விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 6, 2012

வாசகர் பலவிதம்....



மு.கு: இந்த கட்டுரை சும்மா ஜாலிக்காக, நகைச்சுவை நோக்குடன் மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் குறிப்பிட்டோ, புண்படுத்தும் நோக்கத்துடனோ, எழுதப்படவில்லை.



ஏற்கனவே ஒருதடவை பதிவர்கள் பலவிதம்னு ஒரு கட்டுரை எழுதி பல்பு வாங்கினது பத்ததா? இவன் திருந்தவே மாட்டானான்னு நீங்க நினைக்கலாம். ஒவ்வொரு முறையும் நான் இந்த மாதிரி கிண்டலாக பதிவுலகம் பற்றி எழுதும்போது, அதில் நானும் ஒருவன் என்பதை மறப்பதே இல்லை. மேலும் நம்மை நாமே கிண்டல் செய்து கொள்வது ஒரு வித தற்காப்புதான். சரி. பதிவுலகில் நாமெல்லாம் மாங்கு மாங்கென்று எதற்காக எழுதுகிறோம்? ஒரு சிலர், "ஆத்ம திருப்திக்காக!", என்றும், "எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது ஒரு கனவு, ஆனால் அது நிறைவேறாத நிலையில் இப்படி ஒரு பிளாக் தொடங்கி எழுதிக்கொண்டிருக்கிறேன்.", என்று சொல்வார்கள். ஆனால் என்னதான் எழுதினாலும் அதை மற்றவர்கள் படிக்கவில்லை என்றால் ஏமாற்றமே மிஞ்சும். ஒரே ஒருவராவது அதை படித்துவிட மாட்டார்களா? என்ற ஏக்கம் இருக்கும். குறைந்தது தன் துணையாவது படிக்கவேண்டும் என்று டைப் செய்துவிட்டு டிராஃப்டில் உள்ளதை மனைவி/கணவனை படிக்க சொல்லும் பதிவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அதை படித்து நொந்து நூடுல்ஸ் ஆவார்கள் என்பது வேறு விஷயம். பின்னே அவர்களை எப்படி தண்டிப்பது? ஆக எல்லோருமே வாசகர்களை நோக்கியே எழுதுகிறோம். அவர்களை எப்படி வகைப்படுத்தலாம்? என்று யோசித்தபோது, பதிவர்களை வகைப்படுத்தியதை போல அவ்வளவு எளிதல்ல, என்று தெரிந்தது. இதில் நம்ம ஊர் ஜாதிகளைப்போல நிறைய பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் உள்ளன. ஆகவே மிகபொதுவாக வரிசைப்படுத்தியே எழுதி விடுகிறேன். கவனிக்க, வாசகர்களுள் பதிவர்களும் அடக்கம். ஏனென்றால், ஒரு பதிவிற்கு கமெண்ட் போடுவது பெரும்பாலும் பிற பதிவர்களே.



பாசிடிவ் வாசகர் - இவர்கள் மிக நல்லவர்கள். நாம் எவ்வளவு மோசமாக எழுதினாலும் அதை பாஸிட்டிவாகவே பார்ப்பவர்கள். நம்மை ஊக்கப்படுத்துவதையே தொழிலாக கொண்டவர்கள். இவர்கள் பதிவுலகிற்கு ரொம்ப முக்கியம். இவர்கள் இல்லாவிட்டால் பலபேர் பதிவு எழுதுவதையே விட்டு விடுவார்கள். 

நெகட்டிவ் வாசகர்-இவர் அப்படியே எதிர்பதம். என்ன எழுதினாலும் அதில் குறை கண்டுபிடிப்பவர். ஸ்பெல்லிங் மிஸ்டெக்கை கூட கொக்கி போட்டு காட்டுபவர்கள். இவர் மனதில் ஒரு ப்ரூஃப் ரீடர் என்ற நினைப்பு இருக்கும். அதே போல ஒரு தடவை இப்படி விமர்சித்து நல்ல பெயர் கிடைத்து விட்டதால் அதை மெயிண்டேன் செய்வதற்காக கடைசிவரை அதே வேலையை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர். 

கடவுள் வாசகர் - அதிகப்படியான வார்த்தையாக இருந்தாலும், இப்படியும் ஒரு குரூப் இருக்கிறது. இவர்கள் பதிவுகளை படிக்க மட்டுமே செய்வார்கள். கமெண்டோ, மெயிலோ அனுப்புவதில்லை. இப்படிப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டுபிடிபப்து ஒரு பதிவருக்கு தேவை இல்லாத வேலை. இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் முக்கியம். அதை ஆராய வேண்டிய அவசியும் இல்லை. ஆகவே தான் கடவுள் என்றேன். 



கமல் டைப் வாசகர்-இவரது கருத்துரைகள் சுத்த தமிழில் மிக நீளமாக இருக்கும். ஆனால் என்ன சொல்ல வருகிறார், என்பது எத்தனை முறை படித்தாலும் புரியாது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு மாதிரி தோன்றும். இவர்களுக்கு பதில் சொல்வது என்பது மிக கடினமான காரியம். 

செந்தில் டைப் வாசகர் - இவரிடும் கருத்துக்கள் சிம்பிளாக இருக்கும். ஆனால் நம்மால் விளக்கம் சொல்ல முடியாது. ரொம்ப நேரம் விவாதத்துக்கு பிறகு மறுபடியும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பார்கள். ஒண்ணு இங்க இருக்கு இன்னொன்னெங்கே?... அதான் இது... ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பார்கள். 

வடிவேலு டைப் வாசகர் - இவரும் ஒரு வகையில் செந்திலுக்கு உறவுக்காரர்தான். "ஏம்பா தம்பி, பொண்ண கைய்ய புடிச்சு இழுத்தியா?", என்று கேட்டால், "என்ன கையபுடிச்சு இழுத்தியா?", என்று திரும்ப திரும்ப கேட்பார். கமெண்ட்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டினாலும் இது நிற்காது.

மணிரத்னம் டைப் வாசகர் - இவரது கமெண்ட்கள் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கொண்டிருக்கும். அருமை, கலக்கல், வாழ்த்துக்கள், நன்றி என்று மட்டும் சொல்வார்கள். என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது மிக கடினம். இவர் சில நேரம் பதிவுகளை படிக்காமல் கமெண்ட் போடுகிறாரோ என்று கூட தோன்றும். உதாரணமாக பெண் பதிவர் ஒருவர், தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தை பதிவாக எழுத, நம்மாள், "கலக்கல்" என்று கமெண்ட் போட்டு மாட்டிக்கொள்வதுண்டு.  

அகழ்வாராய்ச்சி வாசகர் - இவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர் கமெண்ட் போடும் முன் பல ஆண்டுகளுக்கு முன்னால் நாம் எழுதிய கட்டுரைகளை தோண்டி துருவி ஆதாரமாக காட்டி எழுதுவார். நாமே மறந்து விட்ட பல பதிவுகளை நம்மை திருப்பி படிக்க வைப்பவர். 



உரையாடல் வாசகர்-பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், கருத்து பெட்டியை, சாட் செய்வதற்காக பயன்படுத்துபவர். "நீங்க நலமா? நேத்து உங்கள ரோட்ல பார்த்தேன், கொஞ்சம் இளச்ச மாதிரி தெரியுது",ன்னு, கமெண்ட் பகுதியிலேயே நம்மோடு சாட் செய்பவர். ஆரம்ப காலத்தில் பிற பதிவர்களின் கமெண்ட் பெட்டிகளை பார்த்து நான் குழம்பியே போயிருக்கிறேன். 

வெண்ணிறஆடை மூர்த்தி டைப் வாசகர் - பெயரை பார்த்ததுமே உங்களுக்கு புரிந்திருக்கும். இவர் இடும் கருத்துக்கள் எப்போதுமே ஒரே அர்த்தத்தில் இருப்பதில்லை. இரட்டை அர்த்தம் அல்லது பல அர்த்தங்களை கொண்டிருக்கும். அதே போல, நாம் எழுதிய பதிவிற்கு நமக்கே தெரியாமல் புது அர்த்தம் கற்பித்து விடுவார்கள். அதுவும் சரியாக பொருந்தி விடும். அப்புறம் என்ன, நாமும் ஹி ஹி என்று கமெண்ட் போட்டு சமாளிக்க வேண்டியதுதான். 

லேட் பிக் அப் வாசகர் - இவர்கள் போன பதிவிற்கு இந்த பதிவில் வந்து கமெண்ட் போடுவார்கள். முதலில் நமக்கு குழப்பம் வந்தாலும், நாமும் சுதாரித்து கொண்டு பதில் கூற வேண்டும். இல்லை அவரிடமே விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. 

கருணாநிதி டைப் வாசகர் - வாய்ப்பேச்சில் இவரை அடித்துக்கொள்ள முடியாது. ஏகப்பட்ட சுட்டிகள், தரவுகள் என்று அசத்துவார்கள். கொஞ்சம் ஏமாந்தால், கம்பியூட்டர் கண்டு பிடிக்காத காலத்தில் இருந்தே பதிவுக்ளை படித்து வருவதாக கூறுவார்கள். நாம்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது தவறு. ஏனென்றால் சம்பந்தமில்லாமல் பேசி நம்மையே குழப்பி விடுவார்கள். ஆகவே பொழுது போகவில்லை என்றால் மட்டும் இவரோடு வாதிடுங்கள். 

குழாயடி வாசகர் - இவர் எப்போதும் தனியாக வருவதில்லை. ஜோடியாகவோ அல்லது குருப்பாகவோதான் வருவார். ஜோடி என்றவுடன் வேறு மாதிரி அர்த்தம் கொள்ளாதீர்கள். அந்த இருவருக்கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் உங்கள் கமெண்ட் பகுதியில் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மாறி மாறி அடித்து கட்டி உருண்டு கொண்டிருப்பார்கள். பிறகு அவர்கள் இருவரையும் சமாதான படுத்துவதே பெரும்பாடாகி விடும்.

வார்த்தை விளையாட்டு வாசகர் - நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இன்னொரு பிரிவினர். இவருக்கு விளக்கம் சொல்லும் நேரத்தில் இன்னும் நான்கு பதிவு எழுதி விடலாம். சாமர்த்தியமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி, நாம் வாயில் இருந்தே உண்மைகளை வரவைத்து விடுவார். சில நேரங்களில் அவர்கள் சொல்வதுதான் உண்மை என்று ஒத்துக்கொள்ள வைத்து விடுவார். 



பீட்டர் வாசகர் - இவர் எப்போதும் ஆங்கிலத்திலேயே கமெண்ட் போடுவார். அதுவும் தெளிவாக இருந்தால் பரவாயில்லை. ungal pathivai naan oththu kolla mudiyathu, ithu muththilum thavaranadhu என்று தமிழை ஆங்கிலத்தில் எழுதி படுத்திவிடுவார். அதுவும் பக்கம் பக்கமாக எழுதி, படித்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இவர்களால் சமூகத்துக்கு ஒரு நன்மை நடந்திருக்கிறது. இவர்கள் இல்லை என்றாள் கூகிள் டிரான்ஸ்லிடெரேசன் என்று ஒன்று கிடைத்திருக்குமா?

பல்பு வாசகர் - அவசரப்பட்டு ஏதாவது பேசிவிட்டு, பிறகு பல்பு வாங்குபவர்கள். ஒரு பதிவர் ஏதோ ஒரு அர்த்தத்தில் உள்குத்து பதிவு ஒன்றை, பகடி அல்லது சிறுகதை வடிவில் எழுத, அது தெரியாத நம்மாள், "அருமையான கதை.", என்று கமெண்ட் போட்டு பல்பு வாங்குவார். நான் நிறைய வாங்கி இருக்கிறேன். 

அழைப்பிதழ் வாசகர்-இவர்கள் கண்டிப்பாக பதிவர்கள்தான். ஒரு பதிவர் தன் பதிவை படிக்க வேண்டும் என்று நினைத்தாலோ, புதிதாக தான் ஒரு பதிவு எழுதி இருந்தால் மட்டுமே அடுத்தவருக்கு கமெண்ட் போடுவார். இவர்களின் கமெண்டை பார்த்தாலே, ஆசாமி இன்று புதிதாக பதிவு எழுதி இருக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம். இதற்கு உதாரணம் வேறு யாரும் இல்லை. நான்தான்.

மேலே நான் கூறி இருக்கும் பதிவர்கள் எல்லோரும் மோசமானவர்கள் அல்ல. அது அவர்களின் இயல்பு. மற்றபடி அப்படி இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அடுத்து நான் கூறப்போகும் சில வாசகர்கள், முற்றிலும் தவறான நோக்கத்தோடே இருக்கிறார்கள். அவர்களையும் பார்த்து விடுவோம். 



கோர்த்து விடும் வாசகர் - நல்ல போய் கொண்டிருக்கும் வண்டியை ரூட்டை திருப்பி விடுவது மாதிரி,  கமெண்ட் பகுதியில் வந்து எதையாவது கொழுத்தி போட்டு விட்டு போயி விடுவார்கள். உதாரணமாக, தலித்கள் பற்றிய கட்டுரையில், சம்பந்தமே இல்லாமல், "தேவர் வாழ்க!" என்று கமெண்ட் போட்டு விட்டு வந்து விடுவார். இல்லாவிட்டால், "ஏண்டா அம்பி, இது நோக்கே நன்னா இருக்கா", என்று வேறு பாஷையில் பேசி கோர்த்து விட்டு விடுவார். இந்துக்களை பற்றி விமர்சித்திருக்கும் ஒரு கட்டுரையில், "முஸ்லீம்கள் மட்டும் என்ன ஒழுங்கா?", என்று குட்டையை குழப்பி விட்டு விடுவார். இவர்களின் நோக்கம் நியாயம் கேட்பது அல்ல. எல்லோர் வாயையும் கிண்டி, அதன் மூலம் ஜாலியாக பொழுதை போக்குவதுதான். 

அட்ரஸ் இல்லா வாசகர் - இவரது பெயர் Anonymous. இவருக்கு கெட்ட வார்த்தை பேசுவது மட்டுமே தொழில். ஒருவரது பதிவுகள் பிடிக்காத பட்சத்தில், முகத்துக்கு நேராக கலாய்க்காவோ, விமர்சிக்கவோ முடியாமல் போன விரக்தியில், இப்படி அட்ரஸ் இல்லாமல் வந்து குரைத்து விட்டு செல்பவர். இவர்களது கமெண்ட்கள் பெரும்பாலும் பதிவுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.

அந்நியன் வாசகர் - இப்படி ஒரு குரூப் இருக்கிறது என்று நம்மில் பலபெருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு இருப்பது மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களோடு நன்றாக பழகி வரும் மரியாதைக்குரிய சக பதிவருக்கு கூட இருக்கலாம். இந்த டைப் வாசகர்களுக்கு குறைந்தது இரண்டு ஐடிக்கள் இருக்கும். ஒன்று ஊரறிந்த நல்ல ஐடி, மற்றொன்று தன் உண்மை முகத்தை காட்டும் கள்ள ஐடி. நீங்கள் விஜய்யை கலாய்த்து பதிவெழுதி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நல்ல ஐடியில் வந்து, மிக பண்பாக பேசுவார். அதே நேரம் தன்னிடம் இருக்கும் கள்ள ஐடியில் வந்து கெட்ட வார்த்தையில் திட்டுவார். சில அப்பாவி பதிவர்கள் இரண்டு பெரும் வேறு வேறு ஆள் என்று நம்பி விடுவார். இவர்கள் எழுதும் பதிவிற்கு நாம் கண்டனம் தெரிவித்து கமெண்ட் போட்டோம் என்றால், இவர் சாந்தமாகவே பேசுவார். ஆனால் உடனே இன்னொரு ஐடியில் வந்து நம்மை திட்டுவார்.ஒவ்வொருவரின் திறமைக்கு ஏற்ப ஐடிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனக்கு தெரிந்த சக பதிவர் ஒருவருக்கு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஐடிக்கள் உள்ளன. ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 



ஒரு வழியாக இந்த பதிவு முடிவுக்கு வந்து விட்டது. இந்த லிஸ்டில் நீங்கள் எந்த வகை வாசகர் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஆள் இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவில் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதுபோக வேறு எதுவும் பிரிவிருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள். 


62 comments:

K said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் பாலா! நேற்றே சொல்லியிருக்கணும! மிஸ் பண்ணிட்டேன்!

ஹா ஹா ஹா பதிவு செம காமெடியும் யதார்த்தமும் கூட! அப்புடியே உரிச்சு வைச்சுட்டீங்க! சூப்பர்!!

பாலா said...

@ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

NKS.ஹாஜா மைதீன் said...

கமல் டைப் ,அழைப்பிதழ் டைப் ...எப்படி இப்படிலாம் பேர் வைக்குறிங்க?!..அசத்தல் ...நான் எந்த வகை?!

Avargal Unmaigal said...

பலவிதமாக அருமையாக பிரித்து சொல்லிய நீங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு பதிவாளரை உதாரணமாக சொல்லி இருக்கலாம்

பால கணேஷ் said...

நட்சத்திரமாக ஜொலிக்கும் பாலாவிறகு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இதில் நான் எந்தப் பிரிவைச் சேர்ந்தவன் என்று... யோசித்துக் கொண்டே இருக்கிறேன். தெரியலையே... தெரியலையே... நீஙகளே சொல்லுங்க பாலா... நான் எந்த மாதிரி வாசகன்?

Sankar Gurusamy said...

நன்றாக அலசி ஆராய்ந்து நகைச்சுவையாகவும் எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் தம்மை எதில் பொருத்திக்கொள்வது என ஆராய்ச்சியில் இறங்க வைத்துவிட்டீர்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Karthikeyan said...

//நீங்கள் விஜய்யை கலாய்த்து பதிவெழுதி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நல்ல ஐடியில் வந்து, மிக பண்பாக பேசுவார். அதே நேரம் தன்னிடம் இருக்கும் கள்ள ஐடியில் வந்து கெட்ட வார்த்தையில் திட்டுவார்.// அருமை அருமை.. எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள். நான் எல்லாம் தனிப்பட்ட என் குழும நண்பர்களுக்காக வலையில் எழுத வந்தவன். இப்படி ஒரு வலை உலகம் இருக்கிறது என்பதே பிறகுதான் தெரியும். இன்றும் எந்த ஒரு திரட்டிகளிலும் இணைத்துக்கொள்ளவில்லை. படிப்பவர்கள் படிக்கலாம். பிடித்திருந்தால் பின்னூட்டம் இடலாம். ஆனாலும் நிறைய பேர் படிக்கிறார்கள் என்பது சந்தோஷம் அளிக்கிறது.
உங்கள் பார்வையில் நான் எந்த பிரிவில் வருகிறேன்?

Unknown said...

வாத்தியாரே நீர் என்ன தான் கலாய்த்து பதிவு போட்டாலும் இப்போ எதிர் வாதம் செய்யும் நிலைமயில் யாரும் இல்ல போலும்..இந்த நிலை என்ன நிலையோ ஹஹா!

r.v.saravanan said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் பாலா

உங்கள் பார்வையில் நான் எந்த வகை

enakku mattum sollungal

முத்தரசு said...

பதிவர்கள் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதமோ - நல்ல ஆராச்சி பண்ணி இருக்கிக.

ம்..

சரி... நீரே சொல்லிவிடும் மனசாட்சி எந்த வகை என்று?

பாலா கொடுத்த பட்டம்னு போட்டுகிறேன் ஹி ஹி ஹி

கேரளாக்காரன் said...

Dear bala
we are not peters. We are the one who working in a office which is not having access to blogger.com and have a basic mobile which doesn't support Tamil font......

கேரளாக்காரன் said...

//Indru enn valayil

"thangachiya naai kadichiduchuppa" //

ivara vittuttingale......

Yoga.S. said...

வணக்கம் பாலா!பிரித்து மேய்ந்து விட்டீர்கள்!அதிலும் பல ஐ.டி க்கள் வைத்திருப்பவர்களையும் கமெண்டிட வைத்த சாமர்த்தியம் அபாரம்! நான் எந்த வகை என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பாலா என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. என்னமாய் ஆராய்ச்சி. ஹஹஹ

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ரொம்ப அப்பாவியா அழைப்பிதழ் டைப் - ஹஹஹ நானும் கவனித்துள்ளேன் - பாலா

Marc said...

ஒரு நல்ல ஆராய்ச்சி.அருமைப்ப் பதிவு வாழ்த்துகள்

Marc said...

ஒரு நல்ல ஆராய்ச்சி.அருமைப்ப் பதிவு வாழ்த்துகள்

பி.அமல்ராஜ் said...

யப்பா... பாலா அண்ணே.. என்னா ஆராட்சி.... நகைச்சுவையாக இருந்தாலும் சரியாத்தான் இருக்கு..

ஆமினா said...

இதுக்கு உள்குத்து பதிவு போடவா ஹி...ஹி...ஹி...

நல்லதொரு முயற்சி

வாழ்த்துகள் சகோ

கலாகுமரன் said...

பறவைகள் பல விதம் அதே போல வாசகர் பலவிதம்.

Enathu Ennangal said...

பரவாயில்ல நம்மல கடவுள் வாசகரா ஆக்கிட்டிங்க! நன்றி பாலா!

ஆத்மா said...

சபா...வாசிக்கும் போதே மூச்சு வாங்குதே..ரூம் போட்டு யோசிச்சிங்களோ..??


மிக அருமையான பதிவு

ஹாலிவுட்ரசிகன் said...

விட்டா புதுசா “தமிழ் பதிவுலக டிக்சனரி” ரிலீஸ் பண்ணிருவீங்க போலயிருக்கே? எவ்வளவு வெரைட்டி?

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

yeskha said...

இப்போ ரொம்ப நாள் கழிச்சு நான் ஒரு பதிவு எழுதினேன் (ஆனா அழைப்பிதழ் வாசகர் அல்ல).. அதுக்கு நீங்க வந்து கமெண்ட் போட்டீங்க.. உடனே அந்த லிங்க்கை வச்சு உங்க பக்கத்துக்கு வந்து படிச்சுட்டு கமெண்ட் போடுறேன் (மற்றவர்கள் பக்கத்துக்கு போகவில்லை)..

நான் எந்த மாதிரி வாசகர்????

Unknown said...

"வணக்கம்"

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

ஹா ஹா அதை உங்கள் சாய்ஸுக்கே விட்டுவிடுகிறேன். கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Avargal Unmaigal

இதுக்கே செமையா கும்ம போறாங்கன்னு பயந்துகிட்டு இருக்கேன். இதுலே பேரு வேற சொல்லனுமா? அதான் ஒரு பதிவர் உதாரணத்துக்கு என்னையே போட்டிருகேனே? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே அடிக்கடி வாங்க.

பாலா said...

@கணேஷ்

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. எந்த மாதிரி வாசகனா இருந்தா என்னங்க... அதுவா முக்கியம்? (இதுக்கு பேர் தான் எஸ்கேப்பிசம் ஹி ஹி )

பாலா said...

@Sankar Gurusamy

நீங்கதான் நண்பரே கரெக்டா சொல்லி இருக்கீங்க. அவங்கவங்களே கண்டு பிடித்துக்கொளா வேண்டியதுதான். நன்றி நண்பரே

பாலா said...

இது புது பிரிவாக இருக்கிறதே? நோட் பண்ணிக்கிறேன். வருகைக்கு நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள நானே யாரும் வரலைன்னு நிம்மதியா இருக்கேன். நீங்களே ஆரம்பித்து வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே?

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே.. அதை நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க... ஹி ஹி

பாலா said...

@மனசாட்சி

மிக்க நன்றி நண்பரே. அது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். மனசாட்சியின் மனசாட்சியை கேளுங்கள். மீ த எஸ்கேப்

பாலா said...

@மௌனகுரு

நண்பரே நான் ஆங்கிலத்தில் கமெண்ட் போடுபவர்களை குறைசொல்லவே இல்லை. இதுவும் ஒருவகை என்றே சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க...

பாலா said...

@Yoga.S.FR

நன்றி நண்பரே....

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. எனக்கே இந்த சந்தேகம் உண்டு. அதான் நானே சொல்லிட்டேன். ஆனால் இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. அதாவது இணையத்தில் உலவும் வாய்ப்பு கொஞ்ச நேரத்துக்கே எனக்கு கிடைக்கும். ஆகவே அப்போது ஒரு பதிவும், மற்றவர்களுக்கு கமெண்ட்டும் போடுவேன். ஆனால் அது வேறு அர்த்தமாகி விடுகிறது. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

பாலா said...

@DhanaSekaran .S

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@பி.அமல்ராஜ்

மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@ஆமினா

மேடம் இதற்கு உள்குத்து எல்லாம் தேவை இல்லை. நேரடி பதிவே போடலாம். ஹி ஹி ....

பாலா said...

@EniyavaiKooral

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

பாலா said...

@Enathu Ennangal

கடவுளை பார்க்கும் வாய்ப்பு இப்போது கிடைத்து விட்டதே... மிக்க நன்றி. அடிக்கடி காட்சி கொடுங்கள்....

பாலா said...

@சிட்டுக்குருவி

மூணு வருஷமா குப்பை கொட்டுறோம். இதை கூட யோசிக்கலைன்னா எப்படி? மிக்க நன்றி நண்பரே அடிக்கடி வாங்க

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. இதெல்லாம் ஜுஜுபி. இதை விட பெரிய டிக்ஸ்னரி எல்லாம் இங்கே அதிகம்.

பாலா said...

@yeskha

இந்த கொஸ்டீனை சாய்ஸ்ல விட்டுவிடுகிறேன். நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க... ஹி ஹி எஸ்கேப்

பாலா said...

@வீடு K.S.சுரேஸ்குமார்

ஹா ஹா நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ண்ணா நமக்கு எந்தப் பிரிவுமே செட்டாகலீங்களேங்ணா.... நமக்குன்னு பன்னிக்குட்டி டைப் வாசகர்னு ஒரு புது டைப்பு போடக்கூடாதுங்களாங்ணா.....?

மதுரை சரவணன் said...

bala nalla muyarchchi..natchaththira vaalththukkal

சுசி said...

நல்ல ஆராய்ச்சிதான் போங்க :)
செம சிரிப்பும் கூடவே உண்மையும் ;)

முனைவர் இரா.குணசீலன் said...

நகைச்சுவையாக சொன்னாலும் மனநிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்..

முனைவர் இரா.குணசீலன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பாலா.

ம.தி.சுதா said...

முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ...

இதில நான் எதற்குள் அதிகமாய் உள்ளடங்குகிறேன் என்று என் நண்பர்கள் யாராவது சொல்லுங்களேன்...

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

தல நம்ம வழி எல்லாம் தனி வழி. இதுல எல்லாம் சேரக்கூடாது.

பாலா said...

@மதுரை சரவணன்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@சுசி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

பாலா said...

@guna thamizh

மிக்க நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

பாலா said...

@♔ம.தி.சுதா♔

ஹா ஹா அதைபத்தி எல்லாம் கவலைப்படாதீங்க. எந்த பிரிவா இருந்தா என்ன? நன்றி நண்பரே

தனிமரம் said...

உண்மையில் வாசகர்கள் பதிவர்கள் பற்றி எனக்கிருக்கும் சந்தேகத்தை உங்கள் பதிவு வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது.இதில் நான் எந்த ரகம் என்று எனக்கும் தெரியல பாலா.

பாலா said...

@தனிமரம்

மிக்க நன்றி நண்பரே/....

கிரி said...

:-)) நல்லா ஆராசிச்சி செய்து இருக்கீங்க. தாமதமான நட்சத்திர வாழ்த்துகள் பாலா.

பாலா said...

@கிரி

நன்றி நண்பரே. நானும் தாமதமாக நன்றி சொன்னதற்கு மன்னிக்கவும். இப்போதுதான் கவனித்தேன்.

Siva said...

kadavul vasagarla rendu pirivu irukku sir. onnu blog vachchiruppaanga, but comment podarathu kidayaathu. innonnu, just vanthu search poddu parththuddu poidde iruppaanga, naan rendaavathu- kadavul irukkaarunnu solla varen.

பாலா said...

@priah

உண்மைதான் நண்பர். இப்படி எல்லா பிரிவிலுமே உட்பிரிவுகள் உண்டு. கடவுள் இருக்கிறார்... வருகைக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...