விஜய்யும் நானும் ஒன்னு என்றவுடன், யார்டா இவன், இன்னொரு காமெடியன் என்று கிளம்பி விடாதீர்கள். எனக்கும் விஜய்க்கும் ஒரே ஒரு ஒற்றுமைதான். பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இது எனது ஐம்பதாவது பதிவு. பதிவெழுத தொடங்கி சுமார் நான்கறை மாதங்கள் ஆகின்றன. எனக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கும் அளவிற்கு திறமை கிடையாது. ஏனோதானோவென்று ஒரு கோர்வை இல்லாமல் சொல்ல வந்த கருத்துக்களை தட்டு தடுமாறியே சொல்லி இருக்கிறேன். அதனை பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு படித்து புரிந்து கொண்ட வாசக நண்பர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து படித்து, பாராட்டி பின்னூட்டமிட்டு, விமர்சித்து, என் தவறுகளை சுட்டிக்காட்டிய சக பதிவுலக நண்பர்களுக்கும், என் போன்ற கத்துக்குட்டிகளை தட்டிக்கொடுத்து உத்வேகம் கொடுத்த மூத்த பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். பின் வழக்கம்போல் என் பதிவுகளுக்கு செய்திகளை வாரி வாரி வழங்கிய, முதல்வர் கலைஞர், டாக்டர் விஜய், ஐபிஎல், லலித் மோடி, ஆங்கில பட இயக்குனர் மற்றும் இன்ன பிற பிரபலங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என் பதிவில் பாலோயர்கள் லிங்கை இணைக்க முடியவில்லை. எனவே என்னை தொடர்பவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படி யாராவது இருந்தால் உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்பார்க்கிறேன்.
நண்பர் வரவழைத்த குபீர் சிரிப்பு.
இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உண்மையா என்று தெரியாது. ஆனால் கேட்டவுடன் எனக்கு குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது. நம் விஜய டி.ராஜேந்தர் அவர்கள் தன்னுடைய வீராசாமி என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போகிறாராம். வீராசாமி பாத்திரத்தில் கூட அவரே நடிக்க போகிறாராம். இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். இது உண்மையா? இல்லை நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதா? என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது தெளிவுபடுத்துங்களேன்?
ஒரு மீள் பதிவு.
இதுவரை ஐம்பது பதிவுகள் எழுதியாகி விட்டது. ஒரு சில பதிவுகளே உருப்படியான பதிவுகளாக எனக்கு திருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. நான் முதன் முதலில் எழுதிய ஒரு பதிவு நான் என்ன இளிச்சவாயனா? இதன் இரண்டு பாகங்களையும் இங்கே மீள் பதிவு செய்கிறேன்...
நான் என்ன இளிச்சவாயனா? இந்த கேள்விய எப்பல்லாம் கேப்பிங்க?

பட்டியலிடுவோம் நியாயமான காரணங்களை:
1. எனக்கு நிறைய கடமைகள் இருக்கு
2. என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு.
3. எனக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.
4. சின்ன வயசுல இருந்து கஷ்டம் தெரியாம வளந்ததுனால எனக்கு உலகத்த பத்தி தெரியல
5. என்ன நிறைய செலவு செஞ்சு படிக்க வச்சவங்க ஆசைல மண் போட முடியாது.
6. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்த்மா(இன்ன பிற நோய்கள்). இந்த நிலைமைல நான் போய் எங்க சேவைல ஈடுபடுறது ?
7. நான் ஒருத்தன் நினைச்சா என்ன செய்ய முடியும்?
8. எல்லாத்துக்கும் மேல அரசாங்கம், அரசியல்வாதிகள் இருக்காங்க.
9. அது வேற நாடு. என் நாட்டிலேயே என்னால் ஏதும் செய்ய முடியாது. அந்த நாட்டு மக்களுக்கே அக்கறை இல்லை.
10. அனுபவிக்க வேண்டிய சின்ன வயசு.

ஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். மருத்துவம் படித்தவர், பெண்களை வசீகரிக்கும் அழகு உடையவர், சாதாரண குடிமகன், இத்தனைக்கும் அவர் போராடிய கியூபா ஒன்றும் அவர் தாய்நாடு அல்ல. வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொல்லும் ஆஸ்த்மாவால் அவதிப்பட்டவர். கை நெறைய சம்பளம், கண்ணுக்கு நிறைவான மனைவி, சோபாவில் சாய்ந்து காலாட்டிக்கொண்டே அவர் கேட்டிருக்கலாம் "நான் மட்டும் என்ன இளிச்சவாயனா?" ஆனால் அவர் கேட்கவில்லை. தன்னை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்த ஒரு பள்ளி கட்டிடத்தின் நிலையை பார்த்து அங்கிருந்த ஒரு பணிபெண்ணிடம் " இந்த இடம் ஏன் இப்படி இருக்கு? இங்கு எவ்வாறு படிக்க முடியும்? நாம் வெளிய வந்தவுடன் இந்த இடத்தை சீர்படுத்துவேன்" என்று சொன்னாரே ஒழிய "எல்லாம் என் நேரம். நான் இப்போ எங்க எப்படி இருக்க வேண்டியவன்?" என்று கேட்கவில்லை.
எல்லோரும் சே குவேரா ஆக முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஆக முடியாது. ஆனால் நம்மளவில் ஒரு காமன்மேனாக ஆகலாம். பிறருக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் கூறினால் அவை அனைத்தின் பின்னால் இருப்பது ஒரே ஒரு காரணம்தான். பரந்த மனம் இல்லை. ஒரு ஜென் குரு சொன்னது "நம்மில் பலர் கோப்பையின் பளபளப்பில் மயங்கி தேநீரை மறந்து விடுகிறோம்."
நம்மால் செய்ய முடியாத சாகசங்கள் எதுவும் நிகழ்த்திகாட்ட வேண்டாம். செய்ய முடிந்த காரியங்களை வாய்ப்பு வரும்போது தட்டி கழிக்காமல் மனமுவந்து செய்தாலே போதும்.
முதல் பாகத்தில் எழுதப்பட்டது பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே சொல்லியாகி விட்டது (நான் ஆண் என்பதால்). அதனால் இரண்டாம் பாகம் பொதுவாக் இருக்கும் என நம்புகிறேன்.
பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் மற்றும் இருந்தால் போதாது. ஓரளவுக்கு பொருளாதாரமும் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும். வெறும் கையை வைத்துக்கொண்டு முழம் போடா முடியுமா. முழம் போடலாம். பதிவும் போடலாம். வேறு ஒன்னும் செய்து விட முடியாது. சரிதானே.
சேவை செய்ய போகிறேன் என்று தெருவில் இறங்கி நடக்க தொடங்கியபோது கையில் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது அக்னஸ்-இன் கைகளில். தன்னை காப்பாத்தி கொள்ளும் அளவுக்கு கூட பொருள், பின்புலம் இல்லாத நிலையில் அவரிடம் இருந்தது அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டும் தான். தனக்காக யாசகம் கேட்கவே தயங்கும் நேரத்தில் பிறருக்காக தெரு தெருவாக யாசகம் கேட்டு அலைந்தவர். யாசகம் கேட்ட கையில் காறி துப்பியவனை பார்த்து "எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் " என்று சொல்லாமல் "இது எனக்கு போதும். என் குழந்தைகளுக்கு எதாவது கொடுங்கள்." என்று கேட்டவர். அவரின் அன்புள்ளத்தை அறியாமல் தெரேசா மத மாற்றம் செய்கிறார் என்று சேற்றை வாரி இறைத்தபோதும், புத்தம் புதிய காரை போப் பரிசாக கொடுத்தபோதும், எந்தவித சலனமும் ஏற்படாமல் தன் சேவையே கண்ணாக இருந்தவர்.
வயதான சொந்த தாய் தந்தையரையே தொட்டு பராமரிக்க கூசும் மனிதர்கள் மத்தியில், தொழு நோயாளிகளை எந்த வித தயக்கமும் இல்லாமல் தொட்டு அரவணைத்தவர். தொழு நோயாளிகளை தொடும் போதெல்லாம் கடவுளையே தொடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சொல்வார். உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று உண்டென்றால் அது உதாசீனம்தான். அதுவும் நோயால் பீடிக்க படும் போது நம் மனம் நம்முடைய உறவுகளை நோக்கித்தான் செல்லும். அப்போது உதாசீனப்படுத்தப்பட்டால் அது நோயின் வேதனையை விட அதிகமாக வலிக்கும். இதை முழுமையாக உணர்ந்தவர். ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் உண்டு. ஆனால் உலகத்தில் பிறந்த அனைவருக்கும் கிடைத்த ஒரே தாய் .....அன்னை தெரேசா.
இப்போதும் உலக அழகிகள் பட்டம் வெல்ல வேண்டுமா? அவர்கள் சொல்வது "எனக்கு பிடித்த பெண் தெரேசா தான் "
இப்படி பட்டம் வெல்ல மட்டுமே அவர் பெயர் பயன் படக்கூடாது. எல்லோராலும் தெரேசா ஆக முடியாது. ஆனால் எல்லோராலும் அன்பு செய்ய முடியும். அன்னை அவர்கள் சொன்னது "நீ மனிதர்களை பற்றி மதிப்பீடு செய்து கொண்டிருந்தால் ஒருக்காலும் அன்பு செய்ய உனக்கு வாய்ப்பிருக்காது"
அன்பு காட்டுவதற்கு பணம் தேவை இல்லை. உள்ளம் நிறைய கருணை இருந்தால் போதும். அன்பு செய்தால் எல்லோரும் தெரேசாவாகலாம்
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...
6 comments:
வாழ்த்துக்கள் தல 50க்கு
ஐம்பதாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே. :)
நீங்களே கத்துக்குட்டி என்றால், என்னை என்ன சொல்வது? :(
//எனக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கும் அளவிற்கு திறமை கிடையாது. ஏனோதானோவென்று ஒரு கோர்வை இல்லாமல் சொல்ல வந்த கருத்துக்களை தட்டு தடுமாறியே சொல்லி இருக்கிறேன்.//
அதெல்லாம் ஒன்றும் இல்லை. மிக அழகாகவும் சுவாரசியம் கலந்ததாகவும் உள்ளது உங்களது பதிவுகள். தொடர்ந்து எழுதவும். ஆல் தி பெஸ்ட். :)
happy b'day thala
@Yoganathan.N
மிக்க நன்றி நண்பரே....
@"ராஜா"
நன்றி தல...
ஓ, பிறந்தநாளா?
பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே. :D பதிவுலகில் மென்மேலும் கலக்க எனது வாழ்த்துகள். :)
Many More Happy Returns of the day. All the very Best for your future undertakings. :)
Thank you very much Yoganathan
Post a Comment