விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 12, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 9


இந்திய அணியின் மறுபிறப்பு - வந்தார் தாதா... 


இத்தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க.... 

உலகக்கோப்பை போட்டிகளில் சூப்பர் சிக்ஸ் சுற்றோடு வெளியேறி முகத்தில் ஒட்டி இருந்த மண்ணை தட்டியபடி இந்திய அணி இங்கிலாந்தில் இருந்து கிளம்பி விட்டது.  வழக்கம்போல சில காலம் பத்திரிக்கைகள் வசைபாடிவிட்டு ஓய்ந்து விட்டன. 1999 ஆம் ஆண்டை பொறுத்தவரை இந்திய அணிக்கு ஒரு கலவையான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்சில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனில் கும்ப்ளே சாதனை படைத்தார். அதன் நினைவாக பெங்களூருவில் ஒரு சாலைக்கு கூட அவரது பெயர் சூட்டப்பட்டது. இருந்தாலும் உலகக்கோப்பை தோல்வி என்பது அவற்றை எல்லாம் மறக்கடித்து விட்டது.

பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சி 

அது மட்டுமல்லாமல், சென்ற இடமெல்லாம் இந்தியா தாறுமாறாக தோல்வி அடைய தொடங்கியது. வேறு வழியே இல்லாமல் மறுபடியும் சச்சின் டெண்டுல்கரை கேப்டனாக ஆக்கினார்கள். 1999 ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதியில், ஆஸ்திரேலியாவுடன் ஒரு தொடரில் ஆட இந்தியா ஒரு மொக்கை அணியுடன் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது. அங்கே உலகக்கோப்பை வென்ற உற்சாகத்தில் ஆஸ்திரேலிய அணி அசுர பலத்துடன் இந்திய அணியை கபளீகரம் செய்ய காத்துக்கொண்டிருந்தது. டெஸ்ட் தொடரில் மூன்றுக்கு மூன்றுமே படுதோல்வி. இங்கேதான் ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான 16 டெஸ்ட் வெற்றி சாதனை ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுடன் ஒன்றில் மட்டுமே வெற்றி. அதுவும் கங்குலி என்ற ஒரே வீரரால். சொல்லப்போனால் அந்த தொடரில் சிறப்பாக ஆடிய ஒரே வீரர் அவர் மட்டுமே. ஒரு அணியே அவுட் ஆப் பார்மில் இருந்தது. "வேறு என்னதான் செய்வது?" என்று கையை பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் கிளம்பியது அந்த பிரச்சனை.
சர்ச்சைக்குரிய சச்சினின் LBW
நான் சிறுவயதில் இருந்தே சில பாகிஸ்தான் வீரர்கள் ஆடுகளத்தில் சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கேள்வி பட்டிருக்கிறேன். அக்ரம் பந்தை சுரண்டியது, இம்ரான்கான் பந்தின் நூலை அறுத்தது என்று. அதே போல சூதாட்டம் என்றால் எதிரணியிடம் காசு வாங்கிக்கொண்டு தோற்பது என்றே ரொம்ப காலம் நினைத்திருந்தேன். ஆனால் மேட்ச் பிக்சிங் என்பது மிகப்பெரிய விஷயம். அதில் நடக்கும் விஷயமே வேறு என்று இந்த காலகட்டத்தில்தான் விளங்கியது. ஒவ்வொரு நாட்டினர் மீது ஒரு குற்றம் உண்டு. ஆஸ்திரேலியர்கள் தங்கள் அணி ஜெயிக்க எதிரிகளை கெட்ட வார்த்தையில் கூட திட்டுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் ஒழுக்கம் மிகுந்த, விளையாட்டில் நேர்மையையும், திறமையையும் கொண்ட ஒரு அணி என்று எல்லோராலும் நம்பப்பட்டது தென்னாப்பிரிக்க அணி. அதன் தலைவர் ஹன்ஸி குரோனியே மாதிரியான ஒரு திறமைசாலியை எங்குமே பார்க்க முடியாது என்பது மாதிரியான கருத்துக்கள் நிலவிய காலமது. இந்த எண்ணத்தில் மண்ணை அள்ளி போடுவது மாதிரியான ஒரு நிகழ்வு நடந்தேறிவிட்டது.
ஹன்ஸி குரோனியே
சந்தேகத்தின் பேரில் சிபிஐ குரோனியேவிடம் விசாரணை நடத்த, குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டார். ஒரு டெஸ்ட் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் ஐந்தாவது நாளில் இழந்து விடவேண்டும் என்று பேரம் பேசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கடைசி நாளில் எந்த முயற்சியும் செய்யாமலேயே அனைத்து விக்கெட்டுகளும் விழுந்து விட, தென்னாப்பிரிக்கா இயல்பாகவே தோற்றுவிட்டது. ஆனால் அவருக்கு பரிசாக 50ஆயிரம் டாலர் ஏஜெண்டுகளால் தரப்பட்டிருக்கிறது. அதாவது செய்யாத ஒரு காரியத்துக்கு கூலி. மேலும் தொடர்ச்சியாக புக்கிகளால் அவருக்கு தொந்தரவு ஏற்பட, அவர் கிப்ஸ், நிக்கி போயே ஆகியரை அணுகுமாறு சொல்லி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்ள ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த அவர் தப்பித்தால் போதும் என்று எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டார். தனக்கு புக்கிகளை அறிமுகப்படுத்தியது அசாருதீன்தான் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.
அசாருதீன் 
அசாரும் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ள, படிப்படியாக நிறைய வீரர்கள் சிக்க தொடங்கினார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்க வீரர்கள், ஜடேஜா, நிகில் சோப்ரா, மனோஜ் பிரபாகர் ஆகியோர். இவர்களுள் கிப்ஸ் மட்டும் ஆறுமாத தடையுடன் தப்பித்துவிட்டார். மற்றவர்கள் இரண்டாண்டு முதல் ஆயுள் தடை வரை பெற்றனர். குரோனியேவுக்கும் ஆயுள் தடை விதிக்கப்பட்டது. அவர் செய்த ஒரே தவறு, புக்கிகளை பற்றி வெளியே சொல்லாமல் இருந்ததுதான். என்னதான் தவறு செய்திருந்தாலும் ஒரு தலை சிறந்த கேப்டனை தென்னாப்பிரிக்க அணி இழந்ததை யாரும் மறுக்க முடியாது.  இது நடந்து நான்காண்டுகளுக்குள் ஒரு விமான விபத்தில் குரோனியே மரணமடைந்தது சோகத்தின் உச்சம். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னாளில் பாப் உல்மரின் மரணத்துக்கு பின்னர் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.
பாப் உல்மருடன் 
இதன் நிகழ்வுகளுக்குப் பின்னர் இயல்பாகவே இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தாலும் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவே அனைவரும் பேசத்தொடங்கினர். பத்திரிக்கைகள் எல்லாம் எள்ளி நாகையாட தொடங்கின. சூதாட்ட ஜோக்குகள் பிரபலம் ஆகின. இந்த நிலையில் சச்சின் முதுகுவலி, மூட்டுவலி, டென்னிஸ் எல்போ என்று சகலவிதமான பிரச்சனைகளாலும் அவதிப்பட, தாமாகவே கேப்டன் பதவியை துறந்தார். மிகுந்த சர்ச்சைகளுக்கு நடுவே கேப்டன் ஆனார் அப்போதைய துணை கேப்டன் கங்குலி. எனக்கே முதலில் அவர் மீது நம்பிக்கை இல்லை. ஒரு பேட்ஸ்மேனாக அவர் என்னை பெரிதும் கவர்ந்தாலும், கேப்டனாக ஜொலிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. "இத்தனை நாள் எங்கே இருந்ததடா இந்த ஆவேசம்?" என்கிற ரீதியில் செயல்படத்தொடங்கினார் கங்குலி.
அசாருதீன் முதன் முதலாக கேப்டன் பதவி ஏற்கும் போது இருந்த மாதிரியே ஒரு துருப்பிடித்த அணியாக இருந்தது இந்திய அணி. அதன் கட்டமைப்பை அடிப்படியில் இருந்து சரி செய்யவேண்டும். அதற்கு சில துணிச்சலான, தன்னிச்சையான முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு அப்போதைய பி‌சி‌சி‌ஐ தலைவர் டால்மியா உறுதுணையாக இருந்தார். அணியில் இருக்கும் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார் கங்குலி. "இதில் சச்சினையும், டிராவிட்டையும் சேர்க்கமுடியாது. அவர்களை ஏதாவது செய்தால் மொத்த இந்தியாவே கொந்தளித்து விடும். ஆனால் மற்ற வீரர்களை அப்படி நடத்த முடியும். அதற்கு புதிய வீரர்கள் வேண்டும்." என்று முடிவு கட்டினார். துடிப்புமிக்க வீரர்களை அணியில் சேர்க்க தொடங்கினார். தற்போது உலகக்கோப்பையை வென்று இருக்கும் இருக்கும் இந்திய அணியின் அடிப்படையே கங்குலியின் கட்டுமானம்தான். வெகு நாட்களாகவே அணியில் ஒரு நிலையான இடம் கிடைக்காமல் தத்தளிக்கும் பல நல்ல வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.
டால்மியாவுடன் கங்குலி 
"கும்ப்ளேவை மட்டுமே நம்பி அணி இருக்க கூடாது." என்று கங்குலி நினைத்ததன் விளைவாக பந்தை எறிகிறார் என்ற புகாரில் சிக்கி அவதிப்பட்டு வந்த ஹர்பஜன்சிங் புதிய பொலிவுடன் அணியில் நுழைந்தார்.  அதே போல ஸ்ரீநாத்துக்கு மாற்றாக அசுர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் என்ற இளைஞர் சேர்க்கப்பட்டார். அஜீத் அகர்க்கர் அவ்வப்போது சிறப்பாக செயல்பட்டாலும் எந்நேரமும் அவரை நம்பமுடியாது. முக்கால்வாசி இளைஞர்களை கொண்ட அணியை வழி நடத்தி சென்ற கங்குலி தனது முதல் வெற்றியை தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்தி காட்டினார். அதன் பின் இந்திய அணி தொடர் வெற்றிகளை ருசிக்க தொடங்கியது. 2000ஆம் ஆண்டில் நடந்த நாக்அவுட் தொடரில் இறுதி போட்டிவரை இந்திய அணியை வழிநடத்தி சென்றார். அப்போது அது பெரிய விஷயமாக பேசப்பட்டது. அதன் காரணம், அதற்கு முந்தய ஆண்டில் இந்திய அணி பெற்ற படுதோல்விகள், மற்றும் அணியில் நிலவிய பல சர்ச்சைகள். இந்த தொடரிலும் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் நடந்தது.
நாக் அவுட் கோப்பை 2000 
தகுதிச்சுற்றில் கென்யாவை வீழ்த்திய இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியர்களை சந்திக்கபோகிறதென்ற நடுக்கம் எல்லோருக்கும் இருந்தது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவின் ஃபார்ம் அப்படி. ஓரளவுக்கு நல்ல தொடக்கம் இருந்தாலும் இந்திய அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை. ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோரான 265 எடுத்தது. பின்னர் ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலியா இந்தியர்களிடம் இப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. "சில மாதங்களுக்கு முன் நாம் பார்த்த இந்திய அணி இல்லை இது!" என்று அவர்களுக்கு புரிந்து போனது. "முன்பெல்லாம் நாம் திட்டினால் தலையை குனிந்து கொண்டு போகிறவர்கள், இப்போது பதிலடி கொடுக்கிறார்களே?" என்று திகைத்தார்கள். "சமாதானப்படுத்த வேண்டிய கேப்டனே சண்டைக்கு நிற்கிறாரே?" என்று ஆச்சர்யபட்டனர். அவர்களால் 245 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விளைவாக வீட்டுக்கு மூட்டையை கட்டினார்கள்.
அதன் பின்னர் அதே உற்சாகத்தோடு தென்னாப்பிரிக்காவை சந்தித்த இந்திய அணி தனது சுழற்பந்து வீச்சு என்னும் அஸ்திரத்தால் தாக்க, தென்னாப்பிரிக்கா இந்தியாவிடம் சரணடைந்தது. இன்று வரை ஆசிய அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களைக்கண்டால் தென்னாப்பிரிக்க வீரர்கள் நடுங்குவதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.  இந்த நேரத்தில் இந்திய அணி போலவே தென்னாப்பிரிக்க அணியிலும் பல குழப்பங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா என்றாலே கங்குலிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அவர்களை நைய புடைத்து 141 ரன் சேகரித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதி போட்டியிலும் சதமடித்து, இந்திய அணி ஒரு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார். ஒரு கட்டத்தில் 138க்கு 5 என்று தத்தளித்த நியூசிலாந்து அணி, பிறகு என் மனம் கவர்ந்த கிரீஸ் கெய்ன்ஸ்(102*) மற்றும் ஹாரிஸ்(46) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இந்திய அணி கோப்பையை பெறாவிட்டாலும் இறுதி போட்டிவரை சென்றது சிறப்பாக பேசப்பட்டது. 2003 உலககோப்பை போட்டிகளுக்கான அணி சிறப்பாக உருவாகி வருவதாகவே கருதப்பட்டது.
தன் முதல் போட்டியில் யுவராஜ் 
இந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 84 ரன்கள் சேர்த்து தனது இரண்டாவது போட்டியிலேயே அணியின் வெற்றி வித்திட்டவர் ஒரு புதிய வீரர். ஆஸ்திரேலியாவின் இயான் ஹார்விக்கு இவர் பிடித்த கேட்ச் இந்தியர்களை மூக்கின் மேல் விரல்வைக்க செய்தது. "என்னடா இது, இந்தியாவில் இப்படி எல்லாம் கேட்ச் பிடிப்பவர்கள் இருக்கிறார்களா?" என்று வியந்தார்கள். ஜான்டி ரோட்ஸை நினைவு படுத்தும் அளவிற்கு அபாரமான அந்த கேட்ச் பிடித்த தருணம் இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அவனது பெயர் என்ன என்று கவனித்தேன். யுவராஜ் சிங். அட்டகாசமான இந்த தொடக்கத்தோடு தன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய அந்த இளைஞன் பிற்காலத்தில் இந்திய அணிக்கே உலகக்கோப்பையை வாங்கி கொடுத்து, என் கனவினை நிஜமாக்கபோகிறான் என்று அப்போது சத்தியமாக நினைக்கவில்லை.
சட்டையை சுழற்றினார் கங்குலி.... அடுத்த பதிவில்
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

34 comments:

சென்னை பித்தன் said...

யுவராஜ் அறிமுகம் டாப்.நல்ல நினைவு கூரல்!

பாலா said...

@சென்னை பித்தன்

மிக்க நன்றி நண்பரே...

சக்தி கல்வி மையம் said...

தொடர்ந்து பல அறிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள் பாலா ..
நன்றி,,

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி நண்பரே...

செங்கோவி said...

ஆஹா கிரிக்கெட்டா..நடக்கட்டும்..நடக்கட்டும்.

Unknown said...

//ஒரு அணியே அவுட் ஆப் பார்மில் இருந்தது.///
ஹிஹிஹெஹிஹி ஆமா பாஸ் ஞாபகம் இருக்கிறது!

Unknown said...

// அதன் தலைவர் ஹன்ஸி குரோனியே மாதிரியான ஒரு திறமைசாலியை எங்குமே பார்க்க முடியாது என்பது மாதிரியான கருத்துக்கள் நிலவிய காலமது./
திறமைசாலி..இப்படி போவார் என்று கனவிலும் நினைக்கவில்லை..அவர் இறப்பு இன்னமும் சோகம் தந்தது!

Unknown said...

ஹிஹி கங்குலி சட்டை காலத்திய வரலாறு பெரிய கதை ஹிஹி !!!
அதற்க்கு பதிலாக தானே பிளின்டோப்???

Kavin Raja said...

மிகவும் சிறப்பான சுவாரஸ்யமான கிரிகெட் வரலாறு.......
எனினும் ,
சச்சினின் 186* (vs NZ on 1999) ரன்கள் பற்றி எதுவும் சொல்லலியே!! :(

பாலா said...

@மைந்தன் சிவா

இந்திய அணியே அவுட் ஆஃப் பார்மில் இருந்த போது கிரிக்கெட் பார்க்கவே வெறுப்பாக இருந்தது.

குரோனியேவின் இழப்பு மிகப்பெரியது.

பிளிண்ட் ஆஃபுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் கங்குலி அப்படி செய்தார். அது குறித்து அடுத்த பதிவில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

நன்றி நண்பரே...

பாலா said...

@Kavin Raja

சச்சினின் 186 மிகச்சிறந்த ஒன்று. நியூசிலாந்துக்கு எதிராக நடந்த அப்போட்டி மறக்க முடியாதது. நிறைய எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் பதிவின் நீளம் கருதி சிலவற்றை வேண்டுமென்றே ஸ்கிப் செய்ய வேண்டி இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

பாலா said...

@செங்கோவி

நமக்கு தெரிந்தவற்றைத்தானே எழுத வேண்டி இருக்கிறது. வருகைக்கு நன்றி நண்பரே...

சுதா SJ said...

கிரிக்கெட் புடிக்காது கூடவே தெரியாது பாஸ்
சோ நோ கமெண்ட்ஸ் பாஸ்

vidivelli said...

நான் நினைச்சேன் நீங்க ஒரு வீராங்கனை என்று..hahaha..
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள் சகோ...

இராஜராஜேஸ்வரி said...

அரிய அருமையான தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சரவணகுமரன் said...

தொடர் அருமை. இத்தொடரின் போன பகுதி, நீங்கள் சொன்னது எல்லாம் நான் நினைத்தது. அதற்கு பிறகு, கிரிக்கெட்டை தொடர்வதை நிறுத்திவிட்டேன். மேட்ச் பிக்ஸிங் - முக்கிய காரணம்.

பாலா said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்

தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@vidivelli

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ...

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றிங்க...

பாலா said...

@சரவணகுமரன்

நீங்கள் மட்டுமல்ல பலபேர் அதன் பிறகு கிரிக்கெட்டை வெறுக்க தொடங்கி விட்டனர். நன்றி நண்பரே...

MSV Muthu said...

Good one!

"ராஜா" said...

இன்று இருக்கும் இந்திய அணியில் சேவாக் , யுவராஜ் , டோனி , ஜாகீர் கான் , ஹர்பஜன் என்று நிறைய பேரை அறிமுகபடுத்தியது கங்குலிதான் ...

இவர்களை அணியில் நிலை நிறுத்த அவர் எடுத்த முயற்சிகள் இல்லை என்றால் இந்திய அணி இன்று விஸ்வரூபம் எடுத்து இருக்காது ...

ரோஷன் கவாஸ்கரை அணியில் நிலைநிறுத்த யுவராஜயும் , சேவாக்கையும் ஃபார்ம் அவுட் செய்ய கவாஸ்கர் செய்த முயற்சிகளையும் , கங்குலி அதற்க்கு வைத்த ஆப்பையும் பற்றி வரும் பதிவுகளில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன் ...

ஒசை said...

சிறப்பான கிரிகெட் வரலாறு.////

தொடர்ந்து ஆதரவளிக்கும் தங்களுக்கு என் நன்றி.

பாலா said...

@MSV Muthu

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@"ராஜா"

நண்பரே இந்திய கிரிக்கெட்டும் அரசியலுக்கு பெயர் போனதுதான். அதை பற்றி எழுத தொடங்கினால், அதுவே தனியாக ஒரு நெடுந்தொடராகி விடும்.

பாலா said...

@ஒசை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

arasan said...

நல்ல பகிர்வு பாலா சார்...
நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன் ..

பாலா said...

@அரசன்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

K.s.s.Rajh said...

//ஒரு பேட்ஸ்மேனாக அவர் என்னை பெரிதும் கவர்ந்தாலும், கேப்டனாக ஜொலிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. "இத்தனை நாள் எங்கே இருந்ததடா இந்த ஆவேசம்?" என்கிற ரீதியில் செயல்படத்தொடங்கினார் கங்குலி.//

நான் உங்கள் இந்த 9வது பதிவை படிக்கவில்லை 10 வது பதிவை படிச்சுட்ட்தான் பார்தன் எங்க 9 காணவிலை என்று இப்பதான் படிக்க முடிந்தது.யுவராஜ்,ஹர்பஜன் சிங்,சகிர்கான்,சேவாக்,இப்படி பல அற்புதமான வீரர்களை இந்திய அணியில் உருவாக்கிய பெருமை கங்குலியையே சாரும்.இதனால் இந்திய கிரிக்கெட்டில் தாதாவை மறக்கமுடியாது இது மறுக்க முடியாத உண்மை.

மாய உலகம் said...

ஆமா கிரிக்கெட்ல சானியாமிர்சா விளையாடுனத பத்தி போடவே இல்ல.. ஒருவேள அது கிறுக்கெட்டா இருக்குமோ!
rajeshnedveera

பாலா said...

@Kss.Rajh

பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதற்கு மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

கல்யாணத்துக்கு முன்னால விளையாடுனாங்களா அப்படின்னு தெரியல. கல்யாணத்துக்கப்புறம், சொய்ப் மாலிக்கோட டெய்லி விளையாடுறதா கேள்வி. கிரிக்கெட்டை சொன்னேன். நன்றி நண்பரே...

Anonymous said...

Thanks for bringing back the memories!

பாலா said...

@பெயரில்லா

Thank you very much

Related Posts Plugin for WordPress, Blogger...