விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 8, 2010

ஆணாதிக்கவாதி பாலா ஒழிக...




இந்த பதிவை படித்து விட்டு தலைப்பில் சொன்னது மாதிரியான பின்னூட்டங்கள்தான் வரும் என்று எதிர்பார்கிறேன். இதன் காரணம் என்னான்னு கடைசில சொல்றேன். இன்னைக்கு காலை விடிந்ததே சோகமாகத்தான் விடிந்தது. எழுந்தவுடன் முதல் வேலையாக டிவியை ஆன் செய்தேன். சன் நியூஸ் சேனலில் "ஜெர்மனியை வென்று இறுதி போட்டியில் நுழைந்தது ஸ்பெயின்" என்ற செய்தியை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டது. இந்த உலககோப்பையை வெல்லும் என்று நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு அணி. நேற்று இரவு முதல் பாதி ஆட்டம் பார்த்த போதே லேசாக பொறி தட்டியது. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில்தான் போய் படுத்தேன். அதே போல க்ளோஸ் ஒரே ஒரு கோலாவது அடித்து விடவேண்டும் என்று வேண்டினேன். அதுவும் நடக்கவில்லை. 



ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி நடந்தது. அதாவது நடனம், நாடகம், மிமிக்ரி என்று சிறு சிறு போட்டிகளாக சுமார் முப்பது போட்டிகள் நடத்துவார்கள். அவற்றில் ஜெயிக்கும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஜெயித்த நபருக்கும் புள்ளிகள் வழங்கப்படும். இறுதி நாளில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ அதற்கு ஒரு சுழற்கோப்பையும், அதிக புள்ளி பெற்ற ஒரு மாணவருக்கு ஆல் ரவுண்டர் விருதும் கொடுக்கப்படும். ஜெர்மனி போல யாராலும் கண்டுகொள்ளப்படாத அணியாகத்தான் இந்த போட்டிகளில் கலந்து கொண்டோம். போக போக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தோம். இன்னும் ஒரு சில முக்கிய போட்டிகளே மீதம் இருந்தன. அனைவராலும் கவனிக்கப்படும் அணியாக மாறினோம். இறுதி நாள் அன்று தனி நபர் பட்டியலில் நானும் இன்னொரு அணியை சேர்ந்த மாணவி ஒருவரும் ஒரே புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தோம். இருப்பது ஒரே ஒரு போட்டி. குழு நடனம் மட்டுமே. புள்ளிகள் பெறவேண்டிய கட்டாயத்தால் நானும் குழு நடனத்தில் பங்கேற்றேன். எங்களது முழு திறமையும் காட்டி நடனம் ஆடினோம். இருப்பினும் எங்களுக்கு தோல்வியே ஏற்பட்டது. எங்கள் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தனி நபர் பட்டியலிலும் நான் இரண்டாவதானேன். ஒரே நேரத்தில் இரண்டு பரிசுகளும் பறிபோனது. இன்று ஜெர்மனியை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. குறைந்த பட்சம் க்ளோஸ் - ஆவது தங்க காலனி வாங்குவார் என்று எதிர் பார்த்தேன் அதுவும் நடக்கவில்லை. 


வெளியூரில் குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்ப்பவர்கள் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை, பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போவது. இதன் முக்கிய காரணம் பெரும்பாலான டிக்கெட்டுகளை ஏஜென்டுகளே முன்பதிவு செய்து விடுவதுதான். முன்பதிவு தொடங்கி பத்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும். எனவே அனைவரும் ஏஜெண்டுகளை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நம் மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது அரசு அறிவிப்பு ஒன்று. அதாவது முன்பதிவு தொடங்கி முதல் அரைமணி நேரத்துக்கு ஏஜெண்டுகள் யாரும் பதிவு செய்ய முடியாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. இந்த அறிவிப்பு சாதாரணமாக தெரிந்தாலும். அனுபவித்தவர்களுக்கு தெரியும். தீபாவளி அன்று டிக்கெட் கிடைக்காமல் சென்னையில் இருந்து ஒரு டெம்போ வண்டியில் அறுநூறு ரூபாய் கொடுத்து சுமார் பதினைந்து மணிநேரம் கழித்து மதுரை வந்திறங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்புகுரியது. இதில் ஏதும் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.


நம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. திருமணம் முடிந்தாலும் தோனி மீதான கிசு கிசுக்கள், வதந்திகள் குறைந்த பாடில்லை. அவர் காரணம், இவர் காரணம், பிபாசாவுக்கு கல்தா கொடுத்தார். அசினுக்கு அல்வா கொடுத்தார், என்று ஆயிரம் கிசுகிசுக்கள். ஆனால் ஆட்டக்களத்தில் இருப்பது போல புன்சிரிப்பு மாறாமல் அமைதியாகவே இருக்கிறார் தோனி. இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எனினும் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கும் தோனி மன நிம்மதியுடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதில் தப்பொன்றும் இல்லை. Happy Married Life Dhoni.

சரி தலைப்பில் சொல்லி இருக்கும் மேட்டர்க்கு வருவோம். மாதா மாதம் நிறைய புதியவர்கள் பதிவு எழுத வருகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நானும் புதியவன்தான். ஏன் இந்த மாதம் கூட நிறைய பேர் வந்திருக்கிறார்கள். புதிதாய் பதிவு எழுத வருபவர்களுக்கு ஏற்கனவே எழுதி கொண்டிருப்பவர்கள் ஊக்கம் அளிப்பார்கள். இங்குதான் பிரச்சனை. நான் பொதுவாக பேசவில்லை. அதனால் இது சம்பந்த பட்டவர்களையே குறிக்கும். மற்றவர்கள் காண்டாக வேண்டாம். இந்த மாதம் புதிதாக பெண் பதிவர் ஒருவர் எழுத தொடங்கி உள்ளார். நான்கு அல்லது ஐந்து பதிவுகள்தான் போட்டிருப்பார். அவருக்கு பின்னூட்டங்கள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான பின்னூட்டங்கள் "அருமையான பதிவு", " அசத்துங்க", "உங்க எழுத்துக்கள் என் மனதை வருடுகின்றன" போன்ற வழிதல் கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. இல்லை கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கலரை இப்படி மாற்றுங்கள், பூ படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான கடலை பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன. 

பாலோயர்கள் என்றால் என்னை பொறுத்தவரை ஒருவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரின் பதிவுகளை தொடர்ந்து படிப்பதற்காக தன்னையும் இணைத்துக்கொள்வது. இப்பதிவருக்கு அதற்குள் நிறைய பாலோயர்கள். அதாவது இவர் கண்டிப்பாக நல்லா எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில். என்னே ஒரு ஆர்வம்? சரி அதற்காக புதிய பதிவர் ஒருவரை தட்டிக்கொடுப்பது அவருக்கு உற்சாகமூட்டுவதற்குதானே? இதில் பெண் என்பதால் இவன் கோபம் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் பதிவு எழுத தொடங்கி சுமார் ஆறுமாதம் ஆகின்றன. குறிப்பிட்ட சில நண்பர்களை தவிர வேறு எந்த பின்னூட்டமும் வந்ததில்லை. இது எனக்கு மட்டுமல்ல. என் நண்பர் சிலருக்கும் இதே நிலைதான்.எங்களை எல்லாம் உற்சாகப்படுத்த தேவை இல்லை என்று நினைத்து விட்டார்களா? இந்த ஆம்பளைங்க எப்பதான் திருந்த போறாங்களோ?அது சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங். 
(இது பின்னூட்டங்கள் வரலையே அப்படிங்கற பொறாமையில் எழுதியதல்ல. இந்த விஷயத்தை மனசாட்சியோடு அணுகி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இங்கு எழுதி இருப்பது என்னுடைய பார்வையில்).


டிஸ்க்: ஒரு புது பெண் பதிவருக்கு பின்னூட்டம் இடுவதோ, பெண் பதிவர்களாக 
தேடி போய் பாலோயர் ஆவதோ தவறு என்று நான் சொல்லவில்லை. இது பற்றி பேசும்போது உங்கள் மனம் நேர்மையாக சிந்தித்தால் குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தவறில்லை.



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...



22 comments:

Anonymous said...

//*****ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி நடந்தது.
ஒரே நேரத்தில் இரண்டு பரிசுகளும் பறிபோனது.*****/

பாலா அன்பரே ......
dont feel everything is gud for us

/* ******** டிக்கெட் கிடைக்காமல் சென்னையில் இருந்து ஒரு டெம்போ வண்டியில் அறுநூறு ரூபாய் கொடுத்து சுமார் பதினைந்து மணிநேரம் கழித்து மதுரை வந்திறங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்புகுரியது. இதில் ஏதும் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.*********/

i too had same experience...

வாழ்த்துக்கள் டோனி .....

/****** பெரும்பாலான பின்னூட்டங்கள் "அருமையான பதிவு", " அசத்துங்க", "உங்க எழுத்துக்கள் என் மனதை வருடுகின்றன" போன்ற வழிதல் கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. இல்லை கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கலரை இப்படி மாற்றுங்கள், பூ படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான கடலை பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன. **********/

வாழ்க இந்தியா...... no comments anbareee

soundr said...

//இது பற்றி பேசும்போது உங்கள் மனம் நேர்மையாக சிந்தித்தால் குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தவறில்லை.//

:)

http://vaarththai.wordpress.com

எண்ணங்கள் 13189034291840215795 said...

பின்னூட்டம் தவிருங்கள் என்றே சில பதிவுகளுக்கு சொல்லி வருகிறேன்..(போலிகள் வரக்கூடாது என்று )

சமூக நலன் கருதி எழுதும் பதிவுக்கு மட்டுமே கருத்துகள் எதிர்பார்ப்பேன்.


எதுவும் எதிர்பாராமல் , யாரையும் ஒப்பிடாது உங்கள் எழுத்தை சேவை மனப்பான்மையோடு தொடருங்கள்..

மக்கள் தொடருவார்கள்..

சத்தியஞான ஆச்சாரியன் said...

பாலாண்ணா நானும் உங்க கட்சிதான்..
www.kanittamil.blogspot.com
www.anril.blogspot.com
www.mukamilanthavan.blogspot.com

Jey said...

என்ன தல, follower பட்டை கானோம்?.

vino said...

நல்ல கருத்தை தைரியமாக சொல்லி இருக்கிறீர்கள் பாலா. =)

பாலா said...

@thiru

நண்பரே அந்த தோல்வியில் தான் பல பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@soundr

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ புன்னகை தேசம்

//எதுவும் எதிர்பாராமல் , யாரையும் ஒப்பிடாது உங்கள் எழுத்தை சேவை மனப்பான்மையோடு தொடருங்கள்..

இதைத்தான் இப்போது பின்பற்றி வருகிறேன். நன்றி நண்பரே...

@ தமிழ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@Jey
நண்பரே என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. என் வலைத்தளத்தில் பாலோயர் பட்டையை இணைக்கவே முடியவில்லை. இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன்.

@Vino
கமல் ஒரு படத்தில் சொல்வாரே..
தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.
அந்த கதைதான் இங்க..

smart said...

எனக்கு குறிப்பிட்ட நபர்களை மட்டும் பின்தொடர்ந்து படிக்கும் பழக்கமில்லாததால். உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் வருத்தங்களும்

"ராஜா" said...

ஆணாதிக்க வாதி பாலா ஒழிக.... பெண்களுக்கு எதிராக பதிவுலகில் ஒரு குரல் ... பதிவுலக பெண் காப்பாளர்களே வாங்க ... நாம யாருன்னு காட்டுவோம் இவருக்கு ..

(ஏதோ என்னால முடிஞ்சது)

Yoganathan.N said...

தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு நிமிஷம் 'ஷாக்' ஆகிட்டேன்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் எழுதுங்க்க நண்பரே... நாங்க இருக்கோம்.

ஜெர்மன் அணி தோற்ப்பது நான் எதிர்பார்த்ததே.

Btw, forum-இல் நிறைய சகாக்கள் welcome சொல்ல்யிருக்கிறார்கள். அவர்களை கவனிக்கவும். :)

Good citizen said...

என்ன சார் நீங்கள்,,பின்னூட்டம் இடவில்லையெனில் உங்கள் பதிவை குரைவான பேர்தான் படிக்கிறார்கள் என்று அர்த்தமா ? நான் ஐந்து வருடமாக
தமிழ் பதிவுகளை படித்து வருகிறேன்,நீங்கள் சொல்லும் ஜொல் பார்ட்டி லிஸ்டில் நான் கண்டிப்பாக இல்லை[நம்புங்க சார்) சில நேரங்களில்
நான் பதிவர் ஆணா?பெண்ணா என்று கூட பார்ப்பதில்லை,,
மற்றும் சர்ச்சைகுரிய ப்திவர்களின்
பதிவை படிப்பதை நிறுத்திவிட்டேன்,,
உதாரணம் அந்த நற்குடி பெண்மனியின் பதிவை படிப்பதை
நிறுத்திவிட்டேன்.அதனால் தயங்காமல் தொடருங்கள்.வாழ்த்துகள்

Yoganathan.N said...

//பின்னூட்டம் இடவில்லையெனில் உங்கள் பதிவை குரைவான பேர்தான் படிக்கிறார்கள் என்று அர்த்தமா //

சரியா சொன்னீங்க நண்பரே...

//நான் பதிவர் ஆணா?பெண்ணா என்று கூட பார்ப்பதில்லை,,//

நானும் இதே மாதிரி தான்.

//மற்றும் சர்ச்சைகுரிய ப்திவர்களின்
பதிவை படிப்பதை நிறுத்திவிட்டேன்,,//

சர்ச்சைகுரிய பதிவர்களை அடயாளம் காண்பது எப்படி?

//உதாரணம் அந்த நற்குடி பெண்மனியின்//

நற்குடி என்றால் என்ன?

பாலா said...

@smart
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்று நண்பரே...

@"ராஜா"
ஏன்..?
என்னாத்துக்கு ..?

@Yoganathan.N
தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரியும் நண்பரே...
மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஜெர்மனி மறுபடியும் ஏமாற்றம்தான்.
நிறைய வேலை இருப்பதால் சரிவர கவனிக்க முடியவில்லை நண்பரே...

@moulefrite
வெகு நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து ஒரு பின்னோட்டம். மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே..
நீங்கள்தான் எனக்கு முதல் பின்னூட்டம் இட்டவர். உங்களை பற்றி நான் சொல்ல வில்லை நண்பரே..
அதே போல எனக்கு யாரும் பின்னூட்டம் இடுவதில்லை என்று வருத்தப்படவில்லை. ஒரு உதாரணத்துக்காக என் பதிவை பற்றி சொன்னேன்.
இந்த மாதிரி நடக்கிறது என்பதை சொல்வதற்கே இந்தபதிவு...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பின்னோக்கி said...

61 பதிவுகளுக்கு அடுத்து வரக் கூடிய சிறிய வருத்தம் என்ற அளவில் எனக்கு புரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய பேர் படிக்கிறார்கள். படிப்போம்.

பின்னோக்கி said...

பின் தொடராமல், கூகிள் ரீடர் வழியே நிறைய பேர் படிக்கிறார்கள்.

கிரி said...

பாலா உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதை எல்லாம் ஒதுக்கி விட்டு தொடர்ந்து எழுதுங்கள்.

எழுத்து பிழை அதிகம் இல்லாமல் எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

எப்பூடி.. said...

ஜெர்மனியின் தோல்வியிலிருந்து நான் இன்னமும் முழுமையாக மீளவில்லை :((

இந்த பலோவர் , பின்னூட்டல்கள் எலாம் தானாக அமையும், அந்த கவலையை விட்டுவிட்டு ஜாலியாக எழுதுங்கள். எனக்கும் ஆரம்பத்தில் இதே மாதிரி தோன்றியது, நாம் எழுதுவது எமது திருப்திக்குத்தானே? அதை ஒருவர் முழுமையாக படித்தாலே அது எமக்கு வெற்றிதான், ஒருவராவது உண்மையான பின்னூட்டம் போட்டால் அதுவே மிகப்பெரிய உற்ச்சாகம். தொடர்ர்ந்தும் எழுதுங்கள், நீங்கள் எழுதுவது உடனுக்குடன் தெரிய தங்கள் தளத்தை எனது 'நீங்களும் பார்க்கலாம்' கட்ஜெட்டில் இணைத்துள்ளேன். don't worry be happy :))

எப்பூடி.. said...

Yoganathan.N

//ஜெர்மன் அணி தோற்ப்பது நான் எதிர்பார்த்ததே.//

ஆர்ஜெண்டீனா தோற்ற கடுப்பு :)

Bala said...

@ பின்னோக்கி
தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே...

@ கிரி
முடிந்த வரை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பதுதான் என் முதல் குறிக்கோள். நன்றி நண்பரே...

@ எப்பூடி..
//நாம் எழுதுவது எமது திருப்திக்குத்தானே? அதை ஒருவர் முழுமையாக படித்தாலே அது எமக்கு வெற்றிதான்,

கண்டிப்பாக நண்பரே... இந்த எண்ணத்தில்தான் எழுதி கொண்டிருக்கிறேன்.
தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே..

santhanakrishnan said...

பாலா.. எந்த சார்பும் இல்லாமல்
சில விளையாட்டுகளைத்தான்
பதட்டம் இல்லாமல் ரசிக்க முடிகிறது.
அதில் இதுவும் ஒன்று.
உள்ளூரிலேயே தங்கி விட்டதால்
டிக்கெட் பிரச்னை தெரியவில்லை.இந்த பிளாக்ல விக்கிற சமாச்சாரம் ஒழியத்தான் வேண்டும்.
தோனியிடம் எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
நல்ல எழுத்துக்கள் பின்தொடர்பவர்கள்,
பின்னூட்டம் இவைகளால்
பாதிக்கப் படுவதில்லை
என்பதே என் கருத்து.
நான் படித்துக்கொண்டிருக்கிறேன்.

nadu nilai said...

thayvu seithu ooruku upathesam pannotu neenkalum oru pakka sarpaka eluthamal pothuvaka elthinal makilchi..
* ajith,rajni ponrorai thalyil thookivaithu aduvathai sonnen

பாலா said...

@ nadu nilai

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே...
நான் எப்போது அஜித், மற்றும் ரஜினியை உலக மகா உத்தமர்கள், மகான்கள் என்று சொன்னேன்? அவர்களிடம் எனக்கு பிடித்த சில விஷயங்களை ரசிக்கிறேன்....

கருத்துக்கு நன்றி நண்பரே....

Related Posts Plugin for WordPress, Blogger...