விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 18, 2010

ராவணன் என் பார்வையில்...


அதிக ஹிட்டுகள் வாங்க என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் புதியதாக ப்ளாக் எழுதுபவரா? உங்கள் வலைப்பக்கத்துக்கு அதிக ஹிட்டுகள் வேண்டுமா? என்ன செய்யலாம்? ஒன்றும் பிரச்சனை இல்லை. அந்தந்த சீசனுக்கு ஏற்றாற்போல் பதிவு போடவேண்டும் என்றில்லை. குறைந்த பட்சம் தலைப்பாவது அப்படி இருக்க வேண்டும். உதாரணமாக ராவணன் படம் வெளி ஆகி உள்ளது. உங்கள் தலைப்பில் ராவணன் என்று இருக்குமானால் அதிக ஹிட்டுகள் வரும். இதோ நான் செய்தது மாதிரி.

ராவணன் என் பார்வையில்...

இது கண்டிப்பாக ராவணன் பட விமர்சனம் அல்ல. இன்று மாலைதான் படம் பார்க்க போகிறேன். படம் பார்த்து விட்டு என் கருத்துக்களை எழுதுகிறேன். நீங்கள் கடுப்பாகாதீர்கள். வந்தது வந்து விட்டீர்கள் மிச்சத்தையும் படித்து விடுங்கள். 

ராமாயணத்தை பற்றி தமிழ் ஆர்வலர்கள் பல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒன்று ராமாயணம் திரித்து எழுதப்பட்டது. அதாவது ஆரிய ஆதிக்கத்தை காட்ட வேண்டும் என்று எழுதப்பட்டது. ஆரியனான ராமனை கதாநாயகனாக காட்ட வேண்டும் என்று எண்ணி ஒரு திராவிடனான ராவணனை கிட்டத்தட்ட ஒரு பெண் பித்தன் போலவே உருவாக படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. எனக்கும் இந்த சந்தேகம் வெகு நாட்களாகவே இருக்கிறது. அதாவது புராணங்களில் காட்டப்படும் பாத்திரங்களை இரண்டாக பிரிப்பார்கள். ஒன்று தேவர்கள் மற்றொன்று அசுரர்கள். தேவர்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் பிம்பம் என்னவாக இருக்கும்? நன்றாக மொழு மொழு என்று சேவிங் செய்த சிவப்பான, ஸ்லிம்மான ஒரு இளைஞன். 

அசுரன் என்றால் என்ன பிம்பம் தோன்றும்? ஆஜாகுபானுவான, கருப்பான, கடா மீசையுடன் கூடிய ஒரு ஆள். அதாவது தேவர்களின் உருவம் எல்லாம் வட இந்தியர்கள் போலவும், அசுரர்கள் எல்லாம் தென்னிந்தியர்கள் போலவும் உருவக படுத்தப்பட்டுள்ளது. புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே.


ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா? ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சூர்ப்பனகையை தண்டிக்க வேண்டும் என்றால் நிறைய வழி இருக்கிறது. அதற்கு அவளின் பெண்மையை அவமானப்படுத்துவதுதான் வழியா? ராமன் அல்லது இலக்குவன் யாராவது ஒருவரின் தங்கைக்கு இப்படி நேர்ந்தால் சும்மா இருப்பார்களா? ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். ராவணன் செய்த தவறு தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணை பலவந்தமாக இழுத்து வந்தது. மற்றபடி அவன் எந்த தவறும் செய்யவில்லை. 

என்னுடைய பாமர பார்வைக்கு ராவணன் ஒரு சுத்த வீரனாகத்தான் தெரிகிறான்...

ராவணன் - நல்லவன். 

ஒன்னும் நெனச்சுக்காம ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க....


5 comments:

"ராஜா" said...

தல ரெண்டாயிரம் ஹிட் உறுதி

SShathiesh-சதீஷ். said...

என் மன ஓட்டமும் இதுதான். வாழ்த்துக்கள் நண்பா.

HVL said...

உங்க பார்வை வித்தியாசமா இருக்கு. நல்லாயிருக்கு!

Unknown said...

நீங்கள் சொல்லுவது உங்களின் பார்வைமட்டுமல்ல. அது உண்மையும் கூட. இப்படி எல்லா புராணங்களுக்குள்ளும் அயோக்கியதனங்கள் ஒளிந்துள்ளன. கூர்ந்துக் கவனிக்க வேண்டியது நம் பொருப்புதான். இப்போது காலத்தின் தேவையும் கூட. நன்று நண்பரே..நன்றி

Bala said...

@"ராஜா"
வாங்க வாங்க..

@SShathiesh-சதீஷ்.
வருகைக்கு நன்றி நண்பரே...

@HVL
அடிக்கடி வந்துட்டு போங்க...

@Vijay Armstrong
உங்க ஆதரவு எப்போதும் தேவை... கருத்துக்கு நன்றி நண்பரே...

Related Posts Plugin for WordPress, Blogger...