நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? என்று திட்டுவது கேட்கிறது. நம்ம ஞாநி பூச்செண்டு, குட்டு, சொட்டு என்று கொடுப்பாரே அது போல. கடந்த சில தினங்கள் நான் பார்த்த நாட்டு நடப்பு விஷயங்களை வைத்து எனக்கு பிடித்தவர்களுக்கு இந்த விருதுகளை கொடுக்கிறேன். இதில் ஆட்சேபம் இருந்தால் சரியான நபர்களை நீங்களே பரிந்துரை செய்யலாம்.
சிறந்த அமைதியாளர் விருது
தமிழக எதிர்கட்சி தலைவர் கேப்டன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. புயலே அடித்தாலும் நான் அமைதி மட்டுமே காப்பேன் என்பதில் உறுதியாக இருப்பதால் இந்த விருது வழங்கப்படுகிறது
சிறந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் விருது
இவரைத்தவிர இந்த விருதை பெற இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். அவர்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கே அல்வா கொடுத்து வருவதால் இந்த விருது அளிக்கப்படுகிறது
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
இன்னுமா நம்மை இந்த ஊர் நம்புது என்று எந்த கவலையுமே இல்லாமல் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் சு.சாமி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதுவரை இதே விருதை இவர் நூறு தடவைக்கும் மேல் பெற்றிருப்பதால், இவருக்கு கூடிய விரைவில் வாழ்நாள் நகைச்சுவையாளர் விருது பெரும் வாய்ப்பு மிக அதிகம்.
சிறந்த குணசித்திர நடிகர் விருது
இந்த விருது அய்யப்பன் மற்றும் சக்ஸ்சேனா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நீதிபதியே கண்கலங்கும்படியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. கிளைமாக்ஸில் மயங்கி விழும் காட்சியில் தத்ரூபமாக நடித்ததற்கு நடுவர் குழுவே எழுந்து கை தட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வர்ணனையாளர் விருது
ஒவ்வொரு போட்டி முடிந்ததும், தாங்கள் எப்படி தோற்றோம் என்பதை விலாவாரியாக விவரிக்கும் கேப்டன் கூல் தோனிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வெவ்வேறு வர்ணனைகளை பயன்படுத்துவது பாராட்டுக்குரியது.
சிறந்த ஜேம்ஸ்பாண்ட் விருது
உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களை விட அதிகமாக குண்டு வெடித்த பிறகும், ஜேம்ஸ்பாண்ட் மாதிரி மிக அசால்டாக புன்னகையை வெளிப்படுத்துவதால் இந்த விருது.
சிறந்த துப்பாக்கி சுடும் விருது
தமிழக காவல் துறைக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சிறந்த தலைமறைவாளர் விருது
வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை தான் எங்கிருக்கிறேன் என்று யாருக்கும் தெரியாமல் பாதுகாத்ததற்கு இந்த விருது வழங்கப்படுகிறது
சிறந்த கதாசிரியர் விருது
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பழைய கதையை, கலைஞர், கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்ட புதிய கதாப்பாத்திரங்களோடு, அம்மா மனம் குளிரும் வண்ணம் ரீமேக் செய்ததற்காக இந்த விருது கொடுக்கப்படுகிறது
சிறந்த பத்த வச்சுட்டியே பரட்ட விருது
இது முன்னாள் முதல்வர் கலைஞருக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. காரணம் சொல்ல தேவை இல்லை.
சிறந்த விசுவாசி விருது
இதற்கு போட்டியே இல்லாமல் அன் அப்போஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாரத பிரதமர் மன்மோஹன் சிங்
சிறந்த எட்டப்பன் விருது
உள்ளே இருந்தபடி வரிசையாக பெயர்களை சொல்லி கிலி ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ராசாவுக்கு இந்த விருது ஏக மனதாக கொடுக்கப்படுகிறது.
ஜெலூசில் வழங்கும் வயிற்றெரிச்சலுக்கான சிறப்பு விருது
இளையதளபதி ரசிகர்களுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. (அவர்களைப் பொறுத்தவரை) மொக்கை படமான மங்காத்தாவுக்கே இப்படி வயிறெரிந்து, பேதி ஆகும் நிலைக்கு வந்ததால் இந்த விருது ....
புரட்சிக்கான சிறப்பு விருது
வினவு தோழர்களுக்கு வழங்கப்படுகிறது. நாட்டில் என்ன நடந்தாலும் அதில் (உயர்)சாதி பெயிண்ட் அடித்து, அதை ஏமாளியான பிற்படுத்தப்பட்ட மக்களிடம் விற்று, அவர்களை வெறியேற்றி அந்த நெருப்பில் குளிர்காய்ந்து கொண்டே புரட்சி செய்வதாக இத்தனை நாள் பொழப்பை ஒட்டி கொண்டிருப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
55 comments:
ஹா..ஹா..
மிகச்சரியான விருதுகள், நகைச்சுவையாக இருந்தாலும் நம் நாட்டில் இப்போது நடைபெருகின்ற அவலங்களை காட்டுகிறது.
ஹா..ஹா..
பத்தவச்சிட்டியே பரட்ட செம செம...!!!
ஹா ஹா ஹா ஹா வடிவேலுக்கு பொருத்தமான விருது ஹே ஹே ஹே ஹே...
//
தமிழக எதிர்கட்சி தலைவர் கேப்டன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. புயலே அடித்தாலும் நான் அமைதி மட்டுமே காப்பேன் என்பதில் உறுதியாக இருப்பதால் இந்த விருது வழங்கப்படுகிறது
//
புயலுக்கு முன் அமைதி
நல்ல விருதுகள்
ஒவ்வொரு விருதும் கும்மாங்குத்தா இருக்கே..கலக்கல் பாலா.
ரெம்ப சிரிச்சு சிரிச்சு
உங்க விருது விழாவை பார்த்தேன்....
கருணா நிதிக்கு நீங்கள் சரியான மரியாதை கொடுக்கவில்லை பாஸ்
அவருக்கு இன்னும் உயர்ந்த விருது கொடுத்து இருக்கலாம்....
ஏன் அவர் பல விருதுகளுக்கு தகுதி யானவர்
ஆகா அருமையான விருதுகள்.....அதிலும் தோனிக்கும்,கேப்டனுக்கும் மிகப்பொருத்தம்...தாத்தா அவர்களுக்கு இன்னமும் உயரிய விருதுகள் பல கொடுத்து இருக்கலாம்.
ரசித்தேன்.மிகவும் யோசித்து தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.
விருது வாங்கினவர்களெல்லாம் உங்களுக்கு ஒரு நன்றி தெரிவிப்பு விழா நடத்தப்போகிறார்களாமே!
நல்ல நகைச்சுவை!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மிக்க நன்றி நண்பரே... எல்லாமே காமெடியா போச்சு.. என்ன பண்றது?
@r.v.saravanan
சிரிப்புக்கு நன்றி நண்பரே
@MANO நாஞ்சில் மனோ
இப்படியும் இருக்கலாம் என்பதே என் கருத்து. நன்றி நண்பரே...
@"என் ராஜபாட்டை"- ராஜா
புயல் எப்போது கரையை கடக்கும் என்று பார்ப்போம். நன்றி நண்பரே.
@செங்கோவி
நன்றி நண்பா..
@துஷ்யந்தன்
சரிதான் நண்பரே... ஏதோ என்னால முடிஞ்சது...
@K.s.s.Rajh
அடுத்த வாட்டி கண்டிப்பா கொடுத்திருவோம். நன்றி நண்பரே...
@Rathnavel
ரொம்ப நன்றிங்க...
@shanmugavel
நன்றி நண்பரே,,,
@சென்னை பித்தன்
அய்யய்யோ எனக்குமா? வேண்டாம் சார்...
" குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு “ விருது...ஈவீகேஎஸ்..இள்ங்கோவன்...சீச்சீ..இந்தப்பழம் புளிக்கும் விர்து...வைக்கோ....தொட்டால் தீட்டு..பட்டால் பாவம் விருது..மருத்துவர் ராமதாசு...எண்பதிலும் யோகம் வரும் விருது அன்னா ஹசாரே..அத்வானி..என கொடுத்துக்கொண்டே போகலாம்
வினவுக்கு அருமையான விருது, எனது பரிசாக ஒரு சோடி பிஞ்ச செருப்பையும் சேர்த்து குடுங்க.........
விளாசலான விருதுகள்....
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!
பாலா சார், ஒவ்வொரு விருதும் அருமையோ அருமை! நல்லா உக்காந்து யோசிப்பீங்க போல!
வாழ்த்துக்கள் சார்!
அருமையான விருதுகள் சிரிப்ப அடக்க முடியல
சாமி .....ஹி......ஹி ..ஹி ....மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு
வாழ்த்துக்கள் .........
// சிறந்த பத்த வச்சுட்டியே பரட்ட விருது //
ஆனந்த விகடன் பாதிப்பு தெரியுதே...
கலைஞருக்கு ஒரு வாழ்நாள் வேதனையாளர் விருது கொடுத்திருக்கலாம்...
// சிறந்த நகைச்சுவை நடிகர் விருது //
இந்த விருது என்றென்றும் அவருக்குத்தான்... அடிச்சிக்க ஆளே இல்லை...
// மொக்கை படமான மங்காத்தாவுக்கே //
என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க... சுமாரான படம்னாவது சொல்லியிருக்கலாம்...
மாப்ள சிறப்பம்சங்களுடன் விருதுகள் கலக்கல் ராகம்...அதுவும் இப்பல்லாம் அரசியல் வாடை வீசுதுய்யா ஹிஹி ரைட்டு!
விருதுகள் அனைவர்க்கும் பொருந்துகிறது
For comedy ramdoss fits better than su samy. And please give "hazarekku uthaviya eli viruthu" to Mr Joseph anil visai chandrasekar se give "hazarekku uthaviya eli viruthu" to Mr Joseph anil visai chandrasekar
@எஸ்.ஆர்.சேகர்
சார் உங்களையும் இனிமேல் விருது வழங்கும் கமிட்டியில் சேர்த்துக்க வேண்டியதுதான். நன்றி நண்பரே...
@எப்பூடி..
தலைவரே அனுப்பிட்டா போச்சு...
@மாய உலகம்
ரொம்ப நன்றிங்க.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
நன்றி நண்பரே...
@அம்பாளடியாள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
@Philosophy Prabhakaran
நண்பா இதை சொல்ல ஆனந்த விகடன் தேவை இல்லை. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா அது கூட உண்மையாக இருக்கலாம்.
மங்காத்தா மொக்கை படம்னு நான் சொல்லல. அவங்கதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அடைப்பு குறிக்குள் பார்க்கலயா?
@விக்கியுலகம்
மாப்ள ரொம்ப வாடை வீசுதோ? இனி குறைச்சுக்கலாம்.
@தமிழ்வாசி - Prakash
நன்றி நண்பரே...
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
ஆமாங்க நான் டாக்டர் ராமதாசை மறந்தே போயிட்டேன். அப்புறம் ஜோசப்பு அவர்களை கலாய்த்தால் அவர் ரசிகர்கள் வருந்துகிறார்கள். அதனால் தீபாவளி வரைக்கும் கொஞ்சம் விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.
நன்றி நண்பரே,
ரொம்ப அருமை . அதுவும் பிரதமர் வாங்கிய விருது மிகப் பொருத்தம் . ரொம்ப நல்லா இருந்தது .
@Guru
நன்றி நண்பரே
அருமையான விருது வழ்ங்கியவருக்குக்குப் பராட்டுக்கள்.
சரியான ஆளுங்களுக்கு தான் போய் சேர்ந்துருக்கு
முக்கியமா
//சிறந்த நகைச்சுவை நடிகர் விருது//
ஹி...ஹி...ஹி..
கண்க்கச்சிதமாய் பொருந்திய விருது
ஹஹ்ஹா ஜெலுசில் அவார்டு சூப்பர்
@இராஜராஜேஸ்வரிரொம்ப நன்றிங்க
@ஆமினாதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@அரசன்நன்றி நண்பரே
@Samanthaநன்றி நண்பரே. அடிக்கடி வாங்க
பைசா செலவில்லாம ஒரு விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ததற்கு நன்றி.
@ N.H.பிரசாத்
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே அடிக்கடி வாங்க
Post a Comment