விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 8, 2012

உணவுப்பிரியரா நீங்கள்?


தமிழ்நாட்டில் ஒரு சில ஊர்களை 'தின்று கெட்டவர்கள்' என்று கூறுவார்கள். அதில் எங்கள் ஊர் விருதுநகரும் ஒன்று. அதிக வெரைட்டியான உணவு வகைகள் இல்லாவிட்டாலும், இங்கே சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் ஒரே உணவை வித்தியாசமாக காம்பினேசனில் வெளுத்துக்கட்டுவார்கள். இந்த ஊரில் சமையலில் வல்லவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். விருதுநகர் என்றவுடன் நினைவுக்கு வரும் ஒரு உணவுப்பண்டம் பரோட்டாதான். பரோட்டா என்பது வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் முற்றிலும் மாறுபட்ட உணவாக இருக்கிறது. இந்த ஊருக்குள் பரோட்டா எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த உணவே இப்போது இந்த ஊரின் அடையாளம் ஆகிப்போனது. அதே போல இங்கே தயாரிக்கும் பரோட்டாவானது பிற நகரத்தை போலால்லாமல் வேறு விதமாக தயாரிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவை 'விருதுநகர் பரோட்டா' என்று ஸ்பெஷலாக குறிப்பிடப்படுகிறது. இன்றும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஹோட்டல்களின் பெயரோடு 'விருதுநகர்' என்று அடைமொழி இருப்பது, இங்கே அந்த குறிப்பிட்ட வகை பரோட்டை கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டவே.பரோட்டை மைதா மாவை நன்கு பிசைந்து, வில்லைகளாக உருட்டி, அதனை பேப்பர் போல பரப்பி, பிறகு சுருட்டி எண்ணையில் பொரிப்பதாகும். குறைவான எண்ணையில் புரட்டி எடுப்பதை பரோட்டா என்றும், நிறைய எண்ணையில் பொரித்து எடுப்பது விருதுநகர் பரோட்டா என்றும் வழங்கப்படுகிறது. ஆனால் எங்கள் ஊரில், இதை வெறும் பரோட்டா என்றும், குறைந்த எண்ணையில் சமைப்பதை வாட்டுப்பரோட்டா என்றும் அழைக்கிறார்கள். விருதுநகரிலோ அல்லது அந்த பெயருள்ள கடைகளிலோ, பரோட்டா என்று கேட்டால், எண்ணை பரோட்டாதான் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். எண்ணையில் பொரித்தாலும் விருதுநகர் பரோட்டா முரடாக முறுக்கு போல இருப்பதில்லை. கொஞ்சம் மொருமொருப்புடன், அதே நேரம் மிருதுவாகவும் இருக்கும். ஆகவே சரியாக தயாரிக்கப்பட்ட எண்ணை பரோட்டாவின் சுவையே தனி. இதை உண்ணும் முறையும் இங்கே வேறுபட்டே இருக்கிறது. இங்கே பரோட்டாவை பிய்த்து குருமாவில் தொட்டு சாப்பிடுவதில்லை. மாறாக, பரோட்டாவை நன்கு உதிர்த்து, அதன் மீது கோழி குருமாவோ அல்லது, சால்னாவோ விட்டு, பிறகு அதன் மீது மட்டன் சுக்கா அல்லது ஆட்டுக்குடல் குழம்பை ஊற்றித்தருவார்கள். சைவம் சாப்பிடுபவர்களுக்கு, சைவக்குருமா மீது, காளான் குழம்பை ஊற்றி தருவார்கள். இந்த கலவையில் நன்கு ஊறிய பரோட்டா மிக்க சுவை மிகுந்ததாக இருக்கும்.   இதை விட இன்னொரு சூப்பர் காம்பினேசன் இருக்கிறது. அதுதான் சாம்பார் பரோட்டா. பரோட்டாவை சாம்பாரில் ஊறவைத்து சாப்பிடும்போது கிடைக்கும் சுவை நம்மை அதற்கு அடிமையாக்கி விடும். தற்காலத்தில் நிறைய பரோட்டா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிற ஊர்களில் பல்வேறு வகைகளில் அழைக்கப்பட்டாலும், இங்கே வழங்கப்படும் பெயர்களை மட்டும் கூறுகிறேன். கொத்து பரோட்டா: இதை முட்டை பரோட்டா என்றும் கூறுவார்கள் பரோட்டாவை உதிர்த்து, சூடான கல்லில் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளியோடு கலந்தது நன்கு கொத்துவார்கள். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, கொஞ்சம்  சால்னாவையும் ஊற்றி மேலும் கொத்துவார்கள். கடைசியில் மிளகு சேர்த்து பரிமாறுவார்கள். மிக சூடாக உண்ணுவதற்கு அருமையாக இருக்கும். இப்போது இதில் சிக்கன் துண்டுகளையும், மட்டன் துண்டுகளையும் கூட சேர்த்து கொத்தி, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து என்று வெரைட்டியை கூட்டுகிறார்கள். சைவ கொத்துப்பரோட்டாவில், முட்டைக்கு பதில் சில காய்கறிகளை சேர்ப்பார்கள்.வீச்சு பரோட்டா: மைதா வில்லைகளை, பேப்பர் போல பரப்பிய பிறகு சுருட்டாமல் அப்படியே மடித்து கல்லில் போட்டு எடுப்பதே வீச்சு பரோட்டா. இதற்கு தனி சுவை உண்டு. மேலும் மடிப்பதற்கு முன்பாக, சூடான கல்லில் பரப்பி, அதில் முட்டை,  சால்னா  மிக்ஸை ஊற்றி, அதன் பிறகு மடித்து செய்வது, முட்டை வீச்சு என்று அழைக்கப்படுகிறது. இதனை பிற ஊர்களில் சிலோன் பரோட்டா என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன்.சில்லி பரோட்டா: இது லேட்டஸ்ட் வருகை. பரோட்டாவை துண்டுகளாக நறுக்கி, சில்லி சிக்கன் செய்வது போலவே சிக்கனுக்கு பதிலாக பரோட்டா துண்டுகளை கலந்து செய்கிறார்கள். இடையே ட்ரையாகவும், அல்லது கொஞ்சம் குழம்பு போலவும் இரு விதமாக செய்வார்கள்.இப்போதும், விருந்துகளில் எத்தனை பதார்த்தங்கள் இருந்தாலும், அதில் பரோட்டா தவறாமல் இடம்பெறுகிறது. அதே போல குடும்பத்தோடு வெளியே ஹோட்டலுக்கு சென்றால், பரோட்டா தவறாமல் ஆர்டர் செய்யப்படுகிறது. வெளியூரில் இருந்து காரில் வருபவர்கள், இந்த பரோட்டாவை வாங்குவதற்கே காரை ஊருக்குள் திருப்புகிறார்கள். மேலும் ரயிலில் வருபவர்கள் தங்கள் உறவினரை பார்சல் வாங்கி வரச்செய்து, வண்டி ரயில் நிலையத்தில் நிற்க்கும்போது பெற்றுக்கொள்கிறார்கள்.  ஆனால் இப்போது பரோட்டா ஆரோக்கியமான உணவு கிடையாது என்று சொல்வதைக் கேட்டால் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. 

பிற்சேர்க்கை:

சமீபத்தில் ருசிக்காக உணவை சாப்பிட்டால் அது சமூகத்தை சீரழிக்கும் என்று கம்யூனிச கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. அவர்கள் கூறிய கருத்தை நிலை நிறுத்த பல்வேறு கதைகளை இதனோடு முடிச்சு போட்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை, ருசிக்காக உணவை சாப்பிடுவது தவறே இல்லை. ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக வித விதமாக ஆர்டர் செய்து அதனை அப்படியே வீணடிப்பதுதான் தவறு. எங்கள் ஊரில் பரோட்டா கடைகளில் விழும் இலைகளைப்பார்த்தால் தெரியும். உழைப்பாளிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் மிக ருசியான உணவு பரோட்டாதான். பரோட்டா  சால்னாவின் ருசியால் இலையை சுத்தமாக வழித்து விட்டுத்தான் கை கழுவுவார்கள். அதே போல பணம் இருக்கிறது என்பதற்காக கண்டதையும் ஆர்டர் செய்பவர்கள் கண்டிப்பாக ருசிக்காக சாப்பிடுவதில்லை. சும்மா பந்தாதான். பிடித்த ஐட்டமாக இருந்தாலும் நம்மால் சாப்பிட முடிந்த அளவு மட்டுமே ஆர்டர் செய்யவேண்டும். சாப்பிடும் விஷயத்தில் மட்டும் கவுரவம் பார்க்க கூடாது. இலையை சுத்தமாக வழித்தாலும் தப்பில்லை. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

37 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

இவ்வளவு பரோட்டா வெரைட்டியும் காலையிலேயே காட்டினால் அப்புறம் எப்படி வீட்டில் காலைச்சாப்பாடு சாப்பிடுவது??? இப்பவே வாய் ஊறுது.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

காலையிலே நல்லா கிளப்பறாருய்யா பசியை. விருதுநகருக்கு வந்திருந்த போது, இந்த பரொட்டா பற்றி அண்ணன் சொல்லவே இல்லை.. :( நாங்களும் சாப்பாட்டு ராணிகள்தான், தின்பதற்கென்றே வருவோம் சென்னைக்கு..

//சாப்பிடும் விஷயத்தில் மட்டும் கவுரவம் பார்க்க கூடாது. இலையை சுத்தமாக வழித்தாலும் தப்பில்லை// நேர்மை பிடிச்சிருக்கு பாலா சார். ஹஹஹ.

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் எப்படி சுகம்

இம்முறை இந்தியா வந்திருந்த போது பரோட்டாவை ஒரு கட்டு கட்டினேன் இந்திய பரோட்டா ஒரு தனி சுவைதான் போங்க.

ஆமா நீங்க பேஸ்புக் பார்பது இல்லையா உங்களை இந்தியாவில் தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை அடுத்த முறை வரும் போது சந்திபோம் பாஸ்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சால்னா// அப்படின்னா?
குறைந்த் எண்ணெயில் செய்தால் தான் அது பரொட்டா, அதிக எண்ணெயில் பொரித்து எடுத்தால் - அது பூரி.

Thava said...

பாஸ், நான் மலேசியாவுல இருக்கேன்..இனிமேல ஒரு நாள் இந்தியாவுக்கு வந்தா ஒரு பிடிபிடிக்கனும் போங்க..படங்களை பார்த்தாலே ஆசையா இருக்கும்..அதில் சின்ன சின்ன பரோட்டா விளக்கம் எல்லாம் அழகு.மிக்க நன்றி.

என்று தனியும் எனது பரோட்டா ஆசை//ஹி..ஹி.

சால்னா அப்படினா என்ன சகோ, அது எப்படி இருக்கும், தமிழ் படங்களுல பார்த்துருக்கேன்..அதுவும் குளோஸ் அப் - ல காட்டமாட்டேங்களே.

பால கணேஷ் said...

விருதுநகர் புரோட்டா நானும் சாப்பிட்டதுண்டு. மற்ற எதுவும் அதற்கு நிகர் இல்லை என்பது என் கருத்து. நல்லா ரசிச்சு ருசிச்சு எழுதிருக்கீங்க... புரோட்டாக் கடைக்குப் போயிட்டு அப்புறம் வாரன்... ஹி... ஹி...

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!

பராட்டா செய்வதே ஒரு கலை!!!!!

சேலம் தேவா said...

//பிடித்த ஐட்டமாக இருந்தாலும் நம்மால் சாப்பிட முடிந்த அளவு மட்டுமே ஆர்டர் செய்யவேண்டும். சாப்பிடும் விஷயத்தில் மட்டும் கவுரவம் பார்க்க கூடாது. இலையை சுத்தமாக வழித்தாலும் தப்பில்லை.//

அப்படியே வழி(த்து)மொழிகிறேன். :)

செய்தாலி said...

கட்டுரைய
படிச்ச பிறகு
சாப்பிடாமலே வயறு நிறைஞ்சிருச்சு
இறுதியில் சொன்ன விஷயம் சூபர்

அருள் said...

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

NKS.ஹாஜா மைதீன் said...

படிக்கும்போதே சுவைக்கனும்போல இருக்கு...

Unknown said...

நாங்க...டிசைன் சம்மதமாக சிவகாசி போகும் போது...விருதுநகரில் இறங்கி...புரோட்டா கோழிகறி சால்னா வாங்குவோம் முழுதொடைய அண்ணாச்சிக வைப்பாங்க...ரொம்ம வருசமாச்சு பாலா சார்! இன்னும் நாவுல அந்த சுவையிருக்கு....

புரோட்டா அதிகமாக உண்பர்களுக்கு மலசிக்கல் வரக்கூடிய வாய்ப்பு இருக்கு என்று மருத்துவ உலகம் சொல்லுது...புரோட்டா உண்ட பிறகு ஒரு மலைவாழைப்பழத்தையும் நிறைய தண்ணீரும் குடிப்பது நலம்

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

ஹா ஹா ஹா அதுக்கு நான் பொறுப்பில்லை நண்பரே. கருத்துக்கு நன்றி

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

நீங்கள் விருதுநகருக்கு வந்திருக்கிறீர்களா? அடுத்தமுறை வந்தால் கண்டிப்பாக பரோட்டாவை சுவையுங்கள்.

சால்னா என்பது குருமா மாதிரியே இன்னொரு குழம்பு வகை.

//குறைந்த் எண்ணெயில் செய்தால் தான் அது பரொட்டா, அதிக எண்ணெயில் பொரித்து எடுத்தால் - அது பூரி.

விருதுநகர் பரோட்டா சாப்பிட்டு விட்டு அப்புறம் சொல்லுங்கள் இதை.

பாலா said...

@K.s.s.Rajh
அய்யோ நண்பரே நீங்கள் நாடு திரும்பி விட்டீர்களா? நான் பேஸ்புக் சும்மாதான் வைத்திருக்கிறேன். எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களை தவற விட்டதற்கு வறுத்துகிறேன். அடுத்த முறை தவறாமல் மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்கள், நன்றி

பாலா said...

@K.s.s.Rajh
அய்யோ நண்பரே நீங்கள் நாடு திரும்பி விட்டீர்களா? நான் பேஸ்புக் சும்மாதான் வைத்திருக்கிறேன். எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களை தவற விட்டதற்கு வறுத்துகிறேன். அடுத்த முறை தவறாமல் மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்கள், நன்றி

பாலா said...

@Kumaran

கண்டிப்பாக சுவைத்துப்பாருங்கள்.

சால்னா என்பது குருமா மாதிரி ஒரு வகை தேங்காய், முந்திரி மற்றும் கறி சேர்த்து செய்யும் ஒரு வகை குழம்பு வகை.

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@கணேஷ்

ஹா ஹா போயிட்டு வாங்க நண்பரே. நன்றி

பாலா said...

@துளசி கோபால்

ஆமாம் நண்பரே எங்கள் வீட்டில் எல்லோரும் அந்த காலையில் வல்லவர்கள். நான்தான் கத்துக்குட்டி

பாலா said...

@சேலம் தேவா

இப்போது இலையை வழிப்பதே இண்டீசண்ட் ஆகி விட்டது என்ன செய்வது? நன்றி நண்பரே

பாலா said...

@செய்தாலி

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@அருள்

உங்கள் சுட்டிக்கு நன்றி நண்பரே. கண்டிப்பாக படிக்கிறேன்

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@வீடு K.S.சுரேஸ்குமார்

மிக்க நன்றி நண்பரே. இங்கே வயிற்றுப்போக்கு இருந்தால் பரோட்டா சாப்பிட சொல்கிறார்கள். வயிற்றுப்போக்கை நிறுத்தும் என்பதால்.

baleno said...

தமிழ்நாட்டிற்க்கு வர வேண்டும் என்று ஆசையை உண்டாக்கி விட்டீர்களே 3ம் 4ம் படங்களில் உள்ள உணவு நல்லாக இருக்கிறது.

Sankar Gurusamy said...

புரோட்டா மற்றும் அதன் விதங்களைப் பற்றியும் அது சாப்பிடும் முறைகளைப்பற்றியும் விளக்கியது அருமை.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

ப.கந்தசாமி said...

நல்ல சாப்பாட்டு ராமன்கள் போங்க.

Karthikeyan said...

பட்டைய கிளப்பீட்டிங்க தல. வாய் ஊறுது. உங்க ஊர் பேர் போட்டு எங்க ஊர்ல வியாபாரம் செய்ராங்க. ஆனா அந்த டேஸ்ட் வர்றது இல்லை. விருது நகர் டேஸ்ட்க்கு காரணம் எங்கயோ சீக்ரட்டாக இருக்கு.

அப்புறம் உணவை கண்டபடி ஆர்டர் செய்து பந்தாவாக கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வேஸ்ட் செய்யுற ஆசாமியை பார்த்தா எனக்கு ஆத்திரமே வந்துடும். என் நண்பர்கள் குழுவில் யாரும் அந்த மாதிரி இல்லை. ஏனெனில் அப்படி உணவை வீண் செய்பவனுக்கு எங்கள் குழுவில் இடம் இல்லை.

பாலா said...

@baleno

சுவைத்து பாருங்கள் இன்னும் அருமையாக இருக்கும். நன்றி நண்பரே

பாலா said...

@Sankar Gurusamy

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@பழனி.கந்தசாமி

ஹா ஹா கரெக்ட்டா சொல்லிட்டீங்க சார்

பாலா said...

@Karthikeyan
உணவை வீனடிப்பவர்களை பார்த்தால் எனக்கும் எரிச்சலாக வரும். கருத்துக்கு நன்றி நண்பரே

ஷர்புதீன் said...

எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் உணவை ருசி பார்த்து அதனை மற்றவர்களிடம் சொல்வது எனது உணவு பழக்க வழக்கங்களுள் ஒன்று

-தோழன் மபா, தமிழன் வீதி said...

புரோட்டா முகலாயர்கள் காலத்தில் வந்ததாக கேள்வி. எங்கேயிருந்து எப்படி வந்திருந்தலும், புரோட்டா நமது வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. நல்ல ருசியான பதிவு. வாழ்த்துகள்.

பாலா said...

@ஷர்புதீன்

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@-தோழன் மபா, தமிழன் வீதி

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே அடிக்கடி வாங்க

swaminathan said...

It is better to avoid eating Parotta often for health concern.

Related Posts Plugin for WordPress, Blogger...