விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 21, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 4

நண்பர் அந்நியன் 2 உள்பட நிறைய பேர் "தமிழ்மணம் பட்டை எங்கே?" என்று கேட்டிருக்கிறார்கள். முதல் காரணம் முதலில் இருந்தே அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. மற்றொரு காரணம், வெகு காலமாக அந்த பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு வழியாக இணைத்து விட்டேன். ஆனால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் பதிவிற்கு மேலே இருக்கிறது. எப்படி கீழே கொண்டு வருவதென்று தெரியவில்லை. ஓட்டுப்போடணும்னா சிரமம் பார்க்காம, மேலே உள்ள தமிழ்மண பட்டையிலும் ஒரு அழுத்து அழுத்துங்க. இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளில் என்னை கவர்ந்த வீரர்களை பற்றி எழுதுகிறேன். இந்த பட்டியல் மிக பெரியது என்பதால், மிகவும் கவர்ந்த வீரர்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறேன். 



பாகிஸ்தான் 

இந்திய அணியின் சொந்த சகோதரன். அடிக்கடி உரசல் வரும். அந்த உரசல் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கும். உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு இல்லாத பரபரப்பு, இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு உண்டு. மேலும் இரு அணி வீரர்களும், மற்ற அணிகளோடு ஆடுவதை விட ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். மிகுந்த சர்ச்சைகள் நிறைந்த, அதிரடி திருப்பங்கள் மிகுந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு. அதில் என்னை கவர்ந்த சில வீரர்கள் உள்ளனர். 

இன்சமாம் உல் ஹக் 


1992 உலகக்கோப்பையின் ஹீரோ. மிக அழகான, பெண்களுக்கு பிடித்த வீரராக திகழ்ந்தவர். மிக மிக மெதுவாக செயல்படும் ஒரு வீரர். இவ்ரது பெயரை சொன்னதுமே, கூடவே ஞாபகம் வருவது ரன் அவுட். இவருக்கும் ரன் அவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஆனால் பாகிஸ்தானின் அபாயகரமாக வீரர்களுள் இவரும் ஒருவர். 

சயீத் அன்வர்


பாகிஸ்தான் வீரர்களிலேயே மிக அமைதியான வீரர். இவரும் முகத்தில் எந்த வித சலனமும் காட்டமாட்டார். சிரித்துக்கொண்டே சிக்சர் அடித்து பவுலர்களை கடுப்பேற்றுவதில் கில்லாடி. அதே போல கொஞ்சம் கூட களைப்படையாமல் நீண்ட நேரம் ஆடக்கூடியவர். 

வக்கார் யூனிஸ்


பாகிஸ்தான் முதன்மை பவுலர்களில் ஒருவர். பந்து வீச்சில் 90களில் குறிப்படத்தக்க ஒருவராக திகழ்ந்தவர். பாகிஸ்தான் அணியில் நீண்ட காலம் நிலைத்து ஆடுவது என்பது கஷ்டம். இவர் நீண்ட காலம் பாகிஸ்தான் அணியில் ஆடியவர். 

மொஹம்மத் யூசுஃப் 


இவர் சரியான விடாக்கண்டன். பாகிஸ்தான் அணி படு மட்டமாக ஆடி பாதாளத்தில் கிடக்கும்போது இவர் களத்தில் இறங்கி வெற்றிகரமாக மீட்பார். இவரை அவுட் ஆக்குவது என்பது மிக சிரமமான காரியம். முதலில் ஒரு கிருத்துவராக, யூசுஃப் யுகானாவாக இருந்தவர், பின்னர் இசுலாமுக்கு மாறி மொஹம்மத் யூசுஃப் ஆனார். 

ஷாஹித் அப்ரிடி


இன்று வரை பாகிஸ்தான் ரசிகர்களின் கனவு நாயகன். ஒரே படத்தின் மூலம் மாதவன் பல பெண்கள் மனதில் இடம் பிடித்ததை போல, ஒரே ஆட்டத்தில் பல பெண்களின் கனவு நாயகனாக மாறியவர். மிக அழகான கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். மரண அடிக்கு பெயர் போனவர். பெரும்பாலும் ஒன்றிரண்டு பந்துகளிலேயே அவசரப்பட்டு அவுட் ஆகி விடுவார். ஆனால் அப்படி ஆகாமல் நிலைத்து விட்டால், பவுலர் பாடு திண்டாட்டம்தான். சமீபகாலமாக பவுலிங்கில் சிறந்து விளங்குகிறார். 

சக்லைன் முஷ்டாக்


தொண்ணூறுகளில் ஆட்சி செய்த ஒரு சில ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர். மிக மிக மெதுவாக பந்து வீசுவார். இவரது சிறப்பம்ஸமே, இவர் வீசும் டாப் ஸ்பின்தான். அதாவது பந்து வெகு நேரம் காற்றிலேயே பறந்து வரும். எந்த இடத்தில் தரையில் படும் என்று கணிக்க முடியாது. குறுகிய போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 

அப்துல் ரசாக்


ஒரு காலத்தில் சச்சினை வீழ்த்த வேண்டுமா? கொண்டு வா ரசாக்கை, என்ற நிலை இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. சச்சின் இவரது பந்து வீச்சில் திணறி வந்தார். பாகிஸ்தானின் இடைப்பட்ட ஓவர்களை வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதில் வல்லவர். மேலும் பேட்டிங்கிலும் கொஞ்சம் அபாயகரமானவர்தான். இவரது நடை உடை பாவனைகளில் எல்லாம் பெண்ணின் சாயல் இருக்கும். 

வாசிம் அக்ரம் 


கிரிக்கெட்டின் சிறந்த பவுலர்களில் இவரும் ஒருவர். பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. ரிவர்ஸ் ஸ்வீங் என்ற முறையை திறமையாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியவர். நிறைய ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையிலும் சிக்கியவர். 


இலங்கை 

பாகிஸ்தான் அணி போலவே இலங்கை அணியும் இந்திய கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. விடா முயற்சிக்கு பெயர் பெற்ற ஒரு அணி. எந்த ஒரு தொடரையும் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

முத்தையா முரளிதரன் 


கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி, ஒரு நல்ல மனிதராகவும் இவரை எனக்கு பிடித்திருக்கிறது. எந்த ஒரு கள்ளம் கபடமும் இல்லாத மனிதராக விளங்கும் இவர், கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவர். நிறைய சர்ச்சைகளை தாண்டி, சாதித்து காட்டியவர். நாடுகள் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு வீரர்.


சனத் ஜெயசூரியா


தொண்ணூறுகளில் பல பவுலர்கள் வயிற்றில் புளியை கரைத்தவர். ஈவு இரக்கமற்ற வீரர்களுள் ஒருவர். இலங்கை உலகக்கோப்பை வென்றதில் இவர் பங்கு சிறப்பானது. மிக சிறந்த பீல்டரும் கூட. இவர் களத்தில் விளையாடுவதை பார்த்தால், இவருக்கு 41 வயது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். 

அரவிந்த டி சில்வா 


இவரப்பார்த்தால் எமதர்மன் தோளில் கதாயுதத்தை சுமந்து கொண்டு வருவது போல இருக்கும். இலங்கையின் உலகக்கோப்பை நாயகன். அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்லாமல், டெக்னிக்கலாக ஆடுவதிலும் வல்லவர். துல்லியமாக பந்து வீசி தக்க சமயத்தில் பாட்னர்ஷிப்புகளை உடைப்பதிலும் வல்லவர். 

சமீந்தா வாஸ் 


90களில் குறிப்பிடத்த்க்க வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். நீண்டகாலம் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அதிகம் அவதிப்படுவர். ஆனால் காயமில்லாமல் அதிக காலம் அணியில் ஆடியவர். 

ரோஷன் மகானமா


நான் பார்த்த முதல் இலங்கை வீரர். 1994 என்று நினைக்கிறேன். அப்போது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். நிலையாக நின்று சாதிப்பார். இவர் ஒரு ஸ்லோ பாய்சன். மெதுமெதுவாக எதிரணியை வீழ்த்துவார். 1996 உலகக்கோப்பையில், அரையிறுதியில் இந்தியாவின் கோப்பை கனவில் மண் அள்ளி போட்டவர். 

அர்ஜுனா ரணதுங்கா 


எதிரணிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். ஒரு சிறந்த கேப்டன் எப்படி இருக்க வேண்டும், ஒரு அணியை இக்கட்டான நேரத்தில் எப்படி வழி நடத்த வேண்டும் என்று இவரைப்பார்த்து கற்றுக்கொள்ளலாம். இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரர். 

லசித் மலிங்கா 


தற்காலத்தில், பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர். இவரது ஜெட் வேக யார்க்கர்களை சமாளிக்க முடியாமல் நிறைய வீரர்கள் மண்ணை கவ்வி இருக்கிறார்கள். எந்த ஒரு நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். வித்தியாசமாக ஹேர்ஸ்டைலில் அனைவரையும் கவர்ந்தவர். இவரைப்பார்த்தால் எனக்கு மயில்சாமி ஞாபகம் வருகிறது. 


உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழ்மணத்திலும், இண்ட்லியிலும் ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

34 comments:

பாலா said...

சிறு தொழில் நுட்பகோளாறு காரணமாக பதிவில் குழப்பம் ஏற்பட்டு விட்டது. இப்போது சரி செய்து விட்டேன்.

Unknown said...

எல்லா விஷயமும் சூப்பர் மாப்ள...அதுவும் அந்த கடைசியா இருக்க ஹேர் ஸ்டைல் இருக்கே...அந்த மினு மினுப்புல அவுட்டானவங்க நெறைய பேரு ஹிஹி!

Nirosh said...

நாம்தான் நம்பர் ஒன்...!

"மலிங்க மயில்சாமி" சூப்பர் மச்சி....!

தமிழ்மணம் 1.

என்ன இலங்கை அணியில் மகேல... சங்கா... ரெண்டுபேரையும் விட்டுதீங்க.!

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வந்துட்டேன் கிரிக்கெட்டில் பயணம் செய்ய...

பால கணேஷ் said...

அரவிந்தாவின் ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். அழகாக கருத்து சொல்லி வரிசைப்படுத்தியுள்ளீர்கள். பிரமாதம்!

rajamelaiyur said...

Murali is a really a Good spinner

K.s.s.Rajh said...

எனக்கு பிடித்த அத்தனை வீரர்களும் உங்களுக்கும் பிடித்து இருக்கின்றார்கள்..சூப்பர்..அப்பறம்.
சங்ககாரவை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை.....

மேலே நான் போட்ட கமண்ட்..நீங்கள் கேட்ட தமிழ் மணம்பட்டையை கீழே கொண்டு வருவது பற்றி..ஆனால் அந்த எந்தகோடிங்கு கீழே பேட்ஸ்செய்யவேண்டும் அந்த கோடிங்கை..டைப்பன்னினால் உங்கள் கருத்துரையில் வருகுது இல்லை அதான் அழித்துவிட்டேன் நீங்கள் நீக்கிவிடுங்கள்..

K.s.s.Rajh said...

நண்பரே..உங்களுக்கு தமிழ்மணம் ஓட்டு பட்டை கீழே கொண்டுவருவது பற்றி.மெயில் போட்டு இருக்கேன் பாருங்கள்

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள. மலிங்கா இந்தியாவில் மிக பிரபலம். உபயம் மும்பை இந்தியன்ஸ்

பாலா said...

@Nirosh

நான் பெற்ற முதல் தமிழ்மண ஓட்டு உங்களோடது. நன்றி நண்பரே. அப்புறம் மகேலா சங்கா இருவரும் ஏனோ என்னை கவரவில்லை.

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

நன்றி நண்பரே.

பாலா said...

@கணேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

என்னை பொருத்தவரை அவர் பெஸ்ட் ஸ்பின்னர்

பாலா said...

@K.s.s.Rajh

ஏனோ சங்கா என்னை கவரவில்லை. அப்புறம் நீங்கள் சிரத்தை எடுத்து மெயில் அனுப்பியதற்கு நன்றி.

மாய உலகம் said...

கலக்கல் பாஸ்

பாலா said...

@மாய உலகம்

நன்றி நண்பா

சென்னை பித்தன் said...

வழக்கம் போல் நல்ல தேர்வே!

Unknown said...

பாலா நீங்க இந்த கிரிக்கெட் தொடர கண்டிப்பா பெரிய பத்திரிக்கை எதுக்காவது அனுப்புங்க, ரொம்ப நல்லா இருக்குங்க

பாலா said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி சார்

பாலா said...

@இரவு வானம்

நன்றி நண்பரே. முயற்சி செய்கிறேன்.

எப்பூடி.. said...

இங்குள்ள வீரர்களை பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள் அனல் பறக்கின்றன, என்னருகில் யாருமில்லை, யாராவது சிக்கியிருந்தால் பழைய மட்ச்களை பற்றி நினைவு கூர்ந்து அருகிலிருப்பவர் காதை ரணமாக்கியிருப்பேன் :-) 1996 ஸ்ரீலங்கா 1999 பாகிஸ்தான் அணியில் விளையாடிய வீரர்களில் 90 வீதமானவர்கள் எனது பேவரிட்.

அன்றுபோல் இன்று வீரர்களை அளவு கடந்து ஆக்ரோஷமாக ரசிப்பதில்லை (மஹேலா தவிர்த்து)

Philosophy Prabhakaran said...

இதென்ன கேள்வி... javascriptல இன்ட்லி எங்க இருக்குன்னு தேடி அதுக்கு கீழே தமிழ்மண ஓட்டுப்பட்டையை வையுங்க... இல்லைன்னா பதிவு ஒப்பன் ஆகறதுக்கு நேரம் எடுக்கும்...

Philosophy Prabhakaran said...

மொயின் கான் உங்க லிஸ்டுல இல்லையே...

அந்நியன் 2 said...

நல்லதொரு பகிர்வு பாஸ்.

உங்கள் பதிவு அனைத்தையும் இணைத்து ஒன்றாக படித்தால் கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் வந்துவிடும் என நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

பாலா said...

@எப்பூடி..

நன்றி தலைவரே. நான் தற்கால வீரர்களை குறிப்பிடாததன் காரணமும் அதுதான்.

பாலா said...

@Philosophy Prabhakaran

நன்றி நண்பா. மொயின்கான் மீது மொதல்ல இருந்து என்னமோ ஈடுபாடு இல்லை.

பாலா said...

@அந்நியன் 2

நன்றி நண்பா. வேணாம் நண்பா. இப்போது கிரிக்கெட் அவ்வளவாக சரியில்லை.

இராஜராஜேஸ்வரி said...

வெகு காலமாக அந்த பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை.

arasan said...

அனைவரும் நல்ல வீரர்கள் தான் ..
எனக்கும் இதில் பலரை பிடிக்கும் ..
பாகிஸ்தானின் யூனிஸ்கானையும் ரொம்ப பிடிக்கும் ..

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

தமிழ்மணம் தளத்தில் வலது ஓரத்தில் தமிழ்மணம் டூல் பார் இணைக்கும் முறைக்கு லிங்க் கிடைக்கும். அதன் மூலம்தான் நானும் இணைத்தேன்.

பாலா said...

@அரசன்

கருத்துக்கு நன்றி நண்பரே.

Anonymous said...

மறந்து இருந்த விளையாட்டு நினைவுகளை கொண்டு வர்றீங்க கொஞ்ச கொஞ்சமா...

சீனுவாசன்.கு said...

பாலா அப்பிடியே கொஞ்சம் சீனுவசன் பக்கங்களையும் வந்து பாருங்க!நல்லா இருக்கா சொல்லுங்க!வாங்க பழகலாம்!

சீனுவாசன்.கு said...

பாலா அப்பிடியே கொஞ்சம் சீனுவசன் பக்கங்களையும் வந்து பாருங்க!நல்லா இருக்கா சொல்லுங்க!வாங்க பழகலாம்!

Related Posts Plugin for WordPress, Blogger...