விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 2, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 16

தூக்கி எறியப்பட்ட தாதா.... 2005ஆம் ஆண்டை பொறுத்தவரை என் வாழ்வில் கொஞ்சம் கடினமான காலகட்டங்களில் ஒன்று. பொறியியல் படிப்பின் இறுதிநாட்கள். அடுத்து என்ன செய்யப்போகிறோமோ? என்ற குழப்பம். இந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டின் மீது கொஞ்சம் ஈடுபாடு குறைந்து போனதேன்னவோ உண்மைதான். ஒரு வழியாக படிப்பு முடிந்து, எல்லோரையும் போலவே வேலை தேடி சென்னைக்கு பயணமானேன். அப்போதைக்கு பெங்களூருவை விட சென்னையில் காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு என்பதால் இந்த முடிவு. மேலும் அப்போது மொழி தெரிந்த சென்னையே என்னை பயமுறுத்தியது. மொழி தெரியாத பெங்களூருவில் நான் என்ன செய்ய முடியும்? நண்பர் ஒருவர் உதவியுடன், ஒரு சிறு அறையில் தங்க ஆரம்பித்தோம். அப்போதெல்லாம் எங்கள் அறையில் டிவி கிடையாது என்பதால் பேப்பரில் மட்டுமே கிரிக்கெட் செய்திகளை படிப்போம். எப்போதாவது ஒருமுறை அருகில் இருக்கும் கடைகளில் கிரிக்கெட் பார்ப்பதோடு சரி. மேலும் நான் அப்போதிருந்த மன நிலையில், கிரிக்கெட்டில் எல்லாம் மனம் லயிக்கவில்லை. 
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கிரிக்கெட்டின் தாதா கங்குலி மீதான நடவடிக்கைகளும் சர்ச்சைகளும். 2004 இறுதியில் இந்தியா ஓரளவுக்கு வெற்றிகளை குவித்தாலும், ஒரு தனி நபராக கங்குலியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. அதே போல சென்ற இடமெல்லாம் பிரச்சனை, சண்டை. ஒரு போட்டியில் ஆடுகள அமைப்பாளரிடம் ஏதோ பிரச்சனை செய்ய, கங்குலி கேட்டுக்கொண்டதற்கு அப்படியே எதிர்பதமாக ஆடுகளம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதே போட்டியில் கங்குலியை எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவின் கேப்டன், டாஸ் போட டிராவிட் வந்ததை பார்த்ததும், "கங்குலி எங்கே?", என்று கேட்க, டிராவிட், "யாருக்கு தெரியும்?" என்று கூறி இருக்கிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கும் விதமாக, கிளம்பியது பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட மோதல். 


2005 கடைசியில் இந்தியா அணியின் பயிற்சியாளர் ஆனார் ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல். முதல் நாளில் இருந்தே கங்குலியுடன் பிரச்சனை தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவர் பி‌சி‌சி‌ஐக்கு மறைமுகமாக ஒரு மெயில் அனுப்பி உள்ளார். அதில் கங்குலி உடலளவிலும், மனதளவிலும் கிரிக்கெட் ஆட தகுதி அற்றவர் என்றும், அவர் இந்தியா அணிக்குள் பல பிரிவினைகளை உண்டாக்கி, ஒரு மாஃபியா கும்பல் போல நடத்துகிறார் என்றும் கூறி இருக்கிறார். இந்த மெயில் வெளியே கசிய, கங்குலி ரசிகர்கள் அனைவரும் கொதித்துப்போனார்கள். சேப்பல் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்திய மீடியாக்கள் கூட கங்குலிக்கு ஆதரவாகவே இருந்தன. இந்த நேரத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றிருந்தது. திரும்பி வந்தவுடன் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று முடிவு கட்டப்பட்டது. சொல்லி வைத்தாற்போல, ஜிம்பாப்வேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி வெறும்கையோடு நாடு திரும்பியது. 


அதற்கடுத்ததாக நவம்பரில் இலங்கையுடன் சொந்த மண்ணில் ஒரு தொடர் ஆரம்பிக்கிறது. முன்னதாக உத்தேச அணியில் கங்குலியும் இருந்தார். எல்லோரும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபொது அந்த செய்தி வெளியானது. அதாவது, "கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக டிராவிட் இருப்பார். மேலும் கங்குலி இலங்கைக்கான தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்." என்னைப்போன்ற ரசிகர்களுக்கு இது மாபெரும் அதிர்ச்சி. பயிற்சியில் இருந்த கங்குலிக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. மவுனமாக டிரெஸ்ஸிங் ரூம் சென்று தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். இதில் ஒரு சோகம் என்னவென்றால், அப்போதைய சீனியர்களான சச்சின், மற்றும் டிராவிட் கங்குலியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இத்தனை வருடங்களாக தன்னுடன் பழகியவர்கள், எதிரியாக பாவித்தாலும்,  தான் விடைபெறும்போது ஒரு சம்பிரதாயத்துக்காவது வந்து பேசி இருக்கலாம். 


அதை விட மிகப்பெரிய கொடுமை, கங்குலியால் உருவாக்கப்பட்ட வீரர்களான, சேவாக், யுவ்ராஜ், ஜாகீர் ஆகியோர், கங்குலி கிளம்பும்போது டிரெஸ்ஸிங் ரூமில்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் கங்குலியை கண்டுகொள்ளவே இல்லை. இதை விட வேதனை வேறெதுவும் இருக்கவே முடியாது. "இதோ என் கனவு அணியின் கதாநாயகர்கள், என்னை உதறிவிட்டார்கள்." என்று கங்குலி நிச்சயம் வருந்தி இருப்பார். இந்த சம்பவங்களுக்கு பிறகு கங்குலி மீதான பிரியம் எனக்கு இன்னும் அதிகரித்தது. ஒரு சிறந்த வீரனைக்கூட இப்படி கேவலமாக நடத்தும் பாங்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மட்டுமே உண்டு. இது குறித்து அப்போது குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையில், "புதிய கேப்டன் என்ற முறையிலாவது டிராவிட் பேசி இருக்கலாம். இளையவீரர்கள் பேசாமல் இருந்தது கூட பயத்தின் காரணமாக இருக்கலாம். ஆனால் டிராவிட் அப்படி இருந்தது சரியல்ல. கங்குலி மீது டிராவிட் கொண்டிருந்த கசப்புணர்வே இதற்கு காரணம்." என்று கூறி இருந்தார்கள். மேலும், "இந்த மாதிரி நிலையில் பதவிக்கு வந்திருக்கும் டிராவிட், நாளை நமக்கும் இதே நிலைமைதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்." என்று எழுதி இருந்தார்கள். அவர்கள் சொன்னது போலவே, கடைசியில் டிராவிட்டுக்கும் இதே நிலைமை ஏற்பட்டதுதான் பரிதாபம். கங்குலியின் இந்த நிலைமை இனி வரும் எல்லா கேப்டன்களுக்கும் ஒரு பாடம். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை அது தலைசிறந்த கேப்டனாக இருந்தாலும்,  அரசியல் காரணங்களுக்காக, தூக்கி எறிய தயங்கமாட்டார்கள். ஆகவே அந்த மனநிலைக்கு தன்னை தயார் செய்து கொள்வது மிக அவசியம். நாளைக்கு தோனிக்கு கூட இந்த நிலைமை வரலாம்.


முன்னதாக இந்திய அணியில் இணைந்திருந்த தோனி ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் பொருட்டு அதிரடியாக ஆடத்தொடங்கினார். ஏப்ரலில் இந்தியா வந்த பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தாலும், ஒருநாள் தொடரை அபாரமாக ஆடி கைப்பற்றியது. இந்திய ரசிகர்கள் மத்தியில் சேவாக்கும், தோனியும் கதாநாயகர்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். தோனி வாழ்வில் மிக முக்கியமானதொரு தொடர் என்றால் அது 2006 தொடக்கத்தில் இந்தியா மேற்கொண்ட பாகிஸ்தான் தொடர்தான். டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, முதல் இரண்டு டெஸ்டுகள் டிரா ஆக, மூன்றாவது டெஸ்டை பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்த மூன்றாவது டெஸ்டில் கங்குலி ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரில் இந்தியா ஐந்துக்கு நாலு போட்டிகளில் வென்று அபாரமாக கோப்பையை கைப்பற்றியது. அதிலும் இந்தியா பாகிஸ்தான் வித்தியாசமில்லாமல் எல்லோரும் ரசித்தது, தோனியின் அதிரடி ஆட்டம்தான். மிக குறைந்த பந்துகளில், அதிக ரன்களை குவித்து எல்லா போட்டிகளிலுமே சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். அவரது பேட்டிங் ஸ்டைல் மிக வினோதமாக் இருந்தது. பல கிரிக்கெட் நிபுணர்கள் இதை விமர்சனம் செய்தார்கள். "இவ்வாறு ஆடினால் தொடர்ந்து ஆட முடியாது." என்று கூறினார்கள். ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி காட்டினார் தோனி. பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷாரப், "தோனியின் ஹேர்ஸ்டைல் எனக்கு பிடித்திருக்கிறது." என்று கமெண்ட் அடிக்கும் அளவிற்கு பிரபலம் ஆனார். (பின்னாளில் தன் நீண்ட முடியை ஏனோ வெட்டி விட்டார்). 


தோனியின் வருகை என்பது இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று அப்போதே நான் நினைத்தேன். எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு வருத்தம் உண்டு. அதாவது நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்து, ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று கீப்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதிலும், தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட்சன், ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர், ஆஸ்திரேலியாவின் ஹீலி மற்றும் கில்க்றிஸ்ட், இலங்கையின் காலுவிதரானா மற்றும் சங்கக்காரா, பாகிஸ்தானின் லத்தீப் மற்றும் மொயின்கான் போன்றவர்கள் நீண்டகாலம் கீப்பர்களாக இருந்த காலகட்டத்தில், இந்தியா ஒவ்வொரு தொடருக்கும் ஒரு புதிய கீப்பரை அறிமுகப்படுத்தி கொண்டிருந்தது. கிரண் மோர், விஜய் யாதவ், நயன் மொங்கியா, எம்‌எஸ்‌கே பிரசாத், சபாகரீம், தகியா, தீப்தாஸ் குப்தா, சமீர் டீகே, பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், அஜய் ரத்ரா மற்றும் ராகுல் டிராவிட் என்று இந்த பட்டியல் மிக நீளம். ஒரு பதினாறு ஆண்டுக்குள் இத்தனை விக்கெட் கீப்பர்கள் எந்த அணியிலுமே இருந்திருக்க மாட்டார்கள். மேலும் இந்திய விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கில் அவ்வளவாக சோபித்ததில்லை. உருவ அமைப்பிலும், சிறுவர்கள் போலவே இருந்திருக்கிறார்கள். "ஆண்டி பிளவர், கில்க்றிஸ்ட் மாதிரி ஒரு அதிரடி விக்கெட் கீப்பர் இந்தியாவுக்கு கிடைக்கமாட்டாரா?" என்று ஏங்கிக்கொண்டிருந்த போதுதான், தோனி இந்திய அணிக்கு வந்தார். 


இது வரை இந்தியா பார்த்திராத ஒரு ஆஜானுபாகுவான ஒரு விக்கெட் கீப்பர். பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் குறை சொல்ல்வே முடியாது. அடுத்த உலகக்கோப்பை தொடங்கவுள்ள இந்த நேரத்தில் இது ஒரு நல்ல அறிகுறி. இப்போதும் இந்திய அணி ஒரு சிறந்த அணியாகவே எனக்குதோன்றியது. 2003 உலகக்கோப்பை தொடரில் இருந்த பெரும்பாலான வீரர்கள் அணியில் இருந்தார்கள். இந்த முறை தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், மிக கடினமாக உழைத்தால்தான் ஜெயிக்க முடியும். இருந்தாலும் என் மனதில் நம்பிக்கை இருந்தது. 


முன்னதாக 2006இல் நடந்த ஒரு முக்கியமான ஆட்டத்தை பற்றி சொல்லியாகவேண்டும். இந்த ஆட்டத்தை பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்தே எனக்கு கிடைத்தது. 2006 மார்ச்சில், இந்தியாவை புரட்டி எடுத்த அதே ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஒரு முக்கிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்தித்தது ஆஸ்திரேலியா. ஏற்கனவே 2-2 என்ற சமநிலையில் தொடர் இருந்ததால் இந்த போட்டி ஒரு இறுதி போட்டி மாதிரி இருந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஸ்கோரான 434 ரன்களை குவித்தார்கள். பாண்டிங் அடித்து நொறுக்கி தள்ளிவிட்டார். ஏறக்குறைய எல்லாரும் ஆட்டம் முடிந்து விட்டதேன்றே நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து ஆடத்தொடங்கிய தென்னாபிரிக்கா மனம் தளராமல் ஸ்கோரை விரட்டியது. ரிக்கி பாண்டிங்கின் ஆட்டத்தை மறக்க செய்யும் அளவிற்கு கிப்ஸ் மரண அடி அடித்தார். அவருக்கு இணையாக ஸ்மித்தும் பட்டையை கிளப்பினார். ஸ்மித் அவுட் ஆகும்போது ஸ்கோர் 22 ஓவருக்கு 190. ஆனாலும் மனம் தளராத கிப்ஸ் தொடர்ந்து ஆடினார். அவர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 32 ஓவரில் 300. எனக்கு தலை சுற்றியது. இதுவரை இப்படி ஒரு ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது.


தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் எல்லோரும் அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் மூன்று ஓவருக்கு முப்பது ரன் எடுக்கவேண்டும். லூயிஸ் வீசிய அந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் உள்பட 17 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் எழு ரன் அடிக்கவேண்டும். இருப்பது இரண்டு விக்கெட். புயல்வேக பிரேட்லீ பந்தை அபாரமாக எதிர் கொண்ட பவுச்சர், ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஹால். அடுத்த பந்து கேட்ச் ஆக மாற, ஆட்டம் சூடு பிடித்தது. மூன்று பந்துகளில் இரண்டு ரன். பிரெட் லீ பந்தை நீடினி எதிர்கொள்ளவேண்டும். எல்லோரும் சீட் நுனிக்கு வந்துவிட, அடுத்த பந்தில் 1 ரன் எடுக்கிறார் நீடினி. "அப்பாடா!" என்றிருந்தது எல்லோருக்கும். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்ப, ஒரு உலகசாதனையை அதே போட்டியில் முறியடித்து, சாதனை படைத்தது தென்னாபிரிக்கா. இந்த போட்டியில் பவுலர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. 


கரீபியன் மண்ணில் இந்தியா பூசிக்கொண்ட கரி.... அடுத்த பதிவில். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

34 comments:

arasan said...

கிரிக்கெட் திருவிழா தொடர வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

கிரிக்கெட் தொடர் தொடரட்டுட்டும் வாழ்த்துக்கள்...தொடர்கிறேன்

Rathnavel Natarajan said...

கிரிக்கெட்டைப் பற்றிய அருமையான பதிவு.
கங்கூலி ஒரு அற்புதமான வீரர். இவர்களது அரசியலில் பழி வாங்கப்பட்டார்.
வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் எனக்கு கிரிக்கெட் மீதே வெறுப்பு வந்தது நண்பரே..மீண்டும் அவர் திருப்பி அணிக்கு வந்து தூள் கிளப்பியதும்தான் எனக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆர்வம் திரும்பி வந்தது.இது சின்னப்புள்ளைத்தனமாக தெரிந்தாலும் அதுதான் உண்மை கங்குலி என்ற நபர் கிரிக்கெட்டையும்தாண்டி என்னக்கு ஒரு ரோல் மொடலாகவே தெரிந்தார் தெரிகின்றார்.மிகுந்த தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதர்.

K.s.s.Rajh said...

(///2006 தொடக்கத்தில் இந்தியா மேற்கொண்ட பாகிஸ்தான் தொடர்தான். டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, முதல் இரண்டு டெஸ்டுகள் டிரா ஆக, மூன்றாவது டெஸ்டை பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்த மூன்றாவது டெஸ்டில் கங்குலி ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரில் இந்தியா ஐந்துக்கு நாலு போட்டிகளில் வென்று அபாரமாக கோப்பையை கைப்பற்றியது. அதிலும் இந்தியா பாகிஸ்தான் வித்தியாசமில்லாமல் எல்லோரும் ரசித்தது, தோனியின் அதிரடி ஆட்டம்தான். மிக குறைந்த பந்துகளில், அதிக ரன்களை குவித்து எல்லா போட்டிகளிலுமே சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். அவரது பேட்டிங் ஸ்டைல் மிக வினோதமாக் இருந்தது. பல கிரிக்கெட் நிபுணர்கள் இதை விமர்சனம் செய்தார்கள். "இவ்வாறு ஆடினால் தொடர்ந்து ஆட முடியாது." என்று கூறினார்கள். ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி காட்டினார் தோனி. பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷாரப், "தோனியின் ஹேர்ஸ்டைல் எனக்கு பிடித்திருக்கிறது." என்று கமெண்ட் அடிக்கும் அளவிற்கு பிரபலம் ஆனார். (பின்னாளில் தன் நீண்ட முடியை ஏனோ வெட்டி விட்டார்). இந்த தொடரில்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா அறிமுகமானார். ////)

ஒரு குறிப்பு நண்பரே..
ரெய்னா 2006 பாகிஸ்தான் தொடரில் அறிமுகம் ஆகியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.ஆனால் ரெய்னா அதற்கு முந்தய 2005ல் இலங்கைக்கு எதிரான போட்டியில்தான் அறிமுகமானார்.

மாலதி said...

கிரிக்கெட் திருவிழா தொடர வாழ்த்துக்கள்

பாலா said...

@அரசன்

மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@மாய உலகம்

நன்றி நண்பரே.

பாலா said...

@Rathnavel

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@Kss.Rajh

தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே. தவறான தகவலுக்கு மன்னிக்கவும். நீக்கி விடுகிறேன்.

பாலா said...

@மாலதி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கேரளாக்காரன் said...

Informative but ur views are bad

Unknown said...

வழமை போல அசத்தல் பகிர்வு..
இந்திய அணி நிர்வாகம் பற்றி சரியாக குறிப்பிட்டு இருக்கீங்க!!!

Unknown said...

இந்த அத்திரி புத்திரியை என்ன செய்ய போகுறீர்கள்??
அவரை சொந்தமாய் ஒரு கிரிக்கட் பதிவு எழுத சொல்லுங்கள் பார்ப்போம்??
கிரிக்கட் எழுதும் பதிவுகளுக்கு வந்து கேவலமான கமென்ட் இடத்தான் தெரியும் போல!பாலா போல அருமையான கிரிக்கட் அலசல் பதிவர் யாருமில்லை!

சென்னை பித்தன் said...

நினைவுகள் தொடரட்டும்!(இங்கிலாந்தில் இந்த அடி வாங்கு கிறார்களே!)

Chitra said...

cool!!! nice post.

சக்தி கல்வி மையம் said...

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

அருண் பிரசாத் said...

434 run மேட்சை மறக்க முடியுமா?

அப்போதான் நியூஸ் சானல்ல ஆஸ்திரேலியா சாதனைனு பார்த்தேன்..... மறுநாள் காலைல பார்த்தா 438 அடிச்சி தெனாப்பிரிக்கா வெற்றியாம்...

ஹைலைட்ஸ் பார்த்தா மரண அடி போட்டி....

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

நண்பரே நான் முதலிலேய சொன்னது போல நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். எக்ஸ்பர்ட் அல்ல. ஒரு எக்ஸ்பர்ட்டின் பார்வை எப்போதுமே சரியாக இருக்கும். ரசிகனின் பார்வை மிகக்குறுகியதாக, ஒரு பக்க சார்பாகவே பெரும்பாலும் இருக்கும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

@மைந்தன் சிவா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. ஏதோ எனக்கு தெரிந்தவற்றை நினைவில் வைத்து எழுதுகிறேன். அவ்வளவுதான்

கருத்து தெரிவிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு அல்லவா?

பாலா said...

@சென்னை பித்தன்

வடிவேலு மாதிரி , "போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது" என்று சொல்ல்வேண்டியதுதான்.


நன்றி நண்பரே.

பாலா said...

@Chitra

மிக்க நன்றிங்க

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

பதிவை படிப்பதே பெரிய விஷயம். எப்படி கமெண்ட் போட்டால் என்ன. மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@அருண் பிரசாத்

உண்மையில் என்னால் முதலில் இதை நம்பவே முடியவில்லை. ஆஸ்திரேலியா 434 எடுத்ததே நம்ப முடியவில்லை, பிறகு தென்னாபிரிக்கா 438 எடுத்ததை எப்படி நம்ப முடியும். இது தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே.

Mohammed Arafath @ AAA said...

நல்ல பதிவு.எங்க அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா மேட்ச் பற்றி போடாம விட்டுடு வீங்க ன்னு நினச்சேன்.உண்மையாலுமே அது ஒரு மறக்க முடியாத போட்டி.கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரைக்கும் இப்படி ஒரு மேட்ச்நடந்தது இல்ல .இனிமேலும் நடக்காது.. ஆஸ்திரேலியா கொட்டாத அடைகின மேட்ச்.

பாலா said...

@Mohammed Arafath @ AAA

அந்த மேட்ச்சை பற்றி எழுதாமல் 2006ஆம் ஆண்டின் கிரிக்கெட்டை பற்றி எப்படி எழுதுவது? நன்றி நண்பரே,

shanmugavel said...

நல்ல பதிவு.மற்றவர்கள் நுழையாத சப்ஜெக்ட் தொடருங்கள்.

பாலா said...

@shanmugavel

மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

Anonymous said...

அழகிய படங்கள்.சுவாரஸ்யமான தகவல்கள்.நல்லாருக்கு

r.v.saravanan said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் பாலா

r.v.saravanan said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் பாலா

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@r.v.saravanan

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா...

பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ் said...

உங்கள் " விளையாட்டு கட்டுரைகள் ' படிக்க சுவாரசியமாக இருக்கிறது. எனக்கு தெரிந்த பத்திரிகையில் இதை வெளியிட ஏற்பாடு செய்கிறேன். பிறகு என்னை அழைக்கவும் - பா.சுப்ரமண்யம் , 98417 43851, ஆசிரியர், பில்டர்ஸ் லைன்

Related Posts Plugin for WordPress, Blogger...