விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 22, 2010

பிடித்த இயக்குனர்களின் பிடிக்காத படங்கள்...

எவ்வளவு நாள்தான் சீரியசாக பதிவு போடுவது? கொஞ்சம் ரிலாக்சான பதிவாக போடவேண்டும் என்று எண்ணி இந்த பதிவு போடுகிறேன். எல்லா இயக்குனருக்கும் ஒரு ஸ்பெசாலிட்டி இருக்கும். அந்த இயக்குனர்களின் படங்களுக்கு போகும்போது அந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்தை எதிர் பார்த்துதான் போவோம். ஆனால் சில நேரங்களில் அந்த இயக்குனர்கள் நம்மை ஏமாற்றி விடுவதுண்டு. அப்படி சில படங்களைத்தான் வரிசை படுத்துகிறேன்.

கே பாலசந்தர்: பார்த்தாலே பரவசம்

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக விளங்குபவர். முற்போக்கு கதைகளை, பெண்ணியத்தை சொல்லும் கதைகளை அந்த காலத்திலேயே எடுத்து வெற்றி கண்டவர். இவரின் நூறாவது படமான பார்த்தாலே பரவசம், இவர் டிவி தொடர்களை இயக்கதொடங்கிய பின் வெகு நாளைக்கு பிறகு வந்த படம். இவரின் சரக்கு தீர்ந்து விட்டது என்பதை நிருபித்த படம். கதையில் குழப்பம், நாடகத்தன்மை இவை இந்த படத்தின் குறைகளாக நான் கண்டது.  







கே பாக்கியராஜ் : ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

இவருக்கு நிகராக திரைக்கதை அமைக்க இந்தியாவில் யாரும் கிடையாது என்று பெயர் பெற்றவர். கிளுகிளுப்பான விஷயங்களை கூட சாமர்த்தியமாக திரையில் கொண்டுவந்தவர். படத்தில் சிக்கலான விஷயங்களை புகுத்தி , படத்தின் சுவாரசியத்தை கூட்டி, மக்களை குறிப்பாக பெண்களை தன் பக்கம் இழுத்தவர். இவரின் எந்த சிறப்பம்சங்களும் இல்லாமல் வந்த படம்தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. மொக்கை கதை, சுவாரசியமில்லாத திரைக்கதை என்று எனக்கு பிடிக்காத படங்களில் இதுவும் இடம் பிடித்து விட்டது. 



பாரதி ராஜா: என் உயிர் தோழன்

திரை உலகத்தை வெளி உலக படப்பிடிப்பு அழைத்து சென்றவர்.  கிராம புற வட்டார வழக்கு, எதார்த்தமான கதைகள் என்று மக்களின் மிக நெருக்கத்தில் சென்ற இயக்குனர். சமீப காலமாக தாஜ்மகால் போன்ற மொக்கை படங்களை கொடுத்தாலும், சிறப்பாக செயல் பட்ட காலத்திலேய கொடுத்த படு மட்டமான படம் இது. எடுத்துக்கொண்ட கதை, சொன்ன விதம் எல்லாமே சொதப்பல். இவர் படங்களில் பெரும்பாலும் நடிகர்கள் நடிக்க கஷ்டபடுவார்கள். இந்த படத்தில் அது கிடையாது. ஏனென்றால் அவர்கள் நடிக்கவே இல்லை.  






எஸ் பி முத்துராமன்: பாண்டியன்

மசாலா படங்களுக்கு முன்னோடி இவர். சொன்ன கதையையே அலுப்பு தட்டாமல் மறுபடியும் புதிய தளத்தில் சொல்ல முடியும் என்று செய்து காட்டியவர். இவர் படங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் ஒரு சுவாரசியம் இருக்கும். ஆனால் இவர் எடுத்ததிலேயே மொக்கை படம் என்று நான் நினைப்பது சூப்பர் ஸ்டார் நடித்த பாண்டியன். இந்த படம் எடுக்கும் போது பாதியில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மீதி படத்தை இவரின் உதவியாளர்கள் இயக்கினார்களாம். யார் கண்டது இவரே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மொக்கை படமாக இருந்தாலும் ரஜினிக்காக இந்த படம் நன்றாக் ஓடியது என்பதை மறுக்க முடியாது. இதே படக்கதையை சமீபத்தில் தெலுங்கில் போக்கிரி என்ற பெயரில் எடுத்து அது 75 வருட தெலுங்கு சினிமா வசூல் சாதனையை முறியடித்தது என்பதும், தமிழிலும் எடுக்கப்பட்டு வெற்றிபெற்றது என்பதும் தெரிந்ததே.





ஹரி: சேவல்

மசாலா பட இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும், சிறந்த பொழுது போக்கு படங்கள் என்று பார்த்தால் அதில் இவர் படங்கள் நிச்சயம் இடம்பிடிக்கும். ஹீரோயிசத்தொடு நல்ல கதையம்சத்தோடு உள்ள படங்கள் எடுப்பதால் இவர் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. ஹரி படம் என்றால் மிக வேகமாக இருக்கும். சாமர்த்தியமான வசனங்கள் இருக்கும். குடும்ப சென்டிமென்ட் இருக்கும். இப்படி எதுவுமே இல்லாமல் வந்த ஒரு படம் சேவல். ஹரி படத்தில் எப்படா படம் முடியும் என்று நான் நெளிந்த ஒரே படம். 


பாலு மகேந்திரா: அது ஒரு கனாக்காலம்

இவர் படத்தில் ஒரு எதார்த்தம் இருக்கும். இவர் படங்களில் கண்டிப்பாக கள்ள உறவு இடம்பெறும். இவரது பெரும்பாலான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாவிட்டாலும், திரை சரித்திரத்தில் இடம்பெறும் படங்கள் அதிகம். ஆனால் வந்த சுவடே தெரியாமல் போன ஒரு படம்தான் அது ஒரு கனாக்காலம். தனுஷ், பிரியாமணி நடித்த இந்தப்படம் மனதை தொடும் எந்த விஷயமும் இல்லாமல் போனதே தோல்விக்குகாரணம்.  





கே எஸ் ரவிகுமார் : மின்சாரக்கண்ணா

இந்த படம் வெளிவந்த நேரம் இதே கதையில் மூன்று படங்கள் வந்தன. பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி ஆகியவை மற்ற இரண்டு படங்கள். விஜயை ஒரு முழுநீள காமெடி ஹீரோவாக காட்ட முயன்று தோற்றிருப்பார் இயக்குனர். வழக்கமாக கே எஸ் ஆர் படங்களுக்கே உரிய ஒரு சுவாரசியம் படத்தில் மிஸ்ஸிங். பார்த்து பார்த்து சலித்த காட்சிகள், விஜயின் பாடி லாங்குவேஜ் மற்றும் வசனங்கள், நீளமான மொக்கை கிளைமாக்ஸ் ஆகியவை இந்த படத்தின் சுவாரசியத்தை குறைத்துவிட்டது.




ஷங்கர் : பாய்ஸ்

இந்த படத்தின் உயிர் நாடியே இசைதான். பாடல்கள் சரியாக அமையாமல் இருந்திருந்தால் படம் படு குப்பையாக ஆகியிருக்கும். இந்தப்படம் பெற்ற சராசரி வெற்றி கூட ஷங்கர், ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பிராண்ட் நேமுக்கு கிடைத்த வெற்றிதான். அமெரிக்கன் பை மாதிரியான ஒரு படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்து, தன் ஸ்டைலில்  கருத்து சொல்கிறேன் என்று முயன்று, முகம் சுளிக்கும் காட்சிகளை திணித்து, இடைவேளைக்கு பிறகு படத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் குழப்பி எடுத்த படம்தான் இது. இந்த படத்துக்கு என்ன குறைச்சல் என்று பல பேர் நினைக்கலாம். ஆனால் ஷங்கரிடம் எதிர்பார்க்கும் ட்ரீட்மென்டே வேறு. படம் பார்க்கும் போது இது யூத்துகளுக்கான ஜாலி படமா? மெச்செஜ் சொல்லும் படமா? காதல் படமா? சீரியஸ் படமா? காமெடி படமா? என்று எனக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டது. அதனாலேயே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனது.



மணிரத்னம் : திருடா திருடா.

இந்த படமும் பாடல்கள், இசை சரியாக அமையாமல் போயிருந்தால் காணாமலே போயிருக்கும். மணிரத்னத்தின் சாயல் எந்த இடத்திலுமே இல்லாமல் அவரின் உதவியாளர் ஒருவர் அவரை போலவே இயக்க முயன்றிருப்பது போலத்தான் இந்த படம் இருக்கும். வலுவான கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் போனது, படத்தில் பல காட்சிகள் ஆங்கில படங்களை ஒத்திருப்பது, எந்த காட்சியுமே நம் மனதில் எந்த பாதிப்புமே ஏற்படுத்தாதது ஆகியவை இந்த படத்தை மனதில் பதிக்க தவறிவிட்டது.




விக்ரமன் : சென்னை காதல் 

பொதுவாக விக்ரமன் படங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று விமர்சனம் வரும். ஆனால் அனைவரும் பார்க்கும்படியான பீல் குட் படங்களை எடுப்பதில் இவர் வல்லவர். முகம் சுளிக்கும் காட்சிகள், வன்முறைகள் எதுவும் இல்லாமல் எடுத்ததாலேயே இவர் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் இவர் பார்முலாக்கள் மக்களிடம் ஒரு சலிப்பை ஏற்படுத்த, ரூட் மாறுகிறேன் என்று ஒரு மட்டமான படம் எடுத்தார். அதுதான் சென்னை காதல். உப்பு சப்பிலாத கதை, பத்து நிமிடத்துக்கு ஒரு இடைவேளை(பாடல்கள்) என்று படம் பார்ப்பவர்களை போட்டு தாக்கியது இந்த படம்.



இப்பட்டியலில் நிறைய பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஒன்று அவர்கள் எனக்கு பிடிக்காதவர்களாக இருக்கலாம், இல்லை குறைவான படங்களையே இயக்கி இருக்கலாம். இவர்கள் நிறைய படங்களை இயக்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே இங்கே எழுதி இருக்கிறேன். நான் சொன்ன கருத்துக்கள் அனைத்தும், இப்படங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றியவை. 



விரைவில் பிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள் பட்டியலை வெளியிடுகிறேன்...

உங்களுக்கும் தோன்றிய படங்களின் பெயர்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

14 comments:

அகல்விளக்கு said...

இறுதியாக எங்கள் அன்பு ஆருயிரின் படத்தைப் போட்டிருப்பதில் ஏதேனும் உள், வெளி, சைடு அல்லது அல்லக் குத்துக்கள் உள்ளனவா...

இப்படிக்கு...

அகில கெரக எஸ்.ஜே.எஸ். ரசிகர் நாறப்பணி மன்றம்
சுள்ளிப்பட்டி கிளை...

அகல்விளக்கு said...

திருடா திருடா படத்தின் கதையை கொஞ்சம் கல்லூரிப்பக்கம் திருப்பி உல்டா செய்து எடுத்த காதல்தேசம் வெற்றிப்படம். ஆனால் மணிரத்னம் அந்த பெண் கேரக்டருக்கு கொடுத்த முக்கியத்துவம் காதல் தேசத்தில் இல்லை... :(

உங்களுடைய அனைத்துத் தேர்வுகளும் மிகச் சரியானவை...

அடுத்த பதிவை நோக்கி காத்திருக்கிறேன்...

:))

movithan said...

சரியான கணிப்பு

ஹுஸைனம்மா said...

இதுல லிஸ்டிருக்கிற படங்கள் நல்லாருக்கு.

//பிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்//

இதுகூட ரசிக்கலாம்தான்; ஆனா எஸ்.ஜே.சூர்யா ஃபோட்டோ பயங்காட்டுதே!!

Yoganathan.N said...

கே பாலசந்தர் - இந்த படத்தைப் பார்த்த பின்பு, இவரையா இந்த உலகம் 'இயக்குனர் சிகரம்' என்கிறது என்ற எண்ணத்தைத் தோன்ற வைத்தது. :(

கே பாக்கியராஜ் - நீங்கள் சொன்னது போல் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்று பலர் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்.

பாரதி ராஜா - எனக்கு இவருடைய கண்களால் கைது செய் படம் கூட பிடித்திருந்தது.

எஸ் பி முத்துராமன் - இவர் யார் என்றே இப்போது தான் அறிகிறேன்.

ஹரி - இந்த மாதிரி ஆட்களை முதலில் தமிழ் சினிமாவிலிருந்து துரத்தி விட வேண்டும்.

பாலு மகேந்திரா - இவரைப் பற்றீயும் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு படம் கூட பார்த்ததில்லை, அது ஒரு கனாக்காலம் உட்பட...

கே எஸ் ரவிகுமார் - மசாலா மன்னன். ஆம், மின்சாரக்கண்ணாவில் கோட்டை விட்டார்.

ஷங்கர் - என்ன இப்படி சொல்லீட்டீங்க? இவரது படங்களில் எனக்கு எல்லாமே பிடிக்கும். அப்படி ஒன்றாவது சொல்ல வேண்டும் என்றால், சிவாஜி என்பேன்.

மணிரத்னம் - The Living Legend. இவரது 80களில் வெளிவந்த படங்களை அதிகம் பார்த்ததில்லை. ஆனால், திருடா திருடா படத்திற்கு அப்புறம் அத்தனைப் படங்களையும் பார்த்துள்ளேன்.

விக்ரமன் - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் பிடிக்கும். ஹிஹி
மற்றபடி, 'லலலல' என்ற பின்னனி இசையைச் சகித்துக் கொண்டே இவரது பல படங்களைப் பார்துள்ளேன்.

Yoganathan.N said...

பிடிக்காத இயக்குனர்கள் என்று சொல்லி எஸ்.ஜே. சூரியா படத்தைப் போட்டுள்ளீரே... :(

பாலா உங்கள் பட்டியலில் வரவில்லை. அவரையும் பிடிக்காதா???

Bala said...

@அகல்விளக்கு
வருகைக்கு நன்றி

@ malgudi
வாங்க வெல்கம்

@ ஹுஸைனம்மா
எனக்கு பிடிக்காத இயக்குனர்கள் லிஸ்டுக்கு ஒரு முன்னோட்டமாகத்தான் சூர்யா படத்தை போட்டுள்ளேன்

@Yoganathan.N
பாக்கியராஜின் விடியும் வரை காத்திரு, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை ஆகிய படங்கள் கிடைத்தால் பாருங்கள்.
எஸ் பி முத்துராமன் ரஜினியை வைத்து இருபத்தெட்டு படம் இயக்கி உள்ளார். அத்தனையும் சூப்பர் ஹிட்
சங்கர் சிவாஜி படத்தை ஒரு ரஜினி ரசிகனாக அவர் இயக்கி உள்ளார்.

பாலா இயக்கியது நான்கே படம்தான். அதனால்தான் அவர் பெயர் இடம்பெறவில்லை.

"ராஜா" said...

இதில் சங்கரின் பாய்ஸ் படத்தை இணைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்...

Yoganathan.N said...

//இதில் சங்கரின் பாய்ஸ் படத்தை இணைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்...//

ரிப்பீட்டே...

பி.கு ஒரு வேளை நண்பர் பாலா நம்மல மாதிரி யூத் இல்லை போலும்... :P

"ராஜா" said...

//ஒரு வேளை நண்பர் பாலா நம்மல மாதிரி யூத் இல்லை போலும்... :P

எனக்கும் அந்த சந்தேகம்தான் தல...

பாலா said...

பாய்ஸ் படம்தான் யூத்களின் அளவுகோல் என்றால் நான் சத்தியமாக யூத் இல்லை. என் ரசனை பற்றி என் பதிவான "சச்சினை எனக்கு பிடிக்காது முதல் பகுதி " யின் இரண்டாம் பத்தியை படித்து பாருங்கள்.
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_26.html

இந்த பதிவில் இவை எல்லாம் "எனக்கு" பிடிக்காத படங்கள் என்று சொல்லிவிட்டேனே? இதில் கண்டனம் தெரிவிப்பதற்கு என்ன இருக்கு? ஒரு படம் பார்க்கும் போது அதில் வரும் காட்சிகள் என்னை பாதிப்பதை விட சமூகத்தை எப்படி பாதிக்கிறது என்றுதான் நான் பார்ப்பேன். ஒரு விஷயத்தை அரங்கேற்றும்போது அதில் கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?

"ராஜா" said...

தல உங்கள் ரசனையை குறைகூறவில்லை ... அந்த படம் பலரால் ரசிக்கப்பட்டது என்றுதான் கூறினேன்... நீங்கள் எழுதி உள்ள மற்ற படங்களை போல இயக்குனர் சறுக்கிய படமாக அந்த படத்தை கண்டிப்பாக கூற இயலாது .. தின மலர் போன்ற சில கலாசார காவலர்கள் கொடுத்த pressure காரணமாக அவர் பல காட்ச்சிகளை படத்தில் இருந்து தூகியதினால்தான் படம் படுத்தது .. மற்ற படி சங்கர் தன வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு எடுத்த படம் .. ரசிக்ககூடிய வகையிலும் இருந்த படம் அது....

அப்புறம் சமூகத்தை பாதிக்க கூடிய விஷயம் அந்த படத்துல என்ன இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க தல... அப்படி ஏதாவது இருந்தாலும் அதனால் சமூகம் கேட்டு போய் விடுமா? சங்கர் என்ன எடுத்தாலும் சமூகத்தில் மாற்றம் வரும் என்றால் , இந்தியன் , அந்நியனுக்கு பிறகு நம் ஊரில் லஞ்சம் ஒழிந்திருக்க வேண்டும் . தனி மனித ஒழுக்கம் கூடி இருக்க வேண்டும் .

என்னை பொறுத்த வரை சங்கரின் மற்ற படங்களுக்கு எந்த விதத்திலும் குறை வைக்காத படம் அது... சங்கர் ஒரு இயக்குனராக சறுக்கிய படம் சிவாஜிதான்... சங்கரை நம்பி போன என்னை போன்ற சிலரை ஏமாற்றிய படம் அது ... நீங்க சொல்லிய மாதிரிதான் சங்கரிடம் நாங்கள் எதிர்பார்க்கும் ட்ரீட்மென்டே வேற...

Yoganathan.N said...

//பாய்ஸ் படம்தான் யூத்களின் அளவுகோல் என்றால் நான் சத்தியமாக யூத் இல்லை. என் ரசனை பற்றி என் பதிவான "சச்சினை எனக்கு பிடிக்காது முதல் பகுதி " யின் இரண்டாம் பத்தியை படித்து பாருங்கள்.
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_26.html//

நண்பரே, நான் சொன்ன 'tone'-ஐ கொஞ்சம் கவனியுங்கள். அது ஒரு சீண்டலுக்காகவும் விளையாட்டுக்காகவும் சொன்னது. :)

நீங்கள் ரொம்ப சீரியசான ஆள் என்று நினைக்கிறேன். :)

Bala said...

@ Yoganathan.N
டென்சன் ஆகாதிங்க யோகநாதன். நானும் சொன்ன வார்த்தைகளின் டோனே வேற. நான் இதுக்கெல்லாம் கோபப்படமாட்டேன். சீரியசான ஆள் எல்லாம் கிடையாது... சும்மா விவாதம் பண்ணலாமே என்றுதான் கருத்திட்டேன்.
நன்றி...

@ராஜா..

இங்கே சொன்னது எல்லாம் இந்த படங்களை பற்றிய என் சொந்த கருத்துக்கள்தான். கருத்துக்கள் ஒத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. டென்சன் ஆகாதீங்க..
நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...