விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

December 27, 2010

வெட்டி அரட்டை - அதிமேதாவி கமல், புன்னகை மன்னன் விஜய்

கடுப்பை கிளப்பிய சன்டிவி

பொதுவாகவே இந்த மாதிரி நட்சத்திர கலைவிழா, பாராட்டு விழா எல்லாம் பார்ப்பதை விட்டு ரொம்ப நாளாகி விட்டது. அவருக்குத்தான் இவை அலுக்காது. நமக்குமா? ரஜினியின் மேடை பேட்டி, பாரதிராஜா- இளையராஜா பேச்சுக்கள் என்று சில சுவாரசியமான விஷயங்கள் காட்டியதால் பார்த்தேன். மேடையில் ஆடிய இளம் நடிகைகளை நாம் கண்கள் மேய்வதை அப்படியே காமிரா செய்து காட்டியது. அதிலும் ஆப்பக்காரி பாடல் உச்சகட்டம். போதாததுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள் வேறு. நம்மூரில் சின்ன குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டுவார்களே அதே போல ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை. வாயில் கெட்ட வார்த்தை வந்தது. வீட்டில் எல்லோரும் இருந்ததால் வாயை பொத்திக்கொண்டேன்.


புன்னகை மன்னன் விஜய்

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் விழா முழுவதும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தவர் நாம் இளைய தளபதிதான். அநேகமாக அவருக்கு "இளைய நரசிம்மராவ்" என்று பெயர் வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். மருந்துக்கு கூட அவர் முகத்தில் புன்னகை இல்லை. என்னதான் பல சொந்த பிரச்சனைகள் இருந்தாலும் இப்படி வலுக்கட்டாயமாக உம்மனாம் மூஞ்சியாகவா இருப்பது? என் அம்மவே, "சிரிப்பா. சிரிச்சா என்ன வாயில இருந்து முத்தா உதிர்ந்திரும்?" என்று கூறினார். அவர் அஜித் ரசிகை அல்ல. எம்ஜிஆர் ரசிகை.

உலகக்கோப்பையும் இந்திய அணியும்சச்சின் முதல் சதம் அடிப்பதற்கு முன்பிருந்தே கிரிக்கெட் பார்த்து வருகிறேன். தென்ஆப்பிரிக்க அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி இருப்பது போல, இந்திய அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி உண்டு. அதாவது உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் மூன்றாண்டுகள் எல்லா சாதனைகளையும் முறியடித்து, முதலிடத்தில் இருக்கும். சரியாக உலகக்கோப்பை தொடங்கும் நேரத்தில் சச்சினை தவிர்த்து எல்லா வீரர்களும் பார்மை இழப்பார்கள். சின்ன அணிகளிடம் கூட மரண அடி வாங்குவார்கள். இது மறுபடியும் நடந்து விடுமோ? என்று என் மனதில் லைட்டா ஒரு டவுட் வந்திருக்கு. கம்பீர், ரெய்னா, தோனி உள்பட பலர் மெதுவாக பார்மை இழந்து வருகிறார்கள். தென்னாபிரிக்கா தொடரில் தங்களுடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்க போகிறதோ? அதே போல பாகிஸ்தான், மற்றும் நியூஸீலாந்து அணிகள் உலகக்கோப்பை வரை சொங்கி ஆட்டம் ஆடுவார்கள். ஆனால் உலகக்கோப்பையில் அநியாயத்துக்கு ஆக்ரோஷமாக ஆடி, முக்கிய அணிகளை வெளியேற்றி விட்டு தானும் வெளியேறி விடுவார்கள். இதுதான் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை பிரகாசப்படுத்துகிறது.ஒரு சின்ன டவுட். ஸ்ரீசாந்த், நெஹ்ராவை விட இர்பான் பதான், மற்றும் ஆர் பி சிங் இருவரும் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அவர்கள் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்? தோனி கங்குலியை பார்த்து பாடம் படிக்க வேண்டும். இல்லையேல் முற்பகல் செய்தால் பிற்பகல் தனக்கே விளைந்து விடும்.

கன்றாவி தலைப்புகள்...வர வர பதிவுகளின் தலைப்புகள் எல்லாம் தினத்தந்தி தலைப்பு செய்தி மாதிரி ஆகி விட்டது. கடந்த வாரம் ஒரு தலைப்பு, "ஆடையில்லாமல் தவித்த ஐஸ்வர்யா" இதை படித்தவுடன் எல்லோரும் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு படிக்க வருவார்கள் என்ற நம்பிக்கை. அதே போல இன்று "அஸினுக்கும் சல்மானுக்கும் இடையே ரகசிய திருமணம்", "என் கணவன்? சதா" என்று கன்றாவியான தலைப்புகள் தென்படுகின்றன. ஹிட்டுகள் வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது பாருங்கள். காலக்கொடுமை...


அதிமேதாவி கமல்...

மன்மதன் அம்பு முதல் காட்சியே பார்த்தாகி விட்டது. படத்தை பற்றி கருத்து ஒன்றும் தெரிவிக்க விரும்பவில்லை. அப்புறம் ஏதாவது சொல்லி, "இதோ வந்துட்டாண்டா ரஜினி ரசிகன்!!" என்று காரி தூப்பி விடுவார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் விஜய்யை வேண்டும் என்றே கலாய்த்தார்கள் என்று கிளப்பி விட்ட மாதிரி ஒரு பற்ற வைக்கும் வேலையை மட்டும் செய்யபோகிறேன்.இந்து கடவுள்களை இழிவு படுத்துகிறார் என்று கோஷமிட்டவர்கள் படத்தில்  இந்துக்களைப்பற்றி மகா மட்டமான ஒரு வசனம் வருகிறது கவனித்தார்களா என்று தெரியவில்லை. மாதவன் கமலிடம், "அதென்ன சார் எல்லா கள்ள காதலன்களும் காவி சட்டையே போடுறாங்க?" என்று கேட்பார். அதற்கு கமல்," ஒரு வேலை religion காரணமா இருக்கலாம்." என்பார். அதாவது இந்துக்கள் எல்லாரும் கள்ள உறவு வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம் வருகிறது.


படத்தில் மாதவன் "தமிழை விடுங்க, தமிழ் மெல்ல சாகட்டும்" என்று சொல்வார். 

அதே போல ஒரு காட்சியில் திரிஷா, "நான் பொறுத்துக்குவேன் , தமிழ் பொறுக்குமா?" என்று கேட்க, அதற்கு கமல்' "தமிழ் எப்பவுமே தெரு பொறுக்கும், இதையும் பொறுக்கும்." என்பார். அதென்ன கமல் படத்தில் எல்லாம் இலங்கை தமிழர்களை அம்மாஞ்சியாகவே சித்தரிக்கிறார். இவை அனைத்தும் படத்தில் அவ்வளவு அத்தியாவசியமும் இல்லை. நடிகைகளையும் அவ்வப்போது கேவலப்படுத்தி சேம் சைடு கோல் போடுகிறார். என்ன கமல் சார் இப்படி பண்ணலாமா?

எப்படி தீயே வேலை செஞ்சேன் பாத்தீங்களா? ஏதோ நம்மாள முடிஞ்சது.


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

46 comments:

karthikkumar said...

ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். ///
சார் நெட்ல அந்த வீடியோ கெடைக்கும்னு நெனைக்கிறேன்....

karthikkumar said...

விஜய் ரஜினி ஸ்டில் சூப்பர்... குறிப்பா ரஜினி மைன்ட் வாய்ஸ்....

பாலா said...

@karthikkumar

நெட்லதான் தேடி பார்க்கனும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Unknown said...

உண்மைதான் .பெயர்களை கிக்காக வைத்தால் அந்த பதிவு ஹிட்

roshaniee said...

உண்மையை தெளிவாக சுட்டி காட்டியிருக்கிங்க
சூப்பர் பதிவு

Anonymous said...

//கடைசியில் அதை காட்டவே இல்லை. //
கடுப்பேத்றாங்க மை லார்ட் ;)

//சின்ன அணிகளிடம் கூட மரண அடி வாங்குவார்கள். இது மறுபடியும் நடந்து விடுமோ? என்று என் மனதில் லைட்டா ஒரு டவுட் வந்திருக்கு.//
அது என்ன லைட்டா? அப்படித்தான் ஆகப் போகுது ;)

எல்லாம் ஹிட்ஸ் படுத்துற பாடு :)

எப்பூடி.. said...

//கடைசியில் அதை காட்டவே இல்லை. வாயில் கெட்ட வார்த்தை வந்தது. வீட்டில் எல்லோரும் இருந்ததால் வாயை பொத்திக்கொண்டேன்.//

சேம் பீலிங்.

//வர வர பதிவுகளின் தலைப்புகள் எல்லாம் தினத்தந்தி தலைப்பு செய்தி மாதிரி ஆகி விட்டது.//

என்னோட கடைசி பதிவோட தலைப்பையும் வாருரமாதிரி இருக்கு :-)))

தொப்பி அளவு மாதிரி இருந்திச்சு, அதுதான் எடுத்து மாட்டிகிட்டான் :-)))


ரஜினி விஜய் தோள்மீது கை போடும் போதெல்லாம் விஜய் முகத்தில ஒரு அசாதாரண ரியாக்சனை பார்க்க முடிந்தது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாராயணா
நாராயணா

Anonymous said...

என் அம்மவே, "சிரிப்பா. சிரிச்சா என்ன வாயில இருந்து முத்தா உதிர்ந்திரும்?" என்று கூறினார்.//
இளைய தளபதிக்கு ஒரு ஓட்டு போச்சு..எத்தனை அம்மாக்கள் கடுப்பானாங்களோ

Anonymous said...

ஆமா ரஜினி ரொம்ப வெகுளியா விஜய் மேல கை போட்ருந்தார் ஆனா விஜய் நெர்வசா ஃபீல் பண்ணுனது முகத்துல தெரிஞ்சுது..பயமா

Anonymous said...

அதிலும் ரஜினியை இளையராஜா பாராட்டி பேசிய போதும் முகத்தை கடுப்பா தான் வெச்சிருந்தார் இளைய தலைவலி

Anonymous said...

ரஜினி மைண்ட் வாய்ஸ் சூப்பர்

ரஜினி;தம்பி இன்னும் எத்தனை குட்டிகரணம் அடிச்சாலும் என் சீட் உனக்கு கிடைக்காது

Anonymous said...

"தமிழ் எப்பவுமே தெரு பொறுக்கும், இதையும் பொறுக்கும்.//
கண்டிக்கபட வேண்டிய கமல் வசனம் தான்..தமிழ் ஆர்வலர்கள் எங்கே பொறுக்க போனார்கள்?

பாலா said...

@நா.மணிவண்ணன்

கிக்காக வைக்கலாம். முட்டாள்தனமாக இருக்க கூடாதல்லவா. சரி எல்லாம் நடக்கறதுதான்.

பாலா said...

@roshaniee

மிக்க நன்றி சகோ. அடிக்கடி வாருங்கள்.

பாலா said...

@Balaji saravana

ரொம்ப கடுப்பேத்திட்டாங்க. கான்பிடன்ஸ் இருக்கு பாஸ். அஞ்சு வோல்ட் கப் பாத்தாவைங்க நாங்க.

நன்றி பாலா.

பாலா said...

@எப்பூடி..

எனக்கு ரொம்ப கடுப்பாகிருச்சு. உங்கள் பதிவின் தலைப்பாவது அதற்கு சம்பந்தமாகத்தானே இருந்தது. விஜயை நினைத்து கவலைப்படுவதா பரிதாபப்படுவதா என்றே தெரியவில்லை.

பாலா said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

வந்த வேலை இனிதே முடிந்து விட்டது. நம்ம வேலையே கோர்த்து விடுறதுதானே.

நன்றி தல

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

பொதுவாகவே விஜய் பொது இடங்களில் அதிகம் சிரிப்பது கிடையாது. முன்பெல்லாம் அது அவரது சுபாவம் என்று ஏற்று கொண்டார்கள். ஆனால் சில பேட்டிகளில், தன் பட விழாவில் எல்லாம் ஜாலியாக நடனம் கூட ஆடினார். தற்போது இப்படி இருப்பது செயற்கையாக உள்ளது.

ரஜினியை பார்த்து பொறாமை பட்டு ஒண்ணும் ஆகப்போவதில்லை. நீங்க எழுதிய ரஜினி மைண்ட் வாய்ஸும் சூப்பர்.

தமிழ் ஆர்வலர் என்று எவரும் கிடையாது. தனக்கு பெயர் புகழ் கிடைக்கும் என்றால் ஆர்வலராக காட்டிக்கொள்வார்கள் அவ்வளவுதான்.

வருண் said...

***ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை.***

கேவலமாயில்லை இது, கலநிதி என்கிற மேதையே?

இதெல்லாம் ஒரு பொழைப்புனு நடத்திக்கிட்டு இருக்கானுக!

Philosophy Prabhakaran said...

// நெட்லதான் தேடி பார்க்கனும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... //

தேட வேண்டிய அவசியம் இல்லை... நம்ம ரஹீம் கஸாலி பதிவாகவே போட்டிருக்கார்... அதை பாருங்க...

// ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை //

இங்கேயும் சேம் பீலிங்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நன்றாகவே தீயா வேலை பார்த்து இருக்கீங்க பாலா சார். சூப்பர்!!

பாலா said...

@வருண்

உண்மைதான். இதுவும் ஒரு வகையான மார்க்கெட்டிங் உத்தி போலிருக்கிறது.

பாலா said...

@philosophy prabhakaran

நானும் பார்த்தேன் நண்பரே. நன்றி.

கமல் மீதான என் கருத்துக்களுக்கு நீங்கள் ஆட்சேபணை தெரிவிப்பீர்கள் என்று நினைத்தேன்?

பாலா said...

@Rajeevan

நன்றி நண்பரே

ஆதவா said...

kalakkal!!!
rompa arumaiyana pathivu nga!!

பாலா said...

@ஆதவா

முதல் வருகைக்கு நன்றி நண்பரே.
அடிக்கடி வாங்க.

Yoganathan.N said...

வர வர கமல் தன் படங்களில் தன்னுடைய 'ideologies'-களை அதிகமாக திணிக்கிறார் என்றே தோண்றுகிறது.

ரஹீம் கஸ்ஸாலி said...

கவலைய விடுங்க பாஸ்....நம்ம பிளாக்குல ரஜினி பாலச்சந்தர் பேட்டியின் வீடியோவை போட்டிருக்கேன் பாருங்க...

NKS.ஹாஜா மைதீன் said...

ஒருவேளை சிரித்தால் யாரும் நிகழ்ச்சியை பார்க்காமல் போய்விடுவார்கள் என்று விஜய் நினைத்திருப்பாரோ?

பதிவு சூப்பர்.....

பாலா said...

@Yoganathan.N

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

பாலா said...

@ரஹீம் கஸாலி

பார்த்துவிட்டேன் நண்பரே. மிக்க நன்றி. இந்த பிக்காளி பசங்களை நினைத்தால் கோபமாக வருகிறது. அதனால்தான் எழுதினேன்.

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

:)


நன்றி நண்பரே

Philosophy Prabhakaran said...

Bala See This link...

One of ur post was stolen

http://ajith-vijay.blogspot.com/2010/09/blog-post_22.html

r.v.saravanan said...

விஜய் ரஜினி ஸ்டில் சூப்பர்..

சூப்பர் பதிவு

பாலா said...

@philosophy prabhakaran

சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@r.v.saravanan

நன்றி தலைவரே

அமானுஷ்யன் said...

இளையராஜா பேசியது ஒன்னும் புரியல.......

Anonymous said...

தமிழ் ஆர்வலர் என்று எவரும் கிடையாது. தனக்கு பெயர் புகழ் கிடைக்கும் என்றால் ஆர்வலராக காட்டிக்கொள்வார்கள் அவ்வளவுதான்//
சரியான கமெண்ட்...தமிழினம் அழிந்தபோதுதான் ஒவ்வொருத்தனையும் பார்த்துட்டோமே

வார்த்தை said...

//எப்படி தீயே வேலை செஞ்சேன் பாத்தீங்களா? //

தீயா ....?

"எப்படி தீயா...." இந்த பேச்ச கேட்டு எத்தன வருசமாச்சு......

வார்த்தை said...

//தமிழ் ஆர்வலர் என்று எவரும் கிடையாது. தனக்கு பெயர் புகழ் கிடைக்கும் என்றால் ஆர்வலராக காட்டிக்கொள்வார்கள் அவ்வளவுதான்.//

தமிழ்னு இல்லங்க‌..... எல்லா வகையிலுமே ஆர்வலர்கள்ள கொள்ள பயலுக இப்டிதான்.....

நாடு, மொழி, இனம், பால், கடவுள், மதம், சமயம், தொழில், அரசியல், சினிமா, விளையாட்டு...

பாலா said...

@அமானுஷ்யன்

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வேதனையான உண்மை

நன்றி நண்பரே

பாலா said...

@வார்த்தை

கருத்துக்கு நன்றி நண்பரே

Anonymous said...

உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)

http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html

பாலா said...

@Balaji saravana

கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பரே...

Related Posts Plugin for WordPress, Blogger...