வணக்கம் நண்பர்களே!...
எனது பெயர் பாலசுப்பிரமணியன். தென் தமிழகத்தில், விருதுநகரில் சமையலை தொழிலாகக் கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நான், பொறியியல் படித்த கையோடு, சென்னையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக நான்காண்டுகள் பணியாற்றினேன். இதனூடே முதுகலை பொறியியல் படிப்பை முடித்ததும், சொந்த ஊருக்கே திரும்பிவிட்டேன். தற்போது விருதுநகரில் உள்ள புகழ்பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக மூன்றாண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே வாசிப்பதில் அதீத விருப்பம் கொண்ட எனக்கு, இந்த பதிவுலகம் என்பது சிறந்த நூலகமாக விளங்குகிறது. வாசிப்பதில் எவ்வளவு ஆர்வமோ அதே அளவு எழுதுவதிலும் மிக ஆர்வமாக இருந்த காரணத்தாலேயே இங்கு எழுதத் தொடங்கினேன். எது பற்றி எழுதலாம் என்ற முன் யோசனை எல்லாம் கிடையாது. ஆனால் முடிந்தவரை நேர்மையாகவும், பண்போடும் என் எழுத்துக்கள் அமைய வேண்டும் என்ற முடிவுடனே எழுதத்தொடங்கி இருக்கிறேன். என்னை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுள் ஏதாவது ஒன்றை தொடர்பு கொள்ளுங்கள்.
bala.vnr@gmail.com
ahampuramtamil@gmail.com
முழுவதும் படிக்க >>