அப்பாடா ஒரு வழியா நம்ம நித்யாவை பிடித்து விட்டார்கள். இமாச்சல் பிரதேஷில் ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த அவரை எதிர்பாராத விதமாக கைது செய்து விட்டார்கள். இனி என்ன நடக்கும்? அவர் மீது தினம், தினம் புது புது வழக்குகள் பதிவு செய்யப்படும். தினம் நாளிதழ்களில் அவர் பெயர் இடம் பெரும். சி பி ஐ சோதனை, ஆபாச சீடிக்கள், சரோஜா தேவி புத்தகங்கள் என்று ஏதாவது ஒன்று அவரின் ஆசிரமத்தில் இருந்து கண்டெடுக்கப்படும். இப்போதும் இவை எல்லாம் நடந்து கொண்டுதானிருக்கிறது. அப்புறம் என்ன? அவர் சிறையில் குப்புற படுத்தார், மல்லாக்க படுத்தார், குறட்டை விட்டார் என்று ஏதாவது செய்தி போடுவார்கள். பின் ஏதாவது பிரச்சனை வந்தால், (கவலைப்படாதீர்கள் காவிரி பிரச்சனை Coming soon..) அதை தூக்கி போட்டு விட்டு, நாம் போராட கொடி பிடிக்க, உச்சுக்கொட்ட போய் விடுவோம். அதற்குள் நம்ம கடமை வீரர்கள் நித்யாவிடம் பேரத்தை முடித்து கொண்டு அவர் மீது உள்ள வழக்குகளை உப்பு சப்பில்லாமல் ஆக்கி விடுவார்கள். இதெல்லாம் நம் கண்ணுக்கு தெரியாது. காவிரி போராட்டத்துக்கு ரஜினி வந்தாரா, அஜித் வந்தாரா, அவர்கள் ஆயா வந்தாரா என்று ஆராய சென்று விடுவோம்.
எனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை சொல்கிறேன். இதை யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. திரை உலக நட்சத்திரங்கள் பலரையும் ஐபிஎல் போட்டிகளில் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன்னால், திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்திருந்தார். எந்த ஆட்டம் என்று சரியாக ஞாபகம் இல்லை. சரி அவர் எந்த அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? சென்னை அணிக்கு? இல்லை.சரி பெங்களூரு அணிக்கு? இல்லவே இல்லை. மும்பை அணிக்குதான் ஆதரவு அளித்தார். இதில் உள்ள உள் நோக்கம் தெரிகிறதா? ரஜினி அடிப்படையில் மராட்டியர். அதனால்தான் அவர் மும்பைக்கு ஆதரவு தெரிவித்தார். தொடங்கட்டும், தூக்கி விட்ட தமிழகத்துக்கு துரோகம் இழைத்த ரஜினிக்கு எதிராக நடிகர் சங்கத்தில் தீர்மானம் கொண்டு வரட்டும். எங்கே நம் சத்யராஜ், சீமான் எல்லாம்? உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை? தொடங்குங்கள் உங்கள் வசை பாடுகளை. அவர் மும்பைக்கு ஆதரவு தெரிவித்தது தெரிந்தால் கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும். எனவே முதல் வேலையாக இதை அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள். கொஞ்ச நாள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் பலருக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்த புண்ணியம் உங்களை சேரும்.
நமது தல தன் வாழ்நாள் லட்சியமான கார் பந்தயங்களில் தன் ஆட்டத்தை தொடங்கி விட்டார். முதலில் சோபிக்க தவறினாலும், முடிவில் 18வது இடத்தை பிடித்து அசத்தினார். தீவிர பயிற்சி, விடா முயற்சி(இது அவருக்கு யாரும் சொல்லிதர வேண்டியதில்லை) இருந்தால் இன்னும் பல உயரங்களை அடையலாம். அவரை பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக அவர் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் நபர்கள், இந்த விஷயத்தில் அவரை பாராட்டா விட்டாலும் மட்டம் தட்டாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவர் இப்போது ஈடுபட்டிருப்பது நடிப்பு அல்ல. நம் நாட்டின் ஒரு பிரதிநிதியாக அந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் தல....அப்படியே எங்களையும் கொஞ்சம் கவனிங்க. வருஷத்துக்கு ஒரு படம் கூட இல்லனா எப்படி?


எது எப்படியோ பதிவு போட தினம் ஏதாவது மொக்கை செய்தி கிடைத்து விடுகிறது
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
3 comments:
thamizhan!
korr!
korrrrrr!
-> முதல் விசயம்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுகின்றது. இதில் என்ன நடக்கின்றது என பொருத்திருந்து பார்ப்போம்...
-> இரண்டாவது விசயம்
உள்கூத்து புரிகிறது. ஹிஹி. என்ன செய்வது, ரஜினி தும்மினால் கூட குற்றம்... 1Btw, சீமான் கூடவா???
-> மூன்றாவது விசயம்
//அவரை பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக அவர் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் நபர்கள், இந்த விஷயத்தில் அவரை பாராட்டா விட்டாலும் மட்டம் தட்டாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவர் இப்போது ஈடுபட்டிருப்பது நடிப்பு அல்ல. நம் நாட்டின் ஒரு பிரதிநிதியாக அந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்//
அதே அதே... என் மனதில் உள்ளவைகளை வார்த்தைகளால் கொட்டி விட்டீர்கள்... நன்றி
-> நான்காவது விசயம்
இவனுகளுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா??? அது எப்படி வாய் கூசாம அவ்லோ பெரிய மேடையில் அத்தனை பேருக்கு முன்னால் இப்படி வெட்கமே இல்லாமல் பேச முடிகிறது???
-> ஐந்தாவது விசயம்
யார் மீது குற்றம் என்று ஆராய்ந்து நேரத்தை வீணடிப்பதற்கு பதில், இதனை எப்படி தீர்வு காணலம் என்பதை யோசிக்கலாம் இவர்கள். இதைக் கூட செய்யத் தவறினால், அப்புறம் இவர்களுக்கு எதற்கு பதவி, கட்சி etc etc. சிகிச்சைக்காக வந்த என்பது வயது அம்மையாரை விரட்டி அதன் மூலம் அரசியல் செய்யும் இவர்களுக்கு நல்ல சாவெ வராது...
@ Yoganathan.N
வருகைக்கு நன்றி யோகநாதன்....
Post a Comment