விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 19, 2012

வெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே?நண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த பதிவுக்கு நிறைய தலைப்புகளை சிந்தித்து வைத்தேன். அதாவது, 'பில்லா - 2 ஒரு விளங்காத படம்', 'பில்லா -2 அறைவேக்காடுகளின் ஹாலிவுட் ஆசை', 'இதெல்லாம் ஒரு படமா?', 'பில்லா-2 நேர்மையான பார்வை', என்று. இவ்வளவு ஏன், 'ஹிட்ஸ்க்காக ஒரு பதிவு' என்று கூட ஒரு தலைப்பை யோசித்தேன். ஆனால் பதிவுலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், உங்கள் பதிவின் தலைப்பில் டாக்டர் அல்லது விஜய் என்ற வார்த்தைகள் வந்தால் கண்டிப்பாக ஹிட்ஸ் கிடைக்கும் என்று சொன்னார். எது எப்படியோ எனக்கு ஹிட்ஸ் கிடைத்தால் "இப்போ சந்தோஷமா ஷகீலா ரசிகர்களே?" என்று கூட தலைப்பு வைக்க ரெடியாகவே இருந்தேன். ஆகவேதான் இந்த தலைப்பு. மற்றபடி தலைப்புக்கும் உள்ளே இருக்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லை.முகு: இந்த பதிவை படித்த பிறகு, என்னை விசிலடிச்சான் குஞ்சு, சொம்பு அல்லக்கை, டாஷ் டாஷ் டாஷ் என்று திட்ட நினைத்தால் மனதுக்குள்ளேயே திட்டிக்கொள்ளுங்கள்.  பிடிக்காதவர்கள் அடுத்த பத்தியை படித்தவுடனேயே கிளம்பி விடுங்கள். முழுவதும் படித்து, அல்சர் வந்து அவதிப்படாதீர்கள்.

முகு2: இது மிக நீளமான ஒரு நகைச்சுவை பதிவு. ஆகவே திட்டாமல் பொறுமையாக படித்துவிடுங்கள்.


சரி இது ஒரு கற்பனை உரையாடல். இது நிஜத்திலும் நடந்திருக்கலாம். திரைத்துறையின் இரண்டு வெவ்வேறு துருவங்களின் ரசிகர்கள் சந்தித்து கொள்கிறார்கள். ஒருவர் தன் தந்தை மூலமாக திரையுலகுக்கு வந்தாலும் அது 10 சதவீதமே அவருக்கு உதவியது. மீதம் 90சதவீத சொந்த உழைப்பு(?), திறமை(?) ஆகியவற்றால் ஸ்டார் வேல்யூவால் சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டாரை முந்தி, இப்போது புரட்சி தலைவரையும் மிஞ்சி திரையுலகின் தன்னிகரற்ற மனிதராக இருக்கிறார். அவரது பெயரை கூறும் அருகதை நமக்கு இல்லாததால் அவரை டாக்டர் என்றே அழைப்போம். இன்னொருவர் எதுவுமே தெரியாமல் திரையுலகுக்கு வந்து, ஊரை ஏமாற்றி இந்த இடத்துக்கு வந்தவர். அவருக்கு பேசத்தெரியாது, நடிக்க தெரியாது. இதை கண்டுபிடித்து சொன்ன்வர்கள் கம்பவுண்டர்கள் தான். என்ன கம்பவுண்டர்கள் என்றால் தெரியவில்லையா? டாக்டரின் தொண்டரை கம்பவுண்டர் என்று தானே சொல்ல வேண்டும்? சமீபத்தில் கூட அவர் டானாக நடித்து வெளிவந்த ஒரு படம் அட்டர் பிளாப் ஆனது. இதை சொன்னவர்களும் கம்பவுண்டர்களே.   இப்போது நடக்கும் இந்த உரையாடல் டாக்டரின் ரசிகருக்கும், விரைவில் டாக்டர் ரசிகர் ஆக துடிக்கும் அவரது எதிரியின் ரசிகருக்கும் நடந்தது. 

"என்னடா ரொம்ப சோகமா இருக்க? படம் பிளாப்பா?"

"இல்லையே நான் சோகமா இல்லையே? எனக்கு படம் பிடிச்சிருந்ததே?"

"சும்மா சொல்லாதே. எனக்கு தெரியும். நீ சோகமாத்தான் இருக்க. நீ சோகமாத்தான் இருக்க. அய்யோ நீ சோகமாத்தான் இருக்க... நீ சோ...."

"அண்ணே அண்ணே வேணாம்ண்ணே. உங்கள பார்த்தா பாவமா இருக்கு."

"அப்போ ஒத்துக்கோ"

"அய்யோ சோகமா இல்லாத ஒருத்தன் எப்படி ஒத்துக்க முடியும்?"

"அதெல்லாம் முடியும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட இந்தப்பக்கம் கொஞ்ச பேர் இப்படி போய்க்கிட்டு இருந்தாங்க. மொதல்ல அவங்க கிட்ட கேட்டப்போ படம் மோசமில்லை. பார்க்கலாம்னு சொன்னாங்க."

"அப்புறம் அவங்க கைய கால புடிச்சு, படம் பிளாப்னு சொல்ல சொல்லி கெஞ்சினேன். அவங்க ஒத்துக்கல. கடைசில அத புடிச்சேன்."

"அய்யோ எத?"

"அவங்க கழுத்தை. அவங்க கழுத்தை புடிச்சு ஒத்துக்கோன்னு கோலவெறியோடு ஒரு பார்வை பார்த்தேன். அப்புறமா ஒத்துக்கிட்டாங்க"

"ரொம்ப பாவம்ண்ணே நீங்க."

"இதெல்லாம் என் கடமைடா. டாக்டருக்காக எது வேணும்னாலும் செய்வோம். உங்க ஆளு படத்துக்கு ஒரு வாரம் டிக்கெட் கிடைக்கலன்னு சொன்னாங்களே ஏன் தெரியுமா?"

"தெரியலயே?"

"எல்லா டிக்கெட்டையும் நாங்களே புக் பண்ணினோம். அப்போதானே மொத நாளே படம் பார்த்துட்டு. எல்லோரையும் பிரேயின் வாஷ் பண்ண முடியும்?"

"ஓ படம் நல்லாத்தானே இருக்கு. அதை எப்படி நல்ல இல்லைன்னு சொல்லுவீங்க?"

"அதெல்லாம் சொல்லலாம். எங்காலு நடிச்ச ஏறா நல்லாவா இருந்துச்சு? அந்த டைம்ல நாங்க எழுதனத படிச்சு பாரு. ஆஸ்கார் ரேஞ்சுக்கு எழுதினோம். போன வருஷம் கூட எங்காத்தாவை என்னா கிழி கிழிச்சொம்? சூலாயுதம் ஹாலிவுட் தரம்னு எழுதினோம். இதுக்கெல்லாம் தனி திறமை வேணும்."

"அப்போ உண்மையை சொல்றதே இல்லையா?"

"டேய் எங்க டாக்டர் எங்கள அப்படி வளர்க்கல. ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா நாங்க எங்க பேச்சையே கேக்க மாட்டோம். ஆனா டாக்டர் என்ன சொன்னாலும் கேட்போம்."

"சரி விடுங்க இந்த படத்தை பத்தி சொல்லுங்க. இதை எப்படி குறை சொல்ல்ப்போறீங்க?"

"டேய் இதெல்லாம் ஒரு படமாடா? இதை மனுஷன் பார்ப்பானா?"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"ஒரு பாத்ரூம் சீன், சோப்பு போடுற சீன், கிணத்துல தண்ணி இறைக்கிற சீன் ஏதாவது இருக்கா?"

"ஓ வேற என்ன குறை இருக்கு?"

"படத்துல உங்காளு நடந்துக்கிட்டே இருக்காரு. "

"மனுஷன்னா நடக்கத்தானே செய்வான். வேற என்ன செய்யனும்?"

"அதெல்லாம் சாதாரண மனுஷன். எங்க ஆளு நடந்து பாத்திருக்கியா? ஒண்ணு, ஓடுவாரு, இல்லைனா பறப்பாரு"

"படம் ஸ்டைலிஷா இருக்கே?"

"டேய் இந்தியாவிலேயே ஸ்டைலிஷ் ஹீரோ எங்க டாக்டர் தாண்டா. இதை யார் கால்ல விழுந்தும் ஒத்துக்க வைக்க நாங்க ரெடி. ஒத்துக்கிறியா, ஒத்துக்கிறியா ஒத்துக்கிறியா " (அவர் கண்களில் பிரியமுடன் விஜய்யின் வெறி தெரிகிறது)

"அய்யோ ஒத்துக்கிறேன் ஒத்துக்கிறேன். என்னை ஒண்ணும் பன்னீறாதீங்க. இந்தியாவிலேயே ரொம்ப ஸ்டை .... ஸ்டைலிஷ் ஆனா ஆள் டாக்டர்தான். சரி வேற என்ன குறை கண்டீங்க?"

"படத்துல உங்க ஆள் எல்லாரையும் சுட்டுக்கிட்டே இருக்காரு. கொன்னுக்கிட்டே இருக்காரு. ஒரு நியாயம் தர்மம் வேணாம்? எங்காளு நடிச்ச காக்கா, படத்துல வன்முறை எல்லாம் எவ்வளவு எதார்த்தமா காட்டி இருப்பாங்க? அழகிய திருமகன் படத்துல நெகட்டிவ் ரோலில் கூட ஒரு நல்லவனை எங்காள் காட்டி இருப்பாரே?"

"என்னங்க ஒரு டான் எப்படி நல்லவனா நடிக்க முடியும்? வன்முறை ஓவர். அதனாலே தானே ஏ சர்டிபிகேட் கொடுத்தாங்க?"

"ஏ சர்டிபிகேட் கொடுத்தாங்க சரி. அதுக்காக ஒரு கில்மா சீன் கூட இல்லைனா எப்படி? நானும் ஏ படம்னா சீன் நிறைய இருக்கும்னு நம்பி ஏமாந்து போனேன்."

"ஓ அதான் உங்க கோபத்துக்கு காரணமா?"

 "அது மட்டுமல்ல. ஒரு படம் எந்த சர்டிபிகேட் படமா இருந்தாலும் எல்லோரும் பார்க்கிற மாதிரி இருக்கனும். உதாரணமா நொந்தசாமி படம் பார்த்தியா. அது குழந்தைகளுக்கான படம்தான். ஆனால் அதிலேயும் கில்மா சீன்ஸ் இருக்கே?"

"என்னது நொந்தசாமி குழந்தைகள் படமா?"

"அவ்வளவு ஏன் எங்க சூலாயுதம். அதுவும் குழந்தைகள் படம்தான். அதுக்காக பன்சிகா கொடுத்த கால்ஷீட்டை வேஸ்ட் பண்ண முடியுமா? எங்காள் ரொம்ப நல்லவர். நிஜத்தில் எதுவுமே பண்ணமாட்டார். அதனாலதான் கனவுல பன்சிகாவை தடவினார்."

"அய்யோ எனக்கு தலை சுத்துதே? படத்தில் வேறு என்ன குறை?"

"படத்துல உங்க ஆள் தொந்தியும் தொப்பையுமா அங்கிள் மாதிரி இருக்கார். எங்காத்தாவில் தலை நரைத்திருந்தாலும் எவ்வளவு ஸ்மார்ட்டா இருந்தார்?"

"அடப்பாவிகளா அந்த படம் வந்தப்போ, சுண்ணாம்பு தலையன் என்று கிண்டல் பன்னீங்க?"

"அது அப்படித்தான். அடுத்த படம் வர்ரப்போ, இந்த படத்தில் அழகா இருந்தார்னு சொல்லுவோம். அடுத்த டாக்டர் படம் வர்ற வரைக்கும் முந்தைய படத்தை சூப்பர் ஹிட், பிளாக் பாஸ்டர்னு சொல்றதில்லையா அதுமாதிரி. உங்க ஆள் படம் முழுவதும் ஏன் உர்ருன்னு வரார். ஹீரோன்னா கலகலப்பா இருக்க வேணாமா? 

"அதெப்படின்னே முடியும்? வாழ்க்கை முழுவதும் வேதனைகளை அனுபவித்தவன் எப்படி கலகலப்பா இருப்பான்?"

"பகபதில பார்த்தியா, டாக்டர் தன் தம்பியோட இறந்த நாளா இருந்தாலும் பீர் அடிச்சுட்டு ஆண்ட்டிகளோடு சேர்ந்து ஒரு குத்தாட்டம் போடுவாறு"

"கிளைமாக்ஸ்ல எங்காள் ஹெலிகாப்டர் பைட்ல ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காரே பார்த்தீங்களா?"

"போடா வெண்ணை. எங்காள் படத்துல நடிக்கிறதே பெரிய ரிஸ்க்தான் தெரிஞ்சுக்கோ. அதுமட்டுமில்ல உங்காள் படத்தோட கதையை ஹாலிவுட்டுல இருந்து உருவி இருக்கானுங்க. ஃபைட் சீன்களை டாக்டர் படத்துல இருந்தே உருவி இருக்காங்க."

"என்னது? எப்படின்னே சொல்றீங்க?"

"அம்பு படம் பார்த்தியா? அதுல டாக்டர் கூலிங்க் கிளாஸ் போட்டுகிட்டு கோட் எல்லாம் மாட்டிக்கிட்டு வருவாரு. அதே படத்துல பல வெளிநாட்டு லோக்கேஷன் எல்லாம் போயி வெள்ளக்கார வில்லன்களை அடிப்பாரு. ஹெலிகாப்டர்ல இருந்து எட்டி பார்த்துக்கிட்டே பான்ஜோ பான்ஜோ பெவேலாஞ்சேனு பாடுவாறே? டாக்டர் மாதிரி ஆகணும்னு இதை எல்லாம் உங்காளு காப்பி அடிச்சுட்டாறு"

"ஆமாண்ணே. நீங்க சொல்றதும் சரி மாதிரிதான் தெரியுது. வேண்டாம்ண்ணே தமிழ்நாட்டுக்கு ஒரு டாக்டர் போதும். ஆனா இதை எல்லாம் டாக்டர் தெலுங்கில் இருந்து காப்பி அடிக்கிறார்னு சொல்றாங்களே?"

"யார் சொன்னது? ரீமேக் பண்றது தப்பே இல்ல. ரஜினி கூடத்தான் நிறைய படங்களை ரீமேக் பண்ணாரு. யாராவது கேட்டீங்களா? இல்லையே. ஏன்னா பொறாமை. எங்க டாக்டர் ரஜினியை விட பெரிய ஆளா ஆகிடுவாரோன்னு பொறாமை."

"டாக்டரோட மோகன் அத்தியாயம் ஏழரை படத்துல வெள்ளக்கார பொண்ணு ஹீரோயினா நடிக்குதாமே? உண்மையா? எங்காளு படத்துல ஒரு வெள்ளக்காரி நடிச்சவுடனே போட்டியா?"

"டேய் ரஜினி கூடத்தான் ஐஸ்வர்யாராய்க்காக அலைஞ்சார்"

"ஏன்ண்ணெ ஆ வூன்னா அங்கேயே போறீங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க."

"டேய் இந்த டிரெண்டை ஆரம்பிச்சு வச்சதே டாக்டர்தான். அது தெரியுமா? பத்து வருசத்துக்கு முன்னாடி திரும்பி பாரு. ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு ஹீரோயினை கையில கால்ல விழுந்து நடிக்க வச்சாங்க. படம் மொக்கைன்னாலும் டாக்டர் ஆசை நிறைவேறிடுச்சு பார்த்தியா? "

"ஆமா நடிக்கவே மாட்டேன்னு சொன்ன ஹிந்தி நடிகையை கூட, புதிய சீதையில் கெஞ்சி நடிக்க வச்சு, அப்புறம் அந்த நடிகை டாக்டர் என்கிட்ட ரொம்ப வழியுறார்னு பேட்டி எல்லாம் கொடுத்துச்சே?"

"அதெல்லாம் பழைய கதை. இப்போ கிளறாதே. உங்காளு படத்துல லாஜிக் இருக்கா? சொல்லு. ஒரு முதலமைச்சருக்கு அவ்வளவுதான் பாதுகாப்பு கொடுப்பாங்களா? ஹெராயினை அவ்வளவு ஈஸியா கடத்திட முடியுமா?"

"லாஜிக் பத்தி நீங்களெல்லாம் பேசுறது காமெடியா இருக்கு. படத்தோட கதை 90களின் ஆரம்பத்தில் நடப்பது போலத்தானே காட்டி இருக்கிறார்கள்? அப்போ ஓரளவுக்கு எல்லாம் சாத்தியம் தானே? படத்தில் வில்லன் கூட செல்போன் பயன்படுத்தவில்லை கவனித்தீர்களா"

"சரி விடு. அதென்ன உங்க ஆளு எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார். எந்த படத்துக்காவது வித்தியாசம் இருக்கா? டாக்டரை பாரு. எல்லா படத்திலேயும் எப்படி வெரைட்டியா என்டர்டெயின் பண்றாரு. கெட்டப் செஞ்ச் பண்ணாமலேயே அசத்துராரே?"

"ஹா ஹா ஹீ ஹீ"

"என்னடா சிரிப்பு?"

"ஒண்ணும் இல்லைன்னே. இப்போ என்ன சொல்ல வர்ரீங்க? படம் நல்லா இருக்கா இல்லையா?"

"நான் படத்தை மூணு வாட்டி பார்த்துட்டேன் அதுக்காக எல்லாம் நல்ல இருக்குனு சொல்லிட முடியாது."

"பார்த்தீங்களா உங்களுக்கே படம் பிடிச்சிருக்கு. அப்புறம் ஏன்ண்ணெ இப்படி பேசுறீங்க?"

"இல்ல இல்ல இல்ல, எல்லோரும் டாக்டர் படம் வந்தா கலாய்க்கிறாங்க. அதனால நாங்க பதிலுக்கு இப்படித்தான் பண்ணுவோம். படம் நல்லா இல்லை, பிளாப். மொக்கை, சூர மொக்கை. இன்னொரு ராஜ பாட்டை, பத்து சுறா, நூறு வேட்டைக்காரன். பிகைண்ட் வுட்காரன் சொல்லிட்டான். நானும் தியேட்டர் பக்கம் போய் எண்ணிப்பார்த்தேன். மொத்தமே 40 பேர் கூட இல்லை."

"ஏன் உங்க வேலையெல்லாம் விட்டுட்டு இப்படி தியேட்டர் தியேட்டரா போய் லூசு மாதிரி எண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

"படம் பிளாப். படம் ஓடாது. மொக்கை. தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம். உங்காளுக்கு ஆட தெரியாது, நடிக்க தெரியாது, தமிழ் தெரியாது. பார்ப்பனர் பக்கிரி டேலெட்டி ஒழிக, படம் பிளாப், பிளாப், பிளாப். அய்யோ பிளாப் அய்யோ பிளாப்." (தன் சட்டையை கிழிக்க தொடங்குகிறார்.)

"அய்யோ பாவம். இவர்களுக்காகவாது டாக்டரின் அடுத்த படமான குயிக் கன் வெற்றி பெறனும்." என்று சொன்னபடி அந்த இடத்தை விட்டு செல்கிறார். 

பிகு: வழக்கம்போல இந்த கட்டுரை யாரையும் இழிவு படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. எல்லாம் கற்பனையே. இந்த பதிவிற்கு கமெண்ட் மாடரேஷன் இல்லை. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 

72 comments:

Unknown said...

Sariyana Nethi Adi...to Vijay fans

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு பிரியட் ஆகுதுங்க.... படிச்சி முடிக்க

ARASU said...

you are correct bala, ajith average movies kuda ivangala over mokkanu solliye verupethuvanunga,ana doctor padam sumaar nu nammala pola otthukka sollunga parpom?? ada vidunga boss ivanga epavume ipdithan ...

கவிதை வானம் said...

படிக்க நேரம் போவது தெரியவில்லை

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பெயரையெல்லாம் மாற்றி மாற்றி எழுதியிருக்கின்றீர்கள் ஆனால் சுலபமாக கண்டு கொள்ளலாம். நானே கண்டு பிடிச்சிட்டேனா பார்த்துக்கொள்ளுங்கள். போங்க, நீங்க குவிஸ் போட்டிக்குப் போனால் எல்லோரும் விடைகளை விரைவாகக் கண்டு பிடித்து விடுவார்கள். லொள்..:))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவிதை வீதி... // சௌந்தர் // said...
ஒரு பிரியட் ஆகுதுங்க.... படிச்சி முடிக்க/////

வெளங்கிரும்.....

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நீங்க கலக்குங்க சார்...

பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்... (த.ம. 2)

"ராஜா" said...

//"சும்மா சொல்லாதே. எனக்கு தெரியும். நீ சோகமாத்தான் இருக்க. நீ சோகமாத்தான் இருக்க. அய்யோ நீ சோகமாத்தான் இருக்க... நீ சோ...."

இந்த கேள்வியை கேக்கிற பயபுள்ளைகதான் உண்மையிலேயே சோகமா இருப்பானுக ,

//"சரி விடுங்க இந்த படத்தை பத்தி சொல்லுங்க. இதை எப்படி குறை சொல்ல்ப்போறீங்க?"

பாக்காத படத்துல குறை இருந்தா என்ன இல்லாட்டி என்ன நம்மளா அடிச்சி விடுறதுதான் பாஸ் ...

//"ஒரு பாத்ரூம் சீன், சோப்பு போடுற சீன், கிணத்துல தண்ணி இறைக்கிற சீன் ஏதாவது இருக்கா?"

ஹீரோயினை குப்புற படுக்க போட்டு தடவுற சீன்தான் இருக்கா , அட ஹீரோயின் காட்ட வேணாம் , ஹீரோவாவது ரெண்டு மூணு சீன்ல சட்டையே போடாம புடைத்த மார்பை நிமிர்த்தி காட்டும் கில்மா சீன்களாவது இருக்கா , அட்லீஸ்ட் உங்க ஹீரோ ஏதாவது ஒரு பாட்டிலாவது குரங்குக்கு எலெக்ட்ரிக் ஷாக் குடுத்த எபக்ட்டில் இருக்கும் ஹேர் ஸ்டைலில்லாவது வருகிறாரா? ஹீரோயினை கரெக்ட் செய்வதற்கு முன்னாள் அவள் பாட்டியை கரெக்ட் செய்யும் ப்ளே பாயாக கூட உங்கள் ஹீரோ இல்லையே...

//உங்க ஆள் படம் முழுவதும் ஏன் உர்ருன்னு வரார். ஹீரோன்னா கலகலப்பா இருக்க வேணாமா?

அட்லீஸ்ட் அவனுங்க ஆளை போல பேக்குல பைல்ஸ் வந்த மாதிரியாவது கர்ண கொடூரமா எக்ஸ்பிரஷன் கொடுக்க வேண்டாமா...

//அந்த நடிகை டாக்டர் என்கிட்ட ரொம்ப வழியுறார்னு பேட்டி எல்லாம் கொடுத்துச்சே?"

அந்த பொண்ணு இப்ப உயிரோட இருக்கா? இல்ல டாக்குடர் மூஞ்ச சும்மாவே பாக்க முடியாது இதுல அவரு வழியிரத வேற பாத்திருக்கே , காத்து கருப்பு அடிச்சி செத்து போயிருக்காது

//ஏன் உங்க வேலையெல்லாம் விட்டுட்டு இப்படி தியேட்டர் தியேட்டரா போய் லூசு மாதிரி எண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

டாக்குட்டர் படம் ஓடுற தியேட்டர்ல போயி ஆளை எண்ணி பாத்திட்டு இங்க வந்து என்னமா ரவுசு விடுதுக...

"ராஜா" said...

//மீதம் 90சதவீத சொந்த உழைப்பு(?), திறமை(?)

சங்கவி , சுவாதி ,யுவராணி யில் ஆரம்பித்து இன்றைய அனுஷ்கா , ஹன்சிகா வரைக்கும் அத்துணை பேரோட உழைப்பு ,திறமை தல இது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"ராஜா" said...
//மீதம் 90சதவீத சொந்த உழைப்பு(?), திறமை(?)

சங்கவி , சுவாதி ,யுவராணி யில் ஆரம்பித்து இன்றைய அனுஷ்கா , ஹன்சிகா வரைக்கும் அத்துணை பேரோட உழைப்பு ,திறமை தல இது/////////

இத்தன பேரோட “உழைப்பையும்” வாங்குறது ஒரு திறமை இல்லையாண்ணே?

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா...................
சூப்பர் பாஸ் செம கலாய்ப்பு

என்ன இன்னமும் கம்பவுண்டர்களை காணவில்லை

Unknown said...

Semayana pathivu..

Unknown said...

ஸ்ஸ்ஸ் அபா முடியல...

பட்டிகாட்டான் Jey said...

ஏம்ப்பா பாலா, இப்படி பப்ளிக்கா முச்சந்தில வச்சி குமுறியிருக்கியே... உனக்கு மனசாட்சியே இல்லையாப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கமா டாகுடர் படம் வரும்போதுதான் இப்படி கொமட்டுலயே குத்துவானுங்க, இப்போ தல படம் வந்ததுக்கும் ஆரம்பிச்சிட்டானுகளே.... இன்னும் என்னென்ன நடக்க போவுதோ....?

இப்படிக்கு,
அகில ஒலக கம்பவுண்டர்கள் சங்கம்
டாகுடர் பேரவை
சங்கவி பாசறை
எஸ்.ஏ.சி. போர்ப்படை

Thava said...

படிக்க படிக்க படிச்சுகிட்டே இருந்தேன்..அலுக்கவே இல்ல..ரொம்ப நாள் உங்க எழுத்துக்களை படிக்க இயலாமல் போனது பெரிய லோஸ்..
கல கல வான பதிவு..எவரா இருந்தாலும் கட்டாயம் சிரிப்புதான்..அங்கங்க கொடுத்த பன்ஜ் அழகு..சில விஷயங்களை மறைமுகமா நீங்க குறிப்பிட்டாலும் ஈசியா புரிஞ்சிக்க முடிந்தது..ஒவ்வொருத்தரோட கமெண்ட் மேல பார்த்தாலே அசத்தல்..

இந்த மாதிரி ஆளுங்க இங்கயும் இருக்காங்க..ஒரிஜினலான ரசிகனுக்கு முன்னாடியே போய் படம் பார்த்துட்டு சில பிடிச்சாலும் பிடிக்கலனு சொல்லிடுவாங்க..நிறையவே இப்படி நடக்குது..
ஒரு குட்டி தகவல் : நான் அஜித், விஜய் ரெண்டு பேருக்குமே ரசிகன்..ரொம்ப வருடங்களாகவே..

பால கணேஷ் said...

கலக்கல் பாலா... ரசித்துச் சிரித்தேன்.

Gobinath said...

கலக்கல் காமெடி பாஸ்.

Unknown said...

இதுக்கு ஒரு முடிவே இல்லையா பாலா?

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

பாலா said...

@Unknown

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

கொஞ்சம் நீளம்தான். என்ன பண்றது? இன்னுமும் நிறைய மேட்டர் எழுத விட்டுப்போச்சு. நன்றி நண்பரே

பாலா said...

@ARASU

பாவம் அவங்களும் விரக்தியில என்ன பேசுறதுன்னே தெரியாம பேசிக்கிட்டு இருக்காங்க. நன்றி நண்பரே

பாலா said...

@பரிதி.முத்துராசன்

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

இது ஒரு கற்பனை அப்படியே மெயிண்டேயின் பண்ணுங்க மேடம் ஹி ஹி

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

எனக்கு தெரியாது தல. :))))

பாலா said...

@திண்டுக்கல் தனபாலன்

கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@"ராஜா"
நீங்க எழுதுறதா வச்சு இன்னும் ஒரு பதிவு போடலாம் போலிருக்கே? நன்றி நண்பரே

பாலா said...

@K.s.s.Rajh

கருத்துக்கு நன்றி நண்பரே. கம்பவுண்டர்கள் இப்போ கவுண்டர் கொடுக்க யோசிச்சுக்கிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

பாலா said...

@david raja

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

என்ன பண்றது? நம்மள சும்மாவே இருக்க விடமாட்டேண்கிறாங்களே

பாலா said...

@Jey
மனசாட்சியே இல்லாம பேசினா இப்படித்தான் பதில் சொல்லணும் வேறென்ன பண்றது?

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
இனி பவர்ஸ்டார் படம் வந்தாலும் டாகுட்டர் கதி அதோ கதிதான். பை த வே உங்க சங்கத்து அட்ரஸ் நல்லா இருக்கு

பாலா said...

@Kumaran

இந்த பதிவின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

பாலா said...

@பால கணேஷ்

நீங்க திட்டுவீங்களோன்னு பயந்தேன். நன்றி சார்

பாலா said...

@Gobinath

கருத்துக்கு நன்றி பாஸ். அடிக்கடி வாங்க

பாலா said...

@இரவு வானம்

எனக்கும் இதே டவுட்டுதான் நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பாலா said...

@வலைஞன்

கொஞ்சம் பிஸியாக இருப்பதால், இப்போதைக்கு முடியாது. நேரம் கிடைக்கும்போது இணைக்கிறேன் நண்பரே. நன்றி

ADMIN said...

அப்பப்பபா.. ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சுட்டேன்... பதிவு ரசிக்கும்படியா இருக்கு.. பட் போட்டு வாங்கிற குணத்தை பதிவில காட்டியிருக்கிறது எனக்குப் பிடிக்கல.. சினிமா நடிகர்களை , வெறும் நடிகர்களாகவேதான் பார்த்து எனக்கு பழக்கம்.. அதில அஜித்தும், விஜய்யும்.. இன்னும் இருக்கிற நடிகர்கள் எல்லாருமே எனக்கு ஒன்றுதான்.. அவங்க நடிகர்கள்.. அவ்வளவுதான்..

ரசிகர்கள் ன்னு பேர்வச்சிக்கிட்டு அடிச்சுட்டு சாகறது.. சண்டைப் போட்டுக்கிறது எல்லாம் வேண்டாத வேலை.. அவர்கள் பிழைக்க சினிமாவில் நடிக்கிறார்கள்.. நம்முடைய பொழுதுபோக்கு நாம் சினிமாவைப் பார்க்கிறோம்.. அவ்வளவுதான்.. சினிமா பார்க்கிறதையே பொழைப்பா வச்சுட்டு இருந்தால்.. நிச்சயம் அவங்க ஊதாரிங்களாகத்தான் இருப்பாங்க...

கிரி said...

//படம் நல்லா இல்லை, பிளாப். மொக்கை, சூர மொக்கை. இன்னொரு ராஜ பாட்டை, பத்து சுறா, நூறு வேட்டைக்காரன். பிகைண்ட் வுட்காரன் சொல்லிட்டான். நானும் தியேட்டர் பக்கம் போய் எண்ணிப்பார்த்தேன். மொத்தமே 40 பேர் கூட இல்லை//

:-)) இதை யாரையோ சொல்ற மாதிரி இருக்கே ;-)

vivek kayamozhi said...

பாவம் பாஸ் டாகுடர்ர்ர் ரசிக கண்மணிகள், அப்பா ?!! எஸ்.ஏ.சி.யின் தொண்டர்கள்...எப்படா விழுவார் தல ஏறி மிதிக்கலாம்னு பார்த்தானுக,ஊளை சத்தம் ஓவரா இருக்கறதா பாத்தா இப்ப சொல்லலாம் தைரியமா படம் ஹிட்டுன்னு. இவனுக வயித்தெரிச்சல் தாங்கல போலேயே?
சரியான நெத்தியடி பாஸ். அதுவும் அந்த பசுபதி படத்தில் தம்பி இறந்தநாளில் சரக்க போட்டுட்டு ஆண்டிகளோட குத்தாட்டம்....சிரிச்சு முடியல போங்க ..

பாசத்திற்குரிய பாரதிராஜா said...

உங்கள் அனுமதி இல்லாமல். நான் என் facebook இந்த கட்டுரையை பகிர்ந்து கொள்ள போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்

தனிமரம் said...

அண்ணா பதிவு நீளம் டாகுத்தர் விசில் போல தான்!ம்ம் ஆனாலும் சில விடயம் ஜோசிக்க வைக்கின்றது பாலா!ம்ம்

Unknown said...

இப்படிதான் குத்தனும் பாஸ் இவிங்கள.................... (கெட்ட வார்த்தையாக வருது அடக்கிகிட்டேன் )

ஆத்மா said...

நீளமான பதிவு அப்பிடி இப்பிடி என்றெல்லாம் சொன்னீங்க அப்பிடி ஒன்னையும் கானோமே... :)

ஆத்மா said...

நல்லா எழுதியிருக்கிரீங்க சார் தொடருங்க....

Anonymous said...

ஹீ ஹீ.. பில்லாவும் அஜித்தும் பின்னே நீங்களுமா?ண்ணே.. டாக்டரின் காம்பவுண்டர்களை உண்மைலேயே நாங்க பாராட்டனும், அஜித்-சூர்யா-கார்த்தி நடிக்கிற மொக்க படங்கள்க்கு கூட கிரான்ட் ஒப்பனிங் கிடைக்கிறதுக்கு இவுங்களும் ஒரு முக்கிய காரணம்!!! நல்லா வருவாங்க!!

Athisaya said...

நானும் கண்டுபுடிச்சுட்டேன்......நல்லா இருக்கு சொந்தமே!சந்திப்போம்.


வலை விடு தூது..!!!!

பாலா said...

@தங்கம் பழனி

உங்களுடைய நேர்மையான கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@கிரி

எல்லோரும்தான் இப்படி சொல்லிக்கிட்டு இருக்காங்க. யாரைன்னு குறிப்பா சொல்றது?

பாலா said...

@vivek kayamozhi

நீங்க சொல்றது கரெக்ட் நண்பரே. கருத்துக்கு நன்றி

பாலா said...

@பாசத்திற்குரிய பாரதிராஜா

உங்க பெயர் நல்லா இருக்கு நண்பரே.

பாலா said...

@தனிமரம்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@N.Mani vannan

செம கடுப்பா இருக்கீங்க போலிருக்கே? நன்றி நண்பரே

பாலா said...

@சிட்டுக்குருவி

என்ன சொல்றீங்க இதை விட சிறிய பதிவு எழுதுறதுக்கே நீளமா எழுதுறீங்கன்னு சொன்னாங்க நண்பரே.

உங்க கருத்துக்கு நன்றி

பாலா said...

@மொக்கராசு மாமா

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Athisaya

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொந்தமே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்பல்லாம் படத்துல இருக்கிற காமெடிய விட படத்த பத்தி அவங்க சொல்றது ரொம்ப காமெடி.உங்க காமெடி கலாட்டா நல்லாத்தான் இருக்கு.

சீனு said...

ஹா ஹா ஹா மெய்யாலுமே சொல்றேன் தல நீ கலகுற தல

மாலதி said...

பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...

Rocket Ranga said...

Haa...Haa...Poor Ajith Fans pretending as though Vijay fans are the only ones who is saying Billa 2 is a Mokka Movie. But for the caption, if u ask if we are happy. Yeah, very much happy that A-rated Billa 2 is utter flop and termed as the Worst Movie of 2012, not by Vijay Fans, but by the Whole Media and General Public. Ending with the latest SMS Joke. What is the different between Nayanthara and Brunna Abdulla ?? Ans: Nayanthara's Bikini can save a movie.

Rocket Ranga said...

What more can Ajith fans say ?? Ananda Vikatan run by Vijay fans. Behindwoods, Indiaglitz, Sify run by Vijay Fans. Anybody who says Billa 2 is a mokka movie is a Vijay Fan :D :D

காப்பிகாரன் said...

எல்லார்க்கும் ஒருத்தவங்கள பிடிகிறது இல்ல அதுல ஏன் குறிப்பிட்ட ஆள மட்டும் கலைகிரிங்க எனக்கு புரில விஜயோ அஜித்தோ சம்பாரிச்சு நமல்ட குடுக்க போறது இல்லல ஒரு பேராசிரியர் ஒரு ஹீரோக்கு சப்போர்ட மற்றொரு ஹீரோவா மட்டம் தற்றது ஏன் என்னமோ போங்க

பாலா said...

@T.N.MURALIDHARAN

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@சீனு

அப்படியா? ரொம்ப நன்றி தல

பாலா said...

@மாலதி

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க

பாலா said...

@Rocket Ranga

வாங்க நண்பரே. உங்க பேரு மிக அருமையாக இருக்கிறது. நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா? அது போதும் நண்பரே. என்னது நயன்தாரா பிக்கினிக்காக பில்லா பார்த்தீங்களா? சரிதான். அதான் முதல்லயே சொன்னேனே டாக்டர் மட்டுமல்ல, கம்பவுண்டர்களும், ஏ படம் என்றாலே சீன் படம் என்றே நினைத்து கொண்டிருக்கிறார்கள். வேறென்ன சொல்ல? ராஜ் டிஜிட்டலில் அடிக்கடி விஜய் நடித்த பழைய படங்கள் ஒளிபரப்புவார்கள். பலான காட்சிகள் நிறைய இருக்கும் பாருங்கள்.

பாலா said...

@safi
கரெக்ட்தான் நண்பரே. விவரம் இல்லாமல் கேனத்தனமாக பேசுபவர்களையே இந்த பதிவு கலாய்க்கிறது. மற்றபடி டாக்டர் என்ன என் ஜென்ம விரோதியா?

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்........

Rocket Ranga said...

என்னது நயன்தாரா பிக்கினிக்காக பில்லா பார்த்தீங்களா? சரிதான். அதான் முதல்லயே சொன்னேனே டாக்டர் மட்டுமல்ல, கம்பவுண்டர்களும், ஏ படம் என்றாலே சீன் படம் என்றே நினைத்து கொண்டிருக்கிறார்கள். வேறென்ன சொல்ல? ராஜ் டிஜிட்டலில் அடிக்கடி விஜய் நடித்த பழைய படங்கள் ஒளிபரப்புவார்கள். பலான காட்சிகள் நிறைய இருக்கும் பாருங்கள்.

Haa..Haa..Haa..What power of comprehension ??!!! I said it is a joke and u r saying I watched the film for Nayan's Bikini. Keep Rocking Man. Long way to go. BTW, the last Ajith film I watched was Mugavari.

பாலா said...

@Rocket Ranga

என்ன நண்பரே நீங்கள் ஜோக் அடிக்கலாம். ஆனால் நான் அடிக்க கூடாது. ஜோக் என்கிற பெயரில் உங்கள் உள்ளத்தில் இருக்கும் வன்மைத்தைத்தானே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்? அப்படியானால் நேரடியாகவே சொல்ல வேண்டியதுதானே? பிறகு ஏன் மறைமுகமாக ஜோக் அது இது என்று சொல்கிறீர்கள்?
என்னது நீங்கள் பார்த்த கடைசி அஜித் படம் முகவரியா? அப்படியானால் அவரை விமர்சிக்கும் அருகதை கூட உங்களுக்கு கிடையாது. இனியும் நீங்கள் அஜித் படம் பார்க்கவிட்டால் யாரும் இங்கே உங்க காலில் விழுந்து கெஞ்சப்போவதில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...