விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 7, 2010

அஜித்துக்கு நாலு, விஜய்க்கு அஞ்சு - ஆட்டம் ஆரம்பம்

விஜயின் ஆட்டம்
இளைய தளபதி விஜய் காவல் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து வருவதும், த்ரீ இடியட்ஸ் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருப்பதும் தெரிந்ததே. இது போக சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சுறா நடிப்பதற்கு முன்னரே இப்படம் பற்றிய பேச்சு அடிபட்டது என்னவோ உண்மை. அதே போல இயக்குனர் லிங்குசாமியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இந்த வாய்ப்பு சிம்புவினால் நிராகரிக்கப்பட்டது என்றும், அந்த காரணத்துக்காகவே படத்தை ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் விஜய் கையில் இருப்பது ஐந்து படங்கள். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்றும் சிந்திக்க வைக்கிறது. ராஜா, சித்திக் தவிர மற்ற மூன்று இயக்குனர்களும் இழுவை மன்னர்கள். குறைந்தது ஒரு வருடமாவது படப்பிடிப்பை நடத்தாமல் விடமாட்டார்கள். சங்கர் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் விஜய் வருடத்துக்கு இரண்டு படமாவது கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர். மேலும் சங்கர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் வேறு படங்களில் தலை காட்டக்கூடாது என்று அன்பு கட்டளை வேறுஇடுவார். அப்படி பார்த்தால் விஜயின் முகம் நமக்கு மறந்து போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். இதே நிலைதான் விக்ரமுக்கும் ஏற்பட்டது. இதை விஜய் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. 


அஜித் புது முடிவு

மறுபுறம் ஆண்டுக்கு ஒருபடம் என்ற ரீதியில் நடித்துவந்த அஜித் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதில் முதல் படமான மங்காத்தா அஜித் திரை உலகில் அடி எடுத்து வைத்த நாளான ஆகஸ்ட் இரண்டாம் தேதியே துவங்கி விட்டது. இது தவிர கிரீடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படமும், விஷ்ணுவர்தன் இயக்கும் பில்லா இரண்டாம் பாகத்திலும், கவுதம்மேனன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இதில் அறிவுஜீவி இயக்குனர் கவுதம்மேனன் அளித்த பேட்டி அஜித் ரசிகர்கள் மனதில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் தரப்பில் இருந்து எந்த ரியாக்சனும் இல்லாத நிலையில், இந்த படம் பற்றிய முடிவு மர்மமாகவே இருக்கிறது. கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்காமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து. ஏனென்றால் இப்பேர்பட்ட உலகப்புகழ் பெற்ற, தானே சுயமாக சிந்தித்து, ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு படமெடுக்கும் திறமையான ஒரு இயக்குனர் படத்தில், சாதாரணமான ஒரு நடிகன் நடிப்பது அந்த இயக்குனருக்குத்தான் இழுக்கு.

கலங்காத கல்மாடி

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் கனஜோராக முடித்து கவுண்டவுன் தொடங்கி விட்டது. இதற்கு செலவிட்ட தொகை மட்டும் சுமார் 35,000 கோடியாம். அடேங்கப்பா.... இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது? என்று சில வருடங்களுக்கு முன்னாள் அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இந்தியா கிரிக்கெட் போட்டிகள், அது தொடர்பான விளம்பரங்கள் இவற்றுக்கு செலவு செய்யும் தொகை என்று சில நூறு கோடிகள் பற்றி விவரம் சொல்லி இருந்தார்கள். இப்போது அது ஆயிரம் கோடி ஆகி, பத்தாயிரம் கோடியும் ஆகி விட்டது. ஒருவேளை பொருளாதார வளர்ச்சி என்று சொல்கிறார்களே அது இதுதானா? சூப்பர் ஸ்டார் ஒருதடவை சொன்னார் "எங்கே பணம் இருக்கிறதோ அங்கே அரசியல் இருக்கும்." இது எவ்வளவு உண்மை. இந்த போட்டிகளுக்காக செலவிட்ட பணத்தில் ஏகப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மூன்று பேரை சஸ்பெண்டும் செய்துவிட்டாயிற்று. சம்பந்தப்பட்ட அரசியல்வாதி சுரேஷ் கல்மாடி மட்டும் இன்னும் பதவி விலகாமல் இருப்பது சமூகத்தில் மீது, விளையாட்டு துறை மீது அவருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது . தான் எவ்வளவு கேவலப்பட்டாலும், பதவியை மட்டும் துறந்து விடக்கூடாது. அப்புறம் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்ற பாடத்தை எங்கு கற்றிருப்பார் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகத்திலா?

பொன்முடி கருத்து

விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து, பல கூட்டங்களை நடத்தி வந்த மத்திய மாநில அரசுகள் முடிவாக ஒருகருத்தை தெரிவித்துள்ளன. அதாவது, "விலைவாசி என்றால் உயரத்தான் செய்யும், அதை மக்கள் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்." என்று கூறியுள்ளார்கள். மாண்புமிகு அமைச்சர் பொன்முடி, "எந்த காலத்தில் விலைவாசி உயரவில்லை? விலைவாசியை போல மக்களின் வருமானமும் உயர்ந்துள்ளது." என்று திருவாய் மலர்ந்துள்ளார். இப்படி சொன்ன முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களுக்கு அண்ணா சொன்ன பதில், "விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பதவி விலகுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ." என்பது குறிப்பிடத்தக்கது. (இதற்கு முந்தைய பத்தியில் சொன்ன விஷயத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை) 

பெற்றோர்களே கவனியுங்க..


நாளிதழில் வெளிவராத மனதை கலங்கடித்த ஒரு செய்தி. சென்னையில் இருக்கும் என் நண்பன் ஒருவனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது, "ஆடிப்பெருக்கு அன்று எங்க ஏரியாவில் இருக்கும் ஒரு பள்ளிக்கு விடுமுறை." என்று சொன்னான். "இப்பலாம் ஆடிப்பெருக்கு அன்று விடுமுறை கிடையாதே?" என்று கேட்டேன். அவன் காரணம் வேறு என்று சொன்னதை கேட்டு திடுக்கிட்டேன்.
பள்ளியில் மாணவன் ஒருவன் ஆசிரியை ஒருவர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டானாம். பெற்றோர்கள் எல்லாம் கொதிப்படைந்து போய் பள்ளியை நோக்கி படையெடுக்க, விடுமுறை அறிவித்து விட்டார்கள். இதில் திடுக்கிடும் செய்தி என்னவென்றால் அந்த மாணவனின் வயது பத்து. ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறானாம். கேட்டதும் அதிர்ச்சியில் ஆடிபோய் விட்டேன்.


ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போகும்படி செய்தது எது? அந்த ஆசிரியை திட்டிய வார்த்தைகளா? கண்டிப்பாக இருக்காது. இப்போதெல்லாம் பெரும்பாலான நகர்ப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதே இல்லை. நாம் அவமானப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று முடிவுகட்டும் அளவுக்கு அவன் மனதை பாதித்தது வேறு ஒரு காரணம். அந்த காரணம் நமக்கும் தெரியும். மவுனமாக ஒப்புக்கொள்வோம். ஆனால் யாரும் சட்டை செய்வது கிடையாது. ஏனென்றால் இது சமூக பிரச்சனை அல்லவே? நம் குழந்தை என்று வந்தால்தான் பிரச்சனை. பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றபின் மாலை மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்து விடும் குழந்தைகள் சுமார் நான்கு மணிநேரம் தனிமையில் பொழுது போக்குகிறார்கள். வீட்டிற்கு வந்த பின்னரும் அந்த குழந்தை தனிமையிலே விடப்படுகிறது. அதன் துணை கார்ட்டூன் கதாபாத்திரங்களும், பேசாத பொம்மைகளும்தான். எனவே அக்குழந்தை தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நம் பெற்றோர்கள் நமக்கு துணை என்று நினைப்பதில்லை. கூடுதலாக தான் பார்க்கும் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களில் விதவிதமாக சாவது எப்படி என்று காட்டுவதை முழுவதுமாக உள்வாங்கி விடுகிறது. 

"பெற்றோர்களே, உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காக உழைக்கிறேன் பேர்வழி என்று அதன் நிகழ்காலத்தை சிதைத்து விடாதீர்கள்." 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.. 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

7 comments:

எப்பூடி.. said...

விஜயின் படங்களில் ராஜாவின் படம் மட்டும்தான் விஜய்க்கு கை கொடுக்கும் என்று நினைக்கிறேன், சீமானின் படம் உறுதியானால் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு நஷ்டமே.

மீண்டும் அஜித்,விஷ்ணு,யுவன், நீரவ் ஷா என கலக்கல் கூட்டணியில் பில்லா 2 நிச்சயம் பெரிய வரவேற்ப்பை பெரும் என்று நினைக்கிறேன்.

எப்பூடி.. said...
This comment has been removed by the author.
R.Gopi said...

செய்தி தொகுப்பு கலக்கல் ரகம்...

விஜய் பத்தி எல்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல...

மொதல்ல அவருக்கு எதிரி அவரோட அப்பாவும், அவரோட அறிக்கையும் தான்னு யாராவது சொல்லுங்க... புள்ள பொழச்சு போவட்டும்...

Yoganathan.N said...

நண்பரே, இனி கௌதம் + அஜித் கூட்டணி எப்போதும் சேராது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :(
கௌதமிற்கு எப்போதும், அவரது திமிர் பேச்சே அவருக்கு வில்லன். பார்ப்போம்...

நண்பர் எப்பூடி அவர்களின் பில்லா 2 வாழ்த்துக்கு நன்றிகள். :)

எஸ்.கே said...

குழந்தை எதிர்காலத்திற்காக உழைக்கிறேன் என்று அந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்!
செய்திகள் நன்றாக இருந்தன!

Durgeshwaran said...

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அஜித் அவர்கள் கிரீடம் பிளாக் பஸ்ட்டர் வெற்றி(???) அடிந்த உடனே இயக்குனர் விஜயின் அடுத்த படத்திற்கு கால் சீட் கொடுத்திருக்கலாமே???. அத்தோடு இன்னும் அவர் கிரீடம் விஜய் அல்ல .. மதராசபட்டினம் விஜய், தெய்வதிருமகள் விஜய் என்று பரிமானம் எடுத்த உடனே தானே அண்ணன் அஜித் அவர்களுக்கு இந்த ஞானோதயம் வந்தது.. அதை மட்டும் ஏன் குறிப்பிடவில்லை நீங்கள் ????
வெங்கட் பிரபு சார்க்கு செகண்ட் கமிட்மென்ட் கொடுக்க வாகு கொடுத்து விட்டு தற்போது எஸ்கேப் ஆவது ஏன்??? தாராள மயமான அஜித் 50வது படத்தை கிளௌட் நயன் மூவீஸ்க்கு தத்து கொடுத்தது ஏன்?? என்றும் கூற மறந்து விட்டீர்கள்!!!

பாலா said...

@Durgeshwaran

ரொம்ப நாள் கழித்து கமெண்ட் போட்டதற்கு நன்றி நண்பரே. இந்த கட்டுரையில் அஜீத் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார் என்றுதானே கூறி இருக்கிறேன்.மற்றபடி இயக்குனர் விஜய்க்கு போனால் போகட்டும் என்று வாய்ப்பு வழங்கினார் என்று கூறினேனா? இல்லையே? கிரீடம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று கூறினால் அதை அஜீத் ரசிகர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது ஒரு நல்ல படம். ஆனால் சரியாக ஓடவில்லை. கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு இப்படி எல்லாம் உளற வேண்டாம். உங்களின் கேள்விகளின் நோக்கம் எனக்கு புரியவில்லை. அடிக்கடி வாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...