விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 21, 2012

வெட்டி அரட்டை பில்லா vs துப்பாக்கி, விமர்சனம்

வணக்கம் நண்பர்களே..... 

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். முதலில் என் திருமணத்திற்கு பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நம்மை வாழ்த்துவதற்கு உலகம் முழுவதும் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழுக்காரணமும் இணையமும், பதிவுலகமும்தான். மிக்க நன்றி.... 

விமர்சனம்

கொஞ்ச நாளைக்கு முன்னால் ரிலீஸ் ஆன ஒரு படத்தை பற்றி என் கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். விமர்சனம் என்று தலைப்பு வைத்து விட்டாலும் இவை என் சொந்த கருத்துக்களே. படித்து விட்டு, படம் வந்து இத்தனை நாள் கழித்து இது தேவையா? என்று காண்டானால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

கதாநாயகன் ராணுவத்தில் பணிபுரிபவர். விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். அங்கே குழப்பம் விளைவிக்கும் தீவிரவாதிகளை எப்படி தீர்த்துக்கட்டுகிறார் என்பதை அதிரடி திருப்பங்களுடனும், சண்டை காட்சிகளுடனும் கூறி இருக்கிறார்கள். இப்படி மூன்றே வரிகளில் கதையை சொல்லிவிட்டாலும் அதை எப்படி திரைக்கதைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதிலேயே இயக்குனரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

நாயகன் தன் வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு நடித்திருக்கிறார். அதிலும் தன்னுடைய வழக்கமான ஸ்டைலை கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறார். பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். "ராணுவ உடை இவருக்கு பொருந்துமா?", என்று பலருக்கு சந்தேகம் உண்டு. ஆனால் கச்சிதமாக பொருந்துகிறது. ஏன் எல்லா மிலிட்டரிகாரர்களும் சொல்லி வைத்தார் போல புல்லட் வண்டி ஓடுகிறார்கள்? என்று தெரியவில்லை.  

இவருக்கு கைவந்த கலையான சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அதிலும் இறுதியில் வில்லனும் இவரும் மோதும் காட்சிகள் அனல் பறக்கின்றன. நிறைய இடங்களில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்திருக்கிறார். 

படத்தின் இன்னொரு பலம் வில்லன். சமீப காலமாக கதாநாயகனை விட வில்லன்கள் அழகாக இருக்கிறார்கள். அதே போல கதாநாயகனை விட வில்லன்கள் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள். என்னதான் வில்லன் அறிவாளியாக இருந்தாலும் கடைசியில் கதாநாயகனோடு ஒண்டிக்கு ஒண்டி மோதி இறப்பது தமிழ் சினிமாவின் மரபு. வில்லன் இறக்கும் காட்சி நம்ப முடியாததாக இருக்கிறது. படத்தில் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. குறிப்பாக கதாநாயகனை மடக்குவதற்கு அவன் தங்கையையே பயன்படுத்துவது, அதையே வில்லனை மடக்குவதற்கு கதாநாயகன் பயன்படுத்தி கொள்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். "தீவிரவாதிகள் என்பவர்கள் வேற்று கிரகத்தில் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் சாதாரண மக்களோடு மக்களாக இருப்பவர்கள்." என்று இயக்குனர் நாம் வயிற்றில் புளியை கரைக்கிறார். வில்லனுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் அந்த ஊரில் வசிக்கும் சாதாரண மக்களாகவே இருப்பதும் அதிர்ச்சி தரும் திருப்பங்கள். "அவர்கள் சமூகத்தின் மீது கோபம் கொண்டவர்கள்.", என்று சொன்னவர்கள் எதற்காக கோபம் கொண்டவர்கள் என்றும் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை கிளைமாக்ஸும், இடைவேளைக்கு பிறகு வரும் சண்டைக்காட்சியும். வில்லன் இடத்துக்கே சென்று அவன் ஆட்களை அடித்து நொறுக்கும் காட்சியில் நாயகன் சிக்சர் அடிக்கிறார்.

படத்தின் பெரிய மைனசே கதாநாயகியும் அவர் வரும் காதல் காட்சியும்தான். கதாநாயகி அடாவடிப்பெண் என்பதை நிரூபிப்பதற்காகவே மெனக்கெட்டு மொக்கையான காட்சிகளை திணித்திருக்கிறார் இயக்குனர். மிக அழகான நடிகையான  இவரை இவ்வளவு கன்றாவியாக எந்த படத்திலும் காட்டி இருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து. காஸ்டியும் டிசைனருக்கு வேலையே இல்லை போல. அதே போல மேக்கப்மேனும் தூங்கிக்கொண்டே வேலை பார்த்திருக்கிறார். நல்ல காமெடி நடிகர் இருந்தும்  காமெடி சுத்தமாக எடுபடவில்லை.படத்தின் நீளம் கருதி காமெடி காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒன்றிரண்டு காமெடி காட்சிகளுமே கதாநாயகி வரும் காட்சிகள்தான். அவையும் சகிக்கவில்லை. என்ன ஆயிற்று இசையமைப்பாளருக்கு? பாடல்கள் ஒன்றுகூட எடுபடவில்லை. வெளியில் கேட்பதற்கு சுமாராக இருந்த பாடல்கள் கூட படத்தில் மொக்கையாக இருக்கின்றன. அதே போல பின்னணி இசையும் என்னை கவரவில்லை. படத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக அமைக்கிறேன் பேர்வழி என்று அவசரமாக எடிட் செய்திருக்கிறார்கள். மக்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. 

படத்தில் நாயகன் பேசும் வசனங்கள் நச்சென்று இருக்கின்றன. தேசப்பற்று, நாட்டைக்காப்பதில் ஒவ்வோரு மனிதனுக்கும் உள்ள பங்கு என்று மெய் சிலிர்க்கும் வசனங்கள் ஆங்காங்கே விரவிக்கிடக்கிறது, படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் மிகச்சிறந்த ஒரு என்டர்டெயினர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியல் பெரிய பிரச்சனையை கிளப்புமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை. 

இவரது போட்டி நடிகரான வெள்ளை நடிகரின் படத்தை விட இது வசூல் சாதனை புரிந்துள்ளது என்பதும், வெள்ளை நடிகரின் ரசிகர்களே மறைமுகமாக படத்தை ரசிக்கிறார்கள் என்பதும், எதிரிகளுக்கு வயிற்றெரிச்சல் தரும் செய்திகள். என்ன வேணா சொல்லுங்கள் எங்க அண்ணன் மறுபடியும் ஃபார்ம்முக்கு வந்து விட்டார் என்பதை எந்த கொம்பனிடமும் அடித்து கூறுவோம். 

பின்குறிப்பு: கொஞ்ச நாளைக்கு முன்னால் கே டிவியில் ராணுவ வீரன் படம் ஒளிபரப்பினார்கள். அதற்கு விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்ததின் விளைவே இந்த பதிவு. இது ராணுவ வீரன் படத்தை பார்த்தபின் எனக்கு தோன்றியவை. நீங்க இது வேற படத்தோட விமர்சனம்னு நினைச்சீங்களா? அந்த படத்தை பார்த்து நொந்து போனது தனிக்கதை. அதை அப்புறம் சொல்றேன். More Over, அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை....  


அட XXXX..... அப்போ தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு தானே கேக்குறீங்க? 

பில்லா படத்துல தல சொன்னது , "I am Back.....". அதே மாதிரி நானும் பதிவுலகத்துக்கு திரும்பி வந்துட்டேன் அதனால சொல்கிறேன் ...... "I am Back...."

துப்பாக்கி படத்துல டாக்குடர் சொல்ற மாதிரியே, தினமும் காலையில் நான் வேலைக்கு கிளம்பும்போது என் மனைவி என்னிடம் "சீக்கிரம் வந்திடுங்க..... I am Waiting...." அப்படின்னு சொல்றா. போதுமா......... அப்படியே உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க.... 62 comments:

முத்தரசு said...

Wellcome Back

Unknown said...

come back சூப்பருய்யா மாப்ளே...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

துப்பாக்கி பட விமர்சனம் போலவே இருக்கு.. என்ன பல்டி?
வெல் கம் பேக். இன்றுதான் நினைத்தேன் பாலா. மிஸ் யூ அண்ட் யுவர் கனவுக்கன்னி பதிவு.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

தினமும் காலையில் நான் வேலைக்கு கிளம்பும்போது என் மனைவி என்னிடம் "சீக்கிரம் வந்திடுங்க..... I am Waiting...." அப்படின்னு சொல்றா. போதுமா......... // அப்படியா!? யாராவது எதையாவது கேட்டு விடுவார்களோ என்றெண்ணி முன்கூட்டியே பதில் தயார் செய்து வைத்துக்கொண்டு சொல்வதைப்போல் இருக்கிறதே. ஹஹஹ. வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு

ஆத்மா said...

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வில்லங்கமான பதிவுடன்.......
வாங்க சார் வாங்க....

.
.
.
மிஸ்ஸிங் புது மாப்பிள்ளை வாங்க :)

முத்தரசு said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

ஆமா ஆமா சரியா சொன்னீங்க சகோ

r.v.saravanan said...

welcome back bala

M (Real Santhanam Fanz) said...

ஆகா, வந்துட்டீங்களா... வருக வருக... ஆனா வந்ததும் வராததுமா இப்புடி குழப்புறீங்களே... :-)
ஆமா இது துப்பாக்கி விமர்சனம்தானே!!!!

Thava said...

இன்னிக்குதான் உங்க பிளாக் பக்கம் வந்தேன்..அதுக்குள்ள ஒரு பதிவோடு வந்துட்டீங்க..துப்பாக்கி விமர்சனம் நினைச்சி படித்துட்டு வர கடைசியில ஏன் சார் இப்படி.?அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..வழக்கம் போல இந்த பதிவும் சூப்பர்..ரொம்ப நன்றி.

ராஜ் said...

வாங்க வாங்க....
கடைசியில இப்படி முடிச்சிடீங்களே...

பாலா said...

@முத்தரசு

வரவேற்புக்கு நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

தாங்க்ஸ் மாப்ள

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

இனி தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் மேடம்.

//முன்கூட்டியே பதில் தயார் செய்து வைத்துக்கொண்டு சொல்வதைப்போல் இருக்கிறதே.


எப்போதுமே அலார்ட்டா இருக்கணுமே மேடம்.

உங்க வாழ்த்துக்கு நன்றி

பாலா said...

@சிட்டுக்குருவி

இது வில்லங்கமான பதிவா? அய்யோய்யோ...

வருகைக்கு நன்றி சார்

பாலா said...

@r.v.saravanan

நன்றி சார்

பாலா said...

@Real Santhanam Fanz (General)

துப்பாக்கி விமர்சனம் எழுதுற அளவுக்கு நமக்கு மூளை பத்தாது நண்பா. இது ராணுவ வீரன் விமர்சனம்

பாலா said...

@Thava Kumaran

உங்க வாழ்த்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ராஜ்

நாமளும் முருகதாஸ் மாதிரி எண்ட்ல டுவிஸ்ட் வச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். அதான் இப்படி. நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

//// நீங்க இது வேற படத்தோட விமர்சனம்னு நினைச்சீங்களா? அந்த படத்தை பார்த்து நொந்து போனது தனிக்கதை. அதை அப்புறம் சொல்றேன். More Over, அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை....
/////ஹி.ஹி.ஹி.ஹி.ஹி........

Wellcome Back Boss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enya en?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

how is marriage life?

சென்னை பித்தன் said...

ராணுவ வீரனின் துப்பாக்கி! :)

Manimaran said...

வாங்க பாஸ்...நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதிய பதிவு..ஆரம்பமே அமர்களமா இருக்கு....

ARASU said...

pattha vechitingale bala ha ha ha nice post and welcome back .

Anonymous said...

Neenga solli onnum aka porathille.. Go and compare Billa-2 and Thuppakki.. Thuppaki rated higher than Billa 2 and its Blockbuster Hit of the Year.. but Billa 2 Blockbuster Flop of the Year and Yevalovo padthula coat pottu nadichalum sorry nadanthalum Thuppakki kku equal akathu..Hehehe..

செங்கோவி said...

சூப்பர்யா..புது மாப்பிள்ளைக்கு குசும்பு ஜாஸ்தி.

செங்கோவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply To This Comment]

how is marriage life?
//

போலீஸ்கார், அங்கயும் அடி விழுதா?-ன்னு டைரக்டாக் கேளும்யா.

Unknown said...

kalakkal post

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கலோடு வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

post super.....


welcome back maapilai..

பாலா said...

@K.s.s.Rajh

சிரிப்புக்கு நன்றி நண்பா. இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

பாலா said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ரொம்ப நல்லா போகுது நண்பரே. மிக்க நன்றி

பாலா said...

@சென்னை பித்தன்

இந்த டைட்டில் நல்லா இருக்கே? அடுத்து இப்படி கூட ஒரு படம் வரும் என்று நினைக்கிறேன். நன்றி சார்

பாலா said...

@Manimaran

உங்க பாராட்டுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ARASU

அதெல்லாம் இல்லீங்க. சும்மா ஜாலிக்கு. நன்றி நண்பரே

பாலா said...

@Annbhu

ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? பதிவை முழுசா படிச்சீங்களா? இல்லைனா முழுசா படிங்க. சம்பந்தமில்லாம பில்லா-2வை பற்றி ஏன் பேசுறீங்க? தொடர்ந்து வாங்கிய அடிகள் மறந்து போச்சா? சரி விடுங்க. இன்னும் நிறைய தூரம் போக வேண்டி இருக்கு. இப்போவே டென்ஷன் ஆனா எப்படி? எனிவே அடிக்கடி வாங்க. உங்க கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@செங்கோவி

அவர் கேக்கலான்னாலும் எனக்கு புரிஞ்சுடுச்சு. ஹி ஹி லைட்டா.... இதையெல்லாம் வெளியில சொல்லலாமா?

பாலா said...

@ilavarasan
நன்றி நண்பரே

பாலா said...

@திண்டுக்கல் தனபாலன்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்

பாலா said...

@தமிழ்வாசி பிரகாஷ்

மிக்க நன்றி நண்பரே

Karthikeyan said...

வாங்க புதுமாப்ள.. ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் திரைக்கதைல ஒரு ட்விஸ்ட் குடுக்குறீங்க..

selvan said...

எனத்தான் உருண்டு புரண்டாலும் ,வரிசயா ஹிட் கொடுத்த எங்க தளபதி கிட்ட நாலு வருசத்துக்கு ஒரு ஹிட் கொடுக்கிற உங்க தல சும்மா டம்மி தான்

Unknown said...

ithuku nenga summave irukalam Mr.Bala

"ராஜா" said...

//,வரிசயா ஹிட் கொடுத்த எங்க தளபதி கிட்ட

அண்ணே அது என்ன படம்னு வரிசையாக சொன்னால் நான் தன்யனாவேன் ... உங்களுடன் சண்டை போட விருப்பம் இல்லை , இருந்தாலும் சொல்கிறேன் நீங்கள் காவலன் வேலாயுதம் நண்பன் எல்லாம் ஹிட் என்றால் நாங்கள் கிரீடம் , ஏகன் , அசலை மெஹா ஹிட் என்று சொல்வதில் தப்பே இல்லை , ஆகவே நாலு ஹிட் கொடுத்த தளபதி திருப்பதியில் சென்று பிச்சை எடுத்தாலும் எட்டு ஹிட் கொடுத்த தலைக்கு ம***ராக கூட வரமுடியாது ...

"ராஜா" said...

இந்த டொபிக் பத்தி பேசவே கூடாதுன்னு ஒதுங்கி போனாலும் காமெடி பீசுங்க பேச வச்சிருதுங்க ...

sajirathan said...

kalakkal pathvu... appidiye ingaiyum orukka visit pannunga

http://sajirathan.blogspot.com/2012/11/blog-post_7956.html?showComment=1353695973903#c5218141624416506917

Unknown said...

@"ராஜா"

kavalan, velayutham nanban, ellam hit illai jana, anjaneya, ji ivaikal than hit padangal.... (ethukku da intha maanangetta pozhappu?)

"ராஜா" said...

@Antony Raj

அந்தோணி ராஜ் அவர்களே நீங்கள் ஜி ஆஞ்சநேயா பற்றி பேசினால் நாங்கள் புதிய கீதை , வசீகரா , உதயா , ஆதி , சுறா போன்ற ஐம்பெரும் காப்பியங்களை பற்றி பேச வேண்டி வரும் .... பரவாயில்லையா .. அப்பறம் தங்களின் தரம் உங்களின் கருத்துரையில் இருந்தே தெளிவாக தெரிகிறது

"ராஜா" said...

மனமுதிர்வு இல்லாத சிறுவர்களே பெரும்பாலும் அந்த நடிகருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று எங்கையோ படித்த ஞாபகம் அது உண்மைதான் போலும் ... உங்களுடன் சண்டையிட்டு என்னை நானே சிறுவர்கள் லிஸ்டில் சேர்த்து கொள்ள விரும்பவில்லை .. விடு ஜூட் ...

அப்பறம் அந்தோனியன்னே நான் உங்களை சொள்ளலன்னே .. நீங்க நம்ம கடைப்பக்கம் எப்பவேணும்னாலும் வரலாம் ... உங்க பாசையில் சொல்லனும்னா i am weighting....

Doha Talkies said...

லேட் -ஆ வந்தாலும் லேட்டஸ்ட் -ஆ ஒரு கலக்கல் பதிவை போட்டு அசத்திடீங்க நண்பா

selvan said...


எல்லாரையும் காமெடி பீஸ் சொல்லிக்கிட்டு இருக்கிர , ராஜா ஒரு மெகா காமெடி பீஸ் போல. துப்பாக்கி ஹிட் ஆன பிறகு நெறைய காமெடி பீஸ் வெளிய வருது.

//நீங்கள் காவலன் வேலாயுதம் நண்பன் எல்லாம் ஹிட் என்றால் நாங்கள் கிரீடம் , ஏகன் , அசலை மெஹா ஹிட் என்று சொல்வதில் தப்பே இல்லை//

என்ன யா நீங்க இன்டர்நெட் movie review பாக்கருது இல்லையா . Rating பத்தி சொன்னா , இந்த வெப்சைட் விஜய்ய சப்போர்ட் பண்ணுறது அந்த வெப்சைட் விஜய்ய சப்போர்ட் பண்ணுறது. ஒரு பிட்ட போடுவிங்க. சரி behindwood ஒரு common வெப்சைட், அதுல பொய் பாரு. அப்ப தெரியும் எது ஹிட்டு எது ப்ளாப்னு. மகா மட்டமான 2 star உங்க பில்லா-2 வுக்கு கொத்துதிருகாங்க. சரி , மங்காத்தா படத்துல உங்க தல உங்களுக்கு கத்து கொடுத்தது என்ன? எப்ப பாத்தாலும் குடி, சிகரைட் , பொண்ணு (லக்ஷ்மிராய்). பில்லா-2 ஓர் மினி பிட்டு படம் மாதிரி 2 பீஸ்ல சுத்தராளுங்க.
ஏன் யா இப்ப சொல்லு குடும்பத்தோட பாக்குற படம் மங்காத்தாவா , நண்பனா ?

"ராஜா" said...
This comment has been removed by the author.
"ராஜா" said...

தெரியுமே நீங்க கடைசியா அங்க சுத்தி இங்க சுத்தி behindwoodசொன்னாக , sifyசொன்னாக moviecrow சொன்னாகன்னு வந்துடுவீங்களே , நீங்கள் சொன்ன அந்த வெப்சைட்டில் முடிந்தால் ஒரு கல் ஒரு கண்ணாடியின் சென்னை வசூல் எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று தேடி பாரும் , அதை பார்த்த பிறகும் அந்த வெப்சைட்டை நம்பினால் உம்மை ஏர்வாடிக்கு பார்சல் பண்ணுவதை பற்றி உங்கள் வீட்டில் யோசிக்க சொல்லும் .. ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி வரை சன்டீவி சொன்னாக , கே டிவி சொன்னாக , சன் மியூசிக் சொம்படிச்சானுகன்னு சொன்ன குரூப்தான நீங்க ...

பாஸ் உங்களுக்கு குடும்பத்தோட பாக்குற படம்னா என்னன்னு தெரியுமா? ஏதோ நாலு குடும்பம் தியேட்டருல உக்காந்து பாத்தா அது குடும்பத்தோட பாக்குற படமா? நண்பன் படத்தை பாக்கலாம்னு சொல்றதே தப்பு , இதுல குடும்பத்தோட பாக்குற படம்னு வேற காமெடி பண்றீங்களே பாஸ் ... இப்ப தெரியுதா நான் ஏன் உங்களை காமெடி பீசுன்னு சொன்னேன்னு ... அப்பறம் பாஸ் படத்துல ஹீரோ என்ன பன்றாரோ அதை அப்படியே பண்ற சின்ன பயபுள்ளைக நாங்க கிடையாது , அதெல்லாம் மன முதிர்வு இல்லாத சிறுவர்கள்தான் அப்படி பண்ணுவானுக , தல ரசிகர்கள் அப்படிப்பட்ட சின்ன பசங்க கிடையாது ,

ஹீரோயின் டவுசரை கழட்டி கழட்டி மாட்டுறது , ஹீரோயின் தொப்புளுக்கு குஜாலா எண்ணெய் தடவி விடுறது , ஹீராயினுக்கு கிணத்துல தண்ணி இறைப்பதை கத்து கொடுப்பது , ஹீரோயின் வாயில கையை விட்டு விசில் அடிக்க சொல்லித்தறது , ஹீரோயின் இடுப்பை இருக்கா இல்லையான்னு ஒரு பாட்டு முழுக்க ஆராய்ச்சி பண்றது ,இதெல்லாம் உங்க ஆளு நல்லா கத்து குடுப்பாரு கத்துகோங்க பாஸு ...

நான் சொன்னதெல்லாம் ஜஸ்ட் ரெண்டு வருசமா உங்க ஆளு என்ன பண்ணியிருக்காருன்னு மட்டும்தான் , அதுக்கு முனாடி போயி தூர்வாருணா நாறிடும் பாஸ் ...

"ராஜா" said...

அப்பறம் பாஸ் நீங்க சொன்ன பில்லா 2 A செர்டிபிகேட் படம் .. நான் போன கமெண்டில் சொல்லியதெல்லாம் U செர்டிபிகேட் படங்கள் ... இப்ப சொல்லுங்க பாஸ் படம் பாக்குற குடும்பங்கள் மேல உண்மையிலே அக்கறையா இருக்கிறது யாரு?

"ராஜா" said...

லிப் டு லிப் கிஸ் எப்படி கொடுப்பதுன்னும் உங்காளு நல்லா சொல்லிதருவாறு கத்துகிட்டு என்ஜாய் பண்ணுங்கோ பாஸு ...

selvan said...
This comment has been removed by the author.
selvan said...

அப்பனா எல்லா மீடியா , வெப்சைட் தவரான ரிப்போர்ட் கொடுக்கிறதா ? அப்ப அதே மீடியா , வெப்சைட் எல்லாம் மங்காத்தா படத்த ஹிட்னு சொல்லுச்சே அது பொய்யா ?? அப்ப அந்த வெப்சைட்ட நம்பினவங்க எல்லாம் ஏர்வாடில இருகாங்க போல.

//நண்பன் படத்தை பாக்கலாம்னு சொல்றதே தப்பு// >>> இது ஒன்னு போதும் பாஸ் , உங்கள பத்தி முழுசா தெரியுது. சிறுவர்களை பற்றி பேசியது உங்களுக்கு சரியாய் பொருந்துது. அதனால நான் இத்துடன் நிறுத்திகொள்கிறேன்.

Unknown said...

oruthan romba kastapattu padam edutha nama summa irunthukittu apadi panni irukalam ippadi panni irukalam nu solrathu tha namma litta irukura palakam so nama atha avoid pannitu avangala appreciate pannanum na wrong ah solli iruntha enna mannichirunga boss

பாலா said...

@deepan chakkaravarthi

ஒருத்தன் படத்தை ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தா அப்படி சொல்றது தப்புதான் பாஸ். நான் இங்கே அப்படி சொல்லவே இல்லையே? படம் நல்லா இருக்குன்னும் சொல்லல இல்லைனும் சொல்லல. இவை எல்லாம் கலாய்க்கவும், ஒரே ஒரு படம் ஓடிய உடனேயே உலக சூப்பர்ஸ்டாரை எல்லாம் ஓரம்கட்டிவிட்டார் என்று பேசுபவர்களை வெறுப்பேத்தவும்தான். இதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கிறீங்க? அடிக்கடி வாங்க பாஸ்.

Mathuran said...

@ராஜா

சாரே.. புகை லைட்டா வெளிய தெரியுது... கொஞ்சம் டச் அப் பண்ணிக்கோங்க.. இந்த கமெண்டை எழுதுறதுக்கு முன்னாடி ஒரு மேட்டர்.. நான் அஜித் Hater கிடையாது....

விஜய் ஹிட் படம் கொடுத்தா உங்களுக்கு என்ன பிரச்சினை சார்? ஒருவேளை விஜய் ஹிட் கொடுத்தா அவர் மார்க்கெட்டுக்கு ஈடுகட்டுறது அஜித்தால் கஷ்டம் என்று ஃபீல் பண்ண்னுறீங்களோ? அப்பிடி இல்லைன்னா நீங்க இந்தளவுக்கு முக்கிறதுக்கு அவசியமே இல்ல... காவலன் ஆவரேஜ். அது ஒகே. வேலாயுதம், நண்பன் ஹிட்தான்.. (சூப்பர் ஹிட் என்று சொல்லல்ல) இப்போ துப்பாக்கி Blockbuster. ஆனா தல சமீபகாலமா ஒரு Blockbuster (மங்காத்தா) பில்லா (ஹிட்) தவிர வேற ஒரு மயிரும் கொடுக்கல்ல... நீங்க சொல்லுற மாதிரி வேலாயுதம் , நன்பன் ஹிட் இலைன்னா அதே மாதிரி பில்லா கூட ஹிட் இல்லைனுதான் எடுக்கனும்... எப்பிடி வசதி ;)இதேவேளை அஜித்தின் Blockbuster மங்காத்தா விஜயின் துப்பாக்கி அளவுக்கு ஓடவில்லை என்பது உண்மை.

அஜித்தின் மார்க்கெட் நான் சொல்லித்தான் தெரியனும்னு இல்லை. அஜீத்தை வைத்து முருகதாஸ் எடுக்க இருந்த படத்தை AGS தயாரிக்க இருந்ததும் பிறகு அஜீத்தின் மார்க்கெட்டுக்கு பட்ஜெட் அதிகம்னு சொல்லி அஜித்தை கழட்டிவிட்டுட்டு விஜயை Sign பண்னதும் ஊருக்கே தெரிஞ்ச மேட்டர்.

மனப்பிறழ்வு விஜய் ரசிகர்களுக்கு இல்லை. உங்களுக்கு. உங்களுக்கு மட்டும்தான் சாரே

Mathuran said...

@ராஜா

behindwoods, MovieCrow எல்லாம் 100% சரியான ரிப்போர்ட் கொடுக்கிறவங்க இல்லத்தான்... ஆனா 70 கோடி வசூல்கூட தாண்டாத ஒரு படத்தை சன் பிக்ஸர்ஸ் பேரில போலி டுவிட்டர் கணக்கு ஆரம்பிச்சு 130 கோடி வசூல்னு பீத்திக்கிற அளவுக்கு மோசமானவங்க இல்லை :P

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

"ராஜா" said...

@மதுரன்

ஆகா வட போச்சே .. கொஞ்சம் லேட்டா இந்த பக்கம் வந்துட்டோமோ? ஒரு ரெண்டு நாள் இந்த பையனை வைத்து பொழுதை போக்கியிருக்கலாம்... பாஸ் அடுத்த வாட்டி எங்கையாவது வந்தா தனியா சத்தம் போடாதீங்க கொஞ்சம் சொல்லிட்டு அனுப்புனா ஏறங்கி ஆடலாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...