விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 26, 2012

கனவுக்கன்னி - 2 (15+)

வெகுநாட்களுக்கு முன்னால் இந்த தொடரை எழுதத்தொடங்கினேன். பிறகு சில காரணங்களால் எழுத முடியாமலேயே போய் விட்டது. இனி தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கலாம். 


கனவுக்கன்னி - 1 படிக்காதவர்கள் இங்கே சென்று படியுங்கள்.... 

1950களின் இறுதி..... 



1950களின் இறுதியிலும் டிஆர் ராஜகுமாரியே தென்னிந்திய திரையுலகை கட்டிப்போட்டிருந்தார். ஆனாலும் அடுத்தடுத்து தமிழ் திரையுலகில் சரித்திரம் படைத்த கதாநாயகிகள் அறிமுகமாகியபடி இருந்தனர். அஞ்சலிதேவி, சாவித்திரி, பானுமதி என்று பல நடிகைகள் திரையுலகில் நுழைந்தார்கள். ஆனால் அனைவருமே கவர்ச்சியாக நடிக்க முன்வரவில்லை. இந்த நேரத்தில்  'திருவாங்கூர் சகோதரிகள்' என்றழைக்கப்பட்ட லலிதா, பத்மினி மற்றும் ராகினி ஆகிய மூவரும் அறிமுகம் ஆகினார். அதுவரை பல நடன நங்கைகளை திரையுலகம் கண்டிருந்தாலும், இவர்களின் நடனம் எல்லோரையும் கட்டிப்போட்டது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக பத்மினி கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா முன்னணி நடிகர்களோடும் நடித்து விட்டார். மூன்று பேரில் லலிதா மட்டும் கொஞ்சம் கவர்ச்சிப்பக்கம் திரும்பினாலும் அவ்வளவாக ஜொலிக்க முடியவில்லை. இவர் வில்லியாக நடித்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில், மது மயக்கத்தில் பாடும், "உன்னைக்கண் தேடுதே" பாடல் இன்றளவும் பிரபலம். ஆனால் தொடர்ந்து இவரால் நடிக்க முடியவில்லை. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த ஒரு நடிகை இருக்கிறார். இவர்கள் தென்னிந்தியாவை நடனத்தால் கட்டிப்போட்டனர் என்றால், அவரோ ஒட்டுமொத்த இந்தியாவையுமே தன்னுடைய நடனத்தால் மயக்கியவர்

முதல் அகில இந்திய நாயகி.... 


பெரும்பாலான நடிகைகள் தென்னிந்திய அளவில் மிகப்பிரபலம் ஆனாலும், அகில இந்திய ரீதியில் அப்போது யாருமே மிளிர முடியவில்லை. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வெற்றி கண்ட அந்த அழகிய நடிகையின் பெயர் வைஜெயந்தி மாலா. இவர்தான் பிற்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் உலகத்துக்குள் கால் பதித்த ஹேமாமாலினி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு முன்னோடி என்று கூறப்படுகிறது.  ஒரு நடிகைக்கு நடிப்பு திறமைக்கு அடுத்தபடியாக என்னென்ன திறமைகள் இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதில் எல்லாம் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். பாரம்பரிய நடனமும் ஆடுவார், வெஸ்டர்ன் நடனமும் ஆடுவார். அருமையாகப் பாடுவார். இவை அனைத்துக்கும் மேலாக  அசாத்திய தைரியம் கொண்டவர். எந்தவித உடைகளையும் தயக்கமின்றி அணிந்து அனைவரையும் மிரள செய்தவர். கவர்ச்சியான உடைகளை எல்லோராலும் அணிந்து விட முடியும். ஆனால் ஒரு சிலருக்கே அது முகம் சுளிக்க வைக்காத வகையில் பொருந்தும். அந்த வகையில்  வைஜெயந்தி  மாலாவுக்கு எல்லா உடைகளுமே அழகாக இருந்ததே ஒழிய ஆபாசமாக இருந்ததில்லை. தற்கால நடிகைகளுள் சிம்ரன் அந்த வரம் வாய்க்கப்பெற்றவர்.


வைஜெயந்தி மாலாவை பொறுத்தவரை அவர் பெரும்பாலும் ஹிந்தி படங்களிலேயே அதிகம் நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஐம்பதுகளில் அவர் மொத்தம் மூன்றே மூன்று தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். குழந்தைப்பருவத்தில் இருந்தே நடனத்தில் ஆர்வம் காட்டிவந்த  வைஜெயந்தி  மாலா, பல்வேறு நாடுகளில், பல மேடைகளில் தோன்றி நடனமாடி இருக்கிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஆடும்போது எம் வீ ராமன் என்ற இயக்குனரின் கண்ணில் பட்டார். பெரும் போராட்டத்துக்குபின் அவரது வீட்டில் நடிக்க சம்மதம் தெரிவிக்க, 1949இல் அவரது நடிப்பு பயணம் தொடங்கியது. 1950இல் அவர் நடித்த 'வாழ்க்கை' திரைப்படம் மெகா ஹிட் ஆகி இந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் வெற்றிபெற்றது. பாலிவுட் வைஜெயந்தி மாலாவிற்கு கம்பளம் விரித்து வரவேற்றது. இதன் விளைவாக தமிழ் படங்களில் அவரது பங்களிப்பு குறைந்து போனது. 


அப்போதைய சூப்பர் ஸ்டாரான திலீப் குமாரோடு அவர் ஜோடி சேர்ந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக தேவதாஸ் படம் பிளாக்பஸ்டர் ஆனது. 1959இல் தமிழ் திரை உலகை திரும்பி பார்த்த அவர், கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோலில் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. அதிலும், இவர் பத்மினியோடு நடனத்தில் போட்டி போட்டு நடித்த, "கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே...", பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என்று சொல்ல தேவை இல்லை. இவர்கள் இருவருமே நடனத்தில் சிறந்து விளங்கியவர்கள். இருவரும் ஒரு போட்டிப்பாடலில் பங்கேற்றால் எல்லாரும் என்ன சொல்வார்கள்? அதையே தான் அந்த படத்தில் பிஎஸ் வீரப்பா சொல்வார். "சபாஷ் சரியான போட்டி" என்று.  


அதன் பிறகு கொஞ்சம் தமிழ் படங்களில் நடித்தாலும் இவரது கவனம் முழுவதும் ஹிந்தி உலகையே ஆக்கிரமித்திருந்தது. 60களில் இவர் நடித்த படங்களுள் ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த தேன் நிலவு இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனால் 63இல் இவர் நடித்த சித்தூர் ராணி பத்மினி படம் படுதோல்வி அடைந்து இவரது தமிழ் திரையுலக பயணத்தை முடித்து வைத்தது. இருந்தாலும் ஹிந்தி உலகில் இவர் அசைக்க முடியாத நாயகியாக வலம்வந்தார். 1960ஆம் ஆண்டு சூட்டிங் தொடங்கிய  ராஜ்கபூரின் சங்கம் என்ற திரைப்படம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து 1964ஆம் ஆண்டு வெளிவந்து வசூல் சாதனை படைத்தது. முதன் முதலாக கனவுப்பாடல்களை வெளிநாட்டு லொகேஷன்களில் படமாக்கும் முறையை அறிமுகப்படுத்தியது இந்தப்படம்தான். இது போல பல வசூல் சாதனைப்படங்களில் நடித்து வந்த  வைஜெயந்தி  மாலா, 60களின் இறுதியில் மெல்ல மெல்ல திரை உலகை விட்டு விலகத்தொடங்கினார்.  அதன் பிறகு அரசியலில் கால் பதித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 


உச்சத்தில் இருந்த காலத்தில், திலீப் குமாரோடு, பிரபுதேவா நயன்தாரா ரேஞ்சுக்கு இணைத்து பேசப்பட்டவர். திலீப் குமாரின் மூன்றாவது மனைவி என்று வெளிப்படையாகவே பத்திரிக்கைகள் எழுதின. அதே போல ராஜ்கபூரோடு சங்கம் பட ஷூட்டிங்கில் இருந்த அந்த நான்கு ஆண்டுகள் அவர்கள் இருவரும் தனியே குடும்பம் நடத்துகிறார்கள் என்றும் எழுதின. ஒரு கட்டத்தில் ராஜ்கபூரின் மனைவி கோபித்துக்கொண்டு தனியே வசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. இவற்றை எல்லாம் வழக்கம்போல மறுக்கவே செய்தார். பொதுவாக தமிழ் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத  வைஜெயந்தி  மாலா, பாலிவுட்டில் கொஞ்சம் தாராளமாகவே நடித்தார். அதிலும் ராஜ் கபூர் பற்றி சொல்லவே வேண்டாம்.சங்கம் படத்தில் பிகினி உடையிலும் தோன்றி மிரட்டினார். இந்த படத்தில் ராஜ்கபூரோடு பனியில் கட்டி புரளும் காட்சி மிகவும் பிரபலம். டிஆர் ராஜகுமாரிக்கு அடுத்த படியாக நடிப்பிலும், கவர்ச்சியிலும் அசத்திய இந்த கியூட் நடிகை கனவுக்கன்னி மட்டுமல்ல நிச்சயம் கவர்ச்சிக் கன்னியும்தான் . அவரது அழக்குக்கும் கவர்ச்சிக்கும் இந்த பாடல் ஒரு சின்ன சாம்பிள்.... 


-தொடரும்



உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

July 19, 2012

வெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே?



நண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த பதிவுக்கு நிறைய தலைப்புகளை சிந்தித்து வைத்தேன். அதாவது, 'பில்லா - 2 ஒரு விளங்காத படம்', 'பில்லா -2 அறைவேக்காடுகளின் ஹாலிவுட் ஆசை', 'இதெல்லாம் ஒரு படமா?', 'பில்லா-2 நேர்மையான பார்வை', என்று. இவ்வளவு ஏன், 'ஹிட்ஸ்க்காக ஒரு பதிவு' என்று கூட ஒரு தலைப்பை யோசித்தேன். ஆனால் பதிவுலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், உங்கள் பதிவின் தலைப்பில் டாக்டர் அல்லது விஜய் என்ற வார்த்தைகள் வந்தால் கண்டிப்பாக ஹிட்ஸ் கிடைக்கும் என்று சொன்னார். எது எப்படியோ எனக்கு ஹிட்ஸ் கிடைத்தால் "இப்போ சந்தோஷமா ஷகீலா ரசிகர்களே?" என்று கூட தலைப்பு வைக்க ரெடியாகவே இருந்தேன். ஆகவேதான் இந்த தலைப்பு. மற்றபடி தலைப்புக்கும் உள்ளே இருக்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லை.



முகு: இந்த பதிவை படித்த பிறகு, என்னை விசிலடிச்சான் குஞ்சு, சொம்பு அல்லக்கை, டாஷ் டாஷ் டாஷ் என்று திட்ட நினைத்தால் மனதுக்குள்ளேயே திட்டிக்கொள்ளுங்கள்.  பிடிக்காதவர்கள் அடுத்த பத்தியை படித்தவுடனேயே கிளம்பி விடுங்கள். முழுவதும் படித்து, அல்சர் வந்து அவதிப்படாதீர்கள்.

முகு2: இது மிக நீளமான ஒரு நகைச்சுவை பதிவு. ஆகவே திட்டாமல் பொறுமையாக படித்துவிடுங்கள்.


சரி இது ஒரு கற்பனை உரையாடல். இது நிஜத்திலும் நடந்திருக்கலாம். திரைத்துறையின் இரண்டு வெவ்வேறு துருவங்களின் ரசிகர்கள் சந்தித்து கொள்கிறார்கள். ஒருவர் தன் தந்தை மூலமாக திரையுலகுக்கு வந்தாலும் அது 10 சதவீதமே அவருக்கு உதவியது. மீதம் 90சதவீத சொந்த உழைப்பு(?), திறமை(?) ஆகியவற்றால் ஸ்டார் வேல்யூவால் சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டாரை முந்தி, இப்போது புரட்சி தலைவரையும் மிஞ்சி திரையுலகின் தன்னிகரற்ற மனிதராக இருக்கிறார். அவரது பெயரை கூறும் அருகதை நமக்கு இல்லாததால் அவரை டாக்டர் என்றே அழைப்போம். இன்னொருவர் எதுவுமே தெரியாமல் திரையுலகுக்கு வந்து, ஊரை ஏமாற்றி இந்த இடத்துக்கு வந்தவர். அவருக்கு பேசத்தெரியாது, நடிக்க தெரியாது. இதை கண்டுபிடித்து சொன்ன்வர்கள் கம்பவுண்டர்கள் தான். என்ன கம்பவுண்டர்கள் என்றால் தெரியவில்லையா? டாக்டரின் தொண்டரை கம்பவுண்டர் என்று தானே சொல்ல வேண்டும்? சமீபத்தில் கூட அவர் டானாக நடித்து வெளிவந்த ஒரு படம் அட்டர் பிளாப் ஆனது. இதை சொன்னவர்களும் கம்பவுண்டர்களே.   இப்போது நடக்கும் இந்த உரையாடல் டாக்டரின் ரசிகருக்கும், விரைவில் டாக்டர் ரசிகர் ஆக துடிக்கும் அவரது எதிரியின் ரசிகருக்கும் நடந்தது. 

"என்னடா ரொம்ப சோகமா இருக்க? படம் பிளாப்பா?"

"இல்லையே நான் சோகமா இல்லையே? எனக்கு படம் பிடிச்சிருந்ததே?"

"சும்மா சொல்லாதே. எனக்கு தெரியும். நீ சோகமாத்தான் இருக்க. நீ சோகமாத்தான் இருக்க. அய்யோ நீ சோகமாத்தான் இருக்க... நீ சோ...."

"அண்ணே அண்ணே வேணாம்ண்ணே. உங்கள பார்த்தா பாவமா இருக்கு."

"அப்போ ஒத்துக்கோ"

"அய்யோ சோகமா இல்லாத ஒருத்தன் எப்படி ஒத்துக்க முடியும்?"

"அதெல்லாம் முடியும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட இந்தப்பக்கம் கொஞ்ச பேர் இப்படி போய்க்கிட்டு இருந்தாங்க. மொதல்ல அவங்க கிட்ட கேட்டப்போ படம் மோசமில்லை. பார்க்கலாம்னு சொன்னாங்க."

"அப்புறம் அவங்க கைய கால புடிச்சு, படம் பிளாப்னு சொல்ல சொல்லி கெஞ்சினேன். அவங்க ஒத்துக்கல. கடைசில அத புடிச்சேன்."

"அய்யோ எத?"

"அவங்க கழுத்தை. அவங்க கழுத்தை புடிச்சு ஒத்துக்கோன்னு கோலவெறியோடு ஒரு பார்வை பார்த்தேன். அப்புறமா ஒத்துக்கிட்டாங்க"

"ரொம்ப பாவம்ண்ணே நீங்க."

"இதெல்லாம் என் கடமைடா. டாக்டருக்காக எது வேணும்னாலும் செய்வோம். உங்க ஆளு படத்துக்கு ஒரு வாரம் டிக்கெட் கிடைக்கலன்னு சொன்னாங்களே ஏன் தெரியுமா?"

"தெரியலயே?"

"எல்லா டிக்கெட்டையும் நாங்களே புக் பண்ணினோம். அப்போதானே மொத நாளே படம் பார்த்துட்டு. எல்லோரையும் பிரேயின் வாஷ் பண்ண முடியும்?"

"ஓ படம் நல்லாத்தானே இருக்கு. அதை எப்படி நல்ல இல்லைன்னு சொல்லுவீங்க?"

"அதெல்லாம் சொல்லலாம். எங்காலு நடிச்ச ஏறா நல்லாவா இருந்துச்சு? அந்த டைம்ல நாங்க எழுதனத படிச்சு பாரு. ஆஸ்கார் ரேஞ்சுக்கு எழுதினோம். போன வருஷம் கூட எங்காத்தாவை என்னா கிழி கிழிச்சொம்? சூலாயுதம் ஹாலிவுட் தரம்னு எழுதினோம். இதுக்கெல்லாம் தனி திறமை வேணும்."

"அப்போ உண்மையை சொல்றதே இல்லையா?"

"டேய் எங்க டாக்டர் எங்கள அப்படி வளர்க்கல. ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா நாங்க எங்க பேச்சையே கேக்க மாட்டோம். ஆனா டாக்டர் என்ன சொன்னாலும் கேட்போம்."

"சரி விடுங்க இந்த படத்தை பத்தி சொல்லுங்க. இதை எப்படி குறை சொல்ல்ப்போறீங்க?"

"டேய் இதெல்லாம் ஒரு படமாடா? இதை மனுஷன் பார்ப்பானா?"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"ஒரு பாத்ரூம் சீன், சோப்பு போடுற சீன், கிணத்துல தண்ணி இறைக்கிற சீன் ஏதாவது இருக்கா?"

"ஓ வேற என்ன குறை இருக்கு?"

"படத்துல உங்காளு நடந்துக்கிட்டே இருக்காரு. "

"மனுஷன்னா நடக்கத்தானே செய்வான். வேற என்ன செய்யனும்?"

"அதெல்லாம் சாதாரண மனுஷன். எங்க ஆளு நடந்து பாத்திருக்கியா? ஒண்ணு, ஓடுவாரு, இல்லைனா பறப்பாரு"

"படம் ஸ்டைலிஷா இருக்கே?"

"டேய் இந்தியாவிலேயே ஸ்டைலிஷ் ஹீரோ எங்க டாக்டர் தாண்டா. இதை யார் கால்ல விழுந்தும் ஒத்துக்க வைக்க நாங்க ரெடி. ஒத்துக்கிறியா, ஒத்துக்கிறியா ஒத்துக்கிறியா " (அவர் கண்களில் பிரியமுடன் விஜய்யின் வெறி தெரிகிறது)

"அய்யோ ஒத்துக்கிறேன் ஒத்துக்கிறேன். என்னை ஒண்ணும் பன்னீறாதீங்க. இந்தியாவிலேயே ரொம்ப ஸ்டை .... ஸ்டைலிஷ் ஆனா ஆள் டாக்டர்தான். சரி வேற என்ன குறை கண்டீங்க?"

"படத்துல உங்க ஆள் எல்லாரையும் சுட்டுக்கிட்டே இருக்காரு. கொன்னுக்கிட்டே இருக்காரு. ஒரு நியாயம் தர்மம் வேணாம்? எங்காளு நடிச்ச காக்கா, படத்துல வன்முறை எல்லாம் எவ்வளவு எதார்த்தமா காட்டி இருப்பாங்க? அழகிய திருமகன் படத்துல நெகட்டிவ் ரோலில் கூட ஒரு நல்லவனை எங்காள் காட்டி இருப்பாரே?"

"என்னங்க ஒரு டான் எப்படி நல்லவனா நடிக்க முடியும்? வன்முறை ஓவர். அதனாலே தானே ஏ சர்டிபிகேட் கொடுத்தாங்க?"

"ஏ சர்டிபிகேட் கொடுத்தாங்க சரி. அதுக்காக ஒரு கில்மா சீன் கூட இல்லைனா எப்படி? நானும் ஏ படம்னா சீன் நிறைய இருக்கும்னு நம்பி ஏமாந்து போனேன்."

"ஓ அதான் உங்க கோபத்துக்கு காரணமா?"

 "அது மட்டுமல்ல. ஒரு படம் எந்த சர்டிபிகேட் படமா இருந்தாலும் எல்லோரும் பார்க்கிற மாதிரி இருக்கனும். உதாரணமா நொந்தசாமி படம் பார்த்தியா. அது குழந்தைகளுக்கான படம்தான். ஆனால் அதிலேயும் கில்மா சீன்ஸ் இருக்கே?"

"என்னது நொந்தசாமி குழந்தைகள் படமா?"

"அவ்வளவு ஏன் எங்க சூலாயுதம். அதுவும் குழந்தைகள் படம்தான். அதுக்காக பன்சிகா கொடுத்த கால்ஷீட்டை வேஸ்ட் பண்ண முடியுமா? எங்காள் ரொம்ப நல்லவர். நிஜத்தில் எதுவுமே பண்ணமாட்டார். அதனாலதான் கனவுல பன்சிகாவை தடவினார்."

"அய்யோ எனக்கு தலை சுத்துதே? படத்தில் வேறு என்ன குறை?"

"படத்துல உங்க ஆள் தொந்தியும் தொப்பையுமா அங்கிள் மாதிரி இருக்கார். எங்காத்தாவில் தலை நரைத்திருந்தாலும் எவ்வளவு ஸ்மார்ட்டா இருந்தார்?"

"அடப்பாவிகளா அந்த படம் வந்தப்போ, சுண்ணாம்பு தலையன் என்று கிண்டல் பன்னீங்க?"

"அது அப்படித்தான். அடுத்த படம் வர்ரப்போ, இந்த படத்தில் அழகா இருந்தார்னு சொல்லுவோம். அடுத்த டாக்டர் படம் வர்ற வரைக்கும் முந்தைய படத்தை சூப்பர் ஹிட், பிளாக் பாஸ்டர்னு சொல்றதில்லையா அதுமாதிரி. உங்க ஆள் படம் முழுவதும் ஏன் உர்ருன்னு வரார். ஹீரோன்னா கலகலப்பா இருக்க வேணாமா? 

"அதெப்படின்னே முடியும்? வாழ்க்கை முழுவதும் வேதனைகளை அனுபவித்தவன் எப்படி கலகலப்பா இருப்பான்?"

"பகபதில பார்த்தியா, டாக்டர் தன் தம்பியோட இறந்த நாளா இருந்தாலும் பீர் அடிச்சுட்டு ஆண்ட்டிகளோடு சேர்ந்து ஒரு குத்தாட்டம் போடுவாறு"

"கிளைமாக்ஸ்ல எங்காள் ஹெலிகாப்டர் பைட்ல ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காரே பார்த்தீங்களா?"

"போடா வெண்ணை. எங்காள் படத்துல நடிக்கிறதே பெரிய ரிஸ்க்தான் தெரிஞ்சுக்கோ. அதுமட்டுமில்ல உங்காள் படத்தோட கதையை ஹாலிவுட்டுல இருந்து உருவி இருக்கானுங்க. ஃபைட் சீன்களை டாக்டர் படத்துல இருந்தே உருவி இருக்காங்க."

"என்னது? எப்படின்னே சொல்றீங்க?"

"அம்பு படம் பார்த்தியா? அதுல டாக்டர் கூலிங்க் கிளாஸ் போட்டுகிட்டு கோட் எல்லாம் மாட்டிக்கிட்டு வருவாரு. அதே படத்துல பல வெளிநாட்டு லோக்கேஷன் எல்லாம் போயி வெள்ளக்கார வில்லன்களை அடிப்பாரு. ஹெலிகாப்டர்ல இருந்து எட்டி பார்த்துக்கிட்டே பான்ஜோ பான்ஜோ பெவேலாஞ்சேனு பாடுவாறே? டாக்டர் மாதிரி ஆகணும்னு இதை எல்லாம் உங்காளு காப்பி அடிச்சுட்டாறு"

"ஆமாண்ணே. நீங்க சொல்றதும் சரி மாதிரிதான் தெரியுது. வேண்டாம்ண்ணே தமிழ்நாட்டுக்கு ஒரு டாக்டர் போதும். ஆனா இதை எல்லாம் டாக்டர் தெலுங்கில் இருந்து காப்பி அடிக்கிறார்னு சொல்றாங்களே?"

"யார் சொன்னது? ரீமேக் பண்றது தப்பே இல்ல. ரஜினி கூடத்தான் நிறைய படங்களை ரீமேக் பண்ணாரு. யாராவது கேட்டீங்களா? இல்லையே. ஏன்னா பொறாமை. எங்க டாக்டர் ரஜினியை விட பெரிய ஆளா ஆகிடுவாரோன்னு பொறாமை."

"டாக்டரோட மோகன் அத்தியாயம் ஏழரை படத்துல வெள்ளக்கார பொண்ணு ஹீரோயினா நடிக்குதாமே? உண்மையா? எங்காளு படத்துல ஒரு வெள்ளக்காரி நடிச்சவுடனே போட்டியா?"

"டேய் ரஜினி கூடத்தான் ஐஸ்வர்யாராய்க்காக அலைஞ்சார்"

"ஏன்ண்ணெ ஆ வூன்னா அங்கேயே போறீங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க."

"டேய் இந்த டிரெண்டை ஆரம்பிச்சு வச்சதே டாக்டர்தான். அது தெரியுமா? பத்து வருசத்துக்கு முன்னாடி திரும்பி பாரு. ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு ஹீரோயினை கையில கால்ல விழுந்து நடிக்க வச்சாங்க. படம் மொக்கைன்னாலும் டாக்டர் ஆசை நிறைவேறிடுச்சு பார்த்தியா? "

"ஆமா நடிக்கவே மாட்டேன்னு சொன்ன ஹிந்தி நடிகையை கூட, புதிய சீதையில் கெஞ்சி நடிக்க வச்சு, அப்புறம் அந்த நடிகை டாக்டர் என்கிட்ட ரொம்ப வழியுறார்னு பேட்டி எல்லாம் கொடுத்துச்சே?"

"அதெல்லாம் பழைய கதை. இப்போ கிளறாதே. உங்காளு படத்துல லாஜிக் இருக்கா? சொல்லு. ஒரு முதலமைச்சருக்கு அவ்வளவுதான் பாதுகாப்பு கொடுப்பாங்களா? ஹெராயினை அவ்வளவு ஈஸியா கடத்திட முடியுமா?"

"லாஜிக் பத்தி நீங்களெல்லாம் பேசுறது காமெடியா இருக்கு. படத்தோட கதை 90களின் ஆரம்பத்தில் நடப்பது போலத்தானே காட்டி இருக்கிறார்கள்? அப்போ ஓரளவுக்கு எல்லாம் சாத்தியம் தானே? படத்தில் வில்லன் கூட செல்போன் பயன்படுத்தவில்லை கவனித்தீர்களா"

"சரி விடு. அதென்ன உங்க ஆளு எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார். எந்த படத்துக்காவது வித்தியாசம் இருக்கா? டாக்டரை பாரு. எல்லா படத்திலேயும் எப்படி வெரைட்டியா என்டர்டெயின் பண்றாரு. கெட்டப் செஞ்ச் பண்ணாமலேயே அசத்துராரே?"

"ஹா ஹா ஹீ ஹீ"

"என்னடா சிரிப்பு?"

"ஒண்ணும் இல்லைன்னே. இப்போ என்ன சொல்ல வர்ரீங்க? படம் நல்லா இருக்கா இல்லையா?"

"நான் படத்தை மூணு வாட்டி பார்த்துட்டேன் அதுக்காக எல்லாம் நல்ல இருக்குனு சொல்லிட முடியாது."

"பார்த்தீங்களா உங்களுக்கே படம் பிடிச்சிருக்கு. அப்புறம் ஏன்ண்ணெ இப்படி பேசுறீங்க?"

"இல்ல இல்ல இல்ல, எல்லோரும் டாக்டர் படம் வந்தா கலாய்க்கிறாங்க. அதனால நாங்க பதிலுக்கு இப்படித்தான் பண்ணுவோம். படம் நல்லா இல்லை, பிளாப். மொக்கை, சூர மொக்கை. இன்னொரு ராஜ பாட்டை, பத்து சுறா, நூறு வேட்டைக்காரன். பிகைண்ட் வுட்காரன் சொல்லிட்டான். நானும் தியேட்டர் பக்கம் போய் எண்ணிப்பார்த்தேன். மொத்தமே 40 பேர் கூட இல்லை."

"ஏன் உங்க வேலையெல்லாம் விட்டுட்டு இப்படி தியேட்டர் தியேட்டரா போய் லூசு மாதிரி எண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

"படம் பிளாப். படம் ஓடாது. மொக்கை. தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம். உங்காளுக்கு ஆட தெரியாது, நடிக்க தெரியாது, தமிழ் தெரியாது. பார்ப்பனர் பக்கிரி டேலெட்டி ஒழிக, படம் பிளாப், பிளாப், பிளாப். அய்யோ பிளாப் அய்யோ பிளாப்." (தன் சட்டையை கிழிக்க தொடங்குகிறார்.)

"அய்யோ பாவம். இவர்களுக்காகவாது டாக்டரின் அடுத்த படமான குயிக் கன் வெற்றி பெறனும்." என்று சொன்னபடி அந்த இடத்தை விட்டு செல்கிறார். 

பிகு: வழக்கம்போல இந்த கட்டுரை யாரையும் இழிவு படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. எல்லாம் கற்பனையே. இந்த பதிவிற்கு கமெண்ட் மாடரேஷன் இல்லை. 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 
முழுவதும் படிக்க >>

July 17, 2012

பில்லா-2 தெரிந்ததும் தெரியாததும்

வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் 2ஐ கடைசியில் போடாமல் நடுவில் போட்டேன். இந்த கட்டுரையை படிப்பவர்கள் முதல் பாகத்தில் இருந்து படிப்பதே சிறந்ததே. எனவே இங்கே சென்று படித்து விட்டு தொடருங்கள். 


மு.கு: இந்த பதிவில் வன்முறை தவிர்க்க முடியாததாகி விட்டது. எனவே பிடிக்காதவர்கள் சிகப்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். 


.......வினோத் என்று தன்னை ஆஸ்பத்திரியில் பதிவு செய்தவன் தன்னை பில்லா என்றும், ஹர்பஜன் என்று கூறிக்கொண்டவன் தன்னை ரங்கா என்றும் கூறினார்கள். இவை கூட இவர்களின் இயற்பெயரா என்று தெரியவில்லை. பல பெயர்களில் இவையும் ஒன்றே என்று கருதப்பட்டது. சிறைக்குள் ரிமாண்டில் இருந்த காலகட்டத்தில், பலமுறை ஜெயிலில் இருந்து தப்பிக்க பார்த்தது, உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தது, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தது என்று நிறைய முரண்டு பிடித்தார்கள். எத்தனை நாட்கள்தான் முரண்டு பிடிக்க முடியும்? ஒரு கட்டத்தில் உண்மைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். 

ரங்கா தன் வாழ்க்கையை டிரக் டிரைவராக தொடங்கியவன். அதன் பிறகு மும்பையில் டாக்சி டிரைவராக கொஞ்சம் காலம் இருந்திருக்கிறான். அப்போது அவனுக்கு ராஜ்குமார் என்பவனோடு பழக்கம் உண்டாகி இருக்கிறது. ராஜ்குமாரின் சாராய கடத்தலுக்கு மேனேஜராகவும், டிரைவராகவும் இருந்திருக்கிறான். பிறகு அங்கிருந்து வெளியேறி ஷாம் சிங் என்பவனோடு சேர்ந்து சொந்தமாக சாராய கடத்தலில் ஈடுபட்டிருக்கிறான். ஷாம், ரங்காவுக்கு பெங்காலி(பெயரே இதுதான்) என்பவனை அறிமுகம் செய்திருக்கிறான். அவனும் ஒரு டாக்சி டிரைவர்தான். ஒரு நாள் பெங்காலியும், ரங்காவும் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது, பெங்காலி அடிக்கடி இறங்கி நம்பர் பிளேட்டை மாற்றுவதை பார்த்த ரங்கா, "இவன் பெரிய கில்லாடி." என்று நினைத்துக்கொண்டான். அங்கிருந்து நேராக ஒரு ஆங்கில பள்ளிக்கு சென்று, அப்பாவியாக ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள். "3 லட்சம் வரை கேட்கலாம், இல்லை குழந்தையை கொன்று விடலாம்.", என்று பிளான் போட்டுவிட்டு, குழந்தையை ரங்காவிடம் கொடுத்து விட்டு போய் விட்டான் பெங்காலி. இரண்டு நாள் ஆகிவிட்டது. அதுவரை குழந்தை கடத்தல், கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டிராத ரங்கா, பயந்து போய், அந்த குழந்தையை கடத்திய இடத்திலேயே விட்டு விட்டு வந்து விட்டான்.


இதனால் பெங்காலியின் கடும்கோபத்துக்கும் ஆளானன்.  இது ஷாம் சிங்குக்கும் தெரியவர, குடிபோதையில் கண்டபடி ரங்காவை திட்டிய ஷாம், "நீ ஏன் பில்லா பேச்சை கேட்கவில்லை?" என்று உளறி விட்டான். இதை கேட்டதும் ரங்கா நடுங்கிப்போனான். ஏனென்றால் பில்லா என்பவன் அப்போது சமூக விரோதிகளில் மிக பிரபலம். அவனுக்கு தெரிந்தது எல்லாம் கொலை, கடத்தல், கற்பழிப்பு. அப்படிபட்ட பில்லாவோடுதான் இத்தனை நாள் சுற்றி இருக்கிறோம் என்று தெரிந்தவுடன் ரங்காவுக்கே வியர்த்து போனது. பில்லாவின் பின்புலம் பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும், பில்லா தனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவன் என்பது உண்மை. ஒரு நூறு ரூபாய்க்காக கூட கேஷுவலாக கொலை செய்ய தயங்கமாட்டான். அது ஒரு குழந்தையாக இருந்தாலும் கவலைப்படமாட்டான். பெண்ணாக இருந்துவிட்டாலோ அவனுக்கு டபுள் லாபம். "ஒரு டேப் ரெக்கார்டுக்காக இரண்டு அரேபியர்களை கொன்றேன்.", என்று பெருமையோடு ரங்காவிடம் கூறியிருக்கிறான் பில்லா. மேலும் கார் திருட்டு, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, கொள்ளை என்று எல்லாவித செயல்களையும் கரைத்து குடித்திருந்தான் பில்லா. 


குழந்தையை தப்ப விட்டதால் ஷாம் போலீசில் மாட்டிக்கொள்ள, பில்லாவும் ரங்காவும் மும்பையை காலிசெய்து விட்டு டெல்லிக்கு தப்பி ஓடி விட்டார்கள். டெல்லியில் ஜுகல் என்பவனோடு நட்பு கிடைத்திருக்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை டெல்லியில் பல்வேறு லாட்ஜ்களில், வெவ்வேறு பெயர்களில் தங்கி இருந்தார்கள். இப்படியே எத்தனை நாள் காலம் தள்ளுவது? பில்லாவுக்கு கை அரிக்க தொடங்கியது. ஜுகலிடம், "யாராவது பணக்காரன் இருந்தா சொல்லு. வீடு புகுந்து கொன்றுவிட்டு, கிடைப்பதை சுருட்டிக்கொள்ளலாம்" என்று கேட்க. ஜுகல் தன் சொந்த மாமா வீட்டையே காட்டி இருக்கிறான். பில்லாவும், ரங்காவும் அந்த வீட்டுக்குள் புகுந்து, ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து போய் கடும் கோபத்துடன் ஜுகலை தேடி வந்தார்கள். அப்போது அவன் கேவல் என்ற இன்னொருவனுடன் இருந்தான். பில்லா இருவரையும் காருக்குள் போட்டுக்கொண்டு ஏர்போர்ட் பக்கம் காரை ஒட்டி இருக்கிறான். பிறகு ஓரிடத்தில் காரை நிறுத்தி, இருவரையும் கொலை செய்ய கத்தியை உருவி இருக்கிறான். இருவரும் காலில் விழுந்து கதற, பில்லா , "உங்களை விட்டால் என்னை போட்டு கொடுத்து விடுவீர்கள். ஆகவே எனக்காக ஒரு கொலை செய்யுங்கள். அப்போதுதான் நீங்களாக போலீசுக்கு போகமாட்டீர்கள்.", என்று சொல்லி, தூரத்தில் கும்மிருட்டில் பார்க்கில் அமர்ந்திருந்த ஒரு ஜோடியை நோக்கி கை காட்டி இருக்கிறான். நால்வரும் அங்கே செல்ல, பில்லாவும் ரங்காவும் அந்த ஜோடியை தாக்கி பணம், நகை ஆகியவற்றை பறிக்க, அவர்களை கொலை செய்வதாக வாக்களித்த ஜுகல், கேவல் இருவரும் இதுதான் வாய்ப்பு என்று, இருட்டில் ஓடி மறைந்து விட்டனர். இந்த சம்பவம் பில்லாவின் கொடூர குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. 
ஒரிஜினல் பில்லா 

இப்படியே இரண்டு நாட்கள் காரிலேயே ரோடு ரோடாக இறை தேடி அலையும் ஓநாய் போல சுற்றியவர்கள் வலையில், தானாக வந்து விழுந்தன இரண்டு புள்ளி மான்கள். பில்லா அசம்பந்தமாக சாலையில் காரை செலுத்திக்கொண்டிருக்க, சாலை ஓரத்தில் நின்றிருந்த கீதா லிஃப்ட் கேட்டு கை காட்ட, கார் இருவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. போகிறபோக்கில் அவர்களின் செல்வ வளத்தை பற்றி தெரிந்து கொண்ட பில்லா காரை வேறு திசையில் செலுத்த, பின் சீட்டில் இருந்த இருவரும் தப்பிக்க முயற்சி செய்ய, கதவின் கைப்பிடி ஏற்கனவே பில்லாவால் கழற்ற பட்டிருந்ததால் முடியாமல் போனது. ஆகவே, கீதா பில்லாவின் தலைமுடியை பற்றி இழுத்தாள். சஞ்சய் ரங்காவின் முகத்தில் மாறி மாறி உதைத்தான். இந்த களேபரத்தில் வண்டியின் கியர் நியூட்ரலுக்கு மாறி நடு ரோட்டில் நின்று விட்டது. சுற்றி இருந்தவர்கள் வண்டியை திறக்க முயல, சுதாரித்த பில்லா வண்டியை அசுரவேகத்தில் செலுத்தி ஊருக்கு வெளியே வந்து விட்டான்.   

நடந்த களேபரத்தில், ரங்கா அவர்களை மிரட்டுவதற்காக கிர்பனை எடுத்து சஞ்சய்யை நாலைந்து இடத்தில் வெட்டி கிழித்து விட்டான். ஆகவே இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்களின் தந்தை கப்பல் படை அதிகாரி என்று தெரிந்ததும் ரங்கா வயிற்றில் அமிலம் சுரந்தது. அவன் பில்லாவிடம், "இவர்களை விட்டு விடலாம்.", என்று கெஞ்ச தொடங்கினான். முத்லில் மறுத்த பில்லா, அவர்களை விட்டு விட சம்மதித்தான். ஆனால் அவனுக்குள் இருந்த ஓநாய் வேறு விதமாக சிந்தித்து பல்லிளித்தது. பில்லா, "உங்களை விட்டு விடுகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். கீதா இங்கே சாலையில் இறங்கி, ஒரு வண்டியில் லிஃப்ட் கேட்கவேண்டும். அந்த வண்டியை கொள்ளை அடித்தபின் உங்களை நாங்கள் விட்டு விடுவோம்" என்று சொல்ல, அவர்களும் சம்மதித்தார்கள். உடனே பில்லா, ரங்காவிடம், "நீ அவனை கொஞ்ச தூரம் சென்று ஆளில்லாத இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள் நான் வருகிறேன்." என்று சொல்ல, ரங்காவும் சஞ்சய்யை கூட்டிக்கொண்டு இருட்டடைந்த பகுதி நோக்கி சென்றான்.

ஆளில்லாத சாலையில் சஞ்சய் மண்டியிட்டு அமர்ந்திருக்க, ரங்கா அவன் பின்னால் நின்று கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் பில்லா அங்கே வந்தான். வந்தவன், ரங்காவை பார்த்து, அவனை தீர்த்து வீடு என்று சைகை காட்ட, கொஞ்சம் தயங்கிய ரங்கா, கிர்பனால் ஓங்கி வெட்டினான். குறி தவறி வெட்டு சஞ்சய் தோளில் இறங்க, அவன், "என்னை கொல்லாதீர்கள்", என்று அலறதொடங்கினான். கிர்பனை ரங்கா கையில் இருந்து பிடுங்கிய பில்லா, "நீ எதற்கும் லாயக்கில்லை.", என்று கூறியபடி சரமாரியாக வெட்ட தொடங்கினான். சுமார் பத்து நிமிடம், அவனது கடைசி மூச்சு வரை வெட்டி முடித்தபின், இருவரும் சேர்ந்து அந்த பிணத்தை சாலையோரம் இருந்த அடர்ந்த புதருக்குள் வீசினார்கள். பிறகு இருவரும் காரை நோக்கி சென்றனர்.
 

அங்கே வண்டிக்குள் கீதா, உடலில் ஆடை ஏதும் இல்லாமல் இருப்பதை கண்டு ரங்கா புன்னகைத்தான். என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. இருவரும் மாறி மாறி பலமுறை அவளை வேட்டையாடினார்கள். கடைசியாக ஒருமுறை பில்லா அவளை கற்பழிக்கும்போது, எதேச்சையாக பில்லா வைத்திருந்த கிர்பான்(இது 3 அடி நீளமுள்ள பெரியது) கீதா கைக்கு சிக்க, அதை வைத்து பில்லாவை தாக்கினாள். கடைசி நேரத்தில் சுதாரித்து கொண்டாலும், அது, பில்லாவின் தலையில் பெரிய வெட்டுக்காயத்தை ஏற்படுத்தி விட்டது.  இதை பயன்படுத்திக்கொண்டு கீதா சாலையில் ஓடத்தொடங்கினாள். அவளை துரத்தி பிடித்த ரங்கா, "உனக்கு அறிவிருக்கிறதா? உன் உடலில் துணியே இல்லை. அங்கேதான் உன் சகோதரன் இருக்கிறான். இந்த நிலையில் உன்னை அவன் பார்த்துவிட்டால் என்ன செய்வது? முதலில் ஆடைகளை அணிந்துகொள். உன்னை அவனிடம் கூட்டிபோகிறேன்.", என்று சொன்னவன், சொன்னபடி அவளையும் அந்த புதருக்குள் கூட்டி சென்றான். பின்னாலேயே பில்லாவும் சென்றான். தம்பியின் பிணத்தை பார்த்ததும் தரையில் மண்டியிட்டு கதறி அழுத கீதாவின் கழுத்தில் இடியாக இறங்கியது, பில்லாவின் 3 அடி கிர்பன். அவள் உடல் காற்றில் அரைவட்டம் அடித்து, ரத்தம் கொப்பளிக்க அங்கேயே அடங்கியது. இருவரும் அந்த இடத்தை விட்டு நீங்கினார்கள். 

நிறைய ரத்தம் வெளியேறிய நிலையில், வெலிங்டன் மருத்துவமனையில் வினோத் என்ற பெயரில் காயத்துக்கு தையல் போட்டுக்கொண்டான் பில்லா. பிறகு இருவரும் ஆக்ராவில் சென்று ஒரு லாட்ஜில் தங்கினார்கள். அங்கிருந்து வெளியேறி திருட்டு ரயிலில் பயணம் செய்யும்போதே ராணுவ வீரர்கள் கையில் சிக்கினார்கள். மேல கூறப்பட்ட அனைத்துமே ரங்காவால் கூறப்பட்டவை. ரங்கா, "பில்லா தான் மட்டுமே மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்னையும் அவளை கற்பழிக்க சொன்னான்.", என்று கூறினான். ஆனால் பில்லவோ, "இதை செய்ய ஐடியா கொடுத்ததே ரங்காதான் என்று கூறினார்கள். எது எப்படியோ, இருவரும் செய்த அனைத்தையுமே ஒப்புக்கொண்டார்கள். இதற்கு முன்பு செய்த பல கொலைகளையும் இருவரும் ஒப்புக்கொண்டதால், பஞ்சாப் கோர்ட் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இருவரும் இளவயதினர் என்று கருணை கோரப்பட்டாலும்(குத்துமதிப்பாக ஜஸ்பீர் சிங் என்ற பில்லாவுக்கு அப்போது 24வயது. குல்ஜீத் சிங் என்ற ரங்காவுக்கு 22 வயது)  இந்த தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்ய, 1982 ஆம் ஆண்டில் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். ஆண்டுதோறும் வீரக் குழந்தைகளுக்கான விருதுகளில், கீதா மற்றும் சஞ்சய் பெயரிலும், விருதுகள் வழங்கப்படுகின்றன. 

எண்பதுகளின் தொடக்கத்தில் மிகவும் பரபரப்பாக நடந்த இந்த வழக்கு இந்தியாவையே உலுக்கியது என்றால் மிகையல்ல. இந்த நேரத்தில் அமிதாப் நடித்த டான் படத்தை தமிழில் தயாரிக்க நினைத்த பாலாஜி, மக்கள் மனதில் கிலியை உண்டாக்கிய பில்லாவின் பெயரை பயன்படுத்திக்கொண்டார். அதுவும், 1980இல் பில்லா வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்த பெயரே படத்துக்கு ஒரு ஹைப்பை கொடுக்க, படம் பிளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து பில்லா என்ற பெயர் தமிழ் சினிமாவில் பெற்ற புகழ் சொல்லி தெரியவேண்டியதில்லை. பில்லா ரங்கா இருவரும் இணைத்து செயல் பட்டாலும், பில்லாவுடன் ஒப்பிடுகையில் ரங்கா அவ்வளவு கொடூரமானவன் அல்ல. இதனால் தான் என்னவோ, பில்லா திரைப்படம் புகழ்பெற்ற அளவுக்கு ரங்கா திரைப்படம் புகழ் பெறவில்லை. அந்த பெயரும் மறக்கப்பட்டது.  

-முடிந்தது 

நன்றி :விக்கிபீடியா 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

July 16, 2012

பில்லா தெரிந்ததும் தெரியாததும்.


பில்லா.... இந்த பெயரை கேட்டவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? சிலருக்கு ரஜினி நடித்த பழைய படமும், சிலருக்கு அஜீத் நடித்த புதிய படங்களும் ஞாபகம் வரலாம். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் வேறு ஒரு உண்மைக்கதை ஒளிந்திருக்கிறது. எண்பதுகளில் பதின்ம வயதினராக இருந்தவர்களுக்கு இந்த கதை தெரிந்திருக்கலாம். 


டெல்லியில் வசிக்கும் சோப்ரா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். கீதா மற்றும் சஞ்சய். கப்பல் படையில் வேலை செய்து வந்த அவர், தனது பிள்ளைகள் கலந்து கொள்ளும் ரேடியோ நிகழ்ச்சியை கேட்க ஆவலோடு ரேடியோ முன் மனைவியுடன் அமர்ந்திருக்கிறார். மாலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் அவர்களின் குழந்தைகளின் குரலுக்கு பதிலாக ஒலித்தது வேறு ஒருவரின் குரல். அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்படியானால் மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்றவர்கள் எங்கே? இது நடந்தது ஆகஸ்ட் 26, 1978. 
கீதா சோப்ரா மற்றும் சஞ்சய் சோப்ரா 

"என்னவோ குழப்பம் நடந்து விட்டது." என்று நினைத்து, முன்பே திட்டமிட்டபடி, அவர்களை 9 மணிக்கு ரேடியோ ஸ்டேஷனில் இருந்து அழைத்து வரலாம் என்று ஸ்டேஷன் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் ரேடியோ ஸ்டேஷனுக்கு வரவில்லை. எனவே தன் குழந்தைகளை காணவில்லை என்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே மாலை அந்த ஸ்டேஷனுக்கு இன்னொரு புகார் வந்தது. அந்த சாலையில் மஞ்சள் நிற ஃபியட் கார் ஒன்று அசுர வேகத்தில் சென்றதையும், அதன் பின் சீட்டில் பதினாறு பதினேழு வயது மதிக்கத்தக்க இருவர்(ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்) இருந்ததாகவும், அவர்கள் இருவரும், முன் சீட்டில் இருந்தவர்களோடு சண்டை பிடித்ததாகவும் சொல்லப்பட்டது. இதை பல பேர் பார்த்து, அந்த காரை விரட்டி பிடிக்க முடியாமல் போனதாகவும் சொன்னார்கள். 

அதே இரவு சுமார் பத்தேகால் மணிக்கு வினோத் என்பவர் படுகாயத்தோடு வெலிங்டன் மருத்துவமனைக்கு (தற்போது அது ராம் மனோஹர் லோஹியா அரசு மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது) ஹர்பஜன் என்பவரால் அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்த மருத்துவரிடம், வினோத் தன்னிடம் இருந்த பணத்தை ஒருவர் திருடியதாகவும், தடுக்க முயற்சி செய்ததற்காக தன்னை தாக்கி விட்டு ஓடி விட்டதாகவும் கூறுகிறார். இது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் வினோத், "உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும்" என்று கூறுகிறார். இந்தளவுக்கு காயமடைந்திருக்கும் நிலையில் அவர் வீட்டுக்கு செல்வது ஆபத்தானது என்று டாக்டர் கூறியும் அவர் கேட்கவில்லை. அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் ஹர்பஜனிடம் ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கி கொள்கிறார். மேலும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு செல்கிறார். சம்பவத்தை பற்றி சரியாக தகவல் தர இயலாத நிலையில் வினோத் தன் தாயை காண விரும்புவதாகவும், அவர்களை பார்த்து விட்டு மறுநாள் காலை வந்து சப் இன்ஸ்பெக்டரை பார்ப்பதாகவும் கூறி விட்டு செல்கிறான். 

ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஊருக்கு ஒதுக்கு புறமான காட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு அவை கீதா மற்றும் சஞ்சயின் சடலங்கள் என்று உறுதி செய்யப்படுகின்றன. போஸ்ட் மார்டத்தில் கீதா கற்பழிக்கப்பட்டதும், கீதா, சஞ்சய் இருவருமே, கிர்பான் என்றழைக்கப்படும் சீக்கியர்கள் வைத்திருக்கும் குறுவாளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஊடகங்கள் இந்த இருவரின் புகைப்படங்களையும் பத்திரிக்கையில் வெளியிட்டு, காவல்துறையின் மெத்தன போக்கை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை படித்த ஒருவர், குறிப்பிட்ட தினத்தில், இந்த இருவரும் தன்னுடையை காரில் ரேடியோ ஸ்டேஷன் வரை லிப்ட் கேட்டு, தான் அங்கு செல்லாததால் பாதி வழியில் இறக்கி விட்டதாகத் தெரிவித்தார்.

ஆகஸ்டு 31ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகு நாட்களாக ஒரு மஞ்சள் நிற ஃபியட் வண்டி நிற்பதை பற்றி காவல் துறைக்கு தகவல் வரவே, ஆறு வாரங்களுக்கு முன் தன் ஃபியட் வண்டியை காணவில்லை என்று சொன்னவரையும் அழைத்துக்கொண்டு அங்கே சென்ற காவல் துறை, அது அவரது கார்தான் என்று உறுதி செய்தது. மேலும் அந்த வண்டியில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும், ரசாயனங்கள் மூலம் பூட்டுகள் திறக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த வண்டியில் உள்ள அனைத்து கை ரேகைகளும் எடுக்கப்பட்டன. அதே போல காருக்குள் இருந்த ரத்தம் தோய்ந்த மண் துகள்களும், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்த மண்ணும் ஒரே மாதிரியாக இருந்தன.

செப்டம்பர் 8ஆம் தேதி, ஓடும் ரயிலில், ராணுவ வீரர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்டிக்குள் ராணுவ வீர்கள் என்று சொல்லிக்கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த இருவரை, ராணுவ வீரர்கள் இருவர் சேர்ந்து மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். அதில் ஒருவன் காயங்களோடு இருப்பதை பார்த்ததும், வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது எக்ஸ்ரே, அதே மருத்துவமனையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி எடுக்கப்பட்ட வினோத் என்பவனது எக்ஸ்ரேயோடு ஒத்துப்போகவே போலீஸ் சுதாரித்து கொண்டது. அவனை சோதனையிட்ட போலீசுக்கு, ஒரு துப்பாக்கியும், ரத்தக்கறை படிந்த ஒரு கிர்பானும் கிடைத்தது. தகுந்த முறையில் விசாரித்ததும், எல்லா உண்மைகளையும் ஒப்பிக்க தொட்ங்கினார்கள். முதலில் சம்பவ தினத்தன்று தான் மும்பையில் இருந்ததாக கூறிய வினோத், பிறகு அது பொய் என்று ஒப்புக்கொண்டான். 

சந்தர்ப்ப சாட்சிகள், கை ரேகைகள், காரில் கிடைத்த தலைமுடிகள் என்று எல்லாமே அவர்களுக்கு எதிராகவே இருந்தன. தொடர்ந்து முரண்பாடான தகவல்களை அளித்து வந்த அவர்கள் தங்களை அறியாமல் ஒருசில உண்மைகளையும் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் செய்த தவறுகளையும் ஒப்புக்கொண்டார்கள். இதில் வினோத் என்பவன் தன் பெயர் பில்லா என்றும், ஹர்பஜன் என்பவன் தன் பெயர் ரங்கா என்றும் கூறினான். 

-தொடரும் 

அடுத்த பதிவில்..... என்னை கொல்லாதீர்கள் என்று அந்த சிறுவன் அலறத் தொடங்க, என் கையில் இருந்து வாளை பிடுங்கிய பில்லா, "நீ எதற்கும் லாயக்கில்லை", என்று என்னை திட்டிக்கொண்டே அந்த சிறுவனை சரமாரியாக வெட்ட தொடங்கினான்......  

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
முழுவதும் படிக்க >>

July 12, 2012

வெட்டி அரட்டை - சிதம்பரம் vs நடுத்தரம்


முடியப்போகிறது

அப்பாடா... ! ஒரு வழியாக முடியப்போகிறதாம். அதாங்க, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி நாளையோடு முடிகிறதாம். உடனே உள்ளுக்குள் மகிழ்ந்து கொள்ளாதீர்கள் கண்டிப்பாக சீசன் 2,3,4.... என்று தொடரும். ஆனால் அதில் சூர்யா வருவாரா? என்பது சந்தேகம்தான். இந்த நிகழ்ச்சிக்கு முதலில் விமர்சனங்கள் எழுந்தாலும், கொஞ்சம் தன்னை திருத்திக்கொண்டு ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது என்பது மறுக்கலாகாது. அதிலும் கடந்த வாரம் முழுவதும் எண்பதுகளின் நாயக நாயகியர் கலந்து கொண்டு அசத்தினார்கள். இதை ஒரு போட்டி என்பதை விட அவர்களின் பேட்டி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அவ்வப்போது சூர்யா மட்டும் மொக்கைதனமாக பேசி தான் இன்னும் சிறுவன்(யூத்)தான்  என்று நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருத்தார். நடிகர் மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது . விஜய் டிவியின் வெற்றி ரகசியமே மொக்கையான விஷயத்தை கூட கலர் பெயிண்ட் அடித்து, நடிகர் படங்களை ஒட்டி விற்று விடுவதுதான். அந்த வித்தை மறந்து போனதாலேயே சன் டிவியின் கையில ஒரு கோடி நொண்டி அடித்து கொண்டிருக்கிறது.  
 
ஈடா.... ஈடா.....ஈடா.....

நான் முன்பே சொன்ன மாதிரி ராஜமவுலி மறுபடியும் ஒரு சிக்சர் அடித்திருக்கிறார்.எங்கள் ஊரில் மொக்கை தியேட்டர் என்று கூட பார்க்காமல் கூட்டம் நிரம்புகிறது. இத்தனைக்கும் இதில் நடித்திருப்பவர்கள் பற்றியோ, இயக்குனர் பற்றியோ யாருக்கும் எதுவுமே தெரியாது. ஏதோ தெலுங்கு டப்பிங் படம், என்று நினைத்து வந்தவர்களின் மவுத் டாக் மூலமாகவே படம் பிரபலம் ஆகி விட்டது. "ஒரு தரமான படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை." என்று தல ஒரு முறை சொன்னார். முன்பு அவதார் இப்படி எங்கள் ஊரில் மவுத் டாக் மூலம் ஓடியது. இப்போது நான் ஈ அதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது. முதன் முதலில் நான் எமதொங்கா பார்த்தபோது  தெரிந்த ஃபிரெஷ்நெஸ், ஒரு வியப்பு, இந்த படம் பார்க்கும்போது கொஞ்சம் கூட  குறையவே இல்லை. 

"என்னடா? சுதீப் எப்படி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார்?", என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொண்டதற்கு காரணம் என்ன என்பதற்கு எங்கள் ஊரில் சுதீப்பும் ஒரு ஹீரோ ஆகிவிட்டதே பெரிய சாட்சி. இதுவரை இவர் யார் என்றே எங்கள் ஊரில் இருக்கும் சாதாரண மக்களுக்கு தெரியாது. இந்த படம் வந்தபிறகு எல்லோரும் அவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள். உலகப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று  அறிவுஜீவிதனமாக படம் எடுத்து விட்டு, "இங்கே ரசனை கம்மி.", என்று மக்களை திட்டும் இயக்குனர்கள் மத்தியில், "இப்படியும் எடுக்கலாம்." என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர். அதிலும் இரண்டு படம் ஹிட் கொடுத்து விட்டாலே தன்னை உலகமகா இயக்குனராக பாவித்து கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில், ஒன்பது ஹிட் அடித்த பிறகும் தன்னை சினிமா கற்றுக்கொள்ளும் மாணவராகவே நினைக்கிறார் ராஜமவுலி. அதுவே அவரது வெற்றிக்கு காரணம். எட்டு படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்த ஒருவரது ஒன்பதாவது படத்தின் மீது எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்?, அது எவ்வளவு பெரிய பாரம்? என்று சுமந்தவர்களுக்கே தெரியும். படம் முடிந்ததும் அந்த ஈ ஒரு கெட்ட ஆட்டம் போடும் பாருங்கள். அப்போது என் கண்ணுக்கு தெரிந்தது ஈ உருவில் இருக்கும் ராஜமவுலியே.  அவருக்கு என் சல்யூட்.
 
தன்னைத்தானே செதுக்கியவன் 

இப்போது ரசிகர்கள் தலயை இப்படி கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். வழக்கம்போலவே ஏகப்பட்ட குழப்பங்கள், ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் என்று பல செய்திகள் வந்து, கடைசியாக நாளை பில்லா 2 வெளியாகவுள்ளது. முன்பெல்லாம் படம் வெளிவரும் முன்னரே தலயை கலாய்த்து பல பதிவுகள், கமெண்ட்டுகள் இணையம் முழுவதும் வெளிவரும். இந்த முறை அது குறைவாகவே உள்ளது. இதற்கு முழுகாரணமும் தலயின் வெளிப்படையான நடவடிக்கைகளும், எதையும் மறைக்காத பேச்சும்தான். ஒரு நடிகன் என்பதை தாண்டி, "இந்தாளு நல்ல மனுஷன்யா." என்று எல்லோரையும் பேச வைத்து விட்டார். ஹாட்ஸ் ஆஃப் தல. 

இருந்தாலும் சில குறும்பு பிடித்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர் பதிவுலகில் பிரபலாமானவர். தீவிர டாக்டர் ரசிகர். அதற்காகவாவது தலயை கலாய்த்து ஏதாவது எழுதுவார். ஆனால் இப்போதெல்லாம் அவர் கூட எழுதுவதில்லை. பேஸ்புக் அல்லது டுவிட்டரில் மட்டுமே ஸ்டேட்டஸ் போட்டு மகிழ்கிறார். அவரது எழுத்துக்கள் சக்தி வாய்ந்தவை. ஒரு முறை, "அசல் படத்தை ஒரே வாரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்." என்று சொன்னார். அதன் பின் வரிசையாக எல்லா டாக்டர் படத்தையும் டிவியில் ஒளிபரப்பி விட்டார்கள். தற்போது கூட, "தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் செதுக்கியவருக்கு ரிலீஸ் தேதியை செதுக்க தெரியவில்லையே...", என்று கலாய்த்திருந்தார். எதிர்பார்த்த மாதிரியே துப்பாக்கியின் ரிலீஸ் தேதியில் குழறுபடி உண்டாகி விட்டது. இதே மாதிரி அவர் நிறைய சொல்ல வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். நண்பன் படம் பார்த்து நிறைய டாக்டர் ரசிகர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டார்களா? இல்லை விரக்தியில் இருக்கிறார்களா? இல்லை துப்பாக்கி வரும் வரை பதுங்கி இருக்கிறார்களா? என்றே தெரியவில்லை. ண்ணா எங்கண்ணா போனீங்க எல்லோரும்?

இதைக்கேட்க யாருமே இல்லையா?

கேரளாவில் இருந்து தினசரி லாரிகளில் இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தியே. என் நண்பன் ஒருவன் தனது மலையாளி கல்லூரி நண்பனிடம் இது குறித்து கேட்டபோது, "கேரளா கடவுள்களின் தேசம் அதை அசுத்துப்படுத்த கூடாது. ஆகவேதான் இங்கே கொட்டுகிறார்கள்." என்று மிக சீரியசாக கூறினானாம். அதற்கு என் நண்பன், "அப்படியானால் ஒன்று செய்யுங்கள். எல்லோரும் ஒரு கார்க் வாங்கி அடைத்துக்கொள்ளுங்கள். கேரளா அசுத்தமே ஆகாது." என்று கூறினானாம். அதில் இருந்து அவன் இவனோடு பேசுவதே இல்லை. இதுவரை இறைச்சி கழிவுகளை எல்லையில் கொட்டி வந்தவர்கள், தற்போது உள்ளே வெகு தூரம் வந்து இறைச்சி கழிவுகளை மட்டுமல்லாது, மருந்து கழிவுகளையும் கொட்டி விட்டு செல்கிறார்கள். இப்போது திருநெல்வேலி வரை வந்து கொட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். 

காசு வாங்கிக்கொண்டு தீவிரவாதியாக இருந்தாலும் சலாம் போட்டு அனுப்பி விடுவார்கள் செக் போஸ்டில் இருக்கும் நம் கடமை தவறாத காவல் அதிகாரிகள். ஆகவே இது போன்ற நேரங்களில் பொதுமக்களே சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர்களை பிடித்து நாலு சாத்து சாத்தினால்தான் அஞ்சுவார்கள். சிறை நிரப்பும் போராட்டம், மதுக்கடைகளை மூடும் போராட்டம், தன் சாதிக்கு இழந்த உரிமைகளாய் மீட்டு தருவதாக ஆர்ப்பாட்டம் என்று களேபரம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த விஷயம் இன்னுமா தெரியவில்லை?

நடுத்தரம் vs சிதம்பரம் 

அப்படி என்ன சொல்லிப்புட்டார் இந்த மனுஷன்? "ஐஸ்கிரீம் வாங்குர அளவுக்கு உங்களுக்கு பவுசு வந்துடுச்சா? ஒரு வேளை அரிசிக்கே வழியில்லை, இப்போ ஐஸ்க்ரீம் ஒரு கேடா?" என்று தானே கேட்டார்? இது எப்படி கிண்டல் ஆகும்? உண்மையில் அவருக்கு மக்களின் மீது பெரிய அக்கறை இருக்கிறது. நன்றாக யோசித்து பாருங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் வரும். டாக்டர், மருந்து மாத்திரை என்று ஏகப்பட்ட செலவு. இது தேவையா? அவர் ஹார்வர்ட்ல படிச்சவர். அவருக்கு தெரியாதா எப்போ விலையை ஏத்தணும் இறக்கணும்னு? இந்த அறிவு ஓட்டு போடும்போது இருக்கணும். அட்லீஸ்ட் கடைசி நேரத்தில் தில்லாலங்கடி வேலைகள் செய்து அவர் மறுபடியும் ஜெயித்தபோதாவது இருக்கணும். அதையெல்லாம் விட்டுபுட்டு இப்போ குதிச்சா என்ன அர்த்தம்? நீங்க வேணா பாத்துக்கிட்டே இருங்க. கூடிய விரைவில் அரசியல்வாதிகளை பார்த்து கேள்வி கேட்பவர்களுக்கு கேள்வி வரி, பதில் கிடைக்கவேண்டுமானால் தனியாக சேவை வரி கட்டவேண்டும் என்று சட்டம் வரப்போகிறது. அப்போதுதான் நாமெல்லாம் அடங்குவோம். "சிதம்பரம் சார், அடுத்த தேர்தலிலும் நீங்கதான் ஜெயிப்பீங்க.  மக்கள் எல்லாத்தையும் மறந்துடுவாங்க.  அதனால கவலை இல்லாம இருங்க. கஞ்சிக்கே லாட்டரி கைக்கு பேட்டரியோ என்று இயக்குனர் பாலா சொன்னா சரி, நீங்க சொன்னா தப்போ?" 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 
முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...