விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 23, 2010

கல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், கன்றாவி...



நேற்று மறுபடியும் சன்டிவியில் ஒரு சாமியார் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். இந்த முறை கல்கி பகவானின் அந்தரங்களை படம் பிடித்து காட்டினார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு எந்த மதத்தையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல என்று டைட்டில் வேறு. எனக்கு தெரிந்து கல்கி அவர்கள் அவதரித்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது. இவ்வளவு நாள் இல்லாத புலனாய்வு மூளை திடீரென்று வேலை செய்ய ஆரம்பித்தது எப்படி என்று தெரியவில்லை. ஒரு வேளை பேரம் படிய வில்லையா? இல்லை சன்டிவியில் காட்சி தர மறுத்தாரா ? அந்த கல்கி பகவானுக்கே வெளிச்சம் .



போனவாரம் பேஷன் டிவியை ஒரு பத்து நாட்களுக்கு இந்தியாவில் தடை செய்தார்கள். காரணம் ஆபாச காட்சிகள் ஒளி பரப்பியதால். அது சரி, ஆபாசம் என்றால் நிர்வாண காட்சி மட்டும் தானா? அதுவும் அவர்கள் ஒளிபரப்பியது இரவு 12 மணிக்கு மேல். இந்த வாரம் தென்னிந்திய அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது . மேடையில் சில நடிகைகளின் நடனம், உடைகள் எல்லாம் அந்த கால ரெகார்ட் டான்சை நினைவு படுத்தின. அழகி போட்டி பங்கேற்பாளர்களும் தன் பங்குக்கு தாராளமாக தன் அழகுக்கு மார்க் போடும்படி அனைவருக்கும் தன் அழகை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இந்த டிவியை தடை செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் முழுவதும் காட்டவில்லையே. நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர். அம்மா தாய்குலங்களே, சம உரிமை, உடையில் புரட்சி எல்லாம் வாழ்க்கை முறைக்குதானே ஒழிய, பாலுணர்வை தூண்டுவதற்காக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு என்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்பவர்கள் ஏன் புற அழகை முன் வைத்து அழகி போட்டி நடத்துகிறார்கள்?



இந்த ஐபிஎல் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஆட்டங்கள் என்று பார்த்தால், யூசுப் பதான் விளாசிய மின்னல் வேக சதம் முக்கிய இடம் பிடிக்கும். அதெப்படி ஐபிஎல் போட்டிகளின் பொது மட்டும் நம்ம யூசுப்புக்கு வீரம் வருகிறது என்று தெரிய வில்லை. இந்திய அணியில் ஆடும்போது சொற்ப ரன்கள் எடுக்க கூட வக்கில்லாமல் குனிந்த படியே பெவிலியன் திரும்பும் இவர் இந்த போட்டிகளில் மட்டும் வெளுத்து வாங்குகிறார்? ஒரு வேளை இந்திய அணிக்கு வார்னே காப்டனாக இருந்தால் நன்கு ஆடுவாரோ ? இல்லை சில்பா செட்டி , காத்ரீனா, ப்ரீத்தி , மற்றும் இன்ன பிற நடன அழகிகள் மைதானத்துக்கு
வரவேண்டுமா?



அதெல்லாம் இல்லை இந்த பாழாய் போன காசு இருக்கிறதே அது செய்யும் வேலை. அதனால் தான் குடுகுடு கிழவர்கள் கூட துள்ளி குதித்து ஓட வைக்கிறது. இதற்கு யூசுப் மட்டும் என்ன விதிவிலக்கா? இது உண்மை என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. யாரும் கண்டிக்க போவதும் இல்லை. அதை விடுத்து நான் கிரிக்கெட் விளையாடுவதே நாட்டுபற்றுக்குத்தான் என்று எதாவது சொன்னர்களானால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சாயம் வெளுத்து விடும். இந்த விஷயத்தில் நம்ம ஸ்ரீசாந்த் எவ்வளவோ மேல் இந்திய அணியோ இல்லை பஞ்சாப் அணியோ நான் வாரி வழங்குவதில் வள்ளல் என்று நிருபித்து வருகிறார். இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் போதெல்லாம் இவரை விட இர்பான் பதான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்? என்று தோன்றும். யுவராஜ் விசயத்தில் இன்னும் மோசம். என்னையா காப்டன் பதவியில் இருந்து இறக்கினீர்கள்? என்ன செய்கிறேன் பார்? என்று சொல்லி வைத்தார் போல் ஒற்றை இலக்கத்தை தாண்டுவதே இல்லை. அவர் முகத்தில் காப்டன் பதவி பறி போன ஆற்றாமை தெரிகிறது. ப்ரீத்தியும் இப்பல்லாம் யுவராஜை கண்டு கொள்வதே இல்லை.விடுங்க பாஸ் இவுங்க எப்பவுமே இப்படித்தான்!!!



சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ரசிகர்களை கடைசிவரை நகம் கடிக்க வைத்து கடைசியில் சூப்பர் ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து சென்று ஜெயிக்க வேண்டிய ஒரு ஆட்டத்தை பஞ்சாபுக்கு விட்டு கொடுத்த பெருமை சென்னை அணியை சாரும் . இதே போல் இதற்கு முன் நடந்த டெல்லி மற்றும் டெக்கான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டமும் அப்படித்தான். கிட்டத்தட்ட கடைசி ஓவர் வரை டெல்லி ஜெயிக்கும் நிலைதான் இருந்தது இறுதியில் டெக்கான் அணிக்கு வெற்றியை விட்டுக்கொடுத்தது டெல்லி . ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. விட்டுக்கொடுத்துதான் விட்டார்களோ? இப்போது இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவும் பெரும்பாலான பேர்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. என்ன சந்தேகமா? தெரியாத மாதிரி கேக்கறீங்க? அதாங்க மாட்ச் பிக்சிங். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பார்க்கலாம். மோடிக்கே வெளிச்சம்.


இவ்வளவு இருந்தும் ஐ பி எல்லில் ரசிக்க வைத்த சில விஷயங்கள், முரளிதரனின் அதே குழந்தை தனமான ஆர்வம், கங்குலி அவ்வப்போது பிடிக்கும் அபார காட்ச்சுகள், மங்கூஸ் மட்டை, அதிகரித்து வரும் டைரக்ட் ஹிட்டுகள், பவுலர்கள் தன்னுடைய அணியினருக்கே பந்து வீசும் சுவாரசியமான தருணங்கள், இன்னும் பல ...


பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

6 comments:

"ராஜா" said...

//கிட்டத்தட்ட கடைசி ஓவர் வரை டெல்லி ஜெயிக்கும் நிலைதான் இருந்தது இறுதியில் டெக்கான் அணிக்கு வெற்றியை விட்டுக்கொடுத்தது டெல்லி

அது எப்படி தல , மேட்ச் பிக்ஸ் பண்றவன் கடைசி ஓவர் வரைக்கும் ஜெயக்கிற மாதிரி விளையாடி கடைசியில தோக்க சொல்லுவான்.. ஏன் பிக்ஸ் பண்றவன் யாருக்குமே சந்தேகம் வராத மாதிரி டெல்லியோட முக்கியமான ரெண்டு வீரர்கள கடைசி நேரத்தில உடம்பு சரி இல்லைன்னு ஒக்கார வச்சி தொர்கடிக்கலாமே...ஒழுங்கா விளையாடி ஜெயிச்சா உடனே இப்படி சொல்லிறதா? ஏன் டெல்லி என்ன ஜெயிக்கவே முடியாத அணியா? இல்ல டெக்கான் விளையாட தெரியாத அணியா? கிரிக்கெட் விளையாட்டே இப்படிதான் கடைசி பந்து வரைக்கும் கணிக்கவே முடியாத விளையாட்டு... உங்கள் சந்தேகம் கண்டிப்பாக உண்மையான விசயமாய் இருக்க முடியாது.. அந்த ஆட்டத்தை இறுதி வரை பார்த்தவன் என்ற முறையில் என்னால் கண்டிப்பாய் இதை சொல்ல முடியும் .... அது டெக்கானின் திறமைக்கு கிடைத்த வெற்றிதான்... இதை போன்ற உண்மை இல்லாத விசயங்களை உங்கள் பதிவில் கூறாதீர்கள்....

Bala said...

@ ராஜா

டெக்கான் அணியை குறைத்து எழுத வேண்டும் என்ற நோக்கம் என் மனதில் இல்லை. அதே நேரத்தில் டெல்லி அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. மாட்ச் பிக்சிங் நடந்திருக்குமோ என்று தான் எழுதி உள்ளேன். நடந்திருக்கிறது என்று எழுதவில்லை. பிக்சிங் என்பது பல வகைப்படும். ஆட்டத்தின் எந்த நேரத்திலும் அது நடக்கலாம். தொடக்கத்திலே எல்லாம் பிக்ஸ் செய்து விடுவார்கள் என்று அர்த்தம் அல்ல.. டெக்கான் அணிக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் சென்னை அணியை பற்றி ஒன்றும் கூறவில்லையே? டெல்லி ஜெயிக்கவே முடியாத அணியா? என்று கேட்டுள்ளீர்கள். லீக் போட்டிகளில் ஒன்றில் கூட டெல்லி அணி டெக்கானிடம் தோற்றதில்லை. பலம் வாய்ந்த அணியின் வீரர்கள் தான் பிக்சிங்கிங்கில் ஈடுபடுவார்கள் என்று யார் சொன்னது?

"ராஜா" said...

//லீக் போட்டிகளில் ஒன்றில் கூட டெல்லி அணி டெக்கானிடம் தோற்றதில்லை.

டெக்கான் அணி டெல்லியை சென்ற அரை இறுதியில் வென்று உள்ளது அப்படி பார்த்தால் அதையும் match fixingnu சொல்லுவீங்க போல ?
கிரிக்கெட்டில் கடைசி பந்து வரை வெற்றி தோல்வியை உறுதி செய்ய முடியாது அதுவும் 20-20யில் கண்டிப்பாக எது வேண்டுமானாலும் நடக்கலாம்.... ஏன் தினேஷ் கார்த்திக்கை அவுட் செய்ய match fixing பண்ணினால் மட்டும்தான் முடியுமா?அவர் என்ன அவ்வளவு பெரிய ஆட்டக்காரரா?

நீங்கள் டெல்லியின் ரசிகரா?

//மாட்ச் பிக்சிங் நடந்திருக்குமோ என்று தான் எழுதி உள்ளேன்

y u don't have this doubt when chennai or delhi win the matches?

Bala said...

@ ராஜா

டெல்லி தோற்றதில்லை என்பது உண்மை. அதை சொன்னால் நான் டெல்லி ரசிகரா? 2009 அரை இறுதியில் கில்லியின் கிளீன் ஷேவால் சர்ச்சைக்கு இடமின்றி டெக்கான் ஜெயித்தது. தினேஷ் கார்த்திக்கை அவுட் ஆக்கவே முடியாது, டெல்லியை ஜெயிக்கவே முடியாது, டெக்கான் ஜெயிக்கவே ஜெயிக்காது என்று என் பதிவில் ஒரு இடத்தில் கூட நான் சொல்ல வில்லை. ஒரு வேளை நான் அப்படி சொல்லி என் கருத்துக்களுக்கு வலு சேர்க்க முயன்றால் நீங்கள் சொல்வது ஏற்புடையது... தென் ஆபிரிக்க காப்டன் குரோனியே பிக்சிங்கில் சிக்கியவர். இது அனைவரும் அறிந்தது. நீங்கள் கேட்பது குரோனியேவை பிக்சிங் செய்தால்தான் அவுட் ஆக்க முடியுமா? என்று கேட்பது போல உள்ளது.

//y u don't have this doubt when chennai or delhi win the matches?

ஆட்டத்தின் போக்கு டக்கென மாறினால் அவர்கள் மீதும் சந்தேகம் வரும்

hayyram said...

டிவி சேனல்கள் எல்லாம் இப்போது ஆபாச நிகழ்ச்சிச் சேனல்களாகமாறி விட்டன. இவர்களுக்கு சென்ஸார் கூட கிடையாது. யார் தடுப்பது..

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

Yoganathan.N said...

ப்ரீத்தி இப்படி கட்டி அணைப்பால் என்று தெரிந்திருந்தால், நான் கூட இந்த கிரிக்கெட்டில் நாட்டம் செலுத்தியிருப்பேன்... :(

Related Posts Plugin for WordPress, Blogger...