விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 30, 2010

பதிவுலகமும் சில சந்தேகங்களும்...


சமீபத்தில் குமரன் குடிலுக்கு சென்று வந்தேன். அந்த குடிலின் சொந்தக்காரர் தனக்கு புரியாத சில விஷயங்களை பற்றி கூறி இருந்தார். அவருடைய சந்தேகங்கள் பல எனக்கும் உண்டு. முன்பே சொன்னது போல இந்த பதிவுலகத்துக்கு வந்தபிறகு நிறைய கற்றுக்கொண்டேன். எவ்வளவுதான் புத்தகங்கள், படைப்புகள் நிரம்பி வழிந்தாலும் குப்பைத்தொட்டி நூலகம் ஆகாது. ஒரு நூலகம் போல ஆக வேண்டும் என்று கண்டதை எல்லாம் நிரப்பி என்மனம் குப்பைதொட்டி ஆனதுதான் மிச்சம். முதலிலேயே கூறிகொள்கிறேன் இவை என் வாதங்கள் அல்ல. சந்தேகங்கள்தான்.


ஆணாதிக்கம்

நான் ஒரு ஆசிரியன். மற்றவர்களை விட இளைய சமுதாயத்தினருடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்றவன். ஒரு பெண் தவறு இழைக்கிறாள் (ஆண் செய்தாலும் தவறு தவறுதான்). "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது? "அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு? அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா?" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே? இது ஆணாதிக்கமா? ஆண் என்பவன் உணர்வுரீதியாக அதிகம் சிந்திப்பதில்லை. பெண் அதிகமாக சிந்திப்பது உணர்வுரீதியாகத்தான். உணர்வு ரீதியாக சிந்திப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். அந்த தொனியிலேயே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்ற வார்த்தை வருகிறது. இதே போல பெண்ணுக்கு சமஉரிமை என்று சொல்பவர்கள் சொல்லும் முதல் வார்த்தை நாங்களும் ஆண்களுக்கு இணையாக பல செயல்கள் செய்கிறோம் என்பது. ஒருவர் மாதிரி இன்னொருவர் செய்வது எப்படி சம உரிமை ஆகும். ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா?


என் தோழி ஒருத்தியுடன் வெகு நாட்கள் கழித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவளைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். படித்து முடித்தவுடன் போய் ஒரு பெரிய நிறுவனத்தில் உட்காரவில்லை. இரண்டாண்டு படாதபாடு பட்டு ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பின், தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் எண்ண முடியாத அளவுக்கு சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறாள். பெரிய கம்பெனிகள் நடத்தும் Off Campus நேர்முக தேர்வுகளில்தான் நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஒரு தேர்வு பாக்கி இல்லாமல் ஆவலுடன் வருவார் அவளின் தந்தை. அவர் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கல்லூரியில் தன் பிள்ளையை சேர்க்க வரும்போது ஒரு தந்தையின் முகத்தில் இருக்குமே அதே போல. என்ன நடக்கிறதென்று தெரியாது. ஆனால் நம் மகள் நேர்முக தேர்வுக்கு வருகிறாள், அவளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். தற்போது அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவனை காதலிப்பதாக சொன்னாள். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சொன்னாள். தன் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். அவளின் பெற்றோர்கள் கேட்பதாக இல்லை. இது குறித்து என்னிடம் அவள் சொன்ன வார்த்தை, "ரொம்ப ஓவரா பண்றாரு எங்கப்பா. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல. அதனால இங்க தனியா ஒரு ரூம் எடுத்திட்டேன். செல் நம்பர் கூட மாத்திட்டேன். என்னை என்ன அவுங்க அடிமைன்னு நினச்சுட்டான்களா?" . இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? ஆண்தான் பெற்றோரை அனாதையாக விடுவான் என்று பார்த்தால் இந்த பெண்ணும் விட்டுவிடுவாள் போலிருக்கிறதே? ஒருவேளை இதுதான் சம உரிமையோ? இதை சுட்டிக்காட்டுவது ஆணாதிக்கமா? 

பார்ப்பனீயம்

பார்ப்பனியம் என்றால் என்ன என்று ஒரு பதிவர் தெளிவாக எழுதி இருந்தார். அதாவது பார்ப்பனீயம் என்பது பிராமணர்களை குறிப்பது அல்ல. தனக்கு கீழே இருக்கும் ஒருவன் வளர விடாமல் தடுப்பது, அவனை மட்டம் தட்டுவது எல்லாமே பார்பனீயம்தான். தீர்ந்தது சந்தேகம். ஆனால் அதே பதிவர் மற்றும் இன்ன பிற தோழர்கள் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடம் எல்லாமே பிராமணர்களை குறிப்பதாகவே இருக்கிறது. மேலும், "ஐ டி துறையில் இருக்கும் மேலதிகாரிகள், தன் கீழே வேலை பார்க்கும் ஒருவனை சட்டைக்குள் எட்டிப்பார்க்கிறார்கள் பூணூல் தெரிகிறதா? என்று, எல்லாம் பார்ப்பனனின் திமிர்!!!" என்றும் எழுதி இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை நடக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரு கருத்தை பிடித்து தொங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஒருவன் கருத்து தெரிவிக்கிறான். உடனே அவன் சட்டைக்குள்ளே எட்டிப்பார்த்து அதையும் எழுதுகிறார்கள். இவர்களில் யார் பிராமணன்? யார் பார்ப்பனன்? என் நண்பன் ஒருவன் இருந்தான். மருத்துவராவது அவன் கனவு. ஆனால் முடியவில்லை. காரணம் அவன் பிராமணன். அவனை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. பிராமணனாக பிறந்ததுதான் அவன் செய்த தவறா? இயல்பாகவே மற்றவர்கள் மீது அவனுக்கு எழும் கோபத்தில் பொரிந்து தள்ளுகிறான். உடனே எட்டிப்பார்த்து "பார்ப்பனனின் திமிரை பார்த்தீர்களா?" என்கிறார்கள். அட எதுதான் பார்ப்பனீயம்?

முதலாளித்துவம் 


குமரனுக்கு வந்தது போல எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று கைவலிக்க நிறைய பதிவர்கள் எழுதி வருகிறார்களே? இவர்கள் யாரும் வேலையே பார்க்கவில்லையா? ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி கொண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா? "மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி." என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா? "நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் வீட்டுக்குள் உட்கார்த்து பதிவு எழுதுகிறார்களே இவர்கள்தான் நல்லவர்களா? ஒரு சினிமாவை கூட அரசியல் நோக்கோடு, உர்ரென்று பார்த்துக்கொண்டிருந்தால் மன இறுக்கம் வந்து பைத்தியம் பிடித்து விடாதா?


கடவுள் நம்பிக்கை 

பதிவுலகம் என்றில்லை எல்லா இடத்திலும், எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்ப்புவாதம் என்று ஒன்று உண்டு. இது அதிகம் இருப்பது கடவுள் மற்றும் மத சம்பந்தமான விஷயங்களில். முதலிலேயே சொல்லி விடுகிறேன் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே கடுமையான வார்த்தைகளால் கடவுளை திட்டுகிறார்களே இது எதற்காக? பொதுவான, வேரிலேயே ஊறிப்போன ஒரு அடிப்படை நம்பிக்கையை உடைக்க வேண்டுமானால் எவ்வளவு பக்குவம் பொறுமை வேண்டும்? மோசமான ஒரு தாய்க்கு பிறந்த ஒரு மகனிடம் சென்று "உங்கம்மா ஒரு தே...." என்றால் அவன் என்ன செய்வான்? அடிக்கத்தான் வருவான். நான் உண்மையைதானே கூறினேன்? என்று வாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த பெரியாரின் வாசகம் இது.

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! 

இதை எத்தனை நாத்திகர்கள் செய்கிறார்கள்? நாத்திகர் என்பது தங்களை மட்டப்படுத்த ஆத்திகர்கள் வைத்த பெயராம். அப்படியானால் பகுத்தறிவுவாதிகள் என்ற பெயர் கூட உங்களை நீங்களே சொரிந்து கொள்ள வைத்து கொண்ட பெயர்தானே. பகுத்தறிவுக்கும், நாத்திகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லவில்லை. நம்புகிறேன். அதே போல்தான் உங்கள் கொள்கையை நீங்களும் நம்புகிறீர்கள். ஆனால் அதை சொல்லும் விதத்தில் வார்த்தை பிரயோகங்கள் மனதை புண்படுத்துவது போல இருப்பது ஏன்? உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா? இந்த கேள்வியை கடவுளை ஆபாசமாக திட்டி எழுதும் பல பதிவர்களிடம் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஏனோ பதில்தான் வரவில்லை. மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன் கடவுள்மறுப்பு, சாதி மறுப்பு, பார்ப்பனீய ஒழிப்பு என்று ஒரு சாதி உருவாகி இருக்கிறதே ஒழிய வேறொன்றும் நிகழ்ந்து விடவில்லை. என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் மாபெரும் சந்தேகங்கள் இவை. யாராவது தீர்த்து வைத்தால் நல்லது.

பிடிச்சிருந்தா மறக்காம ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...     

31 comments:

எல் கே said...

மிக மிக தெளிவான பதிவு நண்பரே. வாழ்த்துக்கள். பலரும் எழுதத் தயங்கும் விஷயம் பெண்ணியம்/ஆணாதிக்கம். இதை பற்றி எழுதினால் தங்களையும் ஆணாதிக்கவாதி என்று கூறி விடுவார்கள் என்ற பயத்திலேயே பலர் இதை சொல்லுவது இல்லை. வாழ்த்துக்கள்

அது ஒரு கனாக் காலம் said...

மிக தெளிவான பதிவு ,

எனக்கு தெரிந்த வரை , சிவப்பு சட்டை தோழர்கள், ஒரு டீ கடை கூட நடத்துவது கிடையாது என் நினைக்கிறேன் , அப்படி நடத்தினாலும் அதில் வேலை செய்யும் பையன்களை / ஆள்களை , எட்டு மணி நேர வேலை , கைக்கு உறை, பாதுகாப்பு கவசம் , டீ பிரேக், நல்ல உணவு , முக்கியமாக அரசாங்கம் நிச்சயதித்த ஊதியம் ..... இதெல்லாம் நடக்கிறதா என்ன ????

கருப்பு சட்டை .... சட்டை செய்யாமல் இருப்பதே நலம்

Anonymous said...

அருமை அன்பரே .......
அதிலும் ஆணாதிக்கம் மற்றும் பெண்ணாதிக்கம் கருத்து தெளிவான நீரோடை

/****
கடவுள் நம்பிக்கை
உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா? ****/

really super na ...

தொடரட்டும் உங்களின் எழுத்து புரட்சி

Anonymous said...

//உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா?

நோக்கத்தை நோகவைத்து விட்டீர்கள்.....அருமை அருமை

வவ்வால் said...

Aan aathikkam:

pen thozhi kaathal konda pothu appadi sonnathal, varuthpaduringa,aan nanban solli iruntha?

7g rainbow colony filmla hero ithe solvar,heroin ithe pola kelvi ketpar.

Male or female love ku ethirpu vanthal appadithan seyalpaduvarkal.

Ithil yen aan/pen oppeedu ,melum pen appadi pesalama enra kelvi? Apathamana kelvi.

Familikaga kaathalai marapavarkal perumpalum penkale,aanal appadi seypavarai kaathal throgi enpathu aankale !

Paarpaniyam:

meendum oru nachu karuthu.

Bramana maanavanai vida kuraivaga mark vaangiya maanavan pala kaalama kalvi,sama urimai marukkapattavan enpathai maranthathu yen?

Ippothu alikkum salugai kadantha kaalangalil oru samugam adaintha thunbangalukkana parisu.

Appadi irukkum pothu etho ulaga neethiya pudusa kandupidithu pesuvathu pazhamaivatham!

Bala said...

@LK
வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி நண்பரே...

@அது ஒரு கனாக் காலம்
யாரையும் தாக்கி எழுதவேண்டும் என்று இதை எழுதவில்லை. கருத்துக்கு நன்றி நண்பரே...

@thiru
நன்றி திரு. ஏதோ மனதில் தோன்றும் சில கேள்விகளை பதிவிடுகிறேன். அதற்காக புரட்சி என்பதெல்லாம் ஓவர்.

Bala said...

@வவ்வால்

நண்பரே பதிவை ஒருமுறை தெளிவாக படியுங்கள். தோழி தன் காதலை வீட்டில் சொல்லவே இல்லை. அந்த அளவுக்கு அவளின் பெற்றோர் முக்கியமில்லாமல் போய் விட்டார்கள். அதே போல நீங்கள் சொல்வது சரிதான். காதல் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஆணை பார்த்து ஒரு பெண் கேட்கலாம். பெண் தோழியை பார்த்து ஆண் கேட்டால் அது ஆணாதிக்கமா என்பதுதான் என் கேள்வி.

நான் அந்த பிராமண மாணவனின் உணர்ச்சியை பற்றிதான் குறிப்பிட்டேன். அவனுக்கென்ன தெரியும் சமூக ஏற்றத்தாழ்வை பற்றி? பள்ளிப்பருவத்தில் நீங்கள் இந்த அளவுக்கு பக்குவத்துடன் இருந்தீர்களா?

தங்களின் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி நண்பரே...

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துக்கள். எல்லாக் கருத்துக்களும் எனக்கு உடன்பாடாக இருக்கின்றன.

நிகழ்காலத்தில்... said...

கருத்துகளோடு உடன்படுகிறேன்..

வாழ்த்துகள்.

Sabarinathan Arthanari said...

இப்படியெல்லாம் கேள்வி கேட்டிங்கன்னா நீங்க பார்ப்பானான்னு சிலர் கேள்வி கேட்டு பின்னூட்டம் போடுவாங்க (என்னுடைய அனுபவம் ;). பதிவர் சந்திப்பின் போது சட்டையின் உள்ளே எட்டி பார்ப்பாங்க. அதையும் எழுதுங்க.

நன்றாக இருந்தது நன்றி

ரிஷபன்Meena said...

பார்பான் பார்ப்பான் என்று வெற்றுக் கூச்சலால் பதிவுலகை நாற அடிக்கிறார்கள்.

புலவன் புலிகேசி said...

நண்பரே உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே

பதிவுலக சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

Bala said...

@ DrPKandaswamyPhD

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... தங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.

@ நிகழ்காலத்தில்...

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே... அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க..

@ Sabarinathan Arthanari

கண்டிப்பாக நடக்கும். நம் நோக்கம் நல்லதாக இருக்கும் போது இது பற்றி கவலைப்பட தேவை இல்லை. நன்றி நண்பரே...

@ ரிஷபன்Meena

பதிவுலகத்திலும் சாதியை முன்னிறுத்தி சண்டை நடப்பது வேதனை அளிக்கிறது. கருத்துக்கு நன்றி நண்பரே...

@ புலவன் புலிகேசி

என் சந்தேகங்களுக்கு மதிப்பளித்து ஒரு பதிவே போட்டு அசத்தி விட்டீர்கள் நன்றி நண்பரே...

அக்னி பார்வை said...

ஒரு நடுத்தர வர்க்க பார்வையுடன் அனைத்தையும் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் இறுதியில் இவையெல்லாம் உங்கள் முடிவுகள் அல்ல சந்தேகம் என்று சொல்லியிருப்பதால் தொடர்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்திற்கும் அடிப்ப்டையான ஒன்று ஒரு பிரச்ச்னைகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் பதிவில் இருக்கும் நான்கு விடயங்களுக்குமே அடிப்ப்டை "ஆதிக்கம்", பிரச்ச்னை இது தான் ஆதிகத்தை எதிர்கிறேன் என்று பெரியார் சொன்னாலும் அவரை கடவுள் மறுப்பாளாராக மட்டும் சித்திரபதின் பின் விளைவுகள் இவை.

மனிதானாக பிறந்த (ஆண், பெண், திருநங்கை) என யாராக இருந்தாலும் அவருக்கு இந்த உலகில் மற்றவரை துன்படுத்தாமல் வாழு முழு உரிமை உள்ளது. அதே நேரம் இந்த உலகமோ ஒருவரை ஒருவர் என்று தொடங்கி ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் அமைப்பாக உள்ளது.

மனிதனின் மனதில் எப்பொழுதும் இருக்கும் பயம் வெளியே ஆதிக்காமகி விடுகிறது, அந்த ஆதிக்கத்தை தக்கவித்துக்கொள்ள அவன் எதையும் செய்ய துணிந்துவிடுகிறான்.

1. யார் தவறு செய்தாலும் தண்டிக்கபட வேண்டியவர் தாம், ஆனால் ஒரு ஆண் புகைபிடிப்பதை ஏற்றுகொள்வதை போல் உண்மையாக நேர்மையாக ஒரு பெண் புகைபிடித்தால் ஏற்றுகொள்ளுமா?

நீங்கள் சொல்லும் பல விடயங்கள் வழிவழியாக, கதைகள், கலை, இலக்கியம்,ஒழுக்கம், க்லாச்சாரம், என்ற வழிகலில் காப்பாற்றப்டுகிறது. இந்த காலங்களில் அனுதாபம் என்ற முறையில் காப்பாற்றபடுகிறது.

சிலரை கண்டிக்க அனைவரையும் திட்டுவதை போல் , யாரோ ஆனாதிக்கத்தையும் பார்பனீயத்தையும் த்வறாக பிர்யோகித்த்மைக்கு ஆதிகத்திற்கு வக்காலாத்து வாங்குகிறீர்கள்.

நான் அடிமையாக இருக்க விருப்ப்மில்லை எந்த காரணம் கொண்டும், அது பெண்ணாக பிறந்த்தனால் இருகட்டும், உழைக்க த்யாராக இருப்பதால் இருக்கட்டும், கறுப்பாக பிறந்த்த்னால் இருகட்டும், கடவுளினால் கூட நான் அடிமைபடுத்த படுவதை எதிர்க்கிறேன்..

புரிகிறதா? இல்லமி அடிமைத்னமே சுகமாக இருக்கிறதா?

அக்னி பார்வை said...

ஒரு நடுத்தர வர்க்க பார்வையுடன் அனைத்தையும் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் இறுதியில் இவையெல்லாம் உங்கள் முடிவுகள் அல்ல சந்தேகம் என்று சொல்லியிருப்பதால் தொடர்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்திற்கும் அடிப்ப்டையான ஒன்று ஒரு பிரச்ச்னைகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் பதிவில் இருக்கும் நான்கு விடயங்களுக்குமே அடிப்ப்டை "ஆதிக்கம்", பிரச்ச்னை இது தான் ஆதிகத்தை எதிர்கிறேன் என்று பெரியார் சொன்னாலும் அவரை கடவுள் மறுப்பாளாராக மட்டும் சித்திரபதின் பின் விளைவுகள் இவை.

மனிதானாக பிறந்த (ஆண், பெண், திருநங்கை) என யாராக இருந்தாலும் அவருக்கு இந்த உலகில் மற்றவரை துன்படுத்தாமல் வாழு முழு உரிமை உள்ளது. அதே நேரம் இந்த உலகமோ ஒருவரை ஒருவர் என்று தொடங்கி ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் அமைப்பாக உள்ளது.

மனிதனின் மனதில் எப்பொழுதும் இருக்கும் பயம் வெளியே ஆதிக்காமகி விடுகிறது, அந்த ஆதிக்கத்தை தக்கவித்துக்கொள்ள அவன் எதையும் செய்ய துணிந்துவிடுகிறான்.

1. யார் தவறு செய்தாலும் தண்டிக்கபட வேண்டியவர் தாம், ஆனால் ஒரு ஆண் புகைபிடிப்பதை ஏற்றுகொள்வதை போல் உண்மையாக நேர்மையாக ஒரு பெண் புகைபிடித்தால் ஏற்றுகொள்ளுமா?

நீங்கள் சொல்லும் பல விடயங்கள் வழிவழியாக, கதைகள், கலை, இலக்கியம்,ஒழுக்கம், க்லாச்சாரம், என்ற வழிகலில் காப்பாற்றப்டுகிறது. இந்த காலங்களில் அனுதாபம் என்ற முறையில் காப்பாற்றபடுகிறது.

சிலரை கண்டிக்க அனைவரையும் திட்டுவதை போல் , யாரோ ஆனாதிக்கத்தையும் பார்பனீயத்தையும் த்வறாக பிர்யோகித்த்மைக்கு ஆதிகத்திற்கு வக்காலாத்து வாங்குகிறீர்கள்.

நான் அடிமையாக இருக்க விருப்ப்மில்லை எந்த காரணம் கொண்டும், அது பெண்ணாக பிறந்த்தனால் இருகட்டும், உழைக்க த்யாராக இருப்பதால் இருக்கட்டும், கறுப்பாக பிறந்த்த்னால் இருகட்டும், கடவுளினால் கூட நான் அடிமைபடுத்த படுவதை எதிர்க்கிறேன்..

புரிகிறதா? இல்லமி அடிமைத்னமே சுகமாக இருக்கிறதா?

HVL said...
This comment has been removed by the author.
வெண்ணிற இரவுகள்....! said...

http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_4633.html

ennudaya padilkal

வெண்ணிற இரவுகள்....! said...

இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது வரிக்கு வரி சொல்ல முடியும் .ஒரு முதலாளி என்பவனால் நல்லவனாகவே இருக்க முடியாது ........ நல்லவனாய் இருந்தால் அவன் முதலாளியாகவே இருக்க முடியாது என்பதே உண்மை ........... இரண்டாவது காசு கொடுக்கிறான் என்பதற்காய் விமர்சனம் பண்ணக்கூடாதா என்ன இது என்ன விழுமியம் என்றே தெரியவில்லை , உழைப்பிற்கு குறைந்த ஊதியம் தான் தருகிறானே தவிர அவன் அதிகம் தருவதில்லை என்பதே உண்மை நீங்கள் என்னமோ பிச்சை போடுவதை போல சொல்கிறீர்கள் சரி அப்படியே காசு கொடுத்தாலும் தவறு என்றால் சுட்டிக்காட்ட வேண்டாமா

Anonymous said...

//கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே?//

பெண்கள் உணர்ச்சிப்பூர்வமாக சிந்திப்பவர்கள். நான் இளைஞர்களிடம் பழகியிருக்கிறேன்.

என்றெல்லாம் எழதும் நீங்கள் எப்படி, இப்படி எழுதுகிறீர்கள்.

தொனி மிக முக்கியம். குறிப்பாக பெண்களிடம்.

ரேசிஸம் எவை என்னும் ஐரோப்பிய அளவுகோலில் ‘தொனியும்’ சேர்க்கப்பட்டுள்ளது.

Anonymous said...

//ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் //

ஒருபட்சமான கருத்து.

சமயுரிமை என்பதை நல்காரியங்களிடம் மட்டுமே என்று சொன்னால், கடைசியில் அஃது ஆணதிக்கத்தில்தான் போய்விடும்.

எக்காரியமாயினும் அது செய்யக்கூடியதா, கூடாத்தா என்பதை, இருபாலாரும் தாமாகவே முடிவு செய்யலாம். குழந்தைகள் அல்லது பள்ளிப்பருவத்தினர்கள் மட்டுமே பெரிய்வர்கள் சொல்கேட்கலாம்.

Anonymous said...

//இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? //

தப்பான நோக்கு. இது ‘திமிர்’ அல்ல. தன்னம்பிக்கை.

பெண்கள் when they become economically independent தன்னம்பிக்கை தானாகவே வரும். தனக்கு எவன் பொருத்தம் என தேர்ந்தெடுக்கும் தன்னம்பிக்கையும் இப்படி வரும்.

Anonymous said...

//ஆண்தான் பெற்றோரை அனாதையாக விடுவான் என்று பார்த்தால் இந்த பெண்ணும் விட்டுவிடுவாள் போலிருக்கிறதே? //

இருபாலாருக்கும் பொதுவிதியென்னவென்றால், தங்கள் பெற்றோர்களை கடைசிகாலத்தில் காப்பாற்றுவது.

‘பெண்ணும்’ என்று உம்மைத் தொகை போட்டுபார்ப்பது உங்கள் value system is corrupt என்பதைத் தெளிவாக்குகிறது.

Anonymous said...

பார்ப்பனீயம் பற்றி:

முதலில் பிராமணன் என்று எவன் தன்னை வரூணீத்துக்கொண்டு, பிறரும் அவ்வாறே தன்னை வருணிக்கவேண்டும், என்பதே பார்ப்ப்னியம் என்பதன் பெரும்கேடாகும்.

நீங்களும் அச்சொல்லை விட்டு வெறும் பார்ப்பனர்கள் எனவும்.

once bitten twice shy என்பார்கள். அதன்படி, பார்ப்ப்னர்களின் ஆதிக்கம், தீண்டாமை கடைபிடிப்பு, அவர்களின் மதத்தைப்பயன்படுத்தி வாழும் குழமனப்பான்மை என்று காலம்காலமாக் பார்த்த்த தமிழர்கள் இவ்வாறு பார்ப்பன்ர்களப்பார்த்துா
மிரள்கிறார்கள் மனதுக்குள். அதன் வெளிப்பாடே, ‘திமிர்’ என்ற னச்சொல்.

Anonymous said...

கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள். அஃதாவது ஆத்திகர்கள் நம்புகிறார்கள்.

பிர்ச்னையே இல்லை இங்கே.

பின் என்ன பிரச்னை?

ஆத்திகர்கல் அதோடு விடுவதில்லை. அவனவன் நம்பி தன்வீட்டுற்குள்ளேயே விடுவதில்லை. வெளியே கொண்டுவருகிறான். அன்ன்நம்பிக்கையை வைத்து மக்களை சிந்திக்கவிடாமல் செய்கிறான். புனைகதைகளை கடவுள் சொன்னரென்றும், இவன் பார்ப்ப்னான் உயர்ந்தவர்ன் என்று அதாவது க்டவுளின் வாயிலிருந்து பிறந்தானென்றூம் கட்டுக்கதைகலை எழுதிவித்து ஏமாற்றுகிறான்.

என்வே ‘கடவுள் இல்லை’ என்பதோடு நில்லாமல், அக்கடவுள் நம்பிக்கை வைத்து ஏன்சமுதாயத்தை சிந்திக்கவிடாமல அடிமைப்படுத்துகிறாய்? என்று கேட்கும்போது.

உங்களுக்கு மனம் புண்படும்.

எனவே நான் சொல்லக்கூடாது.

Bala said...

@பெயரில்லா

தங்கள் கருத்துக்கள் என்னை சிந்திக்க வைக்கிறது. தங்கள் பெயர் சொல்லி இருந்தாலும் கோபித்துக்கொள்ள மாட்டேன்.

பெண்ணும் என்று நான் சொன்னது Intension ஆக அல்ல. வழக்கமாக நாம் கேட்கும் கதைகளில் ஆண் பெற்றோர்களை அநாதை ஆக்கி விடுவான் என்று சொல்ல கேட்டிருப்போம். இப்போது பெண்ணும் இப்படி சொல்கிறாளே என்ற அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டது.

நேரம் செலவு செய்து மேலான கருத்துக்களை வெளியிட்டதற்கு மிக்க நன்றி நண்பரே...

Rajan said...

//ஆனால் அதே பதிவர் மற்றும் இன்ன பிற தோழர்கள் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடம் எல்லாமே பிராமணர்களை குறிப்பதாகவே இருக்கிறது.//

அன்பின் பாலா,


பார்ப்பான் என்று சொன்னால் சண்டைக்கு வருவான் சில பேர்! எமது தளங்களில் கவனித்து பார்த்தீர்களாயின் காண இயலும். முதலில் அனானியாக வந்து கெட்ட வார்த்தை அர்ச்சனைகள் நடக்கும் பலனில்லாது போனவுடன் கிளம்பி விடுவர்.

பிராமணர் சிலரின் பார்பன மேட்டிமையை தாக்கும் இடங்களில் உறைக்கும் பிரயோகங்கள் தான் உதவுகின்றன.

Rajan said...

//உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா?//

மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும் தெரிந்தும் தெரியாமலுமே மூடத் தனம் பீடித்த மதவாதிகளை சாடும் நிகழ்வே அது

Anonymous said...

சாதி வெறுப்பு என்ற போர்வையில் ஒருவித வெறுப்புக் குற்றம் புரிபவர்கள் கே.டி.கள் என்பது என் கருத்து.

கிரி said...

//"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது? "அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு? அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா?" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே? இது ஆணாதிக்கமா?//

"பெண்ணாக இருந்து கொண்டு என்பது" ஆணாதிக்கமாகவே எனக்கு தோன்றுகிறது. ஒரு பொம்பளை உனக்கு இவ்வளோ திமிரா என்பதை என்பதை கொஞ்சம் நாகரீகமாக! கேட்டதைப்போல உள்ளது.

//இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா?//

"திமிர்" என்ற வார்த்தை உங்களின் பதிவை வேறு பார்வைக்கு பலரை மாற்றி விட்டது, வருத்தம் அளிக்கிறது.

பாலா உங்கள் பதிவு மற்றும் உங்களின் பின்னூட்டங்களில் உள்ள உங்கள் கருத்துக்களை வைத்து நான் புரிந்து கொண்டது......

நீங்கள் உங்கள் மனதில் ஆணாதிக்கம் என்று நினைக்கவில்லை எனினும் நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் அவ்வாறான தோற்றத்தை கொண்டு வந்து விட்டது. நம் எழுத்துக்களே நம்மை பிரதிபலிக்கின்றன நம் எண்ணங்கள் அல்ல. நாம் என்ன எண்ணுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று ஆனால் நம் எழுத்துக்கள் தான் மற்றவர்களுக்கு நம் எண்ணங்களை வெளிப்படுத்தும் காரணியாக உள்ளன.

எனவே நாம் சரியாக நினைத்து இருந்தாலும் நம் எழுத்து என்ன பேசுகிறது என்பதே இங்கே முக்கியம்.

நான் என்ன கூற வருகிறேன் என்பதை புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்றபடி உங்களின் பதிவில் மற்ற விசயங்களில் பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு.

Anonymous said...

Genial brief and this mail helped me alot in my college assignement. Say thank you you as your information.

Unknown said...

VARUNGALA ELAINJARKALIN EZUCHI NAYYAGAN BALA............ VAALGARelated Posts Plugin for WordPress, Blogger...