விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 23, 2010

புனைவு எழுதுவது எப்படி?


எல்லோரும் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து விட முடியாது. அதற்காக செய்து விட முடியாது என்று அர்த்தம் அல்ல. தன் பாணியில் எளிய வழியில் செய்து விடலாம். ஆனால் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை ஸ்டார்டிங்க் டிராபிள். ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் எனக்கு இந்த பிரச்சனை வரும். மற்றவர்களை போல நிறைய பெண் நண்பிகள் வேண்டும், நன்றாக பேசவேண்டும், எழுதவேண்டும் என்று பலருக்கு ஆசை இருக்கும். அவற்றை எல்லாம் பூர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதே ‘எப்படி’ வகையான புத்தகங்கள். பெண்களை கவர்வது எப்படி, கழட்டி விடுவது எப்படி என்கிற வகையில் பல ஆயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் என்னால் முடிந்த சில எப்படி பதிவுகள் எழுதுகிறேன். ஏதோ பொதுநல நோக்கில் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். பதிவு எழுத மேட்டரே தேரலையா? கவலையை விடுங்கள். ஒரு எப்படி பதிவு போடுங்கள். என்னை மாதிரி ஹி ஹி ஹி... புனைவு எழுதுவது எப்படி?

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எல்லா பதிவர்களும் என்ன எழுதுவது என்று தெரியாமல், கையை பிசைந்து கடைப்பக்கமே வராமல் அறிவிக்கப்படாத பந்த் போல பதிவுலகமே அமைதியாக இருக்கும். அப்போது எல்லோருக்கும் தீனி போடுவது போல இருப்பது இந்த புனைவு ஒன்றுதான். வெறும் வாய்க்கு அவல் மாதிரி. எல்லோருக்கும் புனைவு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கும். சரி எப்படி எழுதுவது? எனக்கு தெரிந்த சில குறிப்புகளை சொல்கிறேன். 

நீங்கள் ஒரு ஆண் பதிவாரா? சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் புனைவு எழுத முழு தகுதி உண்டு. அதற்காக பெண்கள் கவலைப்பட வேண்டாம். என்ன? உங்கள் புனைவு பிரபலம் அடைய கொஞ்சம் மேனக்கெடவேண்டும். புனைவில் நெட்டிவிட்டி மிக முக்கியம். அதாவது கதைக்களன் . ஆண்கள் எழுதும் புனைவில் பெண்தான் மெயின் பாத்திரமாக இருக்கவேண்டும். அவள் பெரிய அதிகாரியாகவோ, படித்தவளாகவோ இருக்கக்கூடாது. கண்டிப்பாக, மீன்காரி, பிச்சைக்காரி, பெட்டிக்கடைக்காரி இந்த மாதிரிதான் இருக்க வேண்டும். அடுத்து என்ன? அதேதான். அவள் திமிர் பிடித்தவளாக, ஆண்களை மதிக்காதவளாக இருக்கவேண்டும். அதே கதையில் சில அப்பாவி ஆண் பாத்திரங்கள் அவளால் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். கெட்ட வார்த்தைகள் நிறைய பேச வேண்டும். குறிப்பாக ஆண் என்றால் தே... பெண் என்றால் தே...மேகன். சரி கதை. கதை கிடக்கிறது கதை. உங்களுக்கும் வேறு யாருக்கும் சமீபத்தில் வாய்க்கால் தகராறு வராமல் போயிருக்குமா என்ன? அந்த சம்பவத்தை அப்படியே எளிமை படுத்தி விடுங்கள். அவ்வளவுதான். எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலு மேடையில் தனக்கு நடந்ததை வேறொருவனுக்கு நடந்ததை போல சொல்வாரே அதே போல.

பெண்கள் எழுதும் புனைவில் வரும் நாயகன் கண்டிப்பாக பொம்பளை பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும். கஞ்சா, குடிப்பழக்கம், இருப்பது கூடுதல் வசதி. அவனை அவன் மனைவி என்ன வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். செக்ஸ் சம்பந்தமான வார்த்தைகள் அதிகம் இருக்க வேண்டும். நீங்கள் எழுதும் புனைவில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது, சம்பந்தப்பட்டவர்களை தவிர மற்ற யாருக்கும் புரியவே கூடாது. ஏதோ சமுதாய நோக்கில் எழுதப்பட்ட சிறுகதை என்று நினைத்துக்கொள்வார்கள். வண்டை வண்டையாய் எழுதி விட்டு, இறுதியில் இது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்று டிஸ்க்லைமர் போட மறக்காதீர்கள். லேபிலும் புனைவு என்று இருக்கட்டும். 

புனைவை நீங்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும் என்று இல்லை. மற்றவர் எழுதிய பதிவுகளுக்கு எதிர்வினையாக கூட இந்த மாதிரி புனைவுகளை எழுதலாம். தமிழ் பட ரசிகர்களுக்கு அம்மா சென்டிமெண்ட் எப்படி வீக்நெஸ்ஸோ அதே போல பதிவர்களுக்கு ஒரு வீக்நெஸ் உண்டு. அதனை பயன்படுத்தி புனைவு எழுதவேண்டும். அதாவது பெண் பதிவர்கள் என்றால் நடத்தையை குறிவைக்கவேண்டும். ஆண் பதிவர்கள் என்றால் மிக சுலபம். ஆண்மை, ஆணாதிக்கம் அல்லது பார்ப்பனீயம். அவ்வளவுதான். 

புனைவு என்பது அணு ஆயுதம் போல. அது ஏற்படுத்தும் தாக்கத்தை விட பின் விளைவுகள்தான் அதிகம். அதற்கு உங்களுக்கு இருக்க கூடாத முக்கிய குணம் சூடு மற்றும் சொரணை. உங்களைப்போலவே காண்டாக இருக்கும் ஒரு நண்பரை உங்கள் பதிவுக்கு முதல் பின்னூட்டம் போட செய்யுங்கள். தர்ம அடி விழும்போது அதனை பங்கு போட உதவும். சில சமயம் புனைவு எழுதியவரை விட்டு விட்டு, கமெண்ட் போட்டவரை துவைத்த சம்பவம் எல்லாம் சரித்திரத்தில் உண்டு. கண்டிப்பாக நீங்கள் புனைந்த கதாபாத்திரத்தின் அசல் உங்களை ஏதாவது பஞ்சாயத்துக்கு கூட்டி சென்று விடுவார். உங்களை வினவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். பின்னி பெடல் எடுத்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள். வடிவேலு மாதிரி என்ன கைய பிடிச்சு இழுத்தியா? அப்படின்னு திரும்ப திரும்ப கேளுங்கள். இல்லயேல் முத்தமிழ் அறிஞர் மாதிரி புறநானூறு, சிலப்பதிகாரம் என்று சம்பந்தம் இல்லாமல் அடித்து விடுங்கள். ஒரு கட்டத்தில் கடுப்பாகி பஞ்சாயத்து கலைந்து விடும். 

இந்த பஞ்சாயத்து களேபரங்கள் வாரக்கணக்கில், சிலநேரம் மாதக்கணக்கில் கூட நடக்கும். அத்தனை பதிவர்களும் இது சம்பந்தமாக விவாதிப்பார்கள், கண்டனம் தெரிவிப்பார்கள். கும்மி அடிப்பார்கள். பதிவுலகமே விழாகோலம் பூண்டிருக்கும். சமுதாயத்தில் கிரிக்கெட், அரசியல் என்று ஏதாவது ஒரு புது நிகழ்வு நடக்கும்போது பஞ்சாயத்து கலைந்துவிடும். புது விஷயங்களை பற்றி பதிவு எழுத சென்று விடுவார்கள். நாமும் சோர்ந்து கிடந்த பதிவுலகத்துக்கு புத்துயிர் அளித்த திருப்தியோடு நம் வேலையை பார்க்க கிளம்பிவிட வேண்டியதுதான். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.... 


படங்கள்: குசும்பு அவர்களுக்கு நன்றி

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

7 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரைட்டு உங்களைப் பத்தி ஒரு புனைவு போட்டுட வேண்டியதுதான்.

DR.K.S.BALASUBRAMANIAN said...

இப்படியெல்லாம் கூட எழுதலாமா..? ஆரம்பிச்சிட வேண்டியதான்...!

பாலா said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்

அப்படியா உடனே எழுதுங்க. சினிமாவில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லையே. கதையிலாவது கிடைக்கிறதே?

பாலா said...

@drbalas

ஹி ஹி ஏதோ என்னால முடிஞ்சது...

ப.கந்தசாமி said...

ஏனுங்க, பூக்காரி பத்தி புனைவு போடக்கூடாதுங்களா?

பாலா said...

@ DrPKandaswamyPhD

அய்யய்யோ நீங்க என்னையே பஞ்சாயத்துல போயி நீக்க வச்சுடுவீங்க போல இருக்கே?

Anonymous said...

நல்ல ஐடியாவெல்லாம் கொடுக்கிறீர்கள்...நாளை புனைவு எழுதிவிட்டு, தர்க்கம் என்று வரும்பொது வாத்தியாரை துணைக்கு அழைத்துகொள்ளலாம்..


சார் சொன்னா சரியாகத்தனே இருக்கும்.....

Related Posts Plugin for WordPress, Blogger...