விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 2, 2012

கடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு


மைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு சுட்டி. அந்த வகையில் இப்போது இருநூறு பதிவுகள் என்ற ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறேன். இதற்கு ஆதரவாக இருந்த அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிகளை கூறி விட்டு, உங்களது ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன். 



இருநூறு பதிவுகள் எழுதிவிட்ட போதிலும், இந்த வலைத்தளத்தில் இன்னும் ஒரு கவிதை கூட வெளியாகவில்லை. ஒரே ஒருமுறை சச்சின் பிறந்தநாளுக்கு எழுதியதாக ஞாபகம். அதுவும் கவிதை என்று சொல்லமுடியாது. டி‌ஆர் பேசும் வசனம் போலவே இருந்தது. இதன் காரணம் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதுதான். அந்த குறையை போக்க, இதில் கவிதை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். பயந்து விடாதீர்கள். நான் சொந்தமாகக் கவிதை எழுதவில்லை. தோழி ஒருவரிடம் கடன் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். இதில் சொற்குற்றம் அல்லது பொருட்குற்றம் இருந்தால் அது இந்த தருமியை சேராது என்று கூறிக்கொள்கிறேன். இதோடு நில்லாமல் இன்னும் நிறைய கடன்கள் வாங்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். 

கவிதையடி நீ..... 

உணர்வுகளும் கவிதைகளும் 
ஒன்றுதான் - எப்போதும் 
சுலபத்தில் புரிவதில்லை
உற்றவர் தவிர மற்றவர்க்கு....... 

ஒரு ஹைக்கூ கவிதை 
சொல் என்கிறாள்..... 
எங்ஙனம் சொல்வேன்? என் 
ஹைக்கூ அந்த 
இலக்கியத்தின் முன்
தோற்று நிற்பதை..... 

எத்தனை இனிய
இசையொலி
கேட்டாலும்... 
உன் கொலுசொலியை ஒப்பிட்டு 
உச் கொட்டுகிறது
என் மனம்..... 

தமிழில் கொட்டிக்கிடக்கும்
அத்தனை வார்த்தைகளும்
எட்டி நின்றன,
பெண்ணே... 
கவிப்பொருள் நீயானதால் .... 


நினைவுகள் 

என்
பயணங்களின் நீளங்கள்
குறைகின்றன
உன்
நினைவுகளின் நீளத்தினால்..... 

பகலவன் கண்டு உதித்த
பனித்துளிகள்.....
அவளது 
பளிங்கு முகத்தில் 
வியர்வைகளாய்.....  

காதல் 
என்றொரு வார்த்தையில்
சொல்லி
முடிக்க மனமில்லை.... 
ஒரு தாயின்
நேசமும் உனக்காய் 
என்னுள் இழைந்தோடுவதால்.......  

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


61 comments:

பால கணேஷ் said...

கடன் தர்ற தோழிங்கள்லாம் இருக்காங்க பாலாவுக்கு. எனக்கு அப்படி யாரும் இல்லையே சொக்கா... என்ன செய்ய... 200க்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பாலா!

செய்தாலி said...

//ஒரு ஹைக்கூ கவிதை
சொல் என்கிறாள்.....
எங்ஙனம் சொல்வேன்? என்
ஹைக்கூ அந்த
இலக்கியத்தின் முன்
தோற்று நிற்பதை.//

செமையா செம்மையாய்

//காதல்
என்றொரு வார்த்தையில்
சொல்லி
முடிக்க மனமில்லை....
ஒரு தாயின்
நேசமும் உனக்காய்
என்னுள் இழைந்தோடுவதால்..//

ம்ம்ம்ம் மெய்யான வார்த்தை

இருநூறாவது பதிவுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

உணர்வுகளும் கவிதைகளும்
ஒன்றுதான் - எப்போதும்
சுலபத்தில் புரிவதில்லை
உற்றவர் தவிர மற்றவர்க்கு....... //
எவ்வளவு அழகான உணர்வு. அருமை. தொடருங்கள் பாலா.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

திரிஷா முகத்தை உற்று பார்ப்பதால், கவிதை நன்றாக வருகிறது உங்களுக்கு. :P

முத்துசிவா said...

வாழ்த்துக்கள் தல... :)

NKS.ஹாஜா மைதீன் said...

வாழ்த்துக்கள்....

முத்தரசு said...

வெரி நைஸ்.

ஆமா இரண்டு நடிகைகள் படங்கள் எதுக்கு? ங்கே....

கூடல் பாலா said...

வாழ்த்துக்கள்!கடன் வாங்கிய கவிதைகள் அருமை!

Unknown said...

200வது பதிவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.. வலையுலகில் இன்னும் அதிகம் சாதிக்க நல்வாழ்த்துகள்..

எப்பூடி.. said...

200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள், கவிதை நல்லாயிருக்கு.......

Unknown said...

கவிதைகளை வழங்கிய உங்கள் தோழிக்கு சிறப்பான பாராட்டுகள்.
பெண்ணைப் பற்றிய ஆணின் கவிதையாக முதலாவது கவிதை தந்திருக்கிறார். நல்ல புரிந்துணர்வு.
இரண்டாம் கவிதை காத்லின் நீட்சியைக் காட்டுகிறது. பாராட்டுகள்.

பாலா said...

@கணேஷ்

சார் உங்ககிட்ட சொந்த சரக்கு இருக்கும்போது எதுக்கு கடன் வாங்க போறீங்க? நன்றி சார்

பாலா said...

@செய்தாலி

உங்கள் வெளிப்படையான ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

ரொம்ப நன்றிங்க. அப்புறம் திரிஷா முகத்தை பார்த்ததும் கவிதை வரவில்லை. இந்த கவிதையை பார்த்தட்டும் திரிஷா முகம் நினைவுக்கு வந்தது. பீலிங்க்ஸ்.....

பாலா said...

@முத்துசிவா

நன்றி நண்பரே

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

நன்றி நண்பரே

பாலா said...

@மனசாட்சி™

நன்றி நண்பரே. இந்த தளத்தில் கவிதைகள் மாதிரியே நடிகைகள் படமும் அதிகம் வந்ததில்லை.

அதற்காக கவிதையும் நடிகையும் ஒன்றா என்றெல்லாம் கேட்கப்படாது....

பாலா said...

@koodal bala

நன்றி நண்பரே

பாலா said...

@எப்பூடி..

நன்றி தலைவரே.

பாலா said...

@பாரத்... பாரதி...

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

Yoga.S. said...

வணக்கம் பாலா!200-வதுபதிவுக்கு(கவிதை)வாழ்த்துக்கள்!கவிதை கடன் வாங்கியிருந்தாலும்,சொற்குற்றம்,பொருட்குற்றம் இல்லை!எழுதியவருக்கும் வாழ்த்துக்கள்!சரி,இனி விடயத்துக்கு வருவோம்:அந்தப் பொண்ணு ஏன் நகத்தக் கடிக்குது?கமலா காமேஷுக்கும்(திரிஷா)இந்தக் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?

r.v.saravanan said...

200 பதிவுக்கு வாழ்த்துக்கள் பாலா

கலாகுமரன் said...

கடன் வாங்கிய கவிதை....கசக்குமா ?
சும்மா யேசிச்சி எழுத முடியாது அனுபவிச்சு எழுதிய கவிதை. வாழ்த்துகள்.

வைகை said...

வாழ்த்துக்கள்... மீண்டும் ஒரு கிரிகெட் தொடர் எழுதுங்கள் :-)

Unknown said...

உணர்வினால்தான் கவிதை பிறக்கும் கடன் வாங்கியும்?????? உங்களட200 உள்ளங்களிந்த நல்வாழ்த்துக்கள்.....

r.v.saravanan said...

கடன் வாங்கிய கவிதை நல்லாயிருக்கு

தனிமரம் said...

காதலின் நினைவு அவள் கொலுசு வரும் உஸ் சத்தம் என்றால் காதலின் சங்கமம்  அவனும் ஒரு தாய்யுள்ளம் கொண்ட பார்வை ரசித்தேன் கவிதையை.வாழ்த்துக்கள் தொடர்ந்து ஏழுதுங்கள் பாலா!

தனிமரம் said...

நன்றி பாலா வாழ்த்துக்கள் தந்து வாழ்த்தியதற்கு!

Karthikeyan said...

கவிதைக்கு படங்கள் மிகப்பொருத்தம். 200 பதிவுகள் என்பது மிகப்பெரிய மைல்கல்தான். சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் ஓட வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பாலா said...

@Yoga.S.FR

நன்றி நண்பரே. போட்டோ எடுக்கும்போது அந்த பொண்ணு டென்சனா இருந்திருக்கு போலிருக்கு. அப்புறம் நான் கமலா காமேஷோட ரசிகன். அவங்க போட்டோ கிடைக்காததாலே இவங்க படத்தை போட்டிருக்கேன். ஸ்‌ஸ்‌ஸப்பா....

பாலா said...

@r.v.saravanan

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@EniyavaiKooral

உண்மைதான். கடன் வாங்குவதே ஒரு சுகம்தான். நன்றி நண்பரே

பாலா said...

@வைகை

யோசிச்சிக்கிட்டிருக்கேன். கண்டிப்பா எழுதுகிறேன் நண்பரே,

பாலா said...

@Esther sabi

உங்களின் உளமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றிங்க

பாலா said...

@தனிமரம்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@Karthikeyan

மிக்க நன்றி நண்பரே. உங்கள் ஆதரவு எப்போதும் தேவை

rajamelaiyur said...

வாழ்த்துகள் நண்பா .. தொடரட்டும் உங்கள் சாதனை

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் 200வது பதிவுக்கு....

அருமையான படைப்புகளை தொடருங்கள். நண்பா.

கிரி said...

கவிதைகளுக்கும் எனக்கும் வெகு தூரம் :-) 200 பதிவிற்கு வாழ்த்துகள்.

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@தமிழ்வாசி பிரகாஷ்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@கிரி

நீங்களும் நம்மள மாதிரிதானா? எனக்கும் தூரம்தான். நன்றி நண்பரே

Thava said...

தங்களது 200வது பதிவுலக வெற்றி பயணத்துக்கு என்பது மனமார்ந்த பாராட்டுக்கள் சகோ..மென்மேலும் நீங்கள் தொடர்ந்திட என் வாழ்துக்களோடு நன்றி.

பாலா said...

@Kumaranமிக்க நன்றி நண்பரே. உங்கள் ஆதரவு எப்போதும் தேவை

மாலதி said...

தமிழில் கொட்டிக்கிடக்கும்
அத்தனை வார்த்தைகளும்
எட்டி நின்றன,
பெண்ணே...
கவிப்பொருள் நீயானதால் .... //வள்ளுவர்கூட இப்படித்தான் சொல்லிவைப்பார் குழை இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர் இப்படிதான் ஆயிரமாயிர வார்த்தைகள் கொட்டி கிடந்தாலும் காதலின் இனிய சுகமே நல்ல நினைவு வாழ்த்துகள் கனவுகள் நீடிக்கட்டும்......

ஆத்மா said...

இன்னும் பல மைல் கடந்து உங்கள் கால்கள் வலிக்க வாழ்த்துகிறேன்....

ஆத்மா said...

ஒரு ஹைக்கூ கவிதை
சொல் என்கிறாள்.....
எங்ஙனம் சொல்வேன்? என்
ஹைக்கூ அந்த
இலக்கியத்தின் முன்
தோற்று நிற்பதை.....//

சார் இது உங்களுக்கு பொருந்தும் என நினைக்கிறேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Karthikeyan said...

ஆதரவு என்னென்றும் உண்டு.. உங்கள் எழுத்து நடையில் ஒருவித சுவராஸ்யம் இருந்துகொண்டே இருக்கிறது. இது ஒரு கலை. வாழ்த்துக்கள்.

தடம் மாறிய யாத்ரீகன் said...

இரு நூறாவது பதிவுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் பாலா சார் !! தொடர்ந்து எழுதுங்கள் !!!

...αηαη∂.... said...

வாழ்த்துக்கள்.., இடைக்கூடவா கடனா தராங்க...

N.H. Narasimma Prasad said...

வாழ்த்துக்கள் பாலா சார். கவிதைகள் அருமை. கவிதையை கடன் கொடுத்த உங்கள் தோழிக்கு என் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி.

பாலா said...

@மாலதி

கருத்துக்கு நன்றிங்க

பாலா said...

@சிட்டுக்குருவி

ரொம்ப நன்றிங்க.... நீங்க சொன்னா சரிதான் :)

பாலா said...

@Karthikeyan

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@...αηαη∂....

உயிரை தவிர வேறு என்ன வேண்டுமானாலும் இங்கே கடனாக கிடைக்கும்... நன்றி நண்பரே

பாலா said...

@N.H.பிரசாத்
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

test said...

very nice story thank you for news i am bookmarking my browser thank you my website please visit http://www.kollywoodthendral.in

vimalanperali said...

சொல் குற்றமுமில்லை,பொருள் குற்றமுமில்லை.கவிதைதான் மழையாய் பொழிகிறதே அப்புறமென்ன?

இராஜராஜேஸ்வரி said...

200ஆவது பதிவுக்கு நிறைவான வாழ்த்துகள்..

Yoga.S. said...

காலை வணக்கம் பாலா!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள்ணே..... ரொம்ப நல்லாருக்கு, போட்டோக்களை சொன்னேன்......

Related Posts Plugin for WordPress, Blogger...