விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 5, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 5


பகுதி 5 - உலகக்கோப்பை காலிறுதி மகிழ்ச்சி, அரையிறுதி சோகம்.... 

ஒரு நாலு பதிவில் இந்த தொடர் முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நினைவுகள் என்பது கிளற கிளற வந்துகொண்டே இருக்கிறது. இன்னும் சில பதிவுகளில் முடித்துவிட முயற்சி செய்கிறேன். 1996 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போது உள்ள மாதிரி பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவாக நடக்காது. ஆகவே நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆட்டங்கள் இறுதி நிலையை எட்டி இருக்கும். பள்ளி விட்டவுடன் அடித்து பிடித்து ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தால், கரண்ட் இருக்காது. செம கடுப்பாக வரும். இதனாலேயே பெரும்பாலான லீக் ஆட்டங்களை பார்க்க முடியாமல் போய் விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக காலிறுதியில் இருந்து பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவாக அமைந்தது. 


ஒவ்வொரு முறையும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அந்த உலகக்கோப்பையில் மிக பிரபலமாக அமைந்துவிடும். இப்போதும் அப்படித்தான். பெங்களூருவில் நடந்த அந்த ஆட்டத்துக்கு , எக்கச்சக்க கூட்டம், வரலாறு காணாத பாதுகாப்பு. முதலில் ஆடிய இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டையை கிளப்பி விட்டது. ஆரம்பத்தில் சித்துவும், கடைசி மூன்று ஓவர்களில் ஜடேஜா விளாசியதில் ஸ்கோர் 288ஐ தொட்டது. இந்த ஆட்டத்தில் வக்கார் யுனுஸ் அசாரை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சேர்ந்தார். இவரும், சச்சினும் ஒரே போட்டியில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நிலை காரணத்தால் இந்த ஆட்டத்தில் அக்ரம் ஆடவில்லை. 
பிறகு ஆடத்தொடங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவை சுளுக்கெடுத்தார்கள். ஒரு கட்டத்தில் 12 ஓவருக்கு 115 என்ற நிலையில் அடுத்தடுத்து அன்வரையும், சோகைலையும் இழந்து தடுமாற தொடங்கியது பாகிஸ்தான். இந்த தடுமாற்றம் வெங்கடேஷ் பிரசாத்துக்கு சாதகமாக, மளமளவென விக்கெட்டுகளை சரித்தார். ஜாவிட் மியாண்டத் ஒருபுறம் நிலைத்து நிற்க, மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. இந்த ஆட்டம் தன்னுடைய கடைசி ஆட்டமாகி விடுமோ என்று மியாண்டத் பயந்தமாதிரியே நடந்து விட்டது. ஆம், அவர் ரன் அவுட் ஆக, மிச்ச சொச்ச விக்கெட்டுகளை கும்ப்ளே வாரினார். உலகக்கோப்பையில் இந்தியாவுடன் ஜெயித்ததில்லை என்ற குறை நிறைவேறாமேலே போனது. இன்னும் இது ஒரு குறையாகத்தான் உள்ளது. இன்றுவரை பாகிஸ்தான் இந்தியாவுடன் உலககோப்பை போட்டிகளில் வென்றதில்லை. 
மறக்கமுடியாத தருணம் 
இந்த காலிறுதியில் சுவாரசியமான ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது பிரசாத் வீசிய பந்தை ஆப்சைடில் விளாசிய சோகைல், பிரசாத்தை பார்த்து, "அங்கே பார். அங்கே ஆள் போடு. இல்லாவிட்டால் மறுபடி அடிப்பேன்." என்பது போல தெனாவட்டாக சொல்ல, பிரசாத் மட்டுமல்ல ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே அடக்கமுடியாத கோபத்துக்கு ஆளானார்கள். அடுத்த பந்தை பிரசாத் வீச, சோகைல் அதை ஆப்சைடில் விளாச முயல, பந்து ஸ்டம்பை தரையில் சாய்த்தது. ஒட்டுமொத்த தேசமே ஆர்ப்பரித்தது. இப்போது பார்க்கும்போது கூட மெய் சிலிர்க்கும் ஒரு நிகழ்வு இது. லைவாக பார்த்தபோது ஏற்பட்ட உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
இப்போது மனதில் மறுபடியும் நம்பிக்கை பூ பூத்தது."எப்படியும் கோப்பையை வென்று விடலாம்.", நானே சொல்லிக்கொண்டேன். அரையிறுதி போட்டிகள் தொடங்கின. ஓரளவுக்கு சம பலம் மிக்க ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அம்ப்ரோஸ் மூலம் காத்திருந்தது. நம்பிக்கை நட்சத்திரம் மார்க்வாக் டக் அடிக்க, 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் எனக்கு பிடித்த ஒரு வீரர் என்றால் அவர் மைக்கேல் பெவன் தான். அணி மூழ்கும் நிலையில் இருந்தாலும், ஒரு சிறு துரும்பு கிடைத்தாள் அதை பிட்த்துக்கொண்டு, கப்பலையே கரைசேர்த்து விடும் வீரர். கடைசி வரை அவர் அவுட் ஆகமாட்டார். வெகு காலத்துக்கு அவரது ஆவரேஜ் 74இல் இருந்தது. பின்னர் 56க்கு வந்தது.  அவரும் ஸ்டூவர்ட் லாவும் சேர்ந்து மெதுவாக ஆஸ்திரேலியாவை மீட்டனர். இருந்தாலும் அவர்களால் 207 மட்டுமே எடுக்க முடிந்த்து. அந்த நிலையில் அதுவே பெரிய விஷயம். 
போல்ட் ஆன வால்ஸ், மகிழ்ச்சியில் பிளெமிங் 
பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவின் தன்னம்பிக்கை மிக்க ஆட்டத்தால் உருக்குலைந்தது. ஒரு புறம் கேப்டன் ரிச்சர்ட்சன் போராடிக்கொண்டிருக்க, மறுபுறம் நம்ம ஷேன் வார்ன் சொல்லி சொல்லி விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் 4 பந்துகளில் 6 ரன் தேவை. இருப்பது ஒரு விக்கெட். மறுபுறம் ரிச்சர்ட்சன் தவிப்புடன் நிற்க, வால்ஸ் ஒரு சிங்கிள் எடுத்திருந்தால் கூட ரிச்சர்ட்சன் சிக்சர் அடித்து ஜெயிக்க வைத்திருப்பார், ஆனால் வால்ஸ் பவுண்டரி அடிக்க முயல, ஸ்டம்ப் எகிறியது. வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. ரிச்சர்ட்சன் விடைபெற்றார்.  இந்த உலகக்கோப்பையில்தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியையே ஒற்றை ஆளாக முதுகில் சுமந்த ஒரு வீரர் அறிமுகமானார். அவர் பெயர் சந்தர்பால். இந்த ஆட்டத்தின் நடுவில் ரிச்சர்ட்சன் பந்தை முட்டி போட்டு ஸ்வீப் செய்ய, அது பறந்து போய் லெக் அம்பயரின் காதை பதம்பார்த்தது. அந்த பந்து மட்டும் பவுண்டரி சென்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கும் என்று வெகுநாட்கள் புலம்பி கொண்டிருந்தேன்.  
சச்சின் ஸ்டம்பிங்கும், ரசிகர்கள் வன்முறையும் 
அடுத்த அரையிறுதி. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் மறக்க விரும்பும், ஆனால் மறக்க முடியாத ஆட்டம். இந்த போட்டி தொடங்கியபோது நான் பள்ளியில் இருந்தேன். என்னுடைய ஆசிரியர் ரேடியோவில் ஸ்கோர் கேட்டு எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். முதல் ஓவரிலேயே 2 விக்கெட். அதுவும் ஜெயாசூர்யா 1 ரன்னில் அவுட். 85 ரன்களுக்குள் 4 விக்கெட் அரவிந்தாவும் அவுட். என் கண்ணில் உலகக்கோப்பை தெரிந்தது. ஆனால் ஸ்லோ பாய்சன்கள் இருவரும் நின்று ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்டினர். அதிலும் மகனமா அடிபட்டு நடக்கமுடியாத நிலையிலும் ஆடி, கடைசியில் வெளியேறினார்.
கண்ணீர் காம்ப்ளி 
"ஜெயிக்க 251 ரன் தேவை. ஆட்டம் நடப்பது அசார் கோட்டையான கொல்கத்தாவில். வாங்கிட்டோம்டா உலககோப்பை!!" என்று துள்ளினேன். எல்லாம் சரியாகபோனது சச்சின் அவுட் ஆகும் வரை. அவர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 98/2. ஜெயசூர்யா ஓவரில் சச்சின் எக்குத்தப்பாக ஸ்டம்பிங் ஆக, ஆட்டம் மாறியது. கொஞ்ச நேரம் கழித்து யாராவது ஸ்கோர் கேட்டிருந்தால் மயங்கி கீழே விழுந்திருப்பார்கள். ஸ்கோர் 120/8. ஏற்கனவே கொல்கத்தா ரசிகர்கள் கோபக்காரர்கள். கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து உள்ளே எறிய, பாதுகாப்பு கருதி ஆட்டம் கைவிடப்பட்டு, இலங்கை வென்றதாக அறிவிக்கபட்டது. ஒரு பக்கம் நம்பிக்கையோடு ஆடிய வினோத்காம்ப்ளி அழுதபடியே வெளியேறினார். அந்த நேரத்தில் அது மனதில் ஏதோ செய்தது. பின்னர் நாங்கள் எல்லாம் சேர்ந்து அவருக்கு வைத்த பட்டப்பெயர் "கண்ணீர் காம்ப்ளி". என்னுடைய உலகக்கோப்பை கனவு மூன்றாண்டுகளுக்கு தள்ளி போடப்பட்டது. இறுதி போட்டி லாகூரில் வைத்து நடப்பதால், "இங்கே வந்து ஆடினால் கொன்று விடுவோம்" என்று மிரட்டல் வந்ததால் இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று கூட அப்போது சொல்லப்பட்டது. 
பிறகு இறுதிபோட்டி பார்க்கும் ஆர்வமே போய்விட்டது. இறுதிபோட்டி கிட்டத்தட்ட ஒருபக்க சார்பாகவே நடந்தது. ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர், நிலைத்து ஆடி 247 ரன்கள் எட்ட உதவி செய்தார். அவருடன் இணைந்து ஆடிய ஒரு புதுமுக இளைஞன், ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டான். அந்த இளைஞன், இந்த உலகக்கோப்பைக்கு பின்னர் சிறிது காலம் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், மீண்டும் இணைந்து உலகப்புகழ் பெற்றான். அந்த இளைஞன் பெயர் ரிக்கி பாண்டிங். அதே போல இந்த உலகக்கோப்பையில் அனைவரின் கவனமும் ஷேன் வார்ன் பக்கமே இருக்க, யாருமே சரியாக கவனிக்காத ஒரு புதிய பவுலர் மெதுமெதுவாக உலகத்தில் இருக்கும் அத்தனை பேட்ஸ்மேன்களையும் மிரட்டும் அளவிற்கு வந்தான். அவன்தான் கிளென் மெக்ராத்.
இரண்டாவதாக ஆடிய இலங்கை எளிதாக வென்றது. டி சில்வா அபாரமாக ஆடி சதமடித்தார். உலகக்கோப்பையை வெல்ல முழு தகுதியான அணி இலங்கை என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதன் பின்னர்தான், இலங்கையில் பல நம்பிக்கை நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஒருவர் வேகப்பந்து வீச்சாளர் சமீந்தா வாஸ். மற்றொருவர் ஷேன்வார்னுக்கு சவால் விட்டு அதை ஜெயித்து காட்டிய முத்தையா முரளீதரன். 
கிரிக்கெட்டின் ஆதிக்கம்.... அடுத்த பதிவில்...
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

41 comments:

r.v.saravanan said...

me first

r.v.saravanan said...

padichittu varen

சக்தி கல்வி மையம் said...

கிரிக்கெட் பற்றி பல தெரியாத விஷயங்களை தெரிந்துக் கொள்கிறேன்..
நன்றி நண்பா..

"ராஜா" said...

96 உலக கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணி இந்தியாவை விட ஸ்ரீலங்காதான் .... அதை போன்ற ஒரு அணி இனிமேல் எந்த நாட்டிர்க்கும் எப்பொழுதும் கிடைக்காது ...

Anonymous said...

அந்த இலங்கை இந்தியா மறக்க முடியாத ஆட்டம் தான் ...

நிரூபன் said...

பள்ளி விட்டவுடன் அடித்து பிடித்து ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தால், கரண்ட் இருக்காது.//

சகோ, இதே நிலமை தான் எங்களுக்கும், சைக்கிள் தைனமோவினைச் சுற்றிச் சுற்றி கிரிக்கட் வர்ணனை கேட்டிருக்கிறோம்,

கார் பட்டரியில் black and white டீவியில் கிரிக்கட் போடும் கடைக்கு முன்னால் எல்லோரும் போய் குழுமி இருந்து கிரிக்கட் பார்த்து ஏச்சும் வாங்கியிருக்கிறோம்,

எங்கள் ஊர் போர் காரணமாக மின்சாரம் இல்லை..

HajasreeN said...

arumai arumai

பாலா said...

@r.v.saravanan

Ok Ok

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே...

பாலா said...

@"ராஜா"

தென்னாப்பிரிக்காவும் அப்போது நல்ல பலத்துடன் இருந்தது. ஆனால் இலங்கையே தகுதியான அணி.

பாலா said...

@கந்தசாமி.

நன்றி நண்பரே

பாலா said...

@நிரூபன்

ஆம் அப்போது கிரிக்கெட் பார்க்க தெரு தெருவாக அலைவோம்.

பாலா said...

@hajasreen

நன்றி நண்பரே...

Anonymous said...

கிரிக்கெட் பர்றி இவ்வளவு தகவல்களை தொடர்ச்சியாக எழுதி வருவது சாதனை

Anonymous said...

கிரிக்கெட் பிடிக்காத எனக்கும் கட்டுரை ஸ்வாரஸ்யத்தை தருகிறது

"ராஜா" said...

// தென்னாப்பிரிக்காவும் அப்போது நல்ல பலத்துடன் இருந்தது.

ஆனால் அவர்களை விட பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என்று எல்லா துறையிலும் அன்றைய இலங்கை அணியினர் பல மடங்கு பெட்டர்... 2003இல் இந்தியா , ஆஸ்ட்ரேலியா போல ....

பனித்துளி சங்கர் said...

கடந்த ஞாபகங்களை மீண்டும் கண் முன் நிறுத்தும் திறமை இந்தப் பதிவிற்கு உண்டு என்பேன் . கடந்த அனுபவங்களையும் ரசனைகளையும் அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் .

NKS.ஹாஜா மைதீன் said...

நமது அணி அரை இறுதியில் தோற்ற அந்த நிமிடம் வந்து போகிறது மனதினுள்....

Unknown said...

தல..டச்சிங் தல பதிவு...கிரிக்கட்டையும் உருக வைச்சிட்டீங்க கிரிக்கட் விமர்சகரே!!

Madhavan Srinivasagopalan said...

//அடுத்த அரையிறுதி........ இந்த போட்டி தொடங்கியபோது நான் பள்ளியில் இருந்தேன். என்னுடைய ஆசிரியர் ரேடியோவில் ஸ்கோர் கேட்டு எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். //

நாடு வெளங்கிடும்...
கண்டிப்பா வல்லரசுதான்.

ஷர்புதீன் said...

did u send your postal address for vellinila monthly magazine?

for detail read www.vellinila.blogspot.com

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

சாதனை எல்லாம் கிடையாது. நினைவுகளின் வெளிப்பாடு. அவ்வளவுதான்.

கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@"ராஜா"

நீங்கள் சொல்வதும் சரிதான். நன்றி நண்பரே...

பாலா said...

@! ♥ பனித்துளி சங்கர் ♥ !

கருத்துக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

மறக்க முடியாத தருணம்தானே அது... நன்றி நண்பரே...

பாலா said...

@மைந்தன் சிவா

நான் கிரிக்கெட் விமர்சகர் எல்லாம் கிடையாது நண்பரே... ஒரு கிரிக்கெட் ரசிகன். கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@Madhavan Srinivasagopalan

இதில் என்ன தவறு இருக்கிறது நண்பரே. நான் ஒவ்வொரு நிமிடமும் ஸ்கோர் அப்டேட் செய்து கொண்டிருந்தார். பாடம் நடத்தவே இல்லை என்று சொல்லவில்லையே. இந்த விஷயத்துக்கும் இந்தியா வல்லரசாவதற்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது?

பாலா said...

@Madhavan Srinivasagopalan

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@ஷர்புதீன்

பரிந்துரைக்கு நன்றி நண்பரே...

Anonymous said...

சிறு வயதில் கிரிக்கெட் பார்க்கையில் என் மோஸ்ட் பேவரிட் அணி வேஸ்ட் இண்டீஸ். ரிச்சர்ட்ஸ், வால்ஷ், ஆம்ப்ரோஸ்...அசத்தல் ஆட்டக்காரர்கள். அவர்களிடம் இருந்த நாகரிகம் இன்று கிரிக்கெட் உலகில் பெருமளவு குறைந்து விட்டது!

பாலா said...

@! சிவகுமார் !

உண்மையாகவே அந்த பவுலர்களை பார்த்தால் பயம் வரும், ஆனால் எரிச்சல் வராது.

Unknown said...

பிரசாத் பற்றி நினைவு கூர்ந்த விஷயம் உண்மையிலே சிலிர்க்க வைத்தது.

Unknown said...

பழைய வரலாற்றை இவ்வளவு சுவையாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கிறீர்கள்..

பாலா said...

கருத்துக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...

எப்பூடி.. said...

உங்கள் தொடர் முழுவதையும் ஒரே மூச்சில் படித்தேன், சிறப்பாக எழுதியுள்ளீர்கள். ஒரு இந்திய ரசிகராக உங்களது அனுபவம் நன்று. தொடர்ந்தும் எழுதுங்கள்.

உங்கள் அனுபவத்தை படித்த பின்னர் எனக்கும் எழுதணும்போல இருக்கு இப்போ இல்லாவிட்டாலும் உங்க இன்ஸ்பிறேசனில் நிச்சயம் ஒருநாள் எழுதுவேன், நன்றி.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ 1996 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.ஃஃஃஃஃ

அடடா தங்களுக்கும் நம்ம வயதா சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

பாலா said...

@எப்பூடி..

அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நண்பரே. நீங்கள் உலகக்கோப்பை தொடர் பற்றி எழுத ஆரம்பித்த பின்தான் நான் எழுத ஆரம்பித்தேன். சொல்லப்போனால் நீங்கள்தான் என் இன்ஸ்பிரேஷன்.

ஆமா இப்படி ஒரேயடியாக லீவ் எடுத்துட்டீங்களே? சீக்கிரமா வந்து எழுதுங்க தலைவரே...

பாலா said...

@♔ம.தி.சுதா♔

உங்களுக்கும் நம்ம வயதுதானா? மிக்க மகிழ்ச்சி சகோதரா.

Jey said...

காலிறுதியில் சோகைல் அவுட் ரொம்ப பிரசித்தம்.
அதேபோல் கர்ட்னி வால்ஸிடம், அடிக்காதே பேசாமல் பேட்டை அசையாமல் வைத்திரு என்று ... ரிச்சர்ட்ஸன் ஐந்து நிமிடமாவது சொல்லிவிட்டு சென்றிருப்பார், ஆனாலும் வால்ஸ் பெட்டைத் தூக்கி அவுட் ஆகி தனக்கு பேட் பிடிக்கவே தெரியாது என்பதை நிரூபித்து விட்டார்...( ஆனாலும் பெளலிங்ல மனுஷன் ராட்ஸசன் தான்யா...).

உங்கள் பதிவு பலருக்கு மலரும் நினைவுகள்.

பாலா said...

@Jey

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

Anonymous said...

எனது தளத்திற்கும் இணைப்பு கொடுத்ததற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...