விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 30, 2010

வாடா ... சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...


இந்த சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...


"அரிமா அரிமா 

சொல்லாமலே யார் பார்த்தது
ஒரு பொன் மான் கிடைத்தால்
பூ பூத்தது,
மல்லு வெட்டி கட்டி இருக்கு
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
மல்லிகைப்பு வாசம் என்னை 
மாசத்துல மூணா நாலு பொறுக்கணும் பொதுவாக
ஒரு ஜீவன் அழைத்தது..
ராட்சசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்,
மழை சுடுகின்றதே 
இனி எனக்காக அழ வேண்டாம்,
அடி போடி புள்ள எல்லாம் டூப்பு..."
ஏதோ பாடல் வரிகளை கொடுத்து புதிர் போட்டி நடத்த போகிறேன் என்று நினைக்கிறீர்களா? அட நீங்க வேற வயித்தெரிச்சல கெளப்பிக்கிட்டு...முந்தாநாள் சிவகாசி செல்லும் ஒரு மொபசல் பேருந்தில் ஏறினேன். என்னை சுற்றி ஐந்து பேர் கையில் சைனா மொபைலை வைத்துக்கொண்டு பாட்டு கேட்டு கொண்டு வந்தனர். ஹெட்போனில் கேட்காமல் சத்தமாக அனைவரும் கேட்கும்படி கேட்டனர். அப்போது என் காதில் விழுந்த ஒரு பாடல்தான் நான் மேலே சொல்லி இருக்கும் பாடல். ஒரே நேரத்தில் ஐந்து பாடல்கள். போதாக்குறைக்கு பேருந்தில் பயங்கர கூட்டம் வேறு. மொத்தம் இருபது நிமிடமே பயணம் செய்த எனக்கே பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. நெடுந்தூரம் பயணம் செய்பவர்களை பற்றி எண்ணிப்பார்த்தேன். ஒருத்தனை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். என் கையில் கிடைத்தான், செத்தான். யாரா? இந்த சைனா மொபைல கண்டுபிடிச்ச அந்த நாதாரிதான்.


வாடா – மறக்கமுடியாத ஒரு படம். (18+)
கடந்த வாரம் சனிக்கிழமை வாடா படம் பார்க்க சென்றேன். (நாங்கல்லாம் சூறாவையே ரெண்டு தடவை பார்த்தவங்க...). இந்த படம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது. எப்படி என்று அப்புறம் சொல்கிறேன். படத்தில் நெஞ்சை தொடும் காட்சிகள் அதிகம். நம் நெஞ்சை அல்ல. சுந்தர் சி கதாநாயகியின் நெஞ்சை தொடும் காட்சிகள் அதிகம். பொதுவாக பலான படங்களில் இடைவேளைக்கு அப்புறம் தான் பிட்டு ஒட்டுவார்கள். இந்த படத்தில் இடைவேளைக்கு முன் ஓட்டுகிறார்கள். அதிலும் கதாநாயகி கட்டி இருக்கும் துண்டு அவிழும் பாருங்கள். படக்கென்று சுந்தர் சி துண்டை பிடித்து கதாநாயகியின் மானத்தை காப்பாற்றுவார் (எங்கே பிடிப்பார் என்பதை திருட்டு டிவிடியில் காண்க). கண்டிப்பாக சுந்தர் சி நெஞ்சை தொடும் காட்சி. அதே போல பேண்ட் அவிழும் என்று தெரிந்தே கதாநாயகி எழுந்து நிற்பார். பக்கத்து அறையில் சுந்தர் சியின் தங்கை இருந்தாலும், அவரை கூப்பிடாமல் சுந்தர் சியே தன் மானத்தை காக்க வேண்டும் என்று பேண்டை தூக்கி விட சொல்வார். அப்போது சுந்தர் சி பேண்ட் என்று நினைத்து வேறு ஒரு இடத்தில் கைவைப்பார் பாருங்கள் அடடடா... "பேண்ட் அவிழுவதை தடுக்காமல் கதாநாயகியின் கை என்ன செய்து கொண்டிருந்தது?" என்றெல்லாம் கேட்கக்கூடாது. உடுக்கை இழந்தவன் கை போல என்ற குறளுக்கே சவால் விடும் ஒரு காட்சி இது. 


இந்த மாதிரி சில பல காட்சிகள் படத்தில் இருக்கிறது. நான் சொன்னதை படித்து இந்த காட்சிகளை பார்க்கும் ஆவல் ஏற்பட்டால், திருட்டு டிவிடியில் இந்த குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு படத்தை நிறுத்தி விடுங்கள். இல்லையேல் அநாவசியமாக உங்கள் உங்கள் டிவிடி பிளேயரையோ, டிவியையோ உங்கள் கையாலேயே உடைக்க நேரிடலாம். சரி வாடா எப்படி எனக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது? படம் பார்க்கும் போது என் அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாக போன் வந்தது. அதைத்தான் சொன்னேன்.ஸ்ஸ்ஸ்...அப்பா கண்ண கட்டுதே... 18+ சென்ற வாரம் நான் பார்த்த இன்னொரு மொக்கை படம். இது. படத்தில் ஒளிப்பதிவு மிக துல்லியமாக இருக்கிறது. மற்ற எல்லாமே சுத்த வேஸ்ட். மல்லிகா ஷெராவத் முழு ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார். சில காட்சிகளில் மொட்டை கட்டையாக இருக்கிறார். "ஸ்கின் டிரஸ் போட்டிருப்பாரோ?" என்று சந்தேகம் எழுந்தது. சில குளோஸ் ஆப் காட்சிகள் அதனை போக்கி விட்டது. ஒன்னுமே போடல ஹி .. ஹி.. வழக்கமான பாம்பு படம் போல் ஆண் பாம்புக்கும் பெண் பாம்புக்கும் இடையே டூயட், காபரே இல்லாமல் இருப்பது படத்தின் பலம் மற்றும் பலவீனம். (பின்னே ஏதாவது இருந்திடும்னு குடும்பத்தினரும், ஒன்னுமே இல்லைனு இளைஞர்களும் படத்தை புறக்கணிக்கும் அபாயம் உள்ளது). ஒரே ஒரு படுக்க அறை காட்சி இருக்கிறது. ஆனால் அது மல்லிகா ஷெராவத்துக்கு அல்ல. கொஞ்சம் மேனக்கெட்டிருந்தால் ஒரு சுவாரசியமான த்ரில்லர் படமாக அமைந்திருக்கும். நல்ல படமாகவும் இல்லாமல், பலான படமாகவும் இல்லாமல் இரண்டும்கெட்டானாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பொறுத்தால் சோனியிலோ, ஜீடிவியிலோ கண்டுகளிக்கலாம். பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

October 25, 2010

சச்சின் விட்ட ரொமாண்டிக் லுக்...  :
  :
  :
  :
  :
  :  
  :
  :
  :
  :
  :
  :


ஹலோ என்ன தேடுறீங்க? சச்சினோட ரொமாண்டிக் லூக்தானே.... இதோ கீழே...முழுவதும் படிக்க >>

October 20, 2010

பதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள்?


மன்னிக்கவும். கொஞ்சம் வேலை அதிகம் இருந்ததால் பதிவு எழுதமுடியவில்லை என்று சொன்னால் அது சுத்த பொய். நமக்கு எல்லாம் கற்பனையும் கிடையாது, குதிரையும் கிடையாது தட்டி விடுவதற்கு. என்ன எழுதுவது என்று யோசிப்பதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. இடையில் என் வீட்டில் இணைய இணைப்பு வேறு மக்கர் பண்ணிவிட்டது. சரி மேட்டருக்கு வருவோம். இது காமெடி பதிவு என்றோ, நக்கல் பதிவு என்றோ, சமுதாய நோக்கமுள்ள பதிவு என்றோ, அதிமேதாவித்தனமான பதிவு என்றோ யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் மனதில் தோன்றியவற்றை எழுதுகிறேன்.


நம்ம பதிவுலகத்தில் என்னைப்போன்ற பல நண்பர்கள் எழுதி வருகிறார்கள். பொதுவாக படைப்பு திறன் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனாலும் எழுதவேண்டும் என்ற வேகத்தில் தனக்கு தெரிந்ததை எழுத தொடங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து என்ன எழுவது என்று தெரியாமல் யோசிக்க தொடங்குகிறார்கள். கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டாலும் தொடர்ந்து எழுதவேண்டுமே என்ற கட்டாயம் வேறு. அப்போது அவர்களுக்கு துணை இருப்பது அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள். உதாரணமாக ஐபிஎல், காம்ன்வெல்த், சுறா, எந்திரன் என்று கொஞ்ச நாள் பொழப்பு ஓடும். இப்போது காமன்வெல்த் முடிந்து விட்டது, எந்திரன் என்ற பெயரை பார்த்தவுடன் வேறு பக்கத்துக்கு தாவி விடுகிறார்கள். கிரிக்கெட் போட்டியும் கிடையாது. என்ன செய்வது? ஆகவே பதிவுலகமே கொஞ்சநாளைக்கு வறண்டு போய் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. "சரி அப்ப எப்பத்தான் மறுபடியும் களை கட்டும்?" என்கிறீர்களா, கவலைப்படாதீர்கள் தீபாவளி வருகிறது. அந்த சமயத்தில் எந்த மாதிரி பதிவுகள் வரும் என்று நான் கணித்திருக்கிறேன்.


பெண் பதிவர்கள்:

தீபாவளிக்கு வந்திருக்கும் புதுமையான ஆடைகள், நகைகள், சமையல் ரெஸிப்பிகள் ஆகியவற்றைப்பற்றி பதிவு எழுதுவார்கள். அதே போல தான் கணவருடன் ஷாப்பிங் சென்ற அனுபவங்கள். வெளிநாட்டில் இருப்பவராக இருந்தால் அங்கே தீபாவளி கொண்டாட்டங்கள், தங்கள் செல்ல குட்டிகளின் தீபாவளி குறும்புகள் ஆகியவற்றை பற்றி எழுதுவார்கள். தீபாவளி கொண்டாட்டங்களின் போது தீவிபத்து ஆகியவற்றை எப்படி தவிர்ப்பது என்றும் எழுதுவார்கள். கவனியுங்கள் எல்லா பெண் பதிவர்களும் இப்படி எழுதுவார்கள் என்று நான் சொல்லவில்லை (எதுக்கு வம்பு...ஹி ஹி).


தோழர்கள்:

பட்டாசு கம்பெனிகளின் தொழிலாளர் விரோத போக்கு, போனஸ் வழங்குவதில் அரசு காட்டும் பாரபட்சம், தனியார் கம்பெனிகள் போனஸ் வழங்காமல் இருப்பது ஆகியவற்றை பற்றி எழுதுவார்கள். மேலும் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும் குழந்தைகள் மற்றும் அந்த பட்டாசுகளை வாங்கி வெடிக்கும் பணக்கார குழந்தைகள் இருவரையும் ஒப்பிட்டு உருக்கமான கவிதைகள், கதைகள் ஆகியவை எழுதுவார்கள். 


பகுத்தறிவாளர்கள்:

தீபாவளி பண்டிகை என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி, நாம் திராவிட இனத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆரியர்கள் உருவாக்கிய போலியான ஒரு கொண்டாட்டமே தீபாவளி. அது ஆபாசமான கடவுளான கிருஷ்ணன், தன் பல மனைவிகளில் ஒருவரான பூமாதேவியின் கையாலேயே தன் மகனை கொன்ற கேவலமான ஒரு கட்டுக்கதையை மையமாக வைத்து கொண்டாடப்படுவது. ஆகவே தீபாவளியை கொண்டாடுவது நாம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதாகும். எனவே தீபாவளியை புறக்கணியுங்கள் என்ற ரீதியிலான பதிவுகள் வரலாம்.


சமூக ஆர்வலர்கள்: 

பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் நச்சுக்கள், அதனால் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றை பற்றி எழுதலாம். தீபாவளி சமயத்தில் சமைக்கும் உணவில் இருக்கும் கலப்படம், அதனால் உண்டாகும் ஆபத்துக்கள் என்று எழுதி வயிற்றில் புளியை கரைப்பார்கள். பட்டாசுகளின் அதிரடி விலையேற்றம், பொதுமக்கள்படும் அவதி, ஊடகங்களில் வரும் ஆபாச நிகழ்ச்சிகள், செல்போன் கம்பெனிகளின் அராஜகங்கள், தள்ளுபடி விற்பனையில் உள்ள சூழ்ச்சி என்று பட்டியலிடுவார்கள். 


மொக்கராசுக்கள்: 

தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு சொம்படித்து அல்லது மனசாட்சியே இல்லாமல் கலாய்த்து பதிவு எழுதுவார்கள். தீபாவளி சிறப்பு நகைச்சுவைகள், நடிகர்களை வைத்து கற்பனை நகைச்சுவை தீபாவளி கொண்டாட்டங்கள் உதாரணமாக "கவுண்டமணி, பிற நடிகர்கள் வீட்டுக்கு தீபாவளி அன்று செல்கிறார்" என்பது மாதிரியான பதிவுகள் எழுதுவார்கள். மேலும் தான் சின்ன வயதில் எப்படி தீபாவளி கொண்டாடினேன் என்று ஆட்டோகிராஃப் பதிவுகளும் வெளியிடுவார்கள். ஒட்டு மொத்த பதிவர்கள்: 

ஆளாளுக்கு தங்கள் பாணியில் தீபாவளி வாழ்த்து பதிவு எழுதுவார்கள். 


பி.கு: இவ்வளவு எழுதுறியே, நீ என்ன பதிவு எழுதுறன்னு பாக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு, இப்பவே சொல்றேன் மேல சொன்ன ஏதாவது ஒன்றைத்தான் நானும் எழுதுவேன்.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

October 12, 2010

வெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண்டிங்

ஆஸ்திரேலியா மறுபடியும் ஒருமுறை வாயை கொடுத்து பின்னால் புண்ணோடு ஊர் திரும்ப போகிறது. நான்காம் நாள் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இரு அணியினரும் ஆடுவதைப்பார்த்தால் ஆட்டம் டிராவில்தான் முடியும் போலிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் ஆஸ்திரேலியா இந்தியா வரும்போது ஏதாவது சவடால் விட்டு வாங்கி கட்டிக்கொள்ளும். இந்த முறை அவர்கள் வந்திருப்பது 2011 ஆம் ஆண்டு நடக்கும் உலககோப்பை தொடருக்கான முன்னோ(நோ)ட்டம் என்று கூறப்படுகிறது. வயசானாலும் சிங்கம், சிங்கம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் திராவிட், லக்ஷ்மண் மற்றும் சச்சின். முதல் டெஸ்டில் லக்ஷ்மண் ஆடியதை பார்த்து வெறுத்து போயிருப்பார் பாண்டிங். இதுகுறித்து பாண்டிங் புலம்புவதுபோல கற்பனை செய்து சமீபத்தில் ஒரு பதிவர் தன் பதிவில் வெளியிட்டிருந்ததே "லக்ஷ்மணா எப்படா ரிட்டயர் ஆவ?"
சச்சின் – கிரிக்கெட்டின் எந்திரன்.சச்சின் தான் இன்னும் நிகழ்த்தாத சாதனைகளை பட்டியலிட்டு வைத்திருப்பார் போலும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் களமிறங்கும் முன்னும் அதில் எந்தெந்த சாதனைகளை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்து வீட்டுத்தான் களமிறங்குவார் போலிருக்கிறது. இந்த இரண்டாவது டெஸ்டில் அவர் நிகழ்த்தி இருப்பது 14000 ரன்கள், ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிகமுறை கடந்தது, அதிகமுறை 150க்கு மேலான ரன்களை குவித்தது ஆகியவை ஆகும். அடுத்து ஒருநாள் தொடரில் களமிறங்கும் முன், மிச்சமிருக்கும் சாதனை பட்டியலை சரிபார்த்துவிட்டு களமிறங்குவார் போலிருக்கிறது. அதிக ஆட்டநாயகன், அதிக தொடர்நாயகன், அதிகமுறை தொண்ணூறுகளில் அவுட் ஆனவர்கள், டெஸ்டில் அதிகமுறை ரன் அவுட் ஆனவர்கள், என்று எல்லா சாதனை பட்டியலிலும் சச்சின் பெயர் உள்ளது. உண்மையிலேயே சச்சின் சாதனை நாயகன்தான். ஆனால் வருத்தப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் சச்சின் இன்னும் எத்தனை நாள் விளையாடுவார் என்பதுதான். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டுதானே? 


3 இடியட்சும் என் சென்டிமென்டும்


விஜய் ரசிகர்களிடயே இப்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒரு செய்தி, 3 இடியட்ஸ் படத்தை சங்கர் இயக்குகிறார் என்பதும், விஜய் அதில் நடிக்கிறார் என்பதும்தான். அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் இந்த செய்தி ஒருவேளை வதந்தியாக இருக்குமோ? என்று நினைக்க வைக்கிறது. உண்மையாக இருக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் விருப்பம். இந்த படத்தை ஹிந்தியில் பார்த்தவர்கள் பலருக்கும் இருக்கும் குழப்பம் எனக்கும் இருக்கிறது. "அமீர்கான் வேடத்துக்கு விஜய் எப்படி செட் ஆவார்?" என்பதுதான். இப்போது புதிதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. வைரஸ் ப்ரோபசர் வேடத்தில் சத்தியராஜ் நடிக்கிறார் என்று. அதுவும் செட் ஆகும் என்று தோன்றவில்லை. தொடங்கும்போதே "இதெப்படி வோர்க்கவுட் ஆகும்? கண்டிப்பாக தோல்விதான்" என்று எனக்கு தோன்றிய பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கின்றன. உதாரணம், காதல்மன்னன், சேது, தில், ரன், கில்லி மற்றும் சந்திரமுகி. பார்க்கலாம் 3 இடியட்ஸ் இதில் சேர்கிறதா? இல்லை இந்த சென்டிமென்டை முறியடிக்கிறதா என்று.


வந்தே மாதரம்


நான் வாரம் ஒருமுறை தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவன். அது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் பார்த்து விடுவேன். கடந்த வாரம் எந்திரன் அந்த கோட்டாவை எடுத்துக்கொண்டதால் இந்த வாரம் வேறு ஒரு படத்துக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். இருப்பது மூன்று அரங்குகள். ஒன்றில் எந்திரன், மூன்று முறை பார்த்தாயிற்று. இன்னொன்றில் தேவலீலை. நான் அந்த மாதிரி படங்கள் பார்ப்பதில்லை.(படத்தில் ஒன்னுமே இல்லை என்று ஏற்கனவே நண்பர் ஒருவர் எச்சரித்து விட்டார்... ஹி ஹி). வேறு வழி இல்லாமல் வந்தே மாதரம் படத்துக்கு போகும் நிலை ஏற்பட்டது. வழக்கமான கதைதான் என்றாலும், படம் சுவாரசியமாகவே சென்றது. ஒரு வேளை எந்த வித எதிர்பார்ப்புமே இல்லாமல் போனதாலோ என்று தெரியவில்லை. தியேட்டரில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. என் முன் சீட்டில் இருக்கும் இருவர் போரடிக்கும் போதெல்லாம் படத்தை பற்றி கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்ததை அனைவரும் ரசித்தனர். உதாரணமாக கிளைமாக்ஸில் அர்ஜூன் மற்றும் மம்முட்டி பேசும் வசனத்தை கேட்டதும், "பன்னிகுட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா!!" என்று சொன்னதும் தியேட்டரே சிரிப்பலையில் ஆழ்ந்தது.


இது ஜோக்கா இல்லை சிறுகதையா?

ஒரு கணவனுக்கு தன் மனைவி செவிடாய் இருப்பாளோ என்று சந்தேகம் வந்தது. உடனே ஒரு டாக்டரின் அறிவுரைப்படி, அவளுக்கு தெரியாமல் சோதனை செய்ய முடிவு செய்தான். நேராக வீட்டுக்கு சென்றவன், தன் மனைவி சமையலறையில் இருப்பதை பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் இருந்து கத்தினான்.

"அடியே! இன்னைக்கு என்ன சமையல்?" பதிலில்லை.

உடனே ஹாலுக்கு வந்து கத்தினான். "இன்னைக்கு என்ன சமையல்ன்னு கேட்டேன்!!" பதிலில்லை.

சமையலறை அருகில் சென்று கேட்டான். பதிலில்லை. 

மிக அருகில் சென்று கேட்டான். "அதான் கேக்குரேன்ல? இன்னைக்கு என்ன சமையல்?".

அவன் மனைவி கோபமாக திரும்பி, "தக்காளிசாதம்! தக்காளிசாதம்! தக்காளிசாதம்! எத்தனை தடவைங்க சொல்றது? உங்க காதென்ன செவிடா?"என்றாள்.

நம்மாள் திருதிருவென விழித்தான்.

நீதி: அடுத்தவரின் குறையை கண்டுபிடிக்கும் முனைப்புடன் இருக்கும்போது, நாம் குறை நாம் கண்ணுக்கு தெரிவதில்லை.பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>

October 7, 2010

மொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....


முன்கூறிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் சில அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மன்னிச்சுக்கோங்க பிளீஸ்ஸ்... 

பதிவெழுத வந்தபோது எல்லாரும் புதியவர்களே. இங்கே பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் விழித்திருக்கிறேன். இனி வரும் சமுதாயம் அப்படி ஒரு அவல நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதாலேயே ஒரு புது பதிவரும் பிரபல பதிவரும் பேசிக்கொள்வதை போல எனக்கு தெரிந்த சில தகவல்களை தந்திருக்கிறேன். மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை தந்து உதவுங்கள்.கே: பதிவு என்றால் என்ன? 

ப: நாம் நினைத்ததை எழுதுவது. எழுத்துப்பிழை சரிப்பார்ப்பது கூட அவசியமற்றது. 


கே: மீள்பதிவு என்றால்? 

ப: படிக்க எதுவுமே இல்லாத போது பழைய பேப்பரை எடுத்து படிப்போமே அது போல. எழுத எதுவுமே இல்லாத போது எழுதியதையே திருப்பி தருவது. 


கே:பின்னூட்டம் என்றால் என்ன? 

ப: தன் வலைப்பதிவை பிரபலமாக்கும் கருவி. நீ எத்தனை பேருக்கு பின்னூட்டம் இடுகிறாயோ அந்த அளவிற்கு நீ பிரபலம் ஆவாய். கெட்ட வார்த்தைகள் கூட பயன்படுத்தலாம்.


கே: எதிர்வினை என்றால் என்ன? 

ப: பெரிய பின்னூட்டம் இட்டு போராடித்து விட்டால், அவை அனைத்தையும் திரட்டி ஒரு பதிவாக இடுவது. 


கே: சொம்பு அடிப்பது/தூக்குவது என்றால்? 

ப: சூப்பர், எப்படி இப்டிலாம்?, கலக்கீட்டிங்க என்று பதிவை படிக்காமலே பின்னூட்டம் இடுவது. 


கே: கும்மி அடிப்பது என்றால் என்ன? 

ப: நான்கு பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை வெளுப்பது.


கே: ஓட்டு என்பது? 

ப: கெஞ்சி கூத்தாடி வாங்குவது. உதாரணம்: இந்த பதிவின் கடைசியில் பார்க்கவும்.


கே: எழுத்தாளர் என்பவர் யார்? 

ப: சக பதிவரை எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளாதவர். 


கே: பிரபல எழுத்தாளர் என்பவர் யார்? 

ப: சக பதிவரை மனிதனாக கூட மதிக்காதவர். உலகம் முழுவதும் சுற்றுபவர். ஆனால் ஒரு சினிமா டிக்கட் வாங்க காசு இல்லாதவர்.


கே: ஆணாதிக்கம் என்றால் என்ன? 

ப: பெண்களை தட்டி கேட்கும் ஆண்களுக்கு சூட்டும் பட்டம். 


கே: பெண்ணுரிமை என்றால் என்ன? 

ப: ஆண்களை திட்ட பெண்கள் பயன்படுத்தும் வார்த்தை. 


கே: முற்போக்கு – பிற்போக்கு ஒப்பிடுக 

ப: படித்ததை ஜீரணித்து தள்ளுவது பிற்போக்கு. படித்ததை ஜீரணிக்காமல் வாந்தி எடுப்பது முற்போக்கு. 


கே: புரட்சி என்றால் என்ன? 

ப: ஓய்வு நேரத்தில் செய்வது. அடுத்தவனுக்கு மட்டுமே செய்வது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு ஒரு வழி. 


கே: நாத்திகம் என்றால் என்ன? 

ப: கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு மற்றொரு வழி.


கே: திரைப்படத்தை புறக்கணிப்பது என்றால் என்ன? 

ப: முதல்நாளே பார்த்துவிட்டு கமுக்கமாக இருப்பது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு முதல் படி.


கே: விமர்சனம் என்பது என்ன? 

ப: ஒருவரை வஞ்சம் தீர்க்க பயன்படுத்தும் வாய்ப்பு. பெரிய்ய இதுவாக மாற உதவும்.


கே: தரமான விமர்சனம் என்பது என்ன?

ப: படம் பார்க்காமலே எழுதுவது. எல்லோரும் எழுதும் விமர்சனங்களை படித்து விட்டு அவற்றுக்கு மாறாக ஒரு கருத்தை சொல்லுவது. நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று காட்ட உதவுவது. 


கே: பஞ்சாயத்து என்றால் என்ன? 

ப: பஞ்சாயத்து செய்தால்தான் நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அதற்காக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களுக்கு சொம்பு அடிப்பவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்.


கே: பஞ்சாயத்து செய்வது எப்படி? 

ப: மிக எளிது. உங்கள் எதிரி யார் என்று பாருங்கள். அவன் அப்பன் தாத்தா செய்த தவறு என்ன என்று பட்டியலிடுங்கள். பின் கெட்ட வார்த்தையில் திட்டுங்கள். உங்கள் சொம்பு தூக்கி நாலு பேரை உடன் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று புரிய வையுங்கள் அவ்வளவுதான்.


கே: ஆபாசம் என்றால் என்ன? 

ப: உங்கள் வாயில் இருந்து சரளமாக வரும் ஒரு கெட்ட வார்த்தை பிறர் வாயில் இருந்து வந்தால் அது ஆபாசம். நீங்கள் பேசினால் அது ஆபாசம் ஆகாது. ஏனென்றால் நீங்கள்தான் ஒரு பெரிய்ய இது ஆயிற்றே?


கே: பிரபல பதிவர் என்பவர் யார்? 

ப: பெரிய்ய இதுவாக ஆகி கொண்டிருப்பவர். 


கே:பெரிய்ய இதுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்களே? இதுன்னா என்ன? 

ப: மயிரு அல்லது புடுங்கிண்ணு அர்த்தம். அதாவது உனக்கு இருக்கணும் ஆனா அடுத்தவனுக்கு இருக்கக்கூடாதுண்ணு புடுங்கிட்டே இருக்கணும்.


கே: இவ்வளவு தெளிவா பேசுறீங்களே? நீங்க பெரிய்ய இதுவா ஆயிட்டீங்க போல இருக்கே? 

ப: இப்பத்தான் ஒரு சின்ன இதுவா ஆயிட்டிருக்கேன். கூடிய சீக்கிரத்தில் ஆயிடுவேன்.


புதிய பதிவர்: ஆத்தா நான் பதிவர் ஆயிட்டேன்... 

பெரிய்ய இதுவாக ஆகி கொண்டிருப்பவர்: வாடி மாப்ள. இனிமேல்தான் கச்சேரியே இருக்கு DOTபிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>

October 5, 2010

ரஜினி படங்களும் சில வன்முறைகளும்...


அட போங்கப்பா! மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது போல. இது ஏதோ முற்போக்கு, பின் நவீனத்துவ அல்லது நுண்ணரசியல் பதிவு என்று நினைத்து விடாதீர்கள். எந்திரன் படம் பார்த்த அனுபவம் பற்றி எழுதும்போதே ஒருவர் தியேட்டரினுள் இருந்து ரத்த களரியோடு வந்தார் என்று சொல்லி இருந்தேன். அது சம்பந்தமாகத்தான் சொல்லப்போகிறேன்.சுப்பிரமணியபுரம் படத்தில் ஒரு காட்சி வரும். முரட்டுக்காளை படம் ஓடும்போது ஜெய் மற்றும் சசிகுமார் சில நபர்களை தியேட்டரில் புரட்டி புரட்டி எடுப்பார்கள். இது ஏதோ சண்டைகாட்சி வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட காட்சி அல்ல. மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியும். ஒவ்வொரு பெரிய படம் வரும்போதும், குறிப்பாக ரஜினி படம் வெளியாகும் போதும், எல்லா காட்சியிலும் ஏதாவது ஒரு வன்முறை காட்சி நடந்தே தீரும். இந்த மாதிரி வன்முறைகளை பலமுறை நேரில் பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு. எங்கள் வீட்டில் எல்லோரும் ரஜினி ரசிகர்கள்தான். என் அண்ணன்கள் இருவரும் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஆகவே பெரும்பாலான படங்களை முதல்நாள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இயல்பாகவே அமைந்தது. நான் விபரம் தெரிந்து பார்த்த முதல் படம் மனிதன். அப்புறம் வரிசையாக எல்லா படங்களும் முதல் மூன்று நாட்களுக்குள்ளாகவே பார்த்து விடுவேன்.என் அண்ணனுடன் மாப்பிள்ளை படம் பார்ப்பதற்கு தியேட்டர் சென்றிருந்தேன். பால்கனி டிக்கட். கூட்டம் முண்டியடித்தது. கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டரில் ஒரே கூச்சல். ஒரு காட்சியில் ஸ்ரீவித்யா ரஜினியை பார்த்து, "டேய் சின்ன பையா!!" என்று சொல்வார். உடனே கோபமுற்ற ஒரு ரசிகர் எச்சில் துப்பும் மண்தொட்டியை எடுத்து பால்கனியில் இருந்து திரையை நோக்கி வீசினார். நேராக கூட்டத்துக்குள் போயி விழுந்து ஒருவரின் மண்டை உடைந்தது. யார் தொட்டியை வீசியது என்று தெரியவில்லை. எனக்கு மட்டும் அந்த ரகசியம் தெரியும். அந்த தொட்டியை வீசியது என் அண்ணன்தான். சம்பந்தபட்ட அதே தியேட்டரில் வெளிவந்த இரண்டு படங்கள் பாண்டியன் மற்றும் எஜமான். படத்தின் கடைசி தினத்தன்று ஆடி தீர்த்து விடுவர். ஒன்ஸ்மோர் கேட்டு பாடலை திரும்ப போடவில்லை என்றால் அவ்வளவுதான். பாண்டியன் மற்றும் எஜமான் இரண்டு படங்களின் கடைசி நாள் அன்றும் கழிவறைகள் முற்றிலும் சுக்கு நூறாக தகர்க்கப்பட்டன. அத்தோடு அந்த தியேட்டர்காரர்கள் ரஜினி படம் போடுவதையே விட்டு விட்டனர்.இந்த மாதிரி வன்முறைகளை எல்லாம் எதிர் கொள்ளும் திறன் படைத்த ஒருவர், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். அவரது தியேட்டரில் தான் இப்போதெல்லாம் ரஜினி படம் வெளியிடப்படுகிறது. ரசிகர்கள் ரகளை செய்தால் போலீஸ் எல்லாம் கிடையாது. அடியாட்கள் தான் உள்ளே வருவார்கள். அண்ணாமலை, பாட்ஷா என்று சந்திரமுகி வரை இது தொடர்ந்தது. பாட்ஷா படத்தின் போது, ஒரு கட்டத்தில் ரசிகர்கள் பரவச நிலை அடைந்து எல்லா சேர்களையும் உடைக்க ஆரம்பித்தனர். சுமார் முப்பது பேர், ஆறு அடி நீளமுள்ள கட்டைகளுடன் கூட்டத்துக்குள் புகுந்தனர். தியேட்டருக்குள் சுற்றி சுற்றி ஓடியது எல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதே போல ரஜினிக்கு எதிராக ஒரு வசனம் வந்து விட்டால் போதும். திரை உடனே கிழிக்கப்படும். படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போடுவார். உடனே பறந்து வந்தது ஒரு செருப்பு. பின் பறந்து வந்தது தீயணைப்புக்கு வைத்திருந்த மண் வாளி. திரை டர்ரென்று கிழிந்தது. தடியுடன் உள்ளே புகுந்தனர் அடியாட்கள். பிறகு என்ன? ஜாக்கிசான் சண்டைகாட்சிதான். தியேட்டரை சுற்றி சுற்றி ஓடினோம். இதை மனதில் வைத்துக்கொண்டு படத்தின் கடைசி நாளான 109ஆம் நாள் பாட்டில் குத்து எல்லாம் அரங்கேறியது. (எங்கள் ஊரில் ஒரு படம் ஐம்பது நாள் ஓடினால் அது சூப்பர் டூப்பர் ஹிட். கரகாட்டக்காரன் 175 நாள் ஓடியது. அதன் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை).பாபா படத்துக்கு சொல்லவே வேண்டாம். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை. பாமகவினரும் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். சந்திரமுகியில் நடந்த கதையே வேறு, மதுரை சினிப்ரியா காம்ப்ளக்சில் சந்திரமுகியும் சச்சினும் வெளியாயின. அந்த நேரத்தில் திருவாளர் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்யை புகழ்ந்து பேசுகிறேன் என்று ரஜினியை மட்டம் தட்டிவிட கடுப்பில் இருந்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி படம் நள்ளிரவே திரையிடப்பட்டதால் சினிப்ரியாவில் உள்ள எல்லா ஸ்க்ரீனிலும் சந்திரமுகிதான் ஓடியது. அடுத்த நாள் காலை காட்சி சச்சின் திரையிடப்படவேண்டும். சந்திரமுகி ஓடி முடிந்ததும் அந்த திரை கந்தல் கோலம் ஆனது.


ஓரளவிற்கு வன்முறை குறைவாக இருந்தது என்றால் அது சிவாஜிக்குதான். எந்திரன் படத்துக்கு நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது முகமெல்லாம் ரத்ததோடு ஒருவர் வெளியே வந்தார். உள்ளே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. கேட்டுக்கு வெளியே பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. உள்ளே ஒருவரை தியேட்டர்காரர்கள் துவைத்துக்கொண்டிருந்தார்கள். ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டாராம். ஆனால் முன்பு போல வெறித்தனமான ஆக்ரோஷமான ரசிகர்களை காண முடியவில்லை. வன்முறைகளும் குறைவாகவே இருக்கின்றன. ஒரு வேளை ரஜினி ரூட்டை மாற்றியது போல ரசிகர்களும் மாறிவிட்டார்களோ?பி.கு: இதை படித்து விட்டு எத்தனை பேர் முட்டாள் ரசிகர்கள், மக்களை ஏமாற்றும் ரஜினி உங்களுக்கு என்ன செய்தார்? வன்முறை உணர்வைத்தானே தூண்டுகிறார்? என்று எழுதப்போகிறார்களோ? 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...முழுவதும் படிக்க >>

October 2, 2010

எந்திரன் – விஜய்யை திட்டி தீர்த்த ரசிகர்கள்....


"அதானே பார்த்தேன். என்னடா இன்னும் எழுதலயே? அப்படின்னு நெனச்சோம், இதோ எழுதிட்டானே." என்று சலித்துக்கொள்கிறீர்களா? என்னங்க பண்றது? இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். மீறக்கூடாது. சரி விஷயத்துக்கு வர்றேன். எந்திரன் பற்றி எல்லோரும் எழுதிவிட்டார்கள். கதை ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருக்கும். என்ன எழுதுவது என்று யோசித்த போது சில சொந்த கருத்துக்கள் அனுபவங்களை எழுதலாம் என்று தோன்றியது. எழுதுகிறேன். நேற்றே எழுதலாம் என்று நினைத்தேன். ஹி ஹி... நேற்றே இரண்டு தடவை படத்தை பார்த்ததால் எழுத முடியவில்லை.


அதிகாலயிலேயே கிளம்பி மதுரைக்கு சென்று விட்டோம். மதுரை என்றாலே ரஜினி பட ரிலீஸ் என்றால் சில பல காட்சிகள் அரங்கேறும். அதை பார்க்க நேர்ந்தது. ஒரு நபர் முகம் முழுவதும் ரத்த களரியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்தார். அடி வயிற்றில் பீதி கிளம்பியது. "அய்யய்யோ படத்தை முழுவதும் பார்க்க விடமாட்டார்கள் போலிருக்கே?" என்று. நல்லவேளை எங்கள் காட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. வழக்கமாக ரஜினி படங்களுக்கே உரிய ஆர்ப்பாட்டம், கூச்சல் எல்லாம் இருந்தது. எல்லாம் கொஞ்ச நேரம்தான். பிறகு எல்லோரும் படத்தை கவனிக்க தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு காட்சி முடிவிலும் கரவொலி விண்ணை பிளந்தது. வீம்புக்கு கத்தவேண்டும் என்று கத்தவில்லை, மனதார அடடா! என்று கைதட்டியவர்களே அதிகம். எங்கள் ஊரில் தியேட்டரில் முதல்நாளில் பெண்களை பார்ப்பது அரிது. ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சிலர் குடும்பத்துடன் வந்தனர். அவர்களுடன் வந்திருந்த குழந்தைகள் படத்தை வெகுவாக விரும்பினார்கள்.

படத்தைப்பற்றி என் கருத்துக்கள்... 

படம் முழுவதும் வியாபித்திருப்பவர் சுஜாதா..சுஜாதா..சுஜாதா... 


தமிழ் சினிமா சுஜாதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் திணறப்போவது சர்வ நிச்சயம். படம் முழுவதும் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. அக்கிலிஸ்-ஆமை முரண்கூற்று, பிபோனாகி நம்பர், பிரைம் நம்பர், மின் காந்த அலைகள் என்று ஒரே சுஜாதா மயம்தான். ஒரு காட்சியில் போட்டோ பிளாஷ் அடித்தவுடன் ரோபோ திணறும். இதை பின்னர் சாமர்த்தியமாக பயன்படுத்தி இருப்பார்கள். வில்லன் ரோபோ(க்கள்) மாஸ்டர் கிளைண்ட் அடிப்படையில் இயங்குவது. வைரஸ் பிரோகிராம் எழுதி அவற்றை செயலிழக்க வைப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம். தலைவர் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இளமையாக இருக்கிறார். மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவி ஒரு வசனம் பேசுவார், "சரியான வில்லன் மூஞ்சி" என்று. தலைவர் வில்லனாக நடித்தால் முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறார். சந்திரமுகியில் கடைசியில் வந்த வேட்டையன் எல்லா கவனத்தையும் ஈர்த்தமாதிரி. ஐஸ்வர்யா காதலை ஏற்கமுடியாது, எரேஸ் பன்னிடு என்று சொல்லும்போது, தலையை தொங்கப்போடும் போது சிட்டி ரோபோ மீது நமக்கே பரிதாபம் வந்துவிடுகிறது. ஐஸுக்கு வயதாகிவிட்டது என்று சொல்கிறார்கள். மருத்துவமனையில் ரஜினி பிரசவம் பார்க்கும் முன், ஒரு லேடி டாக்டரிடம் பேசிக்கொண்டு வருவார்கள். அவருக்கும் ஐஸ்வர்யா வயதுதான் இருக்கும். அப்போது தெரியும் ஐஸ் எவ்வளவு இளமையாக இருக்கிறார் என்று. ரஜினி அவரை கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் தியேட்டரே "கபர்தார்!!" என்று கத்துகிறது... (ரஜினி சொன்னது என்பதால். பலருக்கு அதன் அர்த்தமே தெரியாது)டெக்னிசியன்களின் கடும் உழைப்பு படம் நெடுக தெரிகிறது. படத்தில் தேவை இல்லாத காட்சிகள் என்று நாம் நினைப்பதெல்லாம் (கொசு, தீவிபத்து) கண்டிப்பாக குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டதை போல இருக்கிறது. இவை எல்லாம் இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளும் படத்தை ரசிக்க வேண்டும் என்றால் இவை எல்லாம் தேவைதான். அதே போல கலாபவன் மணி, ஹனீபா இல்லாமல் இருந்தால் கேரளா மக்களுக்கு ஒரு அந்நிய படத்தை பார்க்கும் உணர்வு ஏற்படும் என்பதாலேயே சேர்க்கபட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.அடித்து சொல்கிறேன் இவ்வளவு கம்மி செலவில் இத்தனை பிரமாண்டமாக ஒரு படத்தை ஹாலிவூட்டில் கூட எடுக்க முடியாது. ஹாட்ஸ் ஆப் டு சங்கர். நம்ப முடியவில்லையா? படத்தை பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.

பி.கு: இது முற்றிலும் நிஜம். மதுரையில் நான் படம் பார்த்துக் கொண்டிருந்த போது இடைவேளையில் ஜாய் ஆலுக்காஸ் விளம்பரம் போட்டார்கள் (நடிகர் விஜய் வருவாரே..). பொதுவாக இம்மாதிரியான நேரத்தில் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஆனால் நடந்ததே வேறு. ஒட்டுமொத்த தியேட்டரே எழுந்து வசை பாடி தீர்த்து விட்டார்கள். எனக்கே இது அதிர்ச்சியாக இருந்தது. தியேட்டர் முழுக்க இருந்தது ரஜினி ரசிகர்கள். விஜய் கவனமாக இருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. கவனம் பாஸ்...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...