விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 13, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 10


தொடர்ந்து பதிவுகளை படித்து, பின்னூட்டமிட்டும், பின்னூட்டமிடாமலும் ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கும், விடாமல் பின் தொடர்பவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

சட்டையை சுழற்றினார் கங்குலி.... 


இன்றோடு இந்த நிகழ்வு நடந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. 2002இல் இதே ஜூலை 13இல் தான் கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் தன் மேல் சட்டையை கழற்றி சுழற்றினார். கிரிக்கெட் ஆடத்தொடங்கிய காலத்தில் இருந்தே தனக்கென ஒரு தனித்தன்மையும், ஆக்ரோஷமும் கொண்டவராகவே இருந்துள்ளார் கங்குலி. தனது முதல் போட்டியில், "கூல் டிரிங்க்ஸ் பெட்டியை தூக்கமாட்டேன்!" என்று சொன்னதில் இருந்து, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வரை கங்குலியையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடிந்ததில்லை. கங்குலி கேப்டன் பதவியேற்றவுடன் செய்த நல்ல காரியம், தனக்குண்டான அந்த ஆக்ரோஷத்தை மற்ற வீரர்களிடமும் விதைத்ததுதான். அதற்கு முன்பெல்லாம் ஒரு சில இந்திய வீரர்களைத்தவிர மற்றவர்கள் எல்லாம் இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக செயல்பட்டதில்லை. ஆடுகளத்தில் கூட ஒரு வித தயக்கத்துடனே ஆடுவது போல தெரியும். ஆனால் கங்குலி கேப்டன் ஆன பின்னர்தான், இந்திய வீரர்களும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இது பல நேரங்களில் பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.
ஒவ்வொரு கேப்டனுக்குமே தான் விரும்பிய, தனக்கு கீழ்படிந்த ஒரு டீம் அமைய வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அது தற்போது தோனி வரை தொடர்கிறது என்பது தெரிந்ததே. அதே போல தனக்கான ஒரு டீமை மெல்ல உருவாக்கினார் கங்குலி. ஜாகீர்கான், நெஹ்ரா, ஹர்பஜன்சிங், யுவ்ராஜ்சிங், சேவாக் என்று அடுத்த தலைமுறை வீரர்களை இந்தியாவுக்கு அளித்ததில் கங்குலிக்கு பெரும் பங்கு உண்டு. அதுவரை இந்தியா அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெல்வது என்பது அரிதானது. அதனை நிகழ்த்திக்காட்டியவரும் கங்குலிதான். 
மேத்யூ ஹெய்டன்
2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த அத்தனை போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவுக்கு வெற்றிகளைப் பெற்று மெல்ல தரவரிசையில் முன்னேறிக்கொண்டிருந்தது. இதற்கு முந்தைய கால கட்டங்களில் இந்திய அணி தர வரிசையில் 6 அல்லது 7 என்ற இடங்களிலேயே இருந்தது. என்னதான் வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியா என்று வந்தால், இந்திய வீரர்கள் தடுமாறத்தான் செய்தார்கள். அவர்கள் மட்டுமல்ல. எல்லா நாட்டு வீரர்களும் அப்படித்தான் தடுமாறினார்கள். இதை சாதகமாக எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலியா இந்த காலகட்டத்தில் சென்ற இடத்தில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியது. அதில் மிக முக்கியமானது ஆஸ்திரேலியாவின் தொடர் 16 டெஸ்ட் வெற்றிகள். மில்லேனியத்தின் தொடக்கத்தில் இந்தியாவுடனான தொடரில் ஆரம்பித்த சுற்று தொடர்ச்சியாக 15 டெஸ்ட்களில் வந்து நின்றது. "இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவை யாருமே அசைக்கவே முடியாதா?" என்று எல்லோரும் எண்ண தொடங்கினார்கள். 
2001 ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு ஆடவந்தது. இந்த சமயம் எனக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம். பாதி நேரம் படிப்பு, மீதிநேரம் கிரிக்கெட் என்று பொழுது போனது. டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் நம்பிக்கையே இல்லை. "எப்படியும் ஆஸ்திரேலியாகாரன் கப் வாங்கி விடுவான்," என்று சொல்லிக்கொண்டிருந்தோம். முதல் டெஸ்ட் மும்பையில் தொடங்கியது. ஆஸ்திரேலியர்கள் ஒரு கொள்கை வைத்திருந்தார்கள்.  அதாவது ஒரு நாளில் குறைந்தது 300 ரன்களாவது சேர்த்து விட வேண்டும் என்பதுதான் அது. இந்த ஒரு கொள்கையினாலேயே அவர்களால் டிரா நோக்கி செல்லும் ஆட்டங்களை கூட வெல்ல முடிந்தது. இப்போது இந்த கொள்கையை, இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளும் பின்பற்ற தொடங்கி விட்டன. இதை மும்பை டெஸ்டிலும் அவர்கள் செயல்படுத்த, ஆட்டம் அவர்கள் வசமானது. மூன்றே நாளில் போட்டி முடிந்து போனது. ஆஸ்திரேலியா 16ஆவது வெற்றியை பதிவு செய்தது. மீடியாக்கள் இந்தியாவை கிழித்து தோரணம் கட்டின. "மூன்று நாட்களுக்குள் ஒரு ஆட்டம் முடிகிறதென்றால், அது எவ்வளவு கேவலமான விஷயம்?" என்று மானாவாரியாக திட்டினார்கள்.
பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் கங்குலி
சரித்திரப்புகழ் வாய்ந்த அடுத்த போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா தன் ஸ்கோரிங் கொள்கை படி ஆட, 445 குவித்தது. ஹர்பஜன் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவதாக ஆடத்தொடங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியர்களின், நேர்த்தியான பந்து வீச்சுக்கும், வார்த்தை வீச்சுக்கும் பலியாகினர். 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்னும் இரண்டரை நாட்கள் மீதமிருக்க, இந்த போட்டியையும் மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ, இல்லை அவர் நாக்கில் சனி விளையாடியாதோ என்னவோ, ஸ்டீவ் வாக் இந்தியாவை மறுபடியும் விளையாட(ஃபாலோ ஆன்) அழைத்தார். "போச்சு, இந்த முறை இன்னிங்ஸ் தோல்விதான்." என்றே பல இந்தியர்கள் நினைத்திருப்பார்கள். எல்லாம் ஆஸ்திரேலியர்களுக்கு சாதகமாகவே நடந்தது, கங்குலி அவுட் ஆகும் வரை. 232 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகள் என்ற நிலையில் லக்ஷ்மனுடன் கை கோர்த்தார் டிராவிட். சுமார் 110 ஓவர்கள், ஒன்றரை நாட்கள். இரண்டு பேரும் ஆடுகளத்தில் நங்கூரமாக நின்று விட்டார்கள். 


ஆஸ்திரேலியர்கள் என்ன செய்தும் இவ்விருவர்களையும் அசைக்கவே முடியவில்லை. பந்தை ஆஃப் சைடோ, லெக் சைடோ போட்டால் அவசரப்பட்டு அடிக்க கூடாது. நேராக வரும் பந்தை லேசாக தட்டி விட வேண்டும். ஏதாவது ஒரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பு. மற்றபடி எதுவும் செய்ய கூடாது. உண்மையில் இதை தவிர அவர்கள் வேறெதுவுமே செய்யவில்லை. அவர்கள் ஏதாவது செய்ய முற்பட்டால்தானே அவுட் ஆக்க முடியும்? மேலும் டிராவிட் மற்றும் லக்ஷ்மண் இருவருக்கும் ஒரு குணம் உண்டு. எதிரணியினர் என்ன பேசினாலும் காதில் வாங்கி கொள்ளவே மாட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியர்கள் திட்டி திட்டி வெறுத்துப்போனார்கள். முடிவில் இந்திய அணி 657 எடுத்து டிக்ளேர் செய்ய, வெற்றி பெற 384 எடுக்க வேண்டும். கண்டிப்பாக ஆட்டம் டிராவில் முடியப்போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஹர்பஜன் சிங்கின் சூழலில் சிக்கி, ஆஸ்திரேலியா மூழ்கி போனது. ஈடன் கார்டனே ஆர்ப்பரித்தது. ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. போனசாக ஹர்பஜன் ஹாட்ரிக் சாதனை வேறு நிகழ்த்தினார்.


மூன்றாவது டெஸ்ட் சென்னையில் நடந்தது. மிகுந்த நம்பிக்கையோடு ஆடிய இந்திய அணி எளிதில் வென்றது. இப்போட்டியில் ஹர்பஜன் பதினைந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி பாண்டிங்கையும், கில்க்ரிஸ்டையும் எல்லா போட்டிகளிலும் சொல்லி சொல்லி வீழ்த்தினார். இன்று வரை கில்க்றிஸ்ட் ஹர்பஜன் பந்துவீச்சில் திணறி வருகிறார். ஐபிஎல்லில் கூட கில்கிறிஸ்ட் களத்தில் நின்றால் சச்சின் ஹர்பஜனையே பந்து வீச செய்கிறார். இத்தொடரில் பாண்டிங் எடுத்தது மொத்தம் 17 ரன் மட்டுமே. இதன் தொடர்ச்சியாக ஒருநாள் தொடர் நடைபெற்றது. அப்போது நான் பொறியியல் எண்ட்ரன்ஸ் கோச்சிங் வகுப்பில் படித்ததால் ஆட்டங்களை முழுமையாக பார்க்க முடியவில்லை. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மோசமான ஃபார்ம் காரணமாக வெகு நாட்களாக அணியில் உள்ளே வெளியே நடத்திக்கொண்டிருந்த மைக்கேல் ஹெய்டன், இந்த தொடரில் சிறப்பாக ஆடி அணியில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். அதே போல தற்போது எல்லா கேப்டன்களுக்கும் தலைவலியாக இருக்கும் விரேந்தர் சேவாக் இத்தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, விரல் காயத்தால் விலகி விட்டார். அந்த போட்டியில் 58 ரன் எடுத்து, எல்லோருக்கும் பரிச்சயம் ஆனார். 
சேவாக்கின் அதிரடி 

2001 இப்படி சென்று கொண்டிருந்த நேரத்தில், சச்சின் அடிக்கடி காயத்தால் அவதிப்படத்தொடங்கினார். அவர் இல்லாத சமயத்தில் அந்த வாய்ப்பு ஷேவாக்குக்கு அடிக்க, நன்கு பயன்படுத்திக்கொண்டார். 2001 ஆகஸ்டில் இலங்கையில் நடந்த ஒரு தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 68 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இதன் பின் அவர் ஆடிய எல்லா ஆட்டங்களிலும் பொறி பறந்தது. 2002 ஜனவரியில் இந்தியா வந்த இங்கிலாந்து 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது, முதல் முறையாக சச்சினுடன், ஜோடி சேர்ந்து ஆடும் வாய்ப்பை பெற்றார் சேவாக். இருவரும் ஏறக்குறைய ஒரேமாதிரி உருவ ஒற்றுமை இருந்ததால் அனைவரும் ஆச்சர்ய பட்டனர். இந்த தொடரில் சேவாக் இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்து விட்டார். இருந்தாலும் இங்கிலாந்து வீரர்களும் சளைக்காமல் ஆடினார்கள். முடிவில் 3-3 என்ற சம நிலையில் தொடர் முடிந்தது. ஆறாவது போட்டியில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் மார்க்கஸ் டிரெஸ்கோதிக். எனக்கு பிடித்த வீரர்களுள் இவரும் ஒருவர். ஏனோ இவரும் சர்வதேச போட்டிகளில் அதிகநாள் நீடிக்கவில்லை. 

மார்க்கஸ் டிரெஸ்கோதிக்

இங்கிலாந்து அணிக்கு ஒரு புதிய இளம் சக்தியாக நுழைந்தவர் ஆண்ட்ரூ பிளின்டாப். மிக இளம் வயதிலேயே அணிக்குள் வந்தாலும், மிகுந்த போராட்டத்துக்கு பின் அணியில் இடம்பிடித்தவர். சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கி, அடுத்த இயான் பொத்தம் என்று புகழப்பட்டவர். இவருக்கும் கொஞ்சம் துடுக்கு ஜாஸ்தி. இந்தியாவுக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசியது இவர்தான். 3 விக்கெட்டுகள் வீழ்த்தி மயிரிழையில் இந்தியா கோப்பையை நழுவ விட காரணமான இவர், ஆட்டம் முடிந்ததும் என்ன நினைத்தாரோ, தனது சட்டையை கழற்றி தலைக்கு மேலே சுற்றிக்கொண்டே மைதானத்தை சுற்றி ஓடினார். இதை பார்த்த அனைவருக்கும் செமை கடுப்பு. என்னையும் சேர்த்துதான். 

மன்னிப்பு கேட்டார் பிளின்டாப்... அடுத்த பதிவில்உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

27 comments:

சக்தி கல்வி மையம் said...

அந்த கேலரில உட்கார்ந்து மேட்ச் ஜெயித்தவுடன் சட்டையை காலட்டி சுத்துனதை நானும் பார்த்தேன் சகோ..
அன்று ஏன் சந்தொஷத்திக்கு அளவே இல்லை..
நன்றி நினைவுபடுத்தியதத்ற்கு ...

Mohammed Arafath @ AAA said...

உங்க பதிவை எதேச்சையா பார்த்து தொடர்ந்து படித்து வரேன்.என்னோட கிரிக்கெட் வரலாற்றை பார்ப்பது போல இருக்கு.என்ன பாஸ் .. "கங்குலி சட்டையை கழற்றினர்." அந்த பரபரப்பான மேட்ச் பந்தி எழுதுவீங்கன்னு பார்த்த வெறும் பில்ண்டோப்ப் போட ஸ்டாப் பண்ணிடீங்க ???

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அடுத்த பதிவில் அதைப்பற்றி விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன். மறக்கமுடியுமா அந்த ஆட்டத்தை?

நன்றி நண்பரே...

பாலா said...

ரொம்ப நீளமாகி விட்டதால் அடுத்த பதிவில் மீதி கதையை எழுதலாம் என்று முடிவு கட்டினேன்.

வருகைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...

மாலதி said...

நன்றி நினைவுபடுத்தியதத்ற்கு ...

தமிழ் உதயம் said...

கிரிக்கெட் ப்ளாஷ்பேக் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

sivaG said...

sorry to not writing in tamil . Am using mobile to write . 9 varutangalukku munpu ithe Nal thaan england la india finala cup vangunanga... Nalaikku elutharatha innaike eluthiruntha poruthama irunthirukkum...

Manoj said...

FYI , Trescothick himself retired from international cricket.. but till date he is playing for Somerset team in England. Coming friday ( july 15th ) india vs Somerset 3day match is there. for that match somerset trescothick is the captain. Even andrew strauss going to play in that match

பாலா said...

@மாலதி

நன்றிங்க...

பாலா said...

@தமிழ் உதயம்

மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்..

பாலா said...

@sivaG

ஆமாம் நண்பரே... ஆனால் பதிவு ரொம்ப நீளமாகி விட்டதால் அடுத்த பதிவில் எழுதலாம் என்று விட்டு விட்டேன்.

பாலா said...

@Manoj

நானும் பல டொமஸ்டிக் போட்டிகளில் அவரை பார்த்திருக்கிறேன். ஆனாலும் சர்வதேச போட்டிகளில் விளையாடாதது குறைதான்.

Hope said...

The best- Thumbs up. Keep going. Also please don't retire(By stop writing)

K.s.s.Rajh said...

///சரித்திரப்புகழ் வாய்ந்த அடுத்த போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா தன் ஸ்கோரிங் கொள்கை படி ஆட, 445 குவித்தது. ஹர்பஜன் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவதாக ஆடத்தொடங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியர்களின், நேர்த்தியான பந்து வீச்சுக்கும், வார்த்தை வீச்சுக்கும் பலியாகினர். 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்னும் இரண்டரை நாட்கள் மீதமிருக்க, இந்த போட்டியையும் மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ, இல்லை அவர் நாக்கில் சனி விளையாடியாதோ என்னவோ, ஸ்டீவ் வாக் இந்தியாவை மறுபடியும் விளையாட(ஃபாலோ ஆன்) அழைத்தார். "போச்சு, இந்த முறை இன்னிங்ஸ் தோல்விதான்." என்றே பல இந்தியர்கள் நினைத்திருப்பார்கள். எல்லாம் ஆஸ்திரேலியர்களுக்கு சாதகமாகவே நடந்தது, கங்குலி அவுட் ஆகும் வரை. 232 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகள் என்ற நிலையில் லக்ஷ்மனுடன் கை கோர்த்தார் டிராவிட். சுமார் 110 ஓவர்கள், ஒன்றரை நாட்கள். இரண்டு பேரும் ஆடுகளத்தில் நங்கூரமாக நின்று விட்டார்கள்.

ஆஸ்திரேலியர்கள் என்ன செய்தும் இவ்விருவர்களையும் அசைக்கவே முடியவில்லை. பந்தை ஆஃப் சைடோ, லெக் சைடோ போட்டால் அவசரப்பட்டு அடிக்க கூடாது. நேராக வரும் பந்தை லேசாக தட்டி விட வேண்டும். ஏதாவது ஒரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பு. மற்றபடி எதுவும் செய்ய கூடாது. உண்மையில் இதை தவிர அவர்கள் வேறெதுவுமே செய்யவில்லை. அவர்கள் ஏதாவது செய்ய முற்பட்டால்தானே அவுட் ஆக்க முடியும்? மேலும் டிராவிட் மற்றும் லக்ஷ்மண் இருவருக்கும் ஒரு குணம் உண்டு. எதிரணியினர் என்ன பேசினாலும் காதில் வாங்கி கொள்ளவே மாட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியர்கள் திட்டி திட்டி வெறுத்துப்போனார்கள். முடிவில் இந்திய அணி 657 எடுத்து டிக்ளேர் செய்ய, வெற்றி பெற 384 எடுக்க வேண்டும். கண்டிப்பாக ஆட்டம் டிராவில் முடியப்போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஹர்பஜன் சிங்கின் சூழலில் சிக்கி, ஆஸ்திரேலியா மூழ்கி போனது. ஈடன் கார்டனே ஆர்ப்பரித்தது. ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. போனசாக ஹர்பஜன் ஹாட்ரிக் சாதனை வேறு நிகழ்த்தினார்.///

இந்தப்போட்டிக்கு பின் இன்றுவரை அவுஸ்ரேலியாவிற்கு லக்ஸ்மன் வில்லன்தான்.

இந்தப்பதிவைத்தான் எதிர்பார்த்து காத்து இருந்தேன் பாஸ் உண்மையைச்சொன்னால் உங்கள் பதிவின் தலைபை பார்த்ததும் பதிவைகூட முழுமையாக வாசிக்கவில்லை உடனே கருத்துரை கூறுகின்றேன்.ஆனால் கங்குலியின் சட்டையை சுற்றியதைப்பற்றியும் அவரது அட்டகாசமான தலைமைத்துவம் பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் நண்பரே.அடுத்த பதிவில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்கின்றேன்.அந்த அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்போட்டி வெற்றியானது கங்குலியின் சிறந்த தன்நம்பிகை மிக்க தலைமைத்துவத்தின் வெளிப்பாடு.இதை பத்தி நான் ஒரு பதிவு போடலாம் என்று ஆரம்பத்தில் நினைத்து இருந்தேன் ஆனால் உங்கள் தொடர் பதிவை வாசித்தபோது எப்படியும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்துக் கொண்டு இருந்தேன்.மிகவும் நன்றி நண்பரே.

vidivelli said...

வாசிக்கத்தூண்டுகிற விறு விறுப்பான பதிவு....
வாழ்த்துக்கள்..

எனது பக்கம்...
http://sempakam.blogspot.com/

ர.கிருஷ்ணசாமி said...

Great...Continue this way

சென்னை பித்தன் said...

கங்கூலி சட்டையைக் கழற்றிய காட்சியை இன்னும் மறக்கவில்லை!

பாலா said...

@Hope

மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...

பாலா said...

@Kss.Rajh

இந்திய அணியின் வளர்ச்சியின் பெரும் பங்கு கங்குலியினுடையது என்பதில் மாற்று கருத்தே கிடையாது.

நன்றி நண்பரே...

பாலா said...

@vidivelli

வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@ர.கிருஷ்ணசாமி

நன்றி நண்பரே...

பாலா said...

@சென்னை பித்தன்

எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்குமே மறக்க முடியாத தருணம் அது. நன்றி சார்.

ADMIN said...

நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பதால் பதிவை முழுவதும் படித்து முடித்துவிட்டேன்..

பழைய நினைவுகள் மலர்ந்தன..!

அப்படியே இப்பதிவையும் படித்து தங்களின் கருத்துக்களை கூறுங்களேன்..!

இணைப்பு:http://thangampalani.blogspot.com/2011/07/blog-post_4968.html

Riyas said...

கிரிக்கெட் பைத்தியமான எனக்கு உங்கள் பதிவுகள் நல்ல விருந்து.. தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டம் இடமுடிவதிலை., இனி தொடர்ந்து வருகிறேன்,,

பாலா said...

@தங்கம்பழனி

மிக்க நன்றி நண்பரே... வந்து பார்க்கிறேன்.

பாலா said...

@Riyas

மிக்க நன்றி நண்பரே.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

Unknown said...

திருப்பி அடி இல்லையின்னா என்னா விளையாட்டு அது!..பணத்தை ஒதுக்கி வைத்து பார்த்தால் கிரிக்கெட் பலர் நினைப்பது போல் எளிதான ஆட்டம் அல்ல....தன் கோபத்தை திறமையான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்துவதேஅதற்க்கு சான்று...

சர்ச்சையில் சிக்கினாலும் இந்திய அணியை சீறும் சிங்கமாக மாற்றிய பெருமை கங்குலியையே சாரும்... வீரன்னா ஒரு திமிர் இருக்கும் அது கங்குலியிடம் வெளிப்படையா தெரியும் அவ்வளவே...பகிர்வுக்கு நன்றி மாப்ள!

Related Posts Plugin for WordPress, Blogger...