விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 23, 2011

மழலைகள் உலகம் - தொடர் பதிவு


இந்த தொடர் பதிவுக்க அழைத்த நண்பரே சீனுவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மழலைகள் பற்றி என்ன எழுதுவது என்று யோசித்த போது வழக்கம்போல கொஞ்சம் சொந்த அனுபவங்களையும், கொஞ்சம் அறிவுரையும் (வாத்தியார் என்றாலே இப்படித்தானா?) கூறலாம் என்று முடிவு கட்டினேன். 

என் குழந்தைப்பருவம்.

என் குழந்தைப்பருவம் உண்மையிலேயே மிக ஜாலியான ஒரு பருவம். எங்கள் வீட்டில் பிள்ளைகள் எண்ணிக்கை மிக அதிகம். அதே போல என் தந்தையின் உடன் பிறந்த இரண்டு அத்தைகள், ஒரு சித்தப்பா என்று அவர்களின் பிள்ளைகளும் அதிகம். ஏதாவது பண்டிகை, திருவிழா என்றால் எங்கள் வீடே குழந்தைகளால் நிரம்பி இருக்கும். ஒன்றாக விளையாடுவது, பட்டாசு வெடிப்பது, பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது என்று செம கலாட்டா நடக்கும். அதே போல எங்கள் தெருவிலும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் அதிகம். நாங்கள் வசிக்கும் காம்பவுண்டில் மட்டுமே ஒரு கிரிக்கெட் அணிக்கு தேவையான அளவுக்கு ஆண் குழந்தைகள் உண்டு. விடுமுறை விட்டு விட்டால் தெருவே கலங்கி விடும். பல பல்புகள், பாத்திரங்கள், ஓடுகள் நொறுங்கும்.


நான் குறைந்த காலத்திலேயே பேச துவங்கி விட்டதால் மிக திருத்தமாக பேசுவேனாம். ஆகவே நான் மழலை பேசியது மிக குறைவு. அதே போல சிறிய வயதிலேயே நிறைய விஷயங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டதால் அவை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. பெரும்பாலான பெரியவர்கள் "குழந்தைக்கு என்ன புரியப்போகிறது?", என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உள்வாங்கும் திறன் மிக அதிகம். ஆகவே அப்போது புரியாவிட்டாலும் சிறிது காலம் கழித்து அதனை புரிந்து கொள்வார்கள். அதே போல குழந்தைகள் தமக்கு நேர்ந்த அவமானங்கள், தோல்விகள் ஆகியவற்றை மறப்பதில்லை. அதில் இருந்து வெளியே வந்து விட்டாலும், அவை மாறாத தழும்புகளாக இப்போதும் மனதில் இருக்கிறது. 

அடுத்த தலைமுறை

எனக்கு அடுத்த தலைமுறை என்பது என்னை விட மிக புத்தி கூர்மை உள்ளதாக உள்ளது. அவர்களுக்கு தேவையான விஷயத்தை நாம் அளித்தால் அவர்களே அதை எளிதில் உள்வாங்கி கொள்கிறார்கள். ஆனால் பொறுமையும், மன உறுதியும் குறைவாக இருக்கிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறார்கள். இதற்கு காரணம் நம் சமூகமே என்பதில் சந்தேகமே இல்லை. ஆசிரியர் என்பதாலேயே இளைய தலைமுறையோடு பழகும் வாய்ப்பு என்பது எனக்கு மிக அதிகம். கல்லூரி படிப்பை முடித்து 7 ஆண்டுகள் ஆன பிறகு, இன்னும் கல்லூரி பருவத்திலேயே இருப்பது என் வரப்பிரசாதம். இவற்றில் இருந்து நான் கற்றுக்கொண்டது, "எங்களை எங்கள் போக்கில் விடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.", இதுதான் இன்றைய தலைமுறையின் மன நிலை. இது சரிதான். ஆனால் அதே சமயம், மனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது 

பெற்றோர்களுக்கு.... 


ஒரு குழந்தை சிறு வயதில் இருந்தே பெருத்த ஏமாற்றங்களை சந்திக்காமல் இருந்தால் அது நல்ல மன நிலையுடன் வளர வாய்ப்பிருக்கிறதாம். அதே போல சிறு வயதில் அதன் மனதில் பதியும் எந்த ஒரு பாதிப்பும் பிற்காலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே இதற்கு தக்கவாறு நடந்து கொள்வது பெற்றோரின் கடமைதான்.

பத்து வயதுக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கும் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் பல மடங்கு உயரும் என்று எங்கோ படித்த நினைவு. ஆகவே நாம் குழந்தைகள் வழக்கமாக கற்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு, மேலும் சில மொழிகளை கற்கும் வாய்பை ஏற்படுத்தி கொடுப்பது நம் கடமை. 

தற்காலத்தில் பெரியவர்களிடமே படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. ஆனால் படிக்கும் பழக்கம் என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பது அனுபவஸ்தர்களுக்கே தெரியும். ஆகவே நம் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது நம் கடமை. 

சில பெற்றோர்கள் நாம் குழந்தைகள் படிப்பை தவிர்த்து, தனித்திறன்களிலும் பங்கு பெற்று பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான். அப்புறம், "எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு படிப்பை கவனி.", என்று சொல்லி விடுவார்கள். இது முற்றிலும் தவறு. நான் மேடையில் நாடகம், மிமிக்ரி என்று தொடங்கிய பிறகு என் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால் அதன் பிறகுதான் அதிகரித்தது. இவை யாவும் நம் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும் விஷயங்கள். ஆகவே படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இதனால் நம் படிப்பு பாதிக்காது என்பதும் நான் அனுபவத்தில் உணர்ந்தது. 

மொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும். அந்த கணத்தில் நாமும் நம் மழலை பருவத்திற்கு சென்றுவிடுவோம். மழலைகள் உலகம் மகத்தானது. இந்த பதிவை யார்வேண்டுமானாலும் தொடரலாம். எல்லோருக்குமே மழலை உலகம் பற்றிய கருத்துக்கள் இருக்குமல்லவா?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

66 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காவலரிடம் கசையடி கிடைத்தாலும்
தயங்க மாட்டேன்..

குழந்தைகளிடம் கொஞ்சுவதை...


இந்த உலகை உயிர்ப்போது வைத்திருப்பவர்கள் இந்த பருவத்தினர்தான்...

அழகிய பதிவு...

வாழ்த்துக்கள்..

சென்னை பித்தன் said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.

சென்னை பித்தன் said...

அழகிய புகைப்படங்களுடன் அருமையான பகிர்வு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
"எங்களை எங்கள் போக்கில் விடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.", /

/////////

அவர்களின் இந்த கொள்கையோடு பெற்றோரின் அரவணைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்...

Unknown said...

அழகான பதிவு! கூடவே படங்களும்!

பால கணேஷ் said...

ரசனையாகச் சொல்லி இருக்கிறீர்கள் பாலா. படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் தம் மழலைச் செல்வங்களிடம் விதைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். அழகிய படங்களுடன் கூடிய கருத்துள்ள பகிர்வுக்கு நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

பல கருத்துக்களை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.

K.s.s.Rajh said...

அழகாக சொல்லியிருக்கீங்க பாஸ்
பலர் சொல்வது போல குழந்தைகளுக்கு ஒன்னும் புரியாது என்பது இல்லை அவர்களுக்கு பல விடயங்கள் புரியும்தான் சிறப்பாக இருக்கு உங்கள் பதிவு...


அப்பறம் அந்த முதலாவது படத்தில் இருப்பது நீங்களா?

பாலா said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

நன்றி நண்பரே

பாலா said...

@சென்னை பித்தன்

இணைத்ததற்கும் கருத்துக்கும் நன்றி சார்.

பாலா said...

@ஜீ...

நன்றி நண்பரே

பாலா said...

@கணேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

பாலா said...

@thirumathi bs sridhar

கருத்துக்கு நன்றி மேடம். அடிக்கடி வாங்க.

பாலா said...

@K.s.s.Rajh

கருத்துக்கு நன்றி நண்பரே. அந்தபடத்தில் இருப்பது சத்தியமாக நான் இல்லை. நான் சிறு வயதில் மிக ஒல்லியாக இருப்பேன்.

Madhavan Srinivasagopalan said...

நல்ல கருத்துக்கள்..
மழலை -- ஒரு மன நிறைவு.. தெவிட்டாத இன்பம்.

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகளின் உலகம் சுகமான உலகம், அந்த உலகில் சூது வாது இல்லை....!!!

------அருமையான பகிர்வு---------

Unknown said...

இன்னொரு முறை குழந்தையாய் வாழவே ஆசைப்படுகிறோம் நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை.. அருமை சகோ..

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான படங்கள். அருமையான பதிவு..

சுசி said...

ரொம்ப நல்ல பகிர்வுங்க..

//மொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும்.//

சரியா சொன்னிங்க :))

சீனுவாசன்.கு said...

மழலை உலகத்தை வெறும் நான்கு பேரை அழைத்து தொடர சொல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்து அசத்தி விட்டீர்கள்!அருமையான பதிவு!!
கலக்கிட்டீங்க வாத்தியார்!!!

பாலா said...

@Madhavan Srinivasagopalan

மழலை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

நன்றி நண்பரே

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

ஆமாம் நண்பரே. குழந்தை பருவத்துக்கு செல்லவே எல்லோரும் விரும்புகிறோம். நன்றி.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே

பாலா said...

@சுசி

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க

பாலா said...

@சீனுவாசன்.கு

நன்றி நண்பரே

shanmugavel said...

//படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இதனால் நம் படிப்பு பாதிக்காது என்பதும் நான் அனுபவத்தில் உணர்ந்தது.//

ஆமாம்,படிப்பில் கவனம் கூடுமே தவிர குறையாது.நல்ல பதிவு.

r.v.saravanan said...

நான் மேடையில் நாடகம், மிமிக்ரி இவை யாவும் நம் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும் விஷயங்கள். ஆகவே படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

கண்டிப்பாக பாலா

துரைடேனியல் said...

Nice.
TM 8.

ஷைலஜா said...

படங்கள் இடுகை அருமை

Unknown said...

அருமையான பகிர்வு மாப்ள!

ரசிகன் said...

அனுபவம் பேசுகிறது. நல்ல பதிவு.

மாய உலகம் said...

மனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது
//

அருமையா சொன்னீங்க நண்பா

பாலா said...

@shanmugavel

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே

பாலா said...

@துரைடேனியல்

Thank You very much

பாலா said...

@ஷைலஜா

நன்றிங்க

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

பாலா said...

@ரசிகன்

வருகைக்கு நன்றி நண்பரே

பாலா said...

@மாய உலகம்

கருத்துக்கு நன்றி நண்பரே

செங்கோவி said...

//மொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும். //

அனுபவிக்கும் உண்மை...நல்லா சொல்லியிருக்கீங்க பாலா.

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா.. குட் ஒன்....

சி.பி.செந்தில்குமார் said...

படங்களூக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்

vimalanperali said...

குழந்தைகளின் தனி உலகத்தில் நீந்தியிருக்கும் தங்களின் மழலைகளின் உலகம் நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.
இதோ எனது பங்குக்கு,,,/

பூப்பந்து,,,,,

வீட்டுக்குள் வந்த குழந்தை
அம்மா என்கிறது.
அத்த்,,,த என்கிறது.
மாமா என்கிறது.
அண்ணா என்கிறது.
அப்பா எனச் சொல்கிறது
தனது மழலை மொழி மாறாமல்.
கைதட்டி சிரிக்கிறது.
முகத்தை கோணல்
காட்டி பழிக்கிறது.
புரியாத பாஷையில்
ஏதேதோ சொல்லி மகிழ்கிறது.
ஒவ்வொரு பொருளாய்
கைகாட்டி கேட்கிறது.
சிலவற்றை இழுத்து
கீழே போட்டும் விடுகிறது.
வீடு முழுக்கவுமாய் ஓடித்திரிகிறது.
தனது கையில் வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பந்தை
என்னிடம் கொடுத்து
உருட்டு விடச்சொல்லி
தன்னிடமிருந்த பேட்டால் அடிக்கிறது.
வாயில் எச்சில் ஒழுக,,,,,
ஹால்,அடுப்படி,பாத்ரூம்
என ஒவ்வொரு இடத்திலுமாய்
தனது இருப்பை பதிவு
செய்த குழந்தை
நடு ஹாலில் சிறுநீர் கழித்து விட்டு
தனது தாய் அதட்டி அழைக்கவும்
சென்று விடுகிறது.
கணநேரத்தில் பூத்து மலர்ந்த
பூ ஒன்று சட்டென காணாமல்
போனதாய் ஒரு மாயத்தோற்றம்
என்னுள் எழுந்து மறைவதை
அந்த நேரத்தில்
தவிர்க்க முடியாதவனாய் நான்.

vimalanperali said...

குழந்தைகளின் தனி உலகத்தில் நீந்தியிருக்கும் தங்களின் மழலைகளின் உலகம் நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.
இதோ எனது பங்குக்கு,,,/

பூப்பந்து,,,,,

வீட்டுக்குள் வந்த குழந்தை
அம்மா என்கிறது.
அத்த்,,,த என்கிறது.
மாமா என்கிறது.
அண்ணா என்கிறது.
அப்பா எனச் சொல்கிறது
தனது மழலை மொழி மாறாமல்.
கைதட்டி சிரிக்கிறது.
முகத்தை கோணல்
காட்டி பழிக்கிறது.
புரியாத பாஷையில்
ஏதேதோ சொல்லி மகிழ்கிறது.
ஒவ்வொரு பொருளாய்
கைகாட்டி கேட்கிறது.
சிலவற்றை இழுத்து
கீழே போட்டும் விடுகிறது.
வீடு முழுக்கவுமாய் ஓடித்திரிகிறது.
தனது கையில் வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பந்தை
என்னிடம் கொடுத்து
உருட்டு விடச்சொல்லி
தன்னிடமிருந்த பேட்டால் அடிக்கிறது.
வாயில் எச்சில் ஒழுக,,,,,
ஹால்,அடுப்படி,பாத்ரூம்
என ஒவ்வொரு இடத்திலுமாய்
தனது இருப்பை பதிவு
செய்த குழந்தை
நடு ஹாலில் சிறுநீர் கழித்து விட்டு
தனது தாய் அதட்டி அழைக்கவும்
சென்று விடுகிறது.
கணநேரத்தில் பூத்து மலர்ந்த
பூ ஒன்று சட்டென காணாமல்
போனதாய் ஒரு மாயத்தோற்றம்
என்னுள் எழுந்து மறைவதை
அந்த நேரத்தில்
தவிர்க்க முடியாதவனாய் நான்.

பாலா said...

@செங்கோவி

நன்றி நண்பரே

பாலா said...

@சி.பி.செந்தில்குமார்

வருகைக்கு நன்றி நண்பரே

பாலா said...

@விமலன்

சார் கவிதையாலேயே கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.

naren said...

பதிவின் எழுத்தை விட படங்கள் ஆயிரம் செய்திகள் சொல்லின. அருமையான பதிவு.

செந்தில் நாதன் இரா said...
This comment has been removed by the author.
செந்தில் நாதன் இரா said...

நல்ல பதிவு பாலா... நீங்கள் ஆசிரியர் என்பதாலோ என்னோவோ உங்கள் எல்லா பதிவிலும் உளவியல் ரீதியான சில கருத்துகள் அனைவருக்கும் புரியும் படி இருகிறது. வாழ்துகள்...

ம.தி.சுதா said...

இன்பமான ஒரு உலகத்தை இதய சுத்தியோடு காட்டியுள்ளிர்கள் நன்றி சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்

மாலதி said...

அழகிய படங்களுடன் கூடிய கருத்துள்ள பகிர்வுக்கு நன்றி.

சுதா SJ said...

குழந்தைகளாய் இருக்கும் வரை கவலைகள் நம்மளை அண்டுவதே இல்லையே... அது ஒரு அழகியல் காலம்.. உங்கள் கட்டுரை என்னையும் மீண்டும் குழந்தையாக்கி விட்டது பாஸ்.

அம்பாளடியாள் said...

மனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது .
அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்களும் நன்றியும் சகோ .....

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இன்று தான் வருகிறேன். மழலைகள் உலகம் - அழகான பதிவு. தங்களின் பல பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

பாலா said...

@naren

நன்றி நண்பரே

பாலா said...

@செந்தில் நாதன் இரா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@♔ம.தி.சுதா♔

நன்றி சகோதரம்

பாலா said...

@மாலதி

ரொம்ப நன்றிங்க

பாலா said...

@துஷ்யந்தன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

பாலா said...

@அம்பாளடியாள்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

பாலா said...

@திண்டுக்கல் தனபாலன்

உங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உங்களக்கு என் வாழ்த்துக்கள் .
அன்புடன் யானைக்குட்டி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உங்களக்கு என் வாழ்த்துக்கள் .
அன்புடன் யானைக்குட்டி

பாலா said...

@யானைகுட்டி @ ஞானேந்திரன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க

Related Posts Plugin for WordPress, Blogger...