விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 26, 2012

ஹீரோக்கள் கதை கேக்குறாங்கோ....

மு.கு: வழக்கம்போல இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சித்தரிக்கப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, இழிவு படுத்தும் நோக்கமோ இதில் கிடையாது. 
இப்போதெல்லாம் ஹீரோக்கள் கதையை ஓகே செய்த பிறகே படத்தின் வேலைகள் தொடங்குகின்றன. அதாவது கதைக்கேற்ற ஹீரோக்களை தேடிப்போவது மாறி, ஹீரோக்களுக்கான கதை உருவாக்கும் நிலை வந்துவிட்டது. முன்பு ஒரு சில ஹீரோக்கள் செய்த இந்த வேலையை, இப்போது எல்லா ஹீரோக்களும் செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு புது டைரக்டர் இந்த ஹீரோக்களிடம் கதை சொல்லும்போது, எந்த மாதிரி கதைகளை ஹீரோ விரும்புகிறார்கள் என்பதின் கற்பனை வடிவமே இந்த பதிவு. 

STR என்கிற சிம்பு
"சார் என்கிட்ட சாஃப்டான ஒரு ரொமான்டிக் ஹீரோ கதை இருக்கு."

"என்ன தல? எனக்கு இருக்குற ரேஞ்சுக்கு சாஃப்ட் ஹீரோ கதை எல்லாம் ஒத்து வருமா? சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் ரேஞ்சுக்கு மாஸ் கதையா இருந்தா சொல்லுங்க." 

"ஓகே சார்.  இந்த படத்துல, நீங்க ஒரு ராணுவ வீரர் சார். ஏன்னா நீங்க ஏற்கனவே போலீசா நடிச்சிட்டதால அதுக்கும் மேல டெரரா இருக்கணும்னுதான் இந்த ஏற்பாடு. மத்தபடி நீங்க உங்க உடம்பை பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க... சிக்ஸ் பேக் வரைஞ்சுக்கலாம். "தளபதி தலையில கொட்டுனாலும், அவன் அய்யோ தலன்னுதான் கூப்பிடுவான். தல தாண்டா எல்லாமே" அப்படின்னு நீங்க சொன்னதும் எல்லாரும் தலையிலேயே அடிச்சுக்கிறாங்க.  படத்துல இதே மாதிரி மொத்தம் ஆயிரம் பஞ்ச் டயலாக் சார். இதை கின்னஸ் புக்ல கூட பதிவு பண்ணிரலாம். படத்துல மொத்தம் மூணு ஹீரோயின். ரெண்டு பேர் ஒரே ஒரு அயிட்டம் சாங்குக்கு ஆடுறாங்க. இன்னொருத்தார் ஒண்ணு ரெண்டு சீன்ல தலை காட்டுவாங்க. அந்த ரெண்டு சீன்லேயுமே உங்களுக்கு லிப் கிஸ் சீன் இருக்கு. இன்னொன்னு சொன்னா ரொம்ப சந்தோசப்படுவீங்க. ஹீரோயின்ஸ் எல்லாருமே உங்களை விட வயசுல மூத்தவங்க. நிஜத்துல ரொம்ப மூத்தவங்க. ஆனா படத்துல ஒண்ணு ரெண்டு வயசு மூத்தவங்க. அப்புறம் படத்துல ஒரு பாட்டுல, டான்ஸ் மூவ்மெண்ட் ஒண்ணு வைக்கிறோம் சார். அதாவது குப்புற படுத்துக்கிட்டு மூக்காலேயே ஆடுறீங்க. இத பாத்து அவனவன் பேதி ஆகணும். உங்கப்பாதான் அந்த பாட்ட பாடுறார். எப்படி சார் கதை?".  

உடனே சிம்பு, "ஆகா, இதுவரைக்கும் இந்த மாதிரி கதையில நான் நடிச்சதே இல்லை. சூப்பர். நாம படம் பண்றோம்.".  


கொலவெறி புகழ் தனுஷ் 

'சார் நீங்க எதையுமே வித்தியாசமாதான் செய்வீங்கன்னு எனக்கு தெரியும். இந்த படத்தோட ஒன் லைன் சொன்னதுமே உங்களுக்கு பிடிச்சிடும்." 

"பாஸ், மொதல்ல கதைய சொல்லுங்க பாஸ்".  

"அதாவது சார் நீங்க பத்தாவதுல பத்து தடவ அட்டம்ப்ட் பண்ணி வெட்டியா ஊர் சுத்திக்கிட்டு இருக்கிற பையன் சார்." 

"ஆகா பாஸ் சூப்பர். இந்த படத்துல நான் நடிக்கிறேன்." 

"சார் நான் கதையே இன்னும் சொல்லலயே?" 

"அதனால என்ன? இந்த ஒன் லைனே எனக்கு பிடிச்சிடுச்சி. இந்த படத்துல எனக்கு வயசு 17." 

"அதெப்படி சார் பத்தாவது 10 தடவை பெயில் ஆன பிறகும் வயசு 17 வரும்?" 

"அதெல்லாம் தெரியாது. அப்படித்தான். ஹீரோயினுக்கு வயசு 19. நாங்க ரெண்டுபேரும் திருட்டுதனமா ஊரெல்லாம் சுத்துறோம்." 

"சார் திருட்டுதனமா எப்படிசார் ஊர் சுத்துறது?" 

"அது அப்படித்தான். பிறகு ரெண்டு பெரும் மேட்டர் பண்ணபுறம் பிரிஞ்சிடுறோம். கிளைமாக்ஸ்ல நாங்க படிச்ச ஸ்கூலுக்கு வரேன். அப்போ அவ அங்க டீச்சரா இருக்கா. நான் அதே ஸ்கூல்ல பத்தாவது எக்ஸாம் எழுத வரேன். ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்கிறோம்.  படம் முடியுது. எப்படி கதை?" 

"சார், நான் கதை சொல்ல வந்தா, நீங்க கதை சொல்றீங்க?" 

"என்ன பத்தி என்ன நினைச்சீங்க பாஸ். இந்த படத்துல, ஒரு பாட்டு எழுதி, நானே இசையமைச்சு, நானே பாடி, நானே ஆடுறேன். அந்த பாட்டு முழுவதும் பொண்ணுங்களை சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைல திட்டுறேன்.. அதை சப் டைட்டிலோட யுடியூப்ல போடுறோம். ஹிட் ஆக்குறோம்."  

இயக்குனர் குழம்பி தலை தெறிக்க ஓடுகிறார்.  


இளையதளபதி டாக்டர்: 

"சார் உங்க மாசுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணிருக்கேன் சார். ஒரு கிராமம் சார். அங்க நீங்க ஆட்டோ டிரைவரா இருக்கீங்க.அப்படியே பால் வியாபாரமும் பண்றீங்க. ஆட்டோ ஒட்டுற காசை வைச்சு ஊர் மக்களுக்கு பசுமாடு தானம் பண்றீங்க. அந்த ஊர்ல இருக்கிற மக்கள் எல்லாம் உங்களை சுத்தி பாட்டு பாடுறாங்க. உங்களுக்கு ஒரு தங்கச்சி ஒரு அம்மா. அப்போ அந்த ஊர்ல இருக்குற ஒரு தாதாவுக்கும் உங்களுக்கும் பிரச்சனை ஆவுது. அவனை ஊருக்கு நடுவுல வச்சி துவைக்கிறீங்க. அவன் உங்களை பழிவாங்க ஊர் கிணத்துல விஷத்தை கலக்கிறான். அதை தடுக்க உங்க தங்கச்சி அதை குடிச்சி செத்து போறாங்க. உடனே நீங்க வில்லனை பழிவாங்குறீங்க. படத்தோட பேரு எட்டுக்கால் பூச்சி."   

"இதோ பாருங்க, இப்போலாம் நான் மாஸ் கதை பண்றது இல்ல. வித்தியாசமா ஏதாவது இருந்தா சொல்லுங்க." 

"ஓகே சார். என்கிட்ட இன்னொரு கதை இருக்கு. அதாவது நீங்க பெரிய பிசினஸ்மேன். கூடவே அமெரிக்கவுல நீங்க பைலாட்டா இருக்கீங்க. பிளேன் ஒட்டுற காசை வச்சு அமெரிக்ககாரங்களுக்கு டெல்லி எருமை வாங்கி கொடுக்கிறீங்க. அங்க வெள்ளை மாளிகையில உங்களுக்கு ஓபனிங் சாங். உங்களுக்கு ஒரு சிஸ்டர் மறறும் மதர். அமெரிக்காவுல இருக்கற இந்தியன் டெரரிஸ்ட் ஒருத்தனை நடு ரோட்டுல வச்சி அடிக்கிறீங்க. அவன் பதிலுக்கு வெள்ளை மாளிகையில குண்டு வச்சிடுறான். ஒபாமாவை காப்பாற்ற உங்க சிஸ்டர் சாகுறாங்க. உடனே வில்லனை ஓட ஓட விரட்டி பிளேன் ஏத்தி கொல்றீங்க." 

"அண்ணா சூப்பர்ண்ணா.. இந்த மாதிரி நான் படம் பண்ணாதே இல்லை. படத்தோட பேரு என்ன?"

"ஆக்டோபஸ்: அத்தியாயம் எட்டு." 


தல அஜீத்: 

"சார் உங்க வயசுக்கும், உடம்புக்கும் ஏத்த மாதிரி ஒரு கதை சார். ஓப்பனிங் சீன்ல ரவுடி ஒருத்தனை கொல பண்ண தோரத்துறாங்க. அவன் ஓடாம திரும்பி நின்னு, உடம்புல கை கால் அப்படின்னு எத்தனையோ பாகம் இருந்தாலும் ரொம்ப முக்கியம் எது தெரியுமா? அப்படின்னு கேக்கிறான். உடனே உங்களை காட்டுறோம் சார். படத்துல உங்க வயசு 50 சார். படத்துல மொத்தம் 10 வில்லன் சார். ஒவ்வொருத்தாரா நீங்க கொல பண்றீங்க. கடைசியில ஒரு பெரிய வில்லன். அப்போதான் சார் ஒரு டுவிஸ்ட் வைக்கிறோம். அந்த பெரிய வில்லனே நீங்கதான் சார். நீங்க கொல பண்ண பத்து பேரும் வில்லனே இல்லை. எல்லோருமே நல்லவங்க. நீங்க மட்டும்தான் சார் கெட்டவன். படத்துல சொல்லவேண்டிய முக்கிய விஷயம், உங்களுக்கு கூலிங் கிளாஸ் மற்றும் கோட் சூட் கண்டிப்பா உண்டு. அப்புறம் ஒரு கார் சேஸ் மற்றும் பைக் சேஸ். படத்துல உங்களுக்கு வசனமே கிடையாது. சும்மா உங்க நடையிலேயே அசத்துறீங்க. கடைசியில ஒரே ஒரு வரி வசனம் மட்டும் பேசுறீங்க. ஆனா அதை சென்சார்ல கட் பண்ணிருவாங்க. ஏன்னா அது கெட்ட வார்த்தை. வழக்கம்போல திரிஷா உங்களுக்கு ஹீரோயின். ஆனா வழக்கம்போல அவங்களோட நீங்க சேரப்போறதில்லை. பாதியிலேயே கழட்டி வீட்டிடுறீங்க." 

"பாஸ் நாம இந் படம் பன்றோம். நான் ஷூட்டிங்க்ல பிர்யணி செஞ்ச் போட்ரென். அது....." 


சிக்ஸ் பேக் சூர்யா: 

"சார் இது ஏற்கனவே தல மற்றும் தளபதி ரிஜெக்ட் பண்ண கதை."

"அப்படியா? அப்போ ஓகே. இந்த படம் பண்றோம். கண்டிப்பா பண்றோம்." 

"படத்தோட கதை என்னன்னா?. படத்துல நீங்க தமிழன் சார். உங்களுக்கு சிக்ஸ் பேக் இருக்கு. நீங்க ஒரு அப்பாவி. நீங்க ஒரு பொண்ண லவ் பண்றதோட எல்லாமே பண்றீங்க. அந்த பொண்ணு செத்து போகுது. சோகமா பாட்டு பாடுறீங்க. இன்னொரு பொண்ண கரெக்ட் பண்றீங்க. திடீர்னு மிலிடரிக்கு போறீங்க. அப்போதான் தெரியுது உங்க தாத்தாதான் இந்த உலகத்துக்கே துப்பாக்கி சுட கத்துகொடுத்தாருன்னு. அதை எப்படியாவது மறைக்கணும்னு மந்திரிபக்சே அப்படிங்கற ஒரு வில்லன் முயற்சி பண்றான். அப்படியே மொறச்சி பாக்குறீங்க. அது மொறப்பா, இல்லை கோபமான்னு எல்லோரும் கண்பியூஸ் ஆகணும். உங்க திறமைய பாராட்டி ஒபாமா உங்களை ஒசாமாவை பிடிக்கிற பொறுப்பை ஒப்படைக்கிறார். ஒசாமா கிட்ட போய் எதிர் பாக்கலல்ல? அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசுறீங்க. அவன் முழிக்கிறான். பாத்தியா? தமிழன் வாய தொறந்தா எவனும் பதில் பேச முடியாது அப்படின்னு கர்ஜிக்கிறீங்க. கடைசியில ஒசாமாவை ஓட ஓட விரட்டுறீங்க. அவன் தன்னோட துப்பாக்கியால தானே சுட்டு செத்துப்போறான். உங்க நோக்கு வர்மத்தாலதான் அவன் செத்தான்னு நீங்க எல்லோரையும் நம்ப வைக்கிறீங்க. ஐநா சபையில உங்கள பேச சொல்றாங்க. அப்போ தமிழனை பத்தியும் உங்க தாத்தவை பற்றியும் பேசுறீங்க. எல்லோரும் புல்லரிச்சு போறாங்க. அப்படியே எண்ட் கார்டு போடுறோம். இந்த படத்தை பாக்கலான்னா அவன் தமிழனே இல்லைன்னு விளம்பரம் பண்றோம். நீங்களும் ஒவ்வொரு அவார்ட் பங்க்ஷனா போய் எல்லா நடிகர் கால்லேயும் விழுந்து, நீங்க அவரோட ஃபேன் அப்படின்னு சொல்றீங்க."

"கரெக்ட். ஏதாவது ஒரு பங்ஷன்ல பாவப்பட்டு அவங்களே ஒரு அவார்ட் கொடுத்திருவாங்க. இந்த படம் நாம கண்டிப்பா பண்றோம்."

மாண்புமிகு எதிர்கட்சி தலைவர்: 

"கேப்டன் உங்களை வச்சி ஒரு படம் எடுக்கலாம்னு, ஒரு கதை சொல்ல வந்திருக்கேன். படத்துல நீங்க டாக்டருக்கு படிச்சு, சி‌பி‌ஐல வேல பாக்கிற ஒரு போலீஸ் அதிகாரி. உங்களுக்கு மட்டும் யூனிஃபார்ம் கிடையாது. நாலஞ்சு துப்பாக்கி கொடுப்பாங்க. உங்க வண்டியில கையில் ஜோதியோட கருப்பு மஞ்சள் சிகப்புல ஒரு கொடி பறக்குது." 

கேப்டன் இடை மறித்து, "இரு மீதி கதைய நான் சொல்றேன். பாகிஸ்தான் தீவிரவாதி ஒருத்தன் இங்கே இருந்து தப்பிச்சு ஓடிடுறான். அவனை பிடிக்க நான் மட்டும் பாகிஸ்தான் போறேன். அங்கே எல்லோரும் உருதுல பேசுறாங்க. நான் மட்டும் தமிழ்ல பேசுறேன். அந்த தீவிரவாதிய சுட்டு கொல்றேன். அப்போதான் தெரியுது அங்கே ஒரு அரசியல்வாதி ரொம்ப நாளா பதவில இருக்கான். அவன் தன்னோட குடும்பம், குழந்தை எல்லாத்துக்கும் பதவிய கொடுத்து பாகிஸ்தானையே அடிமையா வச்சிருக்கான். அவனோட எதிரியான ஒரு பொம்பள கூட சேர்ந்து அந்த அரசியல்வாதிய தோற்கடிக்கிறேன். அப்போதான் தெரியுது அந்த பொம்பளயும் கெட்டவ. ரெண்டு பேரையும் கட்டிவச்சு, மூணு மணி நேரம் வசனம் பேசுறேன். என் பேச்சை கேட்டு ரெண்டு பெரும் கண்ணீ வடிக்கிறாங்க. கடைசியில அவங்க கட்டுக்களை நான் அவுக்கிறேன். காதில் ரத்தம் வடிய ரெண்டுபேரும் என் காலில் விழுந்து சாகிறாங்க. நான் நடந்து வெளியே வரேன். அப்போ ஒரு பாகிஸ்தான் பொம்பள எங்க போறீங்கன்னு கேக்கிறா? இதே மாதிரி பிரச்சனை எங்க நாட்டிலேயும் இருக்கு, அங்க போறேன் அப்படின்னு சொல்றேன். உடனே ஊரு பெரியவர், நீங்க வரணும்னுதான் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க அப்படின்னு சொல்றார். நான் சிரிச்ச படியே இந்தியாவ நோக்கி நடந்து வரேன்.  பின்னாடி அதே கொடி பறக்குது. எண்ட் கார்டுல 2017? அப்படின்னு போடுறோம்." 

சொல்லிவிட்டு கேப்டன் திரும்புகிறார். கதை சொல்ல வந்த இயக்குனர் மாடியில் இருந்து குதிப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.  

இன்னும் ஆர்யா, ஜீவா, விஷால் மற்றும் பரத்துக்கு எல்லாம் கதை இருக்கு. இப்போதே நிறைய பேர் பீதியாகி இருப்பதால் இத்தோடு முடித்து கொள்கிறேன். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 

 

44 comments:

கேரளாக்காரன் said...

Kalakkal post with ur agmark comedy.... Super

arasan said...

எனக்கு கேப்டன் தான் சார் ரொம்ப பிடிச்சிருக்கு .. நாம பவர் ஸ்டார் தான் மிஸ்ஸிங் ..

MANO நாஞ்சில் மனோ said...

ஹலோ ஹலோ நானும் ஹீரோதான் எனக்கும் கதை சொ[கொ]ல்லுங்க.....

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பாலா, நான் சத்தம் போட்டு சிரித்து விட்டேன் தெரியுமா.!!! என்ன கொடுமை இது? எப்படியெல்லாம் நையாண்டி.. டாக்டர் படிச்சிட்டு, போலிஸில் வேலை..ஹஹஹஹஹ

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

விஜய்..ஹஹஹ..அவரே வந்து படித்தாலும், விழுந்து விழுந்து சிரிப்பார்..

Unknown said...

மாப்ள கேப் டன் தான் டாப்பு ஹேஹே!

முத்தரசு said...

எங்க தல பவர் ஸ்டார் கதை போடலே

முத்தரசு said...

செம செம கேப்டன் பட கதை

முத்தரசு said...

அதுவும் //மாண்புமிகு எதிர்கட்சி தலைவர்://

போட்டு இப்படி கலாயக்கபடாது...

முத்தரசு said...

இவர்கள் கதை படிச்சி அடிச்.. போதை இறங்கி போச்சிப்பா...

சென்னை பித்தன் said...

ஹா,ஹா!தூள்!

NKS.ஹாஜா மைதீன் said...

எல்லாமே குபீர் சிரிப்பை வரவழைத்தது....குறிப்பாக தனுஷ் மற்றும் கேப்டனை பற்றிய கதை சூப்பர்....

கலாகுமரன் said...

இன்னுமா ? இப்பவே கண்ணைக்கட்டுதே !!!

Unknown said...

அடுத்த கட்டத்திற்கு காத்திருக்கிறோம்... ஒருத்தரையும் மிச்சம் வைக்கக்கூடாது..

Unknown said...

கலகலப்பா கலக்கியிருக்கீங்க பாலா... உங்களது "கவனித்தல்" திறனுக்கு பாராட்டுகள்..

ஹாலிவுட்ரசிகன் said...

வாய்விட்டு சிரித்ததில் இன்னும் வயிறு வலிக்குது. வீட்டுல இருக்கிறவங்க கூட என்ன சத்தம்னு எட்டிப் பாத்தாங்க.

சத்தியமா நீங்க சொன்னா இந்த 6 படமும் ஓகேயாகிவிடும். உங்களுக்கு டைரக்டர் சங்கருக்கே சவால் விடும் திறமை உள்ளது. :)

Unknown said...

நல்ல நகைச் சுவை பாலா அண்ணா

r.v.saravanan said...

ஹா ஹா சூப்பர் பாலா

பாலா said...

@மௌனகுரு

உங்க கமெண்ட்டுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@அரசன் சே

அவருக்கு கதை பண்ற அளவுக்கு நமக்கு மூளை இல்லீங்க. மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

அய்யோயோ நீங்க பாவம் நண்பரே,

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

மனம் விட்டு சிரித்ததற்கு ரொம்ப நன்றிங்க

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

பாலா said...

@மனசாட்சி™

மிக்க நன்றி நண்பரே. பவர் ஸ்டாருக்கு கதை பண்ற அளவுக்கு எனக்கு மூளை இல்லை நண்பரே

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

சிரிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@EniyavaiKooral

இன்னும் எழுத உத்தேசமில்லை. முடிந்தால் எழுதுகிறேன்

பாலா said...

@பாரத்... பாரதி...

நன்றி நண்பரே. இதை தொடர்ந்து எழுதும் உத்தேசம் இல்லை. முடிந்தால் எழுதுகிறேன்.

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

என்னை ரொம்ப புகழாதீங்க. இன்னும் முயற்சி செஞ்சு ஸ்பீல்பர்க்குக்கு இணையா வரணும்கிறதுதான் என்னோட லட்சியம். நன்றி நண்பரே

பாலா said...

@Esther sabi

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. அடிக்கடி வாங்க

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே.

Philosophy Prabhakaran said...

// கடைசியில ஒரே ஒரு வரி வசனம் மட்டும் பேசுறீங்க. ஆனா அதை சென்சார்ல கட் பண்ணிருவாங்க. //

ROFL...

Philosophy Prabhakaran said...

கண்டின்யூ பண்ணுங்க...

Anonymous said...

கேப்டன் #1...

sajirathan said...

அஜித் பற்றி சும்மா ஒரு நகைச்சுவைக்கு கலாய்ச்சாலும் எனக்கு பிடிக்காது... பரவாயில்ல நீங்களும் ஒரு தல ரசிகர் என்றபடியால் கூலாகிட்டேன்... வாழ்த்துக்கள் எல்லா நடிகர்கள் மீதான உங்கள் துல்லியமான அவதானம்...

மாலதி said...

பாராட்டுகள்..

Unknown said...

நாளைய இயக்குனர் பாலா வாழ்க!

பாலா said...

@Philosophy Prabhakaran

இப்போதைக்கு தொடர்ந்து எழுத நினைக்கவில்லை. முடிந்தால் எழுதுகிறேன்

பாலா said...

@ரெவெரி

நன்றி நண்பரே

பாலா said...

@sajirathan

நண்பரே பிறர் கேலி செய்வதற்குள் நம்மை நாமை சுய எள்ளல் செய்து கொள்வது நல்லது என்பதே என் எண்ணம். நன்றி நண்பரே

பாலா said...

@மாலதி

நன்றிங்க

பாலா said...

@வீடு K.S.சுரேஸ்குமார்

நண்பரே இருக்குற இயக்குனர்கள் பத்தாதா?

Thava said...

நண்பரே, சிறு இடைவெளிக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்க படித்து ரசித்த பதிவிது..அருமை..இன்னும் கொஞ்சம் நீளாதானு கேள்விக்கேட்க வச்சைட்டீங்க.மிக்க நன்றி.

பாலா said...

@Kumaran

ரசித்ததற்கு மிக்க நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...