விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 16, 2011

என் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாறு - 18

நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சிவாதிகள் என்றும், கம்யுனிஸ்டுகள் என்றும் தன்னை அழைத்துக்கொண்டு, மக்களிடையே வகுப்புவாதத்தை வேறுவிதத்தில் தூண்டிவிட்டு, அதில் ஆதாயம் தேடும் பல போலி கம்யூனிஸ்ட் ஈனப்பிறவிகளுக்கு, "எந்த கொம்பனாலும் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது!" என்று அனைத்து மத சகோதரர்கள் சார்பிலும் கூறிக்கொள்கிறேன்.  பணி நிமித்தமாக கேரளா சென்று விட்டதால், சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. ஆகவே மறுபடியும் ஒரு சிறிய இடைவெளி விழுந்துவிட்டது. 


முன்குறிப்பு: இதுவரை மிக நிதானமாக சென்றுகொண்டிருந்த இந்த தொடர் 2007 உலகக்கோப்பைக்கு பிறகு நடந்த நிகழ்வுகள் அநேகம் பேருக்கு பரிச்சயம் என்பதால், வெகு வேகமாக செல்லும் என்று கூறிக்கொள்கிறேன். 


முடிகிறது ஆஸ்திரேலியர்களின் ஆதிக்கம்... 


இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப்படிக்க...

மில்லேனியத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு அசுர பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. போகப்போக அதன் பலம் குறந்துவிடும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, அதன் பலம் அதிகரித்துக்கொண்டே போனது. இதற்கு ஒரு முடிவே கிடையாதா? என்ற ஏக்கம் போய், விரக்தியே ஏற்பட்டு விட்டது. ஆஸ்திரேலிய அணி பெரும் அரிய தோல்விகள் பெரிய அளவில் பேசப்பட்டன. என்னதான் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு என்பது உண்டுதானே? 2007 உலகக்கோப்பையை வென்று அசைக்கமுடியாத ஒரு அணியாக தன்னை நிலைநிறுத்தியது ஆஸ்திரேலியா. ஆனால் கடந்த பத்தாண்டுகளில், ஆஸ்திரேலியா பல வெற்றிகளை ஒரு முழு அணியாக பெற்றாலும், அதற்கு ஆணிவேறாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் ஷேன்வார்னே, மற்றொருவர் மெக்ராத். ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இனி குறையும் வாய்ப்பு என்று ஒன்று இருக்கிறதென்றால், அது இவ்விருவரின் ஓய்வுக்கு பிறகு ஏற்படப்போகும் வெற்றிடத்தால்தான் உண்டாக்க முடியும். அதற்குள் வேறு ஒரு மாற்று வீரர்களை அவர்கள் உருவாக்கி விட்டால் அதுவும் நடக்காமல் போகும் வாய்ப்புகள் உண்டு. இது கிரிக்கெட் ரசிகர்களிடயே பரவலாக பேசப்பட்ட விஷ்யம்.


இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்துவிட்டு, தலையை தொங்கப்போட்டுக்கொண்டு நாடு திரும்பியது. எல்லா மீடியாக்களும் அலறின. அடுத்த கேப்டன் யார்? என்று மறுபடியும் ஒரு கேள்வி எழுந்தது. மாறாக அடுத்து வந்த ஒரு சில தொடர்களுக்கு டிராவிட்டே கேப்டனாக தொடர்ந்தார். அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய அணி சரிசம அளவில் வெற்றி தோல்விகளை பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்திடம், டெஸ்ட் தொடரை வென்றாலும், ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது. அந்த நேரத்தில் திடீர் திருப்பமாக, டிராவிட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அத்தனை காலம் டிராவிட் அணித்தலைமையில் நீடித்ததன் காரணம், தகுதியான கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பது? என்ற குழப்பமே. இறுதியாக, டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளேவை விட்டால் ஆளில்லை என்ற நிலையில் அவரை கேப்டன் ஆக்கினார்கள். தோனியை நம்பி டெஸ்ட் அணியை ஒப்படைக்க இந்தியா நிர்வாகிகளுக்கு அப்போது துணிச்சல் இல்லை. மேலும் கும்ப்ளேவே, "என்னை கேப்டனாக நியமித்தால், சிறப்பாக செயல்படுவேன்." என்று வெளிப்படையாகவே தான் கருத்தை வெளியிட்டார். 


ஆனால் ஒருநாள் தொடருக்கு யாரை கேப்டன் ஆக்குவது என்ற குழப்பம் இருந்தது. இதற்கு இடையே கிரிக்கெட்டின் புதிய பரிணாமமான இருபது ஓவர் போட்டிகள் பிரபலமடைந்து வந்தன. 2005 ஆம் ஆண்டில் இருந்தே ஆடப்பட்டு வந்தாலும், 2007இல் தான் பரவலாக பேசப்பட்டது. இருபது ஓவர் போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில், இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் ஒன்றை தென்னாப்பிரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் பங்கேற்கும் இந்தியா அணிக்கு கேப்டனாக தோனியை நியமிக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே கொண்ட ஒரு சோதனை முயற்சி அணி தென்னாபிரிக்கா சென்றது. இருபது ஓவர் போட்டிகளைபொருத்தவரை, எல்லா அணிகளுமே கொஞ்சம் தடுமாறித்தான் போயின. புதிய ஆட்ட முறைகளை கற்றுக்கொள்ள சிரமப்பட்டன. இதில் ஆஸ்திரேலியாவும் அடக்கம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமைந்த இந்த தொடரில் இந்திய அணி மிக நேர்த்தியாக ஆடியது. குறிப்பாக, ஆஸ்திரேயாவுடனும், இங்கிலாந்துடனும் இந்தியா ஆடிய ஆட்டங்கள் மிகசிறப்பானவை. 


இங்கிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் பிளிண்ட் ஆப், யுவராஜூடன் வாக்கு வாதத்தில் ஈடுபட, இடையில் சிக்கி பிராட் பலிகடா ஆகினார். அவரது ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையை படைத்ததோடு, 12 பந்துகளில் 50 ரன் சேர்த்து இன்னொரு சாதனையையும் படைத்தார் யுவராஜ். இது பிராட் வாழ்க்கையில் கரும்புள்ளியாகவே அமைந்து விட்டது. இப்போது யாராவது பிராடை பற்றி பேசினால், ஆஷஸில் அவர் செய்த சாதனைகளை பற்றி பேச மறந்தாலும், இந்த சிக்சர்களை பற்றி பேச மறப்பதில்லை. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, கடைசி நேரத்தில் மிஸ்பா உல் ஹக் கொடுத்த சிறிய டென்சனையும் மீறி கோப்பையை கைப்பற்றியது. தோனி இந்தியாவின் புதிய ஹீரோ ஆனார்.கோப்பையுடன் நாடு திரும்பிய இந்த அணிக்கு, உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது. அடுத்ததாக தொடங்க இருந்த ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடருக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஆணிவேர்களான, ஷேன்வார்ன், மற்றும் மெக்ராத் இல்லாத அணி பலவீனமாக காட்சி அளித்தது. ஆனால் புதிய பவுலர்களான ஜான்சன், கிளார்க் ஆகியோர் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தனர். தொடரில் இரு அணிகளும் சமமாகவே ஆடின. இந்த காலகட்டத்தில் இந்திய அணி எதிர் அணிகளுக்கு பெரிய சவாலாகவே விளங்கியது . 2008 தொடக்கத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தொடரில் பங்கேற்றது. 


அதுவரை வெளியூர் தொடர்களில் தோற்றாலும், உள்ளூரில் அசைக்க முடியாத சக்தியாக ஆஸ்திரேலியா இருந்தது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றினாலும் அதன் வெற்றி கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதற்கு காரணம் ஜனவரி 2 ஆம் தேதி சிட்னியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டி. இப்போட்டியில், "அம்பயர்களின் தவறான தீர்ப்புகளே இந்தியா அணி தோல்விக்கு காரணம்." என்று சொல்லப்பட்டது. இரு இன்னிங்ஸ்களிலுமே ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் 4 முறை அம்பயர்களால் காப்பாற்றப்பட்டார். மேலும் பல ஆஸ்திரேலிய வீரர்கள் தவறான தீர்ப்புகளால் காப்பாற்றப்பட்டார்கள். இந்தியா வீரர்களோ, தவறாக அவுட் கொடுக்கப்பட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாமே அவுட் இல்லை என்று தெளிவாக தெரிந்தவையே. அதிலும் கங்குலிக்கு கிளார்க் பிடித்த ஒரு கேட்ச் தரையில் பட்டு வந்தது தெளிவாக தெரிந்தாலும், அம்பயர் பாண்டிங்கிடம் கருத்து கேட்க, அவர் அவுட் என்று சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட 12 முறை இந்தியர்களுக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டது. இதற்கு மேலும் இந்த போட்டியில் ஜெயிக்க எப்படி முடியும்?


இந்த போட்டியில் ஆஸ்திரேலியர்களில் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. "அதுவரை தோல்வியையே பார்க்காத காரணத்தால் ஒரு கட்டத்தில் தங்களின் நேர்மையை கூட வெற்றிக்காக அடகுவைக்க ஆஸ்திரேலியர்கள் தயாராகி விட்டார்கள்." என்று கூறினார்கள். இதே தொடரில், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸும், இந்தியாவின் ஹர்பஜனும் கடுமையாக மோதிக்கொண்டார்கள். "தன்னை குரங்கு என்று திட்டினார்" என்று இவர் சொல்ல, "நிற வெறியோடு நடக்கிறார்" என்று அவர் சொல்ல, மிக மிக சர்ச்சைக்குரிய தொடராக அமைந்தது இந்த தொடர். தாங்கள் தோல்வி அடையப்போகிறோம் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஆஸ்திரேலியாவின் சுய ரூபம் அங்கே பல்லிளித்தது. தொடர்ந்து வந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி உத்வேகத்துடன் ஆடியது. ஒவ்வொரு போட்டியிலும் கடுமையான நெருக்கடியை அளித்தது. இலங்கையும் தன் பங்குக்கு ஆடினாலும் அதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. 


பெரும்பாலும் இறுதிப்போட்டி என்று வந்து விட்டால் ஆஸ்திரேலியர்களின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் இந்த முறை மூன்று இறுதிப்போட்டிகளில் முதல் இரண்டில் இந்தியா அணி வென்று மூன்றாவது போட்டிக்கு தேவையே இல்லாமல் செய்து விட்டது. இது வரை ஆஸ்திரேலியாவே இப்படி செய்யும். ஆனால் முதல்முறையாக இந்தியா அதை அணி நிகழ்த்திக்காட்டியது. இளைஞர் படைக்கு மறுபடியும் ஒரு மாபெரும் வெற்றி. இந்த வெற்றி அப்போது உலகக்கோப்பை வெற்றிக்கு சமமாக போற்றப்பட்டது. இத்தொடரில் புதிய வீரராக களமிறங்கியவர் இஷாந்த் சர்மா. தொடர் முழுக்க பாண்டிங்கை வீழ்த்துவதையே முழு குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். டெஸ்ட் தொடரில் தன் பெயரை நாறடித்துக்கொண்ட ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரில் கவனமாக ஆடியது. இருந்தாலும் அதன் உண்மை முகம் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அவர்கள் அணியின் ஒரே ஜென்டில்மேனாக கில்க்றிஸ்ட் மட்டுமே வருணிக்கப்பட்டார். ஒரு போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்த பின்னரும் தானாகவே வெளியேறி, தன்னை பற்றிய வருணனைகளை உண்மை என்று நிரூபித்தார். ஒரு பத்திரிக்கை ஒரு படி மேலே போய், "ஆஸ்திரேலியர்கள் தாமாகவே களத்தை விட்டு வெளியேறுவது, அவர்கள் அணியின் பெயரை கில்க்றிஸ்ட் என்று மாற்றினால் மட்டுமே சாத்தியம்." என்று கூறியது. 


இந்த தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் ஒருமைப்பாடு நிலைகுலையத்தொடங்கியது. தோல்வி அடையவில்லை என்றாலும், அவர்களால் வெற்றி பெற போராட வேண்டி இருந்தது. மறுபுறம் இந்தியாவோ, வெற்றிகளை வாரிக்குவிக்க தொடங்கியது. முழுமையான ஆதிக்கம் செலுத்த வில்லை என்றாலும், தேவையான வெற்றிகளை அடைந்து வந்தது. 2008 ஆம் ஆண்டு முழுக்க இந்தியா அணியில் மட்டுமல்ல, தோனி காட்டிலும் மழைதான். சென்ற தொடர்களில் எல்லாம் வெற்றி. ஒருபுறம் கும்ப்ளே தலைமையில், டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்க, தோனி தலைமையில் மறுபுறம் ஒருநாள் போட்டிகளை வென்று கொண்டிருந்தது. குறிப்பாக 2008 இறுதியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தொடர். எழு போட்டிகள் கொண்ட அந்த ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும்போது இந்திய அணிதான் வெல்லும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் இங்கிலாந்து படுதோல்வி அடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் ஐந்து போட்டிகளில் இந்தியா வென்று விட, அந்த நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் ஆறு  இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளால் தொடரை பாதியிலேயே கைவிட்டுவிட்டு நாடு திரும்பியது இங்கிலாந்து. 


இந்திய அணிக்குள் இடம்பெற்ற ரெய்னா, யுவ்ராஜ், சேவாக் என்று எல்லா வீரர்களுமே மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்கள். இந்திய பவுலர்களும் சிறப்பாக பந்து வீச தொடங்கி இருந்தார்கள். என்னதான் இந்தியா சிறப்பாக ஆடத்தொடங்கி இருந்தாலும் அப்போதைக்கு எனக்கு உலகக்கோப்பை மீது நாட்டம் உண்டாகவில்லை. காரணம் இந்தியாவின் பழைய உலகக்கோப்பை தோல்விகளாகவும் இருக்கலாம். மேலும் அந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஐபிஎல் என்ற உள்ளூர் கிரிக்கெட் அமைப்பு, கிரிக்கெட்டை ஒரு மசாலா சினிமாவாக மாற்றி அதன் தரத்தை குறைக்கத்தொடங்கி இருந்தது. ஆட்டங்கள் முதலில் சுவாரசியமாக இருந்தாலும் போகப்போக போராடிக்கத்தொடங்கின. ஆட்டங்களின் சுவாரசியங்களை கூட்ட, நிறைய நடிகைகள், கவர்ச்சி, சண்டை சச்சரவு, என்று மசாலாவை அதிக்கப்படுத்த, அது மாறாக வெறுப்பையே உண்டாக்கியது. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் பண மழையில் நனையத் தொடங்கினார்கள். இந்தியா வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் இதனால் ஈர்க்கப்பட்டார்கள். இது ஐ‌சி‌சிக்கு பல சங்கடங்களை உண்டாக்கியது. இந்த காலகட்டத்தில் உலகின் மிகப்புகழ் பெற்ற வீரராக உருவானார் இந்தியா கேப்டன் தோனி. விளம்பரங்களின் மூலம் பெரும் ஆண்டு வருமானத்தில் அதுவரை முதலிடத்தில் இருந்த சச்சினை பின்னுக்குத்தள்ளினார். எல்லாமே இந்திய அணிக்கு சாதகமாகவே சென்று கொண்டிருந்தது..... 


உருவாகிறது உலகக்கோப்பைக்கான அணி.... அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....31 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் விக்கெட்டாக....


கிரிக்கெட் வரலாறு...
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக தருகிறீர்கள்..

வாழ்த்துக்கள்...

Unknown said...

சுவாரஸியமான கிரிக்கெட் பதிவுக்கு நன்றிகள்.... தொகுத்த விதம் நன்றாக இருக்கிறது.. வாக்குகளும் வாழ்த்துக்களும்..

பாலா said...

@# கவிதை வீதி # சௌந்தர்

மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@பாரத்... பாரதி...

வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே.

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பா.ஒரு கேள்வி இந்திய அணி ஆடிய முதல் 20 ஒவர் போட்டியில்(2006) இந்திய அணிக்கு கேப்டனாக செயல் பட்டவர் சேவாக்.அத்துடன் ராவிட் கேப்டனாக இருந்த காலத்தில் இருந்து உபதலைவர் ஆக இருந்தவர் ஆனாலும் இந்திய அணியின்.நிரந்தர கேப்டனாக அவரை ஏன் நியமிக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் உண்டு.ஆனால் சேவாக் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்று கூறியதாகவும் சிலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.இது உண்மையா?


உண்மையில் ஆஸ்ரேலிய அணியில் விளையாடிய வீரர்களில் கில்லி ஜென்டில்மேன்தான்.அவர் ஆட்டம் இழப்பு நடுவர் வழங்காதபோதும் தனக்கு ஆட்டம் இழப்பு என்று தெரிந்ததும் ஆடுகளத்தை விட்டு வெளியேரிய அந்த தருணம் இன்னும் எனக்கு நல்லா நினைவு இருக்கின்றது 2003 உலகக்கோப்பை போட்டிகளில் என்று நினைக்கின்றேன்.

கேரளாக்காரன் said...

Super bala Asia cup and harbajan's winning knock on akhtar's a** missing anyway hats off waiting for the next one

Unknown said...

வழமை போல கலக்கல்...கிரிக்கட் தான் என்றாலும் உங்கள் வர்ணனை அழகு!!!
ஒரு தேர்ந்த விமர்சகர் போலுள்ளது!

Unknown said...

வழமை போல கலக்கல்...கிரிக்கட் தான் என்றாலும் உங்கள் வர்ணனை அழகு!!!
ஒரு தேர்ந்த விமர்சகர் போலுள்ளது!

Riyas said...

//மக்களிடையே வகுப்புவாதத்தை வேறுவிதத்தில் தூண்டிவிட்டு, அதில் ஆதாயம் தேடும் பல போலி கம்யூனிஸ்ட் ஈனப்பிறவிகளுக்கு, "எந்த கொம்பனாலும் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது!//

ஏ,, அப்பிடி போடு அருவாள இந்த சிவப்பு காரன் தொல்ல தாங்க முடியல்ல அவண்ட கொள்கைய பரப்புறத விட்டுட்டு அடுத்தவன் மதத்தை தீண்டுவதுதான் அவனுகள் வேல..

Riyas said...

கிரிக்கட் தகவல்கல் அருமை வழமைபோலவே,,

Unknown said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

www.tamil10.com

நன்றி

அந்நியன் 2 said...

முன் தலைப்பு அனல் பறக்கின்றது.

பனியினை பூர்த்தி செய்யுங்கள்
சு தந்திர தின வாழ்த்துக்கள்.

பாலா said...

@Kss.Rajh

நீங்கள் சொல்வது போல சேவாக்குக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருந்தது உண்மைதான். ஆனால் அந்த சமயத்தில் அவர் சுத்தமாக அவுட் ஆப் பார்மில் இருந்தார். ஆகவே அடுத்த வாய்ப்பு யுவராஜுக்கு சென்றது. அவர் அப்போது அணியில் யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டிருந்தார். பயிற்சிகளுக்கு கூட சரியாக வருவதில்லை என்று புகார் வந்தது. இந்த நிலையில்தான் தோனி கேப்டன் ஆனார். அதுவும் சோதனை முயற்சிதான்.

ஒன்றல்ல இரண்டல்ல பல முறை கில்லி அவ்வாறு வெளியேறி உள்ளார்.
நன்றி நண்பரே...

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

சமீபகாலமாக இந்திய அணி நிறைய போட்டிகளில் ஆடி வருகிறது. எல்லாவற்றையும் எழுத நினைத்தால் தொடர் மிக நீளமாக ஆகிவிடும். அதே போல முதலில் குறிப்பிட்டது போல இந்த காலகட்டங்களில் நடந்தவை பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆகவே தான் ஸ்கிப் செய்து விட்டேன்.

நன்றி நண்பரே....

பாலா said...

@மைந்தன் சிவா

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@Riyas

கடுப்பேத்துறாங்க மை லார்ட்....

நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழினி

பரிந்துரைக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@அந்நியன் 2

சிறிய கோபம்தான். நன்றி நண்பரே...

Mohammed Arafath @ AAA said...

உங்கள் கிரிக்கெட் வரலாற்றை படிக்கும் போது அப்படியே கிரிக்கெட் விளையாட்டை REWIND ஒரு செய்தது போல இருக்கு பாஸ். எல்லா போட்டியும் நம் கண்முன்னே ஓடுவது போல இருக்கு. நன்றி..

Unknown said...

கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் இல்லாத எனக்கு உங்கள் வலைபதிவு
ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுவாரஸியமான கிரிக்கெட் பதிவுக்கு நன்றிகள்.
அன்புடன்
சக்தி

aotspr said...

நல்ல பதிவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

பாலா said...

@Mohammed Arafath @ AAA

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.

பாலா said...

@svr sakthi

மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

பாலா said...

@Priya

ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வாங்க.

Unknown said...

பாலா உண்மையிலேயே மிக அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள், எல்லாமே மீண்டும் ஒருமுறை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது, உங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

வழக்கம்போல அசத்தலான கிரிக்கெட் பதிவு கலக்குகிறது வாழ்த்துக்கள்

பாலா said...

@இரவு வானம்

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@மாய உலகம்

நன்றி நண்பரே...

Unknown said...

கருத்து கந்தசாமியும் கலக்குகிறார் போங்க..

பாலா said...

@பாரத்... பாரதி...

அப்பாடா நீங்கதாங்க மொத ஆளா கருத்து கந்தசாமிய பத்தி கருத்து சொல்லி இருக்கீங்க.

arasan said...

உண்மையிலே சேமித்து வைக்க வேண்டிய பதிவுகள் நண்பரே ,.. வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...