விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 2, 2011

தெரியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது?

ரொம்ப நாளாக ஹாலிவுட் படங்கள் அதிகமாக பார்க்காததால், அந்த படங்களை பற்றி எழுதாமல் இருந்தேன். நேற்று நான் பார்த்த படம் என்னை மிகவும் கவர்ந்ததால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஹாலிவுட் பட ரசிகர்களிடம், "உங்களுக்கு மிகவும் பிடித்த த்ரில்லர் எது?" என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்வது சைக்கோ என்ற படம்தான். ஐம்பதுகளில் வந்தாலும் இன்னும் அது பேசப்படுவது அந்த படத்தின் சிறப்பு. ஆனால் நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலானவர்களைப்போல எனக்கும் கருப்பு வெள்ளை படம் என்றால் கொஞ்சம் ஈடுபாடு குறைந்து விடுகிறது. ஆனால் எதேச்சையாக ஆல்ஃபிரட் ஹிச்காக் (Alfred Hitchcock) பற்றி படிக்க நேர்ந்தது. "சரி அப்படி மனிதர் என்னதான் படமெடுத்திருக்கிறார் பார்த்து விடுவோம்.", என்று அவரது படங்களை தரவிறக்க தொடங்கினேன். சைக்கோ பற்றி தெரிந்திருந்தாலும், முதலில் அதை பார்க்க விரும்பவில்லை. "இதுவரை கேள்விப்படாத ஒரு படத்தை எடுத்து பார்ப்போம் அப்போதுதான் எந்த முடிவும் செய்து கொள்ளாமல் ரசிக்க முடியும்.", என்று நான் தேடிப்பிடித்து பார்த்த படம் என்னை வியக்க வைத்தது. அதுதான் தி ராங் மேன் (The Wrong Man - 1956) 



நீங்கள் ஒரு சராசரி குடும்பத்தலைவன். எந்த வம்புதும்புக்கும் போகாதவர். குடும்ப செலவுகளுக்கே பணம் போதாமல் திண்டாடுபவர். கடவுள் புண்ணியத்தில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று ஒருநாள் நீங்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது, வீட்டு வாசலில் போலீஸ் நிற்கிறது. மனைவியிடம் கூட எதுவும் சொல்ல விடாமல், உங்களை அப்படியே போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விடுகிறார்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகிறது. நீங்களும் எதையும் மறைக்காமல் உண்மைகளை சொல்கிறீர்கள். கொஞ்ச நேரம் கழித்து, போலீஸ் அதிகாரிகள், உங்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுகிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்?


இதுதான் இந்த படத்தின் கதை. கிறிஸ்டோபர் இம்மானுவேல் பாலிஸ்ட்ரோ சுருக்கமாக மேன்னி, ஒரு இரவு விடுதியில் இசைக்குழுவில் பிடில் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர்.  அவருக்கு அன்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்று அமைதியான குடும்பம். தினமும் இரவு விடுதிக்கு சென்று விட்டு விடியற்காலைதான் வீட்டுக்கு வருவார். தன் வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பத்தையே நடத்தியாக வேண்டும். எதிர்பாராமல் வரும் சின்ன சின்ன செலவுகள் கூட அவருக்கு பெரும் சுமைதான். இது குறித்து தினமும் தம்பதிகள் பேசி கவலைப்பட்டுக் கொள்வார்கள். மேன்னியின் மனைவிக்கு தீராத பல்வலி இருக்கிறது. மருத்துவரிடம் சென்றால் அதிகம் செலவாகும் என்பதால் அவள் தவிர்த்து வருகிறாள். மேன்னி அவளை மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். 


கையில் பணமில்லை. ஏற்கனவே தன் பேரில் உள்ள இன்சூரன்ஸ் பாலிசியில் இருந்து நிறைய கடன் வாங்கி விட்டாயிற்று. ஆகவே தன் மனைவி பேரில் உள்ள பாலிசியின் மீது கடன் வாங்க இன்சூரன்ஸ் அலுவலகம் செல்கிறார். அங்கே வேலை பார்க்கும் பெண்கள் இவரைப்பார்த்ததும் பதட்டம் அடைகிறார்கள். பின் இவர் சென்றதும் போலீசுக்கு போன் செய்கிறார்கள். மறுநாள் மேன்னி வழக்கம்போல வீடு திரும்பும் போது வாசலில் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இவரை அவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அங்க சில விசாரணைகள் நடத்தப்படுகிறது. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி பெண்கள் இவரை அடையாளம் காட்டுகிறார்கள். மேன்னி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். "வேலைக்கு சென்ற கணவனை காணவில்லை என்று பதட்டத்துடன் தன் மனைவி என்ன செய்கிறாளோ?" என்ற குழப்பத்துடன் மேன்னி ஜெயில் அறைக்குள் செல்கிறார். பின் அவர் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்தார் என்பதுதான் மீதிக்கதை. 


மேன்னியாக நடித்திருப்பவர் நடிகர் ஹென்றி ஃபோண்டா (போண்டா அல்ல Fonda). இவர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை பிரிட்ஜெட் ஃபோண்டாவின் தாத்தா. ஒரு சராசரி குடும்பத்தலைவனாக அசத்தி இருக்கிறார். ஒரு நடுத்தரவர்க்க, ஆண் போலீசை பார்த்ததும் எப்படி பயப்படுவான், கோர்ட்டை  பார்த்ததும் எப்படி மிரளுவான்,  ஜெயிலில் எப்படி கூனி குறுகி போவான் என்பதை அப்படியே செய்திருப்பார். அவரது மனைவியாக சைக்கோ பட புகழ் வேரா மைல்ஸ் நடித்திருக்கிறார். அம்மணி மிக அழகாக இருக்கிறார். அப்பாவித்தனமான மனைவியாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர்களோடு, போலீஸ், வக்கீல் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 


கத்தி, ரத்தம் ஏன் குறைந்த பட்சம் ஒரு டுவிஸ்ட் கூட இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் படத்தை தரமுடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆல்ஃபிரட் ஹிச்காக். படத்தில் எந்த டுவிஸ்டும் கிடையாது. கொலை கிடையாது. அலறல் கிடையாது. ஆனால் படம் நெடுக சஸ்பென்ஸ்தான். "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.", என்று படத்தின் ஆரம்பத்திலேயே வந்து சொல்லி விடுகிறார். மேலும் உண்மை சம்பவத்தை அப்படியே எந்த வித சினிமாத்தனமும் இல்லாமல் எடுத்திருக்கிறார். பொதுவாக சஸ்பென்ஸ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளில் எதிர்பாராத திருப்பம் ஒன்று இருக்கும். ஆனால் இதில் அப்படி எதுவும் கிடையாது. ஆனாலும் படத்தின் ஒன்றே முக்கால் மணிநேரமும் உங்களை ஆடாமல் அசையாமல் படத்தோடு ஒன்றி போக செய்து விடுகிறார். ஹிச்காக் படங்களில் நகைச்சுவை உணர்வு தூக்கலாக இருக்குமாம். ஆனால் இதில் அதுவும் மிஸ்ஸிங். அப்படி இருந்திருந்தால் அது படத்தின் மைனஸ் பாயிண்டாகவே இருந்திருக்கும். இந்த படத்தை பார்த்து முடித்ததும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தவறாமல் பாருங்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

45 comments:

சக்தி கல்வி மையம் said...

படம் பார்துட்டாப் போச்சி.,

தரவிறக்க சுட்டி குடுத்தா நல்லைருக்குமே?

rajamelaiyur said...

ok thanka try to watch that movie

தமிழ் உதயம் said...

பாதி கதையை சொல்லி படம் குறித்த ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். முழுக்கதையையும் சொல்லி இருக்கலாம்.

சென்னை பித்தன் said...

ஹிட்ச்காக்கின் இந்தப்படம் நான் பார்த்ததில்லை.மக்கள் தொலைக் காட்சியில் ஞாயிறு மாலை 3.00 மனிக்கு ஹிட்ச்காக் படங்கள் போடுகிறார்கள்.பாருங்கள்.

Manoj said...

hi bala,

I am also fan of hitchcock movies.. i started to watch his movies from last one or two months... i almost watched 10 movies of hitchcock... all having different story line but one concept.. THRILL.. still i didnt see psycho.. i didnt see it.. i have to..

if you like thrill movies i recommend you to see 'rear window' movie of hitch cock and 12 angry men.

Rear window, whole movie is shot what a man is watching in his rear window. camera wont move out of the room, we will see whole movie through rear window.

12 angry men, its not hitchcock movie, but really amazing movie.I think today is the right time to see the movie, because today is the verdict for salman butt ans mohamad asif spot fixing case. if you read the case, they say that out of 12 judges, 10 judges thought salman butt was guilty and the disccussion among judges held for 16 hrs 56 mins. similarly in this movie 12 comman man discuss is about a teen age guy is he guilty or not? whole movie is shot in one room and exactly 12 characters in the movie.. real thrill

Manoj said...

more info about 12 angry men is given here: http://worldmoviesintamil.blogspot.com/2010/03/12-angry-men1957-pulp-fiction1994-sixth.html

Manoj said...

again henry fonda is the hero in 12 angry men... now a days i am fan of henry fonda and james stewart...

K.s.s.Rajh said...

அட இந்தப்படத்தின் DVD இருக்கு பாஸ் ஆனால் நான் இதுவரை பார்க்கவில்லை உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத்தூண்டிவிட்டது பார்த்திட்டா போச்சு.......

ஆமா.நம்மாளுகள் யாரும் இந்தக்கதையின் பாதிப்பில் படம் எடுக்கவில்லையா?ஹி.ஹி.ஹி.ஹி......

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

திருடுவது தப்பு. திருட கற்று தருவது பெரிய தப்பு. இதை டொர்ரெண்ட் மூலம் தரவிறக்கலாம்.

torrentz.com சென்று தேடி பாருங்கள்.

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே

பாலா said...

@தமிழ் உதயம்

சஸ்பென்ஸ் கதைகளில் பாதி கதை சொல்வதே தவறு. படத்தை பார்க்கும்போது சுவாரசியம் இருக்காது. நன்றி நண்பரே.

பாலா said...

@சென்னை பித்தன்

கேள்விபட்டேன் சார். ஆனால் எங்க கேபிள் ஆபரேட்டருக்கு மக்கள் டிவி பிடிக்காது போலிருக்கிறது.

பாலா said...

@Manoj

Thank You very much for your suggestions. I already downloaded
Rear window, To catch a thief, vertigo, stage fright, north by nortwest etc. while reading i also come across abt 12 angry men. so I will surely watch that movie.

பாலா said...

@K.s.s.Rajh

எடுக்காமலா? இங்கே மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் இதை பின்பற்றி நிறைய பேர் படமெடுத்து விட்டார்கள். அப்படியே எடுப்பதை விட, இதில் வரும் ஒரு சில காட்சிகளை வெவ்வேறு விதமாக தங்கள் படங்களில் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

பால கணேஷ் said...

நல்ல ஒரு அறிமுகம் தந்தீர்கள். டிவிடி வாங்கி வைத்து இன்னும் பார்க்காத படங்களில் இதுவும் ஒன்று. உடனே பார்த்து விடுகிறேன் பாலா சார்!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரான விமர்சனம், படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது...!!!

MANO நாஞ்சில் மனோ said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
படம் பார்துட்டாப் போச்சி.,

தரவிறக்க சுட்டி குடுத்தா நல்லைருக்குமே?//

அடப்பாவி நோகாம நொங்கு எடுப்பது என்பது இதுதானா வாத்தி, பிச்சிபுடுவேன் பிச்சி....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல படங்கள் காலத்தால் அழியாது...
எப்படிப்பட்ட கதையானாலும் அவைகள் காலம் தாண்டியும் வாழும்..

50களில் வந்தப்படமா.. ஆச்சரியம்..

தங்களின் விமர்சனமும் அழகு...

பாலா said...

@கணேஷ்

நன்றி சார்

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

ஹி ஹி கரெக்டா சொல்லி இருக்கீங்க. நானும் நோகாம நொங்கெடுத்தவன்தான்.

பாலா said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

வருகைக்கு நன்றி நண்பரே. இந்த படங்களின் சிறப்பே காலம்தாண்டியும் இம்மி அளவுகூட சுவாரசியம் குறையாததுதான்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

படம் பார்த்து இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி...


இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

Astrologer sathishkumar Erode said...

விமர்சனம் அசத்தலா இருக்கு.வழக்கம்போல ஹிட்சாக்கின் புகழ்பெற்ற படங்களை விமர்சிக்காமல் அதிகம் கேள்விபட்டிராத ஒரு படத்தை அறிமுகம் செய்தது நன்று

Astrologer sathishkumar Erode said...

விமர்சனம் அடிக்கடி போடுங்கள்...உங்களுக்கு நன்றாக சொல்ல வருகிறது..

Karthikeyan said...

உங்கள் எழுத்து நடை ரசித்து படிக்கும் வண்ணம் இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@josiyam sathishkumar

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@josiyam sathishkumar

நன்றி நண்பரே. கண்டிப்பாக எழுதுகிறேன்.

பாலா said...

@Karthikeyan

மிக்க மகிழ்ச்சி நண்பரே. உங்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். நன்றி

சீனுவாசன்.கு said...

தமிழ் படம் பாக்கவே டைம் இல்ல சாரே!...

பாலா said...

@சீனுவாசன்.கு

என்ன சார். தமிழ்படம் பார்க்க இரண்டரை மணி நேரம் வேணும். ஆங்கில படங்கள் பார்க்க ஒண்ணறை மணி நேரம் போதும்.

சௌந்தர் said...

பாலா said... [Reply]
@!* வேடந்தாங்கல் - கருன் *!

திருடுவது தப்பு. திருட கற்று தருவது பெரிய தப்பு. இதை டொர்ரெண்ட் மூலம் தரவிறக்கலாம்.

torrentz.com சென்று தேடி பாருங்கள்.//

படம் பார்க்க தூண்டி விடுறது மட்டும் தப்பு இல்லையா :))

good review...

Thenammai Lakshmanan said...

க்ளைமாக்ஸை வெளிப்படுத்திவிடாமல் அருமையான விமர்சனம்.

மனசாலி said...

உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
http://manasaali.blogspot.com/2011/11/03.html

சுசி said...

அருமையான விமர்சனம்.

பாலா said...

@தேனம்மை லெக்ஷ்மணன்

ரொம்ப நன்றிங்க... அடிக்கடி வாங்க

பாலா said...

@MANASAALI

பார்த்தேன் நண்பரே.... என்னுடைய பின்னூட்டத்தை வரிசையில் சேர்த்ததற்கு மிக்க நன்றி.

பாலா said...

@சுசி

ரொம்ப நன்றிங்க... அடிக்கடி வாங்க

பாலா said...

@சௌந்தர்

நன்றி நண்பரே...

பாலா said...

@உலக சினிமா ரசிகன்

கண்டிப்பாக படிக்கிறேன் நண்பரே.

ம.தி.சுதா said...

ஃஃஃ ஒரு இரவு விடுதியில் இசைக்குழுவில் பிடில் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர். ஃஃஃஃ

பொதுவாகவே நான் அவதானித்த வரையில் இசையும் அது சார்ந்தவர்களதும் வாழ்வு இப்படியாக ஒத்தே போகிறதே...

பாலா said...

ஆமாம் நண்பரே. அதுவும் உண்மையாகத்தான் படுகிறது.

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

Shankar said...

Dear Bala,
Heard about your site only today and have already added to my subscription.I am not a great fan of english movies but my wife and son are.Your review was very interesting and will see the movie shortly.
Your style is good. I will follow you regularly.
I will send you a list of must see english films by separate mail.
All the best
Shankar

பாலா said...

@Shankar

Thank you very much sir. I will try to prove my consistancy and improve my writing. I expect your constant supports.

Related Posts Plugin for WordPress, Blogger...