விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 19, 2012

சதங்களின் மன்னன்



"சாதனைகளின் மன்னன் சச்சின்!!", என்று சொல்லி சொல்லி போராடித்து விட்டது. இனிமேல் சச்சின் என்று மட்டும் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அதிலேயே சாதனை என்பதும் உள்ளடங்கி விடும். ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு அருபெரும் சாதனையான நூறு சதங்கள் என்ற இலக்கை எட்டி இருக்கிறார். இவரது வயது, ஓய்வு எப்போது அறிவிப்பார்?, ஆட்டத்திறன் போன்றவை குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், இனி இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படுவதோ, அல்லது இவரது சாதனை முறையடிக்கப்படுவதோ, குறைந்தபட்சம் இருபது வருடங்களுக்கு சாத்தியமில்லை என்பது என் கருத்து. 


அடுத்த தலைமுறைக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. சச்சின் கிரிக்கெட் ஆடுவதை லைவ்வாக பார்த்ததுதான் அது. இருபது வருடங்களாக சச்சினின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அதனை நினைத்து பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது. இவரைப்பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. ஆகவே இந்த பதிவு முழுவதும் படங்களை போட்டு நிரப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். 




சில சுவாரசிய தகவல்கள்:

மேலே உள்ள நபர்தான் ராமகாந்த் அச்ரேகர். இவர்தான் சச்சினின் கோச். இவரும் டென்னிஸ் லில்லியும் சேர்ந்துதான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக விரும்பிய சச்சினை, "உனக்கு பவுலிங் சரிப்பட்டு வராது, பேட்ஸ்மேன் ஆகிவிடு.", என்றார்களாம். யார் கண்டா?, முரளி, ஷேன்வார்ன் போல, இந்தியாவுக்கு ஒரு ஆயிரம் விக்கெட் வீழ்த்திய ஒரு பவுலர் கிடைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அச்ரெகர் ஸ்டம்ப் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை பேட்டிங் பிடிக்க சொல்வாராம். சச்சினை அவுட் ஆக்குபவர்களுக்கு அந்த ஒரு ரூபாய். ஒருநாள் முழுவதும் சச்சின் அவுட் ஆகவில்லை என்றால் அவருக்கு அந்த ஒரு ரூபாய். அப்படி மொத்தம் 13 நாணயங்களை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறாராம் சச்சின்.  


மேலே படத்தில் இருப்பவருக்குத்தான் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவர் பெயர் ராஜ் சிங் துங்கர்பூர். 1989இல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய அணியில் சச்சினை தேர்வு செய்தவர். 


முதல்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச களத்தில் சச்சின். 

எனக்கு பிடித்த சச்சினின் சதங்கள்...... 

1. இதுதான் ஆரம்பப்புள்ளி. இங்கிலாந்துக்கு எதிராக 1990 இல் அடித்த 119*. சச்சினின் முதல் சதம்.



2. 1992  இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் சச்சின் அடித்த 114. உலகின் மிக அபாயகரமான ஆடுகளமாக கருதப்படும் பெர்த் ஆடுகளத்தில் சச்சின் ஆடியதை பார்த்த ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ், ஆலன் பார்டரை பார்த்து, "இந்த பொடியன் ஒருநாள் உன் சாதனையை முறியடிக்கபோகிறான் பார்." என்று கூறினாராம்.



3. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு, 79 ஒருநாள் போட்டிகளில் ஆடியபிறகு 1994இல் சச்சின் அடித்த முதல் ஒருநாள் சதம். இதன் பிறகு இவரை தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை என்பது தெரிந்ததே.


4. 1994இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் 179 விளாசினார். இது இவருக்கு வெகு ஆண்டுகள் அதிக பட்ச டெஸ்ட் ஸ்கொராக இருந்தது. சச்சினுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த சதங்களுள் இதுவும் ஒன்று. 



5. 1996 உலகக்கோப்பை தொடரில் தனியாளாக ஜொலித்த சச்சின், இலங்கைக்கு எதிராக 137 சேர்த்தது வெகுகாலம் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கொராக இருந்தது. இந்த போட்டியில் இலங்கை வென்றது குறிப்பிடத்தக்கது. 



6. 1996இல் சித்துவும், சச்சினும் சேர்த்து ஷார்ஜாவில் வைத்து பாகிஸ்தானை புரட்டி எடுத்த போட்டியில் சச்சின் அடித்த 118. இந்த போட்டியில்தான் இந்தியா ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 300 ரன்களை கடந்தது.


7.     1998இல் அதே ஷார்ஜாவில், மணல் புயல் ஓய்ந்த நேரத்தில், சச்சின் புயல் வீசி ஆஸ்திரேலியர்களை நொறுக்கி தள்ளியது. அவர் சேகரித்த 143 ரன்களை ஆஸ்திரேலியர்கள் மறக்கவே மாட்டார்கள். 



8. 1998இல் ஜிம்பாப்வே மண்ணில் வைத்து தனது 18ஆவது ஒருநாள் சதத்தை கடந்தார் சச்சின். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு முந்தைய சாதனையாக டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் 17  சதங்கள் பெற்றதே ஒருநாள் போட்டிகளில் 5 வருடங்கள் முறியடிக்காத சாதனையாக இருந்தது. இதற்கப்புறம் சச்சினை யாரும் நெருங்கவே முடியவில்லை. அப்போது சச்சின் அதிகபட்சம் 25  சதங்கள் வரை அடிப்பார் என்று நாங்கள் கணக்குப்போட்டதை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.


9. 1998இல் ஜிம்பாப்வேயின் ஹென்றி ஒலோங்கா பந்தில் சச்சின் அவுட் ஆக, அதை பற்றி ஒலோங்கா கொஞ்சம் தெனாவட்டாக பேச, அடுத்த போட்டியில் மரண அடி அடித்தார் சச்சின். பவுன்சர் வந்த பந்தை ஆஃப்சைடில் சிக்சர் அடித்தது அப்போது மிக பிரபலம்.  



10. 1999இல், சென்னையில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் 136 ரன்கள் எடுத்தார். முதுகு வலியோடு அவதிப்பட்டு ஆடிவந்த அவரது வேதனையை ரசிகர்கள் எல்லோரும் உணர்ந்தார்கள். சச்சின் அவுட் ஆன அரைமணி நேரத்துக்குள் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.


11. 1999 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக 140 ரன் குவிததார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சச்சினின் தந்தை மரணமடைய, இந்தியா சென்ற சச்சின், நெருக்கடி காரணமாக உடனே திரும்பி வந்து விளாசிய இந்த சதத்தை, தந்தைக்கு காணிக்கையாக்கினார்.


12. 1999இல் நியூசிலாந்துக்கு எதிராக 186 ரன் எடுத்தார். இப்போட்டியில் இவர் டிராவிட்டோடு இணைந்து 331 ரன் எடுத்தது, இன்னும் முறியடிக்கபடாத சாதனை. 



13. 2002இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் சேகரித்த 117 ரன் மூலம் 29  சதங்கள் பெற்று, பிராட்மேனை சமன் செய்தார். 



14. இடைப்பட்ட காலத்தில் சச்சின்  சதங்கள் குவித்து தள்ளினாலும், அதன் பிறகு சச்சினுக்கு சாதனைகள் எல்லாம் சாதாரணமாகி விட்டன. டென்னிஸ் எல்போ வலியால் அவதிப்பட்டு வந்த சச்சின், 2006இல் ஓய்வு பெறப்போகிறார் என்ற வதந்தியை உடைத்து, அறுவை சிகிச்சை முடித்து வந்ததும் 141 விளாசினார்.



15.  2009இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன் சேகரித்தார். இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், சச்சினின் ஆட்டம் பலரால் வெகுவாக பாராட்டபட்டது. 



16. கிரிக்கெட்டில் எப்போதாவது நடக்கும் அற்புதம் 2010இல் நடந்தது. "கிரிக்கெட்டில் 40 ஆண்டுகளாக இதை நிகழ்த்த எந்த இளைஞர் வருவார்?", என்று எல்லோரும் யோசித்து கொண்டிருக்கையில், "நானும் இளைஞன்தான்.", என்று சாதித்து காட்டிய சச்சினின் இரட்டை சதம். 



17. 2011 உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அடித்து நொறுக்கிய சச்சின் 99 சதத்தை தன்வசமாக்கினார். 



18. மார்ச் 16, 2012 அன்று, கிரிக்கெட் உலகில் மற்றொரு அற்புதம் நிகழ்ந்தது. எப்போதாவது நடக்கும் அற்புதங்கள், சச்சின் வாழ்க்கையில் மட்டும் எப்போதுமே நடக்கின்றன. வங்கதேசத்துக்கு எதிராக அவர் சேகரித்த 114ரன், கிரிக்கெட்டில் நூறாவது சதத்தை தொட்ட முதல் வீரன் என்ற பெருமையை ஏற்படுத்தி கொடுத்தது. 


சச்சின் என்பவர் கிரிக்கெட்டில் வகுத்த இலக்கணங்கள் ஏராளம். 100 வருடங்களுக்கு ஒரு முறையே கிரிக்கெட்டில் அதிசயம் நிகழ்கிறது. அப்போது பிராட்மேன், இப்போது சச்சின். இன்னொரு அதிசயம் நிகழ இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 

நன்றி: cricinfo.com, iamraghuveer.com.

47 comments:

முத்தரசு said...

அப்போ நாட்டுக்காக விளையாடல...ம்

சுயநலம்

இராஜராஜேஸ்வரி said...

இனிமேல் சச்சின் என்று மட்டும் சொன்னால் போதும் . அதிலேயே சாதனை என்பதும் உள்ளடங்கி விடும்.

பாலா said...

@மனசாட்சி

இதில் தேசபக்தி என்ற ஒரு விஷயத்தை நான் தொடவே இல்லை. பி‌சி‌சி‌ஐ என்பதே ஒரு தனியார் அமைப்பு என்கிறபோது, அதில் ஆடும் வீரர்களும், தனியார் கம்பெனி ஊழியர்கள் மாதிரிதான். இதில் சச்சினை சுயநலக்காரர் என்று சொன்னால், தனியார் கம்பெனியில் திறமையாக பணிபுரியும் அனைவருமே சுயநலக்காரர்கள்தான்.

இங்கே சச்சின் என்ற மனிதன், தான் கொண்ட துறையில் தன்னால் முடிந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தி இருப்பதை பற்றியே கூறி இருக்கிறேன். என்னதான் அவர் சுயநலக்காரர் என்றாலும், இந்திய தேசத்தின் அடையாளம் என்பதும் ஓரளவுக்கு உண்மைதானே?

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

இராஜராஜேஸ்வரி said... [Reply]
இனிமேல் சச்சின் என்று மட்டும் சொன்னால் போதும் . அதிலேயே சாதனை என்பதும் உள்ளடங்கி விடும்.//

சத்தியமான உண்மை இது, எனது கருத்தும் இதுவேதான் பாலா...!!!

Madhavan Srinivasagopalan said...

சார்.. நானும் சச்சி விசிறிதான்.. முன்னலாம். இப்ப இல்ல.
அவரு அடிச்ச பழைய சாதனைகள மேற்கோள் காட்டி இன்னைக்கும் அவரு டீம்ல இருப்பத சால்ஜாப்புலாம் பண்ணப்படாது.
வயது ஏற ஏற உடம்பு ஒத்துழைக்காது.
அவரு அடிச்ச நூறாவது நூருல அவரு 33 பந்துகள (114 in 147 balls)வேஸ்ட் பண்ணிருக்காரு. அதே கோலி நேத்தைக்கு 36 ரன்கள (183 in 147 balls) அதிகமா எடுத்திருக்காரு. பீல்ட்ல உண்டம்பு திராணி / இளமை வேணும்.. அதான் சச்சின் இப்பவாவது உணரனும்னு நாங்கலாம் சொல்லுறோம்.

// ஒரு வேகப்பந்து வீச்சாளராக விரும்பிய சச்சினை, "உனக்கு பவுலிங் சரிப்பட்டு வராது, பேட்ஸ்மேன் ஆகிவிடு.", //

அட இது வேறையா.. யாரு கெளப்பி விட்டது இத. அப்ப அவரு தனக்கு விருப்பமில்லாத துறையில சேர்க்கப் பட்டாரா ?

முத்தரசு said...

@????

நாட்டுக்காக விளையாடல சரிதானே

கேரளாக்காரன் said...

BCCI is a national cricket governing society and not a private organisation...... And he is not a employee of cricket board...

NKS.ஹாஜா மைதீன் said...

சச்சினின் சாதனை மகத்தானதுதான்...ஆனால் இந்த ஒரு சதம் அடிக்க அவர் ஒரு வருடம் எடுத்து கொண்டார்....கத்துகுட்டி அணியான பங்களாதேசிடம் அதிக பந்துகளை வீணடித்து அடித்த அந்த சதம் சச்சினுக்கு பெருமை அளிக்க கூடிய ஒன்று என நான் கருதவில்லை...

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Madhavan Srinivasagopalan

சச்சினுக்கு உண்டான பிரச்சனையே இதுதான். அவரு டீம்ல இருக்கணும் அப்படிங்கறதுல சால்ஜாப்பு எல்லாம் சொல்லல. மற்ற வீரர்களை காட்டிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார் என்பதுதான் உண்மை. தேவைப்பாட்டால் வருட வாரியாக அவரது புள்ளி விவரங்களை எடுத்து பாருங்கள். கோலி குறைந்த பந்தில் அடித்தார் என்பதால் சச்சினை விட கோலி சிறப்பாக ஆடுகிறார் என்பது சரியல்ல.

உடல் நிலை என்பது எல்லோருக்குமே ஒரே மாதிரி இருப்பதில்லை. சென்ற வருடம் இதே திராணி இல்லாத சச்சின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்து நொறுக்கிய பிறகு, 'இளைஞர்' பட்டாளம் சறுக்கியதும், அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததும் நடந்ததே? இப்போதைக்கு ஒரு அணியில் இருக்க ஒரு வீரருக்கு தேவையான உடல் தகுதி சச்சினுக்கு உண்டு என்பது என் கருத்து.

arasan said...

இந்த சாதனை மனிதரின் சாதனைகளை முறியடிக்க இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும் மிக உண்மையே.... பதிவுக்கு வாழ்த்துக்கள் பாலா சார்..

பாலா said...

@மனசாட்சி

நண்பரே என்னிடம் எந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்கிறீர்கள்? இது சச்சினின் தேச பக்தி குறித்த பதிவு அல்ல? சச்சின் நாட்டுக்காக விளையாடுகிறார் என்பதற்கும், இல்லை என்பதற்கும் நிறைய வாதங்கள் உள்ளன. ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியதல்ல.

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

இதுதான் அவருக்கு நெருக்கடி அளிக்கிறது. வேறு எந்த ஒரு வீரரும் ஒரு வருடத்தில் எத்தனை சதம் அடிக்கிறார்கள் என்று யாரும் கவனிக்கவில்லை. ஆனால் சச்சின் மட்டும் களத்தில் இறங்கும் போட்டிகளில் எல்லாம் சதம் அடிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? வங்காளதேசத்திடம் நூறாவது சதம் அடித்தது தவறு என்று சொல்கிறீர்களா? அதுவும்தானே கணக்கில் வரும்? இன்னும் வங்காளதேசத்தை கத்துக்குட்டி என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி. அதனிடமே இந்தியா பல முறை தோல்வி அடைந்திருக்கிறது. நேற்று உள்பட.

பாலா said...

@மௌனகுரு

நண்பரே புளியங்குடி என்ற ஒருவருடன் பேசி பேசி எனக்கும் அது தொற்றிக்கொண்டது. அவர்தான் இந்திய அணி என்று சொல்லக்கூடாது. பி‌சி‌சி‌ஐ அணி என்று சொல்லவேண்டும் என்று கூறுவார். சச்சினை employee என்று கூறியது ஒரு உதாரணமாகத்தான்.

பி‌சி‌சி‌ஐ அரசு அதிகாரத்தின் கீழ் வராது அல்லவா?

பாலா said...

பி‌சி‌சி‌ஐ கண்டிப்பாக தனியார் அமைப்புதான்.

Marc said...

வார்த்தைகளை தாண்டிய மனிதன்

கேரளாக்காரன் said...

BCCI is a control board like TRAI and SEBI.... Avlothaan neenga solra maadhiri paaththa RBI & SBI kooda private than... BCCI is a cozy goverment organisation...

கேரளாக்காரன் said...

Thaniyaar amaippu = private organization but BCCI is a control board

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிறைய விஷயங்களை தெரிந்துக டி கொண்டேன்....

சச்சின் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்...

பகிர்வுக்கு நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் 100 ஆண்டுகள் கழித்து சச்சின் போன்று வருவாரா என்பது கேள்விகுறிதான்...

அப்படி வந்தால் அது இந்தியராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை...

பாலா said...

@Dhana Sekaran

உண்மைதான் நண்பரே. நன்றி

பாலா said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@மௌனகுரு
இன்னமும் கூட இதில் எனக்கு குழப்ப்ம் உண்டு நண்பரே.

பாலா said...

@மௌனகுரு

தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி

Anonymous said...

I luv him....படங்களும் விளக்கங்களும் அருமை

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

சச்சின், கிரிக்கெட்டின் பாட்டிங் நுணுக்கம் தெரிந்த ஒரு சிறந்த பாட்ஸ்மன், அதில் எந்த மாற்றுக்கருத்துக்களுக்கும் இடம் இல்லை. எதோ ஒரு உலகக்கிண்ண போட்டியில் ஷோஹிப் அக்தாரின் பந்தினை போர்வார்ட் டிபென்ஸ் செய்தது பவுண்டரிக்கு அனுப்பியதை இன்றுவரை என்னால் மறக்கமுடியாது. ஆயினும் கடந்த இருபது வருடங்களில் சச்சின் என்ற பெயரைக் கேட்க்கும் போது எனக்கு நினைவு வருவதும் அது ஒன்று மட்டுமே. கிரிக்கெட் என்பது நிச்சயமாக ஒரு அணியாக விளையாடும் விளையாட்டு, அதில் சச்சின் எந்த அளவு தேர்ச்சி பெற்றிருக்கறார் என்பது கேள்விக்குறி. தனிப்பட்ட ஸ்டாடிஸ்டிக்ஸ் களை விட அணிக்கு தேவையானபோது எத்தனை தடவை தானாக முன்வந்து தோள்கொடுத்திருக்கறார் என்பதும் கேள்விக்குறி. சச்சின் ஒரு ஓவர் ரெட்டட் விளையாட்டு வீரர் என்பதே எனது எண்ணம். இந்தியா உருவாக்கிய சிறந்த துடுப்பாட்ட வீரர்களை வரிசைப்படுத்த கூறினால் திராவிட், கங்குலி, கோலி அப்புறமே சச்சின் என்பதே எனது கருத்து. சச்சின் விசிறிகள் மன்னிக்க வேண்டும். சச்சினின் நூறு சதங்களை விட கோலியின் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான கடைசி இரண்டு சத்தங்களும் பெறுமதி மிக்கவை.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

எந்த காரணத்துக்காகவும் சச்சினின் திறமையை மறுக்க முடியாது. நாட்டுக்காக விளையாடுவது என்பதை விட அணிக்காக விளையாடுவது என்பதே பொருத்தமாக இருக்கும். போட்டியின் போக்கினை உணர்ந்து வெற்றிக்கு எது தேவை என்பதை செய்யாது தனது சொந்த இலக்குக்காக விளையாடுவதையே சுயநல வீரர் என்று சொல்ஹிரார்கள் என தோன்றுகிறது. ஒரு விதத்தில் அதுவும் நிஜமே. சச்சின் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரா? ஆம், அவர் தான் உலகின் அதிசிறந்த துடுப்பாட்ட வீரரா? நிச்சயமாக இல்லை. சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரா? அதுவும் நிச்சயமாக இல்லை. சச்சின் சத்தங்களின் சாதனைகளின் மன்னரா, இருநூறு சதவீதம் ஆம்.

பாலா said...

@ரெவெரி

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Dr. Butti Paul

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே. தனிப்பட்ட முறையில் சச்சினை விட எனக்கு கங்குலியே மிகவும் பிடிக்கும். அதற்காக சச்சினை குறை சொல்லிவிட முடியாது. டிராவிட்டையும் சச்சினையும் ஒப்பிடுவதே தவறு. சச்சின் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். டிராவிட் மிடில் ஆடர். ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பவர் நல்ல அடித்தளம் அமைத்து தர முடியுமே தவிர எல்லா நேரமும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியாது.

கோலியின் இரண்டு சதங்கள் மிகவும் சிறந்தவையே ஆனால் அதே போல கடந்த காலங்களில் சச்சின் நிறைய முறை செய்திருக்கிறார் என்பதும் மறுக்கலாகாது.

பாலா said...

இப்படி மானாவாரியாக ரன் குவிக்கும்போது சொந்த இலக்குக்காக ஆடுவது போலத்தான் தெரியும். உதாரணமாக இதே கோலி இன்னும் பதினைந்து வருடங்கள் கழித்து தொண்ணூறுகளில் இருக்கும்போது இப்படி ஆடுவார் என்று சொல்லமுடியாது. ஆனால் சச்சின் தனது 23வயதில் கோலியை விட சிறப்பாகவே ஆடினார். இலக்குக்காக இல்லாமல்.

சென்னை பித்தன் said...

சச்சினின் சாதனை உலக்மே வியந்து பார்க்கும் சாதனைதானே!

மாலதி said...

பகிர்வுக்கு நன்றி...

Unknown said...

காச்ச மரமே கல்லடிப்படும்!

Enathu Ennangal said...

//
தனிப்பட்ட முறையில் சச்சினை விட எனக்கு கங்குலியே மிகவும் பிடிக்கும். //

எனக்கும் கங்குலிதான் ரொம்ப பிடிக்கும்.

சச்சினின் இந்த சாதனை சிறப்பான சாதனைதான். கண்டிப்பாக நாம் ஏற்று கொள்ள கூடிய ஒன்று தான். ஆனால் இவர் ஓய்வு பெறக்கூடிய காலம் வந்து விட்டது. அதனால் இவர் ஓய்வு பெற்று இளைனர்களுக்கு வழி விடவேண்டும் என்பது என் கருத்து.

RaveePandian said...

Pls write about Dravid.

ADMIN said...

சச்சினுக்கு சாதனைகள் சாதாரணம்!

சாதாரணமானவர்கள் வேதனைகளைக் கண்டு வெறுத்து ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் இவர் அப்படி அல்ல. அந்த வேதனைகளையும் உள்வாங்கி, அதை விரட்டி அடித்தவர். இதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!!

பாலா said...

@சென்னை பித்தன்

உண்மைதான் சார். கருத்துக்கு நன்றி.

பாலா said...

@மாலதி

ரொம்ப நன்றிங்க

பாலா said...

@விக்கியுலகம்
கரெக்ட் மாப்ள

பாலா said...

@Enathu Ennangal

கிரிக்கெட் மீதான தீராத காதலை அவரை கிரிக்கெட்டை விட்டு போக விடாமல் வைத்திருக்கிறது. நன்றி நண்பரே

பாலா said...

@RaveePandian

இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. உங்கள் கருத்துக்கு அப்புறம் எழுதலாம் என்று தோன்றுகிறது. எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே. அடிக்கடி வாங்க

பாலா said...

@தங்கம் பழனி

உண்மைதான் நண்பரே. எவ்வளவு உயரம் சென்றாலும் இன்னும் தலைக்கனம் இல்லாமல், மாசு படாத மனிதனாக வாழ்வதே பெரிய சாதனைதான். நன்றி நண்பரே.

DHANS said...

@Madhavan Srinivasagopalan Strike rate of kholi in that match is 80 only. sachin's strike rate is 77.

dont compare two different matches with two different opponents.

it was slow pitch and slow bowlers made both sachin and kholi struggle to collect runs.

DHANS said...

@NKS.ஹாஜா மைதீன்

Sir, this was his first one day century against this mighty small country.

DHANS said...

@ doctor, how can you rate kholi ahead of sachin with two of his centuries, lets wait and see how it goes.

dravid and ganguly both are great batsmen but they had different role to play compared to sachin.

check out the statistics, he also played for country, single handedly won matches for country. when he fought single handedly allother 10 players failed to produce in lot of matches, you mean to say sachn should play for all other 10 players too?

பாலா said...

@DHANS

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...