விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 13, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 2



மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னடா இது? ஏவிஎம் படத்தோட மொத டயலாக் மாதிரி பதிவை தொடங்குறான்னு பார்க்கிறீர்களா? பதிவெழுத தொடங்கிய காலத்தில் எதை எழுதினாலும் படிக்க ஆளே வரமாட்டார்கள். ஒவ்வொரு பதிவுக்கும் இருபது அல்லது முப்பது ஹிட்ஸ் கிடைத்தாலே அது பெரியவிஷயமாக இருக்கும். "நாம் ஒரு லட்சம் ஹிட்ஸ் எப்போது வாங்குவோம்?" என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்வேன். "குறைந்தது நான்கைந்து வருடமாவது ஆகும் போலிருக்கிறது." என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் இப்போது ஒரு லட்சம் ஹிட்ஸ் கிடைத்திருக்கிறது. ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக எதுவுமே செய்யாத போது, இது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 



தென்னாபிரிக்கா 

இந்த அணியை ஒரு திறமையற்ற அணி என்று சொல்வதா துரதிஷ்டமான அணி என்று சொல்வதா என்று தெரியவில்லை. இவர்கள் பொதுவாக சிறப்பாகவே ஆடுகிறார்கள். ஆனால் வெற்றி கிட்டுவதில்லை. என்ன காரணம் என்று புரியவில்லை. தென்னாப்பிரிக்காவில் எனக்கு பிடித்த நிறைய வீரர்கள் இருந்திருக்கிறார்கள். 

ஜான்டி ரோட்ஸ்


மிகவும் சுறுசுறுப்பான வீரர்களுள் ஒருவர். இவரைப்பார்த்தாலே எல்லோருக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இன்று வரை பீல்டிங் என்றால் அதற்க்கு இவரைத்தான் உதாரணம் காட்டுகிறார்கள். நல்ல கேட்ச் யாராவது பிடித்தால், "ஜான்டி ரோட்ஸ் மாதிரி பிடித்தான்." என்று சொல்வது ஒன்றே சாட்சி. சிறந்த பேட்ஸ்மேனும் கூட. கிரிக்கெட்டில் பீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது வாங்கிய ஒரே வீரர். 2003 உலகக்கோப்பையில், கென்ய வீரர் ஒடும்பே அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, எலும்பு முறிவு ஏற்பட, இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

கேரி கிறிஸ்டன்


ஓப்பனிங் இறங்கி நெடு நேரத்துக்கு அவுட் ஆகாமல் சோதிப்பவர். மிக அதிரடியாக ஆடமாட்டார். ஆனால் ரன்ரேட் உயர்ந்து கொண்டே செல்லும். பவுண்டரிகள் அடிப்பதை விட ஓடியே அதிக ரன் சேர்த்து விடுவார். ஆனால் விளையாடும்போது எப்போதும் கடுகடுவென முகம் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்ததில் ஒரு பயிற்சியாளராக முக்கிய பங்கு இவருக்குண்டு. 

ஜாக் காலிஸ்


பெரும்பாலானவர்களுக்கு பிடித்தவர். ஆல்ரவுண்டர் என்பதற்கு இவர்தான் சரியான உதாரணம். மிக கன்சிஸ்டண்ட் ஆக ஆடும் கிரிக்கெட்டர்களில் இவரும் ஒருவர். பேட்டிங்கோ, பவுலிங்கோ இரண்டிலுமே சாதிக்கும் வீரர்கள் மிக அரிதானவர்களே. நல்ல உடற்கட்டுள்ள இவருக்கு கிரிக்கெட் ஆட வந்ததில் இருந்தே முடி கிடையாது. இருந்தாலும் இவரிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. பல பெண் ரசிகைகளை பெற்றவர். 

ஷான் பொல்லாக்


இவரை பார்த்தால் பார்பி பொம்மை ஆணாக மாறிவிட்டதை போல தோன்றும். தென்னாப்பிரிக்க அணியின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவர். ஒருமாதிரி வளைந்து நெளிந்து இவர் பந்து வீசுவது வித்தியாசமாக இருக்கும். அதை பல முறை பள்ளி காலங்களில் முயற்சி செய்திருக்கிறேன். மிக ஒழுக்கமான, எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதராம். இவரை பார்த்தாலே அப்படித்தான் தோன்றுகிறது. 

பிரயன் மேக்மில்லன் 


பீமசேனன் மாதிரி கனத்த உடம்புடன், உயரமாக இருப்பார். ஆனால் பந்து வீசும்போது அசம்பந்தமாக ஓடி வருவார். துல்லியமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். தென்னாபிரிக்கா விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் போதெல்லாம் சிறப்பாக ஆடி அணியை மீட்க உதவியவர். அந்த அணியின் முக்கிய பலமே அதிக ஆல்ரவுண்டர்களைக் கொண்டதுதான். அதில் இவரும் ஒருவர். மெல்ல மெல்ல ரன் சேர்க்க தொடங்கும் இவர் அதிரடியாக ஆடத்தொடங்கி விட்டால் கட்டுப்படுத்துவது கடினம். 1992 அரையிறுதியில் அந்த சங்கடமான தருணத்தில் களத்தில் நின்றவர். இவர் நின்று கொண்டிருந்தவரை வெற்றி தென்னாப்பிரிக்காவுக்குத்தான் என்று எல்லோரும் நம்பி இருந்தார்கள். ஆட்டம் முடிந்தவுடன், கடுப்புடன் வெளியேறுவார். 

லான்ஸ் குலூஸ்னர்


இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தென்னாப்பிரிக்காவின் இன்னொரு ஆல்ரவுண்டர். பல ஒன் மேன் ஷோக்களுக்கு சொந்தக்காரர். பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு விளையாட்டு வீரர். 

ஹெர்ஸ்சலே கிப்ஸ்


இவர் களத்தில் நின்றாலே எனக்கு எரிச்ச்லாக இருக்கும். சுமாரான ஒரு வீரராக ஆடத்தொடங்கிய இவர் 1997க்கு அப்புறம் தான் வழியையே மாற்றினார். ஈவு இரக்கமற்ற பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். எந்த ஒரு ரியாக்சனுமே இல்லாமல் அடித்து நொறுக்கிக்கொண்டே இருப்பார்.

ஆலன் டொனால்ட்


மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ஆறேழு வருடங்களுக்கு, தென்னாபிரிக்க பவுலிங்கின் அச்சாணியாக திகழ்ந்தவர். மிக ஆக்ரோஷமான வீரர். இவரை எப்போதும் முகத்தில் க்ரீமுடன் பார்த்து பழகி விட்டதால், அது இல்லாமல் பார்க்கும்போது ஏதோ ஒன்று குறைவதை போன்றே தோன்றும். கிரிக்கெட்டின் மறக்க முடியாத வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். 

பேன்னி டிவில்லியர்ஸ்


தென்னாப்பிரிக்காவின் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர். மிக உயரமான ஆக்ரோஷமான வீரர். இவரும் டொனால்டும் சேர்ந்து வீசும் முதல் பத்து ஓவர்களை தாக்கு பிடிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டமாக இருக்கும். 93இல் ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஜெயிக்க 117 ரன் மட்டுமே தேவை. டோனி கிரெக், "தென்னாபிரிக்கா வெல்ல 1 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது." என்று சொன்னார். அந்த போட்டியில் டி வில்லியர்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவை தோற்கடுத்தவுடன் டோனி கிரேக்கிடன், "நாங்கள் எப்போதும் தளர்ந்து விடமாட்டோம்." என்று கூறினார்.  சரியாக ஆங்கிலம் பேச வராத இவர், குறைந்த காலமே கிரிக்கெட் ஆடினாலும் நல்ல புகழ் பெற்றார். 


நியூசிலாந்து 

எனக்கு தெரிந்து கிரிக்கெட்டில் அதிகம் வம்பு சண்டைக்கு போகாதவர்கள் இவர்கள்தான். நியூசிலாந்து ஒரு அழகான நாடு. அதற்கெற்றாற்போல அதன் வீரர்களும் மிக ஸ்மார்ட்டாக இருப்பார்கள். சிறப்பாக ஆடியும் ஏனோ இவர்கள் அதிகம் சாதித்ததில்லை. 

மார்க் கிரேட்பேட்ச் 


இவரை பார்த்தால் ஆங்கில படங்களில் வரும் அடியாள் மாதிரியே இருப்பார். வாயில் பபுள் கம்மோ, என்னவோ? மென்று கொண்டே இருப்பார். இவரை பார்க்கவே பயமாக இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் பிஞ்ச் ஹிட்டிங் அதாவது அதிரடி ஆட்டம் என்று ஒரு விஷயம் இருக்கிறது என்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியவர். முன்பெல்லாம் ஜெயிக்க தேவையான ரன்ரேட் 7க்கு மேல் இருந்தால் தோல்விதான் என்று நம்பி கொண்டிருந்த நேரத்தில் அதை மாற்றி, கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கி தள்ளி, அணியை ஜெயிக்க வைத்தவர். 

கிரீஸ் ஹாரிஸ்


என்னை கேட்டால் நியூசிலாந்து அணியின் மிக சிறந்த வீரர் என்று சொல்லலாம். இவரிடம் இருந்து எல்லாவிதமான பங்களிப்பையும் எதிர்பார்க்கலாம். அணியை காப்பாற்ற பேட்ஸ்மேனாக களமிறங்குவார். முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலிங்கில் அசத்துவார். சிறப்பான பல கேட்ச்களை பிடித்து, பீல்டிங்கில் அசத்துவார். இவரை நான் பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்தே இவருக்கு தலையில் முடி இல்லை. இவரை பார்க்கும்போது நடிகர் கிட்டியின் நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை.

கிரீஸ் கெய்ன்ஸ்


நியூசிலாந்தின் மிரட்டல் வீரர். நல்ல உயரமான கம்பீரமான வீரர். சிறந்த் வேகப்பந்து வீச்சாளர். அதோடு மட்டுமல்லாமல், அதிரடியாக ஆடி ரன்களையும் குவித்தவர். நியூசிலாந்தின் கபில்தேவ் என்று இவரை கூறலாம்.  

நாதன் ஆஸ்லே


நியூசிலாந்து அணிக்காக வெகு காலம் ஓப்பனிங் இறங்கியவர். பல போட்டிகளில் வெற்றியை ஈட்டி தந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்தவர்களில் முதலிடம் வகிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 153 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். 

டேனியல் வெட்டோரி


நியூசிலாந்தின் மிக அழகான, வெற்றிகரமான கேப்டன். எந்த நேரத்திலும் புன்னகை மாறாமல் இருப்பது இவரது சிறப்பு. மிகமிக மெதுவாக வந்து பந்து வீசுவார். கிரிக்கெட்டின் சிறந்த ஸ்பின்னர்களில் இவரும் ஒருவர். எந்த ஒரு கட்டத்திலும் கண்ணாடியை கழற்றியதே இல்லை.

கிரெக் மேக்மில்லன்


இவர் ஒரு முரட்டுத்தனமான ஆல்ரவுண்டர். மீடியம் பவுலிங்கில் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியவர். ஆனால் இவர் பேட்டிங்கிலேயே அதிக கவனம் செலுத்தினார். ஓப்பனிங் தொடங்கி நியூசிலாந்தின் பல்வேறு  நிலைகளிலும் களமிறங்கிய வீரர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். எல்லா நிலைகளிலும் சிறப்பாக ஆடியவர். நியூசிலாந்து வீரர்களில் வம்பு சண்டைக்கு அதிகம் போகும் வீரர் இவர்தான். சர்க்கரை வியாதியால் அவதிப்பட்ட இவர் விரைவிலேயே ஓய்வு பெற்றுவிட்டார்.  

ரோஸ் டெய்லர் 


இவர் பார்க்க சாதுவாக இருந்தாலும் அதிரடி ஆட்டக்காரர். உலகக்கோப்பை உள்பட பல போட்டிகளில் அதிரடியில் மிரட்டி இருக்கிறார். நியூசிலாந்து அணியில் இன்றும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். 

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


38 comments:

K.s.s.Rajh said...

முதலி ஒருலட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்

ஆகா மறந்து போன கிரிக்கெட் வீரர்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்...

ஆனாலும் எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது...நியூஸ்லாந்து அணியை தனது தலைமைத்துவத்தால் 10 ஆண்டுகளுக்கு மேல் தாங்கிய ஸ்ரிபன் பிளமிங்கை உங்களுக்கு பிடிக்காததன் காரணம் என்ன?

K.s.s.Rajh said...

நாதன் அஸ்டல் எல்லாம் மறக்கக்கூடிய வீரரா

K.s.s.Rajh said...

கிப்ஸ் ஒரு நாள் போட்டிகளில் நீண்டகாலம் சாதனையாக இருந்த ஜெயசூர்யாவின் சாதனையான ஒரு ஒவரில் அதிக ஓட்டம் பெற்ற சாதனையை.கிப்ஸ் 6 பந்திலும் சிக்சர் அடித்து முறியடித்தாரே மறக்கமுடியுமா?

அதைவிட அந்த முதல் முதலில் ஒருநாள் போட்டிகளில் 400 ஒட்டங்களை அணிகள் கடந்த போட்டி...மறக்கமுடியுமா

r.v.saravanan said...

ஒருலட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்

K said...

வணக்கம் பாலா சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாக்கிழமை வாழ்த்துக்கள்!

அப்புறம் ஒரு லட்சம் ஹிட்ஸ் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்! எனக்கு கிரிக்கெட் பத்தி எதுவுமே தெரியதுங்ணா!

எனக்கும் சேர்த்து என் மச்சான் கே.எஸ்.எஸ்.ராஜ் சொல்வாருங்ணா!

அப்புறம் என்னோட ப்ளாக்க ஒருவாட்டி எட்டிப் பாருங்ணா!!

நன்றீங்ணா!

தமிழ்விருது said...

வணக்கம் பாலா.எங்கள் தளத்தின் முதலாவது விருதுகளில் உங்களின்.கிரிக்கெட் வரலாறு-18 என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்

john said...

Hi, Bala. Congaratulations!!!,
I wish to remember you a player name Pat simcox ( south africa), he also a intresting charcter, aged person played cricket,

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு லட்சம் வாழ்த்துக்கள் மக்கா...!!!

பாலா said...

@K.s.s.Rajh

கருத்துக்கு நன்றி நண்பரே. ஸ்டீபன் பிளெமிங் நல்ல வீரர்தான். ஆனால் அவரை பார்த்தால் மிக அசௌகரியமாக ஆடுவது போல தோன்றும். அதாவது வலது கை வீரர் வேண்டுமென்றே இடது கை ஆட்டக்காரராக மாறி ஆடுவது போல இருக்கும். என்னோவோ அவர் என்னை கவரவில்லை.

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

பாலா said...

நன்றி நண்பரே. கண்டிப்பாக வருகிறேன்.

பாலா said...

@தமிழ்விருது

மிக்க மகிழ்ச்சி நண்பரே. அதிலும் சிறந்த பதிவாக்கம் பிரிவில் வழங்கியமை இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாலா said...

@john

ஆமாம் அவரும் சரியான ஆள்தான். அந்த காலகட்டத்தில் எந்த தென்னாப்பிரிக்க வீரரையுமே குறை சொல்ல முடியாது. நன்றி நண்பரே...

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

ஒரு லட்சம் நன்றிகள் நண்பரே...

சேலம் தேவா said...

கலக்குங்க பாஸ்...பழைய கிரிக்கெட் வீரர்களை ஞாபகப்படுத்திட்டிங்க... :)

பாலா said...

@சேலம் தேவா

நன்றி நண்பரே...

Unknown said...

ஒரு லட்சம் ஹிட்ஸ் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் பாலா, மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

லட்சாதிபதிக்கு வாழ்த்துகள்.
இந்த லிஸ்ட்டும் அருமை!

shabi said...

ஒரு நாள் போட்டிகளில் பிஞ்ச் ஹிட்டிங் அதாவது அதிரடி ஆட்டம் என்று ஒரு விஷயம் இருக்கிறது என்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியவர்.//NAMMA SRIKKANTH VIDAVA

Rathnavel Natarajan said...

உங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள்.
கிரிக்கெட்டைப் பற்றி அருமையான பதிவு.
இதில் எனக்கு பிடித்த வீரர் டேனியல் வெட்டூரி.
நன்றி.

Unknown said...

வாழ்த்துக்கள் Boss...

பிரசன்னா கண்ணன் said...

Congrats for 1 lakh hits..
Along with DeVilers & Donald, there was another fast bowler called Craig Matthews in the early 90-s.. He is my most favourite bowler at that time..
Not sure how many of you all remembered him now.. :-)

பாலா said...

@இரவு வானம்

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்.

பாலா said...

@shabi

அவருக்கும் இவர் முன்னோடி என்று சொல்கிறார்கள்.

பாலா said...

@Rathnavel

ரொம்ப நன்றிங்க...

பாலா said...

@malgudi

நன்றி பாஸ்

பாலா said...

@பிரசன்னா கண்ணன்

ஆமாம் மேத்தியுஸ் நினைவில் இருக்கிறார். மூன்றாவது பவுலராக வருவார். கொஞ்சம் ஜாலியான ஆள். நன்றி நண்பரே.

arasan said...

அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

பாலா said...

@அரசன்

மிக்க நன்றி நண்பரே...

ஆயிஷா said...

ஒருலட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள்...
ஒரு லட்சம் ஒரு கோடி ஆக..

Saleem S said...

ஒருலட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் Bala...

உங்களில் ஒருவன் said...

நண்பர் பாலா அவர்களுக்கு,

எனது வலைப்பூவிற்கு வந்து சென்றதற்கு நன்றிகள் பல....

அன்புடன்

உங்களில் ஒருவன்

பாலா said...

@ஆயிஷா .

ரொம்ப நன்றி மேடம் அடிக்கடி வாங்க...

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

அவ்வளவு பேராசை எல்லாம் இல்லீங்க... வாழ்த்துக்களுக்கு நன்றி நன்ப்ரே...

பாலா said...

@Saleem S

நன்றி நண்பரே..

பாலா said...

@உங்களில் ஒருவன்

இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி சொல்லிட்டு...

Related Posts Plugin for WordPress, Blogger...