விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 5, 2011

வெட்டி அரட்டை - தூக்கு, மங்காத்தா, தளபதி





தூக்கு.... 

பொதுவாக பதிவுலகில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு டாபிக் மிக பரபரப்பாக எல்லோராலும் பேசப்படும். என்னைபோன்ற சில ஜீவராசிகள் மட்டும் அவற்றை எல்லாம் கொஞ்சநாள் பேசாமல் இருப்போம். காரணம் அதில் உள்ள உண்மையான செய்திகள் தெரியாமல் இருப்பதால். பிறகு கட்டங்கடைசியாக நாங்களும் அதைப்பற்றி எழுதி ஜோதியில் ஐக்கியம் ஆகி விடுவோம்.  


மேலோட்டமாக பார்த்தால் எல்லோரும் சொல்வது, "தூக்கு தண்டனை சரிதான். பின்னே அவனும் ஒரு உயிரை கொன்றவன்தானே? அவன் கொல்லும்போதும் அந்த உயிர் படாதபாடு பட்டிருக்குமே?". சரிதான். ஆனால் ஒரு கொலைக்கு தண்டனை இன்னொரு கொலை ஆகாது என்பது என் கருத்து. என்னை பொறுத்தவரை சாதல் என்பது ஒரு தண்டனையே அல்ல. வாழ்வதுதான் பெரிய தண்டனை (அப்ப போயி சாக வேண்டியதுதானே... என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது). நேற்று உத்தமர் தங்கபாலு அவர்களின் மெகா டிவியில் இந்த தூக்கு தண்டனை பற்றி சில பிரபலங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த பதில் மிக மனவருத்தம் அளிக்க கூடியதாக இருந்தது. அவர்கள் சொன்னதின் சாராம்சம் "சட்டத்தை மதிப்பது நாம் கடமை. அதிலும் கொலை செய்தவனை எப்படி மன்னிக்கலாம்?". அப்போது எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. 


சில வருடங்களுக்கு முன்னாள் நொய்டாவில், ஒரு வீட்டின் சாக்கடையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டவர்களின் எலும்புகள் அள்ளப்பட்டனவே? அதில் கூட இப்போதும் உள்ளே வெளியே தானே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்? அதிலும் குற்றம் அந்த வீட்டின் வேலைக்காரன் மீதுதானே நிரூபணம் ஆனது, முதலாளி இன்னும் மாட்டவில்லையே? ஏன் அவர் காங்கிரஸ்காரார் என்பதாலா?  


நில அபகரிப்பு... 


இந்த வார்த்தையை கேட்டாலே ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அடிவயிற்றில் பீதி கிளம்புகிறது. இப்போதெல்லாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஆனானப்பட்ட முன்னாள் அமைச்சர்களே என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது நமக்கெதற்கு வம்பு என்று நிறைய பேர் நினைக்கத்தொடங்கி விட்டார்கள். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. கைது செய்யப்படுபவர்கள் எல்லோரும் 'முன்னாள்' களாகவே இருப்பதால்,  "அதிமுககாரர்கள் எல்லாம் ஒழுங்கா?" என்று கேட்க தோன்றினாலும், அந்த 'முன்னாள்'கள் எல்லாம் தவறு செய்யாதவர்கள் இல்லையே? பொது நிகழ்வுகளை டிவியிலோ, பேப்பரிலோ படிக்கும்போது நமக்கு இந்த மாதிரி பல கருத்துக்கள் தோன்றுவது இயல்புதான். 


ஆனால் நமக்கு நெருக்கமாக சில நிகழ்வுகள் நடக்கும்போதுதான், அதற்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் தெரியவருகின்றன. நண்பன் ஒருவனின் உறவினர் சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் அசுர வளர்ச்சி கண்டவர். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள், போலீஸ் அதிகாரிகள் எல்லோருமே நெருங்கிய நண்பர்கள். ஒன்றே ஒன்று இவர் எந்த அரசியல் கட்சியையுமே சாராதவர். குறிப்பிட்ட தினத்தில் இவரது அலுவலகத்துக்கு வந்த சில ஆளும் கட்சியினர், வளர்ச்சி நிதியாக, 5 லட்சம் கேட்டிருக்கிறார்கள். இவர் தர மறுத்து, "15ஆயிரம் வேண்டுமானால் தருகிறேன்." என்று கூறி இருக்கிறார். அவர்கள் கோபத்துடன் வெளியேறி விட்டனர். அடுத்த ஒரு வாரத்தில், அந்த பகுதியின் காவல் துறை ஆய்வாளர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, புதியவர் அந்த இடத்துக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். இரண்டாவது நாள் இவர் மீது நில அபகரிப்பு வழக்கு பாய்ந்திருக்கிறது. இப்போது இவர் மீது புகார் கொடுத்தவரே வாபஸ் பெறுகிறேன் என்று சொன்னாலும், விடுவதாயில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டின் பின்னாடியும் இந்த மாதிரி ஒரு காரணம் இருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது. 

இந்திய அணி.... 


"ஜெயித்தாலும் இந்தியா மாதிரி ஜெயிக்க முடியாது, தோற்றாலும் இந்தியா மாதிரி தோற்க முடியாது." என்று நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம். அது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளை தோற்று வொயிட் வாஷ் ஆகி விட்டார்கள். எங்கள் ஊரில் ஒருவனை எல்லோரும் சேர்ந்து வெளுத்தெடுத்தால் அதற்கு "சுத்தி விட்டு சுண்ணாம்பு அடிப்பது" என்று சொல்வார்கள். என்ன பொருத்தம் பாருங்கள். தொடர்ச்சியாக டி20யும் அம்பேல். ஒருநாள் போட்டியில் ஓரளவுக்கு தடுமாறி 274 ரன் எடுத்தாலும். இந்தியா இன்னும் கடைசி ஓவர்களில் மண்ணை கவ்வுவதை தொடரவே செய்தது. இந்த போட்டியில் எளிதில் 300ஐ எட்டி இருக்கலாம். இங்கிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தவுடன், "அப்பாடா, இதிலாவது ஜெயித்து விடலாம்." என்று நினைத்தேன். மழை வந்து மண்ணை அள்ளி போட்டது. ஒருவேளை இந்த போட்டியில் இந்தியா தோல்வி கூட அடைந்திருக்கலாம். ஏன்னா நம்ம பவுலிங் அப்படி. இனி இந்த தொடரில் தோற்றாலும், "முதல் போட்டி ஜெயிக்க வேண்டியது, அது ஜெயித்திருந்தா வீரர்கள் உற்சாகத்தோடு விளையாடி கோப்பையை வென்றிருப்பார்கள்." என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்ளலாம். ஆமா, டிராவிட்டுக்கு ஏன் அவுட் கொடுத்தார்கள்?


சமீபத்தில் படித்த ஜோக் ஒன்று. 
தோனி : "நாங்கள் அன்னாஹசாரேவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். லோக்பால் மசோதா நிறைவேறும் வரை எந்த போட்டியிலும் ஜெயிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்." 

தலயும், தருதலையும்.... 

முன்குறிப்பு: இளையதளபதி ரசிகர்கள் இந்த பகுதியை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். படித்து விட்டு தேவை இல்லாமல் காண்டு ஆகாதீர்கள். இது கடுமையான தனி நபர் தாக்குதல்களை உள்ளடக்கியது. 

பொதுவாக நான் தமிழ் படங்களுக்கு விமர்சனங்கள் எழுதுவதில்லை. மேலும் பதிவுலகில் எழுதப்படுவதில் பெரும்பாலானவை விமர்சனமே அல்ல என்பதே என் கருத்து. அவை ஸ்பாய்லர்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அதாவது படங்கள் பற்றிய சொந்த கருத்து மட்டுமே. இன்னொரு விஷயம், பதிவுலகமே மொக்கை என்று ஒதுக்கிய பல படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பதிவுலகமே சூப்பர் என்று சொன்ன படங்கள் எனக்கு சுத்தமாக பிடித்ததில்லை. மேலும் பல பதிவர்கள் அப்படியே கதையை எழுதி விடுவதால் படங்களை பார்த்த பிறகே விமர்சனங்களை படிப்பதை வழக்கமாக்கி வருகிறேன். 


அஜீத் நடித்த மங்காத்தா படத்தை கிட்டத்தட்ட எல்லோருமே நன்றாக இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். முதல் நாள் முதல் ஷோ பார்த்து விட்டு வெளியே வரும்போது, தல ஏமாற்றவில்லை என்று தோன்றியது. அதே போல இன்னும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக சொல்வேன் அஜித்தின் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று. மற்றபடி சொலவதற்கு ஒன்றும் இல்லை. எல்லோருமே எழுதி விட்டார்கள். என்னைப்போன்ற ரசிகர்களுக்கு ஒரு பழக்கம். படம் பார்த்து விட்டு வந்தவுடன், பதிவுலகில் எப்படி விமர்சித்திருக்கிறார்கள் என்று தேடுவோம். பிறகு இளையதளபதி ரசிகர்கள் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று தேடுவோம். ஆனால் கடந்த நான்கு நாட்களாக எதுவுமே கண்ணில் படவில்லை. "ஒரு வேளை படம் நன்றாக இருப்பதால் காண்டாகி விட்டார்களா?" என்று தோன்றியது. அல்லது "எழுதுவதற்கு காரணம் தேடி கொண்டிருக்கிறார்களா?" என்றும் தோன்றியது. 


அவர்கள் தளபதி ரசிகர்கள் அல்லவா? ஆகவே இரண்டாவதுதான் நடந்திருக்கிறது, அவர் பதிவுலகில் மிக பிரபலம். தன்னை எப்போதுமே தளபதி ரசிகனாக, முன்னிறுத்துபவர். இவருக்கு நமக்கும் அடிக்கடி உரசல்கள் வந்தாலும் அதை லாவகமாக தளபதி ஸ்டைலில் "சகா, இது வேறு அது வேறு!" என்று சொல்லி வந்தார். இந்த ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், மற்றபடி அவரது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இவரது நண்பர்கள், சாரி சகாக்கள் இவரை 'பதிவுலகின் இளையதளபதி' என்று கூறி இவருக்கு அடிக்கடி சூடேற்றி கொண்டே வேறு இருந்தனர். நான் கூட ஆச்சர்யபட்டேன். பிறகுதான் அவரை எதற்கு பதிவுலகின் இளைய தளபதி என்று கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். 


உள்ளே வன்மத்தை வைத்துக்கொண்டு, வெளியே நல்லவனாக சீன் போடுவதில் இவர் அப்படியே இளைய தளபதிக்கு நிகர். ஆகவே தான் நண்பர்கள் பிறரை எச்சரிக்கும் விதமாக இப்படி கூறி உள்ளனர். இது எனக்கு பிறகுதான் புரிந்தது. ஏற்கனவே டாக்குடரின் பல மாஸ் படங்களை பார்த்து இடிந்து போய் இருக்கும் இவருக்கு, மங்காத்தாவின் மாஸ் ஓபனிங், எங்கேயே எரிச்சலை கிளப்பி இருக்கிறது. ஆகவே நான்கு நாட்களாக ரூம் போட்டு யோசித்து, ஒரு கேடு கேட்ட பதிவை போட்டிருக்கிறார். அதிலும், "எங்கே எவனாவது மானங்கெட்ட கேள்வி ஏதாவது கேட்டு விடுவானோ?" என்று பயந்து கமெண்ட் போடுவதை தடை செய்து விட்டார். தலைவன் எப்படியோ அப்படித்தானே தொண்டனும் இருப்பான்? இப்போது சொல்கிறேன் நீங்க மெய்யாலுமே பதிவுலக இளையதளபதிதான். அதுக்கு உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு. 


அது அவரது பிளாக். அவர் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதை கேட்க நீ யார் என்று கேட்கிறீர்களா? அப்படியானால் இது என் பிளாக். நானும் எழுதலாம்தானே? இதில் பெரிய காமெடி என்னவென்றால் அஜித்தின் ஹேர்ஸ்டைலை பற்றி கிண்டல் செய்திருக்கிறார். அதை பற்றி பேச இவருக்கு தகுதி இருக்கிறதா என்று இவரது பிரோபைல் போட்டோ பார்த்தால் உங்களுக்கே புரியும். சகா... உங்களுக்கு தண்டனையை உங்கள் தளபதியே தீபாவளி அன்று தருவார். அப்போது நீங்கள் எழுதிய இந்த பதிவை படித்துப்பார்த்துக்கொள்ளுங்கள். டாக்குடர் ரசிகர் என்று தெரிந்தும் உங்களிடம் பண்பை எதிர்பார்த்தது என் தவறு. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். Gimme more!!!! தளபதி அவர்களே உங்களுக்கு எதிரிகள் வேறு எங்கும் இல்லை. உங்கள் அருகிலேயேதான் இருக்கிறார்கள். வாழ்க தமிழத்தின் அண்ணா ஹசாரே விஜய் அவர்கள். 


பின்குறிப்பு: நான்தான் மொதல்லேயே சொன்னேன்ல. படிக்காதீங்கன்னு. அப்புறம் படிச்சு காண்டு ஆனா நானா பொறுப்பு? இந்த ஒரு பகுதி என் ஆத்திரத்தின் வெளிப்பாடுதான். அப்பா தளபதி ரசிகர்களே, என்னையும் இப்படி எழுத வைத்து விட்டீர்களே?. நான் எழுதியே மோசமான பதிவுகளில் இதுவும் ஒன்று என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இந்த வார்த்தைகளை நான் திரும்ப பெறப்போவதில்லை. 
 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


101 comments:

Unknown said...

உங்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

Unknown said...

உங்களை இவ்வளவு கடுப்பாக்கிய
அந்த பதிவுலக இளைய தளபதி யாரோ ?
ஆனால் ஒட்டுமொத்த பதிவுலக சினிமா விமர்சனங்களையும் தாக்கி விட்டீர்களே?

Unknown said...

கிரிக்கெட் உங்களுக்கு மிக விருப்பம் போல..


இந்திய அணி விரைவில் மீண்டெழும் என்று நம்புவோம்.
டிராவிட் அவுட் பற்றி உங்கள் பார்வையை கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

Unknown said...

தூக்கு தண்டனையை பற்றிய உங்களது கருத்துதான் என்னுடையதும்,
நில அபகரிப்பு வழக்கு நடுநிலைமையாக நடந்தால் சரிதான், நாளையே ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறலாம்,
இதுவே ஐபிஎல்னா மண்டி போட்டு விளையாடுவாங்க நம்ம பசங்க, ஆனாலும் இன்னும் நம்பிக்கை இருக்குங்க
மங்காத்தா படம் இடைவேளைக்கு அப்புறம் எனக்கு பிடிச்சிருந்தது, நீங்க சொல்ற பதிவர் யாருன்னு எனக்கு தெரியல பாலா,
உங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Unknown said...

நில அபகரிப்பு வழக்குகளின் தற்போதைய நிலவரத்தை வைத்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நீங்கள் சொன்னது போல, சில அரசியல் உள்குத்துகள் இருக்கலாம்..

"ராஜா" said...

// உங்களுக்கு தண்டனையை உங்கள் தளபதியே தீபாவளி அன்று தருவார்.

சூப்பர் ...


ரியல் எஸ்டேட் விஷயத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை ,

நான் இப்பவும் சொல்லுகிறேன் நம் அணி மீண்டு வரும் , அது எங்க எப்பன்கிறதுதான் சஸ்பென்ஸ்

Unknown said...

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுக்கின்றனர் # ஆதலால், இதனால் சகலமானவர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

Anonymous said...

தோழரே சினிமாவை விட்டு விடுங்கள் ....
கூத்தாடிகளை பற்றி யோசிப்பது நாகரீகமா...
அவர்கள் தொழிலில் அவர்களுக்கு சம்பளம் ....
அதில் நமக்கென்ன ....
படம் பார்த்தால் ரசிக்கலாம் விமர்சிக்கலாம்
அவனையும் இவனையும் தலைவனாக்காதீர்கள் ...
தலைவன் ஆகும் அளவுக்கு அவர்கள் என்ன செய்து விட்டார்கள் ?
அவன் நடை, உடை, கருத்து , வசனம், சிரிப்பு, அழுகை என்று எதுவுமே
அவனுடைய சொந்த அறிவில் இல்லை .... இன்னொருவரின் சொல் கேட்டு நடிப்பவன்....
எப்படி தலைவனாக்குகிரீர்கள் ... அவனை தலைவனாக நினைத்தால் நமக்கு அவமானம் தான் ...
மனிதனாய் இருப்போம் நம்மால் முடிந்தால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நல்லது செய்வோம்
அவர்களால் பாராட்ட படுவோம் .... நாமும் வளர்வோம் நம்மை சுற்றி உள்ளவர்களும் வளர்வார்கள்.... அமைதியான சந்தோசமான சூழல் உருவெடுக்கும்...

r.v.saravanan said...

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் பாலா

நானும் மங்காத்தா பார்த்து விட்டேன் பாலா அஜித் நன்றாக செய்திருக்கிறார்

பாலா said...

@பாரத்... பாரதி...

நண்பரே இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

விமர்சனங்களை நான் தாக்கவில்லை. பெரும்பாலானவை விமர்சனங்களாகவே இருப்பதில்லை.

டிராவிட் அவுட் இல்லை என்பது ரீப்ளெயில் தெளிவாக தெரிந்த பிறகும் அவுட் கொடுக்கப்பட்டது எப்படி என்று தெரியவில்லை.

நன்றி நண்பரே...

பாலா said...

@இரவு வானம்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@"ராஜா"

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறாங்க. அதான் தாங்க முடியல. நன்றி நண்பரே...

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

பாலா said...

@பெயரில்லா

தோழர் என்று என்னை அழைத்திருக்கிறீர்கள். கூத்தாடிகள் என்றால் அவ்வளவு கேவலமா? அதுவும் ஒரு தொழில்தானே? நான் தலைவன் என்று யாரையும் சொல்லவில்லையே? உங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கு வணங்குகிறேன். ஆனால் முகத்தை மூடிக்கொண்டு பெயரில்லாமல் கருத்து தெரிவிப்பது தேவையற்றது.

Anonymous said...

மேலே பெயரில்லா சொன்ன கருத்துதான் என் கருத்த்துமாகும். படம் பார்த்தோமா,வ்ந்தோமா அதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.அதில்லாம தளபதி,தலன்னு வெட்டி சண்டை போடுறீங்க,நாட்டில வீட்ல ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கப்பா,போயி அத கவனிங்க.அந்த நடிகர்கள்கள்தான் உங்களுக்கு சோறு போடுறாங்களா? பிரயோசனம் இல்லாத பிரச்சனையை வச்சுகிட்டு சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க.

சென்னை பித்தன் said...

என்ன பாலா இந்த அடி அடிச்சுட் டீங்க? பயங்கரக் கடுப்புத்தான் போல!

பாலா said...

@பெயரில்லா

நண்பரே பெயருடன் வந்தால் தேவலாம்.
சினிமா நடிகர்கள் கண்டிப்பாக எனக்கு சோறு போட போவதில்லை. நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். அப்படிப் பார்த்தால் பிளாக் படிப்பத்தால் உங்களுக்கு என்ன லாபம். இது சோறு போடப்போகிறதா என்ன? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாம் வாழ்வில் ஒரு பிடிப்பை உண்டாக்குபவை. சுவாரசியத்தை கூட்டுபவை. இது பற்றி இன உணர்வு பற்றிய பதிவில் கூறி உள்ளேன்.

பாலா said...

@சென்னை பித்தன்

உண்மையிலேயே செம கடுப்பு சார்.

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

தலைக்கும்,தளபதிக்காவும் இரண்டு தமிழ் பதிவர்கள் கருத்து மோதல் நடத்தவேண்டுமா? அவங்க இரண்டு பேரூம் ஒண்ணதா..ஒற்றுமையா வியாபாரம் பார்த்து கல்லா கட்டராங்கா..வேண்டாம் விடுங்க தலைவா...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

பாலா said...

@Rathnavel

ரொம்ப நன்றிங்க...

பாலா said...

@டி.கே.தீரன்சாமி.

வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றிங்க...

புண்ணாக்கு வெடிவேலு said...

தல ரொம்ப நச்சுனு சொன்னீங்க, நீங்க சொன்னதுபோல அந்த ஆள்கிட்ட பண்பை எதிர் பார்ப்பது நாம் தவறுதான்...

அந்த ஆளுக்கே தெரியும் போல அவர் பதிவு தவறு என்று, அதான் கமெண்ட் பொக்ஸ் ஐ மூடிட்டு குளிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டார்..

புண்ணாக்கு வெடிவேலு said...

தல ரசிகன் நாம் யாரும் விஜய் பற்றி தவறாக பிரச்சாரம் செய்ய வில்லை, அந்த பண்பு தலையிடமும் உள்ளது, ஆனால் அவனுக்கா ஏன் இப்படினு தெரில..

பாவம் பிரபலம் பொள்ளாச்சி போகட்டும்...

புண்ணாக்கு வெடிவேலு said...

ஆனாலும் பாருங்க அந்த மூஞ்ச வச்சிக்கிட்டு தல முடிய பத்தி.... ஹய்யோ ஹய்யோ..

இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா...

தளபதினு சும்மா காச்சுக்கும் சொன்னத உண்மைனு நம்பிட்டார் போல அந்த பிரபலம்(ப்ராப்ளம்)

புண்ணாக்கு வெடிவேலு said...

இத்தனைக்கும் விஜய் படத்தை வேற பெருந்தன்மயா தல காமிச்சி இருக்கார்...

இதை விட என்ன வேணும்???

சுதா SJ said...

நண்பா முதலில் கையை கொடுங்க
பெயர் இல்லாதவருக்கு நீங்க கொடுத்த பதில் அத்தனையும் உண்மை.........

சுதா SJ said...

பதிவு சூப்பர், மசாலா போல எல்லாத்தையும் கலந்து கட்டி உள்ளீர்கள்,
இதுவும் நல்லாத்தான் இருக்கு.... இடைக்கிடை இப்படியும் தொடருங்களேன்.....

சுதா SJ said...

ஹும்ம்......
விஜய்க்கு எதிரி வேறு யாரும் இல்லை
அவர் ரசிகர்கள்தான். விஜயை பல நேரங்களில் காமெடி பீஸ் ஆக்கிய பெருமை அவர் ரசிகர்களையே சேரும்.

Riyas said...

ஒரே பதிவில் பல விடயங்களை கூறியிர்க்கிறீர்கள்..

//பதிவுலகமே மொக்கை என்று ஒதுக்கிய பல படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன// எனக்கும் அப்பிடியே உ+ம் 180, யாரந்த தளபதி ரசிகர்/பதிவர்.. யோசிக்கிரேன் இவராயிருக்குமோ,,? இல்லை அவராயிருக்குமோ..?

Anonymous said...

நான் நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள் ஆனால் அந்த பதிவர் ரெம்பதான்.......... அதை பற்றி பேச இவருக்கு தகுதி இருக்கிறதா என்று இவரது பிரோபைல் போட்டோ பார்த்தால் உங்களுக்கே புரியும். Super

Anonymous said...

நான் நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள் ஆனால் அந்த பதிவர் ரெம்பதான்.......... அதை பற்றி பேச இவருக்கு தகுதி இருக்கிறதா என்று இவரது பிரோபைல் போட்டோ பார்த்தால் உங்களுக்கே புரியும். Super

பாலா said...

@புண்ணாக்கு வெடிவேலு

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. என்னை விட எமோசனலான ஆளா இருப்பீங்க போலிருக்கே?

Rajesh V Ravanappan said...

"என்னைப்போன்ற ரசிகர்களுக்கு ஒரு பழக்கம். படம் பார்த்து விட்டு வந்தவுடன், பதிவுலகில் எப்படி விமர்சித்திருக்கிறார்கள் என்று தேடுவோம்."

100% உண்மை!! படம் பார்த்ததிலிருந்து இன்று வரை நான் கூகுளில் தேடும் வார்த்தை மங்கத்தா தான்!! இப்போது "GAMBLER " ஆக SEP 9 ம் தேதி தெலுங்கில் ரிலீஸ்... அவர்கள் response எப்படி இருக்கும் என்ற ஆவல்!! தவிர GAMBLER ஹிட் அஜித்க்கு தெலுங்கு மார்க்கெட்டையும் கொடுக்கும்.. அப்புறம் பில்லா -2 வில் பிரபாசை பார்க்கும் கொடுமையிலிருந்து தெலுங்கு மக்கள் தப்பிப்பர்..

பாலா said...

@துஷ்யந்தன்

சரியாக சொல்லி இருக்கிறீர்கள். காவலன் என்ற சுமாரான படத்தில் நடித்ததற்கே அவர் ஆஸ்கார் ரேஞ்சுக்கு உயர்த்தினார்களே... அவருக்கு எதிரிகள் எஸ்ஏசி மற்றும் ரசிகர்கள்தான். நன்றி நண்பரே...

பாலா said...

@Riyas

விடுங்க நண்பா. நானும் ஏதோ கடுப்புல எழுதிட்டேன். அவர் அடிக்கடி இப்படி ஏதாவது செய்து எஸ்கேப் ஆகிறவர்தான்.

பாலா said...

@பெயரில்லா

கருத்துக்கு நன்றி நண்பரே... பெயருடன் வந்தால் நன்றாக இருக்கும்..

பாலா said...

@Rajesh V Ravanappan

அப்படியா நண்பரே... மங்காத்தா படம் பார்க்கும்போதே இதை தெலுங்கில் டப் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். தகவலுக்கு நன்றி நண்பரே....

K.s.s.Rajh said...

//"முதல் போட்டி ஜெயிக்க வேண்டியது, அது ஜெயித்திருந்தா வீரர்கள் உற்சாகத்தோடு விளையாடி கோப்பையை வென்றிருப்பார்கள்." என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்ளலாம். //

சரியாக புரிந்து வைத்து இருக்கிறீங்க....அப்பறம் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் நண்பா

பாலா said...

@K.s.s.Rajh

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...

ஜெயமாறன் நிலாரசிகன் said...

நண்பரே நானும் அஜித்தின் மிக பெரிய ரசிகன் தான். ஆனால் படம் பார்க்கும் போது மட்டுமே. அவர்கள் இருவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் அவர்களுக்காக நாம் ஏன் சண்டைபோட வேண்டும் நண்பரே.
மங்காத்தா பார்த்தேன் மிகவும் அருமை..................

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் நண்பா. தொடர்து வெற்றி கிடைத்தால் அந்த வெற்றிக்கு எது மதிப்பு............

kumar2saran said...

மண்ணாகி போன மங்காத்தானு சொன்னவரு தான்.

பாலா said...

@ஜெயமாறன் நிலாரசிகன்

நானும் இதுவரை இந்த மாதிரி எழுதியதே கிடையாது. மல்லுக்கு நிற்பதும் கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்களை தொடர்ந்து கவனித்து வருவதுண்டு. அவர்களுக்கு சரியான நேரத்தில் பதிலடி தருவதற்கே இதை எழுதினேன். நன்றி நண்பரே...

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

பாலா said...

@kumar2saran

நீங்க பெயில் அவர் கிடையாது...

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

ரொம்ப நன்றிங்க...

Rajesh V Ravanappan said...

thanks Bala!!

தமிழ்நாடு மார்க்கெட் மட்டும் வைத்திருக்கும் போதே தல ய வச்சி 30 - 40 கோடி செலவுல படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க... தெலுங்கு மார்க்கெட்டும் கூடிருச்சினா அப்புறம் 70 - 80 கோடி பட்ஜெட்டும் அசராம வந்து சேரும்.

kumar2saran said...

இது என்ன மறைமுக அர்ச்சனை. தைரியம் இல்லையோ தல ரசிகருக்கு.

பாலா said...

@Rajesh V Ravanappan

நீங்கள் சொல்வது உண்மைதான். இதை மனதில் வைத்தே முதலில் அர்ஜூன் கேரக்டருக்கு நாகார்ஜுனாவை பேசினார்கள் என்று நினைக்கிறேன். இருந்த்தலும் அர்ஜூனுக்கும் தெலுங்கில் நல்ல பெயர் இருக்கிறது. இந்தப்படம் அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டாலும் வித்தியாசமாக் தெரியாது.

பாலா said...

@kumar2saran

இப்படி எல்லாம் உசுப்பேற்றினால் சொல்லி விடுவோமா? பொதுவாக பதிவுலகில் இப்படி பெயர் சொல்வதை தவிர்க்கவே விரும்புகிறேன். ஆமா நீங்க யாரு?

kumar2saran said...

இத்தன பெர விட்டுட்டு என்ன மட்டும் யாருனு கேக்கறீங்களே. நியாயமா பாலா.

பாலா said...

@kumar2saran

உங்க கருத்து ஒரு மார்க்கமா இருந்ததாலே கேட்டேன். பொதுவாக உனக்கு தைரியம் இருந்தா சொல்லு பார்ப்போம் என்று உசுப்பேற்றும் ஆட்களை நான் நம்புவதில்லை.

kumar2saran said...

அட.. இப்படி உசிப்பி விட்ட எந்த பதிவர்னு தெரிஞ்சிகலாம்னு ஒரு அவா தான். மத்தபடி நான் அப்ரானி.( நான் உங்களை உனக்கு தைரியம் இருந்தால் என்று ஒருமையில் அழைக்கவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.)

பாலா said...

@kumar2saran

அதான் சொல்வதில்லை என்று சொல்லி விட்டேனே? அப்புறம் நீங்கள் என்னை ஒருமையில் அழைக்கவில்லை. அது பொதுவாக சொன்னது. நன்றி நண்பரே...

செங்கோவி said...

இப்போத் தான் ஆஃபீஸில் இருந்து வந்தேன்........


ஆசிரியர் தின வாழ்த்துகள் நண்பா!

செங்கோவி said...

அடடா..நல்லநாளும் அதுவுமா இப்படிக் கோபப்படலாமா?........கூல்!

செங்கோவி said...

நாங்க எழுதுறதெல்லாம் விமர்சனமே இல்லைன்னு சொன்ன அப்புறம் நான் எப்பாடி கூலா இருக்கேன்.அதே மாதிரி...ஹா..ஹா!

செங்கோவி said...

சிக்ஸரா அடிச்சுத் தள்ளியிருக்கீங்களே.....ஆனாலும் இது வேண்டாம்யா!

பாலா said...

@செங்கோவி

வாங்க நண்பா... நல்ல நாள் அதுவுமா ஒரு வாழ்த்து கூட தெரிவிக்க விடாம பண்ணிட்டாங்க பாவி பசங்க...

அப்புறம் விமர்சனம் கிடையாது என்று சொன்னது மட்டம் தட்டும் நோக்கம் அல்ல. படத்தை பற்றிய சொந்த கருத்து விமர்சனம் ஆகாதுதானே?

அதான் பின்குறிப்பில் சொல்லி இருக்கேனே? என்னையே எழுத வச்சுட்டாங்களே?

சேலம் தேவா said...

//அப்ப போயி சாக வேண்டியதுதானே... என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது//

கேட்ருச்சா..?!கலக்கல் பதிவு பாஸ்..!! :)

joker said...

ஆக ஊர் இரண்டுபட்டுட்டு...


மேலே பெயரில்லா 1,பெயரில்லா2 சொன்ன கருத்துதான் என் கருத்த்துமாகும். படம் பார்த்தோமா,வ்ந்தோமா அதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.அதில்லாம தளபதி,தலன்னு வெட்டி சண்டை போடுறீங்க,நாட்டில வீட்ல ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கப்பா,போயி அத கவனிங்க.அந்த நடிகர்கள்கள்தான் உங்களுக்கு சோறு போடுறாங்களா? பிரயோசனம் இல்லாத பிரச்சனையை வச்சுகிட்டு சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க...

கும்மாச்சி said...

தளபதி பற்றி உண்மையைத்தான் எழுதி இருக்கிறீர்கள் இதில் வருந்த வேண்டிய அவசியமில்லை.

vivek kayamozhi said...

விடுங்க பாஸு.... பாவம் படத்தோட ஒபெநிங்க பாத்துட்டு மர கழண்டு போச்சு.
குற்றாலம் போக காசு கொடுத்து அனுப்பாம லூசு பயலப்போயி திட்டிட்டு இருக்கீங்க.

யார் என்ன சொன்னாலும் படம் மெகா ஹிட். வேலாயுதமும் ஓடட்டும், யார் வேண்டான்னா? நீங்க என்ன சொல்லுவீங்களோ சொல்லிக்குங்க ... இதுவரை ஓபனிங் கிராண்டா இருப்பது அஜித்துக்கு தான்...

நானே மங்காத்தா வை எதிர்பார்க்கவில்லை, இன்னொரு ராஜுசுந்தரம் என்றுதான் நினைத்தேன். இன்னும் நிறைய சொல்லலாம், அனால் நிறையபேர் மனது புண்படும் என்பதால் இதோடு விடுவோம். யார் யார் படமெல்லாம் ஓடுது, அஜித் படம் மட்டும் ஓடிவிட்டால் சிலருக்கு பேதியாகிறது. அவர்கள் எண்ணம் அப்படி. நமக்கு அப்படியில்லை. விஜய் படம் ஓடினால் ஒன்றும் வருத்தமில்லை.

Rajesh V Ravanappan said...

தல ரசிகனா இருந்துட்டு ஜாக்குவார் தங்கம் ஸ்டுண்டுக்கெல்லாம் REACT பண்ணக் கூடாது.. !! "தனி வழி! தன்னடக்கம்!! தன்னம்பிக்கை!! " - FREE யா உடுங்க பாஸ்!!

Nirosh said...

என்னத்த சொல்லுறது நண்பா... நானும் முதல் முதல்ல ஒரு விமர்சனம் எழுதப் போனேன்.. என்னையும் காண்டாக வைத்துவிடான் ஒருவன்... ம்ம்ம் அத விடுங்க.. அருமையான அலசல் வாழ்த்துக்கள்..!

Philosophy Prabhakaran said...

// மேலும் பதிவுலகில் எழுதப்படுவதில் பெரும்பாலானவை விமர்சனமே அல்ல என்பதே என் கருத்து. அவை ஸ்பாய்லர்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் //

நூறு சதவிகிதம் உண்மை... கேபிள் உட்பட சிலரை தவிர்த்து மற்றவை வெறும் ஸ்பாயிலர்களே...

Philosophy Prabhakaran said...

// இதில் பெரிய காமெடி என்னவென்றால் அஜித்தின் ஹேர்ஸ்டைலை பற்றி கிண்டல் செய்திருக்கிறார். அதை பற்றி பேச இவருக்கு தகுதி இருக்கிறதா என்று இவரது பிரோபைல் போட்டோ பார்த்தால் உங்களுக்கே புரியும். //

ஹா... ஹா... ஹா... நானும் படித்தேன்... அவர் ஒரு சிறந்த படைப்பாளி, நகைச்சுவையாக எழுதுவதில் திறமைசாலி... ஆனால் சில நேரங்களில் அபத்தமான கருத்தை வெளியிடுகிறார்... என்னத்த சொல்ல...

Unknown said...

அரசியல்ல பங்கேடுத்துகிட்டீங்க மாப்ள.....கலக்கல் கலவையா இருக்கு மாப்ள....யாருப்பா அந்த தலைவலி ரசிகரு....ஹிஹி!

Anonymous said...

விடுங்க பாஸ்...சட்னியை தலையில கொட்டினமாதிரி இவங்க தளபதி ஹேற் ஸ்டைலை பார்த்து நாடே சிரிச்சது

Anonymous said...

first yenakku therinthu intha blogger black pannunaathaanda correct da irukkum....thala thalapathi na yevanda . ivanukku poi adichikiriyaa.seri 2 tharuthala fans m sani payalkalda..yennamo yokkiyam mathiri pesuraaru poi yethuna house la aduppu yeriyuthu nu paarungadaaaaa ..pongada...ithula allakaikal vera

கேரளாக்காரன் said...

Romba naal kathirunthathukku oru mass hit kedachirukkuu. Velayutham solrathukku onnume illa athu thanaala nadakkum

கேரளாக்காரன் said...

Thambi nameless yaarum veetla adupa anaichu vachuttu mangaatha pakka pogala. Naanga adupu aprama pathavachikkarom nee veetla solli mothalla onaku oru name vakka sollu okay

செங்கோவி said...

ரைட்டு.

Anonymous said...

http://www.karkibava.com/2011/09/jolly-tweets.html

Anonymous said...

தல ரசிகனா இருந்துட்டு ஜாக்குவார் தங்கம் ஸ்டுண்டுக்கெல்லாம் REACT பண்ணக் கூடாது.. !!

well frog u know?

Anonymous said...

தல ரசிகன் நாம் யாரும் விஜய் பற்றி தவறாக பிரச்சாரம் செய்ய வில்லை

un allakkai friend raja blogla poi paaru.ajith posts vida vijay pathithaan niraya ezuthi irukkaan. vanthuttaaru sollu. pera paaru. punnaakku. thala peraiye vachikittinglaannaa?

Guna said...

Nandru.

Mankatha was good. As you said.. the fans of the other actor will do these kind of dirty comments.

Hope they will watch his diwali release and waiting for their movie review for that movie.

பாலா said...

@vivek kayamozhi

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@panamethan valkaiyada


அவங்க ரெண்டு பேருக்கும் சொன்ன பதில்தான் உங்களுக்கும். கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@கும்மாச்சி

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@vivek kayamozhi

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.. தான் மட்டும்தான் அறிவாளி என்கிற நினைப்பில் எழுதியமைக்கு பதிலாகவே இதை எழுதினேன்/

பாலா said...

@Rajesh V Ravanappan

நீங்க சொல்றது கரெக்தான் நண்பரே. ஆனா தலய திட்டுறத பார்த்து சும்மா இருக்க முடியுமா? கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@Nirosh

நண்பரே அந்த ஒருவன் நான்தானா? நீங்க பாட்டுக்கு எழுதுங்க. அது உங்க உரிமை.

பாலா said...

@Philosophy Prabhakaran

அவரைபற்றி இருந்த ஓட்டு மொத்த மரியாதையையும் இழந்து விட்டார். என்னத்த சொல்ல வருகைக்கு நன்றி.

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள அது ஒரு காமெடி கதை. எனக்கே இப்போ கோபம் குறைஞ்சு போச்சு.

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

இனியும் சிரிக்க போகுதுண்ணுதான் அந்த ரெண்டு படமும் போட்டிருக்கேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@பெயரில்லா

அண்ணா வணக்கங்கண்ணா? உங்க வீட்டுல அடுப்பெரியுதான்னு பாக்காம உங்கள யாருன்னா இந்த பக்கம் வரச்சொன்னா? மொதல்ல போய் பாருங்கண்ணா.

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

சரியா சொன்னீங்க... தன்னால நடக்கும்.

பாலா said...

@பெயரில்லா

அதெப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருக்கீங்க? சரி உடுங்க... வேலாயுதம் பாட்டெல்லாம் கேட்டாச்சா?

பாலா said...

@Guna

கருத்துக்கு நன்றி நண்பரே...

எப்பூடி.. said...

ஒரு மிகச்சிறந்த எழுத்து நடையுள்ள கார்க்கியின் (பெயரை குறிப்பிடுவதில் என்ன தவறு?) விஜய் மீதான அனுமானம் அவரது எழுத்துக்களின் மதிப்பை குறைத்திருப்பது கவலையான விடயமே. விஜய் பற்றி பதிவுகளை எழுதும் பொது அவர் தன்னைவிட வேறு யாரையோ திருப்திப் படுத்துவது போலவே உள்ளது. பல சமயங்களில் மற்றவனை கேனயனாக்குவதுபோல விஜயை உயர்த்தியும் போட்டி நடிகர்களையும் தாழ்த்தி எழுதுகிறார்.

அவரது தளம் அவருக்கு பிடித்ததை எழுதலாம், ஆனால் எனது தளம்தானே என்று பிடிக்காதவர்களது உயர்வையும் கேவலமாக எழுதினால் எமக்கு ஒன்றுமில்லை, அவரே அவரை தாழ்த்துகிறார் என்று என்ன வேண்டியதுதான்.

a good writer going wrong way :-(

எப்பூடி.. said...

ஒரு மிகச்சிறந்த எழுத்து நடையுள்ள கார்க்கியின் (பெயரை குறிப்பிடுவதில் என்ன தவறு?) விஜய் மீதான அனுமானம் அவரது எழுத்துக்களின் மதிப்பை குறைத்திருப்பது கவலையான விடயமே. விஜய் பற்றி பதிவுகளை எழுதும் பொது அவர் தன்னைவிட வேறு யாரையோ திருப்திப் படுத்துவது போலவே உள்ளது. பல சமயங்களில் மற்றவனை கேனயனாக்குவதுபோல விஜயை உயர்த்தியும் போட்டி நடிகர்களையும் தாழ்த்தி எழுதுகிறார்.

அவரது தளம் அவருக்கு பிடித்ததை எழுதலாம், ஆனால் எனது தளம்தானே என்று பிடிக்காதவர்களது உயர்வையும் கேவலமாக எழுதினால் எமக்கு ஒன்றுமில்லை, அவரே அவரை தாழ்த்துகிறார் என்று என்ன வேண்டியதுதான்.

a good writer going wrong way :-(

பாலா said...

@எப்பூடி..

என்னுடைய எண்ணத்தை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். அப்புறம் தலைவரே என்ன உங்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லை. வேலை பளு அதிகமா?

எப்பூடி.. said...

வேலைப்பளுவெல்லாம் இல்லை, இப்பெல்லாம் ஒவ்வொருநாளும் மாலையில் கிரிக்கட் விளையாடுவதால் பஞ்சி/சோம்பல், மற்றப்படி ஒன்றுமில்லை, மீண்டும் தீவிரமாக எழுதும் எண்ணம் உள்ளது, விரைவில் எழுதிட்டாப் போச்சு :-)

அந்நியன் 2 said...

பதிவில் இவ்வளவு எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும் என நினைக்கவில்லை.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

பாலா said...

@எப்பூடி..

நன்றி நண்பரே... விரைவில் எழுதுங்கள்.

பாலா said...

@அந்நியன் 2

மிக்க நன்றி நண்பரே.

"ராஜா" said...

சூனா பாணாக்கள் தயவு செய்து பேரோட வந்து கமெண்ட் போடுங்கப்பா ....

Honey said...

Unga blog interestinga erukunu vikatan la erunthu thedi pidichu 2 nalla thodarnthu padichutu vanthen. but ungaloda entha pathiva parthathum neengalaum sarasari pathivar than appadinu therinchuruchu. eni unga blog pakkame vara maten.

Honey said...

ajith romba olukama? rasikar mantram ellainu ore build-up. but appuram ethatku yar cut-out pal abisekam natathunanga? ellam vesam. 10 film appuram oru film sumara odunathuke evlo attama? ean neengalum oru padathula hero natichu parka vendiyathu thana? vanthuranga ellarum mathavanga kurai solla

Unknown said...

vijaya kettavar enru solli ajith mattum gandhi enru sollum ungal ennam eppothu than marapogiratho

பாலா said...

@antony

மிக தாமதமாக இருந்தாலும் கருத்து தெரிவித்ததற்கு நன்றி. கட்டுரையில் முன் குறிப்பு பின் குறிப்பு ஆகியவற்றை படித்தீர்களா? இந்த கட்டுரை எழுத காரணமான அந்த பதிவிரின் கட்டுரையை படித்திருக்கிறீர்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...