவு தனியா ஒரு அறைக்குள் சென்று எல்லா லைட்டையும் ஆப் பண்ணிட்டு, கண்ணாடி முன்னால் நின்று கொண்டு பேய், பேய் பேய் என்று மூன்று முறை சொன்னால் கண்ணாடியில் பேய் தெரியுமாம். ட்ரை பண்ணி பாருங்க

பாலா said...

@# கவிதை வீதி # சௌந்தர்

நீங்க பேய்க்கு பயப்படுற மாதிரி தெரியல... அதனால அத விட பயங்கரமா ஏதாவது ஒண்ண வச்சுத்தான் பயமுறுத்தணும்...

பாலா said...

@Peraveen

நன்றி நண்பரே

பாலா said...

@K.s.s.Rajh

அவங்க இப்போ யாரும் வரமாட்டாங்க. பாதி பேர் வேலாயுதம் பாட்ட மனப்பாடம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க, மீதி பேர் மங்காத்தாவ கலாய்ச்சு இப்போவே பதிவெழுத ஆரம்பிச்சிருப்பாங்க...

பாலா said...

@Chitra

நல்ல வேளை பேய்தனமான பதிவர்னு சொல்லாமல் விட்டீங்களே.. நன்றிங்க

பாலா said...

@shanmugavel

ஆமாங்க ராத்திரி தனியா எங்கேயும் போய்டாதீங்க

பாலா said...

@சென்னை பித்தன்

ஆமா சார் நீங்கதான் எல்லா மேட்டர்லையும் புகுந்து விளையாடுவீங்களே... பிரீயா இருந்தா கொஞ்சம் சுடுகாட்டுப்பக்கம் போயிட்டு ஆராய்ச்சி பண்ணிட்டு வாங்களேன்...

”தளிர் சுரேஷ்” said...

மூடநம்பிக்கைகளை விளாசி தள்ளி விட்டீர்கள்! ஆனால் நான் என் சொந்த அனுபவத்தில் பேயைப் பார்த்திருக்கிறேன்! சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ஆனால் அதற்கு கால் இருந்ததா என கவனிக்க வில்லை!

K.s.s.Rajh said...

@பாலா
அவங்க இப்போ யாரும் வரமாட்டாங்க. பாதி பேர் வேலாயுதம் பாட்ட மனப்பாடம் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க, மீதி பேர் மங்காத்தாவ கலாய்ச்சு இப்போவே பதிவெழுத ஆரம்பிச்சிருப்பாங்க...

சரியாச்சொன்னீங்க..ஹி.ஹி.ஹி.ஹி

kumar2saran said...

அநியாயத்துக்கு யோசிச்சிருக்கீங்க பாஸ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜய் படம் பாருங்க. விடை கிடைக்கலாம்

N.H. Narasimma Prasad said...

நீங்க சொல்ற எல்லாமே சினிமா பேய்கள் தான். நிஜப்பேய்கள் கிடையாது. ஒரு சினிமா ஹீரோ நோஞ்சானா இருந்துகிட்டு இருபது அடியாட்களை பந்தாடுறதை நாம சினிமால பாக்குறதில்லையா? அது போலத்தான்.

arasan said...

நான் பேயை கண்டதில்லை ...
நம்புவதிமில்லை ..
உங்களின் சந்தேகம் நியாயமான சந்தேகம் தான் ...
முனி மூன்றில் பதில் இருக்கா என்று பார்ப்போம்

Leon said...

நான் பேயை கண்டதில்லை ...
நம்புவதிமில்லை

Leon said...

நான் பேயை கண்டதில்லை ...
நம்புவதிமில்லை

செங்கோவி said...

ஏன்யா பேயை இப்படி ரவுண்டி கட்டி அடிச்சிருக்கீங்க? பேயைப் பார்த்தா பாவமா இல்லியா..

பாலா said...

@kumar2saran

நீங்களும் வேலை வெட்டி இல்லாம மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சா இப்படி நிறைய சந்தேகம் வரும்....

பாலா said...

@thalir

உண்மையா நண்பரே.... பரவாயில்லை இனிமேல் பார்த்தால் மேற்படி சந்தேகங்களை கேட்க முடிந்தால் கேளுங்கள்.

பாலா said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

பேயை சந்திக்கணும்னா சாகணும்னு சொல்லாம சொல்லி இருக்கீங்க... அந்த ரிஸ்கை நான் எடுக்க மாட்டேன்.

பாலா said...

@N.H.பிரசாத்

ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சினிமாதானே பேயை அறிமுகப்படுத்தி வைக்கிறது? நன்றி நண்பரே...

பாலா said...

@அரசன்

நன்றி நண்பரே...

பாலா said...

@davis

கண்ணால் காணும்வரை எதையுமே நம்ப முடியாது. நன்றி நண்பரே..

பாலா said...

@செங்கோவி

நண்பா நீங்களும் நம்ம ஆளுதானா? பேய்களுக்கு ஆதரவு கொடுக்க நீங்களும் இருக்கீங்களா?

Unknown said...

ஹிஹி என்ன கொடும இது ஒரு பேய் படம் பாத்தாப்போல ஆயிருச்சி!

இராஜராஜேஸ்வரி said...

பேய் பேயாய் பதிவு போட்டிருக்கீங்களே!!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

Related Posts Plugin for WordPress, Blogger...