விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 9, 2011

மீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+


டிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... 


திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை முதலிய இத்யாதிகளை காட்டி பீதியை கிளப்புவது. இவ்வகை படங்களை ஸ்லாஷர் வகை படங்கள் என்று கூறுகிறார்கள்.  இரண்டாவது வகை, காட்சி அமைப்புகள், வசனம், கதாப்பத்திரங்களின் உணர்வு என்று உளவியல் ரீதியாக பீதியை கிளப்புவது. இதில் இரண்டாவது வகை படங்கள் பார்க்கும்போது ஏற்படும் த்ரில்லிங் அலாதியானது என்றாலும், இவ்வகை படங்களுக்கு மொழி அறிவு ஓரளவுக்கு தேவையாகிறது. இல்லை என்றால், சின்னதம்பி பட கவுண்டமணி போல, "சூப்பரப்பு!!", என்று சும்மா கை தட்டுவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் முதல் வகை படங்களுக்கு அவ்வகை அறிவு தேவை இல்லை.  வெறும் காட்சி அமைப்புகள் மற்றும் இசையே முக்கிய பங்கு வகிப்பதால், மொழி தெரியாதவர்கள் கூட இதனை ரசிக்கிறார்கள்.


இப்போது நான் சொல்லப் போகும் படம் கூட மொழி அறிவு தேவை இல்லாத ஒரு படம்தான். இந்த ஹாலிவுட்காரர்களுக்கே உண்டான ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால், ஒரு படம் ஓடிவிட்டால், அதனை தொடர்ந்து எத்தனை பாகங்கள் எடுக்கவேண்டுமோ எடுத்து, பார்வையாளர்கள் சலித்து, காறி துப்பும் வரை விடமாட்டார்கள். அந்த வகையில் 2003ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்ட ராங் டர்ன் (Wrong Turn) படத்தின் நாலாவது பாகத்தை பற்றித்தான் இப்போது நான் கூறப்போகிறேன். Wrong Turn 4 - Bloody Beginnings. (2011)

முதலில் ராங்க் டர்ன் சீரிஸ் பற்றி தெரியாதவர்களுக்கு அதன் அடிப்படை கதையை கூறி விடுகிறேன். நீங்கள் காட்டு பாதை வழியாக வண்டியில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் மாற்றுப்பாதையில் செல்ல நேரிடுகிறது. எதிர்பாராத விதமாக நீங்கள் காட்டில் வழி தவறி விடுகிறீர்கள். அதே காட்டுக்குள், இப்படி வழி தவறி வருபவர்களை வேட்டை ஆடி சாப்பிடும் ஒரு மூன்று பேர் கொண்ட குழு இருக்கிறது. எப்படி இருக்கும்? இதுதான் ராங்க் டர்ன் படத்தின் அடிப்படை. அப்படி காட்டுக்குள் வரும் மனிதர்களை மூன்று பேர் கொண்ட குழு ஒன்று கொடூரமாக துரத்தி துரத்தி வேட்டையாடுகிறது. முதல் பாகம் மெகா ஹிட் ஆகி விட, அதனை தொடர்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தில் முறையே ரியாலிட்டி ஷோவுக்காக வருபவர்களையும், சிறைக்கைதிகளையும் எப்படி அந்த குழு வேட்டையாடுகிறது என்று காட்டி இருப்பார்கள். 


இந்த நாலாவது பாகம், இதுவும் அதே வகைதான். ஆனால் இது ப்ரீக்வலாக வந்திருக்கிறது. அதாவது இந்த மூன்று பாகங்களுக்கும் முன்னால் நடக்கும் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. காட்டுக்குள் தன்னந்தனியாக அமைந்திருக்கும் ஒரு மனநல காப்பகத்தில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே மிருக குணத்துடன், அதாவது தான் உறுப்புகளையே கடித்து சாப்பிடும் அளவுக்கு கொடூரமான குணத்துடன், சிதைந்த முகத்துடன் இருக்கும் சிறுவர்களை தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய அந்த காப்பகத்தில், தனியாக ஒரு சிறையில் இருக்கும் அவர்கள் எதிர்பாராத விதமாக தப்பிவிட, அந்த காப்பகத்தையே துவம்சம் செய்து, அனைவரையும் கொன்று தீர்க்கிறார்கள்.  வெகு காலத்துக்கு அங்கே யாருமே வராமல், கவனிப்பாரற்று போகிறது அந்த மன நலகாப்பகம் .


ஆர்ப்பாட்டமான இளைஞர் குழு ஒன்று, (5 பெண்கள், 4 ஆண்கள்), ஆளுக்கொரு பனிச்சறுக்கு மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு அடர்ந்த பனிப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஒருவரை முந்தி ஒருவர் உற்சாகமாக வண்டியை செலுத்த, ஒரு கட்டத்தில் அனைவரும் வந்த பாதையை மறந்து விடுகின்றனர். எங்கு பார்த்தாலும் பனி. இன்னும் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும். மேலும் கடுமையான பனிப்புயல் வேறு வீசத்தொடங்கி விட்டது. இப்படியே இருந்தால் செத்து போய்விடுவோம். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வெகு தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் கட்டிடம் ஒன்று தெரிகிறது. அதனை பார்த்தவுடன் அனைவருக்கும் உற்சாகம் தொத்தி கொள்கிறது. எல்லோரும் அந்த கட்டிடத்தை நோக்கி செல்ல்கிறார்கள். அந்த கட்டிடம், வெகு காலமாக யாருமே வராமல் போன அதே மனநல காப்பகம்தான். 


மிகப்பெரிய கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அனைவரும் தங்குகிறார்கள். முழுவதுமாக இருட்டி விட, வெளியே கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கிறது. தன்னிலை மறந்த அந்த இளைஞர்கள் குடியும் கும்மாளமுமாக, ஓடிப்பிடித்து விளையாடுவது, ஹாஸ்பிடல் வராண்டாவில் வீல்சேர் ரேஸ் வைப்பது, ஆடிப்படுவது என்று பொழுதை கழிக்கிறார்கள். இவர்களை ஒரு மூன்றுபேர் தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். பிறகென்ன, அந்த மூன்றுபேர் இந்த இளைஞர்களை எப்படி வேட்டை ஆடினார்கள்? அவர்களுள் யார் யார் தப்பி சென்றார்கள்? என்று முகத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லி இருக்கிறார்கள். முதல் மூன்று பாகங்களைப்போல அல்லாமல், முழுக்க முழுக்க ஒரு கட்டிடத்துக்குள்ளேயே இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். ரத்தத்தை பார்த்தால் எனக்கு கண்களை இருட்டிக்கொண்டு வரும் என்று சொல்பவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. 


முந்தைய பாகங்களைக்காட்டிலும் இதில் வன்முறைக் காட்சிகள் மிக அதிகம்.  பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்திருப்பதால் ஏதோ நிஜமாகவே நடப்பது போல இருக்கிறது. மனிதர்களின் உறுப்புகளை வெட்டி சமைத்து சாப்பிடுவதை ஆற அமர காட்டியிருக்கிறார்கள்.  அதிலும் கட்டிங் பிளேயரை வைத்து, உயிருடன் இருப்பவரின் வயிற்றுக்குள் இருந்து ஈரலை எடுத்து வெட்டி சாப்பிடுவது கொடூரத்தின் உச்சம்.  இந்த படத்தை தயவுசெய்து, சாப்பிடும்போதோ, வயிறு நிறைய சாப்பிட்ட பின்னரோ பார்க்கவேண்டாம். எல்லாம் வெளியே வந்து விடும். மிகப்பெரிய திரில்லிங்கோ, சுவாரசியமோ இல்லாவிட்டாலும், இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். சொல்ல மறந்துட்டேன். இந்த படத்தில் சில பலான காட்சிகளும் உண்டு. இத்தனை ஆண் மற்றும் பெண் நடிகர்களை வைத்துக்கொண்டு, பலான காட்சி இல்லா விட்டால் எப்படி? கண்டிப்பாக பெண்களும் குழந்தைகளும் பார்க்க கூடாத படம். நேரமிருந்தால் மற்றவர்கள் பார்க்கலாம். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


46 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சகோ,
//
அதே காட்டுக்குள், இப்படி வழி தவறி வருபவர்களை வேட்டை ஆடி சாப்பிடும் ஒரு மூன்று பேர் கொண்ட குழு இருக்கிறது. எப்படி இருக்கும்? இதுதான் ராங்க் டர்ன் படத்தின் அடிப்படை.//


என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்,

Wrong turn படங்களின் கதைகள் மனிதர்களை மனிதர்கள் வேட்டையாடி உண்ணும் ஹனிபாலிசம் பற்றிப் பேசுபவை.
வேட்டையாடுவோர் மூன்று பேர் அல்ல.
ட்ரோங் ரேன் பாகம் இரண்டில் பலரைக் காண்பிக்கின்றார்கள்.

பாகம் ஒன்று ஒரு நடிகை படம் எடுப்பதற்காக லொக்கேசன் பார்த்துச் செல்லும் போது வழி தவறிச் செல்லுவதைக் குறிக்கிறது.

பாகம் இரண்டு சுற்றுலா சென்றோர் வழி தவறிச் சென்றதைக் குறிக்கிறது.

பாகம் மூன்று ஜெயில் கைதிகளைக் அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து
அவர்களை வேறோர் இடத்திற்கு மாற்றுகின்ற போது ஹனிபல்கள் எனப்படும் நரமாமிசப் பட்சிகளின் கையில் மாட்டியதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பேசுகின்றது.

ஆக இவர்கள் குழு என்பதற்கும் அப்பால் ஹனிபல்கள் எனப்படும் நரமாமிசம் உண்போர், இன்றும் பல இடங்களில் வாழ்கிறார்கள்.

முதலாவது ட்ரேங் படம் Inspired by True Stories ஐ அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் முதலாவது ட்ரோங் ட்ரேன் படமாகும்.

http://www.thamilnattu.com/2011/03/18.html

இந்த இணைப்பில் ஹனிபாலிசம் பற்றி எழுதியிருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது ஆர்வம் இருப்பின் பாருங்கள்!

நிரூபன் said...

விமர்சனப் பகிர்விற்கு நன்றி நண்பா.

பாலா said...

நண்பரே நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஒட்டுமொத்தமாக இது மூன்று பேரில் இருந்து தொடங்குவதுபோலத்தான் காட்டுகிறார்கள். நான் சொன்ன மூன்று பேர் குழு, முதல் பாகத்தில் முதன் முதலில் காட்டப்படுவது.

இரண்டாம் பாகத்தில் அவர்கள் தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்து கொள்வதைப்போல காட்டி இருப்பார்கள். ஆகவேதான் இரண்டாம் பாகத்தில் நிறைய பேர் வந்து விடுகிறார்கள்.

நடிகை லொகேஷன் பார்க்க செல்வதுதான் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில்தான் சுற்றுலா சென்றவர்கள் வழி தவருவது.

இவர்கள் பிறப்பால் நரமாமிச உண்பவர்கள் அல்ல. ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வேதியியல் கழிவுகளால், மரபியல் கோளாறு ஏற்பட்டு இப்படி ஆனவர்கள். இவ்வாறுதான் அந்த படங்களில் கூறி இருப்பார்கள். இதை படம் பார்க்கும்போதே அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்பதால் சொல்லாமல் விட்டு விட்டேன்.

நரமாமிசம் சாப்பிடும் ஆதிவாசிகளுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆகவேதான் இவர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்லாமல் குழு என்று கூறினேன்.

பால கணேஷ் said...

சரியான நான்வெஜ் படமா இருக்கும் போலருக்கு... நம்மால பாக்க முடியாதுப்பா... பகிர்ந்ததுக்கு நன்றிதான் சொல்ல முடியும்.

பாலா said...

@நிரூபன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பாலா said...

@கணேஷ்

ஆமாம் சார் முழுக்க முழுக்க இது நான்வெஜ். நன்றி சார்.

K.s.s.Rajh said...

@இந்த ஹாலிவுட்காரர்களுக்கே உண்டான ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால், ஒரு படம் ஓடிவிட்டால், அதனை தொடர்ந்து எத்தனை பாகங்கள் எடுக்கவேண்டுமோ எடுத்து, பார்வையாளர்கள் சலித்து, காறி துப்பும் வரை விடமாட்டார்கள். ////

ஹா.ஹா.ஹா.ஹா.அதே அதே நல்ல காலம் இந்த பார்முலாவை நம்ம தமிழ் சினிமா காரங்கள் பாலோபண்ணாமல் விட்டுட்டாங்க சில படங்கள் பகுதி-2 எடுத்தார்கள்....பெரும்பாலும் எடுப்பது இல்லைதானே.....அதுவும் நல்லதுக்குத்தான் இல்லைனா டாகுதர் படங்கள் எல்லாம் பாட்-2 எடுத்தால் என்னாகும்..ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது பார்த்திட்டால் போச்சி

நிரூபன் said...

நண்பா, உங்க்ளோடு விவாதம் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல.

வீக்கிப்பீடியாவில் தேடிப் பாருங்கள்

ட்ரோங் ட்ரேன் ஹனிபல்கள் பற்றித் தான் பேசுகின்றது.

பாலா said...

@நிரூபன்

அதில் தவறொன்றும் இல்லை நண்பரே. நாம் இருவரில் யார் புரிதல் தவறு என்று தெரியவில்லை. பொதுவாக நர மாமிசம் சாப்பிடும் யாரையுமே ஆங்கிலத்தில் ஹன்னிபால் என்றுதான் கூறுவார்கள். அவர் பிறப்பால் ஹன்னிபாலாக இல்லாவிட்டாலும் கூட. அதற்கும் காடுகளில் வசிக்கும் பழங்குடி ஹன்னிபல்களுக்கும் தொடர்பு கிடையாது.

நிரூபன் said...

http://en.wikipedia.org/wiki/Wrong_Turn

இந்த இணைப்பில் பாருங்கள் நண்பா,

நீங்கள் படத்தினைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.
அதனால் தான் நச்சு வாயு வேதியல் கழிவினால் உருவானவர்கள் என்று அவர்கள் சொல்லவரவில்லை.

அவர்கள் அந்த தொழிற்சாலையினைச் சமைக்கும் பிரதேசமாகத் தான் யூஸ் பண்ணி வருகின்றார்கள்.

ஒவ்வோர் பாகமும் அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிக் காடுகளில் எடுக்கப்பட்டிருக்கிறது,

முதற் பாகத்தில் உள்ளோருக்கும் இரண்டாம் பாகத்தில் உள்ளோருக்கும் தொடர்பேதுமில்லை.

வேறு வேறு இடங்களில் வாழும் ஹனிபல் மனிதர்களைப் பற்றித் தான் ஒவ்வோர் பாகங்களும் பேசுகின்றன.

பாலா said...

@நிரூபன்

நீங்கள் இந்த படங்களை பார்த்து விட்டீர்களா என்று தெரியவில்லை. இந்த படத்தில் வரும் ஹன்னிபல்கள் எல்லோருமே உடல் உருக்குலைந்து மரபியல் ரீதியாக பாதிக்க பட்டிருப்பார்கள். அவர்கள் பேண்ட் சட்டைகள் அணிந்திருப்பார்கள். அதேபோல வாகனங்களை எல்லாம் சிறப்பாக கையாளும் டெக்னிக்கல் அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதை வைத்து நான் தவறாக புரிந்திருக்கலாம். நான் விக்கிபீடியாவை படிக்க வில்லை. படங்களை பார்த்த அறிவை வைத்து மட்டுமே எழுதினேன். தவறிருந்தால் மன்னிக்கவும். உங்களுக்கும் இது குறித்து சந்தேகங்கள் இருந்தால், படங்களை நீங்கள் பார்க்கவிட்டால் ஒருமுறை பார்த்து விடுங்கள். நன்றி.

நிரூபன் said...

மச்சி, நான் மூன்று படங்களும் பார்த்திருக்கேன்.

அதனை வைத்து தான் என் விளக்கத்தினை மேலே சொன்னேன்.

பாலா said...

@நிரூபன்

அப்போ சரி நீங்க சொன்ன கேட்டுக்க வேண்டியதுதான். அப்படியே நாலாவதையும் பார்த்திடுங்க...

பாலா said...

@நிரூபன்

அப்புறம் மூன்று படங்களோட விக்கியையும் படித்தேன். மூன்றுமே வெஸ்ட் வெர்ஜீனியா என்ற ஒரே காட்டுக்குள்ளேயே நடக்கிறது. மூன்று பாகத்திலுமே ஒரே குழுதான் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறது. நாலாவது பாகத்தில் இந்த மூவரும் சிறுவார்களாக இருக்குபோது என்ன நடந்தது என்று காட்டுகிறார்கள்.

பாலா said...

@நிரூபன்

மச்சி அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க...

பாலா said...

@K.s.s.Rajh

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

Unknown said...

விமர்சனம் நல்லா இருக்கு...மாப்ள பயமா இருக்குய்யா..!

Unknown said...

ஐயோ பயமா இருக்கே...

விமர்சனம் நல்லா இருக்கு..

வேழமுகன் said...

இதில் மூன்றாம் பாகம் மட்டும் பார்த்திருக்கிறேன். கொடூரமான படங்கள்.

சக்தி கல்வி மையம் said...

நாலு பாகமா/ நான் ஒரு பாகத்தையும் பார்க்கலையே, மாப்ள இன்னைக்கு நைட்டே தேடி கண்டுபிடிச்சு பாக்கணும்..

கேரளாக்காரன் said...

Is this official part 4?
Hw is the print?
Pls rep me

தமிழ்வாசி பிரகாஷ் said...

படம் பார்க்கணும் போல இருக்கே... பயமா இருக்குமா?


நம்ம தளத்தில்:
பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...

சென்னை பித்தன் said...

//நேரமிருந்தால் மற்றவர்கள் பார்க்கலாம். //
நேரமில்லை!

Astrologer sathishkumar Erode said...

அடேயப்பா...இது என்ன படமா.உச்சகட்ட அறுவெறுப்பு உண்டாகும்படியும் குலை நடுங்க செய்யும்படியும் இருக்கே..

Astrologer sathishkumar Erode said...

ஆங்கில தளங்கள் போல டாப் டென் காமெடி ஹாலிவுட்,ஆக்சன் எனும் சீரியல் ஆரம்பிங்க பாஸ்..நாங்களும் தமிழ் மூலமா தெரிஞ்சிக்குறோம்

Saravanan MASS said...

அந்த இரு பெண்களும் சந்தோசமாக வேகமெடுத்து போறப்ப,
அவர்கள் தங்கள் இரண்டு அஜித்தை தவற விட்ட பின்
ஹனிபல் அந்த‌ அஜித்களை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வது

NICE TURN..!

Philosophy Prabhakaran said...

இப்ப prequel எடுக்குரதுதான் ஃபேஷன் போல... ஆனா ஒன்னு இனி எக்காரணம் கொண்டும் ஹாரர் படங்களை திரையரங்கில் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்... நம்மாளுங்க கமெண்ட் அடிச்சே காமெடி பண்ணிடுறாங்க....

ப.கந்தசாமி said...

முழுவதும் படிக்க முடியலீங்க, ரொம்ப பயமா இருக்குது.

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள இதுக்கெல்லாம் நீங்க பயப்படுற ஆளா?

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

பயப்படாதீங்க நண்பரே. அவ்வளவு மோசமான படமெல்லாம் இது கிடையாது.

பாலா said...

@வேழமுகன்

ஆமாம் நண்பரே. சா, ஹாஸ்டல் வரிசையில் இதுவும் மிக கொடூரமான படம்தான்.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நாலு பாகத்தையும் ஒரே மூச்சில் பார்க்காதீர்கள். போராடித்துவிடும். நன்றி நண்பரே.

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

இது அபீசியல் பார்ட் 4 தான். டொரண்டில் தரவிறக்கினால் நல்ல பிரிண்ட் கிடைக்கிறது. நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

நண்பா இது பயமுறுத்தும் படமெல்லாம் கிடையாது. மனதை கலங்கடிக்கும் படம். கொஞ்சம் மன உறுதி வேண்டும் அவ்வளவுதான். நன்றி நண்பா

பாலா said...

@சென்னை பித்தன்

சரிதான் சார். நன்றி.

பாலா said...

@josiyam sathishkumar

சொல்லப்போனால் சா மற்றும் ஹாஸ்டல் படங்களை ஒப்பிடுகையில் இதில் அருவருப்பு கம்மிதான். நல்ல ஐடியா கொடுத்திருக்கிறீர்கள் நண்பரே. நானும் முயற்சி செய்கிறேன். நன்றி நண்பரே.

பாலா said...

@Saravanan MASS

ஹா ஹா ஹா ...
நீங்க் அஜீத் என்ற வார்த்தையை பயன்படுத்திய விதம் அருமை. நன்றி நண்பரே,

பாலா said...

@Philosophy Prabhakaran

ஆமாம். ஹார்ரர் படங்களை நாம் வீட்டில் அமைதியான சூழலில் அமர்ந்துதான் பார்க்க வேண்டும். நம்மூர் தியேட்டர்களில் சான்ஸே இல்லை. நன்றி தல.

பாலா said...

@DrPKandaswamyPhD

விருப்பமில்லாவிட்டால் தவிர்த்து விடுவதே நல்லது சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

kaialavuman said...

Wrong Turn படம் கேப்டன் டீவி யில் இரண்டு மாதம் முன்பு பகல் 11 மணிக்கு ஒரு நாள் போட்டார்கள் (2 series என்று நினைக்கிறேன்). எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. நிச்சயமாக சற்று கனத்த இதயம் கொண்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும். நானும் இது போன்ற படங்களைப் பார்த்தது/பார்ப்பது உண்டு.

Mohammed Arafath @ AAA said...

sorry bala.. konja nala online vara mudiyala...

hm nanum intha padathoda ella parts sum parthu iruken..
2
3
1
4

intha varisaila..
but enaku 2nd than romba pidichiruthathu. mathathu ellam pavala.. but atheye thirumba thirumba paka bore adika arambichuduchu.. sir...

பாலா said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@Mohammed Arafath @ AAA

ஆமாம் அது உண்மைதான். இந்த நாலாவது பாகமும் சுமார்தான். நன்றி நண்பரே.

jiff0777 said...

நல்ல விளக்கம்.. நான் இந்தப் படங்களின் ரசிகன். வெளியாகி அடுத்த நாளே பார்த்து விடுவேன். torrent மூலம் டவுன்லோட் செய்ய கீழே உள்ள இணைப்பைத் தொடுக்கலாம். http://donkeysearch.blogspot.com/p/torrent-search.html?cx=015978769324040734892%3Ai6ep3craz3u&cof=FORID%3A11&ie=UTF-8&q=Wrong+Turn+4&sa=Search&siteurl=donkeysearch.blogspot.com%2Fp%2Ftorrent-search.html

Related Posts Plugin for WordPress, Blogger...