விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 16, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 3


லட்சம் ஹிட்ஸ் பெற்றது மகிழ்ச்சி என்றால் அதற்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்தது அதை விட பல மடங்கு மகிழ்ச்சி. இந்த ஆதரவை தொடர்ந்து பெற எப்போதும் முயற்சிப்பேன். சாதி வெறி குறித்து ஒரு பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சோம்பல் காரணமாக அதை நாளைக்கு ஒத்தி வைத்து விட்டேன். லைட் வெயிட்டாக கிரிக்கெட் பதிவு போட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன். நேற்று நான் கேள்விபட்ட இரண்டு செய்திகள் கடுப்பை கிளப்பின. 

செய்தி ஒன்று : ஆசிய கோப்பையை ஜெயித்த இந்திய ஹாக்கி அணிக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கியது. 

செய்தி இரண்டு: நான்காவது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் பயிற்சியை கட் அடித்து விட்டு, எல்லா இந்திய கிரிக்கெட் வீரர்களும் 75,000 ரூபாய் பணம் கட்டி மினி ரேஸ் கார் ஓட்ட சென்றது. நாம் நாட்டில் விளையாட்டின் தரம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? 

(பருத்திவீரன் ஸ்டைலில் படிக்கவும்...)


இங்கிலாந்து 

டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளிலேயே என்னால் அதிகம் கண்டுகொள்ளப்படாத நாடு. இந்திய அணி 90களில் இங்கிலாந்துடன் குறைந்த தொடர்களிலேயே பங்கேற்று இருக்கிறது. இந்த அணியில் என்னை கவர்ந்த சில வீரர்கள் இருக்கிறார்கள்

பால் கோலிங்வுட் 

இவரை கிரிக்கெட்டில் மிஸ்டர் டிபெண்டபுள் என்று அழைக்கிறார்கள். எந்த ஒரு நேரத்திலும் கைகொடுக்கும் ஒரு வீரர். அணியை சரிவில் இருந்து மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், வெற்றி பெரும் வரை களத்தில் நின்று மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்தவர். இங்கிலாந்தில் மிகச்சிறந்த பீல்டர்களில் முதலிடம் இவருக்குத்தான். பவுலிங்கிலும் அசத்துவார். முகம் எப்போதுமே சாந்தமாகவே இருக்கும் 

ஆன்ட்ரூ பிளின்டாப் 


இவர் சின்ன போத்தம் என்று அழைக்கப்பட்டவர். மிக ஆக்ரோஷமான வீரர். முதலில் இவரைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் 20 வயது வீரரான இவர் ஆஸ்திரேலியாவுடன் ஒரு போட்டியில் அடித்து நொறுக்கி வெற்றியை நிலைநாட்டினார். அதன் பின்னரே எல்லோராலும் கவனிக்க பட்டார். மிக ஆபத்தான வீரர். காயத்தால் அடிக்கடி அவதிபட்டவர். பல பெண் ரசிகைகள் இவருக்கு உண்டு. 

அலேக் ஸ்டூவர்ட்


வெகு காலமாக இவர் விக்கெட் கீப்பராக இருந்தவர். பெரும்பாலும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்குவார். கிரிக்கெட் இலக்கணத்தோடு விளையாடுபவர்களில் இவரும் ஒருவர். இவரைப் பார்த்தால் எனக்கு டிராவிட் ஞாபகம்தான் வரும். தொண்ணூறுகளில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம். 

இயான் போத்தம்


இன்று வரை இங்கிலாந்து என்றவுடன் எல்லோரும் சொல்லும் பெயர் இயன் போத்தம். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். முதலில் ஸ்லிம்மாக இருந்தாலும் போக போக உடல் பருமனாகி விட்டார். ஆனாலும் அவரது ஆட்ட நேர்த்தி குறையவே இல்லை. லார்ட்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்து நொறுக்கி இங்கிலாந்தை ஜெயிக்க வைத்தது உலகபிரசித்தம். இவர் ஒரு கால்பந்து வீரரும் கூட. 

கெவின் பீட்டர்சன் 


குறுகிய காலத்தில் மிக பிரபலம் ஆன ஒரு வீரர். நல்ல உயரமான, உடல் கட்டுடைய, ஸ்மார்ட்டான வீரர். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர். கிரிக்கெட்டின் தற்கால அதிரடி ஆட்டக்காரர்களில் இவர் குறிப்பிடதக்கவர். ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்சர் அடித்து காட்டியவர். இவருக்கு ரிவர்ஸ் ஸ்வீப் மிகுந்த புகழை பெற்று கொடுத்தது. 

மார்க்கஸ் டிரெஸ்கோதிக்


குறுகிய காலமே ஆடினாலும் என் மனம் கவர்ந்த ஒரு வீரர். 2000 - 2003 வரையிலான போட்டிகளில் இங்கிலாந்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். நெடு நேரம் நிலைத்து ஆடும் ஒரு அதிரடி ஆட்டக்காரர். குனிந்து நிற்காமல் நிமிர்ந்த படியே இவர் ஆடுவது வித்தியாசமாக இருக்கும். 


வெஸ்ட் இண்டீஸ் 

ஒரு காலத்தில் கிரிக்கெட்டையே தங்கள் கைக்குள் வைத்திருந்த ஒரு அணி. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரனையும் பார்த்து எல்லோரும் பயப்படுவர். ஆனால் 1996 உலகக்கோப்பைக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சரிவை சந்தித்த அணி, 2008 வாக்கில் ஒரு மகா மட்டமான அணியாக காட்சி அளித்தது. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. 

பிரயன் லாரா


சச்சினுக்கு இணையாக வைத்து பேசப்பட்டவர். இன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான வீரர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மிக ஸ்டைலிஷ் ஆன வீரர். பல பெண் ரசிகைகள் உண்டு. நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நான் சிறுவனாக இருக்கும்போது பலர் லாரா மாதிரி ஸ்டைலில் ஆட முயற்சிப்பார்கள் 

கர்ட்லி ஆம்ப்ருஸ்


சும்மா பனைமரம் மாதிரி உயரம். ஆளை பயமுறுத்தும் ஒரு வேகம். இவை எல்லாம் இருந்தும் முகத்தில் தெரியும் ஒரு அப்பாவித்தனம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு வீரர். வெஸ்ட் இண்டீஸ் உருவாக்கிய தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். 

கொர்ட்னி வால்ஷ்


இவரும் ஆம்புரூசும் ஜோடி போட்டுக் கொண்டு பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள். இவரும் தன் வேலை ஒன்றிலேயே குறிக்கோளாக இருப்பார். தேவை இல்லாத சண்டைகளில் ஈடு பட மாட்டார். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர். 

சிவ்நாராயண் சந்தர்பால்


பல வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒற்றை ஆளாக தாங்கி வருபவர். ஆஸ்திரேலியாவுக்கு பெவன் எப்படியோ, வெஸ்ட் இண்டீசுக்கு சந்தர்பால் அப்படி. மிக மிக நிதானமாக ஆடுவார். ஆனால் அடுத்து விக்கெட் விழுந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார். மூன்று ஸ்டம்ப்களும் தெரியும்படி இவர் பேட்டிங் பிடிப்பது வினோதமாக இருக்கும். கால்களை வேகமாக நகர்த்தி ஆடும் ஒரு வீரர். 
  
கார்ல் ஹூப்பர்


மிக மிக அசமந்தமான ஒரு வீரர். மெதுவாக ஆட ஆரம்பித்து, கடைசியில் அடித்து நொறுக்கி விடுவார். ஆனால் முகத்தில் எந்த விதமான சலனமும் காட்டமாட்டார். பேட்டிங்தான் இப்படி என்றால் பந்துவீச்சு இன்னும் மோசம். நடந்து வந்து மிக மெதுவாக வீசுவார். ஒரு ஓவரை இரண்டரை நிமிடத்துக்குள் வீசி முடிக்கும் திறமையாளர். விக்கெட் வீழ்த்தினாலும் ரியாக்சன் காட்டமாட்டார். இவரை பார்த்ததும் எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் ஞாபகம் வரும். 

ஜிம்மி ஆடம்ஸ்


இவரை உண்மையிலேயே ஆல்ரவுண்டர் என்று சொல்லலாம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் மட்டுமல்லாது, வெகு காலம் விக்கெட் கீப்பராகவும் இருந்திருக்கிறார். அணிக்கு தேவையான சமயங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். இவரைப்பார்த்தால் எனக்கு ஹெல்பாய் திறப்பட நடிகர்  Ron Perlman ஞாபகம்தான் வருகிறது. 

கிரீஸ் கெய்ல் 


இன்றுவரை பவுலர்கள் அச்சப்படும் வீரர்களுள் இவரும் ஒருவர். இவரை வீழ்த்தி விட்டால் பெரிய கடமை முடிந்து விட்டதை போல எதிரணியினர் ரிலாக்ஸ் ஆவார்கள். இவரை சிறிது நேரம் களத்தில் நிற்க விட்டு விட்டால் அதற்கப்புறம் அவுட் ஆக்குவது சிரமம். அது மட்டுமல்லாமல், சளைக்காமல் அடித்து நொறுக்கி கொண்டே இருப்பார். இவர் கைகள் அவ்வளவு பலமா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு, சிக்சர் அடித்தால் பந்து வெகு தொலைவில் போய் விழும். கிரிக்கெட்டை சுவாரசியமாக்கியதில் இவருக்கும் பங்கு உண்டு. 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை வீரர்கள் , அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

41 comments:

K said...

வணக்கம் பால சார்! அனைத்து வீரர்கள் பற்றியும் அழகாக சொல்லியிருக்கீங்க!

தமிழ் உதயம் said...

வெஸ்ட்இண்டீஸை போல, இந்தியாவும் தேய்ந்து கட்டெறும்பாகி கொண்டு இருக்கிறதோ என்று அச்சமாக உள்ளது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கைல் ஓகே...

என் வலையில்:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!

Manoj said...

about pieterson: its not reverse sweep, its switch hit

அந்நியன் 2 said...

//சாதி வெறி குறித்து ஒரு பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சோம்பல் காரணமாக அதை நாளைக்கு ஒத்தி வைத்து விட்டேன். //

நல்லது சகோ.

ஜாதியினை பற்றி பேசவே வெட்கமாக இருக்கின்றது.

தொடருங்கள்...

யார் மனதும் புண் படா வகையில்.

Unknown said...

அற்புதம்...

Nirosh said...

//இவரை பார்த்ததும் எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் ஞாபகம் வரும்...//

செம பதிவு வாழ்த்துக்கள்...!

பால கணேஷ் said...

வெஸ்ட் இண்டீஸ் என்றாலே எனக்கு விவியன் ரிச்சர்ட்ஸ்தான் ஞாபகம் வரும். அவரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களே... நல்ல பதிவு.

சென்னை பித்தன் said...

கணேஷ் கேட்டது போல் ரிசர்ட்ஸை விட்டு விட்டீர்கள்!

K.s.s.Rajh said...

டஸ்கோதிக்,பிளிண்டொப் இவர்கள் எல்லாம் மறக்கக்கூடியவீரர்களா..அப்பறம் லாரா..எனக்கு மிகவும் பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர் பிளிண்டொப் ஆனால் தாதா வின் அளவு கடந்த ரசிகனாக இருந்தபடியால் தாதாவை சீண்டிய பிளிண்டொப்பை காபபோக்கில் பிடிக்காமல் போய்விட்டது.

கிட்டத்தட்ட உங்களுக்கு பிடித்தவீரர்களும் எனக்கு பிடித்தவீரர்களாகத்தான் இருக்கின்றார்கள்..

அப்பறம் இன்றைய இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் போட்டியுடன்...இந்திய அணியின் பெரும் சுவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றார்..இந்திய் அணியை 15 வருடங்கள் தோள்களில் தாங்கிய ராகுல் ராவிட்டுக்கு இந்தியா வெற்றியுடன் விடைகொடுக்குமா பொருத்து இருந்து பார்ப்போம்..

.ராவிட் அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் ஆடாவிட்டாலும் ஓய்வு என்று வரும் போது கவலையாக உள்ளது....
இன்னும் கொஞ்சகாலத்தில் டெஸ்ட்டில் இருந்தும் ஒய்வு பெற்றுவிடுவார்.......

இப்படியான ஒரு வீரர் இந்திய அணிக்கு மீண்டும் கிடைப்பாரா..பொருத்து இருந்து பார்ப்போம்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

பாலா said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

நன்றி நண்பரே...

பாலா said...

@தமிழ் உதயம்

ஒரே ஒரு தொடரை வைத்து முடிவு பண்ணக்கூடாது. 97-98களில் இதை விட மட்டமாக ஆடினோம் என்பதை மறக்க கூடாது. மீண்டு வந்து விடலாம். கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

நன்றி நண்பரே..

பாலா said...

@Manoj

தகவலுக்கு நன்றி நண்பரே... நமக்கு திரும்பி நின்று அடித்தாலே அது ரிவர்ஸ் ஸ்வீப்தான்.

பாலா said...

@அந்நியன் 2

நன்றி நண்பரே. என் நோக்க்மும் அதுதான்.

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

நன்றி நண்பரே...

பாலா said...

@Nirosh

கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@கணேஷ்

நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கியதில் இருந்து நான் பார்த்து ரசித்த வீரர்களை பற்றிதான் எழுதி இருக்கிறேன். ரிச்சர்ட்சின் ஆட்டத்தை நான் லைவாக பார்த்ததே கிடையாது. நன்றி நண்பரே.

பாலா said...

@சென்னை பித்தன்

அதேதான். அவர் ஆடும்போது நான் கிரிக்கெட் பார்க்கவில்லை சார்.

பாலா said...

@K.s.s.Rajh

டிராவிட்டுக்கு மகிழ்ச்சியாக விடை கொடுப்போம். நன்றி நண்பரே..

பாலா said...

@Rathnavel

நன்றிங்க...

Manoj said...

@ bala

ya thats true for a common man. but for cricket lovers like us, should know the difference between switch hit and reverse sweep.

one definition:

Reverse Hit: Consider a right handed player, The player would hold the bat with his right hand being the bottom hand and the left hand on top. and he reverse sweeps it without changing the position of his hands.

Switch Hit: On the contrary, in a switch hit, the right handed batsman holds the bat with his right hand on the top and left hand on the bottom, and switches his position, eventually making him a left handed batsman!

wiki definition:

http://en.wikipedia.org/wiki/Batting_(cricket)#Switch_hit

http://en.wikipedia.org/wiki/Batting_(cricket)#Reverse_sweep

kobiraj said...

கலக்கல் பதிவு .
இன்று என் வலையில் உங்களிடம் ஒரு கிரிக்கெட் கேள்வி வந்து பாருங்கள்

கேரளாக்காரன் said...

I think its only a reverse sweep.wikipaedia's definition is vary from dat vdo

கேரளாக்காரன் said...

@manoj reverse sweep switch hit ellam commentators vacha name than so "pakistanla vanthu bible vaasikka vendam " inga ellarume ungalavuda athigama cricket love panravanga than

Manoj said...
This comment has been removed by the author.
கேரளாக்காரன் said...

@manoj my intention also the same.if my comment hurts u or somebody ,am very sorry

Manoj said...

@ ALL

my intention is to make the difference, not to hurt any one. In case my comment hurts anyone, i APOLOGIZE to them...

M (Real Santhanam Fanz) said...

சரியா சொன்னிங்க பாலா.. ஆனா எனக்கு என்னமோ இப்ப இருக்கிற இங்கிலாந்து வீரர்கள் தான் சிறந்தவர்கள்ன்னு தோணுது..அவுங்கள பத்தியும் ரெண்டு வரி சொல்லி இருக்கலாம்...
அப்புறம் உங்க கடுப்ப கெளப்ப இன்னொரு மேட்டர்..
ICC விருது வழங்கும் விழாவுக்கும் நம்ம இந்திய வீரர்கள் போகாம, ஷாப்பிங் போயிட்டாங்களாம்... இவுங்க என்ன என்ன வெளையாட்டு வீரர்கள்?நெனைக்க நெனைக்க ஆத்திரமா இருக்கு!!

கேரளாக்காரன் said...

in another place it mentioned as palti hit

கேரளாக்காரன் said...

உறுப்பினர் எண் 207

பாலா said...

@kobiraj

கண்டிப்பாக வருகிறேன் நண்பரே..

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

உறுபினர் ஆனதற்கு நன்றி நண்பரே. அப்புறம் எல்லோருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அதில் நாம் தலையிடுவது தவறு. அதே போல நம் கருத்துக்களை சொல்லும்போதும் புண்படா வண்ணம் சொன்னாலே போதும். நன்றி நண்பரே..

பாலா said...

@Manoj

You dont need to apologize. Each and every technical terms will not be known by all. for example many people dont know abt helicopter shot. just like that. also once ian chappel commented on this switch shot as its unethical. on that time it was mearly called as reverse sweep.

the question was, "is reverse sweep is ethical?"

chappel replied, "its ethical unless the batsman changes his hands"

so at that time all these things named under reverse sweep

thanks

பாலா said...

@Real Santhanam Fanz

நன்றி நண்பரே...

இராஜராஜேஸ்வரி said...

லட்சம் ஹிட்ஸ் பெற்றது மகிழ்ச்சி என்றால் அதற்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்தது அதை விட பல மடங்கு மகிழ்ச்சி. இந்த ஆதரவை தொடர்ந்து பெற எப்போதும் முயற்சிப்பேன்.//

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
வாழ்க வளமுடன்..

Riyas said...

இந்த வீரர்கள் அனைவரும் எனக்கும் பிடித்தமானவர்களே.. அதிலும் மார்கள் ட்ரெஸ்கொதிக் எனனை மிகவும் கவர்ந்தவர் அவரின் அதிரடி ஆட்டம் சூப்பர்,,, ஆனால் என்ன காரணமோ இங்கிலாந்து அணியிலிருந்து அவசரமாகவே விலகிவிட்டார்

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

ரொம்ப நன்றிங்க...

பாலா said...

@மாய உலகம்

என்னை அறிமுகப்படுத்தி பெருமை படுத்தியதற்கு மிக்க நன்றி.

பாலா said...

@Riyas

உண்மைதான். அவர் காயங்களால் தொடர்ந்து அவதிப்பட்டதே அணியில் இருந்து விலக காரணம்.

Related Posts Plugin for WordPress, Blogger...