விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 27, 2010

தேர்தலுக்கு முன் - பின் கற்பனையான உண்மை சம்பவம்

உண்மை சம்பவம் என்றால் ஏற்கனவே நடந்ததுதான். ஆனால் இது இனிமேல் நடக்கபோவது ஆனாலும் ஏற்கனவே நடந்தது. ஆகவே தான் இந்த மாதிரி குழப்பமாக ஒரு பெயர் வைத்தேன். சரி பெயர்ல என்ன இருக்கு? விட்டுத்தள்ளுங்க. நம்ம விஷயத்துக்கு வருவோம். பொதுவாக கருத்து கணிப்பு என்பது தேர்தலுக்கு முன்பாக நடக்கும் ஒரு சம்பிரதாயம். இங்கே கருத்து மட்டும் கேட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்ற கற்பனையான உண்மைகளை அளித்திருக்கிறேன்.



தேர்தலுக்கு முன்...

ஆளுங்கட்சி வேட்பாளரின் உறவினர்.
"அட போப்பா சொந்தகாரன்னு நெனச்சு ஓட்டு போட்டது தப்பா போச்சு. போன வருஷம் என்னோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட சகலை பேத்திக்கு இன்ஜினியரிங் காலேஜுல சீட்டு வாங்கித்தான்னு கேட்டா, பய கண்டுக்கவே இல்ல. இந்த தடவை அவன தோக்கடிச்சதான், தக்காளி அவனுக்கு நான் யாருன்னு புரியும்"

கீழ்தட்டு நகரவாசி
"தோ பாருப்பா நமக்கு இந்த ஸ்பெக்ரம் கிக்ரம்லாம் என்ன கருமமோ தெரியாது. ஓட்டுக்கு ஆயரம் ரூவா, ஷோக்கா கலர் டீவி, கேஸ்டவ்வு இதெல்லாம் யாருபா குடுப்பா? இதே அந்த அம்மாவா இருந்தாக்க அத்த கொண்டா இத்த கொண்டாண்ணு ஒரே ராவடிதாம்பா பண்ணும். முப்பது வருஷமா நான் தலைவருக்குத்தாம்பா ஓட்டு போட்ணுகிறேன். இப்போ திடீர்னு வேற யார்ணா ஒருத்தருக்கு போட எப்டிப்பா மன்சு வரும்?"

கீழ்தட்டு கிராமவாசி
"யாரு வந்தாலும் எங்களுக்கு எதுவும் செய்ய போறதில்ல. இப்ப கொஞ்ச நாளத்தான் ஓட்டுக்கு காசு அப்டிண்ணு ஏதோ தர்ராங்க. யாரு ரொம்ப காசு கொடுக்குராங்களோ அவுங்களுக்கு போடுறதுதான முறை?"

நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர்
"பாருங்க பெட்ரோல் விலை, காய்கறி விலை, பால்விலைனு எல்லாம் ஏறி கிடக்கு. என்டிடிவீ பாத்தீங்கண்ணா ஸ்பெக்ட்ரம் ஊழல பத்தி போட்டு கிழி கிழிண்ணு கிழிக்கறான். அம்பது வருஷமா நாடாண்டு இவணுங்க என்னத்த கிழிச்சுட்டாங்க? யாராவது நியூபேஸ் வந்தா நல்லா இருக்கும் சார்."

நடுத்தரவர்க்க குடும்பத்தலைவி
"இதோ பாருங்க எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் யாருக்கு போட சொல்றாரோ அவருக்கு ஓட்டு போட்டுடலாம்னு இருக்கேன்."

கல்லூரி மாணவர்
"சார் அரசியலே ஒரு சாக்கட சார். நம்ம நாடே நாறிக்கிடக்குது. இளைஞர்கிட்ட ஒரு எழுச்சி ஏற்பட்டாத்தான் சார் நாடு முன்னேறும். ஆயுத எழுத்து படத்துல கூட மணி சார் இதத்தான் சொல்லி இருப்பார். அரசியல்ல இளைஞர்களின் ஈடுபாடு அதிகம் இருக்கணும் சார். அப்பத்தான் அப்துல்கலாம் கண்ட 2020இல் வல்லரசு கனவு நிறைவேறும் சார். இதை தீமா வச்சு நான் எழுதிய கவிதை கூட எங்க கல்லூரில ஃபர்ஸ்ட் பிரைஸ் வின் பண்ணிருக்கு சார்."

பெருவணிக முதலாளி
"யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி நம்ம சைட்ல இருந்து வெய்ட்டா கவனிச்சுடுவோம். எல்லா கட்சியிலயும் நம்ம சாதிக்காரனுங்கதான் நிக்க போறாங்க. அதனால கவல இல்ல."

அரசு ஊழியர்
"அந்தம்மா வந்த உடனே செய்யுர மோத வேல எங்க சலுகைகள எல்லாம் கட் பண்றதுதான். ஸ்பெக்ட்ரமோ, போபர்ஸோ நமக்கு ஒண்ணும் பாதிக்க போறதில்லை. என்ன கேட்டா இவுங்களே மறுபடியும் ஜெயிக்குறதுதான் நியாயம். இது மட்டுமில்லாம எங்க சங்கத்துல எல்லாரும் இவருக்குத்தான் ஓட்டு போடனும்னு முடிவு பண்ணிட்டாங்க. நா மட்டும் என்ன பண்ண முடியும்?"

பதிவர்கள்
"முட்டாள் பொதுமக்கள்!, தேர்தலே வியாபாரம். அம்மா ஐநூறு கோடி என்றால் அய்யா பத்தாயிரம் கோடி ஊழல். பேசாம யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லைன்னு ஓட்டு போட்டுட வேண்டியதுதான். இந்த நாட்ட யாராலையுமே காப்பாத்த முடியாது."


தேர்தல் அன்று ....

ஆளுங்கட்சி வேட்பாளரின் உறவினர்
"என்னதான் இருந்தாலும் சொந்தக்காரன், விட்டு கொடுக்க மனசு வருமா? நம்ம சாதிசனம் பதவில இருந்தத்தானே நமக்கு மரியாத? அதுவுமில்லாம இந்த தடவ நிறையா பண்றதா சொல்லிருக்கான். (பம்முகிறார்) அதனால ஒன்னுக்கு நாலா ஓட்டு போட்டிருக்கேன்."

கீழ்தட்டு நகரவாசி
(கண்களில் போதை தெரிகிறது) "இன்னதான் சொல்லு, தலைவர் தலைவர்தாம்பா. ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூவா கொடுக்க யாருக்கு மன்சு வரும். கருக்கல்லயே ஊட்டுக்கு வந்து ரெண்டு பிரியாணி பொட்டலம், ஒரு குவாட்டர் பாட்லும் குட்த்தாணுங்க. பிரியாணிய பிர்ச்சி பாத்தா ரெண்டு ஆயரம் ரூவா நோட்டு. ஓத்தா இவுங்க குத்த இந்த ரூவாய்க்கு சலாம்போட்டு வாய்க்க முயுக்க வோட்டு போட்லாம்பா." (மயங்கி சரிகிறார்).

கீழ்தட்டு கிராமவாசி
"அதெல்லாம் தெரியாதுங்க. ரெண்டு பேரும்தான் ரூவா குடுத்தான், இருந்தாலும் நம்ம சாதிக்குன்னு ஒரு மருவாதை இருக்குல்ல? நம்ம சாதிக்காரப்பய நிக்கிற கச்சிக்குத்தான் ஓட்டு போட்டேன்."

நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர்
"சார் இந்த நாடெல்லாம் எப்ப திருந்த போகுது? காலைல ஓட்டு போட போனா ஐடில மூஞ்சி சரியா தெரியல, ரேஷன் கார்டு கொண்டு வான்னு அலக்கழிச்சாங்க. கடைசில என் வோட்ட ஏற்கனவே போட்டுட்டாணுங்கலாம். என்ன சார்னு நியாயம் கேட்டா அடிக்க வர்ற மாதிரி பாக்குராணுங்க. இதெல்லாம் நமக்கு தேவையா?"

நடுத்தரவர்க்க குடும்பத்தலைவி
"நான் அப்பவே சொன்னேன் ஓட்டு போடுர எடத்துக்குலாம் போகாதீங்க. அங்க சண்ட நடக்கும்னு. இந்த மனுஷன் கேட்டாத்தானே? இப்ப பொலம்புராரு. நல்ல வேளை நான் போகல. கலைஞர் டீவில நல்ல படம் போடுறான். பாக்க உக்காந்துட்டேன்."

கல்லூரி மாணவர்
"என்ன சார் எலெக்சன் ஓட்டுண்ணு. அதான் அப்பவே சொன்னேன்ல நம்ம நாட்டுக்கு இளைஞர்கள்தான் தலைவரா வரணும்னு. இங்க வேட்பாளரா நிக்கிறவங்கள்ள எத்தனை பேரு இளைஞர்கள்? அதோட நான் ஒருத்தன் ஓட்டு போடாததுனால எலெக்சன் என்ன நடக்காமலா போய்டும்? போங்க சார். காலேஜுக்கு ஒருநாள் லீவு விட்டுருக்கான் அன்னிக்கும் பூத்துக்கு போ, ஓட்டு போடுன்னுட்டு."

பெருவணிக முதலாளி
"அதான் சொன்னேன்ல, யாரு வந்தாலும் நமக்கு கவல இல்ல. நான் ஓட்டு போட்டுத்தான் இங்க ரெண்டாயிட போகுதா? அதெல்லாம் எலெக்சன் முடிஞ்சு ரிசல்ட் வரட்டும் அப்ப பாத்துக்கலாம்."

அரசு ஊழியர்
"எங்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ அவுங்களுக்க்த்தானே ஓட்டு போட முடியும். இப்ப மூணு மாசத்து முன்னாடி கூட DA இருபத்தாஞ்சு பர்சண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க. அதனால நம்ம ஓட்டு எப்பவுமே தலைவருக்குத்தான்."

பதிவர்கள்
"இன்னிக்கு ஒரு நாள்தான் ஆபீஸ் லீவு. இதுக்காக சொந்த ஊருக்கு போயிட்டு வரமுடியுமா? நான் போடுரா ஓட்டுனால இந்த நாட்டோட தலையெழுத்து என்ன மாறிடவா போகுது? அதான் இங்க ரூம்லயே தேர்தல் அப்டெட்ஸ் பார்த்து பதிவு எழுதிக்கிட்டிருக்கேன். இந்த பதிவுக்கு தான் ஹிட்சும், வோட்டும் அதிகமா கிடைக்கும்." 

தேர்தல் முடிவுகள் 

45 சதவீதம் வாக்குப்பதிவு. ஆளும்கட்சி மயிரிழையில் முன்னணி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலுக்குப்பின் ...

மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

16 comments:

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க!

"ராஜா" said...

நீங்க டி.எம்.கே வா .. அவங்களுக்கு சாதகமா முடிச்சிருக்கீங்க...

Anonymous said...

அத்தோடு இந்த நடுத்தர குடிமகனின் கருத்தையும் சேத்துகோங்க பாலா. "இந்தியா பாகிஸ்தான் மாட்ச் நடக்கும்போது எலக்சன் வச்சி உசுர வாங்குறானுங்க...அறிவு கெட்டவனுங்க"(madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

இம்சைஅரசன் பாபு.. said...

கற்பனை நன்றாகவே உள்ளது உங்களுக்கு ...........அனைத்தும் உண்மை தான்.......இருந்தாலும் கொஞ்சம் DMK சதகமக் எழுதி இருக்கீங்க ...........வீட்டுக்கு ஆட்டோ வந்திரகூடாதுன்னு பயமோ ?

Unknown said...

நல்ல கற்பனைங்க ரசித்தேன்

Unknown said...

மிக மிக அருமை என்றாலும் ஒரு அரசாங்க ஊழியரின் மனநிலையை அப்படியே காண்கிறேன்.

ஆமினா said...

நல்ல கற்பனை!

பயங்கரமா சிரிச்சுட்டேன்!!!

வாழ்த்துக்கள் சகோ

எப்பூடி.. said...

நல்லாத்தான் கற்பனை பண்ணியிருக்கிறீங்க, இப்பெல்லாம் தெர்தளின்னாலே எனக்கு வடிவேலுதான் ஞாபகம் வாராரு, அம்புட்டு காமடியா போச்சு,

vimalanperali said...

இது நல்லாயிருக்கே.

ஹரிஸ் Harish said...

சூப்பர்..நல்ல கற்பனை..

Anonymous said...

45 சதவீதம் வாக்குப்பதிவு. ஆளும்கட்சி மயிரிழையில் முன்னணி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறது.//
இது உண்மையாக வாய்ப்பிருக்கிறது நச்சுன்னு ஒரு பதிவு..ரசித்தேன்

karthikkumar said...

நச்சுன்னு எழுதி இருக்கீங்க பங்கு. ஆட்டோ வந்தாலும் அசராம எழுதுவோர் சங்கம். சீக்கிரம் இந்த சங்கத்தில் சேருங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல கற்பனைவளம் நண்பா உங்களுக்கு. சூப்பர்.

Anonymous said...

உள்ளேன் ஐயா.. :)

பாலா said...

@ எஸ்.கே
நன்றி நண்பரே...

@ "ராஜா"
ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் தான் எழுதி இருக்கிறேன். மற்றபடி நம்ம எல்லாம் வெறும் சொத்து கட்சிதான்

@ சிவகுமார்
சரியா சொன்னீங்க...

@ இம்சைஅரசன் பாபு..
ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அந்த அர்த்தத்தில்தான் எழுதினேன். நன்றி நண்பரே..

@ நா.மணிவண்ணன்
நன்றி நண்பரே..

@ இனியவன்
பொதுவாகவே ஒட்டு போடும் மக்கள்தொகை அரசு ஊழியர் மற்றும் கீழ்தட்டு மக்கள்தானே. ஆகவே தான் அந்த மனநிலையில் எழுதினேன். மேலும் நான் கூறி இருப்பது பேருந்தில் கண்டக்டர் மற்றும் டிரைவர் பேசிக்கொண்ட விஷயம்தான். நன்றி நண்பரே..

பாலா said...

@ ஆமினா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...:)

@ எப்பூடி..
வடிவேலு காமெடியே தோத்துபோகும். இங்க நடுக்குரத எல்லாம் பார்த்தால்..

@ விமலன்
நன்றி சார்

@ ஹரிஸ்
நன்றி நண்பரே

@ ஆர்.கே.சதீஷ்குமார்
இது நடக்க தொண்ணூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் நம்ம ஆளுங்களை நம்பவே முடியாது. நன்றி நண்பரே...

@ karthikkumar
சேர்ந்தாச்சு பங்கு..

@ ரஹீம் கஸாலி
நன்றி தலைவரே...

@ Balaji saravana
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு...

Related Posts Plugin for WordPress, Blogger...