ஒரிஜினல் ஷிண்ட்லர் லியம் நீசன் ஷிண்ட்லராக
இந்த படம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். 1939 ஆம் ஆண்டு நடந்த போலிஷ் யூதர்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாத்த ஆஸ்கர் ஷிண்ட்லெர் என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே இந்த படம்.
படத்தின் கதை இதுதான். போலிஷ் யூதர்கள் நாஜிக்களால் கொத்து கொத்தாக ஈவு இரக்கமின்றி கொல்ல படுகிறார்கள். இது வெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாது. இதனை எதிர்க்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. எதிர்த்தால் என்ன நடக்கும் என்றும் தெரியும். இதற்கிடையே ஆஸ்கர் ஷிண்ட்லர் என்னும் ஜெர்மானியர், பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு தொழிற்சாலை தொடங்க அனுமதி வாங்குகிறார். கொல்வதற்காக கொண்டு செல்லப்படும் ஆயிரக்கணக்கான யூதர்களை தன்னுடைய அடிமையாக தொழிற்சாலையில் வேலைக்கு சேர்க்கிறார் ஷிண்ட்லர். இதற்க்கு ராணுவமும் அனுமதி வழங்குகிறது. அவர்களை பொறுத்தவரை யூதர்கள் அடிமையாகத்தானே இருக்கிறார்கள் என்ற எண்ணம். ஆனால் ஷிண்ட்லர் அவர்களை வேலைக்கு சேர்த்தது அடிமையாக்க அல்ல. படு கொலையில் இருந்து காப்பதற்கு. யூதர்கள் சந்தோசமாக வேலை பார்க்கிறார்கள். இதற்கிடையே இரண்டாம் உலகப்போர் முடிவடைகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான யூதர்களை தன்னுடைய அடிமையாக வைத்திருந்த காரணத்தால் ஷிண்ட்லரும் ஒரு நாஜி குற்றவாளிதான். எனவே எந்நேரமும் ரஷ்ய படையால் கொல்லப்படலாம் என்ற நிலை வருகிறது. அவர் தனது தொழிலாளர்களை விட்டு ஓட வேண்டும். யூதர்கள் அவருக்கு பிரியா விடை கொடுக்கிறார்கள்.
படத்தில் குறிப்பிடவேண்டிய ஒரு பாத்திரம் அமன் கோயத். இந்த பாத்திரத்தில் நடித்திருப்பார் ரால்ப் பீன்ஸ். அதெப்படி ஆங்கில படங்களில் மட்டும் வில்லன்கள் பாத்திரம் கதாநாயகனை விட படு நேர்த்தியாக அமைக்கப்படுகிறது? அமன் கோயத் ஒரு நாஜி. ஷிண்ட்லரின் நண்பர். அவரின் வேலை யூதர்களை கொல்வது. வித விதமாக கொல்வது எப்படி என்று தன் ஆட்களுக்கு ஆணையிடுவது, துப்பாக்கி வேலை பார்க்கிறதா என்று சரி பார்க்க ஒரு யூதனை கொல்வது என்று மனிதர் கொன்னுட்டார். முகத்தில் தெரியும் கொலை வெறி. நாம் படம் பார்க்கும் பொது உண்மையிலேயே இவரை கொலைகாரர் என்று பலர் ஏக வசனத்தில் திட்டுவார். நடிக்கவில்லை. வாழ்ந்த்திருக்கிறார்.
படத்தில் குறிப்பிடத்தக்க சில விஷயங்கள்
படத்தில் ஷிண்ட்லராக நடித்திருப்பவர் லியம் நீசன். அலட்டல் இல்லாத ஒரு தொழிலதிபராகவே வாழ்ந்து காட்டியிருப்பார். யூதர்களை காக்க வேண்டும் ஆனால், அதனை தன் முகத்தில் காட்டக்கூடாது. எப்பொழுதும் ஆணவம் நிறைந்த ஒரு ஜெர்மானியன் மாதிரி நடந்து கொள்வார். எந்த ஒரு கணத்திலும் யூதர்களுக்கு ஆதரவாக இருப்பதாக யூதர்களுக்கே தெரியாமல் பார்த்துக்கொள்வார்.
படத்தில் குறிப்பிடவேண்டிய ஒரு பாத்திரம் அமன் கோயத். இந்த பாத்திரத்தில் நடித்திருப்பார் ரால்ப் பீன்ஸ். அதெப்படி ஆங்கில படங்களில் மட்டும் வில்லன்கள் பாத்திரம் கதாநாயகனை விட படு நேர்த்தியாக அமைக்கப்படுகிறது? அமன் கோயத் ஒரு நாஜி. ஷிண்ட்லரின் நண்பர். அவரின் வேலை யூதர்களை கொல்வது. வித விதமாக கொல்வது எப்படி என்று தன் ஆட்களுக்கு ஆணையிடுவது, துப்பாக்கி வேலை பார்க்கிறதா என்று சரி பார்க்க ஒரு யூதனை கொல்வது என்று மனிதர் கொன்னுட்டார். முகத்தில் தெரியும் கொலை வெறி. நாம் படம் பார்க்கும் பொது உண்மையிலேயே இவரை கொலைகாரர் என்று பலர் ஏக வசனத்தில் திட்டுவார். நடிக்கவில்லை. வாழ்ந்த்திருக்கிறார். படத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட நடிகர்கள். ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள். படத்தில் திடுக்கிட வைக்கும், நெஞ்சை பாரமாக்கும், மனதை கலங்கடிக்கும் காட்சிகள் ஏராளம். அவற்றுள் சில
1. ஒரே சமயத்தில் சுமார் 10000 யூதர்களை கொன்று எரிக்கும் இடத்தில் இருந்து எழும் சாம்பல் அந்த ஊரையே பனி போல் சூழ்ந்து கொள்ளும். எரிக்கும் இடத்தில் இருக்கும் ராணுவ அதிகாரிகளின் வெறி பிடித்த ஆர்ப்பாட்டம் நம்மை திடுக்கிட வைக்கிறது.
2. சில சிறுவர்கள் சிறையில் இருந்து தப்பி ஒரு மலக்குழிக்குள்(septic tank) நாள் முழுவதும் இருப்பதாக காட்டுவார்கள். மேலும் நூற்றுக்கணக்கான யூத பெண்கள் முடி வெட்டப்பட்டு குளியல் அறைக்கு கொண்டு செல்ல படுவார்கள். குளியல் அரை என்றால் தனியாக அல்ல. ஒரு பெரிய ஹாலில் ஏகப்பட்ட ஷவர்கள் பொருத்தபட்டிருக்கும். பொதுவாக அப்படி ஒரே ரூமில் அடைக்கப்பட்டால் ஷவரில் இருந்து வருவது தண்ணீராக இருக்காது, விஷ வாயுவாகத்தான் இருக்கும். எனவே கண்ணீருடன் எல்லா பெண்களும் சாவை எதிர் பார்த்து இருப்பார்கள். திடீரென அனைத்து ஷவரில் இருந்தும் தண்ணீர் பீச்சி அடிக்கும். எல்லா பெண்களும் ஒரே நேரத்தில் ஓ என அலறுவார்கள். நம் மனம் பதை பதைக்கும்.
3. ஆத்திரத்தில் கோயத் ஒரு தொழிலாளியை மண்டியிட வைத்து தலையில் சுடுவார். ஆனால் துப்பாக்கி சுடாது. ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து முறை சுட்டும் துப்பாக்கி சுடாது. அப்போது கோயத்தின் முகத்தில் கொலை வெறியும், அந்த தொழிலாளி முகத்தில் சாவை எதிர்கொள்ளும் திகிலான கலக்கமும் நம் மனதை பிசையும்.
இந்த மாதிரி படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் ...
இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், படம் வெளி வந்த ஆண்டு 1993. படம் முழுவதும் கருப்பு வெள்ளைதான். நிகழ்கால காட்ச்சிகள் எல்லாம் வண்ணத்தில். இந்த படம் ஏழு ஆஸ்கார் விருதுகளை பெற்றிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பர்கின் தலை சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. ஒரு விஷயம். படம் ரொம்ப நீ.....ளமானது. மூன்றே கால் மணிநேரம். படம் பார்க்க நிறைய பொறுமை தேவை. படத்தை பார்க்கும் போது படத்தில் இருக்கும் பல காட்சிகளை நிறைய தமிழ் படங்களில் பார்த்தது போல இருக்கும் (நம்ம இயக்குனர்கள் அசகாய சூரர்கள்).
நேரம் கிடைத்தால் கண்டிப்பா பாருங்க...
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
பிடிக்கலைனாலும் கருத்து தெரிவிங்க...





8 comments:
நான் கல்லூரியில் படித்த காலத்தில் வந்த படம். மிக அருமையன உயிரோவியம் இந்த படம். நினைவை தூண்டிவிட்ட பதிவு . வாழ்த்துக்கள்.
ஓட்டு போட்டாச்சு... உங்க விமர்சனத்துக்காகவே படம் பாக்கணும் போல இருக்கு..
வாழ்க.. நன்றி...
பிடிச்சிருக்கு உங்க விமர்சனம்.ஓட்டும் போட்டாச்சி.காமெண்டும் போட்டாச்சு...தொடர்ந்து எழுதுங்க...
இப்படி ஒரு படம் இருக்குங்கிறதே எனக்கு இப்பதான் தெரியும் .... நன்றி .... படத்த பாத்துடுறேன் ... ஓட்டும் போட்டுறேன்
@ ஜெ.ஜெயமார்த்தாண்டன்
@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
@ மயில்ராவணன்
@ "ராஜா"
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பர்களே.....
சூப்பர் ....
சூப்பர் ....
என்றும் சிறந்த படம் எனும் வரிசையில், இருக்கும் படம். இயக்குநர் ஒரு யூதர் அதனால் உண்மையில் நடந்த இச்சம்பவங்களை உணர்வோடு உள்வாங்கி , நேர்த்தியாகத் தொடுத்திருப்பார்.
கலைகளில் சோகத்தில் கூடச் சுகமிருக்கும்? எப்படிச் ஒரு சோகப்பாடலைக் கண்ணீருடன் ரசித்துக் சுகம் காண்கிறோமோ? அப்படி இந்தப் படத்தை கண்ணீருடன் ரசிக்க வைத்திருப்பார்கள்.
உலகில் யூதர்கள் வாழ்வுப் போராட்டத்தில் பட்ட அல்லல்கள் அப்படியே சாட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த விபரணச் சித்திரங்களைப் பார்த்த போது- இப்படம் ஒரு உண்மையை உள்ளபடி சொன்ன படம். மறக்கவே முடியாத படம்.
அந்த வரிசையில் நல்ல படம் விரும்புவோருக்கும், உண்மையைப் பின்ணணியாகக் கொண்ட படங்களைப் பார்க்க விரும்புவோருக்கும், யூதர், நாஜி பற்றிய அறிய வேண்டியவர்களுக்கும்
பார்க்க வேண்டிய பல படங்கள் உண்டு. மிக நல்ல படங்கள் The Pianist-2002, Life is beautiful-1997, Le vieux fusil- 1975(French)
Post a Comment