விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 16, 2012

நானும், என் விகடனும்.....

இந்த வாரம் பதிவுலகை பொறுத்தவரை மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சியாக பெருகிக் கொண்டிருக்கிறது. தமிழ் மணத்தில் நட்சத்திர பதிவராக எழுதியது, தளத்தின் ஹிட்ஸ் ஒன்றரை லட்சத்தை அடைந்தது என்று அடுத்தடுத்து சந்தோஷம். இதனிடையே நேற்று இரவு, உடன் பணிபுரியும் நண்பர் போன் செய்து, "சொல்லவே இல்லை?..." என்றார்.


எனக்கு புரிபடவில்லை. "என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லை. என்று கூறினேன். "என் விகடனில் இந்த வலைத்தளத்தை பற்றி உங்கள் புகைப்படத்துடன் பிரசுரித்திருக்கிறார்கள்.", என்று கூறினார். என்னால் நம்ப முடியவே இல்லை. பிறகு கடையில் விகடன் வாங்கியபிறகுதான் உண்மை தெரிந்தது. 

சிறு வயதில் பல எழுத்தாளர்களின் கட்டுரைகள், படைப்புகள் புத்தகங்களில் வெளியாகும் போது, அவற்றை பார்த்து பிரமித்ததுண்டு. அந்த பிரமிப்பின் வெளிப்பாடே, இந்த மாதிரி ஒரு வலைத்தளத்தை அமைத்து, அதில் எழுதி வந்தது. ஆனால் என் பெயரும் கூட ஒரு நாள் பத்திரிக்கையில் வெளியாகும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அதற்கான தகுதி உண்டா என்பதில் எனக்கு இன்றும் சந்தேகம் உண்டு. படைப்புகள் எழுதி அவை வெளியாகாவிட்டாலும், பெயர் வருவதே, என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு மிகப்பெரிய சாதனையே. அதுவும் நடுப்பக்கத்தில் என்னும்போது, என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைபோன்றரை ஊக்குவிக்கும் விதமாக இவ்வாறு வெளியிட்டதற்கு விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். சமீபத்தில் தமிழ்மணம் நட்சத்திர பதிவராக எழுதுவதற்கு அழைத்ததையே என்னால் நம்ப முடியாத நிலையில், அதன் மூலமாக விகடனில் என் முகம் வெளியானதற்கு தமிழ்மணத்துக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும் பத்தாது. இப்போதும் காண்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன், "என் முகம் விகடனில் வந்துவிட்டது!!", என்று சிறு குழந்தை போல. 

இதற்கு உறுதுணையாக இருந்து, ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை எனக்கு ஆதரவு அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையில், என்னால் முடிந்த அளவுக்கு மென்மேலும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன்.

52 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் பாலா சார்....

உங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்...

மேலும் சிறப்பாக தொடருங்கள்.

Sankar Gurusamy said...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ஐய்யோ - சந்தோசம் பாலா. வாழ்த்துகள் வாழ்த்துகள்.

NKS.ஹாஜா மைதீன் said...

#அதற்கான தகுதி உண்டா என்பதில் எனக்கு இன்றும் சந்தேகம் உண்டு#

நீங்கள் தன்னடக்கத்தில் இவ்வாறு கூறினாலும் நீங்கள் தகுதியில் சிறந்தவரே....வாழ்த்துக்கள்

முத்துசிவா said...

vazhthukkal thala :)

சென்னை பித்தன் said...

வெற்றிகள் தொடர வாழ்த்துகள்,பாலா

Unknown said...

வாழ்த்துக்கள் மாப்ள...இன்னும் பிரபல்யம் ஆக இறைவனை வேண்டுகிறேன்!

கலாகுமரன் said...

மேன்மேலும் பல வெற்றி சிகரம் தொட வாழ்த்துகிறேன் அன்புடன்.

http://eniyavaikooral.blogspot.in/

பாலா said...

@தமிழ்வாசி பிரகாஷ்

மிக்க நன்றி நண்பரே. ஒரு சில பதிவர்களின் உழைப்புக்கு முன்னால் என்னுடையதெல்லாம் ஒன்றுமே இல்லை.

பாலா said...

@Sankar Gurusamy

நன்றி நண்பரே

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

என் மனமார்ந்த நன்றிகள்...

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேடம்

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

வாழ்த்துக்கு நன்றி நண்பரே. உண்மையில் அரட்டை அடிப்படை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாதே? அதை வைத்துத்தான் சொன்னேன்

Yoga.S. said...

அடடே!வாழ்த்துக்கள் பாலா!!!!உண்மையில் இணையில்லாத சந்தோசம் ஏற்படுத்தும் நிகழ்வுதான்!வாழ்த்துக்கள்,மீண்டும்!

பாலா said...

@முத்துசிவா

நன்றி நண்பரே

பாலா said...

@சென்னை பித்தன்

வாழ்த்துக்களுக்கு நன்றி சார்

பாலா said...

@விக்கியுலகம்

தேங்க்ஸ் மாப்ள

பாலா said...

@EniyavaiKooral

உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் எப்போதும் எதிர்பார்க்கிறேன் நண்பரே

பாலா said...

@Yoga.S.FR

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

arasan said...

சின்ன சின்ன வாழ்த்துக்களில் பெரிய சாதனையே அடங்கி இருக்கின்றது சார் ..
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .. மேலும் சாதனை புரிய என் வாழ்த்துக்கள்

ஹாலிவுட்ரசிகன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தல.

r.v.saravanan said...

மனம் கனிந்த வாழ்த்துக்கள் பாலா நீங்கள் என் விகடனில் வெளியானது நான் வெளியானால் என்ன சந்தோஷம் அடைவேனோ அதே சந்தோசத்தில் இந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் மென் மேலும் உயர நண்பனின் வாழ்த்துக்கள்

vimalanperali said...

அங்கீகாரங்கள் வரபெற்ற பின் மனம் புளகாங்கித்து பேசுகிற பேச்சுக்கும்,எழுத்திற்கும் தனித்துவம் வந்து விடுகிறதுண்டுதான்.
விகடன் பார்த்த நேற்றே தங்களுக்கு வாழ்த்து சொல்ல நினைத்தேன்.
வேலைகளின் நடுவிலும்,மிக முக்கியமாக மின் வெட்டின் மத்தியிலுமாக மறந்தே போனேன்.தாமதமாகச்சொல்லும் வாழ்த்தை ஏற்றூக்கொள்வீர்கள்தானே?வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துகள்..

பாலா said...

@அரசன் சே

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@r.v.saravanan
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே. மிக்க நன்றி

பாலா said...

@விமலன்
வாழ்த்துவதற்கும் நல்ல மனது வேண்டும் சார். அதில் தாமதமானால் என்ன? மிக்க நன்றி சார்.

பாலா said...

@Madhavan Srinivasagopalan

ரொம்ப நன்றி சார்

Karthikeyan said...

வாழ்த்துக்கள் பாலா. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதி வாருங்கள்.

அந்நியன் 2 said...

கார் மேகங்களுக்கிடையே
முளைத்து நிற்கும் விடி வெள்ளியாய்.
யார் மோகங்களும் இல்லாமல்
எழுத்தே கதி என்று...

திகழும் உமக்கு எனது வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள் பாலா... அந்த செக்ஷனுடைய பெயர் வாரம் ஒரு வலைப்பதிவரா அல்லது வலையோசையா அல்லது ஒவ்வொரு மண்டலத்திற்கும் மாறுபடுகிறதா...

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் திரு பாலா. உங்களைப் பற்றி குறிப்பிட்டதில் உங்களது கிரிக்கெட் கட்டுரைகளை குறிப்பிட்டிருக்கலாம். அனைத்தும் அருமையானவை.
எனது மின்னஞ்சல் முகவரி: rathnavel.natarajan@gmail.com
உங்களது செல் எண்ணை எனக்கு தெரியப் படுத்துங்கள். உங்களுக்கு வசதியான நேரத்தில் பேசுகிறேன்.
உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

Bala said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. விகடனில் உங்கள் பக்கங்கள் வெளி வந்த செய்தியை உங்களிடம் முதலில் தெரிவித்த நண்பனாக பெருமை கொள்கிறேன்.. இது போல், பற்பல சாதனைகள் புரிந்து சிறந்த எழுத்தாளனாக ஆக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- பாலகணேஷ்

பாலா said...

@Karthikeyan

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@அந்நியன் 2

வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே

பாலா said...

@Philosophy Prabhakaran

அது வலையோசை என்ற பகுதி நண்பரே. இது மதுரை மாவட்ட பதிப்பு. வேறு மண்டலத்தில் மாறுபடும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Bala

மனமார்ந்த நன்றி நண்பரே. தங்கள் ஆதரவோடு இன்னும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே.

கிரி said...

வாழ்த்துக்கள் பாலா. நீங்க கூறியது போல சந்தோசமான வாரமாக உங்களுக்கு அமைந்து விட்டது.

shanmugavel said...

மேன்மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள் பாலா!

அன்புடன் அருண் said...

அன்புள்ள பாலா,

உங்கள் எழுத்திற்காக நீங்கள் மேலும் சிறப்பிக்கப் படுவீர்கள்! இது ஒரு தொடக்கமே!

கிடைத்த அங்கீகாரத்திற்கு மகிழ்ச்சியும் உங்கள் வாசகர்களில் ஒருவன் என்பதில் பெருமையும் கொள்கிறேன்!

நன்றி!

பாலா said...

@Rathnavel Natarajan

உங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே. கண்டிப்பாக தெரியபடுத்துகிறேன்.

பாலா said...

@கிரி

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@shanmugavel

நன்றி நண்பரே

பாலா said...

@அன்புடன் அருண்

இந்த அங்கீகாரங்களை எதிர்பார்த்து நான் எழுத தொடங்கவில்லை. ஆகவே எதிர்பாராமல் கிடைத்த இந்த மாதிரி இன்ப அதிர்ச்சிகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி நண்பரே

ஆத்மா said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.....

பாலா said...

@சிட்டுக்குருவி

நன்றி நண்பரே

Anonymous said...

வாழ்த்துக்கள் பாலா... மென்மேலும் உயர்வீர்கள்...

நம்பிக்கைபாண்டியன் said...

சமீபத்தில்தான் பார்த்தேன்,
நீங்கள் கல்லூரி ஆசிரியர் என்று இப்போதுதான் தெரிந்தது!
வாழ்த்துக்கள் பாலா!

பாலா said...

@மொக்கராசு மாமா

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. எல்லாம் உங்களை மாதிரி நண்பர்களின் ஆதரவுதான்.

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...