ஆங்கில த்ரில்லர் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் நம்மை கட்டிபோடுபவை. அதிலும் ஒரு சில படங்கள் திடீரென்று ஒரு புது டிரெண்டையே உருவாக்கி விடும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சா (
SAW ) என்ற ரத்தக்களரி பட தொடர்கள். ஏழு பாகங்கள் வரை அதை இழுத்து சென்று, அனைத்தையுமே வெற்றி பெறச்செய்வது, அதிலும் ஒரே கதையை வைத்துக்கொண்டு என்பது சாதாரண காரியமல்ல. இன்றுவரை ஹாரர்/த்ரில்லர் பட ரசிகர்களின் ஹாட் பெவரிட் படங்களுள் SAW ஒரு முக்கிய இடம் வகிக்கிறது என்பது உண்மை. நான் இப்போது கூறப்போகும் படம் அதுவல்ல. ஆனால் கிட்டத்தட்ட
SAW மாதிரியே கதையம்சம் கொண்ட வேறொரு படம். இதில் ரத்தக்களரி மிக குறைவு. ஆனால் ரத்தக்களரி ஏற்படுவதற்கு முன் நம் மனதில் உண்டாகும் தவிப்பு இருக்கிறதே அதுதான் இந்த படத்தின் வெற்றி. மூன்று பாகங்கள் வெளிவந்த இந்த பட வரிசையின் முதல் படம் கியூப் (CUBE - 1997). தொடர்ச்சியாக ஹைபர் கியூப் (HYPER CUBE - 2003) மற்றும் கியூப் ஸீரோ (CUBE ZERO - 2004) என்று வெளிவந்து வெற்றி பெற்றன.
சிறு வயதில் நாம் சொல்லும் விடுகதைகளில் ஒன்று." நீங்கள் ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள், எதிரே ஆறு கதவுகள். எதேனும் ஒன்றை திறந்து தப்பிக்க வேண்டும். ஒரு கதவில் மட்டுமே வழி உண்டு. மீதி ஐந்தில் மரணம் காத்திருக்கிறது. எப்படி சரியான கதவை கண்டுபிடிப்பீர்கள்?", இந்த புதிரை நீங்கள் சிறுவயதில் கேட்டிருப்பீர்கள்தானே? இதுதான் இந்த படத்தின் அடிப்படை.
மயக்கமோ ஆழ்ந்த உறக்கமோ, டக்கென விழித்து பார்க்கிறீர்கள். சதுர வடிவ ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த அறையின் ஒவ்வொரு சுவற்றின் நடுவிலும் ஒரு கதவு வீதம் ஆறு கதவுகள்(மேலே கீழே சேர்த்து). கதவு என்றவுடன் பெரிதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஒரு ஓட்டை. அதை திறந்து வெளியேறினால் அது இன்னொரு அறைக்குள் செல்கிறது. அதுவும் முந்தைய
அறை போன்றே இருக்கிறது ஆனால் வேறு நிறத்தில். இப்படி வரிசையாக நிறைய அறைகள் உள்ளனே. ஏதாவது ஒரு அறையில் உள்ளே கால் வைத்தவுடன், நெருப்போ, அமிலமோ, கத்தியோ, விஷ வாயுவோ தாக்கி இருக்க நேரிடும். என்ன கொடுமை சார் இது? என்று கேட்கிறீர்களா? இது போல நிறைய மனிதர்கள் இங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு அறையை சுற்றி இருக்கும் ஆறு கதவுகளில் எந்த கதவின் வழியாக சென்றால் பாதுகாப்பான அறைக்கு செல்ல முடியும்? எந்த
அறை மரணத்துக்கு அழைத்து செல்லும்? என்று யாரும் சொல்லி விட முடியாது. உள்ளே இருக்கும் யாருக்குமே, தங்கள் எப்படி உள்ளே வந்தோம்? எப்படி வெளியே செல்வது? தங்களை யார் இங்கே அடைத்தது? எதற்கு அடைத்தார்கள்? என்பது தெரியாது.
தனித்தனி அறையில் அடைக்கப்பட்ட ஆறேழு பேர் ஒரு கட்டத்தில் ஒரே அறையில் சந்திக்கிறார்கள். இதில் ஒரு சிலர் காயங்களோடு, ஏற்கனவே மரணத்திலிருந்து தப்பியவர்கள் என்று சொல்லாமேலேயே தெரிகிறது. அவர்களுள் ரீன்ஸ் என்பவர் ஒவ்வொரு அறையிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று கருதி, தன்னுடைய ஷூவை லேசில் கட்டி தூக்கி போடுவார். எதுவும் தாக்கவில்லை என்றவுடன் உள்ளே செல்வார். இல்லையேல் லேசை இழுத்து ஷூவை திரும்ப எடுத்து அடுத்த அறையை முயற்சி செய்வார். மற்றவர்கள் அவரை பின்தொடர்வார்கள். ஆனால் ஒரு அறையில் அவரது கூற்று பொய்யாகி அவர் இறந்து விடுகிறார். எல்லோரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். இந்த குழுவில் லீவன் என்னும் கணித மாணவி இருக்கிறாள். ஒவ்வொரு கதவிலும் சில எண்கள் (உதாரணமாக 235,345,675) பொரிக்கபட்டிருப்பதை பார்க்கும் அவள், அவை ஒரு முப்பரிமாண தளத்தில் இருக்கும் (X,Y,Z), கோஆர்டினேட்டுகள் என்று கண்டுபிடிக்கிறாள். அதாவது அதாவது நாம் க்யூப்களை வைத்து ஒரு பக்கம் ஒரே கலர் வருமாறு ரூபிக் கியூப் என்று ஒரு கேம் விளையாடுவோமே? அதே போல சிறு சிறு கியூப்கள் சேர்த்து ஒரு பெரிய கியூப் வடிவமைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடிக்கிறாள்.
மொத்தம் 26 X 26 X 26 = 17600 அறைகள் என்று சொல்கிறாள். எல்லோருக்கும் தலையே சுற்றி விடுகிறது. இந்த 17000 சொச்சம் அறைகளில் எதில் ஆபத்து இருக்கிறது, எது பாதுகாப்பானது என்று கண்டு பிடித்து தப்பிப்பதற்குள் இரண்டு ஜென்மம் கண்டுவிடும் என்று சோர்ந்து விடுகிறார்கள். அதற்கும் லீவன் ஒரு வழி சொல்கிறாள். "நடந்த விஷயங்களை வைத்து பார்க்கும்போது, பகா எண்கள் (Prime Numbers) பொறிக்கப்பட்ட அறைகளிலேயே ஆபத்து இருக்கிறது." என்று கூறுகிறாள். மேலும், ஒரு நேர்கோட்டில் 26 அறைகள் மட்டுமே இருக்கும், ஒரே திசையில் 26 அறைகள் நகர்ந்து சென்றால் கண்டிப்பாக இந்த பெரிய கியூபின் ஓரத்துக்கு சென்றுவிடலாம் அதற்கப்புறம் தப்பி விடலாம்." என்றும் கூறுகிறாள். எல்லோரும் அதன்படி செல்கிறார்கள். ஆனால் அவள் கூற்றை பொய்யாக்கும் விதமாக, Prime number
பொறிக்காத ஒரு அறையில் ஆபத்து உண்டாக, எல்லோரும் லீவன் மீது பாய்கிறார்கள். இப்போது நிதானமாக அமர்ந்து கணக்கு போட்டு பார்த்ததில் மேலும் ஒரு புது விஷயத்தை கண்டு பிடிக்கிறாள் லீவன். Prime number மட்டுமல்ல, அதன் மடங்குகள்( உதாரணமாக 7,49,343,2401 ) எண்ணிட்ட அறைகளும் ஆபத்தானவை என்று அறிவிக்கிறாள். அவள் முகத்தில் சந்தோஷமும், கவலையும் மாறி மாறி வருகின்றன.
ஒரு எண்ணை பார்த்தவுடன் அது Prime numberஇன் மடங்கா இல்லையா என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம் அதுவும் கால்குலேட்டர் இல்லாமல் கண்டுபிடிக்க நேரமாகும் என்று கூறுகிறாள். இந்த குழுவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனும் இருக்கிறான், அவனை இழுத்துக்கொண்டு அலைவது தேவை இல்லாத சுமை என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அவனுக்கு ஒரு திறமை இருக்கிறது. எந்த எண்ணை பார்ததுமே அது எந்த எண்ணின் மடங்கு என்பதை சொல்லி விடுவான். அவன் உதவியால் மிக வேகமாக முன்னேறுகிறார்கள். போகும் வழியில் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். அங்கே ரீன்ஸ் இறந்து கிடக்கிறார்.(முதலில் இறந்தவர்) அதாவது எந்த அறையில் தொடங்கினார்களோ அங்கேயே வந்து நிற்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? அவர்களுக்கு நேர்ந்தது என்ன? யார் யார் தப்பினார்கள்? இவைதான் கிளைமாக்ஸில் கிடைக்கும் விடைகள்.
இந்த படத்தின் சிறப்பம்சமே, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு என்ன மன நிலை இருக்குமோ அதை மன நிலை நமக்கும் ஏற்பட்டு விடுவதே. என்ன நடக்கிறது, இது எந்த மாதிரி இடம், இடம் மர்மம் என்ன என்பதில் கடைசி வரை நம்மை குழப்பத்திலேயே அழைத்து செல்கிறார்கள், அதுவே நமக்கு ஒரு வித ஈடுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் கணிதத்தில் கொஞ்சம் ஆர்வம் இருப்பவர்கள் மிகவும் எஞ்சாய் செய்து பார்க்க முடியும். முப்பரிமானம், Prime number, மடங்கு ஆகியவை பற்றி அறியாதவர்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இந்த படத்தின் இயக்குனர் வின்ஸ் நடாலி. கதையிலும் பங்களித்திருக்கிறார். ஒரே ஒரு அறையை மட்டுமே நிர்மாணித்து, அதன் வண்ணங்களை மட்டும் மாற்றி மாற்றி குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். இதன் அடுத்த பாகமான ஹைபர் கியூப் இதை விட இன்னும் குழப்பமான கதையம்சத்தை கொண்டது. அதாவது முப்பரிமாணங்களை சேர்த்து, நான்காவது பரிமாணமாக காலத்தையும் இணைத்திருப்பார்கள். மூன்றாவது பாகமான கியூப் ஸீரோ முதல் பாகத்துக்கு முன்னால் நடக்கும் கதையாக எடுத்திருக்கிறார்கள். முதல் இரண்டு பாகங்களை காட்டிலும், அதிக விளக்கங்களை கொண்டதாக இப்படம் இருக்கிறது.
படத்தில் வசனங்கள் மிக முக்கியம். அதிலும் அதில் கூறப்படும் கணித, அறிவியல் கருத்துக்களை புரிந்துகொண்டால் படத்தை எஞ்சாய் பண்ணலாம். இல்லை என்றால் கஷ்டம்தான். இன்னொரு விஷயம் படத்தை பாதியில் இருந்து பார்த்தால், குழம்பி தலை சுற்றி விழ வேண்டியதுதான். முழுவதும் பார்த்தாலே குழம்புவது நிச்சயம். தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
27 comments:
definitely I will download this movie... I have to see this... Thanks for intro abt this movie...
இதுக்கு தான் மாப்ள நான் இந்த அறிவ பிழியிற படத்த எல்லாம் பாக்குறது இல்ல..விமர்சனத்துக்கு நன்றி!
இந்த பதிவை படித்தபின்
படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறது
மிக்க நன்றி
நமக்கு இந்த மாதிரி படமெல்லாம் புரியாது பாஸ்!இருந்தாலும் நீங்க புரிஞ்சு கணக்குகளை விமர்சனத்தில போட்டிருக்கிறத பார்த்தா வியப்பா இருக்கு...
வித்தியாசமான இந்த படத்தை நிச்சயம் பார்க்க ஆவலைத்தூண்டும் வகையிலான சிறப்பான விமர்சனம்.
3வது பந்திக்கு மேல் வாசிக்கவில்லை. அண்மையில் ஏதோ ஒரு மூவி சேனலில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது போல ஞாபகம். படத்த ஐந்து நிமிடங்கள் பார்த்துட்டு டவுன்லோட் செய்து முழுதாக பார்க்கணும்ன்னு ஓவ் பண்ணி வச்சுட்டேன். மறந்து போச்சு. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.
என் கருத்து - இந்தக் படத்திற்கு இவ்வளவு கதையை சொல்லியிருக்க வேண்டாமே? படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும்.
எந்த கூட்டத்திலையும் கணக்கு நன்றாக தெரிந்தவர் இருக்கும் வேன்டும் போல...
திரைக்கதையை விளக்கிய விதம் அருமை பாலா.. தெளிவான விமர்சனம்..\
உங்கள் பதிவை ஏன் தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை?
நண்பரே இந்த பதிவுகளை படித்து, உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில், ஓட்டுப்பட்டைகளில் வாக்களிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும்.
http://ethirneechal.blogspot.in/2012/02/blogger-domain.html
http://ponmalars.blogspot.com/2012/01/blog-post.html
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
@Manoj
நன்றி நண்பரே.
@விக்கியுலகம்
ஹா ஹா இது வேறயா? நன்றி மாப்ள
@செய்தாலி
பார்க்க கூடிய படம்தான். ஆனால் கொஞ்சம் பொறுமை தேவை. நன்றி நண்பரே
@வீடு சுரேஸ்குமார்
நானே கணக்கில் வீக்தான் நண்பரே. ஏதோ கொஞ்ச அறிவை வைத்து பார்த்தேன்.
@EniyavaiKooral
கருத்துக்கு நன்றி நண்பரே. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.
@ஹாலிவுட்ரசிகன்
முடிந்த அளவுக்கு கதையை மறைக்கவே முயற்சி செய்தேன். ஆனாலும் தெரியாமல் சில விஷயங்களை சொல்லி விட்டேன். கணித விஷயங்களை சொல்லாமல் இருந்திருக்கலாம்தான். இனி திருத்திக்கொள்கிறேன். நன்றி நண்பரே
@பாரத்... பாரதி...
கருத்துக்கு நன்றி நண்பரே. அந்த படத்திலும் அந்த பெண் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது. கஷ்டப்பட்டு விளக்குவாள். உங்கள் சுட்டிகளுக்கு நன்றி நண்பரே. எனக்கு தமிழ்மண பிரச்சனை இருக்கிறது. சரி செய்ய வழி தெரியாமல் இருந்தது. உங்கள் சுட்டிகளை வைத்து சரி செய்ய முயற்சி செய்கிறேன்.
கதை மிக நன்றாக இருக்கிறது.படம் பார்த்தால் த்ரில்லிங்க் ஆகத்தான் இருக்கும்.
சார் சூப்பர் விமர்சனம்...நான் இப்படியான் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவன்.. இப்போதே பார்க்க ஆசையாக இருக்கிறது... மிக்க நன்றி சார்
ம்ஹும்... நான் படிக்கிற காலத்துலயே ரொம்ப வீக்கா இருந்தது கணக்குலதான். சினிமா பாக்கறதுக்கும் கணக்கு தெரியணுமா? ஆள வுடுங்க பாலா... நீங்க சொல்ற வேற படங்களப் பாக்குறேன்!
@சென்னை பித்தன் உண்மையிலேயே த்ரில்லிங்கான படம்தான் சார். நன்றி
மிக்க நன்றி நண்பரே. மிஸ் பண்ணாமல் பாருங்கள்
@கணேஷ்
ஹா ஹா நன்றி சார்
Good review,,, Thanks to share
@Riyas
Thank u for your valuable comment
சில பிரச்சனைகள் காரணமாக இணையபக்கமே வர முடியவில்லை..மன்னிக்கவும்.
இந்த படத்தொடரை கேள்விப்பட்டு மாதங்களாகின்றன சார்..இன்னும் டவுன்லோடு போடாமல் இருப்பது எவ்வளவு தவறு என்பதை சுட்டிக்காட்டிவிட்டது தங்களது விமர்சனம்..கண்டிப்பாக எப்படியும் பார்த்து குழம்பிடுவேன்..கதையை சொன்னவிதமும் அதை சுவாரஸ்யங்களாக பகிர்ந்த விதமும் அருமை சார்.மிக்க நன்றி.இனி அடிக்கடி வர முயற்சிசெய்கிறேன்.
@Kumaran
மிக்க நன்றி நண்பரே. நேரம் கிடைக்கும்போது வாங்க
Post a Comment