விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 1, 2010

சந்தேகங்களும் பதிலாக வந்த குழப்பங்களும்.....



ஒரு பதிவின் ரீமேக்: 


நான் ஒரு போதும் சீரியசான பதிவிட்டது கிடையாது. பதிவுலகம் வந்தபின் சில புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டேன். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தங்களும் பதிவுலகத்தில் கிடைத்தது. ஆனால் அவை எப்போதுமே நெருப்பு துண்டங்களாகவே இருக்கின்றன. அவற்றை கையில் எடுத்தாலே சுட்டு விடுகிறது. அதனால்தான் பெரும்பாலான பதிவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த தயங்குகிறார்கள். அந்த வார்த்தைகள் என்னவென்றால், ஆணாதிக்கம், பார்பனீயம், முதலாளித்துவம், ஆத்திகம் மற்றும் நாத்திகம்.

ரீமேக் என்று ஏன் சொல்கிறேன் என்றால் நான் சொல்லவந்த செய்தி யாருக்கும் புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே பிளேட்டை திருப்பிவிட்டார்களா என்று தெரியவில்லை. பிளேட் திருப்பப்பட்டது இப்படித்தான். 





சிகப்பில் இருப்பது வேறொரு பதிவில் வந்தது


இவர் விவாதங்களே வேண்டாம் என்கிறார் விவாதங்களை குப்பத்தொட்டி என்கிறார் . இது தான் திமிர் பிடித்த கருத்து , உங்களுக்கு ஒரு கருத்து பிடிக்கவில்லையா விவாதம் செய்யுங்கள்
விவாதம் செய்ய முடியாமல் குப்பை தொட்டி என்று சொல்கிறீர்கள் ...............


நான் குப்பைதொட்டி என்று சொன்னது குழம்பிய என் மனதை. பதிவுலகத்தை பற்றியோ விவாதங்களை பற்றியோ நான் கூறவில்லை. இது பிளேட்டை திருப்பும் வேலை. 


விவாதம் இல்லாமல் , மணிரத்தனம் சிறந்தவர் , பார்பனர்கள் நல்லவர்கள் , பெண்கள் அடங்கி தான் இருக்கவேண்டும் . முதலாளிக்கு அடங்கி போக வேண்டும் , கடவுள் இருக்கிறார் , இது எல்லாம் நீங்கள் சொல்ல வரும் கருத்து இதன் பெயரே பார்பனீயம்பாலா 


அடங்கொய்யால, ஒரு வார்த்தை கிடைத்தால் அதற்க்கு கண் காத்து மூக்கு வைத்து பின் பூணூலையும் மாட்டி விடும் நேர்த்தியான பிளேட் திருப்பும் வேலை.


ஆண்கள் தண்ணி அடிக்கும்போது பெண்கள் அடிக்ககூடாது என்று சொல்ல நீங்கள் யார்? 


என் பதிவில் அப்படி நான் சொல்லி இருக்கிறேனா? இதை நூறாவது தடவை சொல்கிறேன். தவறு என்றால் அது யாராக இருந்தாலும் தவறுதான். 

ஆணாதிக்கம் இல்லை என்று சொன்னால் என்னைப்போல் ஒரு முட்டாள் இருக்க மாட்டான். தவறு யார் செய்தாலும் தவறுதான். இதை முதலியே என் பதிவில் அடைப்புக்குள் கொடுத்திருந்தேன். எல்லா இடத்திலும் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே விட்டுவிட்டேன். ஆணாதிக்கம் இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆணாதிக்கமாக பார்க்கப்படுகிறதே என்றுதான் சொல்கிறேன். ஒரு பெண்ணிடம் சாதாரணமாக ஒரு ஆண் சொல்லும் அறிவுரைகள் ஆணாதிக்கமாகாதுதானே? ஆணாதிக்கம் என்ற வார்த்தையை ஒரு excuse ஆக பயன்படுத்தக்கூடாதுதானே?
" இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? " இது அந்த பெண்ணை பாத்து நான் கேட்டது. ஆனால் ஒரு ஆணைப்பார்த்து நான் கேட்க மாட்டேன் என்று சொல்ல வில்லையே.


ஆனால் பெண் படித்த திமிர் , வேலைக்கு போகிறாள் அதனால் என்கிறீர்கள் பெண்கள் வேலைக்குபோக கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் படிந்து இருக்கிறது .... இது கூட பார்பநீயமே .........


இப்படி நீங்களாக கற்பனை செய்து கொண்டு உளறினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.


தலித் மக்கள் துன்புறும் பொழுது கோபம் கொள்ளாத நீங்கள் , பார்பனரை திட்டும் பொழுது மட்டும் கோபம் கொள்வது கூட பார்பனீயம்.


இப்படி சொல்வதனால் கண்டிப்பாக தலித் இன மக்களும், சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும் எனக்கு எதிராக திரும்புவார்கள் என்பதுதானே உங்களின் எதிர்பார்ப்பு? ஒன்று சொல்லிக்கொள்கிறேன் பார்ப்பனர்களால் தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன்தான் நானும். 

பார்ப்பனீயம் பற்றி பேசக்கூடாது என்று யார் சொன்னது? எல்லாவற்றையுமே அதில் இருந்து தொடங்கலாமா என்றுதான் கேட்டேன். ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். ஒரு மனிதர் பார்ப்பனர் அதனால் அவர் கெட்டவர் . இந்த வாதம் சரியா? பெரும்பாலான பதிவர்கள் இந்த நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். ஒருவர் தவறு செய்தால் முதலில் அவர் பார்ப்பனரா என்று பார்க்கிறார்கள். இருந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம். பார்ப்பனன் புத்தி இப்படித்தான் போகும் என்கிறார்கள். இல்லாவிட்டால் ஒருவர் பார்ப்பனர் என்று தெரிந்து விட்டால் எப்படா இவர் மாட்டுவார் என்று காத்திருக்கிறார்கள். இது உண்மைதானே. சமூக ஏற்றதாழ்வுகள் இட ஒதுக்கீடு இவற்றை நான் விமர்சிக்கவில்லை. எல்லோரும் தவறு செய்பவர்கள்தான். ஆனால் அவன் பார்ப்பனராக இருந்தால் மட்டும் அதை சுட்டிக்காட்ட யாரும் மறப்பதில்லை. இதுதான் என் பதிவில் நான் சொல்ல நினைத்த கருத்து.


தண்ணீர் குடிக்கும் பாமரனையும் , KINLEY கம்பெனி இரண்டையும் ஒரே தராசில் வைப்பது எவ்வளவு அயோக்ய தனமோ அவ்வளவு அயோக்யத்தனம் உங்கள் மணிரத்னத்தையும் தன் குடும்பம் வாழ அதிகம் ஆசை படாமல் சிறு வேலைகள் பார்க்கும் தொழிலாளியையும் compare செய்வது .


இந்த இடத்தில் நீங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது. அதாவது நான் பாமரர்களின் தோழன். இந்த பாலா மணிரத்தினம் கூட்டாளி. பார்ப்பனன் என்ற முத்திரையை என் மீது குத்தப்பார்க்கிறீர்கள்.


மணிரத்னம் சம்பாதிப்பதும் , சாதாரண தொழிலாளி முதலாளியிடம் சம்பாதிப்பதும் ஒண்ணா ???????? சாதாரண தொழிலாளி தன் வாழ்க்கை ஓட்ட முதலாளியிடம் வேலை செய்கிறான் . 


உங்கள் கொள்கையில் எங்கோ இடிக்கிறேதே. இந்த சாதாரண தொழிலாளி என்பது உங்களையும் சேர்த்துதானா? நீங்கள் ஒரு நல்ல முதலாளியிடம்தான் வேலை செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மாதம் கஷ்டப்பட்டு ஐந்தாயிரம் பத்தாயிரம் சம்பாதிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நான் குறிப்பிட்டது உங்களை அல்ல. நான் சொன்னது சாப்ட்வேர் கம்பெனியில் மாதம் ஐம்பதாயிரம் வாங்கிகொண்டு வேலைநேரம் போக மீதி நேரங்களில் கம்யுனிசம் பேசும் நபர்களைப்பற்றி.

கடவுள் நம்பிக்கை பற்றி நாளை சொல்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள். அதற்கும் விளக்கம் சொல்லி விடுகிறேன். கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். நான் கடவுளை நம்ப மாட்டேன் என்பதால் கடவுளை நம்புபவனிடம் போய் கடவுளை ஆபாசமாக திட்டலாமா? கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்து பலர் எழுதுகிறார்கள் அதை நான் எதிர்க்கவில்லை. கடவுளை திட்டிவிட்டு வேண்டுமானால் உங்கள் கடவுளை தண்டிக்க சொல் பார்க்கலாம் என்கிறார்கள். எவ்வளவுதான் பண்புடன் பதிவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திட்டாமல் இருப்பதில்லை. பொதுவில் எதிர்த்தாலும் பண்பு, நாகரீகம் கிடையாதா. மேடையில் அசிங்கமாக பேசும் அரசியல்வாதிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதிலுக்கு பதில் பேசியாகி விட்டது. இப்போது என் கருத்துக்கள்.
ஆணாதிக்கம் என்று இதை சொல்லலாமா என்றுதான் கேட்டிருந்தேன். அதற்கு உதாரணமாக ஒரு பெண் தனியாக சம்பாதித்தவுடன் பெற்றோரை மதிக்கவில்லை என்ற நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி இருந்தேன். எல்லா பெண்களும் அப்படி என்றோ ஆண் செய்தால் தவறு பெண் செய்தால் தவறில்லை என்ற அர்த்ததிலோ சொல்லவில்லை. 

ஒருவரை தாக்குவதற்கு ஆயுதமாகவோ, இல்லை கேடயமாகவோ பார்ப்பனீயத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் என் கேள்வி. எப்படி பார்ப்பனர்கள் தம் சந்ததியினருக்கு இனத்துவேசத்தை கற்றுக்கொடுத்தார்கள் என்று இவர்கள் சொல்கிறார்களோ அதே போல பார்ப்பனன் என்றாலே அயோக்கியன் என்று தன் சந்ததிக்கு ஏன் கற்றுக்கொடுக்கிறார்கள் என்றுதான் கேட்டேன். ஒருவன் தவறுசெய்தால் அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று முடிவு கட்டுவது ஏன்? இதையே சாதித்தலைவர்கள் மேடையில் செய்தால் சாதி அரசியல். வலையுலகத்தில் செய்தால் முழக்கமா? இது அப்பட்டமான சாதிவெறியே அன்றி வேறொன்றும் இல்லை. 

முதலாளித்துவம் பற்றி முன்பே சொல்லிவிட்டேன். என் நோக்கம் பாட்டாளிகளை கிண்டல் செய்வதல்ல. மல்டி நேசனல் கம்பெனியில் மாதம் ஆறிலக்க சம்பளம் வாங்கிக்கொண்டு கம்யுனிசம் பெசுபவர்களைப்பற்றிய சந்தேகம். இதைச்சொன்னால் இவர்களுக்கேன் கோபம் வருகிறது. இவர்கள் மனம் ஏன் குறுகுறுக்கிறது? 

நண்பர்களே ஒரு பதிவை படிக்கும்போது முன்கூட்டியே எந்த முடிவும் செய்துகொள்ளாமல் படியுங்கள். இல்லை என்றால் எழுத்துக்கள் எல்லாம் தவறாகத்தான் தெரியும். ஒரு காமெடியான உதாரணம் சொல்கிறேன். சினிமாவில் இந்த காட்சியை பார்க்கலாம். ஒரு குடிகாரன் மனைவியை போட்டு அடிக்கிறான். ஒருவன் வந்து ஏன் அடிக்கிறாய் என்று கேட்கிறேன். உடனே குடிகாரன் காரணம் சொல்லாமல் "நீ அவள வச்சிருக்கியா?" என்று கேட்கிறான். இதில் யார் என்ன கேரக்டர் என்றெல்லாம் ஆராய்ந்து குழப்பி கொள்ளாதீர்கள். என்னைப்பார்த்து நீ பார்ப்பனன் என்று சொல்வது கூட இப்படித்தான் இருக்கிறது. சுருக்கமாக என் கேள்விகளை கேட்கிறேன்.

1. பொதுவில் ஒரு பெண்ணை ஆண் கண்டிக்கலாமா? 
(இதற்கு நண்பர் புலிகேசி ஏற்கனவே பதில் சொல்லி விட்டார்)
2. எல்லா பார்ப்பனர்களுமே அயோக்கியர்களா?
3. கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு கம்யுனிசம் பேசலாமா?
4. கடவுள் மறுப்பு வாதம் என்பது ஆபாசமாக திட்டுவதுதானா?
இவைதான் என் சந்தேகங்கள். இவற்றை விடுத்து தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ளவேண்டும் என்று அடுத்தவனை வில்லனாக சித்தரிக்காதீர்கள்.

19 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

//ஆனால் பெண் படித்த திமிர் , வேலைக்கு போகிறாள் அதனால் என்கிறீர்கள் பெண்கள் வேலைக்குபோக கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் படிந்து இருக்கிறது .... இது கூட பார்பநீயமே .........


இப்படி நீங்களாக கற்பனை செய்து கொண்டு உளறினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.


//

இதன் பெயர் உளறல் இல்லை நண்பா , நீங்கள் உங்கள் பதிவில் படித்தால் வேலைக்கு போவதால் திமிரு என்ற தொனியில் எழுதி உள்ளீர்கள் இதில் பதில் சொல்லத்தெரியாமல் நீங்கள் உளறுவது தெரிகிறது

வெண்ணிற இரவுகள்....! said...

//அடங்கொய்யால, ஒரு வார்த்தை கிடைத்தால் அதற்க்கு கண் காத்து மூக்கு வைத்து பின் பூணூலையும் மாட்டி விடும் நேர்த்தியான பிளேட் திருப்பும் வேலை.
//
நீங்கள் பிறப்பால் பார்பனர் அல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் பதிவில் அதற்க்கு உண்டான கூறுகள் இருக்கிறதே ......இப்பொழுது புரிகிறதா இங்கே நாங்கள் பூணூல்
போட்டவனை மட்டும் திட்டவில்லை ............. அதிகார தொனியில் பர்பீநீய கொள்கையை நீங்கள் தூக்கியதால் நான் அப்படி சொல்லி இருக்கிறேன் .................அதற்க்கு நீங்கள் அந்த குளத்தில் பிறக்க வேண்டும் என்றில்லை

வெண்ணிற இரவுகள்....! said...

ஒரு ஆணை பார்த்து யாரும் கேட்பதில்லை , ஏன் நீங்களே பெண்ணை கேட்டதை தானே குறிப்பிட்டு உள்ளீர்கள் ..................

வெண்ணிற இரவுகள்....! said...

//இப்படி சொல்வதனால் கண்டிப்பாக தலித் இன மக்களும், சமூக நீதி மறுக்கப்பட்டவர்களும் எனக்கு எதிராக திரும்புவார்கள் என்பதுதானே உங்களின் எதிர்பார்ப்பு? ஒன்று சொல்லிக்கொள்கிறேன் பார்ப்பனர்களால் தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன்தான் நானும்.//

என் எதிர்ப்பார்ப்பு அல்ல .....பார்பனன் என்று திட்டும் பொழுது கோபம் கொள்ளும் நீங்கள்
ஏன் தலித் ஒடுக்கப்படுக்கிற பொழுது எழுத வில்லை நண்பரே .....................கோபம் எல்லா பக்கமும் வர வேண்டுமே ......................

வெண்ணிற இரவுகள்....! said...

சரி உதாரணமாய் என் நண்பன் இருக்கிறான் விவசாய பின்னனி ...ஊரில் விவசாயம் இல்லை ...அவர் அப்பா சாப்ட்வேர் படிக்க வைத்தார் ................... மழை இல்லை அவனுக்கு வேறு வழி இல்லை ....................அவன் தன்னை INTELLECTUAL என்று சொல்லவில்லை .........
அவன் தேவைக்கு வேலை செயக்கிறான் .............. ஆனால் மணிரத்னம் போன்றவர்கள் எடுப்பது
இந்தியாவை பாதிக்கிறது ...................................பாலா சொல்வதை பார்த்தால் அம்பானி ,. கலைஞர்
ஜெயலலிதா திருடுவதையும் சோற்றிற்காக ஒருவன் திருடுவதையும் ஒன்று என்று எப்படி
பார்க்க முடியும்

வெண்ணிற இரவுகள்....! said...

திருட்டு என்பது ஒரே அளவு என்று எப்படி சொல்ல முடியும் .............மணிரத்னம் கோடி கோடியாய் சம்பாதித்து இருப்பார் ,.............நாளைக்கு RECESSION என்று வந்தால் இந்த மென்பொருள் பொழப்பு நாறும் ..........இவன் சம்பாதிக்க வில்லை என்றால் அடுப்பு வேகாது ஆனால் மணிரத்னம் தண்டகாரண்யா வைத்து காசு பார்த்தாரே அதுவும் இதுவும் ஒன்றா ....
நான் நல்லவன் என்று சித்தரிக்க வில்லை ???? உங்களை போல தனிமனித தாக்குதல் செய்யவில்லை அதனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க போவதில்லை

வெண்ணிற இரவுகள்....! said...

உங்கள் வீட்டில் உங்கள் அப்பா இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் .........அவர் தவறு
செய்தல் எதிர்ப்பீர்களா ??? இல்லை அவர் காசு தருகிறார் வீடு எப்படியோ போகட்டும் என்பீர்களா ???????அதை போல் தான் சமூக அமைப்பிலும் பாமரன் கையலாகதவனாய் இருக்கிறான் சாப்ட்வேர் COMPANIYIL வேலை செய்யட்டுமே ,???? ஆனாலும் முதலாளித்துவ எதிர்ப்பில் ஈடுபடக்கூடாது என்று யார் சொன்னது ...................ஆனால் மணி சார் போன்றவர்கள்
குரு படம் எடுத்து சரி enkiraarkale ................சரி ivan uzhaippirkku தான் avan sambalam vaangukiraan
athu onrum muthaalaali காசு alla ivan kaase

Bala said...

@ வெண்ணிற இரவுகள்....!

நண்பரே முதலில் ஆத்திரத்தை கட்டுப்படுத்துங்கள்.

//இதன் பெயர் உளறல் இல்லை நண்பா , நீங்கள் உங்கள் பதிவில் படித்தால் வேலைக்கு போவதால் திமிரு என்ற தொனியில் எழுதி உள்ளீர்கள்

//ஒரு ஆணை பார்த்து யாரும் கேட்பதில்லை , ஏன் நீங்களே பெண்ணை கேட்டதை தானே குறிப்பிட்டு உள்ளீர்கள் ..................


அது உங்கள் கற்பனை என்றுதான் சொன்னேன். ஆணாதிக்கம் என்று சொல்வதற்காகத்தான் பெண் வேலைக்கு போகும் கதையை சொன்னேன். எனக்கு பதில் சொல்ல தெரியாமல் இல்லை. உங்களுக்கு எப்படி சொன்னால் புரியும் என்றுதான் தெரியவில்லை. என் நண்பன் பள்ளியில் படிக்கும்போதே பெரிய ஊதாரி, தன் தகப்பனை ஒருமையில்தான் அழைப்பான். கல்லூரியில் இன்னும் மோசம். அப்போது நான் சொன்ன வார்த்தை "நீ வேலைக்கு போனால் உன் பெற்றோரை கழட்டி விட்டு விடுவாய். காசுக்காகத்தான் அவர்களுடன் இருக்கிறாய்" என்று. அது நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி இங்கே தேவை இல்லாத ஒன்று. ஆணாதிக்கம் பற்றி பேசும்போது நான் ஆண்களையும் இப்படித்தான் திட்டுவேன். நான் ஆணாதிக்கவாதி அல்ல என்று சொல்லிக்கொள்ள வேண்டுமா என்ன?

//நீங்கள் பிறப்பால் பார்பனர் அல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் பதிவில் அதற்க்கு உண்டான கூறுகள் இருக்கிறதே

நண்பரே நீங்கள் கோபபட்டால் அனல் தெறிக்கும் வார்த்தைகள் வருகிறதல்லவா? அதே போல எனக்கும் கோபம் வந்தால் அடங்கொய்யால, அடங்கொக்காமக்கா, போன்ற வார்த்தைகள் வரும் இது அதிகார தொனியில் சொன்னவையா? மன்னிக்கவும் துப்பியவையா? இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால் யாருக்கும் கோபம் வரும். நான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றி உங்கள் பதிவில் போட்டதற்கே பிளேட் திருப்பல் என்று சொன்னேன்.

மணிரத்தினம் ஒரு பேச்சுக்காக பயன்படுத்தப்பட்டது. அதையே பிடித்து தொங்கி கொள்ளாமல் நான் என் பதிவில் போட்டிருக்கும் கடைசி பத்திகளை படித்துவிட்டு சொல்லுங்கள்.

Bala said...

@ வெண்ணிற இரவுகள்....!

நண்பரே முதலில் ஆத்திரத்தை கட்டுப்படுத்துங்கள்.

//இதன் பெயர் உளறல் இல்லை நண்பா , நீங்கள் உங்கள் பதிவில் படித்தால் வேலைக்கு போவதால் திமிரு என்ற தொனியில் எழுதி உள்ளீர்கள்

//ஒரு ஆணை பார்த்து யாரும் கேட்பதில்லை , ஏன் நீங்களே பெண்ணை கேட்டதை தானே குறிப்பிட்டு உள்ளீர்கள் ..................


அது உங்கள் கற்பனை என்றுதான் சொன்னேன். ஆணாதிக்கம் என்று சொல்வதற்காகத்தான் பெண் வேலைக்கு போகும் கதையை சொன்னேன். எனக்கு பதில் சொல்ல தெரியாமல் இல்லை. உங்களுக்கு எப்படி சொன்னால் புரியும் என்றுதான் தெரியவில்லை. என் நண்பன் பள்ளியில் படிக்கும்போதே பெரிய ஊதாரி, தன் தகப்பனை ஒருமையில்தான் அழைப்பான். கல்லூரியில் இன்னும் மோசம். அப்போது நான் சொன்ன வார்த்தை "நீ வேலைக்கு போனால் உன் பெற்றோரை கழட்டி விட்டு விடுவாய். காசுக்காகத்தான் அவர்களுடன் இருக்கிறாய்" என்று. அது நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி இங்கே தேவை இல்லாத ஒன்று. ஆணாதிக்கம் பற்றி பேசும்போது நான் ஆண்களையும் இப்படித்தான் திட்டுவேன். நான் ஆணாதிக்கவாதி அல்ல என்று சொல்லிக்கொள்ள வேண்டுமா என்ன?

Bala said...

//நீங்கள் பிறப்பால் பார்பனர் அல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் பதிவில் அதற்க்கு உண்டான கூறுகள் இருக்கிறதே

நண்பரே நீங்கள் கோபபட்டால் அனல் தெறிக்கும் வார்த்தைகள் வருகிறதல்லவா? அதே போல எனக்கும் கோபம் வந்தால் அடங்கொய்யால, அடங்கொக்காமக்கா, போன்ற வார்த்தைகள் வரும் இது அதிகார தொனியில் சொன்னவையா? மன்னிக்கவும் துப்பியவையா? இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால் யாருக்கும் கோபம் வரும். நான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றி உங்கள் பதிவில் போட்டதற்கே பிளேட் திருப்பல் என்று சொன்னேன்.

மணிரத்தினம் ஒரு பேச்சுக்காக பயன்படுத்தப்பட்டது. அதையே பிடித்து தொங்கி கொள்ளாமல் நான் என் பதிவில் போட்டிருக்கும் கடைசி பத்திகளை படித்துவிட்டு சொல்லுங்கள்.

HVL said...

I just wrote my feelings regarding the topic. I didn't intend to oppose or hurt U. So I have removed my comment.

Bala said...

@HVL

நண்பரே, இதில் காயப்படுவதற்கு என்ன இருக்கிறது? அவரவர்க்கு அவரவர் கருத்து பெரியது. ஆனால் சொல்லும் விதம்தான் வித்தியாசப்படுகிறது.

Bala said...

@HVL

நண்பரே உங்கள் கருத்துரையை படித்து விட்டேன். உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். என் எண்ண ஓட்டமும் இதுதான். நான் சொல்ல வந்தது பெற்றோர்களை பார்த்துக்கொள்ள வேண்டியது பொதுவான கடமை. ஆண் செய்தாலும் தவறுதான், பெண் செய்தாலும் தவறுதான். ஆனால் பெண்ணை கண்டிக்கக்கூடாதா என்பதுதான் என் கேள்வி. உங்கள் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன்.

கண்ணா.. said...

பாலா, உங்கள் இரண்டு இடுகைகளையும், வெண்ணிற இரவுகள் மற்றும் புலிகேசியின் பதிவுகளை படித்தேன்

--

இது போன்று நிறைய பேர் எழுதிகொண்டிருப்பதை படித்தாலும் சில எதுவும் எழுத தோணாது சிலது எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் அப்படியே படித்து விட்டு மட்டும் வந்து விடுவேன். ஆனால் இது குறித்த உங்களின் சில வரிகள் என் அலைவரிசையில் இருந்ததால் இந்த பின்னூட்டம்.

//ஆனால் பெண் படித்த திமிர் , வேலைக்கு போகிறாள் அதனால் என்கிறீர்கள் பெண்கள் வேலைக்குபோக கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் படிந்து இருக்கிறது .... இது கூட பார்பநீயமே //

இந்த வார்த்தையில் அவளுடைய அப்பா அம்மாவை உதாசீன படுத்தக்கூடிய எண்ணத்தைதான் நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அதனால்தான் அதை திமிர் என்ற வார்த்தையால் குறிப்பிட்டதாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இதில அவள் வேலைக்கே போகக்கூடாது என்ற அர்த்தத்தில் எடுத்து கொள்பவர்களின் மனதில்தான் பார்பனீயம் படிந்து இருக்கிறது என நான் நினைக்கிறேன்..


நிறைய விஷயங்களை விவாதத்திற்கு வைச்சுருங்கீங்க... எனக்கு சிலது பிடிக்குது... சிலது பிடிக்கல...

இப்போது அவசர வேலை இருப்பதால் நாளை விவாதத்திற்கு வருகிறேன்.

Bala said...

@கண்ணா

அப்பாடா தங்களுக்காவது புரிந்ததே...
வருகைக்கு நன்றி....

HVL said...

Thanks Bala.

Madumitha said...

மெளனராகம் எடுத்த போதும்
மணிரத்னம் பார்ப்பனர் தான்.
ராவணன் எடுத்த போதும்
மணி பார்ப்பனர் தான்.
என்னைப் போன்றவர்களுக்கு
ஒரு கலைஞன் நீர்த்து போவதுதான்
வருத்தம்.
உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்
என்று நினைக்கிறேன்.
விமர்சனம் என்பது ஜாதி சர்டிஃபிகேட்
கேட்கும் அரசாங்க வேலை மாதிரி
ஆகிப்போவது சோகம்தான்.
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் நண்பரே.
சூர்யனுக்குக் கீழ் நடைபெறும்
அனைத்து விஷயங்களையும்
தாம் நம்பும் சித்தாந்தக் கண்ணாடி
போட்டு பார்ப்பதால் வரும்
கோபம் மற்றும் பதட்டம்.
அவரவர்கள் நம்புவதை
சொல்லட்டும்.
விடுங்கள் பாலா.

Anonymous said...

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே..
தொடர்ந்து எழுத முயல்கிறேன்..
நட்புடன்,
பாலா..

Madumitha said...

பாலா.. உங்களூக்கு ஒரு விருது
காத்திருக்கிறது என் பக்கத்தில்.

Related Posts Plugin for WordPress, Blogger...