பதிவு எழுத வந்து மூன்றாவது ஆண்டு முடியப்போகிற தருவாயில் மற்றுமொரு மைல்கல்லை தொட்டிருக்கிறேன். மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் பார்வையாளர்கள் என்பது கொஞ்சம் கம்மிதான் என்றாலும் முன்னேறிக்கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதற்கு துணைபுரிந்த அனைத்து இணைய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முகு: அணில் ரசிகர்கள் இந்த தளத்தை எந்த காரணத்துக்காக படிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். ஆகவே அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் கடைசியில் ஒரு பத்தி இருக்கிறது. தயவுசெய்து படிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?
ஏன் இந்த பாரபட்சம்
இந்த கேள்வியை ஆயிரம் தடவை கேட்டுவிட்டார்கள். நானும் என் பங்குக்கு கேட்கிறேன். சென்னையில் மட்டும் ஏன் மின் வெட்டு நேரம் குறைவாக இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? சென்னையில் இருந்து வழக்கமாக தீபாவளி அன்று சொந்த ஊருக்கு வரும் நண்பன் இந்த முறை வரவில்லை. அதே போல வந்தவர்கள் எல்லோரும் ஒரே நாளில் திரும்பி விட்டார்கள். காரணம் 'அவங்க ஊரில்' மின்வெட்டு கிடையாதாம். இந்த ஊரில் கரண்ட் இல்லாமல் கொஞ்ச நேரம் கூட அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம். தமிழகத்தின் பிற நகரங்களில் ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருக்கும் ஏரியாக்களில் மட்டும் மின்வெட்டு கிடையாதாம். ஏனென்றால் அவர்கள் எல்லாம் மனிதர்கள். நாமெல்லாம் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் போல, ஒட்டுக்காக வளர்க்கப்படும் பிராணிகள்தானே?
இதை விட கொடுமை காற்றாலைகளால் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுத்த தனியார்களுக்கு உரிய தொகையை கொடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிக்கிறது. இதனால், மேலும் உற்பத்தி செய்யவோ, காற்றாலைகளை அமைக்கவோ தயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டும் மாநில அரசு இந்த விஷயத்தில் யாரை குற்றம் சாட்டப்போகிறது? "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது", என்று ஒரு காலத்தில் அரசியல் செய்தார்கள். இன்னும் சில காலங்களில் "வட தமிழகம் ஒளிர்கிறது, பிற தமிழகம் இருள்கிறது", என்று அரசியல் முழக்கங்கள் கேட்கலாம். அதே போல ரேஷன் முறைப்படி குடும்பத்துக்கு இத்தனை யூனிட் கரண்ட் என்ற முறை விரைவில் வரும். இல்லாவிட்டால், மின் விநியோகத்தில் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு எல்லாம் வரலாம். தற்போது தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசிடம் கெஞ்சுவது போல இன்னும் சில ஆண்டுகள் கழித்து, கரண்ட் விடுமாறு சென்னை மக்களிடம் கெஞ்சும் காலம் வரும். இவை எல்லாம் கற்பனை என்றாலும் நடக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒன்று மட்டும் நிச்சயம். இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் ஒட்டுமொத்த பிற தமிழக மக்களின் தொழில்கள் முடங்கி, பஞ்சம் பிழைப்பதற்காக எல்லோரும் சென்னை நோக்கி படையெடுப்பார்கள். ஏதோ சொல்லணும்னு தோனிச்சு......
ஒபோடெவும், இடி அமினும்
உகாண்டா என்ற பெயரைக்கேட்டவுடன் நினைவுக்கு வருவது இடி அமின் தாதா என்ற மனிதர்தான். விடுதலை அடைந்த முதல் பத்து வருடத்துக்கு ஒபோடே கையில் சிக்கி குற்றுயிரும் குறையுயிறுமாய் இருந்த உகாண்டா, அடுத்த எட்டுவருடத்தில் இடி அமின் கையில் சிக்கி மீண்டு வரவே முடியாத அளவிற்கு சமாதி கட்டப்பட்டது. இவர்கள் இருவரும் கூட்டாளிகளே. ஒபோடே அதிபராக இருந்த காலத்தில் ராணுவ தளபதியாக இருந்தவர் இடிஅமின். பின் இருவருக்கும் முட்டிக்கொள்ளவே, ஒபோடெவை ஒழித்துக்கட்டி ஆட்சியை பிடித்தார், ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத இடிஅமின். எட்டே ஆண்டுகள்தான். மக்களை, நாட்டின் இயற்கை வளங்களை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டினார். நாட்டின் முக்கிய பொறுப்புகளில் எல்லாம் அவரது இனத்தை சேர்ந்த அடியாட்களையே அமர்த்தினார். அவர்களை அடியாட்கள் என்று சொல்லக்காரணம், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், வரும் பணத்தை எல்லாம் கொள்ளை அடிப்பதிலேய குறியாக இருந்தவர்கள். தட்டிக்கேட்பவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். எல்லா கொள்ளையிலும் ஒரு பெரும்பங்கு இடிஅமினுக்கு உண்டு.
இப்படியே சென்றால் எத்தனை நாளைக்குத்தான் அந்த நிறுவனம் நடக்கும்? இப்படி ஒன்றிரண்டு வருடங்களிலேயே திவாலான நிறுவனங்கள் ஏராளம். சரி பணத்துக்கு என்ன செய்வது? எனவே இடிஅமின் அடுத்ததாக உகாண்டாவின் பொருளாதாரத்துக்கு பெரும் உதவி செய்து வந்த ஆசியர்களின் (பெரும்பான்மையான இந்தியர்கள்) வணிக நிறுவனங்களை கைப்பற்றினார். துரத்தி அடிக்கப்பட்ட ஆசியர்கள் அகதிகளாக உலகெங்கும் தஞ்சம் புகுந்தார்கள். வளம் கொழித்த அந்த நிறுவனங்களும் விரைவில் திவாலாகின. தொழில் நடந்தால்தானே லாபம் வரும்? லாபம் எல்லாம் வகை தொகை இல்லாமல் கொள்ளை அடிக்கப்பட்டால்? நாடே பசி பட்டினியில் வாடியது. இதைப்பற்றி எல்லாம் இடிஅமின் கவலைப்படவே இல்லை. விவசாயிகள் அரும்பாடு பட்டு விளைவிக்கும் பயிர்களை ஏற்றுமதி செய்து கிடைத்த பணத்தில், கோடிக்கணக்கில் விஸ்கியும் டிரான்சிஸ்டரும் இறக்குமதி செய்து, இலவசமாக ராணுவ வீரர்களுக்கு சப்ளை செய்தார்.
மக்கள் அனைவரும் பசியில் செத்துக்கொண்டிருக்க, ஹாய்யாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிர்வாண போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். மொத்தத்தில் ஒரு ஒட்டுமொத்த தேசத்தையே ஒரு சிறு கொள்ளைக்கூட்டம் சூறையாடி,இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொண்டது. கொள்ளைக் கூட்டத்தலைவன் இடிஅமீன். கடைசி வரை அவர் மக்களிடம், "எல்லாம் உங்கள் நலனுக்குத்தான்.", என்றே சொல்லி வந்தார். அதையும் அவர்கள் நம்பினார்கள். நம்பித்தானே ஆகவேண்டும். வேறு வழி? அவர்களுக்கு இடிஅமினை தவிர வேறு யாரையும் தெரியாதே? உலகமே இதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இவ்வளவு கொடுமைகளை செய்த இடிஅமீன், ஹிட்லர் போல தற்கொலை செய்து கொண்டோ, முசோலினி போல தலைகீழாக தொங்கவிடப்பட்டோ, கேவலமாக இறக்கவில்லை. சவுதி அரேபியாவில் தன் முதுமையை ஜாலியாக கழித்து இயற்கயாகவே இறந்தார்.
ஒரு இடிஅமின் கையில் சிக்கியதற்கே ஒரு நாடு இப்படி ஆனதென்றால்....சரி விடுங்க ஏதோ சொல்லணும்னு தோனிச்சு......
பிஞ்ச செருப்பும் பிய்யாத செருப்பும்.
பதிவுலகில் எனக்கு சமீபத்தில் கிடைத்த ஒரு பட்டம் 'பிஞ்ச செருப்பு'. (புது பதிவர்கள் தங்கள் வலைத்தளத்துக்கு இந்த பெயரை வைக்க விரும்பினால் என்னை அணுகவும்) தமிழகத்தின் தற்கால டாக்டர், எதிர்கால முதல்வர், மாஸ் ஹீரோ, வசூல் நாயகன் ஒருவரின் வளர்ச்சி கண்டு வயிற்றெரிச்சல் தாளாமல் அவரை கலாய்ப்பதற்காகவே நான் இந்த வலைத்தளத்தில் எழுதி வருவதால், உச்ச கட்ட கோபத்துக்கு உள்ளான டாக்டர் அபிமானி ஒருவர் இந்த பட்டத்தை கொடுத்திருக்கிறார். அவர் வெளிப்படையாக என் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில்லை என்பதால் அவரது தளத்தில் கருத்துரை இடுவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவேதான் இங்கே கூறுகிறேன். ஒரு படத்தின் வெற்றியை பற்றியோ, அல்லது வசூல் பற்றியோ அதை வெளியிடும் இணையதளத்தின் நம்பகத்தன்மை பற்றியோ நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் இவற்றால் எனக்கு பைசா பிரயோசனம் கிடையாது.
அவரது படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் எனக்கென்ன? நான் கலாய்ப்பதை நிறுத்தமாட்டேன். நான்தான், "எதையோ மிதித்து கொண்டு பதிவெழுதும் பிஞ்ச செருப்பு" என்று, "எதையுமே மிதிக்காத" அந்த பிய்யாத செருப்புக்கு தெரிகிறதல்லவா? அப்புறம் என்னத்துக்கு திரும்ப திரும்ப என் செருப்பை வந்து முகர்ந்து பார்த்து, "அய்யோய்யோ இவன் எதையோ மிதித்து விட்டான்!!!", என்று புலம்புகிறார்? கடைசியாக அந்த படம் ஓடும் தியேட்டர் பக்கம்தான் சென்றேன். அங்கேதான் எதையோ மிதித்து விட்டேன் போலிருக்கிறது. பொதுவாக எங்கள் நண்பர் குழுவில் ஒரு கருத்து உண்டு. "மனப்பக்குவம் இல்லாத சிறுவர்களே அவருக்கு ரசிகராக இருப்பார்கள்." என்று என் நண்பர்கள் கூறுவார்கள். "நான் அப்படி எல்லாம் இல்லை." என்று சொல்லுவேன். ஆனால் என் கூற்று சில நேரங்களில் தவறாகி விடுவதுண்டு என்று இப்போது புரிகிறது.
பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவல் ஒன்று
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம், வசூலில் அவரது முந்தையை சாதனைகளை முறியடித்திருக்கிறதாம். அதே போல மங்காத்தா, பில்லா படங்களில் வசூல்களை அனாயாசமாக முந்தி எந்திரனை வீழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பல இணையதளங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
ஏதோ சொல்லணும்னு தோனிச்சு.....
உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க.....
29 comments:
மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் பார்வையாளர்கள் என்பது கொஞ்சம் கம்மிதான் என்றாலும் முன்னேறிக்கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் பாலா
இங்கு மூன்று நாளாக 18 மணி நேரம் மின்வெட்டு...
மற்றபடி உங்கள் பதிவுகளை மட்டும் சிந்தியுங்கள் என்பது எனது வேண்டுகோள்... என்ன பொருத்தமோ தெரியவில்லை... இன்றைய என் பதிவில் கடைசி ஒரு பத்தி மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்...
நன்றி...
வாழ்த்துக்கள் சகோ உங்களின் மூன்றாண்டு சாதனைக்கு இன்னும் தொடரட்டும்
இடிஅமின் இறப்புத் தகவல் புதிது....
பிஞ்ச செருப்பில் மிகவும் காரமான பேசியிருக்கிறீர்களே......
விஜய் கூத்து பழகிப்போச்சு... அவங்க அப்பிடித்தான் சார்
தோன்றுவதையெல்லாம் தாரளமாகச் சொல்லுங்கள் பாலா.
@ பதிவு எழுத வந்து மூன்றாவது ஆண்டு முடியப்போகிற தருவாயில் மற்றுமொரு மைல்கல்லை தொட்டிருக்கிறேன். மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் பார்வையாளர்கள் என்பது கொஞ்சம் கம்மிதான் என்றாலும் முன்னேறிக்கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.@@
உங்க எழுத்துக்கு என்ன பாலா சார்..இன்னும் பல லட்சம் வாசகர்கள் வருவார்கள்..அதில் நானும் ஒருவனாக இருப்பேன். வாழ்த்துக்கள்..அப்புறம் பிஞ்ச செருப்பு மேட்டரெல்லாம் நல்லாருக்கு..சரி விடுங்க சார்..பதிவுலகத்தில் கருத்து வேறுப்பாடெல்லாம் சாதாரணம்.
தொழில்கள் உற்பத்தி பின்னடைவை கருத்தில் கொண்டால்...தற்போதைய மின்வெட்டின் உக்கிரம் அடுத்த ஆண்டு உணரப்படும்.
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க..
இடி அமீனைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.
ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுக்குத்தான் மொதல்ல வந்திருக்கேன், வழக்கம் போலவே அருமை, இன்னமும் பழைய படிதான் தொடருதா ???
வணக்கம் ...நண்பரே
சில நேரங்களில் நல்லநட்பும் , சில நேரங்களில் எதிர்ப்பும் வரும் ..
தொடர்ந்து தங்களின் பதிவுலக பங்களிப்பை செய்யுங்கள்
இடி அமீன் பற்றி, சுருக்கமாக நச்சுன்னு சொன்னீங்க.
ஆனால் யாரை அது குறிப்பிடுதுன்னு புரியலையே வாத்யாரே?
அது சரி பாஸ்.. ஒரு இடிஅமீன்க்கே அப்புடின்னா... எல்லா தலைவர்களுமே இடி அமீன் ஆக ஆசபடுற நாட்டுல வாழுற மக்கள் என்ன செய்வாங்க பாவம்..
Unmaiyana karuthu anbare...nanum ennudaiya anubavathil niraya nanbargalaikandirukkiren. anil rasigargal aduthavar karuthakkalai ketkum pakkuvam illathavargal.
வணக்கம்,பாலா!வாழ்த்துக்கள் உங்களின் மூன்றாண்டு சாதனைக்கு!!!///சொல்லணும்னு தோணினது எல்லாம் சொல்லிட்டீங்க.ஆனா,கடேசி பாரா எதுக்கு?
யாருங்க அது..உங்களை அப்படி சொன்னது? :-)
////பதிவுலகில் எனக்கு சமீபத்தில் கிடைத்த ஒரு பட்டம் 'பிஞ்ச செருப்பு'. (புது பதிவர்கள் தங்கள் வலைத்தளத்துக்கு இந்த பெயரை வைக்க விரும்பினால் என்னை அணுகவும்) தமிழகத்தின் தற்கால டாக்டர், எதிர்கால முதல்வர், மாஸ் ஹீரோ, வசூல் நாயகன் ஒருவரின் வளர்ச்சி கண்டு வயிற்றெரிச்சல் தாளாமல் அவரை கலாய்ப்பதற்காகவே நான் இந்த வலைத்தளத்தில் எழுதி வருவதால், உச்ச கட்ட கோபத்துக்கு உள்ளான டாக்டர் அபிமானி ஒருவர் இந்த பட்டத்தை கொடுத்திருக்கிறார்.////
ஹி.ஹி.ஹி.ஹி...........இந்த பீல்டில் எனக்கும் நிறைய பட்டங்கள் கிடைத்திருக்கு
// நாமெல்லாம் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் போல, ஒட்டுக்காக வளர்க்கப்படும் பிராணிகள்தானே?// அதைக்கூட ஒழுங்கா வளர்க்க மாட்டேங்கிறாங்களே.. அதான் எரிச்சல். கறிக்கோழி கூட நன்கு வளர்க்கப்பட்டால்தான் மதிப்பு.
அப்புறம் வாழ்த்துக்கள் தல.. 3 லட்சம் என்பது பெரிய மைல்கல். நானெல்லாம் மொக்க ப்ளாக் எழுதிகிட்டு இருக்கேன். இப்பதான் 35000 தாண்டி இருக்கு.. ஆனா என்ன.. நான் தமிழ்மணம் மாதிரி எதுலயும் சேரல.. டாக்டரை நோண்டல.. நோண்டவும் பிடிக்கல..
கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓ அப்படியா வாழ்த்துக்கள் பாலா.
உங்களுக்கு பிஞ்ச செருப்புன்னு பேரு வச்ச அந்த வெளக்குமாறு யாரு..?
Hai bala, How r u? After a long time iam Coming to u'r Blog. How is u'r Marriage life? Nice Article. Thanks for Sharing.
நண்பரே ..உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..நேரமிருந்தால் பார்க்கவும்...
வலைச்சரத்தின் மூலமாக உங்கள் பதிவிற்கு வந்துள்ளேன் இரண்டு இலட்சம் வாசகர்கள் பன்மடங்காகப் பெருக வாழ்த்துக்கள்
##இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் ஒட்டுமொத்த பிற தமிழக மக்களின் தொழில்கள் முடங்கி, பஞ்சம் பிழைப்பதற்காக எல்லோரும் சென்னை நோக்கி படையெடுப்பார்கள்.##
போகிற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது...
வாழ்த்துக்கள் பாலா.
இரண்டு லட்சம் பார்வையாளர்கள் --- முன்னேறிக்கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
இடி அமின் தகவலுக்கு நன்றி..
இடி அமீன் கதைபடித்து இன்னும் கடுப்பாகிப் போனேன் சகோ
மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் பார்வையாளர்கள் -
இனிய வாழ்த்துகள்..
Post a Comment