நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டுமானால் இந்த பெரிய இலக்கை எட்டவேண்டும். அதாவது இரண்டாவது பெரிய இலக்கு. இதற்கு முன் இலங்கை 195 எடுத்திருந்தது. எனவே கண்டிப்பாக ஆஸ்திரேலியா மண்ணை கவ்வும் என்று எதிர்பார்த்து உறங்க சென்றுவிட்டேன். காலையில் எழுந்து செய்திகளில் ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்று கேட்டு வியப்படைந்தேன். வெற்றிக்கு காரணம் நம்ம மைக்கேல் ஹஸ்ஸி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் சொதப்பு சொதப்பு என்று சொதப்பினாரே அவரே தான். இப்போது இறுதி போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் நல்ல பார்மில் இருப்பதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. பிற நாட்டு வீரர்களுக்கும் நம் வீரர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் நாட்டுக்காக விளையாடும் போது காட்டும் வேகத்தை உள்ளூர் ஆட்டங்களில் வெளிப்படுத்துவதில்லை. நம்மாட்கள் உல்டாவாக உள்ளூர் ஆட்டங்களில் சிரத்தையோடு ஆடுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹஸ்ஸி மற்றும் இங்கிலாந்தின் மோர்கன். இருவரும் உள்ளூர் ஆட்டங்களைகாட்டிலும் சர்வதேச ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
தினகரன் நாளிதழ் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். தினகரன் வெளிவருவதன் நோக்கம் செய்திகள் வெளியிடுவதற்கு அல்ல, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு என்று. இன்று தினகரன் நாளிதழ் கிடைத்தால் பாருங்கள். பத்து பக்க பேப்பரில் அவர்கள் வெளியிட்டது இரண்டே பக்க செய்திகள். நேற்று நடந்த இரண்டு அதிமுக்கியமான செய்திகள். ஒன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் பற்றிய அலசல். இன்னொன்று நக்கத் (இந்த பெயர் ஞாபகம் இருக்கிறதா? அதாங்க நம்ம குஷ்பு) திமுகவில் இணைந்து விட்டார் என்ற முக்கியமான செய்தி. மற்றபடி எல்லாமே விளம்பரங்கள்தான். குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று வெறும் விளம்பரங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழனை எந்தெந்த வகையில் எல்லாம் ஏமாற்றலாம் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.
நேற்று ஒரு பெரிய அரசியல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. குஷ்பு திமுகவில் இணைந்துள்ளார். வெகு காலத்துக்கு முன்னாலேயே அவருக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புகள் அதிகம் என்று கேள்விபட்டேன். முதலில் அவர்மீது இருக்கும் வழக்கு முடிவுக்கு வரும், பின் கட்சியில் உறுப்பினர், பின் எம் பி பதவி. நான் போட்ட கணக்கு படி சரியாக நடந்து வருகிறது. பார்க்கலாம், மக்களவையா? மாநிலங்கலவையா? சட்டப்பேரவையா? இல்லை மேலவையா? என்று. தமிழக பெண்களின் கற்புக்கு கன்செசன் வாங்கி கொடுத்தவர், குறைந்த துணியில் ஜாக்கெட் அணிவது எப்படி என்று பாடம் நடத்தியவர், அவைக்கு எப்படி செல்வார் என்று நினைத்தால் பயமாக உள்ளது. அம்மணிக்கு திமுகவில் இடம் கிடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும். தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இரண்டு உண்டு. மூன்றாவது ஒரு தமிழ் உண்டு. அது கொடூரதமிழ். அதை பேசுபவர்களுக்கே தமிழ் நாட்டில் முன்னுரிமை. குஷ்பு பேசுவது இவ்வகை தமிழ்தான்.
தமிழின தலைவர் என்றால் எல்லா தமிழையும் வாழ வைக்க வேண்டுமே. அநேகமாக கொடூர தமிழுக்கும் முன்னுரிமை அளித்த தலைவருக்கு பாராட்டு விழா நடந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. செம்மொழி மாநாட்டுக்கு ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்த பாடல் வெளியீட்டு விழா மற்றும் ரகுமானுக்கு பாராட்டு விழா இரண்டும் நடக்க போவதாக செய்தி வெளிவந்துள்ளது. கண்டிப்பாக விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ரகுமானை விட்டுவிட்டு, தலைவரின் வாள்வீசும் வசனத்துக்கு முன்பு ரகுமானின் இசை சும்மா என்று ஏதாவது சொல்வார்கள். சங்கடத்தில் நெளிய போவது என்னவோ ரகுமான்தான்.

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மண்வளம் காப்போம்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
5 comments:
தோணி பற்றிய உங்கள் பார்வை பிடித்திருந்தது. தோனியை தலைமை பதவியில் இருந்து நீக்குவதில் இது மாறப்போவதில்லை. காரணம் தோல்விக்கு தோணி மட்டுமே காரணம் அல்ல. வீரர்கள் எல்லோருமே காரணம். எல்லோருக்கும் தகுந்த சாட்டை அடி கொடுத்தால் தான் அணி உருப்படும்.
அருமையான இடுகை நண்பா...
ஆனாலும் அந்த "குஷ்பூ" ஃபோட்டோ..... ????!!!!!!!
@SShathiesh
வாங்க வாங்க வருகைக்கு நன்றி..
@அஹமது இர்ஷாத்
எனக்கே கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. தூக்கிவிட்டேன் நண்பா...
கருத்துக்கு நன்றி..
புள்ளி விவரத்துடன் எழுதியிருக்கும் சுற்று சூழல் விசயம் நன்றாக உள்ளது. என்னால் முடிந்தவரை, செடி கொடிகளைப் பாதுகாத்து கொண்டு தான் இருக்கிறேன்.
//எனக்கே கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. தூக்கிவிட்டேன் நண்பா...
கருத்துக்கு நன்றி..//
நான் ஏதாவது மிஸ் பண்ணிட்டேனோ... ஹிஹி
//இந்த கட்டுரை உங்கள் மனதை தொட்டிருந்தால் இனி போகிற போக்கில் ஒரு இலையை கூட பிய்த்து போட உங்களுக்கு மனம் வராது//
கண்டிப்பாக நண்பரே என்னால் முடிந்த அளவுக்கு நீங்கள் துல்லியமாக சொல்லியிருக்கிற மரங்களை பற்றிய கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து சொல்லி மர வளத்தை காக்க முயற்சி செய்கிறேன் ..
//உதாரணமாக இளைய தளபதியின் கட்சி (தயவு செய்து சிரிக்காதீர்கள்) ஆட்சியை பிடித்தால் என்னவாகும்? //
நிஜமாக சிரித்தேன் ...
Post a Comment