விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

March 12, 2010

த்ரில்லிங்கான இரண்டு படங்கள்

என்னை கவர்ந்த படங்களை பற்றி நான் எழுதி வருகிறேன். என் ரசனைகள் எப்பொழுதும் ஒரு பக்கமாகஇருந்ததில்லை. அனைத்து விதமான படங்களையும் நான் ரசிப்பதுண்டு. அந்த வரிசையில் ஒரே மாதிரியான இரண்டு படங்களை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.

 முதல் படம் - Escape From Alcatraz 


நீங்கள் பொழுதுபோக்கு பட பிரியரா? சோக காட்சிகளை வெறுப்பவரா? லாஜிக் எல்லாம் பார்க்காதவரா? கண்டிப்பாக இந்த படம் அந்த வகைதான். படத்தில் நெஞ்சை பிழியும் காட்சிகள் எதுவும் கிடையாது. பல இடங்களில் லாஜிக் உதைக்கும். ஆனாலும் படத்தின் வேகம் மற்றும் சுவாரசியமான காட்சிகள் அவற்றை மறைத்துவிடும். 

படத்தின் கதை இதுதான்.  பிரான்க் மோரிஸ் என்பவன் ஒரு குற்றத்துக்காக அல்கற்றாஸ் தீவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்படுகிறான். அது சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் இரண்டரை கிமீ தொலைவில் கடலில் உள்ள ஒரு தீவு. அங்கே இருப்பது ஒரே ஒரு சிறைச்சாலை மட்டும்தான்.அந்த சிறைச்சாலையை பற்றி சொல்ல வேண்டுமானால் அது சிறைக்கெல்லாம் ஒரு சிறை. அதாவது தப்பு செய்பவர்களை சிறையில் அடைப்பார்கள். சிறையிலும் தப்பு செய்பவர்களை இந்த தீவுக்கு தான் கொண்டு வருவார்கள். இதை அந்த சிறையின் வார்டனே ஒரு தடவை சொல்வார். பயங்கர பாதுகாப்பு நிறைந்த ஒரு இடம். எல்லாமே முறைப்படி ஒழுங்காக நடக்கும். யாருக்கும் தப்பிக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தப்பித்தாலும், கடலில் தான் குதிக்க வேண்டும். மறு கரை போய் சேரும்முன் உறைந்து போய் விடுவர். 

இதை அனைத்தையும் கேட்ட மறு நொடியே நம்ம ஹீரோ அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டம் போடுகிறார். தனக்கு உதவி செய்ய மேலும் மூவரை கூட்டாளியாக சேர்த்து கொள்கிறார். அந்த நால்வரும் சிறையில் இருந்து தப்பினார்களா? என்பதை சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் சொல்கிறது இந்த படம்.

முதல் பத்து நிமிடங்கள் சிறையில் நடக்கும் நிகழ்ச்சிகள் சுவாரசியம் இல்லாமல் செல்கின்றன. ஹீரோ தப்பிக்க திட்டம் தீட்டியவுடம் படம் ஜெட் வேகம் பிடிக்கிறது. முதல் கட்டமாக சுரங்கம் தோண்டுவது, அதற்க்கு பயன்படும் சிறிய கத்தியை வடிவமைப்பது, வெட்ட தேவையான பிளேடை திருடுவது, போன்று சின்ன சின்ன காட்சிகள் மூலம் நம்ம படத்துடம் ஒன்ற செய்து விடுகிறார் இயக்குனர். நால்வரும் ஒவ்வொரு விஷயத்தில் கெட்டிக்காரர்கள் அவர்கள் நால்வரும் தங்களுக்குள் வேலைகளை பிரித்து கொள்கிறார்கள். என்னென்ன வேலை என்று படத்தை பார்த்தல் புரியும். படத்தில் நால்வரும் சுரங்கம் வழியாக கட்டடத்தின் உச்சிக்கு செல்வது உச்ச கட்ட த்ரில்லிங். சீட் நுனிக்கு நம்மை நகர்த்தி விடும். அவர்கள் கடலில் குதித்து தப்பி விடுவது போலவும், ஆனால் வார்டன் அவர்கள் கடலில் இறந்து விட்டதாக கூறி கேசை முடிப்பது போலவும் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். 

பிரான்க் மோரிஸ் ஆக நடித்திருப்பவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். இவரை கௌபாயாக பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு  சற்று வித்தியாசமாக தோன்றும்.  கெட்டப்ப மாத்தினாலும் கேரக்டர மாத்த மாட்டேங்கரானே என்று வடிவேல் சொல்வது போல இதில் வேறு கெடப் என்றாலும் அதே தெனாவட்டான லுக். கூலிக்காரன் படத்தில் விஜயகாந்துக்கும், சிறை வார்டன் ஜெய்சங்கருக்கும் நடக்கும் உரையாடல் போல இந்த படத்தில் ஒரு காட்சி வரும். கிளின்ட் ஈஸ்ட்வுட் தன் பார்வையாலேயே தன்னுடைய தெனாவட்டை காட்டியிருப்பார்.

இந்த படம் வெளி வந்த ஆண்டு 1979. இயக்குனரின்  பெயர் டான் செய்கல். 1963 இல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில்  கம்பெல் பிருஸ்  எழுதி வெளிவந்த Escape From Alcatraz என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். இரண்டு மணி நேர முழு பொழுது போக்குக்கு இப்படம் காரண்டி.

இரண்டாவது படம் - Five Man Army 
இதுவும் கிட்டத்தட்ட முந்தய படம் மாதிரிதான். ஆனால் இது சிறைக்குள் இல்லாமல் வெளியே செய்யும் சாகசங்கள். முதலில் கதையை சொல்லி விடுகிறேன்.

மெக்ஸிகோவில் அரசுக்கு எதிராக புரட்சி நடந்த காலகட்டத்தில் நடந்ததாக காட்டபடுகிறது இப்படம். புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒரு டச்சுக்காரர், ஆயுதம் வாங்க பணம் இல்லாததால், தங்கம் கொண்டு செல்லும் ஒரு ரயிலை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார். அந்த ரயிலை கொள்ளை அடிப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தங்கம் இருக்கும் பெட்டிக்கு இருபுறமும், இரண்டு பெட்டிகளில் ஆயுதம் தாங்கிய வீரர்கள். அது போக ஒரு பெட்டி திறந்த வெளியாக இருக்கும். அதிலும் வீரர்கள். ரயில் செல்லும் வழியெங்கும் அவ்வப்போது வீரர்கள் தென்படுவார்கள். அவர்களிடம் ரயிலில் இருக்கும் வீரர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல கை அசைக்க வேண்டும். இல்லையேல் வண்டி நிறுத்தப்படும். இவ்வளவு பிரச்சனைகளையும் மீறி கொள்ளை அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு உறுதுணையாக நான்கு பேரை துணைக்கு அழைக்கிறார் டச்சுக்காரர். ஒவ்வொருவரும் ஒரு தொழில் தெரிந்தவர்கள். இந்த ஐந்து பெரும் சேர்ந்து எப்படி தங்கத்தை கொள்ளை அடிக்கிறார்கள், பின் என்ன நடக்கிறது என்பது விறுவிறுப்பாக சொல்கிறது இப்படம்.


மின்னல் வேக திரைக்கதை என்றால் என்ன என்று இப்படத்தை பார்த்தால் புரியும். ஒரு நிமிடம் கூட கண்கள் திரையை விட்டு அகல மறுக்கும். இத்தனைக்கும் படத்தின் இடையில் ஒரு அரை மணி நேரத்துக்கு எந்த வசனமோ, இசையோ கிடையாது. ரயில் ஓடும் சத்தம் மட்டுமே கேட்கும். என்னவோ நாமும் அந்த ரயிலில் பயணம் செய்வது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும். என் நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தேன். படம் செல்ல செல்ல ஒவ்வொருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். கொஞ்ச நேரம் கழித்து அனைவரும் (என்னையும் சேர்த்துதான்) எங்களை அறியாமலே ரயிலில் செல்வது போல பாவனை செய்து கொண்டிருந்தோம். வீடியோ கேம் விளையாடும்போது, கார் ரேசில் வண்டி திரும்பும் போதெல்லாம் நாமும் காருடன் சேர்ந்து இரண்டு பக்கமும் சாய்வோமே அது போல. 

படத்தில் வரும் ஐந்து பெரும் தங்களின் கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தி உள்ளார்கள் . அதிலும் முரடனாக வரும் பட்ஸ்பென்சர் சிறப்பாக செய்திருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1970. இயக்குனர்கள் டான் டெய்லர்  மற்றும் இடலோ ஜிங்கரெளி. படம் முதலில் வெளிவந்தது இத்தாலிய மொழியில்தான். பிறகு ஆங்கிலத்தில். 

உங்களுக்கு பொழுதுபோக வேண்டும், படம் உங்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்றால் நிச்சயமாக இந்த இரண்டு படங்களும் பார்க்கலாம்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்கள பதிவு பண்ணுங்க...

7 comments:

அண்ணாமலையான் said...

ஆர்வத்த தூண்டிட்டீங்க....

Unknown said...

நல்ல விமர்சனம்.

Yoganathan.N said...

இரண்டு படங்களையும் பார்த்ததில்லை.எனக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்குணராகவும் பிடிக்கும் நடிகனாகவும் பிடிக்கும். இரு படங்களையும் பார்க்க வேன்Dஉம் போல உள்ளது. ஆனால், இந்த மாதிரி பழைய படங்களை இப்போது எங்கு தேடுவது... :(

பி.கு The Count of Monte Cristo பார்த்துள்ளீர்களா? அதிலும் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சிகள் இருக்கும். சுவாரசியம் மிகுந்திருக்கும். :)

பாலா said...

பெரும்பாலான கடைகளில் இந்த படங்கள் கிடைக்கும. டவுன்லோடும் செய்யலாம்.

The Count of Monte Cristo
பார்த்ததில்லை. சிபாரிசு செய்ததற்கு நன்றி

Yoganathan.N said...

//பெரும்பாலான கடைகளில் இந்த படங்கள் கிடைக்கும. டவுன்லோடும் செய்யலாம்.//

முயற்சி செய்கிறேன். :)

//The Count of Monte Cristo
பார்த்ததில்லை. சிபாரிசு செய்ததற்கு நன்றி//

கண்டிப்பா பாருங்க. :)

Unknown said...

"The Great Escape" என்ற படமும் பாருங்கள். மிகவும் அழுத்தமான படம். விருதுநகரா? எனக்கு அது தான் சொந்த ஊர். - சிவகாசிக்காரன்

சரவணன்-சாரதி said...

Count of Monte Cristo என்பது அலெக்சாண்டர் டுமாசின் கிளாசிக். அந்தப் நாவல் மட்டமான முறையில் ஜெமினியின் நடிப்பில் வஞ்சிக் கோட்டை வாலிபன் என்று தமிழில் வந்தது. நீங்கள் K -டிவி பார்ப்பவர் என்றால் அந்தப்படத்தை நிச்சயமாக 20 முறையாவது பார்த்திருப்பீர்கள். :) ஹஹஹஹா

Related Posts Plugin for WordPress, Blogger...