விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 28, 2012

இது கல்யாணமானவர்களுக்காக....

பிகு: சும்மா ஜாலிக்கு. யாரும் படிச்சுட்டு சாபம் விட்டுடாதீங்க. 

டாக்டர், "மேடம் உங்க கணவருக்கு மனஅழுத்தம் அதிகமாயிடுச்சு. நல்லா சமைச்சு போடுங்க, சண்டை போடாதீங்க, உங்க பிரச்சனைகளை சொல்லாதீங்க. டிவி சீரியல் பத்தி பேசாதீங்க, எப்பவும் சந்தோஷமா பாத்துக்குங்க."

வெளியே வந்த பிறகு கணவன், "டாக்டர் உன்கிட்ட என்னம்மா சொன்னாரு?"

மனைவி, "நீங்க பிழைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாரு...."

############################################################################

மாமியார்,"உனக்கு புள்ளைங்களை ஒழுங்கா வளர்க்க தெரியல."
மருமகள்,"வாயை மூடுங்க. உங்க வளர்ப்பு பத்திதான் எனக்கு கல்யாணத்தன்னிக்கே தெரிஞ்சு போச்சே"

############################################################################

காட்டுக்குள் டிரெக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு சிங்கம் எதிர்பாராமல் ஒரு பெண் மீது பாய, அவள் தன் கணவனிடம், "ஷூட் பண்ணுங்க, ஷூட் பண்ணுங்க" , 
கணவன், " இரும்மா கேமராவில் செல் போட்டுக்கிறேன்...." 

############################################################################

கணவனுக்கு தெரியாமல் தான் வாங்கிய புது சிம்கார்டை செல்போனில் போட்டு,  அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக, சமையல் அறைக்குள் இருந்தபடி போன் செய்து, "ஹலோ டார்லிங்.... "

கணவன் தாழ்ந்த குரலில், "அப்புறம் பேசுறேன் செல்லம். அந்த வெளங்காதவ, கிச்சன்லதான் இருக்கா..."

############################################################################

சாணக்கியன் சொல் 
கணவன் குடும்பத்துக்கு தலை மாதிரிதான். ஆனால் மனைவி என்பவள் கழுத்து மாதிரி. கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது


மனைவி, "அட்லீஸ்ட் அந்த நியூஸ்பேப்பரா போறந்தாவாவது , டெய்லி ஆசையா என்னை மடியில வச்சிருந்திருப்பீங்க...."
கணவன்,"டெய்லி ஒரே பேப்பரை நான் படிக்கல, ஞாபகம் வச்சுக்கோ"

############################################################################

மனைவி, "கணவன் மனைவி இருவரும் ஒரு வண்டியின் டயர் மாதிரி. ஒண்ணு பஞ்சர் ஆனாலும் வண்டி நகராது. இதுலேருந்து என்ன தெரியுது?"
கணவன்," ஸ்டெப்னி ரொம்ப முக்கியம்னு தெரியுது."

############################################################################

நண்பேன்டா 

மனைவியை விட நண்பனே சிறந்தவன். ஏனென்றால்,
நண்பனிடம், "எனக்கு கிடைச்ச ஃப்ரெண்ட்டுலேயே நீதான் மச்சான் பெஸ்ட்" அப்படின்னு சொல்லலாம். ஆனா மனைவியிடம் அதே மாதிரி சொல்ல முடியுமா?

############################################################################

மனைவி, "பெண்களுக்கு ஆண்களை விட ஆயுட்காலம் அதிகம். ஏன்னு தெரியுமா?"
கணவன்,"தெரியுமே. அவங்களுக்குத்தான் பொண்டாட்டி கிடையாதே..? 

############################################################################


ஒருவன்,"ஏண்டா மச்சான் கவலையா இருக்க?",
இன்னொருவன்,"நான் அப்பா ஆகப்போறேண்டா."
ஒருவன்,"அதுக்கு ஏண்டா இவ்ளோ சோகமா இருக்க?"
இன்னொருவன்,"இதை என் மனைவிக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலயே?"

############################################################################

பெண்கள் கடுப்பாகக்கூடாது இல்லையா அதுக்காக 

 கணவன், "அய்யோ உன்னை கடவுள் அழகாவும், ஆனா சுத்த முட்டாளாவும் ஏன் படைச்சான்னு தெரியல"
மனைவி", வேறெதுக்கு, பொண்ணு பாக்க வரும்போது என்னை உங்களுக்கு பிடிக்கணும், உங்கள எனக்கும் பிடிக்கணுமே அதுக்குத்தான்."

############################################################################


கல்லூரி மாணவிகள் பேசிக்கொள்கிறார்கள் , "ஏண்டி, கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லைனாலும், எல்லா பசங்களும் நம்ம பின்னாடியே சுத்துறாங்க?"
"கார் ஓட்ட தெரியலான்னாலும், அத துரத்திக்கிட்டு நாய் ஒடுறதில்லையா? அதுமாதிரிதான்."

ஜோக்குகளை பகிர்ந்து கொண்ட நண்பனுக்கு நன்றி 

கோபப்படாம உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
ஓட்டுக்களையும் பதிவு பண்ணுங்க.... 
முழுவதும் படிக்க >>

April 27, 2012

வெட்டி அரட்டை... எப்படி இருந்த நான்...?.

இன்னிக்கு முழுக்க சினிமா குறித்த அரட்டைதான். அரட்டைக்குள்ளே போகும் முன்பு ஒரு சின்ன கேள்வி. கீழே படத்தில் இருக்கும் நபரை உங்களுக்கு தெரியுமா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இவரை பற்றி இந்த பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். மேற்கொண்டு பதிவை படித்து முடிக்கும்போது உங்களுக்கு தெரிந்து விடும்.மிரள வைக்கும் பில்லா - 2


ரஜினிக்கு அடுத்த படியாக முந்தைய படம் தோல்வி அடைந்தால் கூட அது தனது அடுத்த படத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பது அஜித்துக்குதான். ஒவ்வொரு முறையும் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, முந்தைய படமான மங்காத்தா சூப்பர் ஹிட் ஆக, அஜித்தின் அடுத்த படமான பில்லா-2விற்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. , பில்லா-2 டீசர் வெளிவந்த ஒரே நாளில் சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் பார்வையாளர்களை பெற்றிருப்பதே இதற்கு சாட்சி. விஷ்ணுவர்தனுக்கு பதிலாக சக்ரிடொலேடி படத்தை இயக்குகிறார் என்று கேள்விப்பட்டவுடன் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தாலும், இப்போது டீசர் மிரட்டலாக வந்திருப்பதால் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அஜீத் பேசும் அந்த டயலாக்கிற்கு சரியான வரவேற்பு இருக்கும் என்பது என் கருத்து. இது போக ஒரு பாடல் வேறு லீக் ஆகி இருக்கிறது. கிட்டத்தட்ட பில்லா தீம் மியூசிக் போலவே இருக்கிறது. வழக்கம்போல கோட் சூட், கூலிங் கிளாஸ் என்று (வேறு வழியில்லாமல்) மொக்கையாக கலாய்க்கப்பட்டாலும், இப்படம் ரசிகர்களிடைய மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு கல் ஒரு கண்ணாடி

"இவன் ஒரு சரியான லேட் பிக்கப்." என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.  சத்தியமாக இது விமர்சனம் அல்ல. இங்கே பதிவுலகில் எழுதப்படும் பெரும்பாலானவை விமர்சனங்கள் அல்ல என்பது என் கருத்து. அவை அனைத்துமே ஸ்பாய்லர்கள். அதாவது படத்தை பற்றிய தன் சொந்த கருத்துக்கள். இதை வைத்து படத்தை எடைபோடக்கூடாது. ஆனால் இவற்றை படிப்பதனால் படத்தின் மீதான நமது அபிப்ராயம் மாறக்கூடும். எனவேதான் பதிவுலகில் எழுதப்படும் பட விமர்சனங்களை நான் படம் பார்த்த பிறகே படிக்கிறேன்.


சரி விஷயத்துக்கு வருவோம். இந்த கோடை விடுமுறைக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கிறது இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. இயக்குனரின் முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகியவற்றை ஒப்பிடும்போது இது கொஞ்சம் சுவை குறைவுதான் என்றாலும் மோசமில்லை என்றே கூறவேண்டும்.உதயநிதி அவர்கள் நடனம் ஆடும்போது, பாக்யராஜ் நினைவுக்கு வந்து தொலைக்கிறார். சந்தானம் என்ற ஒரே பேட்ஸ்மேனை வைத்து களத்தில் இறங்கினாலும் ஆட்டத்தில் ஜெயித்து விட்டார் ராஜேஷ். எங்கள் ஊரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. இதில் உதயநிதி அவர்கள், "படத்துக்கு வரிவிலக்கு தரமாட்டேன்கிறார்கள்." என்று வேறு புகார் வைத்திருக்கிறார். என்னைக்கேட்டால் எந்த படத்துக்குமே வரிவிலக்கு அளிக்க தேவை இல்லை என்றே சொல்லுவேன். அல்லது, படத்தின் பட்ஜெட் குறிப்பிட்ட அளவே இருக்கவேண்டும், டிக்கெட் விலை குறிப்பிட்ட அளவே இருக்கவேண்டும், என்று நிறைய கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடித்து, இதில் தேரும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம்.

அதிக விலைகொடுத்து வாங்கிய நண்பன்


விஜய் ரசிகர்கள் இந்த பத்தியை தவிர்த்து விடுங்கள்
மே 1ஆம் தேதி நண்பன் படத்தை விஜய் டிவியில் ஒளிபரப்புகிறார்கள். இதை கேள்விபட்டவுடன், விஜய் ரசிகர்கள் மற்றவர்களால் வழக்கம்போல கலாய்க்கப்பட, அவர்களும், "நண்பன்தான் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட படம், அது... இது.... ", என்று சொல்லி சமாளித்து வருகிறார்கள். ஒரு அஜீத் ரசிகனாக இந்த சமாதானத்தை எல்லாம் என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்க அப்படித்தான் கலாய்ப்போம். ஏனென்றால் இதற்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கு. சில வருடங்களுக்கு முன்,  அசல் வெளிவந்த சமயம் அஜித்தை கலாய்க்கும் நோக்கில் விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய பதிவில், "இன்னும் ஒரே வாரத்தில் அசல் படத்தை டிவியில் ஒளிபரப்புவார்கள்." , என்று செமையாக கலாய்த்திருந்தார். ஆனால் அவர் எந்த நேரத்தில் அதை சொன்னாரோ, அதில் இருந்து வரிசையாக குறிப்பிட்ட இடைவெளியில் அதன் பின் விஜய் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களையுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விட்டார்கள்.  இப்போது கடைசியாக நண்பன்.  அதனால இப்படித்தான் கலாய்ப்போம்.  டாக்டருக்கு ஒரு வேண்டுகோள், "சீக்கிரம் துப்பாக்கியை ரிலீஸ் பண்ணுங்க. அடுத்து டிவியில ஒளிபரப்புவதற்கு உங்க படம் எதுவும் இல்லையாம்."

ஹிந்திக்கு போகும் தனுஷ்
நம்ம கொலவெறி புகழ் தனுஷ் பாலிவுட் படங்களில் நடிக்க போகிறார் என்று ஒரு செய்தி படித்தேன். சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலும், இவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ள தமிழ் மக்களுக்கே வெகு காலம் பிடித்தது. அப்படி இருக்க, பாலிவுட்டில் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இன்னொரு பாடல் ஹிட் ஆனால் அடுத்து ஹாலிவுட்டில் நடிக்க போய்விடுவார் போலிருக்கிறது. "ஒரே பாட்டில் எப்படி பெரிய ஆள் ஆக முடியும்?", என்று இனிமேல் யாரும் தமிழ் படங்களை கிண்டல் செய்ய வேண்டாம்.

நான் ஈ

பொதுவாக நான் பிறமொழி படங்களை அவ்வளவாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஈகா (தமிழில் நான் ஈ) படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். இவரது படங்கள் எல்லாமே நம்ப முடியாத விஷயங்கள் நடப்பது போல இருக்கும். இவரது படங்களுள் நான் முதன்முதலில் பார்த்தது எமதொங்கா. ஜூனியர் என்‌டி‌ஆர் நடித்த இப்படம், கிட்டத்தட்ட தமிழில் வெளிவந்த அதிசயபிறவி போல இருந்தாலும், படம் சூப்பர் ஹிட். அடுத்தடுத்து விக்கிரமர்குடு(சிறுத்தை), மகாதீரா(மாவீரன்) என்று டோலிவூட்டை வசூல் மழையில் நனைய வைத்த இந்த இயக்குனரின் அடுத்த படம்தான் ஈகா. டிரெய்லர் பார்த்தவுடனே என் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து விட்டது. டிரெய்லரை வைத்து பார்த்தால், நாயகிக்காக வில்லனால் கொல்லப்பட்ட நாயகன், அடுத்த பிறவியில் ஈயாக பிறப்பெடுத்து வில்லனை பழிவாங்குவது போல தெரிகிறது. கண்டிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் படமாக அமையும் என்றாலும், இளசுகளையும் கவரும் என்பதில் ஐயமில்லை. நாயகி சமந்தா அல்லவா?

இது என்னங்க?

"மது தர்ற மயக்கத்த விட, பெரிய மயக்கம் ஒண்ணு இருக்கு. நான் பாத்ரூமுக்குள்ள போனவுடனே கரப்பாம்பூச்சின்னு கத்துவேன். உடனே அவன் உள்ள வருவான். நான் அவன் மேல வழுக்கி விழுவேன். என்னை கட்டி புடிச்சதும் அவனுக்கு ஒரு போதை வரும். அப்படியே ரெண்டு பெரும் ஒண்ணா சேருவோம். நான் என்னை அவனுக்கு விருந்தாக்கி, என் திட்டத்தை......"

இது இந்த வாரம் திருமதி செல்வம் என்ற மெகா சீரியலில் இடம்பெற்ற வசனம். இதற்கு முந்தைய காட்சியில், மௌனகீதங்கள் படத்தில் வரும் பாத்ரூம் காட்சியை, இந்த வசனத்தை பேசியவர் டிவியில் பார்ப்பது போலவும் ஒரு காட்சி இருந்தது. இந்த ஒரு காட்சி மட்டுமல்ல. இது போல அடுத்தடுத்து நிறைய கருத்துள்ள வசனங்கள் வந்து கொண்டிருந்தன. இதுக்கு மின்வெட்டு எவ்வளவோ பரவாயில்லீங்க. குழந்தைகள் பத்திரம்....

சரி முதலில் ஒரு படத்தை காட்டி அந்த நபரை தெரிகிறதா என்று கேட்டிருந்தேன் அல்லவா? தெரிந்தவர்களுக்கு சபாஷ். தெரியாதவர்களுக்கு, இவர்தாங்க அவர். முக நூலில் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. இப்போ புரியுதா இந்த பதிவோட தலைப்பின் அர்த்தம்?உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
அப்படியே ஓட்டுகளையும் போடுங்க.... 

முழுவதும் படிக்க >>

April 26, 2012

வெட்டி அரட்டை - ஒரு அறிவிப்பும், சில அரசியலும்....

அப்பப்போ பதிவுலகத்துக்கு ஆப்சென்ட் ஆகிவிட்டு பிறகு வந்து சமாளிப்பதே வாடிக்கையாகி போய்விட்டது. இந்த முறை எழுத நினைத்த விஷயங்களுக்கு சரியான பிரிபரேசன் இல்லாததால் வெட்டி அரட்டை அடித்து சமாளிக்கிறேன்.

இது புதுசு....

ரொம்ப நாள் ஒரே டிசைனில் இந்த வலைத்தளம் இயங்கி வந்ததால், இதன் அமைப்பை கொஞ்சம் மாற்றலாம் என்று முடிவு கட்டி கடந்த சில நாட்களாக மல்லுக்கட்டி வருகிறேன். இன்னும் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து வருவதால் கொஞ்சம் அசவுகரியமாக இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள். அதே போல ஓட்டுப்பட்டைகளும் திடீரென்று காணாமல் போகும். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். இதில் எதேனும் கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள். என்னால் முடியும் பட்சத்தில் மாற்ற முயற்சிக்கிறேன்.

அறிவிப்பு....

தொடர் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஆகவே மறுபடியும் ஒரு தொடர் எழுதலாம் என்று முயற்சி எடுத்து வருகிறேன். கிரிக்கெட் வரலாறு என்பது எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமான ஒன்று என்பதால் அதை சுலபமாக எழுதி விட்டேன். ஆனால் அடுத்து நான் எழுத உத்தேசித்திருக்கும் தொடரை பற்றி நிறைய தகவல்கள் திரட்ட வேண்டி இருக்கிறது. எனக்கு அவ்வளவாக தெரிந்திராத தகவல்கள். ஆகவே கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடிக்கொண்டிருக்கிறேன். எப்போது எழுத தொடங்கப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயம். இது வரை வெறும் சைவம் மட்டுமே எழுதி வந்த நான் இந்த தொடரில் கொஞ்சம் அசைவமான விஷயத்தை பற்றி எழுத நினைதிருக்கிறேன். கவலைப்படவேண்டாம். எல்லோரும் படிக்கும் வகையிலேயே இருக்கும்.

பகிர்வுகள்.....

எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மின் வெட்டு பழக்கமாகிக்கொண்டே வருகிறது.  ஆனாலும் நடு இரவில் கரண்டை கட் பண்ணுவதுதான் தாங்க முடியவில்லை. எங்கள் ஊர் சும்மாவே நெருப்பில் இருப்பது போலத்தான் இருக்கும். இப்போது இரவில் கரண்ட் வேறு கட் ஆகி விடுவதால், தூங்குவது கூட தவணை முறையில்தான் செய்ய வேண்டி இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம். மின் வெட்டு என்பதே மின் பற்றாக்குறையால் ஏற்படுவதுதானே? அப்படியானால் நிறைய வீடுகளில் இன்வெர்டர்கள் வைத்து மின்சாரம் இருக்கும்போது அதை சேமித்து வைத்துக்கொண்டு, இல்லாத போது பயன்படுத்திக்கொள்கிறார்களே? இதுவும் ஒரு வகை பதுக்கல்தானே? இதன் மூலம் மின் பற்றாக்குறை அதிகரிக்கத்தானே செய்யும்? பணம் இருப்பவர்கள் இன்வெர்டர்களை வைத்து மின்சாரத்தை உறிஞ்சினால், பணம் இல்லாதவர்களுக்கு மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்குமே? இது ஒரு வகை சமுதாய மோசடி அல்லவா? அய்யோயோ வர வர நம்ம சிந்தனை எல்லாம் ஏன் இப்படி ரூட் மாறுகிறது என்றே தெரியவில்லை.

சிறு வயதில் எல்லாம் நன்மைக்கே என்று ஒரு கதை படித்திருப்போம். அதாவது அந்த கதையின் சாராம்சம் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று. அந்த வகையில் இந்த மின்வெட்டையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளலாம். மின்வெட்டின் மூலம் சில நன்மைகள் நடந்துள்ளன. மின்கட்டணம் உயர்ந்தாலும், கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருப்பதால், மின்கட்டணம் கட்ட வேண்டிய தொல்லை பாதியாக குறைந்து விட்டது. முன்பெல்லாம் இருளில் தட்டுத்தடுமாறும் மக்கள் இப்போது இருளில் கூட தெளிவாக நடக்கிறார்கள். ஆகவே மக்களின் பார்வைதிறன் வெகுவாக அதிகரித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் வெறும் தொலைக்காட்சிகளிலேயே அடைந்து கிடக்காமல், குடும்பத்தையே வெளியே அழைத்து செல்ல கணவன்மார்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. குழந்தைகள் தேவை இல்லாத விஷயங்களை தொலைக்காட்சியில் பார்த்து கெட்டுப்போகும் வாய்ப்பு குறைந்திருக்கிறது. கிரைண்டர், மிக்சி தேவை இருப்பதால் பெண்களிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைகளை முடித்து விடவேண்டும் என்கிற சுறுசுறுப்பு வந்திருக்கிறது. ஆரோக்கியமற்ற பிரிட்ஜ் குடிநீரை விடுத்து, ஆரோக்கியமான மண்பானை குடிநீரை பருக தொடங்கி இருக்கிறார்கள். மிக முக்கியமாக மாலை நேரங்களில் எல்லோரும் வீட்டு வாசலில் அமர்ந்து, அக்கம்பக்கத்தாருடன் பேசி உறவாடுகிறார்கள். பட்டியலிட்டால் இன்னும் நீண்டு கொண்டே போகும் இந்த மின்வெட்டின் நன்மைகள்.

 சஸ்பெண்ட் ஆனதாலோ என்னவோ, கேப்டன் கொஞ்சம் வேலை பார்க்க தொடங்கி இருக்கிறார் போலிருக்கிறது. முன்பெல்லாம் அம்மாவிடம் மேம்போக்காக புகார்களை சொல்லி பல்பு வாங்கி வந்த எதிர்கட்சி எம்‌எல்‌ஏக்கள், இப்போது குறிப்பிட்ட பிரச்சனையை ஆதாரத்துடன் அளிக்க தொடங்கி இருக்கிறார்கள். கேப்டனின் பேச்சை அவரது தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்புகிறார்கள். "மக்களே மக்களே..." என்று பேசும் அவரது குரலை கேட்கும்போதே நமக்கு கிக்கு ஏறுகிறது. இப்போதெல்லாம் நகைச்சுவை சேனல்களை விட, கேப்டன்டிவி மற்றும் மக்கள் டிவியையே அதிகம் பார்க்கிறேன். நான் சொல்வதை நம்ப முடியவில்லை என்றால், மாலை நேரத்தில் இந்த சேனல்களை பாருங்கள். உங்களுக்கே புரியும்.

மருத்துவர் அவர்கள் ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால், டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். அதை உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடத்துவோம் என்று பின்னர் அறிவித்தார். உள்ளாட்சி தேர்தல் முடிந்து மாதங்கள் கடந்து விட்டன. இதுவரை எத்தனை கடைகளுக்கு பூட்டு போட்டிருக்கிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். ஒருவேளை அடுத்தடுத்த தேர்தல்களில் பல்பு வாங்கி வருவதால் மக்கள் மீது காண்டாகி, "நீங்கள் எல்லாம் குடித்தே சாவுங்கடா", என்று நினைத்து விட்டாரோ? தங்கள் கட்சி இப்படி படுதோல்வி அடைவதற்கு என்ன காரணம் என்று ஆராய்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. சில பல மாதங்களுக்கு முன் மருத்துவர் அவர்கள் பேட்டிகளில் என்ன பேசி இருக்கிறார் என்று திரும்ப ஒருமுறை போட்டு பார்த்தாலே தெரிந்து விடும்.

மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்க அதை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, இந்த தமிழ் புத்தாண்டு பிரச்சனையை பேசிக்கொண்டிருப்பது மிகுந்த எரிச்சலை அளிக்கிறது. மக்கள் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. "இருக்கிற கடுப்புல இது வேறயா?", என்றே நினைக்கிறார்கள். கலைஞர் வழக்கம்போல தன்னுடைய தமிழீழ கோரிக்கையை கையில் எடுத்துள்ளார். இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தமிழர்கள் மேல் பாசம் வரும் போலிருக்கிறது. இன்னும் நான்காண்டுகள் இதே பாசம் இருக்கும். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் கொஞ்ச நாளைக்கு காணாமல் போய் விடும். அவரும் என்ன செய்வார் பாவம், அவரது கட்சிக்குள்ளேயே ஐ‌பி‌எல் போல அணிகள் பிரிந்து கிடக்கிறதே?

என்னதான் மாவோயிஸ்டுகள் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சிலர் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்கள் மக்களை துன்புறுத்துவதில்லை, ஆகவேதான் மக்கள் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது என்று பேசி வந்தார்கள். ஆனால் மாவோயிஸ்டுகளின் தற்போதைய நடவடிக்கை இவர்களை வாயடைத்து போக வைத்திருக்கிறது. குறிப்பாக இணையத்தில் புரட்சி செய்து வரும் சில தீவிரவாத குழுக்கள், இந்தியா அக்னி 5 ஏவுகணை சோதனை செய்ததை கலாய்த்து கட்டுரைகளை தயார் செய்து வந்த நேரத்தில், மாவோயிஸ்டுகள் கலெக்டரை கடத்தி சென்றது, கைகளை பிசைய செய்திருக்கிறது. "இதை சொல்லித்தானே இத்தனை நாள் வியாபாரம் செய்து வந்தோம்?, இனி மக்கள் நம்மை நம்ப மாட்டார்களே? என்ன செய்வது?", என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மறைக்கும் விதமாக ஏதாவது உட்டாலக்கடி கட்டுரைகள் இந்நேரம் தயாராகி கொண்டிருக்கும். கூடிய சீக்கிரத்தில் வெளிவரும். அவர்கள் மாவோயிஸ்டுகள் அல்ல, போலி மாவோயிஸ்டுகள், ஆர்‌எஸ்‌எஸ் காரர்கள் என்று எதையாவ்து எழுதுவார்கள். என்னை பொறுத்தவரை இந்த கடத்தல் சம்வம்,  மாவோயிஸ்டுகளின் ஹீரோ இமேஜை மக்கள் மத்தியில் சரித்து விட்டது. அவர்களது உண்மையான நோக்கம் புலப்பட தொடங்கி இருக்கிறது.

எஸ் அண்ட் பி அளித்துள்ள அறிக்கையில், "இந்தியா பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கிறது. இதனால் தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். குறிப்பாக உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல நமது நிதி அமைச்சர், "யாரும் கவலைப்படவேண்டாம், பொருளாதார சீர்திருத்த மசோதாக்களால் இந்த நிலைமை சரிசெய்யப்படும்.", என்று கூறியுள்ளார். இவர் சொல்வதை கேட்கும்போது கார்த்திக் மற்றும் கவுண்டமணி ஒரு படத்தில் உரையாடுவதை போல இருக்கிறது, கார்த்திக், "கவலப்படாதீங்க மாம்ஸ் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்", என்பார். அதற்கு கவுண்டமணி "அது எல்லாத்தையும் நீ பார்த்துக்கிட்டுதானே இருக்கிற. ஒண்ணும் பண்ண மாட்டேங்கிறியே?" என்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

இவனை என்ன பண்ணலாம்?

உத்திரபிரதேசத்தில், உள்ள ஒரு கிராமத்தில், தனியாக இருந்த 12 வயது சிறுமியை கற்பழித்ததோடு நில்லாமல், அவள் கத்துவதை தடுக்க, மண்ணெண்ணை ஊற்றி எரித்திருக்கிறான் ஒருவன். முழுவதும் எரிந்த நிலையில் அந்த சிறுமி உயிருக்கு போராடி வருகிறாள். இன்னும் அவன் கைது செய்யப்படவில்லையாம்.

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....
ஓட்டுகளையும் போடுங்க..... 


முழுவதும் படிக்க >>

April 16, 2012

புரட்சிப்பதிவர் ஆவது எப்படி?


மு.கு: மிக நீளமான இந்த பதிவு தன் மனசாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளும் போலியானவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. தனி மனித தாக்குதலுக்காக எழுதப்பட்டதல்ல. அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தின மற்றும் சன்டிவியின் பத்தொன்பதாவது ஆண்டுவிழா வாழ்த்துக்கள். பதிவுலகத்தால் கவரப்பட்டு, தானும் இந்த சமுதாயத்துக்கு ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தி விடவேண்டும் என்ற உத்வேகத்துடன், எழுதவந்து, கொஞ்ச காலத்திலேயே மொக்கை பதிவர் ஆகிவிடுகிறோம். அப்படி ஆகிவந்த ஒரு அரை மொக்கை பதிவர், பாதியில் அலார்ட் ஆகி, பதிவுலகில் புரட்சிகரமான பதிவுகள் எழுதும் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார். 

"அண்ணே வணக்கம் ". 

"பிச்சுபுடுவேன் பிச்சு, தோழர் அப்படின்னு கூப்பிடு...". 

"ஏன் அப்படி சொல்றீங்க?" 

"இல்ல இப்படி கூப்பிடுறது ஒரு கோட் வேர்ட். கும்பல்ல கலவரம் ஆகும்போது, சில நேரம் நம்மாள்களே நம்மை தாக்க நேரிடும். அப்போ இதை சொன்னா தப்பிச்சுக்கலாம். சரி வந்த விஷயத்தை சொல்லு?"

"அதில்லை அண்ண்.... சாரி தோழரே. இந்த சமுதாயத்துக்கு நான் ஏதாவது செய்யனும். ஒண்ணும் செய்ய முடியாலான்னாலும் அட்லீஸ்ட் ஒரு புரட்சிகர பதிவர் அப்படின்னு பேராவது எடுக்கணும். அதுதான் என்னோட ஆசை. "

"சமுதாயத்துக்கு நல்லது செய்யுறத பத்தி எனக்கு தெரியாது. ஆனா புரட்சிபதிவர் ஆகிறது எப்படின்னு சில ஐடியாக்கள் தரேன் ஓகேவா?"

"சரி சொல்லுங்க நோட் பண்ணிக்கிறேன்"

"உன்னோட வலைப்பக்க லே-அவுட்டை மொதல்ல மாத்து. மொக்கையா ஏதோ க்ரீட்டிங் கார்டு மாதிரி இருக்கு. பாத்த உடனே உணர்ச்சி கொப்பளிக்க வேணாமா?"

"அப்போ நமீதா இல்லைனா ஹன்ஸிகா படம் போடவா?"

"டேய் அப்புறம் உன் பேரு கில்மா பதிவர்னு மாறிடும். ரத்த கலர்ல, திட்டு திட்டா தெரியுர மாதிரி கலரிங் பண்ணு. ஆங்காங்கே கை கால் தலை சிதறி கிடக்குற மாதிரி படம் போடு.."

"அய்யோ தோழா பயமா இருக்கே? இப்படிலாம் போட்டா யார் என் தளத்துக்கு வருவா?"

"நிச்சயமா எவனும் வரமாட்டான். காலங்காத்தால இப்படி ஒரு தளத்தை பார்த்தா விளங்கிடும். ஆனா எல்லோரையும் வரவழைக்கிறதுக்கு வேற வழி இருக்கு. நான் சொல்றத மட்டும் கேளு. குறுக்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. புரட்சியாளர் ஆக மொதல் தகுதி, சீனியர் புரட்சியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்காம இருப்பதுதான். புரியுதா?"

(பீதியுடன்) "சரி நீங்க சொல்றமாதிரியே பண்றேன்""திங்கள்கிழமை ஹிந்து, செவ்வாய் கிழமை ஒரு சாதி, புதன் கிழமை ஏதாவது ஒரு பெரிய மனிதன். வியாழக்கிழமை முஸ்லிம், வெள்ளி கிழமை மறுபடியும் ஒரு சாதி, சனிக்கிழமை அமெரிக்கா, ஞாயிற்றுகிழமை சீனா."

"புரியலையே... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. "

"திங்கட்கிழமை இந்துக்களை கேவலமாக திட்டி ஒரு பதிவெழுது. அப்புறம் செவ்வாய் கிழமை ஏதாவது ஒரு சாதி, பிராமணர் இல்லை தேவர் ஏதாவது ஒன்றை போட்டு தாக்கு. புதன் கிழமை சச்சின், சூர்யா, ஸ்டீவ்ஜாப்ஸ், பில்கேட்ஸ், பவர்ஸ்டார் என்று ஏதாவது ஒரு பெரிய மனிதரை பற்றி தரக்குறைவாக ஒரு கட்டுரை எழுது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் தோழராக மட்டும் இருந்து விடக்கூடாது. அப்புறம் மன்னிப்பு கேட்கவேண்டி வரும். மன்னிப்பு கேட்பது என்பது நாம் தோழர் சமுதாயத்திலேயே இல்லாத ஒன்று.  திங்கட்கிழமை நம் கட்டுரையை படித்து கடுப்பாகி இருக்கும் இந்துக்களை மகிழ்விக்க இப்போது முஸ்லீம்களை கேவலப்படுத்தி ஒரு கட்டுரை. வெள்ளிக்கிழமை மறுபடியும் சாதி வெறி உண்டாக்கும் வகையில் ஒரு கட்டுரை. சனிக்கிழமை அமெரிக்காவை திட்டி ஒரு கட்டுரை. ஞாயிற்றுகிழமை சீனாவுக்கு சொம்படித்து ஒரு கட்டுரை."

"இந்த ஆர்டரில்தான் எழுதணுமா? இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?"

"திங்கள் மற்றும் வெள்ளி, கம்பெனியில் எவனும் வேலை பார்க்க மாட்டான். ஆகவே அப்போதுதான் சும்மா கொழுந்து விட்டு எரியுர மாதிரி கட்டுரை எழுதணும். அதுக்குத்தான் ஹிந்து மற்றும் சாதி வெறி. மற்றபடி மற்ற கட்டுரைகளை எப்போதுவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம், ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டுரைகளுக்கு குறைந்தது மூன்றுநாள் இடைவெளி வேண்டும்." 

"இந்துக்களை திட்டி விட்டு உடனே முஸ்லீம்களை திட்டினால் நாம் மீது அவநம்பிக்கை வந்துவிடாதா?"

"உனக்கு போதிய அனுபவம் கிடையாது. நம்ம ஊரில் சாதி என்று வந்துட்டா பரம்பரை எதிரி கூட நண்பன் ஆகிடுவான். இன்னிக்கு இந்துவை திட்டி நான் கட்டுரை எழுதுன உடனே எல்லா இந்துக்களும் என்னை எதிரியா நினைப்பான். நாளைக்கே முஸ்லிமை திட்டி நான் எழுதுனா இவன் எல்லாம் எனக்கு நண்பன் ஆகி அவன் எல்லாம் எதிரி ஆகிடுவான்."

"தலைவா நீங்க எங்கயோ போய்ட்டீங்க.... உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும். ஆமா கிறித்துவர்களை விட்டுட்டீங்களே? அவங்க நம்ம ஆளா?"

"அட நீ வேற. இந்து முஸ்லிம் கட்டுரை எழுது. கமெண்ட் பகுதியில் கிறித்துவர்களையும் போட்டு குதறி விடலாம்."

"அப்புறம் ஒரு முக்கிய விஷயம். சீசனுக்கு ஏத்த மாதிரி சில புதிய கட்டுரைகளை எழுதணும். அதுல ரொம்ப முக்கியம் எப்படியாவது, சாதியை கலக்க மறக்க கூடாது. நாட்டுல டெய்லி ஆயிரக்கணக்குல தப்பு நடக்குது. எல்லா சாதிக்காரனும்தான் தப்பு பண்றான். ஆனால் குறிப்பிட்ட ஒரு தப்பை மட்டும் சுட்டிக்காட்டி, அவன் சாதியை தொண்டி துருவி, நாறடிக்கணும்." "சரி நாறடிக்கிறதுன்னா என்ன?"

"நாலு கெட்ட வார்த்தை. குறிப்பா தே... ம... கண்டிப்பா இருக்கணும். அது போல, மூத்திரம், மலம் என்று கலந்து விடணும். எந்த சாதியை , மதத்தை, மனிதரை திட்டுகிறாயோ அவரது உருவத்தை கேலி செய்தோ அல்லது அவரது வீட்டு பெண்களை ஆபாசமாக வர்ணித்தோ அல்லது ஒழுக்கத்தை குறிவைத்தோ எழுத வேண்டும்." 

"அய்யோ குமட்டுதே....  சரி ஒருவரின் உருவத்தை கிண்டல் பண்றது தப்பில்லை?"

"யார் சொன்னது? சொல்வது தோழராக இருந்தால் தப்பில்லை." 

"பெண்களை ஆபாசமாக வர்ணிப்பது அல்லது அவர்களின் கற்பை கேலிக்குள்ளாக்குவது?"

"பெண்ணியம் பேசும் கட்டுரைகளில் மட்டும் பெண்களை உயர்த்தி பேசினால் போச்சு. நமக்கு வேண்டிய 'தோழி'களை மட்டும் மதித்தால் போதும்."

"நமக்கு வேண்டியவர்களே ஒழுக்க கேடாக நடந்தால் என்ன செய்வது?"

"கண்டுக்க கூடாது, யாராவது கேள்வி கேட்டா வந்துட்டாண்டா கலாச்சார காவலன் என்று அவனை கலாய்த்து விடவேண்டும். ஆனால் அதே சமயம் அடுத்த பெண்கள் கற்போடுதான் இருக்கிறார்களா? என்று ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். கடவுளாக இருந்தாலும் விடக்கூடாது. பெண்களை திட்டுவது ஆணாதிக்கம் என்று சொல்லிக்கொண்டே அடுத்தவனின் குடும்பப்பெண்களை திட்டவேண்டும். "

 "எனக்கு அவ்வளவா கெட்ட வார்த்தை தெரியாதே?"

"கவலைப்படாதே. நம்ம தளத்தின் முந்தைய பதிவுகளை படித்து தெரிஞ்சுக்கோ."

"ரொம்ப நன்றி தோழா... சரி இப்படி எழுதினால் யாராவது சண்டைக்கு வரமாட்டார்களா?"

"என்ன அப்படி கேட்டுட்ட?, கண்டிப்பா வருவாங்க. அதுக்கு பதிலா நீ நாலு ஐடி கிரியேட் பண்ணி கமெண்ட் போடணும். என்கிட்ட இதுமாதிரி நிறைய பேர் இருக்காங்க. என்கிட்ட சொன்னா உனக்கு உதவி பண்ணுவேன். கமெண்ட் போட்டவன் என்ன சொன்னாலும், அவனது ஜாதி, மதத்தை குறிவைத்தே பேசணும். வந்தவன் துண்டகாணோம் துணியகாணோம் என்று ஓடி விடுவான்."

"அப்புறம் நம்ம தளத்து பக்கம் யாரும் வரமாட்டாங்களே?"

"அங்கதான் நீ தப்பு பன்ற. என்னதான் தர்ம அடி வாங்கினாலும் வரத்தான் செய்வான். ஆனா கமெண்ட் போடமாட்டான். போட வைக்கணும். அங்கதான் உன் திறமை இருக்கு. தர்ம அடி கொடுக்குறவன் அடி வாங்கவும் பயப்படக்கூடாது. 'தோழர்' கோட் வேர்டை பயன்படுத்தினால் தோழர்களிடம் இருந்து அடிவாங்காமல் தப்பிக்கலாம். ஆனால் வர்றவன் போறவன் எல்லாம் அடிப்பான். அந்த மாதிரி சமயங்கள்ல மக்களை திசை திருப்ப, உடனே ரெண்டு மூணு மொக்கை கட்டுரைகளை எழுதிடனும். இல்லை அந்த கட்டுரையை தூக்கிடனும்."

"சரி நம்மாட்களே தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா என்ன பண்றது?"

"அவர்களை போலி தோழர்னு சொல்லிடு. வேறு கேள்வி கேட்கவே முடியாது."

"இந்த போலி சாமியார் மாதிரி கரெக்ட்தானே?"

"போலி சாமியார்னு சொன்னாலும் அவன் சாமியார்தான், இந்துதான்னு அடிச்சு பேசணும். விட்டிட கூடாது. ஆனா போலி தோழர்னு ஒரே வார்த்தையில் விவாதத்தை முடிச்சுடனும்."  "எப்படியோ நாடு நல்ல இருந்தா சரி.... "

"அடி செருப்பால. நாடு நல்ல இருந்தா சரியா? இந்த நாடு நல்லாவே இருக்க கூடாதுடா. அதுதானே எங்க கா கா கீ கீ இயக்கத்தொட நோக்கமே. இந்தியான்னு ஒரு நாடே இருக்க கூடாது. எல்லா ஸ்டேட்டையும் தனி நாடா ஆக்கணும். அப்பத்தான் சீனா ஆக்கிரமிக்க வசதியா இருக்கும்." 

"எத்தனை நாள்தான் வாயிலேயே வடை சுடுவது. போராட்டம்னு ஏதாவது நடத்தினாதானே மக்கள் நம்புவாங்க?"

"டேய் இந்த மக்களை பத்தி உனக்கு தெரியாதுடா. நாட்டுல எவன் என்ன பேசினாலும் ஆன்னு வாயை பிளந்துகிட்டு பாப்பாங்க. அடுத்த நிமிஷமே அதை மறந்துட்டு வீட்டுக்கு போய்டுவாங்க. சொன்னவன் முகம் கூட ஞாபகம் இருக்காது. நாம என்ன பண்ணணும்னா, இங்கே இருந்து பத்தவச்சிக்கிட்டே இருக்கணும். பத்திக்கிட்டா அதை பெரிசா ஊதி விடணும். அதோட வேலை முடிஞ்சது. அதுக்கும் திருப்தி இல்லைனா? டவுன் பஸ்ஸுல டிக்கெட் எடுக்காத போராட்டம், பேண்டுக்குள் ஜட்டி அணியாத போராட்டம், வரலாறு காணாத எழுச்சின்னு... நம்மை நாமே போட்டோ எடுத்து  போட்டுக்க வேண்டியதுதான்." 

"ஆகா சூப்பர் தோழரே... இதுவரை கரையாகி இருந்த என் மூளையை நன்றாக சலவை செய்து சுத்தப்படுத்தி விட்டீர்கள்..... "

(சீனியர் தோழர் மனதுக்குள் ... "அப்பாடா இன்னிக்கு ஒருத்தனை தீவிரவாதியா மாத்தியாச்சு.... இன்னிக்கு கோட்டா முடிஞ்சது.")

"சந்தோஷம் தோழரே எனக்கு அவசர வேலை இருக்கு போய்ட்டு வரேன். லேட்டா போனா மொதலாளி திட்டுவார். என்ன இருந்தாலும்  மொதலாளி நமக்கு தெய்வம் இல்லையா?". என்றபடி இருவருமே தாங்கள் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஓடுகிறார்கள். (கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டனோ?) உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....   


முழுவதும் படிக்க >>

April 2, 2012

கடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு


மைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு சுட்டி. அந்த வகையில் இப்போது இருநூறு பதிவுகள் என்ற ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறேன். இதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிகளை கூறி விட்டு, உங்களது ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன். இருநூறு பதிவுகள் எழுதிவிட்ட போதிலும், இந்த வலைத்தளத்தில் இன்னும் ஒரு கவிதை கூட வெளியாகவில்லை. ஒரே ஒருமுறை சச்சின் பிறந்தநாளுக்கு எழுதியதாக ஞாபகம். அதுவும் கவிதை என்று சொல்லமுடியாது. டி‌ஆர் பேசும் வசனம் போலவே இருந்தது. இதன் காரணம் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதுதான். அந்த குறையை போக்க, இதில் கவிதை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். பயந்து விடாதீர்கள். நான் சொந்தமாகக் கவிதை எழுதவில்லை. தோழி ஒருவரிடம் கடன் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். இதில் சொற்குற்றம் அல்லது பொருட்குற்றம் இருந்தால் அது இந்த தருமியை சேராது என்று கூறிக்கொள்கிறேன். இதோடு நில்லாமல் இன்னும் நிறைய கடன்கள் வாங்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். 

கவிதையடி நீ..... 

உணர்வுகளும் கவிதைகளும் 
ஒன்றுதான் - எப்போதும் 
சுலபத்தில் புரிவதில்லை
உற்றவர் தவிர மற்றவர்க்கு....... 

ஒரு ஹைக்கூ கவிதை 
சொல் என்கிறாள்..... 
எங்ஙனம் சொல்வேன்? என் 
ஹைக்கூ அந்த 
இலக்கியத்தின் முன்
தோற்று நிற்பதை..... 

எத்தனை இனிய
இசையொலி
கேட்டாலும்... 
உன் கொலுசொலியை ஒப்பிட்டு 
உச் கொட்டுகிறது
என் மனம்..... 

தமிழில் கொட்டிக்கிடக்கும்
அத்தனை வார்த்தைகளும்
எட்டி நின்றன,
பெண்ணே... 
கவிப்பொருள் நீயானதால் .... 


நினைவுகள் 

என்
பயணங்களின் நீளங்கள்
குறைகின்றன
உன்
நினைவுகளின் நீளத்தினால்..... 

பகலவன் கண்டு உதித்த
பனித்துளிகள்.....
அவளது 
பளிங்கு முகத்தில் 
வியர்வைகளாய்.....  

காதல் 
என்றொரு வார்த்தையில்
சொல்லி
முடிக்க மனமில்லை.... 
ஒரு தாயின்
நேசமும் உனக்காய் 
என்னுள் இழைந்தோடுவதால்.......  

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...