வெகுநாட்களுக்கு முன்னால் இந்த தொடரை எழுதத்தொடங்கினேன். பிறகு சில காரணங்களால் எழுத முடியாமலேயே போய் விட்டது. இனி தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கலாம்.
கனவுக்கன்னி - 1 படிக்காதவர்கள் இங்கே சென்று படியுங்கள்....
1950களின் இறுதி.....
1950களின் இறுதியிலும் டிஆர் ராஜகுமாரியே தென்னிந்திய திரையுலகை கட்டிப்போட்டிருந்தார். ஆனாலும் அடுத்தடுத்து தமிழ் திரையுலகில் சரித்திரம் படைத்த கதாநாயகிகள் அறிமுகமாகியபடி இருந்தனர். அஞ்சலிதேவி, சாவித்திரி, பானுமதி என்று பல நடிகைகள் திரையுலகில் நுழைந்தார்கள். ஆனால் அனைவருமே கவர்ச்சியாக நடிக்க முன்வரவில்லை. இந்த நேரத்தில் 'திருவாங்கூர் சகோதரிகள்' என்றழைக்கப்பட்ட லலிதா, பத்மினி மற்றும் ராகினி ஆகிய மூவரும் அறிமுகம் ஆகினார். அதுவரை பல நடன நங்கைகளை திரையுலகம் கண்டிருந்தாலும், இவர்களின் நடனம் எல்லோரையும் கட்டிப்போட்டது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக பத்மினி கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா முன்னணி நடிகர்களோடும் நடித்து விட்டார். மூன்று பேரில் லலிதா மட்டும் கொஞ்சம் கவர்ச்சிப்பக்கம் திரும்பினாலும் அவ்வளவாக ஜொலிக்க முடியவில்லை. இவர் வில்லியாக நடித்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில், மது மயக்கத்தில் பாடும், "உன்னைக்கண் தேடுதே" பாடல் இன்றளவும் பிரபலம். ஆனால் தொடர்ந்து இவரால் நடிக்க முடியவில்லை. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த ஒரு நடிகை இருக்கிறார். இவர்கள் தென்னிந்தியாவை நடனத்தால் கட்டிப்போட்டனர் என்றால், அவரோ ஒட்டுமொத்த இந்தியாவையுமே தன்னுடைய நடனத்தால் மயக்கியவர்
பெரும்பாலான நடிகைகள் தென்னிந்திய அளவில் மிகப்பிரபலம் ஆனாலும், அகில இந்திய ரீதியில் அப்போது யாருமே மிளிர முடியவில்லை. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வெற்றி கண்ட அந்த அழகிய நடிகையின் பெயர் வைஜெயந்தி மாலா. இவர்தான் பிற்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் உலகத்துக்குள் கால் பதித்த ஹேமாமாலினி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு முன்னோடி என்று கூறப்படுகிறது. ஒரு நடிகைக்கு நடிப்பு திறமைக்கு அடுத்தபடியாக என்னென்ன திறமைகள் இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதில் எல்லாம் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். பாரம்பரிய நடனமும் ஆடுவார், வெஸ்டர்ன் நடனமும் ஆடுவார். அருமையாகப் பாடுவார். இவை அனைத்துக்கும் மேலாக அசாத்திய தைரியம் கொண்டவர். எந்தவித உடைகளையும் தயக்கமின்றி அணிந்து அனைவரையும் மிரள செய்தவர். கவர்ச்சியான உடைகளை எல்லோராலும் அணிந்து விட முடியும். ஆனால் ஒரு சிலருக்கே அது முகம் சுளிக்க வைக்காத வகையில் பொருந்தும். அந்த வகையில்
வைஜெயந்தி மாலாவுக்கு எல்லா உடைகளுமே அழகாக இருந்ததே ஒழிய ஆபாசமாக இருந்ததில்லை. தற்கால நடிகைகளுள் சிம்ரன் அந்த வரம் வாய்க்கப்பெற்றவர்.
வைஜெயந்தி மாலாவை பொறுத்தவரை அவர் பெரும்பாலும் ஹிந்தி படங்களிலேயே அதிகம் நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஐம்பதுகளில் அவர் மொத்தம் மூன்றே மூன்று தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். குழந்தைப்பருவத்தில் இருந்தே நடனத்தில் ஆர்வம் காட்டிவந்த
வைஜெயந்தி மாலா, பல்வேறு நாடுகளில், பல மேடைகளில் தோன்றி நடனமாடி இருக்கிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஆடும்போது எம் வீ ராமன் என்ற இயக்குனரின் கண்ணில் பட்டார். பெரும் போராட்டத்துக்குபின் அவரது வீட்டில் நடிக்க சம்மதம் தெரிவிக்க, 1949இல் அவரது நடிப்பு பயணம் தொடங்கியது. 1950இல் அவர் நடித்த 'வாழ்க்கை' திரைப்படம் மெகா ஹிட் ஆகி இந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் வெற்றிபெற்றது. பாலிவுட் வைஜெயந்தி மாலாவிற்கு கம்பளம் விரித்து வரவேற்றது. இதன் விளைவாக தமிழ் படங்களில் அவரது பங்களிப்பு குறைந்து போனது.
அப்போதைய சூப்பர் ஸ்டாரான திலீப் குமாரோடு அவர் ஜோடி சேர்ந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக தேவதாஸ் படம் பிளாக்பஸ்டர் ஆனது. 1959இல் தமிழ் திரை உலகை திரும்பி பார்த்த அவர், கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோலில் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. அதிலும், இவர் பத்மினியோடு நடனத்தில் போட்டி போட்டு நடித்த, "கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே...", பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என்று சொல்ல தேவை இல்லை. இவர்கள் இருவருமே நடனத்தில் சிறந்து விளங்கியவர்கள். இருவரும் ஒரு போட்டிப்பாடலில் பங்கேற்றால் எல்லாரும் என்ன சொல்வார்கள்? அதையே தான் அந்த படத்தில் பிஎஸ் வீரப்பா சொல்வார். "சபாஷ் சரியான போட்டி" என்று.
அதன் பிறகு கொஞ்சம் தமிழ் படங்களில் நடித்தாலும் இவரது கவனம் முழுவதும் ஹிந்தி உலகையே ஆக்கிரமித்திருந்தது. 60களில் இவர் நடித்த படங்களுள் ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த தேன் நிலவு இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனால் 63இல் இவர் நடித்த சித்தூர் ராணி பத்மினி படம் படுதோல்வி அடைந்து இவரது தமிழ் திரையுலக பயணத்தை முடித்து வைத்தது. இருந்தாலும் ஹிந்தி உலகில் இவர் அசைக்க முடியாத நாயகியாக வலம்வந்தார். 1960ஆம் ஆண்டு சூட்டிங் தொடங்கிய ராஜ்கபூரின் சங்கம் என்ற திரைப்படம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து 1964ஆம் ஆண்டு வெளிவந்து வசூல் சாதனை படைத்தது. முதன் முதலாக கனவுப்பாடல்களை வெளிநாட்டு லொகேஷன்களில் படமாக்கும் முறையை அறிமுகப்படுத்தியது இந்தப்படம்தான். இது போல பல வசூல் சாதனைப்படங்களில் நடித்து வந்த
வைஜெயந்தி மாலா, 60களின் இறுதியில் மெல்ல மெல்ல திரை உலகை விட்டு விலகத்தொடங்கினார். அதன் பிறகு அரசியலில் கால் பதித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
உச்சத்தில் இருந்த காலத்தில், திலீப் குமாரோடு, பிரபுதேவா நயன்தாரா ரேஞ்சுக்கு இணைத்து பேசப்பட்டவர். திலீப் குமாரின் மூன்றாவது மனைவி என்று வெளிப்படையாகவே பத்திரிக்கைகள் எழுதின. அதே போல ராஜ்கபூரோடு சங்கம் பட ஷூட்டிங்கில் இருந்த அந்த நான்கு ஆண்டுகள் அவர்கள் இருவரும் தனியே குடும்பம் நடத்துகிறார்கள் என்றும் எழுதின. ஒரு கட்டத்தில் ராஜ்கபூரின் மனைவி கோபித்துக்கொண்டு தனியே வசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. இவற்றை எல்லாம் வழக்கம்போல மறுக்கவே செய்தார். பொதுவாக தமிழ் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத
வைஜெயந்தி மாலா, பாலிவுட்டில் கொஞ்சம் தாராளமாகவே நடித்தார். அதிலும் ராஜ் கபூர் பற்றி சொல்லவே வேண்டாம்.சங்கம் படத்தில் பிகினி உடையிலும் தோன்றி மிரட்டினார். இந்த படத்தில் ராஜ்கபூரோடு பனியில் கட்டி புரளும் காட்சி மிகவும் பிரபலம். டிஆர் ராஜகுமாரிக்கு அடுத்த படியாக நடிப்பிலும், கவர்ச்சியிலும் அசத்திய இந்த கியூட் நடிகை கனவுக்கன்னி மட்டுமல்ல நிச்சயம் கவர்ச்சிக் கன்னியும்தான் . அவரது அழக்குக்கும் கவர்ச்சிக்கும் இந்த பாடல் ஒரு சின்ன சாம்பிள்....
-தொடரும்
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
35 comments:
நல்ல தொகுப்பு சார்...
அந்தக் காலத்தில் பல பேரின் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரி பற்றி...
" அவரின் கண்களே கவருமே... மயக்குமே... கவி பாடுமே... etc" என்று சொல்வார்கள். (இவருக்கு அடுத்து, இறந்த சில்க் ஸ்மிதா)
அந்தக்கால நடிகைகளோடு இந்தக்கால நடிகைகளையும் ஒப்பிட்டது சிறப்பு.
நன்றி
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
ஆஹா தெரியாத பல விஷயங்கள் தெரிய வருகிறது சுவாரஸ்யமாக இருக்கிறது....!
அதிசய தகவல்கலந்து சிறப்பான பதிவு !!
"உன்னைக்கண் தேடுதே" விக்கல் ஸ்பெசல் பாடல்...மறக்க முடியாதது.
அழகான தேடல் பதிவு நிறைய தகவல்களை உள்வாங்கி தந்திருக்கிறீர்கள் சார்
பகிர்வுக்கு நன்றி
தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி
நல்ல தொகுப்பு ரசித்தேன்.....
செம்ம ஆர்வமா இருக்கு சார்..அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்..
அந்த காலத்து கனவு கன்னிகளை தெரிந்துக்கொள்வது சுவாரஸ்யம்தானு..நிரூபிச்சுட்டீங்க.நன்றி.
எவ்வளவு தகவல்களை நீங்கள் சேகரிச்சு இந்த பதிவை தயார் செய்து இருக்கீங்க என்று தெரிகின்றது ...
உங்களின் இந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் என் நன்றிகள் தலைவரே
வைஜெயந்தி மாலாவை பற்றி நிறைய தெரியாது விஷயங்கள் எழுதி இருக்கீங்க..
நல்லா இருக்கு பாஸ்..
வாழ்த்துக்கள்
நல்ல தொகுப்பு .நன்றி
@MANO நாஞ்சில் மனோ
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
@தனிமரம்
மிக்க நன்றி நண்பரே
@கலாகுமரன்
உண்மைதான். அந்தக்காலத்திலேயே ரொம்ப வித்தியாசமாக அமைக்கப்பட்ட பாடல். நன்றி நண்பரே
@சிட்டுக்குருவி
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
@மனசாட்சி™
கருத்துக்கு நன்றி நண்பரே
@எஸ்தர் சபி
நன்றி சகோ
@Kumaran
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே
@அரசன் சே
உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
@Doha Talkies
உங்க கருத்துக்கு நன்றி பாஸ்
@Gnanam Sekar
நன்றி நண்பரே
பதிவு ரசிக்க வைத்தன பாலா. வைஜெயந்திமாலா நிஜமான அழகி. இப்போது எப்படி இருக்கின்றார் என்கிற புகைப்படத்தையும் போட்டிருக்கலாம். முகம் நினைவிலேயே இல்லை. அன்றும் இன்றும் என.!
ஆமாம், ஏன் இந்த லிஸ்டில், சரோஜாதேவி வரவில்லை? பானுமதி கூட இருக்காங்க..:(
என் கணவர் சொல்வார், சரோஜாதேவியால், அவரின் அம்மா அப்பாவிற்கு அடிக்கடி சண்டை வருமாம்.! சரோஜாதேவி நடித்தால், வேலைக்கு லீவு போட்டுவிட்டு படம் பார்க்கச்செல்வாராம் மாமா. அவருடைய புகைப் படத்தைத் தலையணையின் கீழ் வைத்துக் கொண்டு தூங்குவாராம். யாரிடம் பேசினாலும் சரோஜாதேவியைப் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டாராம். இப்படிப்பட்ட ஒரு நடிகையை, கனவுக்கன்னி லிஸ்டில் ஏன் சேர்க்கவில்லை. தென்னகத்து மர்லின் மன்றோ’வாம் அவர் ஒரு காலத்தில்.? பாலா ஆய்வு செய்யுங்கள்.! :)
பாலா, தலைப்பு 15+ ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ - ஒண்ணுமில்லாததிற்கே இவ்வளவு கெடுபிடியான ரூல்ஸ்..
@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
நடிகைகள் லிஸ்ட் என்றால் அது மிகப்பெரியதாக வரும் மேடம். நான் நடிகைகளிலேயே கொஞ்சம் கவர்ச்சியாக நடித்தவர்களைப்பற்றியே இங்கே பகிரலாம் என்று நினைத்தேன்.
இதில் பகிர்ந்திருக்கும் படங்களுக்கே அந்த ரூல்ஸ். நமக்கும் பொறுப்பு இருக்கே மேடம்?
உங்க கருத்துக்கு நன்றி மேடம்.
நடிகைகள் பற்றிய தங்களின் தொகுப்பு ஓகே பாஸ் ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்குமே இப் பதிவு எழுத வாழ்த்துக்கள் பாலா தொடருங்கள்
உங்கள் விருப்பத்தை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள்
http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html
வணக்கம்.இதில் எதுவுமே தெரியாத முகங்கள்.ஆகால் அறிந்து கொண்டமை மகிழ்ச்சி!!!!!சந்திப்போம்.
மயங்காதிரு என் மனமே..!!!!
மிகவும் சிறப்பாக பழமைவாய்ந்த திரைப்பட கலைஞ்சர்களை அலசி இருக்கிறீர்கள் இதில் பலரைப் பற்றி எனக்கு உண்மையில் தெரியாது என்றாலும் தங்களது சிறந்த நடிப்பால் தமிழ மக்களை தங்களது நடிப்பால் கட்டிப் போட்டவர்கள் இடுகை சிறப்பு பாராட்டுகள் ....
@r.v.saravanan
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
@சீனு
உங்கள் அழைப்புக்கு நன்றி நண்பரே. எனக்கு அவ்வளவு திறமை இல்லாததாலும், பதிவுலகில் அடிக்கடி தலை காட்டாததாலும் இந்த விஷயத்தில் நான் பார்வையாளனாகவே இருக்கிறேன். நன்றி நண்பரே
@Athisaya
உங்கள் கருத்துக்கு நன்றி
@மாலதி
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றி சகோ
தெரிந்தும் தெரியாத தகவல்கள்!
இதுக்கெல்லாம் 15 + கொஞ்சம் அதிகமா தெரியுதே!
அந்த கவர்ச்சிக்குபின்னால் அவர்கள் படுகிற சிரமங்கள் இருக்கிறதே?,,,,,,,,,
Post a Comment