இன்று பதிவர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் ஒரு நபர் என்றால் அது கண்டிப்பாக விஜய்தான். இது மறுப்பதற்கில்லை. நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ, வாழ்த்தியோ, பரிகாசம் செய்தோ எதோ வகையில் இவர் பற்றி செய்தி வந்து கொண்டே இருக்கிறது.
விஜய்யை பிடிக்காதவர்கள் சொல்லும் முதல் காரணம் விஜய் தன் தந்தை மூலம் பின்வாசல் வழியாக சினிமாவிற்கு வந்தவர் என்று. அப்படி சொல்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் நடித்த வெற்றிப்படங்கள் எதுவுமே அவருடைய தந்தை இயக்கியது அல்ல. இயக்குனர் பாரதிராஜா கூட தன் மகனான மனோஜை சினிமாவில் நுழைக்க பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லையே. ஒருவர் சுத்தமாக திறமையே இல்லாமல் இருந்தால் அவரால் வெகு காலம் சினிமாவில் நிலைக்க முடியாது (தந்தை சினிமாகாரராய் இருந்தால் கூட!). உதாரணமாக மனோஜ், சிபிராஜ், துஷ்யந்த்(சிவாஜி பேரன்) இன்னும் பல. விஜய் கிட்டதட்ட 16 வருடங்கள் சினிமாவில் நிலைத்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.
சரி சரி. நீங்கள் உச் கொட்டுவது கேட்கிறது. இது நடிகர் விஜய் அவர்கள் புகழ் பாடும் பதிவு அல்ல. விஜய் பற்றி உண்மையான நடு நிலைமையான என் கருத்துக்களையே பதிவு செய்ய விரும்பினேன். அதன் விளைவே இந்த பதிவு.
திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஒரு திறமையான மசாலா பட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர். பெரும்பாலான இயக்குனர்கள் தங்கள் பிள்ளைகளை தன் படங்களில் பயன் படுத்துவதும், அவர்களை நடிகன் ஆக்க விரும்புவதும் இயல்புதான். அந்த நிலையில்தான் திரு எஸ்.ஏ.சி யும் மகனான விஜய்யை தன் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பயன்படுத்தினார். சினிமா மோகம் மகனையும் தொற்றிகொள்ள அவரை சினிமாவுக்காகவே உருவாக்க தொடங்கினார்.
தன் மகனின் தோற்றம் காரணமாக (இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று பலபேர் கூறியதாக விஜய்யே பேட்டியில் கூறி உள்ளார்) வாய்ப்புகள் அமையாமல் போக, தானே தன் மகனை கதாநாயகன் ஆக்கி நாளைய தீர்ப்பு என்னும் ஒரு மொக்கை படத்தை எடுத்தார். எல்லா தந்தைகளும் செய்யும் ஒரு தவறை இவரும் செய்தார் ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே). தன் மகனின் உருவ அமைப்பு, நடிப்புத்திறன் இவற்றை பற்றி யோசிக்காமல், தன் மகனின் தலையில் அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றி தோல்வி அடைந்தார் எஸ்.ஏ.சி. (இதே நிலை காதல் அழிவதில்லையில் சிம்புவுக்கும், சக்கரக்கட்டியில் சாந்தனுவுக்கும் ஏற்ப்பட்டது). பிறகு செய்வதறியாது தன் மகனின் முகத்தை மக்களுக்கு பரிச்சயம் ஆக்க வேண்டும் என்று பல படங்கள் இயக்கத் தொடங்கினார். அனைத்தும் அவரின் Trademark கவர்ச்சி, கபடி, சோப்பு புகழ் படங்கள்.
அப்போதுதான் வந்தார் ஆபத்பாந்தவன் விக்ரமன். பெரும்பாலான பெண்களுக்கு பூவே உனக்காக வந்த பிறகுதான் விஜய் என்று ஒருவர் இருக்கிறார் என்றே தெரியும். விஜய் புரிந்து கொண்டார். பெண்களைக்கவரும் நாயகன் தான் நிலைத்து நிற்க முடியும், சோப்பு போடும் நாயகன் கரைந்து விடுவான் என்று. தன் பாதையை மாற்றினார்.
விஜய் என்றவுடன் நினைவுக்கு வருவது அவருடைய நடனம்தான். இத்தனைக்கும் அந்த கால கட்டத்தில் பிரபுதேவா பிரபலமாக இருந்தார். பிரசாந்த், அருண்விஜய் கூட நன்றாக ஆடுபவர்கள். ஆனால் விஜய்யின் நடனம் அனைவராலும் குறிப்பாக பெண்களால் விரும்பப்பட காரணம், அவர் ஆடும்போது தான் டான்ஸ் ஆடுகிறோம் என்கிற எண்ணம் அவர் முகத்தில் தெரியாது. அதனால் அவர் நடனம் ஆடும்போது மிக இயல்பாக இருக்கும்.
இப்படி ஒழுங்காக போய் கொண்டிருந்த விஜய் எங்கே சறுக்கினார்?

இப்போது சன் தொலைக்காட்சி செய்கிறதே அதைப்போல தன் மகன் நடித்த படம் ஓட வேண்டும் என்ற ஆசையில் விஜயை முன் நிறுத்தி அவர் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார் என்பது போல ஒரு மாயை உருவாக்கி தன் சொந்த செலவில் விஜய் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய சொன்னார் அவர் தந்தை. சில திரை அரங்குகளில் அவர் படம் ஓட வைக்கப்பட்டது. இதனால் விஜய் நடித்த சில சுமாரான ஓட கூடிய படங்கள் கூட ஓட வைக்கப்படுகின்றனவோ என்கிற எண்ணம் மக்களிடையே வரத்தொடங்கியது.
மேலும் தன் வெற்றி பட பார்முலாக்களை பிடிவாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து மக்களிடையே ஒரு சலிப்பை ஏற்படுத்தி சரிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

S - STRENGTH - பலம்
W - WEAKNESS - பலவீனம்
O - OPPORTUNITY - வாய்ப்புகள்
T - THREATS - அச்சுறுத்தல்கள்.
இவற்றை விஜய்க்கு பொருத்தி பார்க்கலாம்.
பலம்
1. ரசிகர்கள். விஜய்க்கு பெரும் அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்.
வாய்ப்புகள் இவற்றை விஜய்க்கு பொருத்தி பார்க்கலாம்.
பலம்
1. ரசிகர்கள். விஜய்க்கு பெரும் அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்.
2. விஜய் படங்களுக்கு இருக்கும் பெரிய ஒப்பனிங். இதன் மூலம் மவுத் டாக் அதிகம் கிடைக்கும்.
பலவீனம்
1. நடிப்பு. உண்மையிலேயே இது அவரின் பலவீனம்தான். தனுஷ் கூட அனாயசமாக செய்த காதல் கொண்டேன் டைப் கரெக்டர்களை நேர்த்தியாக செய்ய முடிய வில்லை(கண்ணுக்குள் நிலவு)
2. இமேஜ் வட்டம். இது பொதுவாக எல்லா நடிகர்களுக்கும் உண்டு. ஆனால் இவரின் போட்டியாக கருதப்பட்ட அஜித் கூட மெல்ல மெல்ல இந்த வட்டத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் இதில் இருந்து வெளி வர விரும்பவில்லை. சமீபத்திய அவரின் நடவடிக்கைகள் இதற்க்கு சான்று. மேலும் தொடக்கப்பாடலில் காமிராவை பார்த்து பாடுவது போன்ற காட்சிகள்.
1. விஜய்க்கு இருக்கும் மினிமம் காரண்டி. இதன் மூலம் விஜய் சில ரிஸ்குகள் எடுக்கலாம். சில முயற்சிகள் பலனளிக்காமல் போனாலும் அவருடைய ரசிகர்கள் நஷ்டத்தை தாங்கி பிடித்து விடுவர்.
2. சில தொலைக்காட்சிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு. இதை சரியாக பயன் படுத்தினால் கண்டிப்பாக ஒரு புதிய வழியில் பயணிக்கலாம்.
அச்சுறுத்தல்கள்
1. ரிஸ்க் எடுக்க தயக்கம். ஒரு பேட்டியில் விஜய் எனக்கு அவார்ட் படங்களில் நடித்து ரிஸ்க் எடுப்பது பிடிக்காது என்று கூறி உள்ளார்.
2. சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்று வேறு ஒரு ரூட்டில் தமிழ் திரை உலகம் பயணித்து கொண்டிருக்கும் பொது, இன்னும் தமிழ் படங்களை 10 ஆண்டுகள் பின்னிழுத்து பழைய தெலுங்கு பட பார்முலாக்களை இன்னும் பயன்படுத்துவது( இப்பலாம் தெலுங்கில் நிறைய நல்ல படங்கள் வருகின்றன)
இந்த நான்கு விதமான அலசல் என்னுடைய மனதில் பட்டவை. இவற்றில் மேலும் சில பாயிண்டுகள் விடுபட்டிருக்கலாம்.
இவற்றை கண்டுபிடித்து தன் பாணியை மாற்றினால் கண்டிப்பாக இன்னும் சிறப்பான இடத்தை அடைய முடியும்.
விஜய் கெட்டிக்காரர் என்று நம்புவோம்
தல போல வருமா - அஜித் என்னும் உழைப்பாளி - வெகு விரைவில்......
5 comments:
//இவரின் போட்டியாக கருதப்பட்ட அஜித்
விஜய போய் தலைக்கு போட்டின்னு சொன்னத வன்மையா கண்டிக்கிறேன்
நல்ல பதிவு பாஸ்..
@ராஜா,
நீஙக்ளே தலையை இபப்டி இறக்கி சொன்னா எப்படி பாஸ்? (சும்மாதான் சகா. அக்ரிமெண்ட் ஞாபகமிருக்கு :)
//விஜய போய் தலைக்கு போட்டின்னு சொன்னத வன்மையா கண்டிக்கிறேன்
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க !!!!!!!
அடியேனின் இடுகைக்கு கருத்துரை இட்டதற்கு நன்றி கார்க்கி :))))))))
படித்தேன் உங்கள் கருத்துகள் அவை சில உண்மையானவை.
mhmmm
hi
king of FLOP movies - better title right?
Post a Comment