தலைப்பை பார்த்ததும் கடுப்பாகி இருப்பீர்களே? "சொல்ல வந்துட்டாண்டா இவன் பெரிய யோக்கியன். முதலில் இவன் என்ன ஜாதி? இவன் யார் மத்தவங்களை பத்தி சொல்றதுக்கு?" என்று நினைப்பீர்கள். வேறு சிலர், "இவன் எந்த ஜாதியை பற்றி சொல்லப்போகிறான்?" என்று ஆவலோடு வருவீர்கள். சில மாதங்களுக்கு முன் இன உணர்வை பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் கூறி இருந்த சில கருத்துக்களை இங்கும் பயன்படுத்துகிறேன்.
மனிதன் தோன்றியவுடன் முதலில் ஏற்பட்ட உணர்வு இன உணர்வுதான். இந்த உணர்வு தற்போது சாதி உணர்வாக, நிற உணர்வாக, மொழி உணர்வாக, எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாகரிகம், பண்பாடு வளர வளர இந்த உணர்வை மனிதன் மறைத்து வைத்திருக்கிறானே ஒழிய, மறப்பதில்லை அல்லது மறக்க விரும்புவதில்லை. என்னை பொருத்தவரை இது தவறல்ல. ஏனென்றால் இன உணர்வில்லாமல், மனிதனால் சமூகத்தில் வாழ முடியாது. அவன் தனித்து விடப்பட்டு விடுவான். ஒரு சினிமா நடிகன் முதல் பிறந்த ஊர் வரை நாம் எதனோடாவது நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம். "நான் அஜீத் ரசிகன், நான் விருதுநகர்காரன்" என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். இதுவும் இன உணர்வே.
இன உணர்வுக்கும், இன வெறிக்கும் நூல் அளவே வித்தியாசம் இருக்கிறது. "நம் இனம் சிறந்தது." என்று நினைப்பது, இன உணர்வு. "நம் இனம் மட்டுமே சிறந்தது, மற்ற இனங்கள் எல்லாம் இருக்கவே தகுதி அற்றது." என்று நினைப்பது இன வெறி. இன உணர்வு இருக்கும் எல்லோருக்குமே இன வெறியும் இருக்கும் என்பதுதான் வேதனையான உண்மை. ஆனால் இந்த இன வெறி என்பது நாம் வளர்க்கும் நாய் போல. அது நமக்கு கட்டுப்பட்டது. நம் அனுமதி இன்றி யாரும் அதை சீண்டி விட முடியாது. அப்படி மற்றொருவரால் என்று சீண்டப்படுகிறது என்றால், நம்மை அறியாமலேயே நாம் அவருக்கு அடிமை ஆகி விட்டோம் என்று அர்த்தம். ஆகவே ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் அனுமதி இல்லாமல் உங்களுக்குள் இருக்கும் இன வெறியை யாராலும் தூண்ட முடியாது.
மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கெல்லாம், இன உணர்வும் இருக்கும், அது சம்பந்தமான மோதல்களும் இருக்கும். அதற்கு பதிவுலகமும் விலக்கல்ல. ஆண்-பெண், மேல் சாதி - கீழ் சாதி, அஜீத் - விஜய், திமுக-அதிமுக என்று மோதல் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது அல்லவா? சிறுபான்மை இனம் என்பது ஒரு குறிப்பிட்ட இனம் கிடையாது. ஒரு இடத்தில் எந்த இனம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறதோ அதுதான் சிறுபான்மை இனம். சிறுபான்மை இனத்தில் இருக்கும் எல்லோருமே பண்பாளர்களாக, மற்ற இனங்களை மதிப்பவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? உதாரணத்துக்கு, ஒரு அலுவலகத்தில் விஜய் ரசிகர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்றவர்கள் எல்லோரும் அஜீத் ரசிகர் என்றால், அங்கே அந்த விஜய் ரசிகர் என்பது சிறுபான்மை.
எப்போதுமே சிறுபான்மை இனத்துக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மை இருக்கும். பெரும்பான்மையினர் சாதாரணமாக செய்யும் செயல்கள் கூட நம்மை கேலி செய்வதற்காகவே செய்வது போல தோன்றும். பெரும்பான்மை என்பதால் அவர்களும் சும்மா இருப்பதில்லை. அவ்வப்போது சீண்டுவார்கள். சில காலம் கழித்து அந்த அலுவலகத்தில் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை அஜீத் ரசிகர்களை விட அதிகரித்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அஜீத் ரசிகர்கள் என்ன செய்தார்களோ அதையே இவர்களும் செய்ய தொடங்குவர். ஆகவே யார் செய்தாலும் அது சரி ஆகாது. ஆனால் சமீப காலத்தில் இணையத்தில் நடந்து வரும் சில செயல்கள் மிக அருவருப்பாக உள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக தளங்களில், ஒரே இனத்தை சேர்ந்த சிலர், தங்களில் மன வக்கிரத்தை, மாற்று இனத்தை இழித்து பேசுவதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட இனம் என்று இல்லாமல் எல்லா இனத்தினரும் செய்து வருகின்றனர். ஆகவே குறிப்பிட்டு யாரையும் சொல்வது தவறு. அதே போல எல்லோரும் செய்வதால் அது சரி ஆகி விடாது. அது உங்கள் சொந்த விஷயம், அதில் யாரும் தலையிடக்கூடாது என்று நினைத்தால், அதை யார் பார்வைக்கும் படாத வண்ணம் மறைப்பதுதான் சிறந்தது. ஆனால் நம் நோக்கமே அதை நாலு பேர் படித்து, குறிப்பாக நாம் திட்டி இருக்கும் இனத்தவன் படித்து கடுப்பாகவேண்டும். அதுதான் கெத்து என்று நினைக்கிறோம். பிரச்சனையே இங்கேதான் தொடங்குகிறது.
இது ஒரு புறம் இருக்க, பதிவுலகில் சமூக ஆர்வலர்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களின் வேலை என்னவென்றால், சாதி ஒழிப்பு என்ற பெயரில், ஏதாவது ஒரு சாதியையோ, அல்லது மதத்தையோ மிக கேவலமான முறையில் விமர்சிப்பது. இதை படித்ததும், சம்பந்தப்பட்ட இனத்தவர் மனதால் தூண்டப்படுவார். அந்த பதிவில் வந்து அசிங்கமாக பின்னூட்டமிடுவார். இது ஒன்று போதாதா? உடனே சம்பந்தப்பட்ட இரண்டு இனங்களும் ஆஜர். மாறி மாறி கெட்டவார்த்தைகள், அர்ச்சனைகள் என்று களை கட்டிவிடும். சில நல்லவர்கள், மூன்றாவதாக ஒரு இனத்தையும் இதில் இழுத்து விட்டு, புண்ணியம் தேடி கொள்வார்கள். இங்கே நடப்பது சாதி ஒழிப்பு அல்ல. மறைமுக சாதி வெறி தூண்டல். இந்த மாதிரி கட்டுரைகள் பெரும்பாலும் சிறுபான்மை இனத்தவர்களை குறிவைத்தே எழுதப்படுகிறது. இதன் காரணம் முதலிலேயே சொல்வது போல சிறுபான்மையினரே ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருப்பார்கள்.
பொதுவாக தாழ்வு மனப்பான்மை என்பது இயலாமையின் வெளிப்பாடு. ஆக நாம் திட்ட வேண்டும் என்று நினைக்கும், நம்மால் திட்ட முடியாத ஒரு இனத்தை இன்னொருவன் நம்மை விட கேவலமாக திட்டியவுடன் நமக்கு சந்தோஷம் உண்டாகிறது. புத்துணர்ச்சி அடைகிறோம். அங்கே சென்று நம் பங்குக்கு வக்கிரத்தை வெளிப்படுத்துகிறோம். நமக்கு தெரியாமலே நம் சாதி வெறி தூண்டப்படுவது இப்படித்தான். சாதி வெறி என்றல்ல, எல்லா இன வெறியுமே இப்படித்தான் வெளிப்படுகிறது. அதே போல நம் இனத்தை இன்னொருவன் திட்டியவுடனும் நம் சாதி வெறி தூண்டப்படுகிறது. அவ்வளவு நாள் நாம் சாதி வெறியை வெளிக்காட்டாமல் இருந்ததன் காரணம், அதற்கு ஒரு காரணம் கிடைக்கவில்லையே என்பதுதான். இப்போது அது கிடைத்துவிட்டது. "அவன்தான் முதலில் திட்டினான்." என்று நாமும் சாக்கு சொல்கிறோம்.
உண்மையிலேயே சமூக நோக்குடைய பதிவுகள் என்பது, ஒரு பக்க சார்பு நிலை இல்லாமல் இருப்பதே. ஏனென்றால் இன உணர்வை தொடுவது என்பது மிக சென்சிடிவ் ஆன ஒரு விஷயம். கொஞ்சம் தப்பினாலும், நம் நோக்கமே மாறிவிடும். நம் வார்த்தைகளுக்கு புது அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டுவிடும். கடுமையாக சாடுவது என்பது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது என்று அர்த்தமல்ல. கட்டுரைகள் கடுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது, அவர்களுக்கு மேலும் வெறியை அதிகப்படுத்துமே தவிர, வேறு எந்த பயனும் அளிக்காது. அதே போல நண்பர்களே, நம்ம ஜாதிக்காரனை, நம்பலாம், எதிர் சாதிக்காரனையும் நம்பலாம். ஆனால் ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண வருகிறான் பாருங்கள். அவன்தான் மிக ஆபத்தானவன்.
எதிர்கால இந்தியா ஒரு குறிப்பிட்ட ஜெயந்தி விழாவில் |
சாதி ஒழிப்பு என்பதை வேற்று சாதி மக்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் கூட நிகழ்த்தலாம். நமக்குள் இருக்கும் இன உணர்வை நம்மால் போக்க முடியாது. ஆனால் அந்த இன உணர்வுக்கு நாம் அடிமையாகாமல் தப்பிக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த மாதிரி பதிவு எழுதும் நபர்களை ஊக்குவிக்காமல் இருப்பதே.....
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
71 comments:
விஷயம் புரிந்தது...பகிர்வுக்கு நன்றி மாப்ள!
அடப்பாவமே இங்கேயும் சாதி அரக்கன் கையை நீட்டுரானா...??? பாலா சொல்வது போல இவர்களை ஆதரிக்காமல் இருப்பதே நல்லது...
நாகரீக காலத்தில் சாதி என்பது நம்முடைய வளர்ச்சியை நிறுத்து விடக்கூடிய விஷயம் என்பது தான் யதார்த்தம். தம்முடைய படைப்பாற்றல் மூலம் எழுத்துகளை சிறக்கச் செய்யும் பதிவுலகத்திலும் சாதீ இருப்பது, ஒரு தலைப்பட்சமாக சாடுவது என்பது வருத்தமடைய வைக்கிறது.
வணக்கம் நண்பா! அருமையாக அலசல் செய்துள்ளீர்கள்! ஒவ்வொருமனிதனுக்கு இன உணர்வு முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்! ஆனால் சாதி உணர்வு அவசியம்தானா?
இன உணர்வு இறுக்கமாக இருந்தால் சாதி உணர்வு காணாமலேயே போய் விடும்!
மேலும், நீங்கள் சொல்வதெல்லாம் கீழைத்தேய நாடுகளில் நடப்பவை மட்டுமே!
” மனிதன் தோன்றியவுடன் முதலில் ஏற்பட்ட உணர்வு இன உணர்வுதான். இந்த உணர்வு தற்போது சாதி உணர்வாக, நிற உணர்வாக, மொழி உணர்வாக, எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாகரிகம், பண்பாடு வளர வளர இந்த உணர்வை மனிதன் மறைத்து வைத்திருக்கிறானே ஒழிய, மறப்பதில்லை அல்லது மறக்க விரும்புவதில்லை “
இதில் மனிதன் என்ற சொல், உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் குறிக்கும்!
எனவே, இக்கட்டுரையில் பொத்தாம் பொதுவாக மனிதன் என்று குறிப்பிடுவது பொருத்தமில்லை!
மேற்கு நாடுகளில், சாதி இருக்கா? என்ன?
ராஜன், வால்பையன் பதிவுகள் தாக்கப்படுகின்றன உங்களால். நீங்கள் சொல்லிய அனைத்தும் அவர்களுக்குப் பொருந்தும். அவர்கள் முக்குலத்தோரை மட்டுமே தாக்கினார்கள். அக்குலத்திலிருந்து ஓரிருவர் பின்னூட்டத்தில் வந்து தாக்கினார்கள். கெட்ட வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டன. இஃது கூடாதென்கிறீர்கள். பதிவுலகில் எல்லாம் சுபமாகிவிடும்.
ஆரம்பித்து வேறெங்கோ போய் முடியும் பதிவு என்று பார்த்தால் கடைசியில் ஓரிரு பதிவாளர்களை ‘நல்வழிப்படுத்தும்' முயற்சியாகவே போய் விடுகிறது.
பதிவாளர்களால் சமூகப்பிரச்சினை வரவில்லையென நினைக்கிறேன். They r a few, they do not make any ripple in society, even so, in such levels where ppl attack one another casteistically. Y not ignore the bloggers ?
உங்கவூர்ப்பக்கம்தான் எல்லாரும் இன்றும் ஆதிகால சிந்தனையில் இருக்கிறார்கள். “அது சரிதான். அஃது என்றுமிருக்கும் போகாது. ஆனால் கட்டிவச்சுக்கோங்க” என்பதுதானே உங்கள் கருத்து. வேறெதாவது இருக்கிறதா ?
Began with a bang but ended in a whimper !
மேற்கு நாடுகளில், சாதி இருக்கா? என்ன?
Yes. but in different forms. Names differ but mentalities r same.
But they dont often show it in ugly form like riots. They keep their mentalities in tight control, that wd make Bala happy. Correct?
சாதி குறைய வாய்ப்பிருக்கும் இந்த கணினி யுகத்தில் அதற்க்கான வளர்ச்சி இருப்பது போல தெரிகிறது...
இன்னும் மக்களிடையே பகுத்தறிவை வளர்க்க வேண்டும்...
விரிவான அலசல்
@விக்கியுலகம்
நன்றி மாப்ள...
@MANO நாஞ்சில் மனோ
கருத்துக்கு நன்றி நண்பரே...
@பாரத்... பாரதி...
இந்த பதிவை எழுதுவதற்கும் அந்த வருத்தமே காரணம் நண்பரே...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
நண்பரே இன உணர்வு இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் சொல்கிறேன் சாதி உணர்வும் ஒரு வித இன உணர்வுதான். நான் திரும்பவும் சொல்வேன், மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கெல்லாம் இன உணர்வு உண்டு. நாம் நாட்டில் சாதி வடிவில் அது இருக்கிறது. மற்றபடி எல்லா நாட்டிலும் இந்த உணர்வு உண்டு. இது சம்பந்தமான வன்முறைகள் உண்டு. வெவ்வேறு வடிவங்களில்.
//They r a few, they do not make any ripple in society,
நீங்கள் சொன்ன இந்த விஷயம் மட்டும் மிகவும் உண்மை .. ஆனால் ஏதோ ஒரு குருபூஜையில் அந்த சாதி தலைவரை பற்றி குறைவாக கூறுவதை போலத்தான் இதர்க்கும் எதிர்வினைகள் இருக்கும்..
//Yes. but in different forms. Names differ but mentalities r same.
எனக்கு இது புரியவில்லை .. கொஞ்சம் விளக்கமாக கூறினால் புரிந்து கொள்ளலாம் .. ஏனென்றால் எனக்கு இந்த சந்தேகம் நீண்ட நாட்கள் இருக்கிறது , விடைதான் கிடைத்தபாடில்லை...
மிகவும் நல்ல விரிவான அலசல்..நண்பா
@காவ்யா
இந்த பதிவின் நோக்கம் தனிப்பட்ட நபரை தாக்குவதோ, ஒரு சிலரை மகிழ்விப்பதோ அல்ல. சாதி உணர்வை தூண்டும் விதமான பதிவுகளை, அது நமக்கு ஆதரவாகவோ, எதிராகவோ இருந்தாலும் கூட நம் மூளைக்கு எடுத்துச்செல்லக்கூடாது என்பதுதான்.
அதே போல இந்தியாவில் மட்டுமே சாதிபிரச்சனை இருக்கிறது, மேற்குலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் சகோதர உணர்வுடன், நட்பாக இருக்கிறார்கள் என்று எங்கும் நான் சொல்லவில்லை.
இந்த பதிவு புரியவில்லை என்றால் மீண்டும் படித்து பாருங்கள். சாதி வெறியை அடக்கவேண்டும் என்று நான் எங்கேயும் சொல்ல்வில்லை.
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...
@# கவிதை வீதி # சௌந்தர்
நம்ம ஆட்களுக்கு பகுத்தறிவு என்றால் என்ன என்பதிலேயே பெரும் குழப்பம் இருக்கிறதே? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
என்ன சொல்ல பாலா..
எத்தனை மனித இனங்களை கொன்று இன்று நாம் மட்டும் மீந்து இருக்கிறோம்? அந்த வரலாறு நெடியது, கற்பனைக்கும் எட்டாதது..
இதெல்லாம் ரத்தத்தில் அல்ல ஜீனில் ஊறியது..
U hav written to me: இந்த பதிவு புரியவில்லை என்றால் மீண்டும் படித்து பாருங்கள். சாதி வெறியை அடக்கவேண்டும் என்று நான் எங்கேயும் சொல்ல்வில்லை.
I hav read again and found this:
ஆனால் இந்த இன வெறி என்பது நாம் வளர்க்கும் நாய் போல. அது நமக்கு கட்டுப்பட்டது. நம் அனுமதி இன்றி யாரும் அதை சீண்டி விட முடியாது. அப்படி மற்றொருவரால் என்று சீண்டப்படுகிறது என்றால், நம்மை அறியாமலேயே நாம் அவருக்கு அடிமை ஆகி விட்டோம் என்று அர்த்தம். ஆகவே ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் அனுமதி இல்லாமல் உங்களுக்குள் இருக்கும் இன வெறியை யாராலும் தூண்ட முடியாது.
It means v all have it. However, we must keep it in tight leash.
I use the word leash, coz u used the word dog.
//எனக்கு இது புரியவில்லை .. கொஞ்சம் விளக்கமாக கூறினால் புரிந்து கொள்ளலாம் .. ஏனென்றால் எனக்கு இந்த சந்தேகம் நீண்ட நாட்கள் இருக்கிறது , விடைதான் கிடைத்தபாடில்லை...
//
Raja, the Los Angeles riots r the recent e.g to show how the whites still think low about the blacks.
The shooting down of about 50 ppl who r on picnic, in Finland by a white supermacist maniac is another grim reminder that racism is alive and kicking.
Neo Nazis r everywhere in Europe. Inner city riots in London, sporadic lethal attacks on Asians in UK and Australia - r also examples to show that ppl r discriimated against on the basis of color of skin and ethnicity.
V use the word caste to hate dalits. They use different words or acts to hate other ppl living with them.
Motive s same: show power over others; subordinate them; deprive them of human rights; keep them, if at all, as second class citizens, and hate them.
Everyone shd hav the right to b happy. Everyone is God's creation. Everyone s to be liked.
"If this belief from heaven be sent,
If such be Nature's holy plan,
Have I not reason to lament
What man has made of man? "
@காவ்யா
மறுபடியும் படித்ததற்கு நன்றி நண்பரே. நீங்கள் இந்த பத்தியை மேற்கோள் காட்டுவீர்கள் என்று நினைத்தேன்.
நான் நாய் என்று சொன்னது அதன் மிருககுணத்தை குறிப்பதற்காக. கட்டுப்படுத்துவது, அடக்குவது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
அதற்கு மேலே ஒன்று கூறி இருக்கிறேனே. இன உணர்வு, வெறி இரண்டுக்கும் நூலளவே வித்தியாசம் இருக்கும். நம் இன உணர்வு, மற்றவர்கள் தூண்டுவதை நாம் அனுமதித்தால் வெறியாக மாறிவிடும்.
@காவ்யா
என் நோக்கம் சாதியை ஆதரிப்பதல்ல என்பதை புரிந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை.
இன உணர்வு என்பது சாதியை மட்டும் குறித்து விடாது. ஒவ்வொரு மனிதன் மனதிற்குள்ளும் ஏதாவது ஒரு இன உணர்வு இருக்கத்தான் செய்யும். அதை வெறியாக மாறாமல் இருப்பதே நல்லது.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
சரியாக சொல்லி இருக்கிறீர்கள். ஜீனில் ஊறியது...
இனவெறி இனவுணவு இந்த இரண்டிற்குமான முகாமையான வேறுபாடுகளை அறிந்து கொள்ளும் போதுதான் மாக்கள் மக்களாக இயலும் . இதை அறிந்து கொள்ளும்படியான ஒரு இடுகையை தந்து இருக்கிறீர்கள் எனக்கு படுவது யாதெனின். இன உணர்வும் வெறியும் எதாக இருந்தாலும் அது மற்றவர்களின் மேல் வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது என்பதே இடுகைக்கு பாராட்டுகள்.
சாதி ஒழிப்பு என்பதை வேற்று சாதி மக்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் கூட நிகழ்த்தலாம். நமக்குள் இருக்கும் இன உணர்வை நம்மால் போக்க முடியாது. ஆனால் அந்த இன உணர்வுக்கு நாம் அடிமையாகாமல் தப்பிக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த மாதிரி பதிவு எழுதும் நபர்களை ஊக்குவிக்காமல் இருப்பதே..
சரியாக சொன்னீர்கள் பாலா
உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கீங்க.. இப்படிப்பட்ட பதிவுகள் ஒரு சமூக நெறிகளை ஒழுங்குபடுத்துபவைகளாக இருக்கிறது..! பாராட்டுக்கள்..! விழிப்புணர்வைத் தூண்டத்தக்கவை.. வாழ்த்துக்கள்.. பாலா அவர்களே..!!
Good article
சாதிவெறியைத் தூண்டும் சில்லரைகளிடமிருந்து உஷாராக இருக்கச் சொல்லி ஒரு பதிவு. மிகவும் அருமை. நன்றிகள் பல.
வணக்கம் பாஸ்..
புரிந்துணர்வற்ற முறையில் தம்மை நிலை நிறுத்துவதற்காகத் தான் தோன்றித் தனமாக ஏனைய இன மக்களை விமர்சிப்போருக்குச் சொற்களால் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.
@மாலதி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...
@r.v.saravanan
மிக்க நன்றி நண்பரே.
@தங்கம்பழனி
தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே,
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
நன்றி நண்பரே.
@N.H.பிரசாத்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே/
@நிரூபன்
மிக்க நன்றி நண்பரே....
உங்க கருத்துறையின் முதல் வரியை பார்த்தவுடன் என்னைத்தான் திட்டுகிறீர்களோ என்று பயந்து விட்டேன்.
//"நம் இனம் சிறந்தது." என்று நினைப்பது, இன உணர்வு. "நம் இனம் மட்டுமே சிறந்தது, மற்ற இனங்கள் எல்லாம் இருக்கவே தகுதி அற்றது." என்று நினைப்பது இன வெறி.//
பற்றுக்கும் வெறிக்கும் உள்ள வித்தியாசமும் இதுதான்.பதிவு நன்று.
சாதி ஒழிப்பு என்பதை வேற்று சாதி மக்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் கூட நிகழ்த்தலாம். நமக்குள் இருக்கும் இன உணர்வை நம்மால் போக்க முடியாது. ஆனால் அந்த இன உணர்வுக்கு நாம் அடிமையாகாமல் தப்பிக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த மாதிரி பதிவு எழுதும் நபர்களை ஊக்குவிக்காமல் இருப்பதே.....
சாதி ஒழிப்பு என்பதை வேற்று சாதி மக்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் கூட நிகழ்த்தலாம். நமக்குள் இருக்கும் இன உணர்வை நம்மால் போக்க முடியாது. ஆனால் அந்த இன உணர்வுக்கு நாம் அடிமையாகாமல் தப்பிக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த மாதிரி பதிவு எழுதும் நபர்களை ஊக்குவிக்காமல் இருப்பதே.....
//உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
பிடிச்சிருக்கு பாஸ்.
ஓட்டு போட்டுட்டேன்.
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... //
உங்கள் பதிவே கருத்துதானே.
வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் ஓட்டு பட்டையை காணோமே?
விரிவாக அலசியிருக்கீங்க!
சிறுபான்மை மக்கள பத்தி நீங்க சொன்ன விளக்கம் சூப்பர்!!
சில எடங்கள்ல சிறுபான்மை என்றாலே எதோ தீண்டத்தகாதவர்(இந்த சொல்லை பாவிததுக்கு மன்னிக்கவும்) மாதிரி நடத்துறாங்க...
நானும் சாதியை பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன். முடிந்தால் பாருங்களேன்
http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post_03.html
நாம் இங்கு ஏளனமாய் பார்க்கப் படுவதும், பிறர் நம்மை எளிமையாய் பிளவு படுத்துவதும் இந்த சாதியை வைத்துத்தான். உங்களால் சாதியை விட்டுக் கொடுக்க முடியாவிட்டால் வீட்டிற்க்குள்ளேயே வைத்துகொள்ளுங்கள் பொதுவில் கொணர வேண்டாம். தமிழினம் அழிக்கப் பட்டு வருகிறது இதைத்தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் என்ற ஒரே பார்வையில் இருந்தாலே போதும். சாதி ஒழிவதோடு அல்லாமல் சில நரிகளின் கொட்டத்தை அடக்கி நம் இனத்தை தலை நிமிர செய்யும்.
அனைவரும் ஒன்றுபடுவோம், பிரிவினை ஏற்ப்படுத்தும் சக்திகளை கண்டுபிடித்து வேரறுப்போம். தமிழராய் இணைந்து தமிழினம் தழைத்தோங்கச் செய்வோம்
மிக அருமையான கருத்துகள் சகா
***மனிதன் தோன்றியவுடன் முதலில் ஏற்பட்ட உணர்வு இன உணர்வுதான். இந்த உணர்வு தற்போது சாதி உணர்வாக***
பாலா: சாதி உணர்வு இருக்கிறதுல தப்பு இல்லைனு நீங்க "ஜஸ்டிஃபை" பண்ணுவது எந்தவிதத்தில் நியாயம்னு தெரியலை.
இன்னொரு சாதியச்சேர்ந்த பெண்களை சூரையாடுவது, இன்னொரு சாதியை இழிவாகப் பேசுறதெல்லாம்தான் காலங்காலமா இருக்கு. அப்போ அதுவும் சரியா?
இனவுணர்வு எனப்து வேற, தன் இனம் செய்வதை எல்லாம் தன் இனம் என்பதால் சரி என்று விவாதிப்பது வக்காலத்து வாங்குவது வேற்.
தன் இனத்திற்கு நல்ல வகையில் உதவுவது வேற. தன் இனம்தான் பெருசுனு இன்னொருஇனத்தை மிருகத்தனமா நடத்துவது வேற..
It goes on like that. That is what people are trying to tell the world in valpayyan blogs and other blogs. What you dont know is some people who criticize the arrogance of a particular case are ALSO BELONG to same CASTE! So, it is not that they go after one caste..
***மனிதன் தோன்றியவுடன் முதலில் ஏற்பட்ட உணர்வு இன உணர்வுதான். இந்த உணர்வு தற்போது சாதி உணர்வாக, நிற உணர்வாக, மொழி உணர்வாக, எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ***மனிதன் பிறந்தபோது அம்மனமாக, காமௌணர்வுடனும்தான் மிருகமாகத்தான் வாழ்ந்தான். அதே மனிதன் இன்றும் செக்ஸ் உணர்வுடந்தான் வாழுகிறான். ஆனால் மனிதன் பண்படவில்லையா? அதேபோல் காட்டுமிராண்டியாகவா இன்னும் வாழ்கிறான்?
இன உணர் வேண்ட்டும் என்று சொல்வது தன் இனத்திற்கு அநீதி விளைவிக்கும்போது> தாந்தான் பெரிய புடுங்கி, மத்தவன் எல்லாம் மட்டமானவன் னு சொல்லுவதற்காக அல்ல!
****காவ்யா சொன்னது… [Reply]
மேற்கு நாடுகளில், சாதி இருக்கா? என்ன?
Yes. but in different forms. Names differ but mentalities r same.***
YES?? This is NONSENSE! Can you explain me what the heck are you talking about here?
We are talking about caste, untouchables,not race or any other issues. Please dont make misguiding statements to justify whatever bullshit we have in our country, whoever you are!
***But they dont often show it in ugly form like riots. They keep their mentalities in tight control, that wd make Bala happy. Correct?
20 செப்டெம்ப்ர், 2011 1:57 pm **
They DO NOT HAVE CASTE system. You are LYING here!
****சாதி ஒழிப்பு என்பதை வேற்று சாதி மக்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் கூட நிகழ்த்தலாம். ***
நட்பா? வேற்றுசாதியினரையும் தனக்கு சமம் என்கிற எண்ணம் வரவைக்கத்தான் அவன் அவன் பதிவு போட்டுக்கிட்டு இருக்கான். நீங்க அவனுகள் சாதிவெறியன் என்பதுபோல சொல்றீங்க. நீங்க சொல்ற "நட்பு" பாராட்டலாம் என்க்ற எண்னமெல்லாம் எல்லாரிடமும் இருந்தால் எதுக்கு ஆளாளுக்கு பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்க? மத்தவனை உன்னைப்போல நெனைங்கிறதைத்தான் கரடு முரடா சொல்லிக்கிட்டு இருக்காங்க!
மிகவும் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் .
@shanmugavel
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
@nellai ram
நன்றி நண்பரே.
@அந்நியன் 2
ஓட்டு போட்டதுக்கும், கருத்து சொன்னதுக்கும் நன்றி நண்பரே...
தமிழ்மணம் பட்டையை இணைப்பது எப்ப்டின்னு தெரியல.
@சென்னை பித்தன்
நன்றி சார்
@Real Santhanam Fanz
நன்றி நண்பரே
@நிவாஸ்
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகா. அடிக்கடி வாங்க
@வருண்
தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.
நான் சொன்னது எல்லா மனிதருக்கும் இன உணர்வு கட்டாயம் இருக்கும். அதில் ஒன்று இந்த சாதி உணர்வு. எனக்கு சாதி உணர்வு இல்லைன்னு சொல்லி நடிக்காம, சாதி உணர்வை கண்டுக்காம இருப்பது மேல் இல்லையா? அதை நான் சொல்லி இருக்கேன்.
காலங்காலமா இருப்பதால் அது சரி என்று நான் சொல்லவில்லை. பழக்க வழக்கம் மற்றும் உணர்வுகள் இரண்டும் வேறானவை.
இன உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக இருக்கும். அதை மாற்ற முடியாது என்று சொல்கிறேன்.
சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் சாதி வெறியின் வெளிப்பாடே. அது இன உணர்வின் உச்ச கட்டம். அதை அடைவது நாம் விருப்பத்தில் அமைவது. அது கூடாது என்பதே என் கருத்து.
சாதியை ஒழிக்கவேண்டும் என்று பதிவு போடுபவர்களை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒருவனை கீழ்தரமாக திட்டுவதால் அவனை திருத்த முடியும் என்று நினைப்பது தவறு. அதே போல சாதி ஒழிப்பு என்ற போர்வையில் அடுத்த்வர் சாதியை திட்டுவதும் தவறு. நான் இவர்களைப்பற்றியே கூறினேன்.
சாதி வெறியை கரடு முரடா சொல்லி தணிக்க முடியாது.
@Pavi
ரொம்ப நன்றி சகோ...
சாதி வெறி, இன வெறி, மொழி வெறி, மாநில வெறி, தேச பக்தி,மனித வெறி (மனிதன் தன சிறந்த பிரபு எனும் எண்ணம்) உலகவெறி எல்லா வெறிகளும் தப்பானவை. வெறி கொள்ளும் பொது அடுத்தவர் பக்கம் உள்ள நியாயம் நமது கண்ணுக்கு தெரியாது. மற்ற வெறியை எல்லாம் எதிர்க்கும் எல்லாரும் தேசபக்தி எனும் தேச வெறி பாராட்டுகின்றனர். இந்தியாவின் மீது உள்ள பாசத்தால் காஷ்மீர் விவகாரத்தில் பாகின்பக்கம் உள்ள சில நியாயங்களை நம்மால் உணர முடியாது. viveversa. மற்ற மாநிலத்தவர்கள் ஈழதமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர முடியாமைக்கு மற்ற மாநிலத்தவரின் தேச பக்திதான் காரணம். நாம் கொதிப்பதற்கு தமிழர் உணர்வு தான் காரணம். எல்லா நிகழ்விலும் இரண்டு பக்க நியாயங்களை அலசி எந்தவித வெறி /சார்பும் இல்லாமல் நம்மால் எழுத சொல்ல முடிந்தால் அவர் ஒரு நல்ல எழுத்தாளர் / நல்ல வலைபதிவாளர் என கொள்ளவேண்டும். எல்லாரையும் சமமாக பார்க்கும் பார்வை நமக்கு வரவில்லை என்றால் படித்து என்ன பயன்.
சாதி வெறி, இன வெறி, மொழி வெறி, மாநில வெறி, தேச பக்தி,மனித வெறி (மனிதன் தன சிறந்த பிரபு எனும் எண்ணம்) உலகவெறி எல்லா வெறிகளும் தப்பானவை. வெறி கொள்ளும் பொது அடுத்தவர் பக்கம் உள்ள நியாயம் நமது கண்ணுக்கு தெரியாது. மற்ற வெறியை எல்லாம் எதிர்க்கும் எல்லாரும் தேசபக்தி எனும் தேச வெறி பாராட்டுகின்றனர். இந்தியாவின் மீது உள்ள பாசத்தால் காஷ்மீர் விவகாரத்தில் பாகின்பக்கம் உள்ள சில நியாயங்களை நம்மால் உணர முடியாது. viveversa. மற்ற மாநிலத்தவர்கள் ஈழதமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர முடியாமைக்கு மற்ற மாநிலத்தவரின் தேச பக்திதான் காரணம். நாம் கொதிப்பதற்கு தமிழர் உணர்வு தான் காரணம். எல்லா நிகழ்விலும் இரண்டு பக்க நியாயங்களை அலசி எந்தவித வெறி /சார்பும் இல்லாமல் நம்மால் எழுத சொல்ல முடிந்தால் அவர் ஒரு நல்ல எழுத்தாளர் / நல்ல வலைபதிவாளர் என கொள்ளவேண்டும். எல்லாரையும் சமமாக பார்க்கும் பார்வை நமக்கு வரவில்லை என்றால் படித்து என்ன பயன்.
வணக்கம் நண்பா!
உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கீங்க,மிக அருமையான கருத்துகள்
மனிதன் என்று மனிதனை உணர்கிறானோ அன்று உருப்படுவான்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
@v.pitchumani
சரியாக சொன்னீர்கள் நண்பரே...
@svr sakthi
நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க
@♔ம.தி.சுதா♔
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.
****சாதி வெறியை கரடு முரடா சொல்லி தணிக்க முடியாது.
21 செப்டெம்ப்ர், 2011 11:19 am****
அஹிம்ஷா முறையிலோ, அல்லது உங்களுடைய மென்மையான முறையிலோ சாதி வெறியத் தவிர்க்கவும் முடியாது. நட்பு பாராட்டனும்னு நீங்க சொல்வது கேலிக்கூத்து! நட்பாவது மண்ணாங்கட்டியாவது! பதிவுலக கரடு முரடான பதிவுகள் போடும் பதிவர்களால் அட் லீஸ்ட் பதிவுலகில் சாதியச்சொல்லிக்கிட்டு திரியிறவன் கொஞ்சமாவது யோசிச்சு மூடிக்கிட்டு தன் மனதிலேயே வச்சுக்கிட்டு இருப்பான். உங்க மென்மையான வழி, சாதி உணர்வு உள்ளவனுக்கு அந்த உணர்வில் தப்பில்லை என்று நினைக்க வைப்பதுடன், அவர்களுக்கு ஆறுதலாக இருந்து அவர்கள் உணர்வுகளை வளர்க்க ஊக்குவிக்கிது எனபது மட்டும் உண்மை!
@வருண்
நண்பரே நீங்கள் பாதிக்கப்பட்டவன், திமிர் பிடித்து நடப்பவன் என்ற ரீதியில் பார்க்கிறீர்கள். தனி மனிதன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் முறை கைகொடுக்கும் என்று நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக தொடரலாம். நான் சொல்வதால் பின் விளைவுகள் எதும் கிடையாதல்லவா?
கரடு முரடான பதிவுகளால் சாதி வெறியர்கள் பயந்து விடுவார்கள் என்று சொல்வதுதான் கேலிக்கூத்து. அது அந்த குறிப்பிட்ட சாதியின் மீது மென் மேலும் காழ்புணர்ச்சியையே வளர்க்கும். நேரம் கிடைக்கும்போது வெளிப்படுத்தவே செய்வார்கள்.
சரி, விடுங்க பாலா! நம்ம ரெண்டுபேரும் சொல்ல வந்ததை சொல்லிட்டோம். Take it easy. :)
கிளாஸ் :)
@வருண்
நன்றி நண்பா. நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிட்டேங்க. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங். நோக்கம் ஒன்றுதானே...
@smart
நன்றி நண்பரே.
Post a Comment