விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 19, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 11


மன்னிப்பு கேட்டார் பிளிண்ட்ஆஃப்

இந்த தொடருக்கு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய பதிவுக்கு தன் பதிவில் லிங்க் கொடுத்த 'எப்பூடி' ஜீவதர்சனுக்கு மனமார்ந்த நன்றிகள். இரண்டு பதிவில் முடித்து விடலாம் என்று நினைத்த இந்த தொடர் இப்போது 11ஆவது பதிவில் வந்து நிற்கிறது. இது முடியும் வரை தங்கள் ஆதரவு தொடரும் என்று விழைகிறேன். 






இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் தொடக்கத்தில் இருந்தே எனக்கு அசாருதீன் மீதும், பிற்காலத்தில் கங்குலி மீதும்தான் அபிமானம் இருந்து வந்தது. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கும்போது சச்சின் அவ்வளவு சிறப்பாக ஆடாதது கூட காரணமாக இருக்கலாம். கங்குலி மீதுள்ள மதிப்பு, அவர் கேப்டன் ஆனதும் பல மடங்கு உயர்ந்து போனதேன்னவோ உண்மை. என்னதான் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டாலும் அவற்றை ஏற்க மனம் மறுக்கிறது. "கங்குலியையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது." என்று முன்பு சொன்னது போல, கங்குலி என்றவுடன் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கு ஞாபகம் வரும் ஒரு நிகழ்வு இருக்கிறது. 


2002ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வந்து தொடரை சமன் செய்த உற்சாகத்தில் தனது மேல் சட்டையை கழற்றி, எல்லோரையும் பிளிண்ட்ஆஃப் கடுப்பேற்றி விட்டு சென்றார். அதே ஆண்டு மத்தியில் இந்தியா, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு தொடர். இந்த தொடரில் இலங்கை வழக்கத்துக்கு மாறாக தடுமாற்றத்துடன் ஆடியது. இதுவரை ஜெயசூர்யாவின் தலைமையில் பல வெற்றிகளை பெற்று வந்த இலங்கை இத்தொடரில் அடைந்த படுதோல்வி, பல இலங்கை ரசிகர்களுக்கு, 2003 உலகக்கோப்பை குறித்த கவலையை ஏற்படுத்தியது. மாறாக, தொடர்ந்து வந்த இந்தியாவின் வெற்றிகள், என்னைபோன்ற இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இந்தியாவும், இங்கிலாந்தும் எளிதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக வருணிக்கப்படும் இந்த இறுதிப்போட்டி லார்ட்ஸில் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து வீரர்கள் நல்ல பார்மில் இருந்ததால், இந்திய பவுலர்களால் அவர்களை வீழ்த்த முடியவில்லை. டிரெஸ்கோதிக், மற்றும் கேப்டன் நாசர் ஹுசைன் (இவர் சென்னையில் பிறந்தவர்) இருவரும் சதமடிக்க, இங்கிலாந்து 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.


இந்த போட்டியில் வென்றால் அது உலகசாதனை. இதற்கு முன்பாக இரண்டாவது பேட் செய்து 316 எடுத்து வெற்றி பெற்ற சாதனையை ஆஸ்திரேலியாவும், இந்தியாவும், பாகிஸ்தானுக்கு எதிராக (கனித்கர் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து காப்பாற்றுவாரே ?) நிகழ்த்தி இருந்தன. ஆக அப்போதைக்கு இது ஒரு எட்டாத கனி. ஆனால் கங்குலியும், சேவாக்கும் ஆடத்தொடங்கியபின் எங்கே எட்டிவிடுமோ?, என்று தோன்றியது. இருவரும் விளாசி தள்ளினர். பதினைந்தாவது ஓவரில் கங்குலி அவுட் ஆகும்போது ஸ்கோர் 106. "நான் அவுட் ஆகும்போது ரொம்ப அப்செட் ஆகிவிட்டேன். ஆனால் சேவாக் இருக்கிறார் என்று நம்பினேன். என் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சேவாக் அடுத்த ஓவரிலேயே ஒரு மோசமான ஷாட் அடித்து அவுட் ஆனார். அப்போது பயிற்ச்சியாளர் ஜான் ரைட் அடைந்த கோபத்துக்கு அளவே இல்லை." என்று கங்குலி சொன்னார். அந்த நேரத்தில் என்னதான் சேவாக் அதிரடியாக ஆடினாலும், அவரது மோசமான ஷாட் செலக்சன் மிக பிரசித்தம். எந்த ஷாட் ஆடக்கூடாது என்று அவருக்கு சொல்லி அனுப்பப்பட்டதோ அதே ஷாட் ஆடி அவுட் ஆகி வருவது வாடிக்கை. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தவுடன், ஸ்கோரிங் ரேட் பாதிக்கத்தான் செய்யும். ஆனால் பின்னால் வந்த வீரர்கள் அப்படி நிகழாமல் பார்த்துக்கொண்டனர்.


ஆனால் விக்கெட்டுகள் வீழ்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. மோங்கியா வந்த வேகத்தில் வெளியேற, டிராவிட்டும் நடையை கட்டினார். ஒரே நம்பிக்கை சச்சின் என்று நம்பி இருந்த நேரத்தில் அவரும் அவுட் ஆக, ஸ்கோர் 24 ஓவரில் 146க்கு 5 விக்கெட்டுகள். அனுபவம் மிக்க வீரேர்களோ, அடுத்து பேட்ஸ்மேன்களோ இல்லாத நிலையில், தன் இருப்பை உறுதி செய்து கொள்ளும் நோக்கத்தில் இருந்த யுவராஜும், அணிக்கு புதிதாய் வந்து சேர்ந்த முகமது கைஃபும் ஜோடி சேர்ந்தார்கள். இங்கிலாந்து வீரர்கள் ஏளனத்துடன் பந்து வீச தொடங்கினார்கள். இருவரும் ஏற்கனவே ஒன்றாக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடி, இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்தவர்கள். அப்போது கைஃப் கேப்டன். ஆகவே மிக கவனமாக, அதே நேரம் துரிதமாக ரன் சேர்க்க தொடங்கினர். பொதுவாக சச்சின் அவுட் ஆனவுடன் பெரும்பாலானோர் டிவியை ஆஃப் செய்துவிட்டு போய் விடுவர். என்னை போல ஒரு சிலர்தான், இந்தியா தோற்றாலும் கதற, கதற இறுதி நொடி வரை ஆட்டங்களை பார்ப்போம். 


கொஞ்ச நேரத்தில் இந்தியாவின் கை ஒங்க தொடங்கியது. 42ஆவது ஓவரில் யுவராஜ் (69) அவுட் ஆகும்போது ஸ்கோர் 267. யுவராஜ் முகத்தில், "அணியை கடைசிவரை காப்பாற்ற முடியவில்லையே!" என்ற கவலை தெரிந்தது. ஆனால் அவருக்கு ஒட்டு மொத்த மைதானமே எழுந்து கைதட்டி மரியாதை செய்தது. பிறகு வந்த ஹர்பஜன் கொஞ்சம் வான வெடிக்க காட்ட, பரபரப்பான கடைசி நொடிகள், நகங்கள்,கடிக்க வைத்து, சீட் நுனிக்கு நகர்த்தி, கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற்று ஒரு புதிய உலகசாதனையை படைத்தது. நம்பிக்கை உடைய இரண்டு புதிய இளைஞர்கள் நிகழ்த்திக்காட்டிய சாதனை அது. இந்தியா 2003 உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆணித்தரமாக பதிந்தது.  இந்த வெற்றி தந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தோம். 


திடீரென கேமரா பெவிலியனை நோக்கி திரும்ப, கங்குலி, ஆவேசமாக தான் மேல்சட்டையை கழற்றி தலைக்குமேல் சுற்றினார். "எங்கள் மும்பையில் நீ செய்ததற்கு, பழிக்கு பழியாக, உங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் நான் செய்கிறேன் பார்." என்று சொல்வது போல இருந்தது. அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயமாக ஆனது.கிட்டத்தட்ட பதிவுலகம் மாதிரி, பல கிரிக்கெட் வித்தகர்கள் இதனை கண்டித்தார்கள், ஆதரித்தார்கள், வேடிக்கை பார்த்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் ரசிகர்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான். "நீயும் செய்தாய். நானும் செய்தேன். முடிந்தால் எங்களை தோற்கடி." இது குறித்து ஒரு கிரிக்கெட் விமர்சகர் கூறும்போது, "கடந்த பத்தாண்டுகளில், தானாக போய், மேட்ச் ரெப்ரீயிடம் அதிகமுறை முறையிட்ட வீரர் கங்குலிதான். அவரைப்பொறுத்தவரை ஆஸ்திரேலியர்கள் மாதிரி ஆக வேண்டுமென்று அவர் நினைத்ததில்லை. அவர்களை விட ஒருபடி மேலே சென்று தோற்கடிக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்ற வேண்டும். இதுதான் அவர் ஆசை. கங்குலி மற்றும் அர்ஜுனா ரணதுங்கா இருவருக்கும் ஒரு பொது குணம் உண்டு. அவர்கள் யார் மாதிரியும் இருக்க விரும்புவதில்லை. தனக்கென்று ஒரு தனி பாதை அமைத்து, ஜெயித்து காட்டியவர்கள்." 


உணர்ச்சி வேகத்தில் செய்யும் தவறுகள் பிற்காலத்தில்தான் உணரப்படுகின்றன. இது குறித்து, கங்குலி, மற்றும் பிளிண்ட்ஆஃப் இருவரும் கூறியது.... 

பிளிண்ட்ஆஃப்
"நான் அதை செய்திருக்க கூடாது. எங்கள் அணி ஜெயித்த அந்த தருணத்தில் நிகழ்ந்த மாபெரும் தவறு அது. I was carried away by the moment.மும்பை ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை... Sorry..." 


கங்குலி 
"இப்போது நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது. I was carried away by the moment. நான் அதை செய்திருக்க கூடாது, லங்காஷைர் அணியுடனான கசப்பான அனுபவங்கள், இங்கிலாந்து மீடியாக்களின் கிண்டல்கள், மும்பையில் பிளிண்ட்ஆஃப்பின் செயல் ஆகியவை அப்படி செய்வதற்கு காரணமாகி விட்டன. இப்போது திரும்பி பார்க்கும்போது அப்படி செய்திருக்க கூடாதுதான்." 

இரண்டு பேரும் சொல்லி வைத்தாற்போல ஒரே வார்த்தைகளை சொல்லி இருக்கிறார்கள். இந்த மாதிரி நிறைய சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் கங்குலி மீது வரத்தொடங்கின. உதாரணமாக சச்சினை கீழ்தரமாக நடத்துகிறார் (பெரும்பாலும் இப்படி சொல்பவர் கவாஸ்கராகத்தான் இருப்பார்), நடிகை நக்மாவுடன் தொடர்பு என்று. எப்போதுமே கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் ஒரு கசமுசா இருந்து கொண்டே இருக்கும், அல்லது பத்திரிக்கைகளால் ஏற்படுத்தப்படும். தோனி-லட்சுமிராய், யுவராஜ்-தீபிகா வரை இது பிரசித்தம். அதற்கு கங்குலியும் தப்பவில்லை. 


சச்சின் vs கங்குலி, 2003 உலகக்கோப்பை.... அடுத்த பதிவில் 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

27 comments:

ம.தி.சுதா said...

இப்ப எங்கப்பா கிரிக்கேட் பார்க்க முடியுது ஹைலைட் பார்ப்பதே அரிதாப் போச்சு...

Anonymous said...

////அணிக்கு புதிதாய் வந்து சேர்ந்த முகமது கைஃபும் ஜோடி சேர்ந்தார்கள். இங்கிலாந்து வீரர்கள் ஏளனத்துடன் பந்து வீச தொடங்கினார்கள். இருவரும் ஏற்கனவே ஒன்றாக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடி, இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்தவர்கள். அப்போது கைஃப் கேப்டன். /// கைஃப் எதிர்காலத்தில் ஒரு சிறந்த டெஸ்ட் பிளேயராய் வருவார் என்று எதிர்பார்த்தேன்.

பாலா said...

@♔ம.தி.சுதா♔

நீங்க சொல்வதும் கரெக்ட்தான். Too Much of Cricket, என்பதன் விளைவே அது.

நன்றி நண்பரே...

பாலா said...

@கந்தசாமி.

இந்த ஒரு ஆட்டத்தை வைத்தே அவருக்கு பல போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாது. அதனை அவர் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வணக்கம் பாலா...

கிரிக்கொட் குறித்து அதிக ஆர்மில்லாததால் தான் அடிக்கடி வரமுடியவில்லை..

தப்பாக நினைக்காதீர்கள்...

தங்கள் பணி தொட்ர வாழ்த்துக்கள்...

Madhavan Srinivasagopalan said...

நல்ல நினைவுகள்

பாலா said...

@
# கவிதை வீதி # சௌந்தர்


அய்யய்யோ, நீங்க வேற, உங்களுக்கு ஆர்வம் இல்லாத விஷயத்தை படிக்காமல் விடுவதில் தப்பெதும் இல்லை. அதை நான் தப்பாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். நன்றி நண்பரே.

பாலா said...

@Madhavan Srinivasagopalan

நன்றி நண்பரே...

K.s.s.Rajh said...

யுவராஜ் சிங் பலமுறை இந்திய அணியை இப்படி காப்பாற்றியுள்ளார் அது இன்றுவரை தொடர்கின்றது குறிப்பிட்டு சொன்னால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட்போட்டியில் முன்னனி வீரர்கள் எல்லாம் ஆட்டம் இழந்த போது தனி நபராக போராடி 122 ஒட்டங்களைப்பெற்று இந்திய அணியைக்காப்பாற்றினார் அந்தபோட்டி கிரேக் சப்பல் உடனான பிரச்சனைக்கு பின் கங்குலியை அணியைவிட்டு நீக்கிய பிறகு ரசிகர்களின் ஆர்பாட்டங்களின் பிறகு கங்குலி அணியில் சேர்க்கப்பட்ட பின் நடை பெற்ற போட்டி.கங்குலி துடுப்பாட்டத்தில் அருமையான ஒத்துழைப்பை யுவராஜ் சிங்கிற்கு வழங்கி இருப்பார்.பின் கங்குலி ஆட்டம் இழந்தபின்னும் யுவராஜ் அருமையாக ஆடி சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.
யுவராஜ் எதிர்காலத்தில் கங்குலியைப்போலவே இந்திய அணித்தலைவராக கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அவர் கங்குலியைப்போல ஒரு ஆக்ரோசமான வீரர்.ஆனால் இடையில் டோனி என்ற வீரரின் அதிரடி அறிமுகத்தால் அது நடக்காமல் போய்விட்டது.
கைஃப் ஒரு அருமையான கிரிக்கெட் வீரர் இடையில் பிரகாசிக்க முடியாமல் போனது வருந்தக்க விடயம்.இந்திய அணிக்கு எத்தனை கேப்டன்கள் வந்தாலும் அவர்கள் கங்குலிக்கு ஈடாக மாட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

K.s.s.Rajh said...

கங்குலி சட்டையைக்கழட்டிய இந்தபோட்டியில்.நாசர் ஹுசைன் தான் சதம் அடித்ததும் ஒரு ஆக்ரோசமான பார்வைபார்ப்பார்.நான் அப்பவே நினைச்சன் நம்ம தாதா எதும் பதிலடி கொடுப்பார் என்று.அதேமாதிரி இந்தியா வென்றதும் தாதா சட்டையைக் கழற்றி சுற்றினார்.அப்போது எல்லாம் கங்குலிக்காகவே இந்திய அணிவிளையாடும் போட்டிகளை நான் பார்பது வழக்கம்.

கிரி said...

உண்மையாகவே மறக்க முடியாத போட்டி இது.. இன்று வரை பதுமையாக மனதில் இருக்கிறது. கங்குலியின் இறங்கி வந்து அடிக்கும் சிக்ஸர் ஷாட்டை ரொம்ப ரசிப்பேன்.. இது நான் மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

ஒரு முறை சச்சினும் கங்குலியும் (எந்த போட்டி என்று மறந்து விட்டது) வெளுத்து வாங்கியதை நினைத்தால் ..அதைப்போல காலங்கள் மறுபடியும் வராது என்பதை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது.

உங்க தொடர் கலக்கலாக இருக்கிறது. ஜீவதர்ஷன் தான் கிரிக்கெட் மீது ரொம்ப ஆர்வமாக பதிவுகள் எழுதுவார்.. அதே போல நீங்களும்.

பாலா said...

@Kss.Rajh

நீங்கள் சொல்வதுபோல யுவராஜ் சிங் ஒரு மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரது அடங்காத்தன்மை, ஒத்துழையாமை ஆகியவை அவர் மீது ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தி விட்டது. இல்லை என்றால் கண்டிப்பாக அவர்தான் கேப்டன் ஆகி இருப்பார்.

கருத்துக்களுக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@கிரி

யாராலுமே அவ்வளவு எளிதாக மறக்க முடியாத போட்டி இது. சச்சின் மற்றும் கங்குலி ஒரு போட்டியில் இல்லை, பல போட்டிகளில் விளாசி இருக்கிறார்கள். ஒரு சாதாரண ரசிகனாகவே என் கருத்துக்களை பதிவு செய்கிறேன் நண்பரே... தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

எப்பூடி.. said...

நீங்கள் குறிப்பிட்ட நெட் வெஸ்ட் எனக்கும் மறக்க முடியாத போட்டி, அந்த தொடரின் மூன்றாவது அணி இலங்கை. அப்போது நான் இலங்கையின் அதி தீவிர ரசிகன். ஜெயசூர்யா தலைமையில் முதல் முதலில் இந்தியா விளையாடும் போட்டி தொடரில் இலங்கை இறுதிபோட்டிக்கு தகுதிபெறாத முதல்தொடர் அது. இந்தியாவுடன் ஓரிரு போட்டிகளில் ஜெயசூர்யா தலைமயில் தோற்றாலும் அதுவரை இந்தியா எந்த தொடரையும் இலங்கையிடமிருந்து ஜெயிக்கவில்லை. ஆனால் இந்த தொடரில் மூன்று போட்டிகளில்லும் இலங்கை இந்தியாவிடம் தோல்வி, அதனால் இந்தியாமீதிருந்த கடுப்பில் :-) இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு சப்போட் பண்ணி, 146 ஓட்டங்களுக்குள் 5 விக்கட் போனவுடன் நின்மதியாக இருந்துவிட்டு, பின்னர் இந்தியா ஜெயித்தவுடன் தூக்கம் கெட்ட நாளது.

இந்தப் போட்டியில் முதல் முதலாக நசார் ஹுசைன் தனது சட்டை இலக்கத்தை (3) மாற்றினார், இந்தப் போட்டியில் அவர் பெற்றதுதான் அவரது முதல் மற்றும் ஒரே சதம். இந்த போட்டி தோல்விக்கும் ஹுசைனின் தலைமைத்துவம் முக்கிய காரணம், இவரது bowling change மிக மிக மோசமாக இருந்தது அன்று விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் கைப், யுவராஜ் ஜோடி போட்டியை தம் கைகளுக்கு எடுத்துக்கொண்டது அசாத்திய திறமை. அன்று தோல்விகளை ஏற்கும் பக்குவம் இருக்கவில்லை, இப்போது நிறைய மாற்றம். இப்பவெல்லாம் பக்குவப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன் :-)

எனக்கு எதுக்கிங்க நன்றி? உங்க இன்ஸ்பிறேசனில் எழுதுவதால் உங்கள் பதிவின் இணைப்பை கொடுத்திருந்தேன், அவளவுதான்.

Riyas said...

good as usual..

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான தகவல்களுக்கு நன்றி நண்பரே..

பாலா said...

@எப்பூடி..

எனக்கும் அந்த காலகட்டங்களின் போட்டிகளில் தோற்றால் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். தூக்கமே வராது. தற்போது பக்குவபட்டுவிட்டேன். இந்த தொடரில் இருந்தே ஜெயசூரியாவின் வீழ்ச்சி தொடங்குகியதென்று நினைக்கிறேன்.

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@Riyas

Thank You very much

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே...

சென்னை பித்தன் said...

பழைய சுவாரஸ்யங்களை நினைவு கூர்வதே ஒரு சுகம்தான்!நன்றி பாலா!

Unknown said...

எப்பூடி கூறியதை போன்று அந்தப்போட்டி மறக்கமுடியாத போட்டி...இந்தியா தொற்றுவிட்டதேன்றே இருந்தோம்..அப்போது ஜூவராஜ் கைப் சிறுவர்கள் தானே..இவர்கள் எங்கே என்று!!ஆனால் நடந்தது வேறு!!செம பரபரப்பான போட்டி அது!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கிரிக்கெட் தொடரை நான் கவனிக்க வில்லை. இனி தொடர்கிறேன்.

பாலா said...

@சென்னை பித்தன்

வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@மைந்தன் சிவா

முன்பே சொன்னது போல இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆட்டம் அது. நன்றி நண்பரே...

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

மிக்க நன்றி நண்பரே...

calmmen said...

excellent writting

பாலா said...

@karurkirukkan

Thank you Very much

Related Posts Plugin for WordPress, Blogger...