விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 11, 2013

விஸ்வரூபம் போன்ற படங்களை என்ன செய்யலாம்?

; நான் விஸ்வரூபம் படத்தை பார்த்து விட்டேன். "படம் வெளிநாடுகளில் பட்டையை கிளப்பி வருகிறது", என்று எல்லோரும் கூறினாலும் எங்கள் ஊரில் தியேட்டர்கள் காத்தாடுகிறது என்பதே உண்மை.(ஒருவேளை வெளிநாடுகளில் படத்தின் நிலைமை என்னவென்று நமக்கு தெரியாது என்பதால் புருடா விடுகிறார்களோ?) என் உறவினர் ஒருவர் தீவிர கமல் பக்தர். அவரிடம் அவரது நண்பர் வழக்கமாக ஒவ்வொரு கமல் படம் வெளிவரும்போது கேட்கும் அதே கேள்வியைத்தான் இப்போதும் கேட்டார். "உங்க ஆளுக்கு புரியுர மாதிரி படம் எடுக்கவே தெரியாதா?" என்பதுதான் அவர் வழக்கமாக கேட்கும் கேள்வி. பூஜா குமார் கமலை பின்தொடர்ந்து ஒரு டிடெக்டிவை ஏன் அனுப்புகிறார் என்பதையே நான் அரைமணி நேரம் அவருக்கு(கமல் பக்தருக்கு) விளக்கினேன். இது இப்படி இருக்க, தாலிபான், ஒசாமா, எஃப்‌பி‌ஐ, சீசியம் என்று நான் இறங்க அவர் சொன்னது, "கிழிஞ்சது போ.... ". இதுவே ஒரு C சென்டர் ரசிகனின் ஒற்றைவரி விமர்சனம்.&nbsp


சரி அதை விடுங்கள். "அதென்னமோ இந்தப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தி எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்களே? அதைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன்?" என்று கூறுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நான் ஒரு கருத்தை சொல்லப்போக, கடந்த ஒரு மாதகாலமாக பல தளங்களில் வந்த அதே செட்ஆஃப் கருத்துகளை மறுபடியும் ஒரு முறை என் தளத்தில் வந்து பகிருவார்கள். இசுலாமிய கருத்துரையாளர்களுக்கு மாலேகான், மோடி, காஷ்மீர் என்று ஒரு அஜெண்டா. இந்து கருத்துரையாளர்களுக்கு, நபி, பர்தா, மலாலா என்று இன்னொரு அஜெண்டா. இவை இரண்டையும் தாண்டி இருவருமே வெளி வர விரும்ப மாட்டார்கள். ஆகவே அதை பற்றி பேசி இங்கே நேரத்தை வீணடிக்க வேண்டாம். 


ஒரு இந்துவாக என் கருத்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எல்லா இசுலாமியர்களும், தீவிரவாதிகளோ, கொடிய எண்ணம் கொண்டவர்களோ அல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, எல்லா இந்துக்களும், இந்துத்வாவாதிகளோ, ஆர்‌எஸ்‌எஸ்காரர்களோ, இசுலாமியர்களை விரோதிகளாக எண்ணுபவர்களோ அல்ல. தங்களது கடவுள்கள் குழுவில் அல்லா சாமியையும், ஏசப்பாவையும்  சேர்த்துக் கொண்டவர்களே அநேகம். சரி இதைப்பற்றி இன்னொரு நாள் இன்னும் விலாவாரியாக எழுதுகிறேன். 

நான் இந்த பதிவில் சொல்லவேண்டியதை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்று விட்டேன். பார்த்தீர்களா? இப்படித்தான் எல்லா விவாதங்களும் சென்று விடுகின்றன. சரி விஷயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் என்ற ஒரு படம் இல்லை. பொதுவாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை சொன்னவுடன் உங்களுக்கு ஒரு உருவம் ஞாபகத்துக்கு வரும். அது நம் தமிழ் சினிமா உருவாக்கி வைத்துள்ள பிம்பம்.  அதையே இங்கே பட்டியலிட போகிறேன்.  இதே மேட்டரை பலபேர் ஏற்கனவே பட்டியலிட்டு விட்டாலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்காக. 

படத்தில் வரும் பாத்திரங்களை சில பிரிவுகளாக பிரித்துள்ளேன்.

துணை பாத்திரங்கள் 

தீவிரவாதி - பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லீம்

போலி சாமியார் - ஒரு இந்து சாமியார் (பெயர் ஏதோ ஒரு ஆனந்தாவாக இருக்கும்)

அம்மு குட்டி (அ) ஓமண குட்டி - கேரளாவை சேர்ந்த ஒரு பெண். இவளுக்கு எப்போதுமே தமிழ் ஆண்கள் மீது ஒரு கண் உண்டு. ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ஹி ஹி...  

நாயர் - இவர் அம்முகுட்டியை கல்யாணம் செய்த அப்பாவி. டீக்கடை நடத்துபவர்

மடிசார் மாமி - இவர் அம்முகுட்டியின் தமிழ் சாரி ஆரிய வெர்ஷன். இவரது ஆத்துக்காரர் யாரென்பது தெரியவே இல்லை

கிளப்பில் நடனம் ஆடுபவள் -  கிறித்துவ பெண் 

விபசாரம் செய்பவள்#1 - வாழ்க்கை இழந்த (வில்லனால் கெடுக்கப்பட்ட) தாழ்ந்த சாதி பெண்

விபசாரம் செய்பவள்#2 - ஆடம்பரத்தை விரும்பும் பணக்கார கிறித்துவ பெண்

விபசார விடுதி நடத்தும் பெண் - வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டு தெலுங்கு பேசுபவள் 

சேட் - மக்களை ஏமாற்றும் வட்டிதொழில் செய்யும் முட்டாள் வட இந்தியர் 

ரொம்ப நல்ல பெரியவர் - வயதான பள்ளி ஆசிரியர் அல்லது சுதந்திர போராட்ட தியாகி

போலீஸ் கமிஷனர் - வில்லனுக்கு துணை போய், அவனிடம் அறை வாங்கும் அளவுக்கு கேவலமான மாமா

பட்லீ அல்லது செட் அப் - நுனி நாக்கில் தமிழ் பேசும் ஆங்கிலோ இந்திய பெண் 

கறிக்கடை பாய் - பத்து இந்துக்கள் கடை வைத்திருக்கும் இடத்தில் மத நல்லிணத்துக்காகவே கசாப்பு கடை வைத்திருக்கும் ஒரு முஸ்லீம். 

ஃபாதர் - அதே தெருவில், அதே காரணத்துக்காக அங்கியை மாட்டிக்கொண்டு குறுக்கா மறுக்கா நடக்கும் கிறித்துவர்


குருக்கள் - ஒரு சண்டை காட்சிக்கு லீடாக ரவுடிகளால் கலாய்க்கப்படும் ஒரு அப்பாவி. மற்ற நேரங்களில் நாயகன் அல்லது காமெடியன்களால் கலாய்க்கப்படுபவர்

 நர்ஸ் - நகைச்சுவை நடிகர்களால் கையை பிடித்து இழுக்கபடுபவர் 

வில்லன் மனைவி - கணவனுக்காக கோயில் கோயிலாக சுற்றும் தீவிர இந்து பக்தை. 

பத்திரிக்கை நிருபர் - தாடி வைத்தவர். வில்லனால் கொல்லப்படுபவர் 

திருநங்கை - காமெடி காட்சியில் கதாநாயகனை துரத்துபவர் அல்லது பாடல் காட்சியில் நகைச்சுவை நடிகரை சுற்றி ஆடுபவர். 

வில்லன்கள் 

லோக்கல் ரவுடி வில்லன் - தீவிர இந்து. குறிப்பாக முருகன், சிவன், முனியசாமி ஆகியோரை கும்பிடுபவன். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்த தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் 

ரெட்டி - படிக்காத ஆந்திர அரசியல்வாதி. பெண் பித்து பிடித்த கொலைகார வில்லன் 

பீகாரி - படிக்காத வட இந்திய தாதா. பெண் பித்து பிடிக்காத கொடூர கொலைகார வில்லன். 

அமெரிக்க ஐரோப்பிய வில்லன் - போதைக்கும் பெண்ணுக்கும் அடிமையான ஒரு கிறித்துவன் 

தேசத்தை அச்சுறுத்தும் தீவிரவாத வில்லன் - முதலில் தாடி வைத்து, பிறகு அதை மழித்து கொண்டு சுற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் 

கெட்ட சைக்கோ கொலைகாரன் - ஒரு கிறித்துவன்


பெண்களை கடத்துபவன் - கிறித்துவன்

கடத்த பட்ட பெண்களை ஏலம் எடுப்பவன் - துபாய் ஷேக் அல்லது முஸ்லீம் 

வில்லனின் முக்கிய அடியாள் - முஸ்லீம். திருந்தும் நேரத்தில் வில்லனால் கொல்லப்படுபவன் 


கதாநாயகன் மற்றும் கதாநாயகி
ஏழை கிறித்துவன் - மீன் பிடிப்பவன், சாராயம் குடிப்பவன். கேரஜ் வைத்து மெக்கானிக்காக இருப்பவன்

பணக்கார கிறித்துவன் - அடிப்படையில் நல்லவன் ஆனால் கடத்தல் தொழில் செய்பவன். விஸ்கி குடிப்பவன்.  (இந்துவாக பிறந்தவன்)


ஏழை இசுலாமியன் - இப்படி ஒரு பாத்திரம் மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் தாதா வில்லனின் அடியாள் (இந்துவாக பிறந்தவன்)

பணக்கார இசுலாமியன் - மிக மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் லோக்கல் தாதா (இந்துவாக பிறந்தவன்)

தலித் (அ) தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் - அநாதை, சேரியில் வளர்ந்தவன்.(உயர்ந்த சாதியில் பிறந்தவன்)

தமிழ் பட கதாநாயகன் (90%) - வேறு சாதியில்(தாழ்த்தப்பட்ட சாதியில் அல்ல) பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிராமணன் ஆக வாழ்பவன் அல்லது பிராமணனாக பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரியில் வாழ்பவன்  

பணக்கார கதாநாயகி - மாடர்ன் டிரெஸ் போட்ட, படித்த திமிர் பிடித்த வெகுளியான லூசுப்பெண்


ஏழை கதாநாயகி - தாவணி காட்டிய, படிக்காத வெகுளியான லூசுப்பெண்

மிடில் கிளாஸ் நாயகி - சுடிதார் போட்ட  காலேஜ் போகும் வெகுளியான லூசுப்பெண் 

புதுமைப்பெண் கதாநாயகி - பேண்ட் ஷர்ட் போட்டவள்,  நாயகனை மணக்கும் வரையில் பெண்ணுரிமை பேசுபவள் அதன் பிறகு லூசுப்பெண்  

 இப்போவே கண்ணை கட்டுது. இதுக்குமேல நம்மால் முடியாது. விட்டுப்போனவைகளை பின்னூட்டத்தில் கூறுங்கள். 

இது ஒரு தவறான பிம்பம் என்றாலும்  இதை உருவாக்கிய பெருமை (அ) சிறுமை திரை துறையையே சாரும். இது மாற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் மாறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. யாரும் தட்டிக்கேட்கவும் போவதில்லை. அப்படியே கேட்டாலும், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று பதில் வரும். 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க. 

41 comments:

Prakash said...

நம்ம ஊரில் காத்தாடுவது உண்மைதான் பாஸ்

Speed Master said...

ada ada enna ma aaraiyatchee

arumaingaa

செங்கோவி said...

நல்ல லிஸ்ட்..படிக்கும்போதே கண்ணைக்கட்டுது.

Anonymous said...

இதுல ஒரு முக்கியமான விசயம் மக்களும் இந்த பிம்பங்களுக்கு பழகிப்போயிட்டாங்க..இப்ப மாத்தினா அந்த படம் ஓடாது! ரியலிஸ்டிக்கா இல்லேன்னுவாங்க...இன்னும தெலுகு,மலையாளப்படங்களில் வரும் பிம்பங்களையெல்லாம் எழுத ஆரம்பிச்சீங்கன்னா...அவ்ளோதான்...இதெல்லாம் கிளிஷே

Anonymous said...

மொத்தமா 120 கோடி வசூல்னு சொல்றாங்க...இந்தியா முழுதுமா இருக்கும். யப்பா...இனிமே கமல் நம்ம கிட்டே கடன் கேட்க மாட்டாரு

kk said...

சூப்பர் லிஸ்டு

அன்பு துரை said...

அடா அடா அடா.. என்னா விளக்கம் என்னா விளக்கம்.. செம..

நெஞ்ச தொட்டுடீங்க.. ரொம்ப புடிச்சிருக்கு..

இதுக்கு மேல தமிழ் திரைத்துறை கதாபாத்திரங்களைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்ல..

JR Benedict II said...

சூப்பர் தலைவரே கலக்கிட்டிங்க..

வில்லனின் அடியாள் - ஹீரோவிற்கு பயங்கர லீட் கொடுக்கும் காமெடி நடிகர்

இதையும் சேர்துகோங்கோ

திண்டுக்கல் தனபாலன் said...

சினிமாவின் மீது தீராத ஈர்ப்பு / கவனிப்பு இருந்தால் தான் இவ்வாறு பட்டியலிட முடியும்...

பாராட்டுக்கள்...

r.v.saravanan said...

இதை உருவாக்கிய திரை துறை இது மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.

பாலா said...

@Prakash

கமல் படங்கள் எப்போதுமே வெளியாகி சில வருடங்கள் கழித்தே சிலாகிக்க படுகின்றன.... இது எப்போதும் நடப்பதே... கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Speed Master

நன்றி நண்பரே

பாலா said...

@செங்கோவி
ரொம்ப நன்றி தல

பாலா said...

@Chilled Beers

நீங்க சொல்றது உண்மைதான். மக்கள் அப்படி பழக்கப்ப்ட்டு விட்டார்கள்.

வசூல் நிலவரம் உண்மைதானா?

பாலா said...

@Kiruththikan Yogaraja

நன்றி நண்பரே

பாலா said...

@அன்பு
உங்க கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ஹாரி R.

தகவலுக்கு நன்றி அதையும் சேர்த்துக்கலாம் :)

பாலா said...

@திண்டுக்கல் தனபாலன்

தொடர்ந்து தமிழ் சினிமாவை கவனித்து வருவதால் வந்த ஐடியா சார். ரொம்ப நன்றி

பாலா said...

@r.v.saravanan

மாறுமா என்பது சந்தேகம்தான் சார். கருத்துக்கு நன்றி

முத்தரசு said...

இம்புட்டு ெபாிய லிஸ்ட்

அேடங்கப்பா

Manimaran said...

நிச்சயம் சி செண்டர் ரசிகர்களுக்கு இந்தப்படம் அறவே புரியாது.ஆனால் வெளிநாடுகளில் சக்கைப் போடுவது என்னவோ உண்மைதான்.தமிழ் வசனங்களுக்கே கீழே ஆங்கில சப் டைட்டில் போடுகிறார்கள்.அதனால் படம் புரிவதில் எந்த சிரமமும் இல்லை.அப்படியே புரியவில்லை என்றால் இரண்டாம் முறை பார்க்கிறார்கள்.டிக்கெட் விலையும் அவ்வளவாக அதிகமாகப் படவில்லை.ஆனால் உள்ளூர் ரசிகர்களை கமல் இதுவரை ஒட்டு மொத்தமாக திருப்திப் படுத்தியது கிடையாது.விஸ்வரூபமும் அந்த வகையே..

M (Real Santhanam Fanz) said...

ஹீ ஹீ.. என்னா பாஸ் இப்புடி சொல்லிடீங்க... இதுல எதாவது ஒன்னுகுள்ளதானே வந்து ஆகனும்!! அப்புடி இல்லன்னா நாம எப்புடி அத தமிழ் படம்ன்னு ஒத்துப்போங்குறேன்?

vimalanperali said...

நல்ல விமர்சனம்.

Unknown said...

ஆமாம் உங்களுக்கு பில்லா2 எந்திரன் போக்கிரி அலெக்ஸ்பாண்டியன் எல்லாம் உலகத்தரமான படம் அனால் கமல் படம் புரியாத படம் என்ன புரியவில்லை என்று எனக்கு தெரியவில்ல இந்த படத்தை புரிந்து கொல்லாத அளவுக்கு கூடவா இன்னும் தமிழ்நாட்டில் மக்கள் இருக்கிறார்கள். தமிழ்சினிமா ஆஸ்கார் அவார்ட் வாங்கும் என்று கனவிலும் நாம்நினைக்க முடியாது போல....
ஷங்கர், ரஜினி, விஜய்,அஜித்,ஹரி,பேரரசு,பவர் ஸ்டார் இவர்கள் தான் தமிழ் சினிமாவுக்கு ஏற்றவர்கள்........

பாலா said...

@Antony Raj

வணக்கம் நண்பரே. ஏன் டென்ஷன் ஆகுறீங்க? இப்போ படம் எனக்கு புரியவில்லை என்று நான் கூறினேனா? அதே போல நீங்கள் கூற படங்களை எல்லாம் உலகத்தரமான படம் என்று எப்போது கூறினேன். எதையுமே ஆத்திரப்படாமல் புரிந்து கொள்ள பழகுங்கள். இதே பிரச்சனைதான் நிறைய பேருக்கு.

உங்களுக்கு எந்த ஊர்? மக்களின் மனநிலை என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இந்த படத்தை புரிந்து கொல்லாத அளவுக்கு கூடவா இன்னும் தமிழ்நாட்டில் மக்கள் இருக்கிறார்கள்என்று முட்டாள்தனமாக கூறி இருக்க மாட்டீர்கள்.

என்னமோ ஆஸ்கர் கமிட்டி கமலுக்கு விருது கொடுத்தே தீருவேன் என்று அடம்பிடிப்பது போலவும், அதை நாங்கள் எல்லாம் சேர்ந்து வேண்டாம் என்று கூறுவது போலவும் சொல்கிறீர்களே? இப்போது சொல்கிறேன் தப்பி தவறி கூட விஸ்வரூபத்தை ஆஸ்காருக்கு கமல் அனுப்பி விடக்கூடாது. மீறி அனுப்பினால் அந்த கமிட்டி முன்னால் கமல் ஒரு பவர்ஸ்டார் போலத்தான் தெரிவார். எப்படியோ எனது அடுத்த பதிவுக்கு நல்ல லீட் எடுத்து கொடுத்ததற்கு நன்றி.

kumudini said...

ரஜினிக்கு விஸ்வரூபம் மூலம் கிடைத்த அடி பெரிது அல்ல.
இதை விட MGR ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த அடி தான் பெரிது.
எனவே எமது தங்க தலைவன் MGR க்கு இணையாக எவரையும் கொண்டு வரக்கூடாது என்பதனை கண்டிப்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.

நன்னயம் said...

சூப்பர் லிஸ்ட்
இந்த லிஸ்ட் ஐ வேறு இடங்களில் தேவைப்படும் போறது பகிர அனுமதி வேண்டுகின்றேன்.

பாலா said...

@kumudini

நண்பரே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். எம்‌ஜி‌ஆர் பெயரை வைத்து ரஜினியை திட்டினால் டென்ஷன் ஆகிவிடுவேன் என்று நினைத்தீர்களா? அம்மா கமலை தன் காலில் விழ வைத்ததை விடவா இது பிரமாதம்?

பாலா said...

@Ethicalist E

கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே. மிக்க நன்றி

kumudini said...

"நண்பரே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். எம்‌ஜி‌ஆர் பெயரை வைத்து ரஜினியை திட்டினால் டென்ஷன் ஆகிவிடுவேன் என்று நினைத்தீர்களா? அம்மா கமலை தன் காலில் விழ வைத்ததை விடவா இது பிரமாதம்?"

கமல் பல்டி அடித்து அம்மாவுடன் சமாதானமானது உண்மைதான். ஆனால் கமல் மம்மியின் காலில் விழவில்லை. (அமைச்சர்கள் செய்வது போல் காலில் விழுந்து வணங்கவில்லை)

ஒரு காலத்தில் மம்மியை திட்டி மம்மி வென்றால் தமிழ் நாட்டை காப்பாற்ற கடவுளால் கூட முடியாது என்று சொன்னவர் பின் மம்மியை ஆதி பராசக்தி சென்று பல்டி அடித்து காலில் விழுந்தவர் தான் ஓங்க சூப்புற ஸ்டார்.

அதுக்கு பிறகு கருணா ஆட்சிக்கு வந்த பிறகு கருணாவுக்கு ஜால்ரா பாடினார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் மம்மி புகழ் பாடி தேர்தலில் மம்மிக்கு தான் வோட் போட்டதை பகிரங்கமாக காட்டி மம்மிக்கு தனது புதிய விசுவாசத்தை காட்டினார்.

இதெல்லாம் விடவா கமல் ஒவரா மம்மி காலில் விழுந்து விட்டார். மம்மியின் காலை நக்கி விட கூட ஓங்க தலைவர் தயாராக இருக்கின்றார்.


kumudini said...

இப்ப பிரச்சினை யாரு நல்ல பல்டி அடிக்கிறாங்க என்பது அல்ல.
ரஜினி ரொம்ப காலமாக பல்டி அடிச்சு கொண்டு இருக்கார். அதுக்கு ஆதாரத்தை காட்டி புட்டேன்.
கமல் இப்ப தொடங்கியிருக்கார். பார்ப்போம் யாரு சூப்பரா பல்டி அடிக்காங்க என்று.

ஆனா என்னோட கேள்வி
ரஜினி MGR ராமாவரம் தோட்டத்தில் மரத்தில் கட்டி வச்சு செருப்பால அடிச்சதை பற்றி தான் (சும்மா அடிக்கல செருப்பால)

ஊருல ஆயிரம் பொண்ணு இருக்க போய் MGR stock ல் கை வச்சா சும்மா இருப்பாரா? அதுதான் வச்சாரு சூப்பர் ஆப்பு.

பிறகு என்ன ஒரு லதா போனா என்னொரு லதா என்று மனச தேத்திக்க வேண்டியதுதான்.

பாவம் சூப்புற ஸ்டார்

பாலா said...

@kumudini

என்னங்க கமல் அம்மா காலில் விழுந்ததை சொன்னதும் உங்களுக்கு இவ்ளோ கோபம் வருது. அது சரி தேவை இல்லாம இப்போ எதுக்கு விஸ்வரூபம் மேட்டர்ல எம்‌ஜி‌ஆர் பத்தி பேசுறீங்க?

Unknown said...

அவர் சொன்ன சில ரஜினி பற்றிய உண்மைக்கு பதில் சொல்லுங்கள் நண்பரே பிறகு mgr பற்றி கேள்வி கேட்கலாம்

Unknown said...

நான் டென்ஷன் ஆகவில்லையே இன்னும் எத்தனை நாள் தான் மசாலா படங்களை மட்டும் பார்த்து கொண்டு இருக்க போகிறோம்?
கமல் படத்துக்கு ஆஸ்கார் தர மாட்டார்கள் சரி உங்கள் தலைவர் ரஜினி படத்தை அனுப்பி பாருங்களேன் அவருக்கு கிடைகிறதா என்று பாப்போம். அவர் இன்னும் இந்தியாவில் தரும் தேசிய விருதையே வாங்கவில்லை.

பாலா said...

@Antony Raj

என்ன சொல்ல வர்றீங்க? விஸ்வரூபம் மசாலா படம் இல்லையா? என்னங்க டெக்னிக்கலா படம் தரமானதா இருந்தா உடனே ஆஸ்காரை தூக்கி கொடுத்துரனுமா? யோசிக்கவே மாட்டீர்களா?

இதுல ரஜினியை வேற இழுக்கிறீர்கள். ரஜினி படங்கள் ஆஸ்காருக்கு தகுதியானவை என்று எப்போதாவது சொல்லி இருக்கிறேனா? இதனால் தான் டென்ஷன் ஆகாதீர்கள் என்று சொன்னேன். கோபத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசக்கூடாது.

எம்‌ஜி‌ஆர்ருக்கும் லதாவுக்கும் விளக்கு பிடித்தமாதிரி யாரோ ஒருவன் உளறியிருப்பதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. இந்த பதிவுக்கும் ரஜினிக்குமே சம்பந்தம் கிடையாது அப்படியிருக்க எம்‌ஜி‌ஆர் பற்றிய பேச்சு எதற்கு?

Unknown said...

நான் அவர் சொன்ன MGR பற்றி சொல்லவில்லை. அவர் ரஜினியின் ஜல்றாகளை பற்றி சொன்னாரே அதுக்கு பதில் சொல்லசொன்னேன். நீங்கள் என்னவோ அம்மாவுக்கு விளக்கு பிடித்தார் போல அம்மா கமலை காலில் விழ வைத்ததை பற்றி சொன்னதற்கு தான் அவர் அப்படி சொன்னார் அதற்கு பதில் சமாளிக்காமல் சொல்லிவிட்டு அப்பறம் கேள்வி கேட்கலாம் அண்ணா.. ( நன் உங்களை நண்பர் என்று அழைத்ததற்கு மன்னிக்கவும் நீங்கள் என்னைவிட வயதில் பெரியவர் என்று நினைக்கிறேன் அண்ணா)

விஸ்வரூபம் கேவலமான தனி மனித துதி பாடும் மசாலா படம் இல்லை. அதில் ரசிக்ககூடிய கலைகளும் இருக்கிறது.டெக்னிக்கலாகவும் இருக்கிறது.நான் சம்பந்தம் இல்லாமல் ரஜினியை பற்றி பேசவில்லை பிற நடிகர்களிடம் குறை கண்டு பிடிக்கும் நம்மால் நமக்கு பிடித்த நடிகர்களிடம் அதை காண்பதில்லை. அதற்கு தான் ரஜினியை பற்றி கூறினேன். தவிர எனக்கு கமலை விடவும் ரஜினியை பிடிக்கும் ஏன் என்றால் என் வீட்டில் அனைவரும் ரஜினி, விஜய் ரசிகர்கள் தான்.

பாலா said...

@Antony Raj

ரஜினி என்பவரும் ஒரு தனி மனிதர்தான். அவருக்கும் சில விருப்பு வெறுப்புகள் மற்றும் எண்ண குழப்பங்கள் இருக்கும். ஏன் ஒவ்வொரு தடவையும் நாமே ஓட்டை மாற்றி மாற்றி போட்டு ஏமாறுகிறோமே?

நாட்டில் என்ன நடந்தாலும் ரஜினி என்ன சொல்கிறார் என்று திரும்பி பார்ப்பது, அவர் என்ன சொன்னாலும் அதில் நோட்டை நொள்ளை கண்டுபிடிப்பது இதுவே வேலையாக ஒரு குருப் அலைந்து கொண்டிருக்கிறது. அந்த கருத்தை தெரிவித்தவனின் நோக்கம் வீண் வம்பை அளப்பதற்கே. இந்த பதிவு விஸ்வரூபம் பற்றியதே அல்ல. ஆனால் இதில் தேவை இல்லாமல் ரஜினி, எம்‌ஜி‌ஆர் என்று இழுத்து விட்டார். ஆகவேதான் கொஞ்சம் அநாகரீகமாக பேச வேண்டியதாகி விட்டது. மேலும் நான் அம்மாவுக்கு விளக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த ஒரு மாதமாக ஊடகங்கள் அந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றன.

நேர்மையாக நாகரீகமாக கேட்டால் கண்டிப்பாக என்னிடம் பதில் இருக்கும்.

யாரென்று தெரிகிறதா பாடல் தீமாட்டிக்காக இருந்தாலும் ஒரு வித தனி மனித துதிதான். நான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் ரஜினி ஒரு நல்ல நடிகர். ஆனால் கமலை விட அல்ல. நான் ஒரு போதும் ரஜினி ஆஸ்கார் நாயகன் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு நடிகரை அப்படி சொல்லும்போது நம் கருத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

நான் கமல் ரசிகன் அல்ல. ஆனால் அன்பே சிவத்தையும், ஹே ராம்மையும் பத்து தடவை பார்த்திருக்கிறேன். அவற்றோடு ஒப்பிடும்போது விஸ்வரூபம் சுமார்தான். என்னுடைய ப்ரோஃபைல் சென்று எனக்கு பிடித்த படங்களை பாருங்கள். தெரியும்.

குரோதத்தோடு அணுகாமல் நிதானமாக கேட்டால் எல்லாவற்றுக்குமே இங்கே பதில் உண்டு. ஆனால் அநாகரீகமாக பேசுபவர்களுக்கல்ல.

Sundar said...

பாலா, நலமா ? புது மாபிள்ளை உங்களுக்கு பதிவெழுத நேரம் கிடைக்கிறதா ?

இந்த பதிவில் நீங்கள் வேறு ஒருவரின் பார்வையில் எப்படி இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்களே தவிர உங்களுடைய பார்வையில் கூறவில்லையே?

சில படங்களில் வரும் சில காட்சிகள் 'C' சென்ட்டர் ரசிகனுக்கு புரியாவிட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். உதரணத்திற்கு எந்திரன் படத்தில் வரும் 'Neural Schema' மற்றும் 'IP' மூலம் கனக்ட் செய்து பேசுவது போன்றவை சிலருக்கு புரியாவிட்டாலும் அது படத்தின் மிகப்பெரிய வெற்றியை பாதிக்கவில்லை. அது போலவே விஸ்வரூபமும் என்பது என் எண்ணம். மற்றபடி ஒரு கமல் ரசிகனாக படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு சராசரி ரசிகனாக படம் எனக்கு பிடித்திருக்கிறது.

தமிழ் படங்களில் வரும் பாத்திரத்தை இவ்வளவு டீட்டைலா அலசி இருக்கீங்களே ? ரசிக்கும்படியா இருக்குது. உக்காந்து யோசிசீங்களோ ?

Bala said...

@Sundar

வணக்கம் நண்பரே. நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? கிடைக்கிற கேப்பில் பதிவெழுத வேண்டியிருக்கிறது. :)

இன்னொருவர் என்ன சொன்னார் என்று சொன்னதற்கே பொங்கிவிட்டார்கள். என் பார்வையில் வேறு சொல்ல வேண்டுமா? படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. முதலில் வரும் சில காட்சிகள் ரொம்ப நீளம். அதே போல இடைவேளைக்கு அப்புறம் மொத்தமே மூன்றே காட்சிகள் அனைத்தும் நீளம் (தேவையில்லாமல்).

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே.

மாலதி said...

உங்களின் சிறப்பே எதிலும் மாட்டிக் கொள்ளாமல் மிகவும் சாமர்த்திய சாலியாக இருப்பத்துதான் இதுதான் சிறந்த பண்பும் கூட ஒரு கொள்கையில் மூடத்தனமாக உள்ளவர்கள் எல்லாவற்றையும் ஆரோக்கியமாக விமர்சனம் செய்ய வேண்டும் அந்த பண்பு இல்லாத பொது பக்தியென்ற கோட்பாடுகள் செயலிழந்து போகிறது கண்மூடித்தனங்கள் காட்சியாக நம் முன் படு கேவலமாக காட்சியளிக்கிறது உங்களின் கருத்துரையோ உயர்ந்து நிற்கிறது பாராட்டுகள்....

mohamedali jinnah said...

http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
உங்களை அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்

Related Posts Plugin for WordPress, Blogger...