விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 11, 2012

யூரி கெல்லரும், உட்டாலக்கடியும்.....
கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்கள் எழுதிய 'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்தை சமீபத்தில் மீண்டும் படிக்க நேர்ந்தது. அதில் அபூர்வ சக்தி உடைய மனிதர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில் குறிப்பிட்ட இரண்டு மனிதர்களைப்பற்றி அவர் கொடுத்திருந்த தகவல்கள் எனது ஆவலைத்தூண்டவே, அவர்களைப்பற்றி சில தகவல்கள் இணையத்தில் சேகரித்து தரலாம் என்ற எண்ணத்தின் விளைவே இந்த கட்டுரை. இந்த இரு மனிதர்களைப்பற்றி இன்றும் பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், இன்று வரை பலரால் இவர்கள் முற்றிலும் நம்பப்படுகிறார்கள். முதலாமவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டானியல் டங்க்லஸ் ஹியூம். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர், அபூர்வ சக்தி படைத்த மனிதர்களுள் முதலாமவராக கருதப்படுகிறார். குறிப்பிட்ட ஒரு சக்தி என்றில்லாமல், எண்ணிலடங்கா சக்திகளை தன்னுள் கொண்டவராக போற்றப்பட்டவர். சிறு வயதிலேயே அத்தை மற்றும் மாமாவினால் தத்தெடுக்கப்பட்டு, அமெரிக்காவில் தங்க நேரிட்டது. பிற மாணவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஹியூம் தனது ஒரே நண்பரான எட்வினோடு மட்டும் சுற்றி இருக்கிறார். இருவரும் விளையாட்டாக ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். இருவருள் யார் முதலில் இறந்தாலும் மற்றவரோடு வந்து தொடர்பு கொள்ளவேண்டும் என்பதுதான் அது. சிறிது காலத்துக்கு பிறகு சுமார் 300 கிமீ தூரத்தில் உள்ள இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்தார் ஹியூம். செல்ஃபோன், ஈமெயில் இல்லாத அந்த காலத்தில் ஹியூமூக்கு எட்வினோடு முற்றிலும் தொடர்பு அறுந்து போய் விட்டது. திடீரென்று ஒருநாள் பிரகாசமான ஒளியோடு எட்வினின் உருவம் ஹியூமூக்கு தெரிந்திருக்கிறது. சில நாட்கள் கழித்து, வந்த லெட்டரில் எட்வின் இறந்து விட்டதாக செய்தி வந்தது. அதாவது எட்வின் ஹியூம் முன்னால் தோன்றுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னாலேயே எட்வின் இறந்திருக்கிறார். 

காற்றில் மிதக்கும் ஹியூம் 


இந்த நிகழ்ச்சி நடந்தது ஹியூம் 13 வயது சிறுவனாக இருந்தபோது. இதற்கப்புரம் ஹியூம் தொடர்ச்சியாக பல ஆவிகளோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஹியூமின் நண்பர் ஒருவர் பத்திரிகை ஒன்றுக்கு, ஹியூம் தன் முன் மேஜை ஒன்றை தொடாமலேயே நகர்த்தி காட்டியதாக கட்டுரை ஒன்றை எழுதினார். இதற்கப்புறம் ஹியூமின் புகழ் பரவத்தொடங்கியது.  ஒருபக்கம் இவரது புகழ் பரவத்தொடங்கினாலும், மறுபக்கம் இவர் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று நிரூபிக்க பலபேர் போராடினார்கள். ஒரு முறை ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் முன்னிலையில் மேஜை ஒன்றை மேலே எழும்ப செய்தார். அவரை சோதிக்க வந்த சிலர் அந்த மேஜையில் ஏறி நின்ற பிறகும், மேஜை அவர்களையும் சேர்த்தே மிதந்தது. ஒரு முறை இறந்த மன்னர் ஒருவரின் கைகளை காற்றில் தோன்றவைத்தார். பலர் அதை தொட்டுப்பார்த்ததில் அது உண்மையிலேயே ஒரு மனிதரின் கை என்று ஒத்துக்கொண்டார்கள். மேலும் அது தன் தந்தையின் கைதான் என்று அதில் இருந்த தழும்புகளை வைத்து அந்த மன்னரின் மகளே ஒத்துக்கொண்டாராம். காற்றில் மிதந்து காட்டிக் கொண்டிருக்கும்போது ஆய்வாளர்கள் சிலர் அவரது காலை பிடித்து கீழே இழுக்க, அவர்களையும் தூக்கி கொண்டு மிதந்திருக்கிறார். அதே போல எந்த வித கருவிகளின் உதவியும் இல்லாமல், மிதந்த படியே ஒரு அறையின் ஜன்னல் வழியே புகுந்து வேறு ஒரு ஜன்னல் வழியே அந்த அறைக்குள் திரும்ப வந்திருக்கிறார். இது சாத்தியமே இல்லாதது. இதையும் அறிவியல் அறிஞர்கள் நம்ப மறுக்க, "அட போங்கடா.." என்று காற்றில் மிதந்த படியே தன் உயரத்தை அளக்க சொல்ல, ஹியூமின் உடல் வளர்ந்து கொண்டே போயிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரது உயரம் ஒரு அடி அதிகமாக இருந்துள்ளது. இது சாத்தியமே இல்லை. ஆய்வாளர்கள் வாயடைத்து போனார்கள். "இவற்றை எல்லாம் சாத்தியமாக்கியது, ஆவிகளே!", என்று ஹியூம் அடித்து கூறுகிறார். இப்படி நிறைய சாகசங்களை செய்து காட்டிய ஹியூம் ஒரு மோசடிக்காரர் என்று கடைசிவரை யாராலும் நிரூபிக்க முடியவே இல்லை. 

வரைந்த படமும், வளைந்த ஸ்பூனும் 

இதே மாதிரி தற்காலத்தில் மிக பிரபலமாக விளங்கும் இன்னொரு நபர் யூரி கெல்லர். இஸ்ரேலில் 1946இல் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டியவர். ஹியூம் எப்போதுமே தன்னுடைய சக்திகளை விளம்பரப்படுத்தியதில்லை. ஆனால் யூரி கெல்லர் இதை ஒரு தொழிலாகவே செய்தார். இவரது புகழ் பெற்ற திறமைகளாக கூறப்படுபவை, உலோகங்களை மெலிதாக தடவியே வளைப்பது அல்லது உடைப்பது, கடிகாரத்தை ஓடாமல் நிறுத்துவது, பிறர் மனதில் நினைத்த காட்சிகளை படமாக வரைவது ஆகியவைகளை குறிப்பிடலாம். "தனக்கு ஆவிகளின் துணை இருப்பதாகவும், மேலும் சில மனோதத்துவ சக்திகள் இருப்பதாலும், தன்னால் இப்படி செய்ய முடிகிறது." என்று கூறுகிறார். 70களில் இவர் இதை ஒரு தொழிலாகவே செய்ய, அதுவரை அறிவியல் அறிஞர்கள் மட்டுமே இவரை ஏமாற்றுக்காரர் என்று கூறி வந்த நிலையில், சில மேஜிக்காரர்களும் சேர்ந்து கொண்டார்கள். யூரி கெல்லர் நிகழ்த்தி காட்டிய அனைத்துமே, மேஜிக் ட்ரிக்குகள்தான் என்றும் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் கூறி சிலர் செய்தும் காட்டினார்கள். இதை யூரி கெல்லரும் ஒப்புக்கொண்டார். "இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நான் எந்த ட்ரிக்கும் செய்யவில்லை. எனக்கு ஆவிகள் உதவுகின்றன." என்றே கூறினார். 

தோல்வியை ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி 

ஹியூம் காலத்தில் சக்தி வாய்ந்த கேமராக்கள், இன்ன பிற கருவிகள் என்று எதுவுமே கிடையாது. ஆனால் யூரி கெல்லர் தற்கால மனிதர் என்பதால் அவரை சோதிக்க பல கருவிகள் வந்துவிட்டன. இதே ஊடகங்களால் அவருக்கு பல நன்மைகள் உண்டானதும் உண்மைதான். அவரது பல டெலிவிஷன் ஷோக்கள் உலகப் புகழ் பெற்றவை. எந்த அளவுக்கு அவரது புகழ் பரவியதோ அதே போல அவருக்கு சோதனைகளும் அதிகம் வந்தன. பல நேரங்களில் அறிவியல் சோதனை என்று தாறுமாறாக அவர் சோதிக்கப்பட்டார். யூரி கெல்லருக்கு தலைவலியாக விளங்கியவர்களுள் முதன்மையானவர் ஜேம்ஸ் ரேண்டி என்ற மேஜிக் நிபுணர். பலமுறை யூரி கெல்லருக்கு எதிராக வெளிப்படையாகவே சவால் விட்டு, அவருக்கு எதிராக புத்தகம் எல்லாம் எழுதினார். கெல்லர் இவர் மீது பலமுறை வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவரது வாதங்களுக்கு சாதகமாக, யூரி கெல்லரால் எல்லா நேரமும் அதிசயங்களை நிக்ழ்த்தி காட்ட முடிந்ததில்லை. உதாரணமாக 1973 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யூரி கெல்லரிடம், நன்கு சோதிக்கப்பட்ட, ஸ்பூன் மற்றும் போர்க்குகள் கொடுக்கப்பட்டன. அவற்றை கெல்லரால் வளைக்க முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். இதே போல  ரேண்டியின் JREF அமைப்பு ஆவிகளின் இருப்பை யாராவது நிகழ்த்தி காட்டினால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாக அறிவித்துள்ளது. இன்றுவரை இந்த பணத்தை யாரும் வாங்கவில்லை.  ரேண்டி ஹியூமூக்கு எதிராகவும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் ஹியூமின் காலத்தில் வாழாததால், அவரால் நிரூபிக்க முடியாமல் போயிருக்கலாம். 

ஜேம்ஸ் ரேண்டி 


இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனநிலையை பொறுத்தது. நம்பிக்கை இருக்கும் வரை மர்மங்களுக்கும் மோசடிகளும் முடியாத தொடர்கதைதான். உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

30 comments:

சென்னை பித்தன் said...

சுவாரஸ்யமான தகவல்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...

நிறைய விடயங்களைத் தேடியிருக்கிறீர்கள். மிக சுவாரஸ்யமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

செய்தாலி said...

நிறைய
தேடல்கள்
நல்ல தகவல்கள் அருமை

NKS.ஹாஜா மைதீன் said...

எல்லாம் தில்லாலங்கடி வேலைதான்..தமிழ்மணம் ஒட்டுபட்டை என்னாச்சு ?

tamilvaasi said...

குட் போஸ்ட்.....

பாலா said...

@சென்னை பித்தன்

கருத்துக்கு நன்றி சார்

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@செய்தாலி

நன்றி நண்பரே

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

நன்றி நண்பரே. blogspot.in மாறியதில் இருந்தே என் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இணைக்க முயன்றால் நீங்கள் உறுப்பினர் இல்லை என்று சொல்கிறது. சரி என்று login செய்தால் ஏற்கனவே இணைத்தாகி விட்டது என்று வருகிறது. ஆனால் ஓட்டு போட முடியவில்லை என்ன செய்வது?

பாலா said...

@தமிழ்வாசி பிரகாஷ்

மிக்க நன்றி நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கை இருக்கும் வரை மர்மங்களுக்கும் மோசடிகளும் முடியாத தொடர்கதைதான்.

அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Sankar Gurusamy said...

அறிவியலுக்கு அப்பாற்பட்ட பல விசயங்கள் இயற்கையில் இன்னும் இருக்கவே செய்கின்றன. அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பமே.. நல்ல சுவாராசியமான தகவல்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பாலா, இப்போ நீங்க என்ன சொல்லவறீங்க.. லிங்கம் எடுக்கிற சாமியெல்லாம் சும்மா டம்மி பீஸ்ன்னா?

இந்த பதிவு அற்புதம் இருப்பினும் அவர்களின் அந்த சித்து/மெஜிக் வேலைகளெல்லாம் பொய் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு இன்னும் நிரூபிக்க முடியாமலே தானெ இருக்கிறது.!! உங்களின் பதிவில் கூட அதைப்பற்றிய விளக்கம் எதுவுமேயில்லையே. ஆக, சராசரி மனிதனால் சாத்தியப்படாத ஒன்று, நிகழ்த்திக்காட்டும் பொழுது, வாய் பிளப்பதைத்தவிர வேறென்ன செய்வது?

ஆய்வுகள் அற்புதம்..தொடரட்டும் தொடர்ந்து கற்போம். :)

ராஜி said...

தெரிந்த விசயம்தான் இருந்தாலும், நிறைய தகவல்கள் புதுசா இருக்கு. பகிர்வுக்கு நன்றி சகோ

Marc said...

மிக மிக சுவாரஸ்யமான அருமை பதிவு வாழ்த்துகள்.

Unknown said...

சுவாரஸ்யமான தகவல்கள்......இன்னும் இந்த மாதிரி மனிதர்களை டிஸ்கவரியில் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது....

vimalanperali said...

தகவல்களாய் விரியும் பதிவு,வாழ்த்துக்கள்.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

பாலா said...

@Sankar Gurusamy

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

நான் அப்படி சொல்லலீங்க. ஹியூம் காலத்தில் நடந்தவைகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. அதே போல யூரி கெல்லரின் முயற்சிகள் பலமுறை தோல்வியில் முடிந்துள்ளன. என்னை பொறுத்தவரை இவை இன்னும் மர்மங்கள் என்றே சொல்லி இருக்கிறேன். அதுவரை வாயை பிளப்பதை தவிர வேறு வழியில்லை. நன்றி மேடம்

பாலா said...

@ராஜி

ரொம்ப நன்றிங்க

பாலா said...

@Sekar

நன்றி நண்பரே

பாலா said...

@வீடு K.S.சுரேஸ்குமார்

உண்மைதான். இதே போல நிறைய ஆச்சர்ய மனிதர்கள் இருக்கிறார்கள். கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@விமலன்
வாழ்த்துக்கு நன்றி சார்

நம்பிக்கைபாண்டியன் said...

ஆச்சரியமான மனிதர்களும் ,தகவல்களும் நல்ல பகிர்வு!

பள்ளிக்கூட நினைவுகள் தொடருக்கு உங்களை அழைத்திருக்கிறேன்!

பாலா said...

தங்கள் அழைப்புக்கு நன்றி நண்பரே. தவறாமல் எழுதுகிறேன்

Anonymous said...

நிறைய தகவல்கள் புதுசா இருக்கு...நல்லாயிருந்தது...

பாலா said...

@ரெவெரி
மிக்க நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

கலாகுமரன் said...

"யூரி கெல்லரால் எல்லா நேரமும் அதிசயங்களை நிக்ழ்த்தி காட்ட முடிந்ததில்லை. "

நாம் எல்லா நேரமும் ஒரே மனநிலையுடன் இருப்பதில்லையே.

கண்ணால் காண்பது பொய்யா ? மெய்யா?

பாலா said...

@EniyavaiKooral

அது அவரவர் மன நிலையை பொறுத்தது. ஆன்மிகவாதிகளை போய் கேளுங்கள் எல்லாமே பொய்தான் என்று சொல்வார்கள். நாம் உள்பட

Related Posts Plugin for WordPress, Blogger...