டிஸ்க்: தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.படங்கள், கருத்துக்கள் சிரிக்க மட்டுமே...
கீழே இருப்பது இது போனஸ்
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>
கற்றதும் பெற்றதும் உணர்ந்ததும்
எந்திரன் படம் வரும் வரை அதை பற்றி பேசக்கூடாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் விதி. பேசும்படி ஆகி விட்டது. இருந்தாலும் நான் பேசப்போவது எந்திரன் பற்றி அல்ல. ரஜினி பற்றி. சுமார் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நெய்வேலி நோக்கி காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கமே திரண்டு ஒரு ஊர்வலம் நடத்தியது. இதில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. மாறாக சென்னையில் இருந்தே போராடலாமே என்று உண்ணாவிரதம் இருந்தார். கட்சி வித்தியாசம் இன்றி அனைவரும் வந்து ஆதரவு தெரிவித்தனர் என்பது வேறு விஷயம். நெய்வேலி ஊர்வலம் நடந்து முடிந்த பிறகு, பாரதிராஜா தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள் எல்லாம் காவிரி பிரச்சனை பற்றி பேசியதை விட, ரஜினி அதில் கலந்து கொள்ளாததை பற்றிதான் பேசினார்கள். அவர்கள் பேசியதில் தமிழ்பற்றோ, பொது நலமோ இருந்ததாக தெரியவில்லை. மாறாக ரஜினி என்பவரை திட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்ற முனைப்பே தெரிந்தது. நடக்கும் நிகழ்ச்சியை தான் பெரிய ஆள் என்று காட்டி கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டனர். இதில் வடிவேலுவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகன், அவன் நடிகன் என்பதையும் தாண்டி மக்களால் உயர்வாக எண்ணப்படுகிறானே என்ற வயிற்றெரிச்சல், அவர்களை இப்படி எல்லாம் பேச வைத்தது. அப்போது அமீர் ஒரு பேட்டியில் கூறினார். "எதற்கெடுத்தாலும் ரஜினியையே கூப்பிடுகிறீர்களே? அவர் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்? உங்கள் சொந்த ஊரை எதிர்க்க சொன்னால் எதிர்ப்பதற்கு யாருக்குதான் மனசு வரும்?".
இதில் பணம் வந்ததும் ரஜினி தடம் மாறி விட்டாராம். ஆமாம் அவர் மட்டும் எம்ஜியார் மாதிரி இருந்திருந்தால் ஒரு பயலும் அவருக்கு எதிராக எழுதி இருக்கமாட்டான். எவனும் பேசி இருக்கமாட்டான். எந்திரன் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல். அதனை வரவேற்க மனமில்லாமல், வயிற்றெரிச்சலில் புகைந்து வாய்க்கு வந்ததை புலம்பி தள்ளி கொண்டிருக்கிறார்கள். இந்த வயசுல இவருக்கு இது தேவையா என்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஐம்பதொம்போது வயசுலேயே தூக்கில் தொங்கி விடுவார்கள். இல்லை இவர்கள் பரம்பரையில் எல்லோரும் அப்படித்தான் போலும். எந்த ஒரு உழைப்பாளியும் தான் உழைப்பில் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதிலும், அதுபற்றி பெருமை பட கூறுவதிலும் என்ன தவறு இருக்கிறது?
இதில் புதுசா ஒரு கும்பல் படத்தில் சண்டை காட்சிகளில் ஈடுபடுவது ரஜினியே அல்ல. அலெக்ஸ் மார்டின் எனும் ஒருவர். ரஜினி மக்களை ஏமாற்றுகிறார் என்று கதறுகின்றார்கள். கஷ்டப்படுவது ஒருவன், கைத்தட்டல் வாங்குவது ஒருவன் என்ற ஜால்ரா பின்னூட்டம் வேறு. கதாநாயகர்கள் டூப் போட்டு நடிப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஆனானப்பட்ட புருஸ்லீக்கே ஜாக்கிசான் என்னும் ஒரு டூப் நடிகர் தேவைப்பட்டார். புருஸ்லீ மீதான பொறாமையில் பொங்கிய பலர் இதனை ஆதாரத்துடன் வெளியிட்டனர். இதனை புருஸ்லீ மறுக்கவில்லை. ஜாக்கிசானும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல ஜாக்கிசானும் டூப் நடிகரை பயன்படுத்துவார். இதனை கேலி செய்து ஜெட்லி நடித்த ஒரு படத்தில் ஜாக்கி என்று ஒரு கோழை சினிமா நடிகர் பாத்திரமே உருவாக்கப்பட்டது. இதனை செய்தவர்கள்தான் காணாமல் போனார்கள். ஜாக்கிசான் அல்ல. ஏனென்றால் செய்தவர்கள் எண்ணத்தில்தான் விஷம் உள்ளது. ஜாக்கிசான் எண்ணத்தில் அல்ல. டூப் போட்டு நடிப்பதை மேடையிலேயே ரஜினி ஒப்புக்கொண்டார். கஷ்டப்படுவது ஒருவர். ஆனால் பெயர் எல்லாம் எனக்கு கிடைக்கிறது என்று.
சமுதாய நோக்கம் என்று சால்ஜாப்பு சொல்லி இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வரும் பொதுநலவிரும்பிகள் சமுதாயத்துக்காக ஒரு துரும்பை கிள்ளி போட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. எந்திரன் படத்தை தயாரிக்க செலவழித்த பணத்தை வைத்து ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கலாமாம். ஏனென்றால் இவர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தில் தன் உணவுக்கு போக மீதியை எல்லாம் தானம் செய்து விடுவார்கள். சத்தமில்லாமல் ரஜினி செய்து வரும் நல்ல காரியங்கள் எத்தனை என்பது யாரும் அறியாதது. இந்த பதிவு என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவே எழுதப்பட்டது. இதனால் எதுவும் மாறப்போவதும் இல்லை. உங்கள் பார்வையின் படி, ரஜினி திருந்தப்போவதும் இல்லை. வீணாக வயிற்றெரிச்சல் படாமல் (ரஜினி போல் இல்லாமல் நீங்களாவது) எதாவது உருப்படியான காரியங்களில் ஈடுபடுங்கள்.
இளைய தளபதி விஜய் காவல் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து வருவதும், த்ரீ இடியட்ஸ் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருப்பதும் தெரிந்ததே. இது போக சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சுறா நடிப்பதற்கு முன்னரே இப்படம் பற்றிய பேச்சு அடிபட்டது என்னவோ உண்மை. அதே போல இயக்குனர் லிங்குசாமியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இந்த வாய்ப்பு சிம்புவினால் நிராகரிக்கப்பட்டது என்றும், அந்த காரணத்துக்காகவே படத்தை ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் விஜய் கையில் இருப்பது ஐந்து படங்கள். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்றும் சிந்திக்க வைக்கிறது. ராஜா, சித்திக் தவிர மற்ற மூன்று இயக்குனர்களும் இழுவை மன்னர்கள். குறைந்தது ஒரு வருடமாவது படப்பிடிப்பை நடத்தாமல் விடமாட்டார்கள். சங்கர் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் விஜய் வருடத்துக்கு இரண்டு படமாவது கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர். மேலும் சங்கர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் வேறு படங்களில் தலை காட்டக்கூடாது என்று அன்பு கட்டளை வேறுஇடுவார். அப்படி பார்த்தால் விஜயின் முகம் நமக்கு மறந்து போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். இதே நிலைதான் விக்ரமுக்கும் ஏற்பட்டது. இதை விஜய் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
மறுபுறம் ஆண்டுக்கு ஒருபடம் என்ற ரீதியில் நடித்துவந்த அஜித் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதில் முதல் படமான மங்காத்தா அஜித் திரை உலகில் அடி எடுத்து வைத்த நாளான ஆகஸ்ட் இரண்டாம் தேதியே துவங்கி விட்டது. இது தவிர கிரீடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படமும், விஷ்ணுவர்தன் இயக்கும் பில்லா இரண்டாம் பாகத்திலும், கவுதம்மேனன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இதில் அறிவுஜீவி இயக்குனர் கவுதம்மேனன் அளித்த பேட்டி அஜித் ரசிகர்கள் மனதில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் தரப்பில் இருந்து எந்த ரியாக்சனும் இல்லாத நிலையில், இந்த படம் பற்றிய முடிவு மர்மமாகவே இருக்கிறது. கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்காமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து. ஏனென்றால் இப்பேர்பட்ட உலகப்புகழ் பெற்ற, தானே சுயமாக சிந்தித்து, ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு படமெடுக்கும் திறமையான ஒரு இயக்குனர் படத்தில், சாதாரணமான ஒரு நடிகன் நடிப்பது அந்த இயக்குனருக்குத்தான் இழுக்கு.
காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் கனஜோராக முடித்து கவுண்டவுன் தொடங்கி விட்டது. இதற்கு செலவிட்ட தொகை மட்டும் சுமார் 35,000 கோடியாம். அடேங்கப்பா.... இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது? என்று சில வருடங்களுக்கு முன்னாள் அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இந்தியா கிரிக்கெட் போட்டிகள், அது தொடர்பான விளம்பரங்கள் இவற்றுக்கு செலவு செய்யும் தொகை என்று சில நூறு கோடிகள் பற்றி விவரம் சொல்லி இருந்தார்கள். இப்போது அது ஆயிரம் கோடி ஆகி, பத்தாயிரம் கோடியும் ஆகி விட்டது. ஒருவேளை பொருளாதார வளர்ச்சி என்று சொல்கிறார்களே அது இதுதானா? சூப்பர் ஸ்டார் ஒருதடவை சொன்னார் "எங்கே பணம் இருக்கிறதோ அங்கே அரசியல் இருக்கும்." இது எவ்வளவு உண்மை. இந்த போட்டிகளுக்காக செலவிட்ட பணத்தில் ஏகப்பட்ட ஊழல்கள், முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மூன்று பேரை சஸ்பெண்டும் செய்துவிட்டாயிற்று. சம்பந்தப்பட்ட அரசியல்வாதி சுரேஷ் கல்மாடி மட்டும் இன்னும் பதவி விலகாமல் இருப்பது சமூகத்தில் மீது, விளையாட்டு துறை மீது அவருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது . தான் எவ்வளவு கேவலப்பட்டாலும், பதவியை மட்டும் துறந்து விடக்கூடாது. அப்புறம் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்ற பாடத்தை எங்கு கற்றிருப்பார் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகத்திலா?
நாளிதழில் வெளிவராத மனதை கலங்கடித்த ஒரு செய்தி. சென்னையில் இருக்கும் என் நண்பன் ஒருவனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது, "ஆடிப்பெருக்கு அன்று எங்க ஏரியாவில் இருக்கும் ஒரு பள்ளிக்கு விடுமுறை." என்று சொன்னான். "இப்பலாம் ஆடிப்பெருக்கு அன்று விடுமுறை கிடையாதே?" என்று கேட்டேன். அவன் காரணம் வேறு என்று சொன்னதை கேட்டு திடுக்கிட்டேன்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போகும்படி செய்தது எது? அந்த ஆசிரியை திட்டிய வார்த்தைகளா? கண்டிப்பாக இருக்காது. இப்போதெல்லாம் பெரும்பாலான நகர்ப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதே இல்லை. நாம் அவமானப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று முடிவுகட்டும் அளவுக்கு அவன் மனதை பாதித்தது வேறு ஒரு காரணம். அந்த காரணம் நமக்கும் தெரியும். மவுனமாக ஒப்புக்கொள்வோம். ஆனால் யாரும் சட்டை செய்வது கிடையாது. ஏனென்றால் இது சமூக பிரச்சனை அல்லவே? நம் குழந்தை என்று வந்தால்தான் பிரச்சனை. பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றபின் மாலை மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்து விடும் குழந்தைகள் சுமார் நான்கு மணிநேரம் தனிமையில் பொழுது போக்குகிறார்கள். வீட்டிற்கு வந்த பின்னரும் அந்த குழந்தை தனிமையிலே விடப்படுகிறது. அதன் துணை கார்ட்டூன் கதாபாத்திரங்களும், பேசாத பொம்மைகளும்தான். எனவே அக்குழந்தை தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நம் பெற்றோர்கள் நமக்கு துணை என்று நினைப்பதில்லை. கூடுதலாக தான் பார்க்கும் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களில் விதவிதமாக சாவது எப்படி என்று காட்டுவதை முழுவதுமாக உள்வாங்கி விடுகிறது.
Copyright 2009 பாலாவின்-பக்கங்கள். Powered by
Blogger.
Blogger Templates created by Deluxe Templates
Wordpress theme by digitalnature